எவ்வுள் இறைவன் கழல்கண்டேன்

2 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Feb 13, 2026, 8:47:47 AM (24 hours ago) Feb 13
to santhavasantham

எவ்வுள் இறைவன் கழல்கண்டேன்

(அறுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா காய்)

 

திண்ணார் மலைபோல் உருக்கண்டேன்

… சீரார் மார்வில் திருக்கண்டேன்

விண்ணோர் புகழும் கழல்கண்டேன்

… வீறார் அரவின் அணைகண்டேன்

புண்ணார் பிணிகள் கெடக்கண்டேன்

… பொல்லா வினையும் விழக்கண்டேன்

எண்ணில் பிறப்பும் அறக்கண்டேன் 

… எவ்வுள் இறைவன் அருள்கொண்டே. 1


சுழலும் திருச்சக் கரம்கண்டேன்

… சுரிவெண் சங்கின் திறம்கண்டேன்

முழுவான் மதிபோல் முகம்கண்டேன்

… முனிவர்க் கருளும் கரம்கண்டேன்

அழல்போல் துயராம் பகைவென்றேன்

… அழியா மகிழ்வால் நிறைகின்றேன்

எழிலார் தமிழால் பணிகின்றேன்

… எவ்வுள் இறைவன் அருள்கொண்டே. 2


(முனிவர் = சாலிஹோத்ர மஹரிஷி)


குறிப்பு : எவ்வுள் எம்பெருமான் மீது அடியேன் இயற்றுகின்ற பாடல்களையெல்லாம் “எவ்வுள் இசைமாலை” என்னும் தனிநூலாகத் தொகுத்து வருகிறேன். இந்தப் பணியைச் செவ்வனே முடிக்கத் தமிழ் அன்பர்களான உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். 

  • இமயவரம்பன்

Siva Siva

unread,
Feb 13, 2026, 8:54:59 AM (23 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 13, 2026, 10:43:41 AM (22 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you.

> On Feb 13, 2026, at 8:54 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> Nice

Ram Ramakrishnan

unread,
Feb 13, 2026, 11:37:13 AM (21 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்பன், உங்கள் பண இனிதே நடந்தேறும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 13, 2026, at 08:47, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/12FB0368-BEAD-4B79-863A-BB35ED1E4983%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 13, 2026, 3:32:08 PM (17 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

Arasi Palaniappan

unread,
Feb 13, 2026, 3:39:48 PM (17 hours ago) Feb 13
to சந்தவசந்தம்
மிக அருமை 

--

இமயவரம்பன்

unread,
Feb 13, 2026, 3:45:15 PM (17 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.பழனியப்பன்!

> On Feb 13, 2026, at 3:39 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> மிக அருமை
Reply all
Reply to author
Forward
0 new messages