சங்கத்தமிழ் நாள்காட்டி:சங்க இலக்கியப்பாடல்கள்-விளக்கங்கள் ஓவியங்களுடன்

201 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 31, 2025, 9:03:32 PMOct 31
to மின்தமிழ்

Screenshot 2025-11-01.png

மெலியும் என் நெஞ்சு

செவ்வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெருவரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே! (குறுந். 187)
          கபிலர்

பொருள்:
தோழி! சிவந்த மலைச் சாரலில் வருடை மான் குட்டி,
தன் தாய்மடியில் பாலை வயிறு நிறையக் குடித்துவிட்டு
மலையின் நிழலில் துள்ளி விளையாடும் நாட்டிற்குத் தலைவன்,
மலையை விடவும் வலிமையானவன் என்று கருதாமல்
என்னுடைய மனம், அவனை எண்ணி எண்ணி மெலிகிறது.

The man from the country-where a mountain goat kid
Drinks its mother's abundant, sweet milk to the full,
And romps around in the steep mountain's shade-
Is tougher than rock, my friend.
My heart is suffering,
Not considering that he is strong.

தேமொழி

unread,
Nov 1, 2025, 11:32:17 PMNov 1
to மின்தமிழ்
Screenshot 2025-11-02.png 

விரைந்து செலுத்துக!

இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே! (குறுந். 189)
          மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

பொருள்:
பாகனே! இன்று புறப்படுவோம். நாளைக்கு நமது பணியை நிறைவு செய்து வருவோம்.
குன்றில் விழும் அருவியைப் போல வெண் தகடுகள் பதிக்கப்பட்ட தேர் செல்லும்போது,
அதன் சக்கரங்கள், பயிர்களைத் துண்டாக்கும் விரைவுடன்
காற்றைப் போல் மாலையில் திரும்பி வந்து
தலைவியுடன் மகிழ்ந்து இருப்போம்.

Let us leave today and return tomorrow riding the white chariot,
Its wheels splendid and whirling as fast as the wind,
So that I can reach home by evening,
To embrace the chest of the young woman
And rejoice in her company.

தேமொழி

unread,
Nov 2, 2025, 9:07:15 PMNov 2
to மின்தமிழ்
Screenshot 2025-11-03.jpg

அன்பு அவ்வளவுதானா?

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம் பூங்கட்டி என்றனிர்! இனியே,
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர்!
ஐய! அற்றால் அன்பின் பாலே! (குறுந். 196)
        மிளைக் கந்தனார்

பொருள்:
தலைவனே! என் தோழி முன்பு உங்களுக்கு வேப்பங்காயைக் கொடுத்தாலும்,
வெல்லக்கட்டி என்று சொல்லி மகிழ்ந்து உண்டீர். இப்போதோ,
பாரியின் பறம்பு மலையின் இனிய குளிர்ந்த சுனை நீரைக் கொடுத்தாலும்
சூடாக உள்ளது, உவர்க்கிறது என்கிறீர்.
உம்முடைய அன்பு அவ்வளவு தானா?

When my friend gave you bitter neem fruit then
You said it was sweet like jaggery;
Now, even if she gives you cool water
That's sweet like spring waters from Paari's hills
It's hot and salty you say;
My lord! What happened to your love?
 

K. Jeyapalan

unread,
Nov 3, 2025, 8:40:25 AMNov 3
to மின்தமிழ்
வணக்கம்,

ஒரு சந்தேகம்.

//இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,//

இதில் "நாளைக்" என்பது சரியல்ல என்பது என் எண்ணம். கணினியில் எழுதிய போது தவறு நேர்ந்து இருக்கலாமா?

//இன்றே சென்று வருதும்; நாளை
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,//

தேமொழி

unread,
Nov 3, 2025, 7:14:52 PMNov 3
to மின்தமிழ்
வணக்கம் 

tamilvu.org தளத்தில் 

//இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,//

என்றுதான் உள்ளது . 

tamilvu.jpg

நன்றி 

தேமொழி

unread,
Nov 3, 2025, 7:24:02 PMNov 3
to மின்தமிழ்

Screenshot 2025-11-04.jpg 
அவளையே நினைத்திருந்தேன்!

... நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச்சினை வெட்சித்
தளை அவிழ் பல்போது கமழும்
மை இருங்கூந்தல் மடந்தை நட்பே! (குறுந். 209:4-7)
        பாலை பாடிய பெருங்கடுங்கோ

பொருள்:
பொருள்தேடிச் செல்லும் வழியில், வேறு ஒன்றையும் நான் நினைக்கவில்லை.
காட்டு வழியில் தழைத்து வளர்ந்துள்ள வெட்சியின் பூக்களைக் காணும்போது
தலைவியின் நீண்ட மை போன்ற கூந்தலின் மணம் எனக்குத் தோன்ற அவளிடம் கொண்ட
காதலை எண்ணியபடியே சென்றேன்.

As I pass through the wilderness in search of wealth,
In the blooming branches of vetchi,
Buds unfurl their petals aromatically,
Reminding me of my love for the dark haired lover.

