தமிழாக்கக் கவிதைகள்

105 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 16, 2026, 11:14:23 AM (13 days ago) Jun 16
to சந்தவசந்தம்
சிவதாண்டவம் ( தமிழில் )

சந்தக் கலிவிருத்தம்

(தனாதனா தனாதனா தனாதனா தனாதனா)

சடைக்குமேல் பெரும்புனல் சதாநிதம் பொழிந்திடும்
விடத்தினைத் தரும்பணம் விளங்கிடும் கழுத்தினில்
உடுக்கைடுட் டுடுட்டுடென் றொலித்திடும் களிப்புடன்
நடித்தசண் டதாண்டவம் நமக்கருள் வழங்குமே (1)

சடைக்குளே சுழன்றுநீர் தடாகமாய் விளங்கிடும்
துடிக்கரன் நுதல்தனில் சுடர்தகக் தகக்கவே
படர்ந்தநற் சடைக்குமேல் பனிச்சுடர் தரித்தவன்
இடம்நிதம் பணிந்துநான்  இறைஞ்சியே வணங்கினேன் (2)

பருப்பதன் மகட்கருள் பவன்நிதம் மகிழ்ந்திட
நிருத்தமிட் டணைத்தவன் நினைத்திடச் சிறந்தவன்
அருள்தனைக் கடைக்கணால் அளித்திடும் திகம்பரன்
வரம்தரும் சிவன்கழல் வணங்கிநான் மகிழ்கிறேன் (3)

அராமணிப் ரகாசமாய் அணிந்தவன் நிராகுலன்
விராவுகுங் குமத்துடன் விளங்குமா தரும்புகழ்
சராசரன் களிற்றதள் தரித்தவன் பராபரன்
புராரிசங் கரன்பதம் புகழ்ந்துபோற் றஇன்பமே (4)

அணாமலைக்கு நாதனே அரோகரா சிவாயெனக்
கணாயிரத் தனும்பரார் கனிந்துநின் றுபோற்றுமுக்
கணாஅரா நிலாதிகழ்  கதிர்ச்சடா தராஉனைப்
பணோடுபா டியாடியே பணிந்துளம் மகிழ்கிறேன்(5)

கருப்புவில் தரித்துவந் தகாமனைச் சிதைத்திட
நெருப்பெனும் நடுக்கணால் நெருப்பைவிட் டெரித்தவன்
திருச்சடைக் குமேல்நிலா திகழ்ந்திடும் கபாலியை
விருப்புடன் வணங்கவே விளைந்திடும் நலன்களே (6)

பகைத்துவந் தகாமனைப் படாரெனக் கணால்சுடும்
தகத்தகத் தகத்திடும் தழல்கணன் பருப்பதன்
மகட்கிடம் வழங்கிடும் மகேஸ்வரன் மகாசிவன்
அகத்திலன் புவைத்துநான் அவன்பதம் வணங்குவேன் (7)

நிலாஇலா இராவணம் நிகர்த்தநீ லகண்டனே
நிலாநிலா தநீர்அரா நிலைத்தசெஞ் சடாதரா
சலாபமாய்க் களிற்றதள் தரித்ததே வதேவனே
உலாசமா கஆடியே உனைத்தினம் வணங்குவேன் (8)

பகைத்ததக் கனின்சிரம் பரித்தவன் புரத்தினை
நகைத்தெரித் தநாயகன் நமன்நடுங் கிடச்செயும்
புகழ்த்திருப் பதத்தினான் புகழ்மலிந் தகாமனைப்
புகைத்தெரித் தஈசனைப் புகழ்ந்துபோற் றநன்மையே (9)

மலர்களைச் சடைக்குமேல் மகிழ்ந்தணிந் தஈஸ்வரன்
மலர்ச்சரத் தைவிட்டமன் மதன்தனைப் பொடித்தவன்
பலம்மிகுந் தமுப்புரம் பகைத்துவந் தெரித்தவன்
நலந்தரும் சிவன்பதம் நயந்துநான் வணங்குவேன் (10)

சடைக்குளே அராவினம் சதாசுழன் றுசீறுமே
நடுக்கணோ தகித்திடும் நெருப்புடன் விளங்குமே
உடுக்கைமத் தளத்தொடே ஒலிக்கவே ஒலிக்கவே
நடித்தசண் டதாண்டவம் நமக்கருள் வழங்குமே (11)

நரர்சுரர் பகுப்பிலா நலம்வழங் குநாதனே
விருப்பிலா வெறுப்பிலா விகிர்தனே ஒருத்தனே
அருட்புரிந் தனைத்துமாய் அனாதியா னஜோதியே
வரம்தரும் சிதம்பரா மகிழ்ந்துநான் வணங்கினேன் (12)

அவாவெலாம் அகற்றியே அகன்றகங் கைஆடியே
சிவாயஓம் சிவாவெனத் திருப்பெயர் களோதியே
சிவாலயத் திலேஉனைத் தினம்வணங்கிடச் செயாய்
சிவாயஓம் சிவாயஓம் சிவாயஓம் சிவாயவே (13)

சதாசிவன் திருப்புகழ் சதாதினம் படிக்கவே
சதாநிதம் துதிக்கவே சதாநினைந் துகேட்கவே
நிதானமே நிலைத்திடும் நிறைந்தநன் மைநல்குமே
அதாகஞா னமேஅடைந் தருள்நிறைந் துவாழ்வரே (14)

இராவணன் படைத்தஇந் தஏற்றமிக் கபாடலை
இராமுடிந் தகாலைதன் னிலேஎழுந் துபாடவே
இராஜரா ஜராஜனாய் எலோருமே தொழும்படித்
தராதலத் திலின்பமே தழைத்துவந் துசேருமே (15)


பிற்குறிப்பு:

இராவணன் சமஸ்கிருதத்தில் இயற்றிய சிவதாண்டவ ஸ்தோத்ரத்தைத் தழுவி தமிழில் இயற்றப்பட்டது.


யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா.

இச்சந்தத்தைத் - தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்.

"லகு-குரு" என்ற அமைப்பு அடிகள்தோறும் 8 முறை வரும்.

லகு லகு லகு லகு லகு லகு லகு லகு

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;


Kanchipuram K Thangavel

Ram Ramakrishnan

unread,
Jun 16, 2026, 2:05:46 PM (12 days ago) Jun 16
to santhav...@googlegroups.com
அருமை, திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 16, 2026, at 11:14, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

சிவதாண்டவம் ( தமிழில் )
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1f698046-dd35-4119-bd89-243a7cc6a088n%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 16, 2026, 6:44:26 PM (12 days ago) Jun 16
to சந்தவசந்தம்

திரு. ராம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 16, 2026, 7:02:37 PM (12 days ago) Jun 16
to சந்தவசந்தம்

தங்கமாலை துதி

பாவகை : குறள்வெண்செந்துறை

விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

அன்புரு வேசிவன் அவன்புகழ் பாடியே    
  அகத்திருள் அழுக்கினை அகற்றிடுவேன்
அன்னையு டன்திகழ் அப்பனே சங்கர
   அடியவன் உன்னடிக் கடைக்கலமே (1)

ஆயிரங் கண்ணனின் அகந்தையை அடக்கிய
   ஐயனே அறத்தினைக் காப்பவனே
தாயுடன் மேவிய சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (2)

இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
   எரிதிகழ் கண்ணுடை இறையவனே
அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே
    அடியவன் உன்னடிக் கடைக்கலமே (3)


பிற்குறிப்பு:

சங்கராச்சார்யர் அருளியசுவர்ணமாலா ஸ்துதி 
அ’ விலிருந்து ‘க்ஷ’ வரை உள்ள அக்ஷரங்களை
 வரிசைக்கிரமமாக ச்லோகங்களின் முதலெழுத்தாக 
வைத்து செய்த துதி ஆகும்.

அதை தழுவி தமிழில் உயிர்12 மற்றும் மெய் 18
ஆயுதம் 1 என 31 பாடல்களை எழுத உள்ளேன் .

பாடல் மற்றும் தமிழ் விளக்கம்
https://shaivam.org/scripture/Tamil/2581/suvarnamala-stuti-tamil-translation/#gsc.tab=0

பாடலக் கேட்க https://youtu.be/beZs0SF9R1Q?si=zw9ys-El79EKD-Jx

வினாக்கள்
எந்த ஒரு சமஸ்கிருத அல்லது வேற்று மொழிப் பாடலையும் 
மூலக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் 
நடையிலும் கவிதைச் சுவையிலும் பா அமைப்பிலும் மாற்றி அமைக்கலாமா?
(சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு இன்றி).

2) அதை தமிழாக்கக் கவிதைகள் என்று கூறலாமா ?

17/06/2026
Kanchipuram K Thangavel

Siva Siva

unread,
Jun 16, 2026, 8:54:19 PM (12 days ago) Jun 16
to santhav...@googlegroups.com
வர்ணமாலா = alphabet.
வர்ணமாலை - n. < varṇa-mālā. The alphabet; நெடுங்கணக்கு.

English translations of -  सुवर्णमालास्तुतिः (शङ्कराचार्यविरचिता) | suvarNamAlAstutiH | (Scan, Videos 12, meaning 123)  :

For padhigams with a similar concept:
மதிசூடி 2.56 - https://madhisudi.blogspot.com/2016/01/0256.html

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 18, 2026, 12:22:12 PM (11 days ago) Jun 18
to சந்தவசந்தம்
வணக்கம் குருவே
தங்களின் மதிசூடி 2.17 மற்றும் 2.56 ஏற்கனவே படித்தேன் 
மீண்டும் படித்தேன். நன்றாக உள்ளது.
தாங்கள் அனுப்பிய இணையதள இணைப்புகளுக்கு மிக்க நன்றி 
முடிந்த வரை கருத்து சிதையாமல்
எழுத முயல்கிறேன் 

முதல் பாடல் மூலப்பாடலில்  குணம் என்று உள்ளது.
நான் அன்பு என்று மாற்றியுள்ளேன்.

இரண்டாம் பாடலில் தண்டு முனிவருக்குப் பிரியமாவர் சிவன்
 என்ற கருத்து உள்ளது. எஎனவே திருத்தம் செய்ய விழைகிறேன் .
மேலும் ஏழாவது பாடல் எப்படி எழுதுவது???

சுவர்ணமாலா ஸ்துதி  -தங்கமாலை துதி

அத2 கத2மபி மத்3ரஸநாம் த்வத்3கு4ண
       லேசைர் விசோத4யாமி விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்  (1)

அன்புரு வேசிவன் அவன்புகழ் பாடியே     
  அகத்திருள் அழுக்கினை அகற்றிடுவேன்
அன்னையு டன்திகழ் அப்பனே சங்கர
   அடியவன் உன்னடிக் கடைக்கலமே (1)

ஆக2ண்ட3ல மத3 க3ண்ட3ந பண்டி3த
       தண்டு3 ப்ரிய சண்டீ3ச விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ3 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்      (2)

ஆயிரங் கண்ணனின் அகந்தையை அடக்கிய
    ஐயனே தண்டுமு னிக்கினியாய்
தாயுடன் மேவிய சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (2)

இப4சர்மாம்ப3ர சம்ப3ர ரிபுவபு:
       அபஹரணோஜ்ஜ்வல் நயந விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்    (3)

இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
   எரிதிகழ் கண்ணுடை இறையவனே
அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே 
    அடியவன் உன்னடிக் கடைக்கலமே (3)

ஈச கி3ரீச நரேச பரேச
       மஹேச பி3லேசய பூஷண போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம் (4)

ஈசனே கயிலையின் வாசனே எங்களின்
   இறைவனே பாம்பினை அணிந்தவனே
ஈசையி னோடுறை சங்கர னேஉன
   திணையடிக் கடியவன் அடைக்கலமே (4)

உமயா தி3வ்ய ஸுமங்க3ள விக்3ரஹ -
       யாலிங்கி3த வாமாங்க3 விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்      (5)

உமையொரு பாகனே உமையவள் தழுவிய
  ஒளிமலி வடிவுடை சங்கரனே
உமையுடன் மேவிய ஒப்பிலா நாதனே
   உன்னடிக் கடியவன் அடைக்கலமே (5) 

ஊரீ குரு மாமஜ்ஞ மநாத2ம்
       தூ3ரீ குரு மே து3ரிதம் போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்   (6)

ஊனுட லோடுழல் ஊமைஅ னாதையின்
   ஊழ்வினைத் தீர்த்தெனை ஆண்டருள்வாய்
ஞானம ளித்திடும் நாயகி பாகனே
   ஞானம லர்ப்பதம் சரணடைந்தேன் (6)

ரிஷிவர மாநஸ ஹம்ஸ சராசர
       ஜநநஸ்தி2திலய காரண போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்             (7)

ஏழாவது பாடல் மூலத்தில் ரி தமிழில் எ என்ற எழுத்தில் எழுதலாமா?

Siva Siva

unread,
Jun 18, 2026, 1:18:59 PM (11 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
வடமொழியில் உள்ள சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் நல்ல முயற்சி. ஆனால் யாருக்குப் பயன் தரும் என்பது ஒரு வினா.
சில சமயம் மூலத்தில் உள்ள சில கருத்துகளை விட்டும், சில அடைமொழிகளை நுழைத்தும் தமிழில் எழுதவேண்டி வரும்.

சுவர்ணமாலையில் வடமொழி எழுத்துவரிசை தமிழ் எழுத்துவரிசை வேறுபாடுகளும் சிக்கலை விளைக்கும்.

வி. சுப்பிரமணியன்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 24, 2026, 2:46:46 AM (5 days ago) Jun 24
to சந்தவசந்தம்
வணக்கம் குருவே

மொழிபெயர்த்தலில் பற்றி தங்கள் விளக்கம் மிகவும் உதவியாக 
உள்ளது மிக்க நன்றி 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 24, 2026, 2:49:38 AM (5 days ago) Jun 24
to சந்தவசந்தம்
தங்கமாலை துதி

பாவகை : குறள்வெண்செந்துறை
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

எண்ணிய முனிவரின் மனத்துறை ஈசனே
   இசைவுடன் முத்தொழில் புரிபவனே
அண்ணலே அன்னையு டன்திகழ் அப்பனே
  அடியவன் உன்னடிக் கடைக்கலமே (7)

ஏறினி லேதிகழ் சந்திர சேகரா
   எழில்தரும் கண்டிகை அணிந்தவனே
மாறிலா மங்கையு டன்திகழ் மன்னனே
   மலரடிக் கடியவன் அடைக்கலமே (8)

ஐயனே என்விழி மலர்களை உன்திரு
    அடிகளில் அர்ப்பணித் தேத்திடுவேன்
தையலு டன்திகழ் சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (9)

ஒருவனே வேதமெ லாம்புகழ் ஐயனே
    ஓம்சிவ சிவசிவ சங்கரனே
திருநிறை உமையுடன் மருவிய ஈசனே
   திருவடித் தாமரை சரணடைந்தேன் (10)

ஓம்பிய பக்தருள் ஒன்றிய ஒருவனே
  உலகினைக் காத்திடும் நாயகனே
சாம்பவி உடனுறை சங்கர னேசிவ
  தாமரைத் தாளிணைச் சரணடைந்தேன் (11)

ஔவியம் நீங்கிய அடியவர் துதிசெயும்
அருமறை மெய்பொருள் ஆனவனே
கௌரியு டன்திகழ் சங்கர னேசிவ
கழலிணைக் கடியவன் அடைக்கலமே (12)

உயிரெழுத்துக்கள் வரிசை முற்று.
அடுத்து மெய்யெழுத்துக்கள் வரிசை விரைவில்...

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 25, 2026, 10:57:46 AM (4 days ago) Jun 25
to சந்தவசந்தம்
சுவர்ணமாலா ஸ்துதி  - தங்கமாலை துதி

திக்கினை ஆடையாய் உடுத்தினை பற்றிலா
    சிவசிவ சங்கர தேசிகனே
சக்தியு டன்திகழ் சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணைச் சரணடைந்தேன் (13)

எங்களின் மனம்முதல் ஆகிய நான்கினை       
    இன்புறு பக்தியால் ஏற்றிடுவாய் 
மங்கையு டன்திகழ் சங்கர னேசிவ 
     மலரடிக் கடியவன் அடைக்கலமே (14)

எச்சகத் தினுக்குமே இறைவனாய் இருந்தனை
  இயற்கையின் வடிவமாய் இருப்பவனே
கச்சணி உமையுடன் மேவிய ஈசனே
   கழலிணைக் கடியவன் அடைக்கலமே (15)

