சர்க்கரை நோய்

8 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 19, 2026, 11:19:09 PM (5 days ago) Jun 19
to santhavasantham
இணையத்தில் பலர் சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்கிறார்கள். அதில் சிலவற்றை நான் பயன்படுத்திப் பலன்பெற்றிருக்கிறேன். அவர்கள் சொன்ன குறிப்புகளை இங்கே கவிதையாக்கி வெளியிடுகிறேன். இதை நான்  பரிந்துரைக்கும் மருந்தாகக் கொள்ள வேண்டாம்

சர்க்கரை நோய்க்குச் சில ஆலோசனைகள்.

காய்ககறி ளோடே நற் கைக்குத்தல் சோறுண்டே
ஏய்ந்த பருப்புவகை ஏற்புடனே-ஆய்ந்துண்டால்
சர்க்கரைநோய் வாடித் தலைகுனிந்தே ஓடிவிடும்
வர்க்கத்துக் கும்வாரா தே!                                                 1

ஒன்றிரண்டு நான்கென்றே உற்ற விகிதத்தில்
நன்றாய் வறுத்து  நலமாக - ஒன்றாக்கி
நேரும் பொடியாக்கி நித்தமும் உண்ககருஞ்
சீரகமோ டோமம்வெந் தயம்.

எலுமிச்சைச் சாற்றை இளஞ்சூட்டு நீரில்
கலந்ததிலே உப்பைக் கரைத்து- நலமாக
மஞ்சள் பொடிதூவி வாகாகக் காலையிலே
கொஞ்சம் குடித்தால் குணம்

தோலுரித்து வைத்திருக்கும் சூரிய காந்திவிதை
சாலவே தூங்கிடுமுன் சாப்பிடுக - சீலமின்றி
நீரிழிவு ராத்திரியில் நித்திரையைத் தீய்க்காது
யாரும் நயந்துண்ண லாம்.

தொடரும்

disclaimer

Not  a recommended medicine

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 6:59:56 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
தங்கள் சர்க்கரை நோய் தீர்க்க மருந்துகளைக் கூறும்  வெண்பாக்கள் மிக அருமை. அவற்றைப் பார்த்ததும், நான் முன் எழுதிய சர்க்கரை நோய் வெண்பாப் பதிகம் நினைவுக்கு வந்தது. அவ்வெண்பாக்களை மீள்பதிவு செய்கிறேன்!

இனிப்பு நோய் பற்றிய  இனிய(!)வெண்பாப் பதிகம் 

நோயா ?  இதுவன்று : நோய்கள் அனைத்திற்கும் 
தாயென்றால்  சாலச்  சரியாகும் - வாய்கட்டி 
வாழ்வாரை   அண்டாது ; வாய்கட்டார்  தம்மினிய 
தோழனென   நிற்கும்       துணை!

தந்தையார்   மற்றும்தம்  தாயார்   இனித்திருந்தால் 
வந்தினிமை   ஊட்டுமவர்  மக்களுக்கும்!- முந்தி 
உடம்புபேண்    அன்பரை  ஒட்டாதாம் ; அன்றேல் 
இடம்பிடிக்கும்  வாழ்வில்    இனிப்பு .

'நாவற்  பழம்மற்றும்   நாட்டுமருந்(து)  உண்'ணென்பார் 
'பாகற்காய்ச்   சாறு       பருகெ'ன்பார் - வேகவைத்த 
காய்களையே   வட்டியிட்டுக்  கையளவே சோறிட்டு 
'நோய்போம்        இரும்'என்பார்   நோன்பு!

பந்தயம்           கட்டிப்      பறந்தோடும்  நோயென்று 
வெந்தயத்       தூளை      வெறும்வயிற்றில் - தந்திடுவார் 
பத்தியமே       காத்துப்    பரிதவிப்புச்     சர்க்கரையால் 
சத்தியமாய்    இஃதோர்  சனி!

'வெள்ளைநிறப்   பண்டங்கள்  வேண்டாம்' எனச்சொல்வார் 
உள்ளநிறம் வெள்ளையெனில் ஒவ்வாதோ? - உள்ளநிறம் 
வெள்ளையன்றி   முற்றும்      வினயம்அதில் ஓங்குமெனில் 
இல்லையெனப்       போமோ     இனிப்பு!?

கல்யாண  வீடுகளில்     கை,வாயைப்       பார்த்திருப்பார்! 
பொல்லா   உணவெடுத்தால்  போய்த்தடுப்பார் !- நல்லீர்!
இனியோர்   விதிசெய்(து)          'இனிய'வர்க்கும்   தாரீர் 
தனியாய்     உணவைச்        சமைத்து!

'என்ன           நடந்தால்       எனக்கென்ன?'  என்றிருக்கும் 
மன்னர்களை  இந்நோய்  மதிக்காது! - தம்நற்
பொறுப்பைப்  பிறர்மேலே   போடுகிற   பேர்க்கும் 
இருப்பாகா(து)  இந்த       இனிப்பு!

தன்னலத்தைப் பேணாமல்  தம்மக்கள்  பெற்றோர்க்காய்ப் 
பொன்னான        நெஞ்சம்      பொழுதெல்லாம் - மண்ணாக்கும் 
*ஈகிகளைத் தீய  இனிப்புத் தொடர்ந்துவந்து 
தேகம்   கெடுக்கும்   தினம் 

* தியாகி!

'தீர்வென்ன?  இந்நோய்தான்    தீர'வெனில்  என்றைக்கும் 
தீராக்                 கவலையெனும்   தீயணைத்துச் - சேரார்க்கும் 
சேர்ந்தவர்க்கும்   நன்றே      தினம் நினைத்தால்  நோய்தீரும்!?
சார்ந்துறைவோர்   காத்தல்    தலை .

'புள்ளிருக்கு வேளூரும்    போக்காதாம் ' என்கின்றார் 
 புள்ளிருக்கு   வேளூரா!    பொய்யாக்கி - நல்மருந்தாய் 
 ஆத்திகர்க்கும்  நாத்திகர்க்கும்  அல்லாத  மற்றவர்க்கும் 
பாத்தி்கட்டி     உன்னருளைப்  பாய்ச்சு!

   இப்படிக்கு 
 பதினாறு ஆண்டுகளாய்  'இனிய'னாக  வாழ்ந்துவரும் 
 அரசி .பழனியப்பன் 

.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDmvX2GNicO%2BQQOhVDdk8xBgRHFwaCmJxXvn2-OMdMRiQ%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Jun 20, 2026, 8:01:35 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
வெண்பா விருந்து மிகவினிப்பே ஆனாலும்
கண்பார்த்தே உண்ணக் கனியாகும்-   எண்ணும் 
பதிகமாய்  இங்கே  படைத்தளித்த பாக்கள் 
அதிகமோ இல்லை  அமுது

இலந்தை

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 8:19:44 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி தலைவரே!

Siva Siva

unread,
Jun 20, 2026, 8:26:08 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
கல்யாண  வீடுகளில்     கை,வாயைப்       பார்த்திருப்பார்! 
பொல்லா   உணவெடுத்தால்  போய்த்தடுப்பார் !- நல்லீர்!
இனியோர்   விதிசெய்(து)          'இனிய'வர்க்கும்   தாரீர் 
தனியாய்     உணவைச்        சமைத்து! /

Good suggestion.

V. Subramanian

On Sat, Jun 20, 2026 at 6:59 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 8:38:59 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
Thanks Tiru Siva Siva 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 10:04:13 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com, santhavasantham
ஆலோசனை வெண்பாக்கள் மிக அருமை, தலைவரே!

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 10:07:20 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சர்க்கரை நோய்க்குத் தக்கதோர் மருந்தாக அமையும் வெண்பாக்கள் மிக மிக இனிமை, திரு. பழனியப்பன்!

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 10:09:41 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 20, 2026, 11:14:55 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
கவிதைகள் அற்புதம், தலைவரே
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Jun 2026, at 8:26 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 20, 2026, 1:10:07 PM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
சர்க்கரைநோய்

எல்லாக் கவிதைகளும்

இணையத்தில் பலர் சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்கிறார்கள். அதில் சிலவற்றை நான் பயன்படுத்திப் பலன்பெற்றிருக்கிறேன். அவர்கள் சொன்ன குறிப்புகளை இங்கே கவிதையாக்கி வெளியிடுகிறேன். இதை நான்  பரிந்துரைக்கும் மருந்தாகக் கொள்ள வேண்டாம்

சர்க்கரை நோய்க்குச் சில ஆலோசனைகள்.

காய்ககறி ளோடே நற் கைக்குத்தல் சோறுண்டே
ஏய்ந்த பருப்புவகை ஏற்புடனே-ஆய்ந்துண்டால்

சர்க்கரைநோய் வாடித் தலைகுனிந்தே ஓடிவிடும்
வர்க்கத்துக் கும்வாரா தே!                                                 1

ஒன்றிரண்டு நான்கென்றே உற்ற விகிதத்தில்
நன்றாய் வறுத்து  நலமாக - ஒன்றாக்கி
நேரும் பொடியாக்கி நித்தமும் உண்ககருஞ்
சீரகமோ டோமம்வெந் தயம்.

எலுமிச்சைச் சாற்றை இளஞ்சூட்டு நீரில்
கலந்ததிலே உப்பைக் கரைத்து- நலமாக
மஞ்சள் பொடிதூவி வாகாகக் காலையிலே
கொஞ்சம் குடித்தால் குணம்

தோலுரித்து வைத்திருக்கும் சூரிய காந்திவிதை
சாலவே தூங்கிடுமுன் சாப்பிடுக - சீலமின்றி
நீரிழிவு ராத்திரியில் நித்திரையைத் தீய்க்காது
யாரும் நயந்துண்ண லாம்.

வெண்டைக்காய் நெல்லி மிக இளசாய்க் கீரைவகை
சுண்டைக்காய், நல்ல சுரைக்காயும்- உண்டிடவே
பீர்க்கங்காய், கொத்தவரை பேர்வெள்ளைப் பூசணிக்காய்
சேர்த்திடலாம் சர்க்கரைக்குத் தேர்ந்து

சர்க்கரைவள் ளிக்கிழங்கு, தாராளம் பாகற்காய்
மிக்கநலம்  செய்கின்ற வெள்ளரிக்காய்- அக்கறையாய்
முட்டைக்கோஸ் நல்லிளசாய் முள்ளங்கி, தக்காளி
தட்டின்றிச் சேர்க்கும் தரம்

தட்டிலே கால்பகுதி சாதம், கறிகாய்கள்
மட்டும் ஒரு பாதி, வளமாக – அட்டியின்றி
நல்ல பருப்புவகை, நார்ச்சத்து மீதியிலே,
வெல்லவே நல்ல விதி

இனிப்புச் சுவையொன் றிருக்கிறது என்ற
நினைப்பொன்றே போதும் நிறைவாய் – முனைப்பாய்
இனிப்புக்குப் பாட்டும் இலக்கியமும் கற்போம்
நினைத்தால் இனிக்கும் நிதம்

தீயளவு என்னவெனத் தேர்ந்தே சரியாக
நேயமுடன் உண்ணல் நெறியாகும் – நோயளவு
பற்றிக் கவலைப் படவேண்டாம், என்றைக்கும்
வெற்றிதான் இந்த விதி

(தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்- திருக்குறள்)

வெந்தயம் தன்னை விழைவாய் முளைகட்டி
முந்தி உணவுக்கு முன்சிறிது – வந்தித்தே
உண்ணக் கொழகொழப்பு உள்படியும் ஏதுமிடர்
பண்ணாது சர்க்கரையும் பார்.

ஒவ்வோர் பொழுதும் உணவுண்ட பின்னாலே
எவ்வகையு மேநடத்தல் ஏற்பாகும்- அவ்விதமாய்ப்
பத்து நிமிடம் பயிற்சி அதுபோதும்
புத்திளமை சேருமப் போது.

 பழஞ்சோற்றை நல்லெண்ணெய் பாவித்தே காலை

விழுங்கிடவே நல்ல விதமாம் – மிதமாய்ப்
பழங்களையும் உண்ணுகிற பட்டியலில் சேர்த்தே
வழங்கலாம் உள்ளம் மகிழ்ந்து.

உள்ள நெரிசல் ஒதுக்கிப் படபடப்பைத்
தள்ளி மனத்தினிலே சாந்தத்தை – உள்ளேற்றி
வைத்திருந்தால் போதும் வருத்துமோ சர்க்கரைநோய்
சத்தாகும் வாழ்க்கைத் தரம்
இலந்தை

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 9:46:29 PM (4 days ago) Jun 20
to சந்தவசந்தம்
மருந்தாகத் தந்த வளம்சேர்வெண் பாக்கள் 
விருந்தாம் அவைவிரும்பி உண்போம் - இருந்துண்ணும் 
பான்மைவிட்டு யாக்கைப் பயிற்சி தொடர்ந்துசெய்ய 
மேன்மை,மற்(று) எல்லாம் விதி!

அரசி. பழனியப்பன் 

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 6:41:08 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
கள்ளப் பிணியகல உள்ள நெரிசலை விட்டொழித்தால் போதும்! மிக உண்மை, தலைவரே!
அருமையான கவிகள்!

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 6:41:37 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“ மற்(று) எல்லாம் விதி!” - அருமை!

Arasi Palaniappan

unread,
Jun 21, 2026, 7:59:41 AM (4 days ago) Jun 21
to சந்தவசந்தம்
நன்றி இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 21, 2026, 8:35:45 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
ஓக தினத்தில் (World Yoga day) யாக்கைப் பயிற்சியை முன்னருத்தி இட்ட பின்னூட்ட வெண்பா அருமை, திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 20, 2026, at 21:46, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Jun 21, 2026, 9:37:48 AM (4 days ago) Jun 21
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

Reply all
Reply to author
Forward
0 new messages