கலிவிருத்தம்

30 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
May 27, 2026, 9:19:28 PM (9 days ago) May 27
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய( 27.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

ஒருநாள் உதவும் தெய்வ மோநீ
கருநாள் தொடங்கி வருவ னன்றோ
திருநாள் உனையான் தெரிந்த நாளே
வருநாள் வைகுந்த வாழ்வு தானே  1

   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
May 27, 2026, 9:24:19 PM (9 days ago) May 27
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய( 28.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருளது இல்லை ஒளியது நீயே
பொருளது கொள்ள அருளதும் நீயே
தெருளது காட்டி மருளதை மாற்றும்
அருபொருள் ஆளும்  ஆயனே ஆறே                2


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

இமயவரம்பன்

unread,
May 28, 2026, 3:09:43 AM (9 days ago) May 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை!

அருபொருள் = அரும்பொருள் ?

Parthasarathy S

unread,
May 28, 2026, 6:46:49 AM (9 days ago) May 28
to சந்தவசந்தம்
அடியேன் நன்றி இமயவரம்பரே! அருபொருள் - அரும் பொருள் என்றும் கொள்ளலாம்.  கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவையும் குறிக்கும். தாஸன்

Parthasarathy S

unread,
May 29, 2026, 2:05:00 AM (8 days ago) May 29
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய( 29.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருவினை தீர்ந்தால் இருக்குமோ சன்மம்
ஒருவினை ஆழ்ந்தே உயர்ந்தடி  சேர்ந்தால்
திருவினை மார்வில் திறம்பட வைத்தான்
வருவினை காப்பான் வழக்கினி யுண்டோ   
          3

 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
May 30, 2026, 9:08:21 PM (6 days ago) May 30
to சந்தவசந்தம்

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(31.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –*_ 🪷🪷🪷


பெருமழைக் கருணையில் நனைப்பான் இன்றே
அருகதை அவனடி அணைத்த வாழ்வே
பருகிடப் பலகதைப் பகர்வோர் உண்டே
திருமகள் துணையனைத் துதிப்போம் நன்றே              4



 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 30, 2026, 11:04:45 PM (6 days ago) May 30
to santhav...@googlegroups.com
அருமை. 
> > ... பலகதை*ப்* பகர்வோர் உண்டே - ஒற்று மிகை
அனந்த்

On Sat, May 30, 2026 at 9:08 PM Parthasarathy S <spart...@gmail.com> wrote:

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(31.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –*_ 🪷🪷🪷


பெருமழைக் கருணையில் நனைப்பான் இன்றே
அருகதை அவனடி அணைத்த வாழ்வே
பருகிடப் பலகதைப் பகர்வோர் உண்டே
திருமகள் துணையனைத் துதிப்போம் நன்றே              4

 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

அடியேன் நன்றி இமயவரம்பரே! அருபொருள் - அரும் பொருள் என்றும் கொள்ளலாம்.  கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவையும் குறிக்கும். தாஸன்


On Thursday, 28 May 2026 at 12:39:43 pm UTC+5:30 இமயவரம்பன் wrote:
அருமை!

அருபொருள் = அரும்பொருள் ?

> On May 27, 2026, at 3:24 PM, Parthasarathy S <spart...@gmail.com> wrote:
>
> அருபொருள் ஆளும் ஆயனே ஆறே

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/181fa06f-a0c2-4a48-bd94-d07aa4baf268n%40googlegroups.com.

Parthasarathy S

unread,
May 31, 2026, 12:27:28 AM (6 days ago) May 31
to சந்தவசந்தம்
நன்றி திரு ஆனந்த், இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது. எனது கோப்பில் திருத்திக்கொள்கிறேன். தாஸன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 31, 2026, 9:03:00 PM (5 days ago) May 31
to santhav...@googlegroups.com
Thanks. என் பெயர் அனந்த், ஆனந்த் அன்று. அது அனந்தநாராயணன் என்பதன் சுருக்கம். 
அனந்த்
For your amusement, my name as given in my passport when my wife and I entered Canada (1966) is Vettaikkorumagankavu Sankaranarayanan Ananthanarayanan (conforming to first, middle and last names!! 😄 

---------------------------------

Parthasarathy S

unread,
May 31, 2026, 9:39:35 PM (5 days ago) May 31
to santhav...@googlegroups.com
அடியேன் தவறுக்கு மன்னிக்க!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Sai Ganesan H

unread,
Jun 1, 2026, 11:28:17 AM (5 days ago) Jun 1
to santhav...@googlegroups.com
பாடல்கள் அனைத்தும் அருமை! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 9:07:30 PM (4 days ago) Jun 1
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(01.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

கருமையன் காதலன் கற்பகத் தேவன்
பெருமையன் போற்றுவர் புண்ணியர் அன்றோ
திருமையன் நெஞ்சதில் தேக்கியும் வைத்தே
ஒருமையன் ஓங்கருள் ஓதுதல் நன்றே                    5

(திருமை- அழகு; ஒருமை- தனிமை)

 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 9:08:01 PM (4 days ago) Jun 1
to சந்தவசந்தம்
நன்றி திரு சாய் கணேஷ் அவர்களே!

On Monday, 1 June 2026 at 8:58:17 pm UTC+5:30 Sai Ganesan H wrote:

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 9:10:06 PM (4 days ago) Jun 1
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(02.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு – 🪷🪷🪷

இருநிலம் படைத்தவென் இறைவனே ஈண்டே
ஒருமுறை குணமெலாம் ஏத்திடல் ஆமோ
தெருமரல் துடைத்தெமைத் தெவிளிடும் தேவே
அருமறை ஆதியா அண்டினேன் அருளே!


(தெருமரல் – மனச்சுழற்சி,அச்சம்; தெவிள்-நிறைதல்)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 1, 2026, 10:40:20 PM (4 days ago) Jun 1
to santhav...@googlegroups.com
>  தெருமரல் துடைத்தெமைத் தெவிளிடும் தேவே  
அருமை!
அனந்த்

--

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 11:46:29 PM (4 days ago) Jun 1
to சந்தவசந்தம்
நன்றி அனந்த்!!!!

Parthasarathy S

unread,
Jun 2, 2026, 8:40:53 PM (3 days ago) Jun 2
to சந்தவசந்தம்

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(03.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷


வருதுயர் விலக்கும் வரந்தரும் விமலா
இருவினை விலங்கை இறுத்திடும் இன்பா
திருவுடை மார்வுடன் துலங்கிடும் தூயா
பருவரல் மாற்றுமுன் பாதமென் பற்றே                   7


(
பருவரல் – துன்பம்)



    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 3, 2026, 11:53:50 PM (2 days ago) Jun 3
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(04.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

ஒருபகல் ஆனவுன் உலகதில் எனைவை
நெருடிடும் வினைகளை நீக்கிட அருள்செய்
கருகிடும் வாழ்வினைக் காத்திட எனையே
ஒருமுறை சரணனாய் உவந்தளி உனையே                         8



    புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


Parthasarathy S

unread,
Jun 4, 2026, 9:14:54 PM (2 days ago) Jun 4
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(05.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

நிருதரை நீறுசெய் நின்மலா நெடியா
நிருமிசெய் நித்தியா  நேடலும் நன்றோ
நிருமல நெஞ்சினாய் நேயத்தோ டென்னை
நிருமியுன் நிழற்கீழ் நேயத்தில் நீளவே 9

( நிருமி- சங்கற்பம்; நிருமலம் – நிர்மலம்)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Reply all
Reply to author
Forward
0 new messages