Jeyapal K

unread,
Nov 4, 2025, 7:20:52 AMNov 4
to mint...@googlegroups.com
வலிமிகும்/மிகா இடங்கள் யோசிக்க வைக்கின்றன. 

நன்றி.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/hdFmIugV5qg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/315cecda-bde7-4a9d-99bc-c086baefbda9n%40googlegroups.com.

தேமொழி

unread,
Nov 4, 2025, 10:29:09 PMNov 4
to மின்தமிழ்
Screenshot 2025-11-05.jpg 

காக்கைக்கு உணவு

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே! (குறுந். 210)
        காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
உறுதியான தோளினைக் கொண்டவன் கண்டீரக் கோப்பெரு நள்ளி.
அவனது காட்டில் இடையர்க்கு உரிய பல பசுக்கள் இருந்தன. அவற்றிடமிருந்து பெற்ற நெய்யை,
வெண்ணெல் அரிசியால் சமைக்கப்பட்ட சோற்றுடன் கலந்து,
ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்தி நின்றாலும்
தலைவன் வருகையை அறிவிப்பது போல்
கரைந்த காக்கைக்குப் போதிய பலி ஆகாது.

My friend, we are obliged to the crow
That cawed and announced his arrival
And lifted the misery off your drooping shoulders.
Hence, any amount of food that we offer to the crow
Will only be a small reward!

தேமொழி

unread,
Nov 5, 2025, 8:11:59 PMNov 5
to மின்தமிழ்
Screenshot 2025-11-06.jpg 
சேரலாதன் கோட்டையும் அகழியும்

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி,
வானுற ஓங்கிய வளைந்துசெய்புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி,
நின்னின் தந்த மன்எயில்! (பதிற்று. 53: 6-11)

        காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
உனது பகைவர்களைக் களத்தில் பொருது நீ வென்று கைப்பற்றிய கோட்டையில்
பகைவனின் உருவத்தைப் பாவை போல் அமைத்து அதற்குச்
சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிலம்பையும் தழை மாலையையும் அணிவித்து வாயிலில் வைத்திருப்பர். எந்திரங்களைக் கொண்டதும் தானே எய்யும் அம்புகளைக் கொண்டதும் அந்தக் கோட்டை வாயில்.
கொல்லும் தன்மையுடைய முதலைகளைக் கொண்டது அதன் ஆழமான அகழி.
வானத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்தும் வளைந்தும் அமைக்கப்பட்டது அதன் மதில்.

The fortress that you seized has
Curved and decorated walls reaching to the sky.
Guarded by murderous crocodiles in moats,
It has arrow-firing implements in its gates
From where volleys of arrows are launched.

தேமொழி

unread,
Nov 6, 2025, 8:05:39 PMNov 6
to மின்தமிழ்
Screenshot 2025-11-07.jpg

தனி ஒருவனாய்!

திணிநிலை அலறக் கூவை போழ்ந்து, தன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி,
ஓம்புமின், ஓம்புமின், இவண்! என ஓம்பாது,
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்ப,
கன்றுஅமர் கறவை மான,
முன்சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே! (புறம். 275:4-9)
          ஒரூஉத்தனார்

பொருள்:
பகைவர் வளைத்துச் சூழ்ந்திருந்த வேளையில்,
அப்படையின் பின்பகுதியைப் பிளந்துகொண்டு,
தன்னால் வடிக்கப்பட்ட வேலை முகத்துக்கு நேராகக் கையில்  
தாங்கியபடி விரைந்து போரிட்டுக்கொண்டு முன்னேறினான்.
'அவனைப் பிடியுங்கள்!பிடியுங்கள்!' என்று பகைவீரர்கள் தடுக்க
முயன்றபோது  அவர்களைத் தாக்கியபடி சென்றான்.
சங்கிலியால் கட்டப்பட்ட யானை அத்தடையுடன் முன்னேறுவதுபோல் முன்னேறிய அவன்,
கன்றை நினைத்து விரைந்து செல்லும் பசுவைப் போல, தன் நண்பன் போர்
செய்துகொண்டிருக்கும் முன்படைக்குத் துணையாக வந்தான்.

He breaks through the rear guard of the enemy
As they shout 'Stop him, stop him!',
And moves forward to his encircled friend
Despite being entangled by impediments,
And fought in the frontline like a chained elephant.

தேமொழி

unread,
Nov 7, 2025, 9:13:33 PMNov 7
to மின்தமிழ்
Screenshot 2025-11-08.jpg 

மகன் மாவீரன் எனக் கேட்ட தாய்

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்,
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை,
ஈன்ற ஞான்றினும் பெரிதே! கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே! (புறம். 277:2-6)
        பூங்கண் உத்திரையார்

பொருள்:
வெண்மையாக நரைத்த கூந்தலையுடைய முதியவளின் மகன்,
போரிலே தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று தானும் இறந்தான் என்று
சான்றோர் சொன்ன சொல்லைக் கேட்டு அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சி,
அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெரிதாகும்.
அந்த மகிழ்ச்சியுடன் அவள் சொரிந்த கண்ணீர்,
மழை பெய்தபோது மூங்கிலில் தங்கியிருக்கும் நீர்த்துளிகளைவிடப் பலவாகும்.

Joy of the old lady with greyed hair when she heard
That her son was killed after slaying the battle elephant
Was more than what she felt when she birthed him;
Her happy tears were far more than rain drops in bamboo leaves.


தேமொழி

unread,
Nov 8, 2025, 7:57:58 PMNov 8
to மின்தமிழ்
Screenshot 2025-11-09.jpg 

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின், பொருந்திய ...
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக,
உலகமொடு நிலைஇய, பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக! (புறம். 72:7-9,13-16)
          தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன்

பொருள்:
என்னைப்பற்றி இழிசொல் சொல்லிப் போருக்கு வந்துள்ள மன்னரைப் போரில் எதிர்கொண்டு தாக்கி, வென்று அவர்களையும் முரசுகளையும் கைப்பற்றுவேன்.
அவ்வாறு கைப்பற்றவில்லை என்றால், நல்ல அறிவு மிக்க
மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட பலரால் போற்றப்படும்
புலவர்கள், என் நாட்டைப் போற்றிப் பாடாமல் இருக்கட்டும்!

If I do not attack those enraged kings of disparaging words
And ruin their drums,
Let the poets with great skill,
Their leader Mankudi Maruthan with his vast learning,
And others firmly established in this earth,
Sing no more about my country!

தேமொழி

unread,
Nov 9, 2025, 9:09:23 PMNov 9
to மின்தமிழ்
Screenshot 2025-11-10.jpg 

போர்க்களத்தில் ஆடுபவன்

வலம்படுமுரசம் துவைப்ப, வாள்உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்,
மடம் பெருமையின் உடன்று மேல்வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்துஉகு போர்க்களத்து ஆடும்கோவே! (பதிற்று. 56:4-8)
        காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
வெற்றி முரசானது ஒலிக்கும்படி வாளை உயர்த்தி,
ஒளி பொருந்திய வீரக்கழலை அணிந்து, பொன் போன்ற உழிஞைப்
பூவைச் சூடிப் போருக்குச் சென்ற ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்,
அறியாமை மிகுதியால் போருக்குவந்து, தங்கள் உயிரைத்
துறந்தோர் நிறைந்த போர்க்களத்தில் ஆடுகிறான்

As victorious war drum sounds, my king
Adorned with golden creepers and shining armor
Raises his sword and dances the dance of death
In the battlefield dispatching his deluded foes to heaven.

தேமொழி

unread,
Nov 10, 2025, 7:48:49 PMNov 10
to மின்தமிழ்
Screenshot 2025-11-11.jpg

மணிக்கற்களைப் பெறும் உழவர்

சிறியிலை வேலம் பெரிய தோன்றும்,
புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்,
சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்! (பதிற்று. 58:14-18)

        காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
சிறிய இலைகளையுடைய வேல மரங்கள் மிகுதியாக உள்ள
புன்செய் நிலங்களை உழுது பயிர்செய்யும் உழவர்கள்,
சிறந்த காளைகளை, நுகத்தடியில் பூட்டி உழுகின்றனர்.
அவர்கள் கொழு சென்ற ஏர்ச் சாலின் பக்கத்தில்
ஒளிக் கதிரையுடைய விலைமதிப்பில்லாத மணிகளைப் பெறுவர்.

Farmers plow rain-fed fields abundant in velam trees,
With plows pulled by strong oxen.
In the ploughed fields, they find gems
That emit radiating bright rays. 

தேமொழி

unread,
Nov 11, 2025, 7:44:25 PMNov 11
to மின்தமிழ்
Screenshot 2025-11-12.jpg

கண்கள் அருவியாகின்றன

குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண்பல் அழிதுளி பொழியும் நாட!
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே! (ஐங். 251)

          கபிலர்

பொருள்:
குறவன், தன் உற்றாருடன் மழையை விரும்பி,
வழிபாடு நடத்திப் போற்றினால் மழை பொழியும்.
இப்படிப்பட்ட மலை நாடனே! தலைவி, உன் ஊரில்
அருவி பாய்வதைப் பார்த்தாலும், அது உன்னுடைய
மலையிலிருந்து விழும் அருவி என்று நினைத்து அழுகிறாள்.

O' hero of the country, where if the inhabitant of the hill
Creates tumultuous sound while praying,
(In response) The cloud pours out plenty of rain drops.
Even if she sees the waterfalls, descending rapidly
From your habitat of lengthy mountain and gardens,
She sheds tears thinking of you.

தேமொழி

unread,
Nov 12, 2025, 7:50:28 PMNov 12
to மின்தமிழ்

Screenshot 2025-11-13.jpg

ஆழ உழுது விதைக்கும் உழவர்

குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்,
நடைநவில் பெரும் பகடு புதவில் பூட்டி,
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்,
உடுப்பு முக முழுக்கொழு மூழ்க ஊன்றி!
(பெரும்பாண். 197-200)
          கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
உழும் தொழிலை உடைய உழவர்கள் மிகுந்த உணவைப் பெறுகின்றர்.
அவர்கள், நன்றாக ஏர் உழும் பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி,
பெண் யானையின் வாயைப் போன்ற வளைந்த வாய் உடைய கலப்பையின்,
உடும்பு போன்ற முகத்தை உடைய கொழு மறையும்படியாக ஆழமாக உழுது விதைத்தனர்.

The farmers with abundant food
Yoke huge oxen that are trained to walk.
They plough their fields by thrusting down the ploughs
That resemble the curved mouths of she-elephants,
And seed the weeded fields.

தேமொழி

unread,
Nov 13, 2025, 8:32:10 PMNov 13
to மின்தமிழ்

Screenshot 2025-11-14.jpg

யானைக்கறி உண்போர்!

புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்,
கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை,
ஞெலிகோல் சிறுதீ மாட்டி, ஒலிதிரைக்
கடல்விளை அமிழ்தின் கணம்சால் உமணர்,
சுனைகொள் தீம்நீர்ச் சோற்றுஉலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம்வயின் படர்ந்து! (அகம். 169:3-8)
        தொண்டியாமூர்ச் சாத்தனார்

பொருள்:
புலி உண்டது போக எஞ்சிய, ஆண் யானையின் தசையை
ஆரவாரத்துடன் மறவர், தம்முடைய கோலில் கோத்து எடுத்துச் செல்வர்.எஞ்சிய தசையை,
கடலில் விளைந்த அமிழ்தம் போன்ற உப்பினை விற்கும் உமணர்கள்,
தீக்கடை கோலைக் கடைந்து உருவாக்கிய தீயில் வாட்டி,
சுனையிலிருந்து கொண்டு வந்த நீரில்
வேகவைத்த சோற்றுடன் சேர்த்து உண்பர்.

A tiger kills a tusker in a fight and eats its flesh,
And the remains are picked up by the maravars,
What is still left out is collected by the salt merchants
Who roast the flesh in the fire and cook it with rice and water,
Secured from the spring.

தேமொழி

unread,
Nov 14, 2025, 11:32:06 PMNov 14
to மின்தமிழ்
Screenshot 2025-11-15.jpg 

தூண்டில்காரர்கள் வாழும் ஊர்

வானம் வேண்டா வறன்இல், வாழ்க்கை
நோன்ஞாண் வினைஞர் கோள்அறிந்து ஈர்க்கும்,
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை,
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல்இலை
இருங்கயம் துளங்க, கால்உறு தொறும்
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரன்! (அகம். 186:1-6)
            பரணர்

பொருள்:
வலிய தூண்டில் கயிற்றை உடைய மீன் பிடிப்பவர், மழையை வேண்டி
நிற்காத வறுமையில்லாத வாழ்வை உடையவர். அவர்கள், தூண்டிலில்
கோத்த இரையை மீன் பற்றிக்கொண்டதை உணர்ந்து, தூண்டிலை இழுப்பர்.
இத்தகைய மீன்வளம் கொண்ட நீர்நிலையில் நீண்ட காம்புடைய
தாமரை இலை படர்ந்துள்ளது. அது காற்று வீசும்போதெல்லாம் யானையின்
காது அசைவதுபோல் நீரில் அலையை ஏற்படுத்தும் வளமிக்க ஊருக்குத் தலைவன்.

He is the lord of a village
Where the fisherfolk, who are ignorant of poverty,
Pull out the fish with the fishing rods fitted with strong cords;
It also abounds in lotus whose leaves are beheld above the water
And shake like the ears of huge tusker when the wind blows.

தேமொழி

unread,
Nov 15, 2025, 8:14:59 PMNov 15
to மின்தமிழ்
Screenshot 2025-11-16.jpg 

அவள் ஏதுமறியாதவள்

திரைஉழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு,
உப்பின் குப்பை ஏறி, எல்பட
வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே!
அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள்! (அகம். 190:1-5)
        உலோச்சனார்

பொருள்:
அலையில் விளையாடிய களைப்பு நீங்கும்படியாக வளையலை அணிந்த மகளிர் கூட்டத்துடன்
உனது மகள் உப்புக் குவியலின் மீது ஏறி நின்றாள். அந்த மாலைவேளையில்
கரைக்கு மீண்டுவரும் படகுகளை எண்ணினான் துறைவன். ஆனால் இந்த ஊரில்
உள்ளோர், உன் மகளையும் அந்தத் துறைவனையும் இணைத்து, கொடுமையாக அலர் தூற்றுகிறார்கள்.
உண்மையில் உன் மகள், தன் கண்ணால் அவனைப் பார்க்கவே இல்லை.

This village, unmatchably nefarious,
Speaks slanderously of your daughter
Linking her with the chief
Who, at sunset counts the boats returning to the shore
Where young girls play and when tired, climb the heaps of salt,
Know that your daughter never even willingly looked at him.

யாழ்க்கோ

unread,
Nov 16, 2025, 12:41:10 AMNov 16
to mint...@googlegroups.com
ஏதுமறியாதவளை எடுத்ததுரைத்த அடிகள் அருமை.🚣🚣

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/b8e3df44-37f8-482a-966a-a1fdf38cea33n%40googlegroups.com.

தேமொழி

unread,
Nov 17, 2025, 12:06:14 AMNov 17
to மின்தமிழ்
Screenshot 2025-11-17.jpg 

தலைவனது தாய் வரவேற்பாள்

அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோள் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்எனத் தாயே,
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து இனிது அயரும் என்ப! (அகம். 195:1-5)
        கயமனார்

பொருள்:
அரிய பாலை வழியைக் கடந்து தலைவனுடன் சென்ற உன் மகள்,
இன்று வேல் தாங்கிய அவனுடன் வருவாள் என்று, அவனுடைய தாய்,
தன் வீட்டுச் சுவரில் செம்மண் பூசினாள்;
இல்லத்தின் முன்பக்கத்தில் மணலைப் பரப்பச் செய்தாள்;
மாலைகளை வீட்டில் தொங்கவிடச் செய்து மகிழ்ச்சியுடன்
வீட்டினை அலங்கரிக்கச் செய்தாள் என்று தலைவியின் தாய்க்குத் தெரிவித்தனர்.

It is said that the lad's mother
Decorates in great delight her house;
It is thus she means to receive my young daughter and her son,
Who crossed the impassable wilderness.

Jeyapal K

unread,
Nov 17, 2025, 9:52:13 AMNov 17
to mint...@googlegroups.com
இங்கே, துறைவன் என்ற சொல் புதிதாகக் கேள்விப்படுகிறேன்.
துறைமுகப் பொறுப்பாளன் என்ற பதவியாக இருக்குமோ?

அன்புடன்
க. செயபாலன்.

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/hdFmIugV5qg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJgzus6-j0soUXrKJe39sriQjtmDsFcRjPWy0PEuRzCLXrLuWg%40mail.gmail.com.

தேமொழி

unread,
Nov 17, 2025, 6:57:38 PMNov 17
to மின்தமிழ்
துறைவன் சங்க இலக்கியத்தில் பலமுறை இடம் பெறும் ஒரு சொல். 
நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும் சொல் 

குறளிலும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் 
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.   (குறள்  - 1277)

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே! 
— மு. வரதராசன்

-------------------------------------------------------------------
திணை தலைவர்கள் :
குறிஞ்சி - பொருப்பன், வெற்பன், சிலம்பன், பொறையன்
முல்லை - நாடன், தோன்றல்
மருதம் - ஊரன், மகிழ்நன்
நெய்தல் - சேர்ப்பன், புலம்பன், துறைவன்
பாலை - விடலை, மீளி, எயிற்றி

தேமொழி

unread,
Nov 17, 2025, 11:23:58 PMNov 17
to மின்தமிழ்
Screenshot 2025-11-18.jpg

கரை ஒதுங்கிய சுறா

குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெருமீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து,
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்! (அகம். 210:1-6)

        உலோச்சனார்

பொருள்:
சிறிய தாழ்வாரம் கொண்ட குடிசையில் வாழ்பவர்கள்
மீன்பிடிக்கும் தொழில் செய்யும் பரதவர்கள். அவர்கள்
சுறா மீனைப் பிடிப்பதற்காகக் கடலில் எறி உளியை எறிந்தனர்.
அந்த உளி தாக்கியதால் சுறாவின் இரத்தம் கடல் நீர் முழுவதும் கறைப்படுத்தியது.
அது, இரத்தத்துடன்தண்ணீரின் மேலே குதிக்கும்போது வானவில் போல் தோன்றியது.
அந்தச் சுறா, கடல் நீரைக் கலக்கி, தன் வலிமை குறைந்ததும்
கரையில் நிற்கும் படகுகளுக்கு அருகில் வந்து ஒதுங்கும் கடற்கரைக்குத் தலைவன்.

In the shores of the chieftain,
The murderous fishermen attack a huge fish
From whose wounds the blood oozes,
Changing the colour of the ocean;
The fish loses its strength and veers toward rows of boats.


Jeyapal K

unread,
Nov 18, 2025, 7:03:11 AMNov 18
to mint...@googlegroups.com
மிக்க நன்றி.

Jeyapal K

unread,
Nov 18, 2025, 8:37:14 AMNov 18
to mint...@googlegroups.com
விடலை: பாலை நிலத் தலைவன். (விடலைப்பருவம் அல்ல)
நன்றி

தலைவனது தாய் வரவேற்பாள்

அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோள் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்எனத் தாயே,
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து இனிது அயரும் என்ப! (அகம். 195:1-5)
         கயமனார்

தேமொழி

unread,
Nov 18, 2025, 8:14:02 PMNov 18
to மின்தமிழ்
Screenshot 2025-11-19.jpg 

இளம் கவிகள் நிறைந்த மதுரை

பொதுமொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதிமொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செதுமொழி சீத்த செவி செறுஆக,
முதுமொழி நீரா, புலன் நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும், புரிசை சூழ் புனல் ஊர! (கலி. 68:1-5)
        மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
மண்ணுலகம் முழுவதையும் பிற மன்னர்க்குப்
பொது என்றுஇல்லாமல் தானே ஆளும் அரசர்க்கு
அறிவுரை வழங்குவோர் அமைச்சர்கள். அவர்களைப் போல் புலவர்கள்,
நுண்ணறிவுடன் கேட்போரின் காதுகளை வயலாகவும்
நல்ல அறிவுரையை நீராகவும் தங்கள் நாக்குகளை ஏராகவும் கொண்டு
சொல்லேர் உழவுத் தொழில் செய்வார்கள். அவர்கள் படைத்த
அறிவுடை நூல்களைக் கேட்டு மகிழும் மதில் சூழ்ந்த
நீர் நிலைகளைக் கொண்டமதுரையின் தலைவன்.

Madurai surrounded by water and walls,
Where people enjoy the verses of poets
Who use their tongues as plows,
Ancient words of the wise as water and people's ears as fields.
They remove undesirable words as the men of counsel do
While guiding kings.

தேமொழி

unread,
Nov 20, 2025, 1:35:33 AMNov 20
to மின்தமிழ்

Screenshot 2025-11-20.jpg
யானைப் போர் அரங்கம்

கோணம் தின்ற வடுவாழ் முகத்த,
சாணம் தின்ற சமந்தாங்கு தடக்கை,
மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதர! (மதுரை, 592-599)
        மாங்குடி மருதனார்

பொருள்:
அங்குசத்தால் உண்டான வடுவுடைய முகத்தையும்,
தழும்பையுடைய பெரிய கையையும் கொண்ட
யானைகளின் கொம்பு அழுந்திய வடு உடைய நெற்றியுடன்,
போரில் புறமிடாத மறவர்கள் சேர்ந்து வாழும் ஊர்.
அவர்கள், அங்கே ஆண் யானைகளை ஒன்றோடு
ஒன்று போரிடச் செய்வர். அந்த யானைப்போரைக் காணவந்தோர்,
தாங்கள் அணிந்துள்ள நீண்ட கரையுடைய ஆடைகள்
நிலத்தில் உள்ள பருக்கைக் கற்களில் புரளும்படி,
கள்ளை அருந்தியபடி அங்கும் இங்கும் திரிவர்.

In the settlement of maravars with faces scarred,
There are elephant fights between the rival groups,
And spectators, quite drunk with toddy, reel
Ignoring nails laid down to protect them from the beasts
That run amuck.

Message has been deleted

தேமொழி

unread,
Nov 20, 2025, 8:57:06 PM (13 days ago) Nov 20
to மின்தமிழ்
Screenshot 2025-11-21.jpg 
கர்ப்பிணிகள் வழிபடும் தெய்வம்

திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல்புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி,
நுண்ணீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண்சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நன்மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந்தோள் சாலினி மடுப்ப ஒருசார்! (மதுரை. 604-610)

மாங்குடி மருதனார்

பொருள்:
சாலினி என்பவள் அருள் வந்து ஆடுபவள்.
அவள் நிறைமாதப் பெண்களுடன், தெய்வத்தை வணங்கும்போது யாழ் மீட்டப்பட்டது;
முழவும் உடுக்கையும் சிறுபறையும் முழக்கப்பட்டன. படையலுக்கு உரியவற்றோடு விளக்கு
வெளிச்சத்தில் அவள், கருவுற்ற பெண்களுடன் கை இணைத்து மெதுவாக நடந்தாள்.
அப்போது கற்பினை உட்பொருளாகக் கொண்ட செவ்வழிப்பண் இசைக்கப்பட்டது.

The young mothers in early days of pregnancy
Go with their kindred close, to pray to gods.
They play the sevvali tune on fair sweet yaal
And march to shrines, carrying offerings like food.

தேமொழி

unread,
Nov 21, 2025, 10:55:28 PM (12 days ago) Nov 21
to மின்தமிழ்
Screenshot 2025-11-22.jpg

பாசறையில் மன்னன்

புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த வன் கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப,
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே! (நெடுநல். 181-188)
        மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

பொருள்:
தோளிலிருந்து வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடதுபுறமாகத் தழுவியபடி,
வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின்
தோள் மேல் கையை வைத்திருந்த மன்னன், தன்னுடைய மறவர்களுக்கு மகிழ்ச்சி
ஏற்படுமாறு வந்தான். நூலால் தொடுத்த முத்துச் சரங்களையுடைய மன்னனின் குடை,
மழைத்துளிகளை அவன் மேல் விழாதவாறு மறைத்தது. பகை மன்னர்
பலருடன் பகைத்துப் போருக்கு வந்து பாசறையில் இருக்கும் பாண்டிய
மன்னன், நள்ளிரவிலும் தூங்காமல் மறவர்களுடன் திரிகின்றான்.

The king, in the warfare camp,
Walks about attended by a few at dark midnight.
His left hand holds up his costly robes
And the other, he rests on the shoulders of a sturdy youth.
Over him shines an umbrella decked with strings of pearl,
That shields him from the rains that fall.

தேமொழி

unread,
Nov 22, 2025, 8:58:30 PM (11 days ago) Nov 22
to மின்தமிழ்
Screenshot 2025-11-23.jpg 

வேட்டை நாய்களை அடக்கிய தலைவன்

... இம்மென இமிரும்
மாதர் வண்டொடு, சுரும்பு நயந்து இறுத்த,
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி,
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்
சொல்லல் பாணி நின்றனன் ஆக! (குறிஞ்சி. 147-152)

          கபிலர்

பொருள்:
'இம்' என்று இசைத்தபடி
பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகள் விரும்பி வந்து தங்கும்
மலர்கள் மலர்ந்த மரக்கிளையை, பாகனின் கட்டளையை மீறிய
களிற்று யானை ஒடிப்பதைப் போல் ஒடித்து,
குரைக்கும் தன்னுடைய வேட்டை நாய்கள் மேல் வீசி அவற்றை
அடக்கியபடி, நாங்கள் சொல்லும் பதிலுக்காகக் காத்து நின்றான்.

As a ruttish tusker wild breaks branches down,
He tore a flowering twig, in which amative bees wish to mate,
And silences the harsh bark of his hounds.
He waited then for our reply.

தேமொழி

unread,
Nov 23, 2025, 11:40:54 PM (10 days ago) Nov 23
to மின்தமிழ்
Screenshot 2025-11-24.jpg


யானையை விரட்டிய தலைவன்

... வார் கோல்
உடுஉறும் பகழி வாங்கி, கடு விசை,
அண்ணல், யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழி தர,
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது,
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப,
திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய,
துணைஅறை மாலையின், கை பிணி விடேஎம்! (குறிஞ்சி. 169-177)

          கபிலர்

பொருள்:
தலைவன் நீண்ட கோலைக் கணையோடு ஏவி,
யானையின் நெற்றியில் செலுத்தியதால் அது புண்ணாகியது. அந்தப்
புண்ணிலிருந்து கொட்டும் குருதி முகத்தில் பரவிக் கீழே வடிந்தது.
அந்த யானை, வெறியாட்டக் களத்தைவிட்டு ஓடிய பின்னரும்,
கடம்ப மரத்தின் அடிப்பகுதியில் மாலையைச் சூட்டிய மகளிராகிய
நாங்கள் கைகளைப் பிடித்தபடி நடுக்கத்துடன் நின்றோம்.

He shot his long arrows and hurt the elephant's fair forehead.
The beast retreated dazed as from its wounds blood flowed on its face.
We linked our hands together quite secure as dancers do in lists
When under Muruga's spell. 

தேமொழி

unread,
Nov 24, 2025, 11:48:25 PM (9 days ago) Nov 24
to மின்தமிழ்
Screenshot 2025-11-25.jpg

காதணியால் கோழி விரட்டும் மகளிர்

அகல் நகர் வியன் முற்றத்து,
சுடர் நுதல் மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்,
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கம்! (பட்டின. 20-27)
        கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
பெரிய இல்லத்தின் முற்றத்தில்,  பெண்கள் காய வைத்த
நெல்லை உண்ண வரும் கோழி மீது கனமான குழை
என்னும் காதணிகளைக் கழற்றி எறிந்தனர். அந்தக்
குழைகள், சிலம்பினைக் காலில் அணிந்த சிறுவர்கள்
இழுத்துச் செல்லும் மூன்று உருளைகளையுடைய சிறிய
தேரின் வழியைத் தடுக்கும். இவ்வாறு தடுக்கும் பகை
மட்டுமே அன்றி வேறு மனம் கலங்கும் பகையை அறியாத
பெரிய பல குடிகளையுடைய கடற்கரை ஊர்களைக்
கொண்டது காவிரிப்பூம்பட்டினம்.

On spacious fronts of houses wide, bejewelled maids
Scare fowls away that come to feed on drying grains
By throwing pendants which bar the way of tiny cars
Which boys with golden anklets drive.
Save trifling brawls, no stirring hate disturbs
The rich coast town of Kaaviripoompattinam.

தேமொழி

unread,
Nov 25, 2025, 9:07:05 PM (8 days ago) Nov 25
to மின்தமிழ்
Screenshot 2025-11-26.jpg 

பண்டகச்சாலை முன்றில்

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியா, பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அரும் கடி, பெரும் காப்பின்,
வலி உடை வல் அணங்கின் நோன்
புலி பொறித்து புறம் போக்கி! (பட்டின. 129-135)

        கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
கப்பலிலிருந்து நிலத்திற்கும்,
நிலத்திலிருந்து கப்பலுக்கும் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கும்
அளவில்லாத பல வகையான பொருள்கள் பண்டகச்சாலையில் திரண்டிருந்தன.
அவற்றைப் பாதுகாப்பதற்காகப் பெரிய அளவில்
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப் பொதிகளின் மீது,
வலிமையான புலியின் சின்னத்தைப் பதித்தனர்.


Countless variety of goods
Are offloaded from sea to land
And loaded from land to sea.
Innumerous are the goods piled
In well-guarded warehouses
With strong guards marking them
With the powerful Tiger seal.


தேமொழி

unread,
Nov 26, 2025, 10:24:03 PM (7 days ago) Nov 26
to மின்தமிழ்
Screenshot 2025-11-27.jpg 
கானவர் குடியிருப்பில் பெறும் உணவு

தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர்,
சிறு கண் பன்றிப் பழுதுளி போக்கி,
பொருது தொலை யானை கோடு சீர் ஆக,
தூவொடு மலிந்த காய கானவர்
செழும் பல் யாணர் சிறு குடி படினே,
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர்!
(மலைபடு. 152-157)
     இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பொருள்:
மலையில் உள்ள கானவர் குடிக்குச் சென்றால்
தேனும் கிழங்கும் இறைச்சியும் பெறலாம்.
சிறிய கண்களைக் கொண்ட பன்றியைக் கொன்று  அவற்றின்
வேண்டாத பகுதிகளைப் போக்கிப் பக்குவம் செய்து தருவர்.
மேலும் அவர்கள் போர்செய்து வீழ்த்திய யானைத் தந்தங்களை,
அவர்கள் கொடுக்கும் பொருள்களை எல்லாம் சுமந்து செல்லப்
பயன்படுத்தும் காவுதடியாக வழங்கும் சிறப்பையும் பெறுவீர்கள்.

