கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு

789 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 31, 2019, 2:19:45 AM7/31/19
to மின்தமிழ்
source:  https://www.vikatan.com/news/common/madurai-keeladi-land-excavation-news

Today at 7 PM

`கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு!' - மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!
அருண் சின்னதுரை
வி.சதிஷ்குமார்

மேலும் இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.


கீழடி சுவர்
கீழடி சுவர் ( சதிஷ்குமார் )

கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடி
கீழடி
சதிஷ்குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதற்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


கீழடி
கீழடி
சதிஷ்குமார்

இதில் 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருள்களும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன.


கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கீழடி

மேலும், இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

தேமொழி

unread,
Aug 1, 2019, 9:35:10 PM8/1/19
to மின்தமிழ்
source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/30/7/2019/well-pot-and-lid-has-been-found-keeladi-excavation

July 30, 2019

கீழடி அகழாய்வில் 4வது உறைகிணறு, மண்பானை, மூடி கண்டெடுப்பு!

Image

கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர்,  வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்-மூடி  உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன. 

கீழடி

உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க  வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

N. Ganesan

unread,
Aug 1, 2019, 11:00:46 PM8/1/19
to மின்தமிழ், vallamai
10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கீழடி, அத முக்கியத்துவம் பற்றி நண்பர்கள்
கா. ராஜன், சு. ராஜவேலுவிடம் உரையாடினபோது தெரிந்தது.

தமிழ்நாட்டில் இதுபோல் பல இடங்கள் இன்னும் இருக்கும். சுவர், கிணறு - எல்லாம் தோண்டப்படணும்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/37202ca9-4aa5-4445-bda4-a1987d49059b%40googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 2, 2019, 12:14:40 AM8/2/19
to mintamil
On Fri, Aug 2, 2019 at 8:30 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கீழடி, அத முக்கியத்துவம் பற்றி நண்பர்கள்
கா. ராஜன், சு. ராஜவேலுவிடம் உரையாடினபோது தெரிந்தது.

தமிழ்நாட்டில் இதுபோல் பல இடங்கள் இன்னும் இருக்கும். சுவர், கிணறு - எல்லாம் தோண்டப்படணும்.

நா. கணேசன்

ஆமா, தமிழ்நாடு முழுக்க இப்படி குழிகுழியா தோண்டி வையுங்க.

ஏற்கெனவே கீழடியில் தோண்டி எடுத்த பொருட்களைக் கொண்டு கால ஆய்வு செய்து ஏன் வெளியிடவில்லை?

எல்லாமே வெறும் நாடகங்கள் தானா?
 


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Aug 29, 2019, 3:03:45 AM8/29/19
to மின்தமிழ்


கீழடியில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு 
29 Aug 2019



சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.

2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.

மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

N D Logasundaram

unread,
Aug 29, 2019, 3:30:47 AM8/29/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Kanaka Ajithadoss, Suresh Kumar, Muthu muthali
கீழடி அரசியல் கலந்த பொருளான உடன்தான் இப்படி நாளும் தங்கம் பெட்றொல் விலைகளின் செய்தி போல் வருகின்றன 
நூ த லோ சு
மயிலை
 தேமொழி <jsthe...@gmail.com>
Thu, Aug 29, 2019 at 12:33 PM
: கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Aug 29, 2019, 7:56:19 AM8/29/19
to மின்தமிழ்
கீழடியில் உறைக்கிணறு என்ற செய்தியைப் படித்ததும், எனக்குப் பட்டினப்பாலை அடிகள் நினைவுக்கு வந்தன.

பறழ்ப்பன்றி, பல்கோழி
உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல் விளையாட - பட் 75-77

குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவான கோழிகளையும்,
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

உறைக்கிணற்று என்று புறச்சேரிக்கு ஏன் அடைமொழி கொடுக்கவேண்டும்? எனவே உறைக்கிணறுகள் நகருக்கு வெளியே
இருக்கும்சேரிகளில்தான் இருந்திருக்கின்றன. ஊருக்குள் இல்லை. எனவே கீழடியும் மதுரைக்கு வெளியே இருந்த ஒரு
புறச்சேரி என்றாகிறது.

பன்றிகளும் கோழிகளும் வீட்டைச்சுற்றிப் பலுகிக்கிடக்க, ஆற்றுக்கிடாய்களும் கௌதாரிகளும் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கும்
கீழடி என் கண்முன் விரிகிறது.
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 30, 2019, 3:32:57 AM8/30/19
to மின்தமிழ்


On Thursday, August 29, 2019 at 4:56:19 AM UTC-7, Pandiyaraja wrote:
கீழடியில் உறைக்கிணறு என்ற செய்தியைப் படித்ததும், எனக்குப் பட்டினப்பாலை அடிகள் நினைவுக்கு வந்தன.

பறழ்ப்பன்றி, பல்கோழி
உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல் விளையாட - பட் 75-77

குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவான கோழிகளையும்,
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

உறைக்கிணற்று என்று புறச்சேரிக்கு ஏன் அடைமொழி கொடுக்கவேண்டும்? எனவே உறைக்கிணறுகள் நகருக்கு வெளியே
இருக்கும்சேரிகளில்தான் இருந்திருக்கின்றன. ஊருக்குள் இல்லை. எனவே கீழடியும் மதுரைக்கு வெளியே இருந்த ஒரு
புறச்சேரி என்றாகிறது.

பன்றிகளும் கோழிகளும் வீட்டைச்சுற்றிப் பலுகிக்கிடக்க, ஆற்றுக்கிடாய்களும் கௌதாரிகளும் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கும்
கீழடி என் கண்முன் விரிகிறது.
ப.பாண்டியராஜா


இப்பதிவை நான் வாட்சப் குழுமத்தில் பகிர்ந்தேன்.

தொல்லியல் அறிஞர் சு. ராஜவேலு இது குறித்து பகிர்ந்த கருத்து கீழே:


[12:10 AM, 8/30/2019] S Rajavel: உறைகிணறு குறித்து பாண்டியராஜா சொல்லி இருப்பது சிந்திக்க தக்கது. காவிரிப்பூம்பட்டினம் அகழாய்வில் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இப்பொழுது ஒரு பெரும் ஆய்வுத் திட்டம் பல நிறுவனங்கள் இணைந்து பேரா. ராமசாமி அவர்களுடன் தலைமையில் செய்து வருகின்றோம். நான் காவேரி பூம்பட்டின தொல்லியல் கடலகழாய்வு ஆய்வில் இவர்களுடன் சேர்ந்து செய்கின்றோம். எனக்கும் புறச்சேரிகளில் தான் உறைகிணறுகள் இருந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. கீழடி நெசவுத் தொழில் கூடம். அரிக்கமேடு போன்று சாயத் தொட்டிகள் நீர் குழாய்கள் இருந்த பகுதி. அன்றைய மதிரையின் இண்டஸ்ட்ரி ரியல் எஸ்டேட் இது. இங்கிருந்து உற்பத்தி யான ஆடைகள் அழகன் குளம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.



[12:12 AM, 8/30/2019] தேமொழி - Themozhi: நன்றி.  இக்குறிப்பை நான் மின்தமிழில் பகிர்கிறேன்.

N D Logasundaram

unread,
Aug 31, 2019, 7:20:30 AM8/31/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
 
நன்றி திரு தேமொழி


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a80ae508-8bbf-4d14-9d37-9575251fc738%40googlegroups.com.

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Sep 1, 2019, 1:58:34 AM9/1/19
to mint...@googlegroups.com
   


   அம்மையீர்,


    'பெருமையுடையதின அருமை பழியார்" ,   
     தமிழர் நாகரிகத் தின தொன்மை சிறப்பை உணரமுடிகிறது.   இனிமேலாவது தமிழ் புத்தாக்கம்  பெற்று மழலையர் கலவி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்று மொழியாக வரவேண்டும்.  பாட நூல்கள் தமிழில் வர அரசு ஆர்வம் காட்ட வேண்டும். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Sep 1, 2019, 4:05:04 AM9/1/19
to மின்தமிழ்
தேமொழி அம்மைக்கு எனது நன்றியும் உரித்தாகுக.
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Sep 16, 2019, 10:58:09 PM9/16/19
to மின்தமிழ்
Published on Sep 8, 2019

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட தொழிற்கூடம்



காணொளி நேரம் :  5:45
கீழடி 5 -ம் கட்ட அகழாய்வுகுறித்து 
மக்களவை உறுப்பினர், சு. வெங்கடேசன் அவர்களிடம் நேர்காணல் 

தேமொழி

unread,
Sep 19, 2019, 4:36:56 PM9/19/19
to மின்தமிழ்
source:  https://www.thenewsminute.com/article/major-discovery-tamil-nadu-s-keezhadi-possible-link-indus-valley-civilisation-109165

Keezhadi excavation
Another major discovery is that people in the Sangam period were literate as early as the 6th Century BCE.
      In what may be a major discovery for Indian history, artefacts found in excavations carried out at Keezhadi in Tamil Nadu’s Sivagangai district have determined a possible link between the scripts of the Indus Valley Civilisation and Tamil Brahmi, which is the precursor to modern Tamil. Another major discovery was that  there was an urban civilisation in Tamil Nadu that was contemporary to the Gangetic plain civilisation.   

      The Indus Valley Civilisation was situated in the north-western part of India between 5,000 BCE and 1,500 BCE. Around 1500 BCE, the civilisation collapsed and some have speculated that its people may have moved south. The script that was used by the people of this civilisation has been termed the Indus script, and experts have long speculated that the language could be Dravidian. Now research coming out of Keezhadi shows a possible connection between the two cultures. 

      The samples featuring graffiti discovered from Keezhadi date back to 580 BCE. This graffiti is believed to be the link between the Indus script and the Tamil Brahmi. 

      Speaking to TNM, T Udhayachandran, Commissioner of TN Archeological Department, says, “It’s an initial finding. Researchers note there is a gap between the Indus script and Tamil Brahmi script and this graffiti could fill that gap. We have to position this graffiti marks in that gap. We found 1000 different marks. We have chosen a few that distinctly relate to the Indus. Research is going on.”

      A report released by the Tamil Nadu Archeological Department on Thursday explains the significance of the finding. “Among the available scripts of India, the Indus scripts are considered to be the earliest one and were 4500 years old. One kind of script that survived between the disappearance of Indus script and the emergence of Brahmi script is called as graffiti marks by the scholars. These graffiti marks are the one evolved or transformed from Indus script and served as precursor for the emergence of Brahmi script. Therefore, these graffiti marks cannot be set aside as mere scratches. Like Indus script, this also could not be deciphered till date,” it states. 



      Recent genetic studies show that the Indus people may not have had what's known as the 'Steppe Pastoralist' DNA, thus placing the civilization before the arrival of Indo-European speakers in the subcontinent. DNA studies have shown that people of the Indus Valley Civilisation could be of Dravidian origin.  
      Urban civilisation in TN dating back to 2500 years ago
      The findings of the Tamil Nadu Archeological Department also indicate another major discovery — that an urban civilisation was thriving on the banks of the Vaigai River in Tamil Nadu in 6th Century BCE, around 2500 years ago. What this suggests is that the Sangam era - considered Tamil Nadu’s golden age - began much earlier than what was once thought. 

      “Earlier Sangam period was considered to start from 300 BC and so this is a major finding. This completely changes our perception of Indian history so far,” T Udhayachandran says.

      Udhayachandran explains, "We sent samples to a lab in Florida, a University in Italy and Deccan College in Pune. To Florida, we sent six carbon dating samples and one of it has been dated to the 6th century BC. All material used in that period has been reduced to carbon and we have tested it to check what time it belonged to.” 

      High levels of literacy
      Another major discovery is that people in the Sangam period were literate as early as the 6th Century BCE. The finding was based on potsherds which had names of people - like Aadhan and Kudhiranaadhan - written in Tamil-Brahmi script.

      According to the report, “The recent scientific dates obtained for Keeladi findings pushback the date of Tamil-Brahmi to another century i.e. 6th century BCE. These results clearly ascertained that they attained the literacy or learned the art of writing as early as the 6th century BCE.”

      Udhayachandran notes, “Professor Rajan from Pondicherry University who is considered an authority in archaeology in south India has said that this indicates high levels of literacy during this period."

      Earlier when excavations were conducted at Arikkamedu in 1947, Kaveripoompattiam in 1965 and burial sites at Adichanallur in 2005, there was, says the Commissioner, no proof of urban settlements. 

      "However now, in Keezhadi, we have found proof that this was an urban civilisation. We have found what looks to be a pottery industry here," he says. 

      The report also suggests that 70 samples of skeletal fragments of faunal remains were collected from the site. The remains had been sent to Deccan Collect, Post Graduate and Research Institute in Pune for analysis, and species such as cow and ox, buffalo, sheep, goat, Nilgai, blackbuck, wild boar and peacock were identified. It’s noted that while some animals were used for agriculture purposes, cut marks on other animals such as the antelope, goat and wild boar suggest that they were consumed. 

      While phase five of the excavations at Keezhadi began in June this year, Udhayachandran says that they are planning ahead for the next phase.  

      "We have filed necessary proposals before Archeological Survey of India. Not only Keezhadi, but we also want to do excavations in adjoining habitations like Kondahai, Agaram and Manalur. We may find traces of the old Madurai. Keezhadi is an industrial area. Kondahai looks to be a burial site, and Agaram and Manalur could be residential areas," he says.

தேமொழி

unread,
Sep 19, 2019, 4:42:10 PM9/19/19
to மின்தமிழ்

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: 

இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionகீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

பெண்கள் பயன்படுத்திய பொன்னாலான 7 ஆபரணங்கள் கீழடியில் கிடைத்துள்ளன.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionகீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.

அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் த. உதயசந்திரன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

2018ம் ஆண்டில் கீழடியில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4வது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

கீழடி நாகரீகத்தின் காலம் என்ன?

கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

கீழடியில் கிடைத்த விளையாட்டிற்குப் பயன்படும் ஆட்டக்காய்கள்.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionகீழடியில் கிடைத்த விளையாட்டிற்குப் பயன்படும் ஆட்டக்காய்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள், எழுதத் தெரிந்திருந்தார்கள் என்ற முடிவுக்கு தொல்லியில் துறை வந்துள்ளது.

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53%) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. ஆகவே கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூர் இன்ஸ்டிடடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆய்வுசெய்யப்பட்டன. அவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி எழுத்துகளில் ஆதன், குவிரன் ஆதன் என எழுதப்பட்ட பானை ஓடுகள்.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionதமிழ் பிராமி எழுத்துகளில் ஆதன், குவிரன் ஆதன் என எழுதப்பட்ட பானை ஓடுகள்.

இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவர்கள், கட்டடங்களின் இடிபாடுகளும் கிடைத்தன. தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தன. கட்டடங்களைப் பொறுத்தவரை அவற்றின் சுவர்கள் கூரை வரை எழுப்பப்பட்டிருக்கவில்லை. மாறாக சுவர்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிக்கின்றன.

கீழடியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள்.இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழமையானவை. சிந்துவெளி பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில் கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துகளைப் போலவே இவற்றின் பொருளும் இதுவரை முழுமையாகப் புரியவில்லை. செப்புக்கால பண்பாட்டிலும் தொடர்ந்து பெருங்கற்கால பண்பாட்டிலும் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.

படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionகீழடியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள்.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல், கரூர், தேரிருவேலி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் இந்த வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இது போன்ற குறீயிடுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன.


அதே போல, இந்த கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.

இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (எழுத்தின் வடிவம், கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியிருக்கலாம்.

தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கீழடியில் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionதமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கீழடியில் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

கீழடியில் இரண்டு இடங்களில் 4 மீட்டர் அளவுக்குமேல் மிகப் பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல்கள் கிடைத்ததை வைத்துப் பார்க்கும்போது அங்கு மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.

மேலும் கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கீழடியில் பெண்கள் பயன்படுத்திய தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு பல விளையாட்டுப் பொருட்கள் குறிப்பாக ஆட்டக்காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.

கீழடியில் கிடைத்த உறைகிணறு.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionகீழடியில் கிடைத்த உறைகிணறு.

மேலும், வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்திருக்கிறது. இவை ரோம் நாட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தவை.


இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

கீழடி எங்குள்ளது?

மதுரை நகரிலிருந்து தென்கிழக்கு திசையில் 13 கி.மீ. தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து வடக்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் வைகை நதி ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும் தென்கிழக்கில் அகரம் என்ற ஊரும் மேற்கில் கொந்தகையும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான் முதன் முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் உள்ள இந்திய அகழ்வாய்வுப் பிரிவு 2014 - 15, 2015- 16 ஆகிய ஆண்டுகளில் ஆகழ்வாய்வுகளை மேற்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2017 -18ல் அகழாய்வுப் பணிகளைத் துவங்கியது.

கீழடியின் முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்களுடன் நகர நாகரீகம் இருந்தது இங்குதான் முதன் முதலில் வெளிப்பட்டுள்ளது. தவிர, கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இங்கு கிடைத்த பிராமி எழுத்துகளை வைத்து சங்க காலம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லலாம் எனக் கருதப்படுகிறது.

பறவைப் பார்வையில் கீழடி அகழ்வாய்வுத் தலம்.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionபறவைப் பார்வையில் கீழடி அகழ்வாய்வுத் தலம்.

கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முதலாக கீழடியில் அதே காலகட்டத்தில் நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆகவே, இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்ததாகக் கொள்ள முடியும்.

இந்த ஊரில் வாழ்ந்த மக்கள் வட இந்தியா, ரோம் போன்ற பகுதிகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரமாக பல வெளிநாடுகளைச் சேர்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

"அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருக்கிறோம். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருக்கிறோம். இதில் கொந்தகை ஆதிகால மனிதர்களைப் புதைக்கும் நிலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைக்கும் எலும்புகளின் மரபணுவை ஆய்வு செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடனும் ஹாவர்ட் மெடிக்கல் ஸ்கூலுடனும் இணைந்து செயல்படவிருக்கிறோம்" என மாநில தொல்லியல் துறையின் செயலாளர் த. உதயச்சந்திரன் கூறினார்.

தேமொழி

unread,
Sep 19, 2019, 5:00:18 PM9/19/19
to மின்தமிழ்
கீழடி தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத்தேடி ...

கீழடி.JPG


மக்கள் தொடர்பு நோக்கில் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கையை இணைப்பில் காண்க 

தேமொழி

unread,
Sep 19, 2019, 5:02:31 PM9/19/19
to மின்தமிழ்
மன்னிக்க கோப்பை இணைக்க மறந்தேன் 

இப்பொழுது இணைப்பில் 

கீழடி தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத்தேடி ...

கீழடி.JPG


மக்கள் தொடர்பு நோக்கில் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கையை இணைப்பில் காண்க ...
Media PPT - Keeladi 06.08.pdf

S. Jayabarathan

unread,
Sep 19, 2019, 11:35:37 PM9/19/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன், Elangovan N, Asan Buhari, Oru Arizonan, anne vaigai, tsj...@gmail.com, nandhitha kaapiyan
இந்த நேர்த்தியான செங்கோணக் கட்டடங்கள் 10,000 ஆண்டுகட்கு முன்னர் நேர்ந்த பனியுகத்தில் மூழ்கி மீட்சி  அடைந்தவைபோல் எனக்குத் தெரிகிறது

சி. ஜெயபாரதன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/596e46d6-414f-4440-a26a-2f0fa593f5ad%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 20, 2019, 9:20:05 PM9/20/19
to mintamil
கீழடி 
வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் 

வெளியீடு: 
தமிழ்நாடு அரசு 
தொல்லியல்துறை 
முதல் பதிப்பு - 2019

படங்களும் விளக்கங்களும் பின்னிணைப்பும் கொண்ட 66 பக்கங்கள் கொண்ட நூல் 

தமிழில் .. இணைப்பில் PDF கோப்பு
( கோப்பின் அளவின் காரணமாக )
ஆங்கிலம் அடுத்த மடலில் இணைக்கப்படும் 

Keeladi Book Tamil 18 09 2019.pdf

தேமொழி

unread,
Sep 20, 2019, 9:27:52 PM9/20/19
to mintamil
கீழடி 
வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் 

வெளியீடு: 
தமிழ்நாடு அரசு 
தொல்லியல்துறை 
முதல் பதிப்பு - 2019

படங்களும் விளக்கங்களும் பின்னிணைப்பும் கொண்ட 66 பக்கங்கள் கொண்ட நூல் 

*** ஆங்கிலத்தில் ***
Keeladi Book English 18 09 2019.pdf

S. Jayabarathan

unread,
Sep 20, 2019, 11:55:05 PM9/20/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன், Elangovan N, anne vaigai, Asan Buhari, Oru Arizonan, Anna Kannan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 21, 2019, 12:02:46 AM9/21/19
to மின்தமிழ்


கீழடி 5ஆம் கட்ட அகழாய்வு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலரும், கீழடி அகழாய்வு கண்காணிப்பாளருமான ஆசைதம்பி, அகழாய்வு பணிகள் குறித்த சிறப்பு நேர்காணலில், கிமு 600  கிபி 100 இடைப்பட்ட காலகட்டம் என வரையறுக்கப்படும் 6500 அகழாய்வு தொல்லியல் பொருட்களில்,   சமயம் தொடர்பான தொல்பொருள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 21, 2019, 12:31:54 AM9/21/19
to mintamil
அருமையான பல தகவல்கள். உயர்தர புகைப்படங்கள்.

தமிழ்மொழியின் பழமைக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதாரம்.

தமிழக தொல்லியல் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆனால்... இதனைத் தமிழிலும் கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இக் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAANG%3DbRB%2BRUMUTpoi1dCDcdz6zZ9OoYasM7PT%3DC7xWr82orpsg%40mail.gmail.com.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
இமிழ்திரைக் கடல்சூழ் உலகம் முழுவதும்
இமையெனக் காத்திடும் உமையொரு பாகா !
அமிழ்தமே அருந்தினும் அகமகிழ் வில்லை
தமிழ்மொழி போதுமே தா !!

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 21, 2019, 12:38:28 AM9/21/19
to mintamil
On Sat, Sep 21, 2019 at 10:01 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:

On Sat, Sep 21, 2019 at 6:57 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

கீழடி 
வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் 

வெளியீடு: 
தமிழ்நாடு அரசு 
தொல்லியல்துறை 
முதல் பதிப்பு - 2019

படங்களும் விளக்கங்களும் பின்னிணைப்பும் கொண்ட 66 பக்கங்கள் கொண்ட நூல் 

*** ஆங்கிலத்தில் ***

அருமையான பல தகவல்கள். உயர்தர புகைப்படங்கள்.

தமிழ்மொழியின் பழமைக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதாரம்.

தமிழக தொல்லியல் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆனால்... இதனைத் தமிழிலும் கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

அடடா, ஏற்கெனவே ஒரு தனி இழையில் தமிழிலும் இக் கட்டுரையை நீங்கள் அனுப்பியதை நான் கவனிக்கவில்லை.
மன்னிக்கவும். :))
நன்றி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 21, 2019, 12:39:50 AM9/21/19
to mintamil
இக் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 21, 2019, 3:11:36 AM9/21/19
to mintamil
ஆய்வுக் கட்டுரையை அறியத் தந்தமைக்கு நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

S. Jayabarathan

unread,
Sep 21, 2019, 9:18:05 AM9/21/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன், Elangovan N
தமிழரின் பூர்வீக மதம் இந்து மதம்.  அதற்குச் சான்றுகள் பூமிக்கு மேல் கோயில்களாக, கோபுரங்கங்களாக, சிலைகளாகச் சின்னங்களாக பல்லாயிரம் ஆண்டுகள் கண்களிலும், காவியங்களிலும் காணப்படுகின்றன.  சமயச் சின்னங்கள் வைகை பூமிக்கடியில் இல்லை யென்றால் சமயம் இல்லையென்று தொனிப்பதுபோல் குறிப்பிடுவதா ??? 

தாமிரபரணி ஆற்றோட்ட வழியில் சமயக் கல்வெட்டுகள் சமீபத்தில் காணப்பட்டுள்னவே.

பகுத்தறிவுப் பெரியாரும் இறுதிவரைத் தன்னை ஓர் இந்துமதவாதியாகவே சொல்லிக் கொண்டார்.  ஆனால் அவர்கள் சீடர்கள் ஏனோ தம்மை இந்துமத வாதிகளாகக் காட்டிக் கொள்வதில்லை. 



