அரசியல் ஒரு சாக்கடை.

22 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Nov 30, 2019, 2:08:25 PM11/30/19
to மின்தமிழ்

அரசியல் ஒரு சாக்கடை.

=================================================ருத்ரா


அரசியல் ஒரு சாக்கடை.

ஊழல் புழுக்கள் நெளிகின்ற‌

அசிங்கங்களின் ஆரண்யம்.

இப்படி பேசுவதும் ஒரு அரசியல்.

அச்சமூட்டுவது

அருவருக்க வைப்பது

எனும் உத்திகளால்

ஒட்டு மொத்தமாய் உருண்டு திரண்டு

வரும் சமுதாயப்பிழம்பை

நீர்க்க வைத்து

அதில் ஒரு அதிகாரபோதைக்கு

தனியாய் வழி ஏற்படுத்திக்கொள்ளும்

ஏற்பாடே இது.

அரசியல் என்பது

சிந்தனை வெளிச்சம் நிறைந்தது.

இதில்

சாதி சமயம் மற்றும்

மனிதனை மனிதன் சுரண்டும்

பழமை வாத அமைப்புகள்

எல்லாம்

அடிபட்டுப்போகும்

இதில் பளிங்கு ஆறே எண்ண இயக்கத்தில்

ஓடுகிறது.

தனிஉடைமை எனும்

ஊசிமுனையில்

பெரும் சமுதாயம் எனும்

இமயமே நிற்கிறது.

இந்த கூர்முனையில் பெரும்பான்மை மக்கள்

கழுவேற்றப்படுகிறார்கள்.

இரண்டு மூன்று விழுக்காடு மக்கள்

நாட்டின் தொண்ணூற்று ஏழு விழுக்காடு

சொத்துக்களையும்

செல்வாதாரங்களையும்

தன் உடைமை ஆக்கிக்கொண்டு

ஆதிக்கம் செலுத்துவதை

எப்படி முறைப்படுத்துவது?

இந்த கொடுமையான நுட்பம்

மறைக்கப்பட‌

இங்கே எத்தனை எத்தனை புகைமூட்டங்கள்?

தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள்..

செய்தி ஊடகங்கள்..

கோவில் திருவிழா கும்பமேளாக்கள்

பக்தி பரவசம் எனும் பொய்மை ரசங்களை

சோம பான சுரா பானமாய்

ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்

"சுலோகங்களின் "பீப்பாய்கள் ...

கில்லர் த்ரில்லர்களை வைத்துப்பின்னப்பட்ட

கிரிமினல் கதைகள்...

வர்ண வர்ண கோட்பாடுகள் கொண்ட‌

வகை வகையான கட்சிகள்..

இந்த திசை திருப்பல்களில்

உலகம் திசையையே இழந்து போனதால்

வறுமையின் கோர நகங்கள்

ரத்தக்கீற்றுகளைக்கொண்டு

இந்த உலகத்தை

ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

ஆப்ரிக்காவில் பல நாடுகளில்

உணவின்றி

எலும்புக்கூடுகளாகவே பிறந்து

மக்கள்

எலும்புக்கூடுகளாகவே

கல்லறைக்குள் .விழுகின்றார்கள்.

விண்ணை இடிக்கும்

கட்டிடங்களைக் கொண்ட நாடுகள்

பட்டினியும் பிணியுமாக செத்துவிழும்

மக்கள் பிதுங்கி வழியும் நாடுகளைக்

கண்டு கொள்வதே இல்லை.

மரத்துப்போன மனங்களைக்கொண்டு

கிருஸ்துமஸ் மரங்களை

வண்ணமாக்கி மகிழ்ந்து கொள்கிறார்கள்.

பிதா மகனும் தேவகுமாரனும்

இன்னொரு புதிய ஏற்பாட்டை

அரங்கேற்றி

நியாயத்தின் ஜீவ அப்பத்தை

எப்போது பங்கிட்டு கொடுப்பார்கள்?

ஒரு வியர்வைத்துளி என்பது

மனித உயிரின் கோடிக்கணக்கான‌

செல்களின் உயிர்ப்பில்

மழை பொழிவது....

இந்த

"விசும்பின் துளி வீழி ன் அல்லால் "

உலகம் தலை நிமிர்தல் அரிது.

அந்த மழையின் பயன்களில் எல்லாம்

செழித்துக்கொள்வது

சில குடைக்காளான்களே!

ஆட்சியின் வெண்கொற்றக்குடை

அந்த நாய்க்குடைகளுக்கு மட்டுமே

குடை பிடிக்கத்தானா?

இதைப்பற்றி சிந்திக்க‌

நுண்மாண் நுழைபுலம் வேண்டும் என்கிறார்

வள்ளுவர்.

அது இல்லாத மண்பொம்மைகளால்

எதுவும் விடியப்போவதில்லை.

சிந்தியுங்கள் அன்பான மக்களே!


=================================================

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Nov 30, 2019, 2:42:40 PM11/30/19
to mint...@googlegroups.com
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்.
"வெள்ளத்தநையது மலர் நீட்டம்.
உள்ளத்தநையது உயர்வு,
வரப்புயர நீர் உயரும்"
"மண்பொம்மை" நாட்டம் எதைச்சார்ந்தது?

ஞாயி., 1 டிச., 2019, முற்பகல் 12:38 அன்று, ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4c097192-6f10-40f8-adfc-941e63df2145%40googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Nov 30, 2019, 3:02:11 PM11/30/19
to மின்தமிழ்
மலர் நீட்டம் இங்கே சிந்தனை.
வெள்ளம் இங்கே உள்ளம்.
மண்ணால் செய்த 
பொம்மை அல்ல சிந்தனை.
மண்ணே இங்கு சிந்திக்க வேண்டும்.
‍‍‍‍‍__________________________ருத்ரா

Thevan

unread,
Nov 30, 2019, 10:39:20 PM11/30/19
to mint...@googlegroups.com
//அரசியல் ஒரு சாக்கடை.//
தவறான சிந்தனை. இது பலரையும் அரசியலில் ஈடுபட விடாமல் தடுக்கும். அரசியல்
துரோகம் நிறைந்த துறை என்பதில் சந்தேகம் இல்லை. இது அதிகாரத்தை
விரும்பும் அனைவரும் செய்யக் கூடியதே. அரசியலில் நல்லவர்களுக்கு
வேலையில்லை. அவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டுமே அங்கு பயன்படும்.
நான் நல்லவன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால், அதனால் ஒரு பயனும்
இல்லை. அங்கே உங்களை வீழ்த்த பலரும் தயாராக இருப்பார்கள். அவர்களை
சமாளிக்க கூடிய நபர்களால் மட்டுமே அரசியலில் நிலைக்க முடியும். மற்றபடி
நல்லவர்கள் என்பது அடிப்படைத் தகுதி மட்டுமே. தகுதித் தேர்வில் வெற்றி
பெற வேண்டும்.



On 01/12/2019, ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> wrote:
> *மலர் நீட்டம் இங்கே சிந்தனை.*
> *வெள்ளம் இங்கே உள்ளம்.*
> *மண்ணால் செய்த *
> *பொம்மை அல்ல சிந்தனை.*
> *மண்ணே இங்கு சிந்திக்க வேண்டும்.*
> *‍‍‍‍‍__________________________ருத்ரா*
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/mintamil/6f47db81-aea7-475e-933a-508ed3eed728%40googlegroups.com.
>


--
அ. பெருமாள் தேவன்

Alternative No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevannews.blogspot.com/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

N D Logasundaram

unread,
Nov 30, 2019, 11:21:47 PM11/30/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam
இந்த சாக்கடையில்தான் 
நாம் 
1947 லிருந்து 72 ஆண்டுகளாக 
வெட்கமில்லாமல்
வேறு வழிக்கு மாற்று தேடாமல் 

சோம்பேறிகளாக 

ஊமைகளாக 

போக்கற்றவர்களாக 

தன்உதவி யற்றவர்களாக 

உலகத்தின் பெரும் மக்களாட்சி நாடு என மேற்கத்திய நாடுகளின் மாயைக்கு மூளை  சலவை செய்யப்பட்டு 
அவர்களின் தன்னலத்திற்காக அவர்களின் செய்தித்தாள்  + ஊடகத்தின் துணையினால் விழுங்கப் ப்பட்டு 

நாங்கள் அடிமையாகி இருந்தோம் எனபத்தைக் காட்டும் விடுதலைநாள்  என ஒன்றை மாபெரும் 
பீடும் பெருமையுடன் கூட இன்று வரை கொண்டா வும் செய்துவிட்டு  நம்மைப்பார்த்து ஏளனமாக 
தம் மனதிற்குள் நமுட்டுச் சிரிப்பு சுவைப்பதையும்  உணராமல் 

நாளும் முளைக்கும் ஆயிரமாயிரம் காவிகளின் (சாமியார்) பொய்மைக்கு ஆளாவதை
 கிள்ளி தூக்கி ஏறி யாதவர்களாக 

ஓர் இனத்தின் / மொழியின் அடிமைகளாக தொடர்ந்து வாழ்ந்து வரும் 

தூய்மைசெய்து கொள்ள  ன்னீர்  குளியல் தேடாமல் 

உள்ளவர்கள் தாம் என்பதில் ஐயமில்லை ஐயமில்லை 
   

 







நூ த லோ சு
மயிலை
 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Dec 2, 2019, 12:32:58 AM12/2/19
to mint...@googlegroups.com
சுய நலஙகளின் விதைகளை எவ்வகை ஞானாக்கினியால் 'வறுத்தெடுக்கவேண்டும்?   கல்விதேவாலயங்களே கறைபட்டிருக்கும்போது?  'சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பது கேள்விக்குறியாம்போது......

ஞாயி., 1 டிச., 2019, முற்பகல் 9:51 அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 2, 2019, 3:27:25 PM12/2/19
to மின்தமிழ்
ஞானம் வறுத்தெடுக்கும் வலுவற்றது.
ஞானம் சுட வைக்கும்.
ஞானம் அதற்கும் மேலும்
வறுத்தெடுக்க வரவேண்டும் என்றால்
அந்த சூடே ஆவேசமாய் 
எழுந்திட வேண்டும்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.
அழித்திடுவோம் என்றால்
அழித்திடுவோம் இல்லை.
"பாடம் புகட்டிடு"வோம்
என்கிறார் மகா கவி.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________ருத்ரா

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Dec 3, 2019, 12:51:09 AM12/3/19
to mint...@googlegroups.com
"ஞானத்தினால் உயர்வீடு நண்ணும்"   விடுதலை பெறவியலும்.  இன்றைய துயர்களை களையஅஞ்ஞானதினால் இயலாது. அவ்வையார் சொன்ன 'எண்ணும் விழி'   பழிக்குப்பழி வாங்கல் அல்ல. 

செவ்., 3 டிச., 2019, முற்பகல் 1:57 அன்று, ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages