திருவள்ளுவர் தினம்

13 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jan 16, 2026, 5:50:50 AM (yesterday) Jan 16
to சந்தவசந்தம்

https://youtu.be/oHqBvoAXsXE

இராகம் – மலயமாருதம்  தாளம் ஆதி

 

பல்லவி

 

அறிவாய் வள்ளுவர் அந்த ரங்கமே

பரிமேல் அழகர் கண்ட வண்ணமே

 

சரணம் 1

 

தெளிவாய் நாலுமே  நமக்காய் இருக்க

எளிதாய் மூன்றென குறளில் இட்டானே

விளக்காய் இலக்கண மொழிசொல் லாததால் 

துளக்கற அரும்பொருள் இன்பம் என்றானே

 

(அறிவாய் வள்ளுவர் அந்த ரங்கமே)

 

சரணம் 2

 

விதித்தன செய்தல் விலக்கின ஒழித்தல்

அதுவே அறமென முதலில் கொண்டான்

அறமே ஒழுக்கம் வழக்கொடு தண்டனை

மறந்தும் ஒழுக்கம் வழுவீர் என்றான்

 

(அறிவாய் வள்ளுவர் அந்த ரங்கமே)

 

சரணம் -3

வழக்கும் தண்டமும் வழிநெறி ஒறுத்தும்

ஒழுக்கம் என்பதே மாந்தர்ச் சிறப்பாம்

ஒழுக்கம் அறமென வள்ளுவன் கொண்டான்

ஒழுக்கம் நெறிநிலை இரண்டில் அடைத்தான்

 

(அறிவாய் வள்ளுவர் அந்த ரங்கமே)

 

சரணம் - 4

 

இல்லறம் துறவறம் இரண்டாய்க் கொண்டு

இல்லறம் தொடங்கி அறமே சொன்னான்

நல்வகை அறனே வீடினைக்  காட்டும்

என்பதால் அறத்தினை படியாய்க் கொண்டான்

 

(அறிவாய் வள்ளுவர் அந்த ரங்கமே)

GOPAL Vis

unread,
Jan 16, 2026, 11:11:32 AM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
அருமை. 
கோபால்

On Fri, Jan 16, 2026 at 4:20 PM Parthasarathy S <spart...@gmail.com> wrote:

https://youtu.be/oHqBvoAXsXE

இராகம் – மலயமாருதம்  தாளம் ஆதி

 

பல்லவி

 

அறிவாய் வள்ளுவர் அந்த ரங்கமே

பரிமேல் அழகர் கண்ட வண்ணமே

 

.............

Ram Ramakrishnan

unread,
Jan 16, 2026, 2:38:10 PM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com, santhavasantham

திருவள்ளுவர் நாள் 

 15/01/2026


அந்தாதிக் கட்டளைக் கலித்துறை 


வள்ளுவர் சாற்றினர் மாந்தரும் போற்றினர் வான்புகழ

உள்மனத்  துள்ளே ஒளிரும் குறளெனு மொண்பொருளே

கள்வரை மாற்றிக்  கனிவுறச் செய்யுங் கருவியிதே

தெள்ளிய சொல்லிலே தீந்தமிழ்ப் பாரதி செப்பினனே.

 

செப்புவோம் செந்தமிழ்க் காவியம் தந்தவன் சீர்ப்புகழே

ஒப்பிலா வாழ்வியல் ஓதி அளித்தோன் உயர்குணத்தான்

எப்பிழை செய்தோரும் ஏற்ற முறுவகை ஈங்களித்தான் 

தப்பிதம்  மேவிடத் தாளா துழல்வரைச் சாடினனே.

 

சாடுவோம் தீச்செயல் சாதியை நீக்குவோம் தண்மனத்தே

பாடுவோம் போற்றிப் பரப்புவோம் வள்ளுவம் பாரினிலே  

தேடுவோம் நன்நெறி  தென்னகம் தந்தோன் திருக்குறளில்

வாடுவோர் மேம்பட வாழ்க்கை நெறியுள வள்ளுவத்தே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 16, 2026, at 11:11, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvZ_8i8d4vVYjOvuCsTwft1pMkhP4BsvNPDNSgrcTkiSA%40mail.gmail.com.

Parthasarathy S

unread,
Jan 16, 2026, 11:37:19 PM (21 hours ago) Jan 16
to சந்தவசந்தம்
நன்றி திரு கோபால்!

Parthasarathy S

unread,
Jan 16, 2026, 11:38:57 PM (21 hours ago) Jan 16
to சந்தவசந்தம்
செப்புவோம் செந்தமிழ்க் காவியம் தந்தவன் சீர்ப்புகழே 
அருமை அருமை! அடியேன் செய்ததும் அதையே! நன்றி!

Kaviyogi Vedham

unread,
11:25 AM (10 hours ago) 11:25 AM
to santhav...@googlegroups.com
அருமை இமயம்   வாழ்க,
 யோகியார்

Arasi Palaniappan

unread,
3:36 PM (5 hours ago) 3:36 PM
to சந்தவசந்தம்
அந்தாதிக் கட்டளை ஆரம் 
புனைந்தீர் ;
அகமகிழ்ந்தோம் 
முந்தைய 'ஆதி பகவன் முதற்றே உலகமெ'னச்
சிந்தை நெகிழத் திருவள் ளுவனார் தெரிந்துரைத்த
அந்தநல் முப்பால் அமுதென்(று)  உரைத்தீர்! 
அதிசிறப்பே!


Ram Ramakrishnan

unread,
3:38 PM (5 hours ago) 3:38 PM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 17, 2026, at 15:36, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages