இலக்கணம், இலக்கியம் - இவை தமிழ்ச் சொற்களா?

111 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 28, 2019, 7:05:32 AM10/28/19
to

இலக்கணம், இலக்கியம் - இவை தமிழ்ச் சொற்களா?


முன்னுரை:

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனையே கடித்த கதையாக இப்போது தமிழ்மொழியின் அடிமடியிலேயே கை வைத்து விட்டது சமக்கிருத மொழியின் பயன்பாடு. ஆம், இலக்கணம், இலக்கியம் ஆகிய சொற்களே தமிழ் இல்லை என்று வாதாடுவதும் அதனைப் பரப்பி வருவதும் தற்போது மிகப் பரவலாகி விட்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண இலக்கிய வழக்கம் கொண்ட செம்மொழியாம் நமது பழந்தமிழ் மொழியில் அவற்றைக் குறிக்கும் சொற்கள் இல்லை என்றும் சமக்கிருத மொழியில் இருந்தே அவற்றைக் கடனாகப் பெற்றுத் தமிழர் பயன்படுத்தினர் என்றும் பொருளற்ற அடிப்படையற்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. இக் கருத்து எவ்வளவு தவறானது என்பதையும் உண்மையில் இலக்கணமும் இலக்கியமும் தமிழ்ச் சொற்களே என்பதையும் இவற்றில் இருந்து சமக்கிருதச் சொற்கள் எப்படித் தோன்றின என்பதையும் இக் கட்டுரையில்  விளக்கமாகக் காணலாம்.

இலக்கணம்:

3300 ஆண்டுகளுக்கும் முற்பட்டு எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இலக்கணம் என்ற சொல் பலமுறை பயன்படுத்தப் பட்டுள்ள நிலையிலும் கூட, இலக்கணம் என்பதைத் தமிழ்ச் சொல்தான் என்று நம்பாமல், சமக்கிருதச் சொல்லின் திரிபுதான் இலக்கணம் என்று கூறப்படும் பொய்யான கருத்துரையையே பெரிதும் நம்பி தமிழர்களே அதைப் பரப்பியும் வருவது வருந்தத்தக்கது மட்டுமல்ல வெட்கப்பட வேண்டியதும் ஆகும். இதோ தொல்காப்பியத்தில் இலக்கணம் என்ற சொல் பயின்று வரும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல - சொல். கிளவி:27
புறத்திணை இலக்கணம் திறப்பட கிளப்பின் - பொருள். புறத்:1
இழைபின் இலக்கணம் இயைந்ததாகும் - பொருள். செய்யு:242
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல - பொருள். செய்யு:243

தொல்காப்பியத்தில் பயின்று வந்துள்ள இலக்கணம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வரவில்லை. ஆனால், சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, கம்ப ராமாயணம் போன்ற பல நூல்களிலும் இலக்கணம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. கீழே சில சான்றுகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

இலக்கணத்தால் எட்டும் எய்துப என்றும் - ஆசாரக் 2
இலக்கணம் யாதும் அறியேன் கலை கணம் - நாலடி:40 9
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்சில.மது 16
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்துசில.புகார் 3

இலக்கியம்:

இலக்கணம் என்ற சொல் தொல்காப்பியம் உட்பட பல தமிழ் இலக்கியங்களில் இருப்பதை மேலே கண்டோம். ஆனால், இலக்கியம் என்ற சொல் எந்தவொரு இலக்கியத்திலும் பயின்று வரவில்லை. இதிலிருந்து, இலக்கியம் என்ற சொல்லின் பயன்பாடானது இலக்கணம் என்ற சொல் தோன்றிய காலத்திற்கும் பிற்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ச் சொற்களின் தோற்றம்:

இலக்கணம், இலக்கியம் ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களும் ஒரே மூலத்தில் இருந்து தோன்றிய சொற்களே ஆகும். இந்த இரண்டு சொற்களும் இலக்கு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியவையே ஆகும். அதாவது,

இலக்கு + அணம் = இலக்கணம்
இலக்கு + இயம் = இலக்கியம்

இவற்றில் வரும் இலக்கு என்பது எழுத்து என்று பொருள்படும். ஆனால் இப் பொருள் தமிழ் அகராதிகளில் குறிப்பிடப்படவில்லை. இலக்கு என்பது எவ்வாறு எழுத்து என்று பொருள்படும் என்று கீழே காணலாம்.

இலங்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு விளங்குதல், தோன்றுதல், ஒளிர்தல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இச்சொல்லின் இன்னொரு வடிவமே இலகுதல் ஆகும். இச் சொற்கள் பிறவினையைக் குறிக்கும்போது இலக்குதல் என்று மாறும். கலங்குதல் என்பது கலக்குதல் என்று ஆவதைப் போல, அலங்குதல் என்பது அலக்குதல் என்று ஆவதைப் போல, இலங்குதல் என்பது இலக்குதல் என்று பிறவினைச் சொல்லாகிக் கீழ்க்காணும் வினைகளைக் குறிக்கும்.

இலக்குதல் = விளக்குதல், ஒளியூட்டுதல், தோற்றுவித்தல், வரைதல்.

இலக்குதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்த தமிழ்ச் சொற்களே இலக்கு, இலக்குமி, இலக்கம், இலக்கணம், இலக்கியம் ஆகும்.

இலக்கு = வரையப்படுவன = எழுத்து, குறி.
இலக்குமி = மனைக்கு ஒளியாக விளங்குபவள்.
இலக்கம் = ஒளிதரும் மூலம் = கதிரவன், நிலவு, விளக்கு.

இலக்கம் என்பது ஒளிதரும் மூலங்களைக் குறிப்பதனைக் கீழ்க்காணும் பாடல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல - பரி 13 (இலக்கம் = கதிரும் நிலவும்)
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல - புறம் 260 (இலக்கம் = விளக்கு)

எப்படி ஒளியானது புறத்து இருளை நீக்க உதவுகிறதோ அதைப்போல அகத்து / மனத்து இருளாகிய அறியாமையை நீக்க உதவுவது எழுத்துக்களே ஆகும். இலக்கு என்பது எழுத்து என்ற பொருளில் கீழ்க்காணும் பாடல்களில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் - குறள்:41 10
இலங்கு நூல் ஓதாத நாள் - ஆசாரக் 47

மேற்பாடல்களில் வரும் இலங்கு என்ற சொல்லானது இலக்கு என்பதன் மெலித்தல் விகாரம் ஆகும். வெற்றி என்பது வென்றி என்றாவதைப் போல, தட்டை என்பது தண்டை என்றாவதைப் போல, இலக்கு என்பது மெலித்தல் விகாரமாக இலங்கு என்று மேற்பாடல்களில் பயன்பட்டு வந்துள்ளது. நூல் என்னும் சொல்லுடன் பொருந்தி வந்திருப்பதில் இருந்தே மேற்பாடல்களில் வரும் இலங்கு (இலக்கு) என்பது எழுத்துக்களையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.

எழுத்துக்களைக் குறிக்கும் இலக்கு என்ற சொல்லில் இருந்தே இலக்கணமும் இலக்கியமும் தோன்றியது என்று மேலே கண்டோம். இச் சொற்களின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கு + இயம் = இலக்கியம்
               = எழுத்துக்களால் நிரம்பியது. (இயைதல் = நிரம்புதல்)

எழுத்துக்களால் நிரம்பிய அனைத்துமே இலக்கியம் தான். அதைப்போல, எழுத்துக்களை அணைந்து வருவது அதாவது அவை எல்லைமீறாத வண்ணம் அவற்றுக்கு ஒரு அணையாக / கரையாக விளங்குவதே இலக்கணம் ஆகும்.

இலக்கு + அணம் = இலக்கணம்
                 = எழுத்துக்களுடன் அணைந்து கரையாக விளங்குவது.

எழுத்து / மொழிக்கு அணையாக விளங்குவதான இலக்கணம் என்ற சொல்லானது இலக்கணை என்றும் சில பாடல்களில் வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய் - சிந்தா:13 2963
எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம் - சிந்தா:12 2385
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம் - சிந்தா:13 2913

தமிக்ருதச் சொற்களின் தோற்றம்:

இதுவரை மேலே கண்ட சான்றுகளில் இருந்து, இலக்கணம், இலக்கியம் ஆகிய இரண்டு சொற்களும் இலக்கு என்ற எழுத்தினை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தமிழ்ச் சொற்களே என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இந்த தமிழ்ச் சொற்களில் இருந்தே கீழ்க்காணும் விதிகளின்படி தமிக்ருதச் சொற்கள் உருவாகின.

இலக்கணம் >>> லக்ச~ (வி.9,12,6)
இலக்கியம் >>> லக்ச்~ (வி.9,12,6)
இலக்குமி >>> லக்ச்~மி (வி.9,12)

வி.9 – ஆதிகெடல் விதிஇதன்படி முதல் எழுத்தாகிய இகரம் கெட்டது.
வி.12 – மெய்மாற்று விதிஇதன்படி இரட்டித்து வரும் ககரத்தில் ஒன்று ~கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதிஇதன்படி மகர விகுதி கெட்டது.

முடிவுரை:

எழுத்தினைக் குறிக்கும் இலக்கு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே எழுதுதலைக் குறிக்கும் தமிக்ருதச் சொல்லானது கீழ்க்காணும் முறைப்படி தோன்றியது.

இலக்கு >>> லிக் (வி. 23, 6)

வி.23 – ஒலிபெயர்ச்சி விதிஇதன்படி முதலில் வரும் இகர ஒலி நீங்கி அடுத்துவரும் லகரத்தின்மேல் பெயர்ந்து ஏறியது.
வி.6 – விகுதிகெடல் விதிஇதன்படி ககர விகுதி கெட்டது.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்தன்னைப் பேசிடுவீர் நேசமுடன் அமிழ்தென்ன
தங்கமே தானாய் வரும்.!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

nkantan r

unread,
Oct 28, 2019, 7:57:34 AM10/28/19
to மின்தமிழ்
நல்லா வித்தியாசமா யோசிக்கிறீங்க. அந்த இலக்கு என்ற மூலச்சொல் தொல்காப்பியத்திலோ, சங்ககால இலக்கியம் எனப்படும் பரிபாடலிலோ பத்துப்பாடலிலோ (நேரடியாக?) கையாளப்பட்டுளதா?

ஆமாம், தொல்காப்பியம் 3200 ஆண்டுகளுக்கும் முன்னர் எழுதப்பட்டது என்று எவ்விதம் அறுதியிட்டீர்?

rnk

Ravi Annaswamy

unread,
Oct 28, 2019, 8:20:58 AM10/28/19
to mint...@googlegroups.com
தமிக்ருதம் என்று புதுப்புது மொழிகளை நம் கருத்துக்கேற்ப உருவாக்கலாம் ஆனால் அவை வரலாற்று உண்மைகள் என்பது ஆபத்தானது. தமிக்ருதம் என்ற மொழியை தங்களைத்தவிர யாரும் ஆராயாத நிலையில் இவ்வழி எழுதுவது குழப்பத்தில் முடியும்.

நாளை வேறொருவர் ஆங்கிலத்திலிருந்தே தமிழ் பிறந்தது via ஆங்குதமிழ் என்று புது மொழிகளை விதிகளை உருவாக்கினால் எங்கு போவது?

ரவி



Sent from my iPhone
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8df05b32-a6b3-4b16-8860-925b00ac7c00%40googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 28, 2019, 8:38:45 AM10/28/19
to mint...@googlegroups.com

இதில் குழம்புவதற்கு என்ன உள்ளது?  தமிக்ருதம் என்ற எனது கட்டுரையை முழுவதும் படியுங்கள்.   அதில் தொல்காப்பிய காலமும் விளக்கப் பட்டுள்ளது.

On 28 Oct 2019 5:50 pm, "Ravi Annaswamy" <ravi.an...@gmail.com> wrote:
தமிக்ருதம் என்று புதுப்புது மொழிகளை  நம் கருத்துக்கேற்ப உருவாக்கலாம் ஆனால் அவை வரலாற்று உண்மைகள் என்பது ஆபத்தானது. தமிக்ருதம் என்ற மொழியை தங்களைத்தவிர யாரும் ஆராயாத நிலையில் இவ்வழி எழுதுவது குழப்பத்தில் முடியும்.

நாளை வேறொருவர் ஆங்கிலத்திலிருந்தே தமிழ் பிறந்தது via ஆங்குதமிழ் என்று புது மொழிகளை விதிகளை உருவாக்கினால் எங்கு போவது?

ரவி



Sent from my iPhone

> On Oct 28, 2019, at 6:57 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
>
> நல்லா வித்தியாசமா யோசிக்கிறீங்க. அந்த இலக்கு என்ற மூலச்சொல் தொல்காப்பியத்திலோ, சங்ககால இலக்கியம் எனப்படும் பரிபாடலிலோ பத்துப்பாடலிலோ (நேரடியாக?) கையாளப்பட்டுளதா?
>
> ஆமாம், தொல்காப்பியம் 3200 ஆண்டுகளுக்கும் முன்னர் எழுதப்பட்டது என்று எவ்விதம் அறுதியிட்டீர்?
>
> rnk
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9A961B0A-1AB8-4A68-803D-320338BDC986%40gmail.com.

N D Logasundaram

unread,
Oct 29, 2019, 3:40:50 AM10/29/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam
நூ த லோ சு
மயிலை
  திரு திருத்தம் பொன் சரவணன் அருப்புக்கொட்டை  அவர்களுக்கு 
மின் தமிழ் மடலாடல் குழுவில்  "பஞ்ச லட்சணம் என்ற இலக்கண நூல்"
எனும் தலைடப்பில் ஓர் மடல் கண்டேன் அய்யா

இது ஒர் இயல் நூல் எனத்தா ன் காண்கின்றேன் 
அதாவது என் தமிழ் மொழி அறிவின் எண்ணப்போக்கின் நெறியில் என்பேன்
தொல்காப்பியம் எனும் சொல்லில் இயம் எனும் சொல்தான் தமிழில் பின் நாளில் அதாவது சமசுகிருத சொற்கள் கலந்து காணும் 
கால கட்டத்தில் இலக்கணம் என்பதன் கிரந்த நீக்கி நிலையில் மூலமான லட்சணம்  என்பதனக்கு நேரான = நிகரான சொல்லாக வழங்கியுள்ள்து என்பது என் எண்ணம் தலைப்பில் இட்டவரும் அதனைத்தன் காட்டுகின்றார் 

லக்ஷணம்  =  லட்சணம்  =  இலக்கணம் எனபது மாற்றிய நெறி   காட்டும்  
முதலில் உள்ளது சமசுகிருத சொல் தமிழ் சமசுகிருத எழுத்துக்கள் கலந்து எழுதிய நிலையில்
இரண்டாவதில் சம்சுகிருத எழுத்து நீக்க எண்ணத்தில்   க்ஷ= / ட்ச / என ஒலி நிகர் மாற்றம் தமிழ் எழுத்து ஆண்டு வந்துள்ளது என்பேன்
மூன்றாவதில் / ட்ச / எனபதன் மாறாக /க்க /என ஒலி நிகர் மற்றும் கிரந்த நீக்க எண்ணத்தில் /க்க/ எனவும்  உடன்
 தமிழ் சொல்லில் லகரம் முதலெழுத்தாகது  எனும் கொள்கைப்படி இகர அசை முன்னொட்டு சேர்ந்த நிலை  உள்ளது என்பேன் 

உங்க்கள் மடல் ஒன்றில்  தொல்கப்பியத்தில் இலக்கணம் எனும் சொல் பயனில் உள்ளது என் 4 சான்றுகளைக் காட்டி யிருந்தீர் 
தொல்காப்பியத்தில் வருவதா ல் அது தமிழ் சொல்தான் ஆகும் என்பதாக அதாவது தமிங்கிருதம் என புதிய சொல்லாண்டு காட்டியிருந்தீர் 

அந்த மடலில் "" ஆட்டைக்கடித்து  மாட்டைக்கடித்து பின் .. . . ." எனும் கருத்து விளக்கிக் காட்டும்  நிலை யில் வந்த தலைப்பில் விலங்கின   மூலம் 
காண்பதை  நான் பொருட் படுத்தாமல்தான் புறம் தள்ளித்தான் இந்த மடலில் எழுது கின்றேன் 

என் எண்ணம் = தமிழ் மொழியில் இலக்கணம் என காட்டும் சொல் சம்சுகிருத லட்சணம் ஆகும் என்பதுதான்  
மேலே  மடல் முதலில் காட்டிய தலைப்பின் விளக்கத்திலும் மடல் வைத்தவர் எண்ணமும்  அதுதான் ஆகும் என்பதை   நினைவு கூர்கின்றேன்  

தொல்கப்பியத்தில் = அதாவது பார்பன வித்துடன் வளர்ந்த புலவர்களி ன் இடைச் சொருகல் வித்தைகள் வந்து விட்ட 
= பிற்கால மாற்றி மாற்றி  ஒலைசுவடி பதிவுகள்  வந்து விட்ட  நிலையில்  தொல்காப்பியத்தில் வந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்
 சான்று அதே தொல் காப்பிய நூற்பாக்களில் சூத்திரம் விசேடம்  எனும் சொற்களும் உள்ளன என்பதால் மட்டுமல்ல 
கண்டிகை சாதி அந்தம் அரசன் வைசிகன்  என்னும் சொற்களும் அத்துடன் 
"நூலே கரகமும் முக்கோல் மணை ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய"  எனவும் ஓர் முழு நூற்பவும் காண்கின்றது 
இதே பார்ப்பன மூலம் உள்ளது என்பது என் எண்ணம் 

முன்பு ஓலைச்சுவடி வழி மாற் றியவை  பிற  மதிரை  (மதுரை)  புளி யூர் (புலியூர்) போன்றவை தனிச் சொல் வழி 
கச்சி (காஞ்சி)  கு ட மூக்கு (கும்பகோணம்)  மறைக்காடு (வேதாரண்யம் ) போன்றவை இடைப்பெயர் வழி   

இவை யாவும் பார்ப்பன மூலத்தால் கிட்டிய வாய்ப்பினை கள்ளத்தனத்துடன் ஓலைச் சுவடிகளில்  நிகழ்ந்த  மாற்றங்கள் 

 ===================================


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAGXpCckP3uMoOUVxGbXmNOtd-LAkPeEiJTSnfRmQVRHD%3DKa1zg%40mail.gmail.com.

nkantan r

unread,
Oct 29, 2019, 4:03:05 AM10/29/19
to மின்தமிழ்
"பார்ப்பன வித்துடன் வளர்ந்த.."
என்றால்?
பார்ப்பன வித்தால் பிறந்த என்ற பொருளல்லவே?

rnk

தேமொழி

unread,
Oct 29, 2019, 3:19:37 PM10/29/19
to மின்தமிழ்
பார்ப்பன வித்தால் பிறந்த என்ற பொருளல்லவே!!!!!!!

ம்ம்ம்... எல்லாம் மனிநீதியின் தாக்கம்   

இதைத்தான் பெரியார் சுட்டுவார்... 



nkantan r

unread,
Oct 29, 2019, 3:29:24 PM10/29/19
to மின்தமிழ்
உண்மைதான். எல்லாம் பார்ப்பனர் (வித்து) களின் குற்றமே!

நான் பார்த்தவரையில் மனுனீதி (அது நீதியா!!) பார்ப்பன (வித்து) இல்லாத தமிழரிடம்தான் அதிகமாக பஸக்கென்று பற்றியுள்ளது.

அதனால்தான் உங்கள் சாதி சண்டை போச்சா என்று ஒரு பார்ப்பன கவி சீறினான்.

rnk

தேமொழி

unread,
Oct 29, 2019, 3:44:45 PM10/29/19
to மின்தமிழ்
அது நீதியா...என்பது வேறு விவாதம்...

அந்தத் தலைப்பில்  நூல் பதிவு செய்யப்பட்டிருந்தால்,  அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தால் ... 

நாமும் அப்படிக் குறிப்பிட்டால்தான் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதும் புரியும்.  

வைதீக மதத்தின் பிரிவினைக் கொடை இந்தியா முழுவதுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் மாநிலமாக அதை எதிர்த்துப் போராடியவர்களையும் பட்டியலிடலாம்.

அவ்வாறு பகுதி பகுதியாகப் போராட்டம் அமைந்த காரணம் 
அந்தந்த வட்டார மொழியில் மக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய 
மக்களை அடைய வேண்டிய நிலைமை  என்பதால் இருக்கலாம்  என்பது எனது கருத்து.



nkantan r

unread,
Oct 29, 2019, 11:04:05 PM10/29/19
to மின்தமிழ்
ஆகா!

வண்ண மையில் வார்த்தை விஷத்திற்கு மௌனம். விளக்கம் கேட்ட எனக்குக் கண்டனம்.

ஆகா. ஆகா.

இன்னும் விளக்கம் வந்த பாடில்லை.

rnk

Reply all
Reply to author
Forward
0 new messages