பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் கதை!

158 views
Skip to first unread message

இசையினியன்

unread,
Oct 29, 2023, 10:49:47 PM10/29/23
to mint...@googlegroups.com

கைரேகைச் சட்டப்போராளி முதல் பட்டியலின மக்களின் பாதுகாவலன் வரை - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் கதை!

தமிழ்நாட்டில் எண்ணற்ற தலைவர்கள் தோன்றியிருக்கலாம். எண்ணற்ற தலைவர்கள் மறைந்து இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் வாக்கு வங்கி அரசியல் நிலைப்பாட்டை தேவரின்றி யாரும் நிகழ்த்திக் காட்டமுடியாது. அவர் உயிரோடு இருந்தாலும் சரி, உயிரோடு இல்லை என்றாலும் சரி, அதுதான் இன்றும் யதார்த்த நிலைப்பாடு. முத்துராமலிங்கத் தேவர், சாதியால் நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் சுதந்திரப் போராட்டத்தியாகி. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியப் பணிகளை அலங்கரித்து மக்களுக்கு நல்சேவையாற்றிய ஒரு வள்ளல்.

pasumpon.png

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

தமிழ்நாட்டில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் பசும்பொன் என்னும் கிராமத்தில் உக்கிரபாண்டி தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் அக்டோபர் 30,1908ஆம் ஆண்டு ஒரே மகனாகப் பிறந்தவர். மிகுந்த வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் இவர் தனது ஒரு வயதில் தாயை இழந்து தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். பெரியதாயார் மீனலோசனி அம்மாவும், இஸ்லாமிய நட்புக்குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாலும் வளர்க்கப்பட்டார்.

பள்ளிப்படிப்பு:

 தனது சிறுவயதில் குழந்தைசாமி பிள்ளை என்னும் நபரிடமும் பின், கமுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியிலும் பயின்ற பசும்பொன் தேவர், பின்னர் மதுரை - பசுமலை மேல்நிலைப்பள்ளியிலும், யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1924ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைபாட்டால் பள்ளிசென்று முத்துராமலிங்கத்தேவரால் படிக்கமுடியவில்லை.

கைரேகைச்  சட்டத்திற்கு எதிரான தேவரின் போராட்டம்:

1920களில் மதராஸ் மாகாணத்தில் அம்பலகாரர், வலையர், கள்ளர், மறவர், உப்புக்குறவர் மற்றும் சில சமூக மக்களை ஒடுக்கும் வகையில் கைரேகைச் சட்டத்தை(கை ரேகை சட்டம்) கொண்டுவந்தது, பிரிட்டிஷ் அரசு. அதன்படி, இச்சமூகங்களைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் இரவில் இருக்கும் காவல்நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு, கை ரேகையினைப் பதிவுசெய்துவிட்டு, காலையில் வீடு திரும்பவேண்டும். ஒரு அவசர ஆத்திரத்திற்காக வேறு ஒரு ஊருக்குச் செல்லவேண்டும் அனுமதிச்சீட்டுப் பெறவேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கொடுமைகள் அப்போது அமலில் இருந்தன. அதனை, எதிர்க்கும்விதமாக மதுரை(பிரிக்கப்படாத தேனி, திண்டுக்கல்), ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்களை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்று திரட்டி போராட்டம் செய்தார். தேவர் தலைமையில் நடந்த தொடர்போராட்டங்களால், பின் இச்சட்டத்தை நீக்கியது பிரிட்டிஷ் அரசு.

maruthuruvar.jpg

அரசியல் வாழ்வு: 

1936ஆம் ஆண்டில் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வென்று முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார், தேவர்.

பின், 1937 பிப்ரவரியில் ராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். அவருக்கு மக்களிடம் பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சிய நீதிக்கட்சி, ராமநாதபுர மன்னரை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால், அவற்றையெல்லாம் எளிமையாக கடந்து பெரும்வெற்றிபெற்றார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

பட்டியலின மக்களின் ஆலயப்பிரவேசத்துக்கு காவலாக நின்றவர்: 

வைத்தியநாத ஐயர், ராஜாஜி, என்.எம்.ஆர். சுப்புராமன் ஆகியோர், பட்டியலின மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச்சென்று ஆலயப்பிரவேசம் நடத்த முடிவு செய்தபோது, ஆதிக்க சாதியினர் பலர் எதிர்த்தனர். அப்போது மேற்கூறிய மூவரும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆதரவை நாடினர். அதற்கு தேவர் சம்மதித்தார். மேலும், எனது அன்புச்சகோதரர்களான பட்டியலின மக்கள் அன்னை மீனாட்சியை வணங்கி வீடு திரும்பும் வரை நான் பாதுகாப்புத் தருகிறேன் என்றும்; ஏதாவது கடும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், எதிர்ப்பாளர்களை சந்திக்கும் விதத்தில் சந்திப்பேன் எனவும் நோட்டீஸ் அடித்து விநியோகித்தார், தேவர். பின், பட்டியலின மக்களின் ஆலயப்பிரவேசம் அமைதியாக நடந்தது.

சுபாஷ் சந்திர போஸ் உடனான நட்பு: 

1952ஆம் ஆண்டு, திரிபுரி கூட்டத்தில் காங்கிரஸின் அகில இந்திய தலைவர் பதவியில் போஸ் போட்டியிட்டார். இதில் தேவரின் ஆதரவோடு, சுபாஷ் சந்திரபோஸ் வென்றார். பின்னர், காந்தியின் தலையீட்டில் போஸ் அக்கட்சியை விட்டு விலகினார். அப்போது போஸ் துவங்கிய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து மதுரையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கூட்டம் நடத்தினார், போஸ். பின்னர், ஐஎன்ஏ எனப்படும் போஸின் சுதந்திரப்படைக்கு ஆட்களைத் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பியது உள்ளிட்டப் பல்வேறு சுதந்திரப்போராட்டத்தில் நிகழ்ந்த அரசியல் காரணங்களால் 1940ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார்

bose-thevar.jpeg

1952,1957 பொதுதேர்தல்: 

காங்கிரஸ் இல்லாத ஆட்சியை உருவாக்க நினைத்த சுபாஷ் சந்திரபோஸுக்கு துணையாக, 1952ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அருப்புக்கோட்டை எம்.பி.தொகுதி தேர்தலிலும், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின், எம்.பி. பதவியை ராஜினாமா செய்து எம்.எல்.ஏவாக., ராஜாஜியை எதிர்த்து அரசியல் செய்தார்.

அதேபோல், 1957ஆம் ஆண்டு பொது தேர்தலில், தேவர் அருப்புக்கோட்டை எம்.பி. தொகுதியிலும், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால், இம்முறை எம்.பி. பதவியை மட்டும் தக்கவைத்துகொண்டு, எம்.எல்.ஏ பதவியை வென்றவுடன் ராஜினாமா செய்தார்.

1962-ல் நடந்த பொது தேர்தல்: 

இம்முறை லோக் சபா தேர்தலில் போட்டியிடும்போது தேவரின் உடல் நிலை மோசம் அடைந்தது. இருப்பினும் மக்கள் ஆதரவால், மீண்டும் வென்றார். கடைசியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 1963ஆம் ஆண்டு, அக்டோபர் 29 அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

தேவர் பிறந்த நாளை தேவர் குருபூஜையாக, தேவர் ஜெயந்தியாக மக்கள் கொண்டாடி நினைவுகூர்கின்றனர். 



என்குறிப்பு:
  1. இந்த மண்ணை கைபற்ற நினைத்த ஆங்கிலேயனுக்கு எதிராக வாள்பிடித்த மக்களை தினமும் கைரேகை வைக்க வைத்தனர்
  2. கைரேகை வைத்த மக்களின் அடுத்த தலைமுறை பேனா பிடிக்க வேண்டும், அறிவை ஆயுதமாக்க வேண்டும், தெய்வீகத்தொடும் தேசியத்தோடும் பயணிக்க வேண்டுமென வாழ்ந்துகாட்டிய செம்மல் தேவர் அய்யா.
  3. வள்ளலாரின் (சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை) தொடர்ச்சியாக வாழ்ந்த மகான் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்) 
thevar-pen.jpeg

vallalar.jpeg


[title பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் கதை!]
[slug pasumpon]
[category நூல்கள்]
[tags அருப்புக்கோட்டை,சுபாஷ்,தேவர் ஜெயந்தி,வைத்தியநாத ஐயர், ராஜாஜி, என்.எம்.ஆர். சுப்புராமன்,நீதிக்கட்சி]
[nogallery]
[end]

Pandiyaraja Paramasivam

unread,
Oct 29, 2023, 11:30:16 PM10/29/23
to mint...@googlegroups.com
மிக நல்ல கட்டுரை இசையினியன். மிக்க நன்றி. ஆனால் 

“1952ஆம் ஆண்டு, திரிபுரி கூட்டத்தில் காங்கிரஸின் அகில இந்திய தலைவர் பதவியில் போஸ் போட்டியிட்டார்”

போன்ற ஆண்டுக் குழப்பங்கள் உள்ளன.

ப.பாண்டியராஜா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAK%3DPhqpFoVSTe5oy_LfmUB3Sp%3Dfqv_AJ2GhR85vsC8XdWr8nBw%40mail.gmail.com.

இசையினியன்

unread,
Oct 30, 2023, 2:16:00 AM10/30/23
to மின்தமிழ்
  • அது ஒரு ஊடகத்தின் மீள் பதிவு என்பதால் சில தவறுகள் இருந்திருக்கலாமய்யா

இசையினியன்

unread,
Oct 30, 2023, 2:20:11 AM10/30/23
to மின்தமிழ்
  • கர்ம வீரர் எனும் காமராசர் தமிழ்நாட்டிற்கு உருவாக்கியவர் என்ற பெருமையும் பசும்பொன்னையே சாரும். 
  • இவர்கள் பற்றி பழனி பாபா அவர்களின் பேச்சு
  • https://youtube.com/shorts/gtnozeP-HDU?feature=shared

இசையினியன்

unread,
Oct 30, 2023, 3:28:46 AM10/30/23
to மின்தமிழ்
  1. செல்வந்தராக பிறந்தாலும் சித்தராக வாழ்ந்தவர் மறைந்தவர், 
  2. தைப்பூச நாட்களில் வடலூர் செல்பவர் மற்றும் வள்ளலார் சோதி தரிசனம், மேடைப்பேச்சு புரிந்தவர்
  3. சித்தர்களால் சித்தர் ஆகம முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டவர்
  4. தேவரின் சித்தர்களுடனான தொடர்பு புகைப்படங்கள்
  5. சுபாஷ் சந்திர போசுடான தொடர்பு புகைப்படம்
  6. சுபாஷ் சந்திர போசு மற்றும் ஹிட்லர் சந்திப்பு புகைப்படம்
  7. https://youtu.be/aBI6Q_D9pFI?feature=shared

இசையினியன்

unread,
Nov 1, 2023, 10:55:39 AM11/1/23
to மின்தமிழ்
  1. இந்திய தேசிய ராணுவம், முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
  2. https://youtube.com/shorts/HtMPo_cV6II?feature=shared
  3. காணொளியில் பேசுபவர் யார் என்று தெரியவில்லை.. 
  4. உண்மையைப் பகிர வேண்டும் என்பதற்காக பகிர்கிறேன்

தேமொழி

unread,
Nov 1, 2023, 6:54:37 PM11/1/23
to மின்தமிழ்
//////https://youtube.com/shorts/HtMPo_cV6II?feature=shared
காணொளியில் பேசுபவர் யார் என்று தெரியவில்லை.. ////

பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர்
சென்ற ஆண்டு உரை - முழு உரையும் இங்கே 
https://www.youtube.com/watch?v=GI5oTvUtvtE&t=901s
-----
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages