இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/
நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-)
ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-)
ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-)
கட்டுரைப்போட்டியின் தலைப்பு:
இந்தி, சமற்கிருத, ஆங்கிலத் திணிப்புகளை முறியடிப்போம்!4 பக்கங்களுக்குக் குறையாமல் (மேல் வரம்பு இல்லை)
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆவணி 11, 2054 /
28.08.2023 தமிழக நேரம் மாலை 6.00 மணிக்குள்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி:
thamizh....@gmail.comஒன்றிய அரசு இந்தியையும் சமற்கிருதத்தையும் நாளும் திணித்துக் கொண்டு வருகிறது. அவற்றைத் திணிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் அதனை அகற்றிக் கொண்டுள்ளது. மாநில அரசு இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. ஆங்கில வழிப்பள்ளிகளில் இள மழலை வகுப்பிலிருந்தே இந்தி, இந்தி பரப்புரை அவை மூலம் இந்தி, தனிக்கல்வி மூலம் இந்தி, அஞ்சல் மூலம் இந்தி என எல்லா வகையிலும் இந்தியை வீற்றிருக்கச் செய்து விட்டு இந்தியை எதிர்ப்பதாகத் தலைவர்கள் நாடகமாடுகிறார்கள். ஊடகங்கள் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்துக் கொண்டு வருகின்றன. மொழியை இழந்தால் வாழ்வை இழப்போம் என்பதை உணராமலேயே மக்களும் மொழித்திணிப்புகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே, இந்தித்திணிப்பிற்கு எதிராகவும் தமிழ்க்காப்பிற்கு எதிராகவும் இருமுறை சிறை சென்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு மேற்குறித்த தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறோம். மூன்று மொழிகளும் எவ்வாறெல்லாம் திணிக்கப்பட்டு வருகின்றன, இதனால் நாம் அடையும் இழப்பு என்ன? தமிழ் மொழி அழிப்பு, தமிழ் இன அழிப்பிற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பேரிடருக்கு முற்றுப்புள்ளி வைப்பது எவ்வாறு? எவ்வாறெல்லாம் மும்மொழித்திணிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? நாம் எவ்வாறு முறியடிக்க வேண்டும் எனக் கட்டுரைகளைப் பிற மொழிக் கலப்பு இன்றி எழுதி அனுப்ப வேண்டுகிறோம். மாணவர், மாணவரல்லாதார் , சிறியவர், பெரியவர், ஆண், பெண்,தொழிலாளி, முதலாளி என்பன போன்ற எவ்வகை வேறுபாடுமின்றி அனைவரும் பங்கேற்கலாம். எனவே போட்டியில் பங்கேற்று வாகை சூட வேண்டுகிறோம்.
ஆர்வமுள்ளவர்களைப் பங்கேற்க வேண்டுகிறோம்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க் காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும். ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர். வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே. வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது” – தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்