The jungle men who live on high hill slopes
Have honey, roots, crates filled with meat and pork.
They carry these on poles made of the elephants' tusks.
You and your kin will receive this food
If you wish to stay in their hamlet.


தேமொழி

unread,
Nov 27, 2025, 10:20:15 PM (6 days ago) Nov 27
to மின்தமிழ்
Screenshot 2025-11-28.jpg 

குறவர் தரும் விருந்து

வழை அமை சாரல் கமழத் துழைஇ,
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள், ஆக்கிய வால் அவிழ் வல்சி,
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ,
மகமுறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர்!
(மலைபடு. 181-185)

        இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பொருள்:
மோரை உலையாய் இட்டு, சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச்சாரலில்
குறமகள், வெண்மையான சோற்றைச் சமைப்பாள்.
நீங்கள் அங்கே சென்றால், விருந்தினரைப் பெற்றோம் என்ற மகிழ்ச்சியுடன்,
தங்கள் பிள்ளைகளைக் கொண்டு முறை கூறித்
தடுத்து அழைத்து அச்சோற்றை அளிப்பர்.
இதனை நீங்கள் அங்கே உள்ள குறவர் வீடுகள் எல்லாவற்றிலும் பெறுவீர்.

The hillman's wife, with flowers on her tresses
Spreading fragrance over the hills with surapunnai trees,
Cooks the food with boiled white rice.
You will receive this food in every house,
Joyously invited by the children there,
Who address you as their kin.

சக்திவேலு கந்தசாமி

unread,
Nov 27, 2025, 10:58:09 PM (6 days ago) Nov 27
to mint...@googlegroups.com
சங்கத் தமிழ் பாடலை நன்கறிய நாளும் ஒன்றினை நற் பொருளோடு நன்கமைந்துள்ளது நாட்காட்டி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 28, 2025, 11:21:31 PM (5 days ago) Nov 28
to மின்தமிழ்
Screenshot 2025-11-29.jpg 

பன்றிப்பொறிகள் நிறைந்த வழி

விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சி,
புழைதொறும் மாட்டிய இருங் கல் அடாஅர்,
அரும் பொறி உடைய ஆறே! நள்ளிருள்
அலரி விரிந்த விடியல் வைகினிர், கழிமின்!
(மலைபடு. 193-196)

          இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பொருள்:
கானவர், தினைப்புனத்தைப் பன்றி அழித்தலைத் தடுக்கும்
விதமாக  அது வரும் வழியில், அவற்றைக் கொல்வதற்குக் கல்லால்
ஆன  பெரிய பொறிகளை அமைத்திருப்பர். ஆதலால்
அவ்வழியில்  இருளில் செல்ல வேண்டாம். இருள்அகன்று
ஞாயிறு தோன்றிய விடியற்காலையில் செல்வீராக.

As there are stone traps laid along the paths
To check wild boars that ruin tinai ripe,
Take rest at night and travel after dawn.

தேமொழி

unread,
Nov 29, 2025, 8:40:27 PM (4 days ago) Nov 29
to மின்தமிழ்
Screenshot 2025-11-30.jpg 

குறவர் வீசும் கவண் கற்கள்

புலந்து, புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர் நிலை இதணம் ஏறி, கை புடையூஉ,
அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப்
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங்கல்
இரு வெதிர் ஈர் கழை தத்தி, கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய,
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன,
வரும் விசை தவிராது! மரம் மறையாக் கழிமின்! (மலைபடு. 203-210)

        இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பொருள்:
கதிர் தோன்றி முற்றிய தினைப்புனத்தைப்
பாழ்படுத்த வரும் யானைகளை விரட்டுவதற்காக, குறவர்கள்
உயர்ந்த பரணிலிருந்து கவண் கல் வீசுவர். அக்கல் பட்டு,
மூங்கில்கள் முறிந்து விழும். இதைக்கண்டு, அச்சம் கொண்ட
கரிய விரல்களைக் கொண்ட குரங்குகள் அங்கிருந்து தம் குட்டிகளுடன் இடம் பெயரும்.
அவ்வழியே நீங்கள் செல்லும்போது உயிரைப் பறிக்கும் எமனைப்
போல் வரும் கவண் கல் படாமல், மரங்களில் மறைந்து செல்லுங்கள்.

The jungle men to guard the mature tinai crops
Ascend lofty platforms and scare away the elephants
With stones from catapults. These stones
Are sped with force past bamboo stems where monkeys sit.
Behind the trees take shelter to be safe from these, and then
Go on your way.
Reply all
Reply to author
Forward
0 new messages