தஞ்சமென் றவர்களைத் தள்ளுதல் மரபல
   தயைக்கட லேசிவ சங்கரனே
அஞ்சலென் றருளிடும் அம்பிகை நாதனே
   அடியவன் உன்னடிக் கடைக்கலமே (16)

கெட்டவர் நட்பினை நீக்கிடாய் நல்லவர்
   கேண்மையை நித்தமும் தந்திடுவாய்
மட்டுவார் குழலியின் நாயக னேசிவ
    மலரடிக் கடியவன் அடைக்கலமே(17)

வெண்டிரை நஞ்சினை உண்டருள் புரிந்தனை         வேறெவர் உனக்கிணை ஆண்டவனே
பண்மொழி யாளுடன் மேவிய ஈசனே
     பதமலர்க் கடியவன் அடைக்கலமே (18)

On Wednesday, June 24, 2026 at 12:19:38 PM UTC+5:30 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:
தங்கமாலை துதி

பாவகை : குறள்வெண்செந்துறை
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

......

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 26, 2026, 4:11:17 AM (3 days ago) Jun 26
to சந்தவசந்தம்
சுவர்ணமாலா ஸ்துதி  - தங்கமாலை துதி

அத்தனே வெண்திரு மேனியாய் கங்கையை
    அடர்சடை மீதினில் அடைத்தவனே
உத்தமி உடனுறை சங்கர னேசிவ
     உன்னடிக் கடியவன் அடைக்கலமே (19)

விந்தினால் வருமெலா உடலிலும் மேவிய
   மெய்யனே மெய்ப்பொருள் ஆனவனே
சுந்தரி உடனுறை சங்கர னேசிவ
   சுடரடிக் கடியவன் அடைக்கலமே (20)

தோப்பினில் தாவிடும் மந்திம னத்தினை                  
   சுற்றிவ ளைத்துநீ கட்டிடுவாய் 
பார்ப்பதி உடனுறை சங்கர னேசிவ
     பதமலர்க் கடியவன் அடைக்கலமே (21)

இம்மையில் வருதுயர் யாவுமுன் நிழல்பட          
    எளிதினில் நீங்குவ ததிசயமே
அம்மையு டன்திகழ் அப்பனே சங்கர
    அடியவன் உன்னடிக் கடைக்கலமே (22)

மெய்யனே கயிலையில் மேவிய ஈசனே
    வேதியர் வழிபடும் பரம்பொருளே 
தெய்வநா யகியுடன் மேவிய சங்கர
    திருவடிக் கடியவன் அடைக்கலமே (23)

ஆர்வமாய் தரிகிட திமியெனும் ஜதியுடன்
     ஆடிய பொற்சபை நாயகனே
பார்வதி உடனுறை சங்கர னேசிவ 
     பதமலர்க் கடியவன் அடைக்கலமே (24)

On Thursday, June 25, 2026 at 8:27:46 PM UTC+5:30 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:
சுவர்ணமாலா ஸ்துதி  - தங்கமாலை துதி

பாவகை : குறள்வெண்செந்துறை
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

.....

Siva Siva

unread,
Jun 26, 2026, 8:45:39 AM (3 days ago) Jun 26
to santhav...@googlegroups.com
"உன் அடைக்கலம்" என்று வரும்.
"உனக்கு அடைக்கலம்" என்பது போலச் சொல்வது உண்டா என்று அறியேன்.

வி. சுப்பிரமணியன்
On Fri, Jun 26, 2026 at 4:11 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
சுவர்ணமாலா ஸ்துதி  - தங்கமாலை துதி

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 26, 2026, 11:06:34 AM (3 days ago) Jun 26
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 

அடைக்கலமே என்பதற்கு பதில்
சரணடைந்தேன் என்று அனைத்து 
பாடலிலும் மாற்ற விழைகிறேன் 

உன்னடி அடியவன் சரணடைத்தேன்

அப்படி மாற்றினால் பிழை இருக்காது தானே

இப்பாடலைத் தமிழாக்கம் வேண்டும் என
இசையமைப்பாளர் ஜிப்ரான் கேட்டதால் 
எழுதி வருகிறேன். இசையில் வர வாய்ப்புள்ளது 
எனவே ஏதேனும் பிழை இருந்தால் கூறுங்கள் 



On Friday, June 26, 2026 at 6:15:39 PM UTC+5:30 Siva Siva wrote:
"உன் அடைக்கலம்" என்று வரும்.
"உனக்கு அடைக்கலம்" என்பது போலச் சொல்வது உண்டா என்று அறியேன்.

வி. சுப்பிரமணியன்


தங்களின் நுட்பமான கருத்துக்கு நன்றி 

உன்(னடிக் கடியவன் )அடைக்கலமே
உன் அடைக்கலமே என்பது போலவே உள்ளதாக
எனது சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

என்றாலும் முழு பாடலிலும் 
அடைக்கலமே என்பதற்கு பதில்
சரணடைந்தேன் என்று அனைத்து 
பாடலிலும் மாற்றவே விழைகிறேன்

Siva Siva

unread,
Jun 26, 2026, 11:21:20 AM (3 days ago) Jun 26
to santhav...@googlegroups.com
I looked up one of your verses at random.

See my comment below.

On Thu, Jun 25, 2026 at 10:57 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
சுவர்ணமாலா ஸ்துதி  - தங்கமாலை துதி

திக்கினை ஆடையாய் உடுத்தினை பற்றிலா
    சிவசிவ சங்கர தேசிகனே
சக்தியு டன்திகழ் சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணைச் சரணடைந்தேன் (13)

==>
மூலப்பாடலில் எந்தப் பாடலின் கருத்தைத் தழுவியது இது?

V. Subramanian
 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 26, 2026, 11:24:51 AM (3 days ago) Jun 26
to சந்தவசந்தம்
வணக்கம் குருவே 

பாடல் வரியாக உள்ளது

ஒளதா3ஸ்யம் ஸ்புடயதி விஷயேஷ
       தி3க3ம்ப3ரதா ச தவைவ விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்                                             13


13 பாடல் குருவே 

Siva Siva

unread,
Jun 26, 2026, 11:49:10 AM (3 days ago) Jun 26
to santhav...@googlegroups.com
OK. 

You may want to consider adding a note or other indication for each of your verses - as to which original verse corresponds to your verse.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 26, 2026, 12:29:18 PM (3 days ago) Jun 26
to சந்தவசந்தம்
சுவர்ணமாலா ஸ்துதி  - தங்கமாலை துதி

அல்லலை அகற்றிநல் லறிவினை அருளிடாய்
    ஐயனே குருவடி வானவனே
வல்லபி உடனுறை வள்ளலே சங்கர
    மலரடி அடியவன் சரணடைந்தேன் (25)

எவ்வகை பகையுமுன் வில்லொலி இடியென
   இடித்தித யத்தினைப் பிளந்திடுமே
இவ்வுல கன்னையு டன்திகழ் அப்பனே
    இணையடி அடியவன் சரணடைந்தேன் (26)

வாழ்வெனும் ஓவியம் நிலையிலா நிழலெனும்        
 மாயையின் இயல்பிது நிதர்சனமே 
தாழ்விலா தன்னையு டன்திகழ் அப்பனே           
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (27)

தெள்ளிய தாமரை மலரினை மிஞ்சிடும்
    திருவடி யிணையுடை நாயகனே
தெள்ளமு தாளுடன் மேவிய நாதனே
    திருவடி அடியவன் சரணடைந்தேன் (28)

வற்றிய ஓடுடன் சூலமும் உடுக்கையும் 
   ‌மாலையும் கையினில் கொண்டவனே
 கற்பக வல்லியு டன்திகழ் அப்பனே      
    கழனிணை அடியவன் சரணடைந்தேன் (29)

நன்மையும் மங்கள நற்கதி மானிடர்
   நலத்துடன் பெற்றிட அருள்பவனே
அன்னை யுடன்திகழ் அப்பனே சங்கர
     அடியவன் உன்னடி சரணடைந்தேன் (30)

சமஸ்கிருதம் பாடல் வரிகளை இணைத்து 
முழு பாடலாகப் பிறகு பதிவு செய்கிறேன்.

சமஸ்கிருதம் மூலப் பாடல் வரிசையில் உள்ளது

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 27, 2026, 12:33:12 AM (2 days ago) Jun 27
to சந்தவசந்தம்
ஸுவர்ணமாலா ஸ்துதி

தவ மந்வதிஸஞ்ஜபத꞉ ஸத்³யஸ்தரதி நரோ ஹி ப⁴வாப்³தி⁴ம் போ⁴ 

।ஸாம்ப³ ஸதா³ஶிவ ஶம்போ⁴ ஶங்கர ஶரணம் மே தவ சரணயுக³ம் ॥ 31 ॥


இறுதிப் பாடல் ஆய்த எழுத்தை எதுகையாக வைத்து நிறைவு செய்கிறேன்.

வெஃகுதல் அற்றுனைத் துதிப்பவர் பிறவியின்

      வினைக்கடல் கடந்திட அருள்பவனே

1)பஃறொடை சூடிய பார்வதி உடனுறை

      பரமனே உன்னடி சரணடைந்தேன்

2) எஃகுடை நாயகி உடனுறை நாதன்

         இணையடி அடியவன் சரணடைந்தேன்

3) அஃதுமை யாளுடன் மேவிய சங்கர

           அடியவன் உன்னடி சரணடைந்தேன்

1,2,3 இதில் எது சிறந்தாக இருக்கும்
சான்றோர்கள் பதில் அளிக்க வேண்டுகிறேன்

Siva Siva

unread,
Jun 27, 2026, 9:40:55 AM (2 days ago) Jun 27
to santhav...@googlegroups.com
If the next letter after the edhugai letter also matches, it will have better sound effect.

அருள்பவனே - 2nd person.
நாதன் - 3rd person.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 27, 2026, 10:20:24 AM (2 days ago) Jun 27
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 
தங்களின் கருத்து அருமை.
எதுகைக்கு அடுத்த எழுத்தும் ஒன்றி வந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்.

வெஃகுதல் அற்றுனைத் துதிப்பவர் பிறவியின்    
      வினைக்கடல் கடந்திட அருள்பவனே
எஃகுடை நாயகி உடனுறை நாதனே
       இணையடி அடியவன் சரணடைந்தேன் (31)

On Saturday, June 27, 2026 at 7:10:55 PM UTC+5:30 Siva Siva wrote:
If the next letter after the edhugai letter also matches, it will have better sound effect.

அருமையான கருத்து.
அருள்பவனே - 2nd person.
நாதன் - 3rd person.

தவறுதலாக னே என்று எழுவதாக நினைத்து ன்
என்றி எழுதி விட்டேன்.
மாற்றிக் கொள்கின்றேன்
மிக்க நன்றி குருவே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 27, 2026, 10:59:41 PM (2 days ago) Jun 27
to சந்தவசந்தம்
சங்கரர் அருளிய சுவர்ணமா மாலையைத்
    சங்கரன் திருவடி சரணடைந்து 
தங்கவேல் தழுவிநற் றமிழினில் இயற்றிய
    தங்கமா மாலையைப் பாடிடுவோம் (32)

பொருள்:
ஆதிசங்கராச்சாரியார் அருளிய ஸுவர்ணமாலா ஸ்துதி
 என்னும் சமஸ்கிருத நூலைச், சிவபெருமானின் 
திருவடிகளைச் சரணடைந்து, தங்கவேல் ஆகிய அடியேன்,
 முடிந்தவரை அதன் கருத்து சிதையாமல் தழுவி நற்றமிழில் 
இயற்றிய இத்தங்கமாலைத் துதியை அனைவரும் பாடிச் 
சிவபெருமானின் திருவடியைச் சரணடைவோம்.

இதை நூலின் இறுதிப் பாடலாக வைக்கலாமா? 
சான்றோர்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

28.06.2026
Kanchipuram K Thangavel

Siva Siva

unread,
Jun 28, 2026, 8:14:54 AM (18 hours ago) Jun 28
to santhav...@googlegroups.com
If it is an effort at translation, the translator's name should not be part of the work - (My thinking).

Here is a Tamil versification of Subrahmanya Bhujangam - by an author named Coimbatore Natesan.

https://kaumaram.com/texts/bhujangam_tm.html

His name does not occur in the 33 songs of the translated verses.


V. Subramanian



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 28, 2026, 9:08:57 AM (17 hours ago) Jun 28
to சந்தவசந்தம்

குருவே வணக்கம்.

தங்களின் கருத்தை மனப்பூர்வமாக ஏற்கிறேன். சங்கரர் – சங்கரன் – தங்கவேல் – தங்கமா மாலை என்ற எதுகை, மோனை நயமாக அமைந்ததால் அந்த நிறைவுச் செய்யுளை இயற்றினேன்.

இருப்பினும், தங்களின் கருத்தை மதித்து அந்தப் பாடலை நீக்குகிறேன்.

தங்களின் அன்பான வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி.


On Sunday, June 28, 2026 at 5:44:54 PM UTC+5:30 Siva Siva wrote:
If it is an effort at translation, the translator's name should not be part of the work - (My thinking).

Here is a Tamil versification of Subrahmanya Bhujangam - by an author named Coimbatore Natesan.

https://kaumaram.com/texts/bhujangam_tm.html

His name does not occur in the 33 songs of the translated verses.


V. Subramanian




On Sat, Jun 27, 2026 at 10:59 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

 

28.06.2026
Kanchipuram K Thangavel

.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
1:39 AM (16 minutes ago) 1:39 AM
to சந்தவசந்தம்
சுவர்ணமாலா ஸ்துதி - தங்கமாலை துதி
(Updated version)
முன்னுரை:

ஆதிசங்கரர் அருளிய சுவர்ணமாலா ஸ்துதியின் 50 பாடல்களில், 
முதல் 31 துதிகளின் கருத்துகளை, முடிந்தவரை மூலக் கருத்து
 சிதையாமல் தமிழில் தழுவி, 12 உயிரெழுத்துகளை முதலெழுத்தாகவும், 
18 மெய்யெழுத்துகளை இரண்டாம் எழுத்தாகவும், ஆய்த எழுத்தை 
இரண்டாம் எழுத்தாகவும் வரிசைக்கிரமமாக அமைத்து (12 + 18 + 1 = 31) 
இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஸாம்ப³ ஸதா³ஶிவ ஶம்போ⁴ ஶங்கர ஶரணம் மே தவ சரணயுக³ம் ॥ 1–31 ॥

மூலப் பாடல்களில் ஒவ்வொன்றிலும் இரண்டாம் அடி 
இதுவே அமைந்துள்ளதால், அதை இங்கு ஒருமுறை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

பாவகை: குறள்வெண்செந்துறை

ஓரடி வாய்ப்பாடு:
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

(12 பாடல்கள் அகர வரிசையில் அ முதல் ஔ வரை தொடங்கும் பாடல்கள்)

அத² கத²மபி மத்³ராஸநாம் த்வத்³கு³ண
லேஶைர்விஶோத⁴யாமி விபோ⁴ ।

அன்புரு வேசிவன் அவன்குணம் பாடியே     
  அகத்திருள் அழுக்கினை அகற்றிடுவேன்
அன்னையு டன்திகழ் அப்பனே சங்கர
   அடியவன் உன்னடி சரணடைந்தேன் (1)

ஆக²ண்ட³லமத³க²ண்ட³நபண்டி³த 
தண்டு³ப்ரிய சண்டீ³ஶ விபோ⁴ ।

ஆயிரங் கண்ணனின் அகந்தையை அடக்கிய
    ஐயனே தண்டுமு னிக்கினியாய்
தாயுடன் மேவிய சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (2)

இப⁴சர்மாம்ப³ரஶம்ப³ரரிபுவபு
ரபஹரணோஜ்ஜ்வலநயந விபோ⁴ ।

இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
   எரிதிகழ் கண்ணுடை இறையவனே

அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே 
    அடியவன் உன்னடி சரணடைந்தேன் (3)

ஈஶ கி³ரீஶ நரேஶ பரேஶ மஹேஶ பி³லேஶயபூ⁴ஷண போ⁴ ।

ஈசனே கயிலையின் வாசம கேசனே
எம்பிரா னேஅர வணிந்தவனே
ஈசையி னோடுறை சங்கர னேஉன
   திணையடி அடியவன் சரணடைந்தேன் (4)

உமயாதி³வ்யஸுமங்க³ளவிக்³ரஹ
யாளிங்கி³தவாமாங்க³ விபோ⁴ ।

உமையொரு பாகனே உமையவள் தழுவிய
  ஒளிமலி வடிவுடை சங்கரனே
உமையுடன் மேவிய ஒப்பிலா நாதனே
   உன்னடி அடியவன் சரணடைந்தேன் (5) 

ஊரீகுரு மாமஜ்ஞமநாத²ம் 
தூ³ரீகுரு மே து³ரிதம் போ⁴ ।

ஊனுட லோடுழல் ஊமைஅ னாதையின்
   ஊழ்வினைத் தீர்த்தெனை ஆண்டருள்வாய்
ஞானம ளித்திடும் நாயகி பாகனே
   ஞானம லர்ப்பதம் சரணடைந்தேன் (6)

ருஷிவரமாநஸஹம்ஸ சராசர
ஜநநஸ்தி²திலயகாரண போ⁴ ।

எண்ணிய முனிவரின் மனத்துறை ஈசனே
   இசைவுடன் முத்தொழில் புரிபவனே
அண்ணலே அன்னையு டன்திகழ் அப்பனே
  அடியவன் உன்னடி சரணடைந்தேன் (7)

ரூக்ஷாதீ⁴ஶகிரீட மஹோக்ஷா
ரூட⁴ வித்⁴ருதருத்³ராக்ஷ விபோ⁴ ।

ஏறினில் ஏறிய சந்திர சேகரா
   எழில்தரும் கண்டிகை அணிந்தவனே
மாறிலா மங்கையு டன்திகழ் மன்னனே
   மலரடி அடியவன் சரணடைந்தேன் (8)

லுவர்ணத்³வந்த்³வமவ்ருந்தஸுகுஸுமமி
வாங்க்⁴ரௌ தவார்பயாமி விபோ⁴ ।

ஐயனே என்விழி மலர்களை உன்திரு
    அடிகளில் அர்ப்பணித் தேத்திடுவேன்
தையலு டன்திகழ் சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (9)

ஏகம் ஸதி³தி ஶ்ருத்யா த்வமேவ ஸத³ஸீத்யுபாஸ்மஹே ம்ருட³ போ⁴ ।

ஒருவனே வேதமெ லாம்புகழ் ஐயனே
    ஓம்சிவ சிவசிவ சங்கரனே
திருநிறை உமையுடன் மருவிய ஈசனே
   திருவடித் தாமரை சரணடைந்தேன் (10)

ஐக்யம் நிஜப⁴க்தேப்⁴யோ விதரஸி விஶ்வம்ப⁴ரோ(அ)த்ர ஸாக்ஷீ போ⁴ ।

ஓம்பிய பக்தருள் ஒன்றிய ஒருவனே
  உலகினைக் காத்திடும் நாயகனே
சாம்பவி உடனுறை சங்கர னேசிவ
  தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (11)

ஓமிதி தவ நிர்தே³ஷ்ட்ரீ மாயா
ஸ்மாகம் ம்ருடோ³பகர்த்ரீ போ⁴ ।

ஔவியம் நீங்கிய அடியவர் துதிசெயும்
     அருமறை மெய்பொருள் ஆனவனே
கௌரியு டன்திகழ் சங்கர னேசிவ
     கழலிணை அடியவன் சரணடைந்தேன் (12)

(18+1 = 19 பாடல்கள்எதுகையில் மெய்யெழுத்துகள் (க் முதல் ன் வரை) + ஆய்த எழுத்து)

ஔதா³ஸ்யம் ஸ்பு²டயதி விஷயேஷு தி³க³ம்ப³ரதா ச தவைவ விபோ⁴ ।

திக்கினை ஆடையாய் உடுத்தினை பற்றிலா
    சிவசிவ சங்கர தேசிகனே
சக்தியு டன்திகழ் சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (13)

அந்த꞉கரணவிஶுத்³தி⁴ம் ப⁴க்திம் 
ச த்வயி ஸதீம் ப்ரதே³ஹி விபோ⁴ ।

எங்களின் மனம்முதல் ஆகிய நான்குமே
   இன்புற பக்தியைத் தந்தருள்வாய்
மங்கையு டன்திகழ் சங்கர னேசிவ 
     மலரடி அடியவன் சரணடைந்தேன் (14)

அஸ்தோபாதி⁴ஸமஸ்தவ்யஸ்தை ரூபைர்ஜக³ந்மயோ(அ)ஸி விபோ⁴ ।

இச்சகம் ஆகினை எண்ணிலா வடிவமாய்
    இருந்தனை எங்குமே நிறைந்தவனே
கச்சணி உமையுடன் மேவிய ஈசனே
    கழலிணை அடியவன் சரணடைந்தேன் (15)

கருணாவருணாலய மயி தா³ஸ உதா³ஸஸ்தவோசிதோ ந ஹி போ⁴ ।

தஞ்சமென் றவர்களைத் தள்ளுதல் மரபல
   தயைக்கட லேசிவ சங்கரனே
அஞ்சலென் றருளிடும் அம்பிகை நாதனே
   அடியவன் உன்னடி சரணடைந்தேன் (16)

க²லஸஹவாஸம் விக⁴டய க⁴டய 
ஸதாமேவ ஸங்க³மநிஶம் போ⁴ ।

கெட்டவர் நட்பினை நீக்கிடாய் நல்லவர்
   கேண்மையை நித்தமும் தந்தருள்வாய்
மட்டுவார் குழலியின் நாயக னேசிவ
    மலரடி அடியவன் சரணடைந்தேன்(17)

க³ரளம் ஜக³து³பக்ருதயே கி³ளிதம்
ப⁴வதா ஸமோ(அ)ஸ்தி கோ(அ)த்ர விபோ⁴ ।

வெண்டிரை நஞ்சினை உண்டருள் புரிந்தனை         
   வேறெவர் உனக்கிணை ஆண்டவனே
பண்மொழி யாளுடன் மேவிய ஈசனே
     பதமலர் அடியவன் சரணடைந்தேன் (18)

க⁴நஸாரகௌ³ரகா³த்ர ப்ரசுர
ஜடாஜூடப³த்³த⁴க³ங்க³ விபோ⁴ ।

அத்தனே வெண்திரு மேனியாய் கங்கையை
    அடர்சடை மீதினில் அடைத்தவனே
உத்தமி உடனுறை சங்கர னேசிவ
     உன்னடி அடியவன் சரணடைந்தேன் (19)

ஜ்ஞப்தி꞉ ஸர்வஶரீரேஷ்வக²ண்டி³
தா யா விபா⁴தி ஸா த்வம் போ⁴ ।

விந்தினால் வருமெலா உடலிலும் மேவிய
   மெய்யனே மெய்ப்பொருள் ஆனவனே
சுந்தரி உடனுறை சங்கர னேசிவ
   சுடரடி அடியவன் சரணடைந்தேன் (20)

சபலம் மம ஹ்ருத³யகபிம் விஷயத்³
ருசரம் த்³ருட⁴ம் ப³தா⁴ந விபோ⁴ ।

தோப்பினில் தாவிடும் மந்திம னத்தினை                 
  சுற்றிவ ளைத்துநீ கட்டிடுவாய் 
பார்ப்பதி உடனுறை சங்கர னேசிவ
     பதமலர் அடியவன் சரணடைந்தேன் (21)

சா²யா ஸ்தா²ணோரபி தவ தாபம் 
நமதாம் ஹரத்யஹோ ஶிவ போ⁴ ।

இம்மையில் வருதுயர் யாவுமுன் நிழல்பட          
    எளிதினில் நீங்குவ ததிசயமே
அம்மையு டன்திகழ் அப்பனே சங்கர
    அடியவன் உன்னடி சரணடைந்தேன் (22)

ஜய கைலாஸநிவாஸ ப்ரமத²
க³ணாதீ⁴ஶ பூ⁴ஸுரார்சித போ⁴ ।

மெய்யனே கயிலையில் மேவிய ஈசனே
    வேதியர் வழிபடும் பரம்பொருளே 
தெய்வநா யகியுடன் மேவிய சங்கர
    திருவடி அடியவன் சரணடைந்தேன் (23)

ஜ²ணுதகஜ²ங்கிணுஜ²ணுதத்கிடதக-ஶப்³தை³ர்நடஸி மஹாநட போ⁴ ।

ஆர்வமாய் தரிகிட திமியெனும் ஜதியுடன்
     ஆடிய பொற்சபை நாயகனே
பார்வதி உடனுறை சங்கர னேசிவ 
     பதமலர் அடியவன் சரணடைந்தேன் (24)

ஜ்ஞாநம் விக்ஷேபாவ்ருதிரஹிதம் 
குரு மே கு³ருஸ்த்வமேவ விபோ⁴ ।

அல்லலை அகற்றிநல் லறிவினை அருளிடாய்
    ஐயனே குருவடி வானவனே
வல்லபி உடனுறை வள்ளலே சங்கர
    மலரடி அடியவன் சரணடைந்தேன் (25)

டங்காரஸ்தவ த⁴நுஷோ த³ளயதி 
ஹ்ருத³யம் த்³விஷாமஶநிரிவ போ⁴ ।

எவ்வகை பகையுமுன் வில்லொலி இடியென
   இடித்தித யத்தினைப் பிளந்திடுமே
இவ்வுல கன்னையு டன்திகழ் அப்பனே
    இணையடி அடியவன் சரணடைந்தேன் (26)

டா²க்ருதிரிவ தவ மாயா ப³ஹிரந்த꞉ ஶூந்யரூபிணீ க²லு போ⁴ ।

வாழ்வெனும் ஓவியம் நிலையிலா நிழலெனும்         
   மாயையின் இயல்பிது நிதர்சனமே 
தாழ்விலா தன்னையு டன்திகழ் அப்பனே           
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (27)

ட³ம்ப³ரமம்பு³ருஹாமபி த³ளயத்
யநக⁴ம் த்வத³ங்க்⁴ரியுக³ளம் போ⁴ ।

தெள்ளிய தாமரை மலரினை மிஞ்சிடும்
    திருவடி யிணையுடை நாயகனே
தெள்ளமு தாளுடன் மேவிய நாதனே
    திருவடி அடியவன் சரணடைந்தேன் (28)

ட⁴க்காக்ஷஸூத்ரஶூலத்³ருஹிணக
ரோடீஸமுல்லஸத்கர போ⁴ ।

வற்றிய ஓடுடன் சூலமும் உடுக்கையும் 
   ‌மாலையும் கையினில் கொண்டவனே
 கற்பக வல்லியு டன்திகழ் அப்பனே      
    கழனிணை அடியவன் சரணடைந்தேன் (29)

ணாகாரக³ர்பி⁴ணீ சேச்சு²ப⁴தா³ தே ஶரக³திர்ந்ருணாமிஹ போ⁴ ।

நன்மையும் மங்கள நற்கதி மானிடர்
   நலத்துடன் பெற்றிட அருள்பவனே
அன்னை யுடன்திகழ் அப்பனே சங்கர
     அடியவன் உன்னடி சரணடைந்தேன் (30)

தவ மந்வதிஸஞ்ஜபத꞉ ஸத்³யஸ்
தரதி நரோ ஹி ப⁴வாப்³தி⁴ம் போ⁴ ।

வெஃகுதல் அற்றுனைத் துதிப்பவர் பிறவியின்          
    வினைக்கடல் கடந்திட அருள்பவனே
எஃகுடை நாயகி உடனுறை நாதனே
       இணையடி அடியவன் சரணடைந்தேன் (31)

29/06/2026 
Kanchipuram K Thangavel

மூலப் பாடல் விளக்கம் 
Reply all
Reply to author
Forward
0 new messages