சி. ஜெயபாரதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 21, 2019, 10:28:34 PM9/21/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன், Elangovan N
On Sat, 21 Sep 2019 at 18:48, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தமிழரின் பூர்வீக மதம் இந்து மதம்.  அதற்குச் சான்றுகள் பூமிக்கு மேல் கோயில்களாக, கோபுரங்கங்களாக, சிலைகளாகச் சின்னங்களாக பல்லாயிரம் ஆண்டுகள் கண்களிலும், காவியங்களிலும் காணப்படுகின்றன.  சமயச் சின்னங்கள் வைகை பூமிக்கடியில் இல்லை யென்றால் சமயம் இல்லையென்று தொனிப்பதுபோல் குறிப்பிடுவதா ??? 
 
இல்லை யென்று தவறாகச் சொல்லி வருகின்றனர் ஐயா.
தொல்லியலாளர் தோண்டிவரும் இடத்திற்கு அருகே 500 மீ. கிழக்கே ஒரு பெரிய சிவன்கோயில் புதையுண்டு உள்ளது.
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்  ஐயா.
அன்பன்
கி. காளைராசன்

தேமொழி

unread,
Sep 22, 2019, 2:20:31 AM9/22/19
to mint...@googlegroups.com



கீழடி அகழ்வாராய்ச்சி 

பொதிகை - வெளிச்சம் 

[Published on Sep 21, 2019]


https://youtu.be/cBb1CY65Gq8


பங்கு பெற்றோர்:

முனைவர் இரா சிவானந்தம்

--  இயக்குனர் கீழடி அகழாய்வு

ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

--  சிந்துவெளி ஆய்வாளர்

முனைவர் சு. ராஜவேலு 

--  பேராசிரியர் ஓய்வு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தேவை நேரம் - 53:57

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 22, 2019, 9:38:41 AM9/22/19
to mintamil

On Sun, 22 Sep 2019 at 11:50, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



கீழடி அகழ்வாராய்ச்சி 

பொதிகை - வெளிச்சம் 

[Published on Sep 21, 2019]


அரியதொரு பதிவு.
நன்றி. 



பங்கு பெற்றோர்:

முனைவர் இரா சிவானந்தம்

--  இயக்குனர் கீழடி அகழாய்வு

ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

--  சிந்துவெளி ஆய்வாளர்

முனைவர் சு. ராஜவேலு 

--  பேராசிரியர் ஓய்வு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தேவை நேரம் - 53:57

வேந்தன் அரசு

unread,
Sep 22, 2019, 8:58:08 PM9/22/19
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன், Elangovan N
தீக்குழி கட்டி வேள்விசெய்தால்தான் இந்துமதம்.

ஞாயி., 22 செப்., 2019, முற்பகல் 7:58 அன்று, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFh3n%3D_iAGq9aSx3ZiWhfNb%2B94EHjDh_U0-X5p3pPfHYJmjZeA%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Sep 22, 2019, 10:54:00 PM9/22/19
to மின்தமிழ்
தமிழர் என்றால் இந்துக்கள் (வேத சமயம்) ... தமிழர் எல்லோரும் இந்துக்கள் என்ற புனைவில் நம்பிக்கை வைத்திருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி தந்த அகழாய்வு முடிவு.

ஒரு தடயமும் இல்லை என்றவுடன் அவர்களே போட்டோசாப் செய்து அதில் லிங்கம் சாமி சிலைகள் போட்டு புரட்டுச் செய்திகளைப் பரப்பத் துவங்கியுள்ளனர் சமூக வலைத்தளங்களில்.

இப்பொழுதே... விரல் நுனியில் அனைவருக்கும் தொல்லியல்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கும் இக்காலத்திலேயே... இப்படி என்றால்...!!!!

கல்வி கற்றோர்  3 அல்லது 4 விழுக்காட்டிற்குத்  தாளம் போட்ட காலத்தில் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பார்கள்?

(அந்த மீம்ஸ் பரவுவதைத் தடுக்க நான் இங்கு இணைக்கவில்லை.)
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 22, 2019, 11:12:17 PM9/22/19
to மின்தமிழ்



உலகம் வியக்கும் கீழடி : 

புதிய கண்டுபிடிப்புகள் 

An Exclusive visit by Scientific Thamizhans


தேவை நேரம்:  23:13

தேமொழி

unread,
Sep 23, 2019, 12:02:11 AM9/23/19
to மின்தமிழ்
https://youtu.be/x_7SkpRD-aw?t=685

11:25 முதல் இறுதிவரை ~12:00  கீழடிக்கு நேரே செல்ல வாய்ப்பில்லாதவர்கள் களத்தை அருகில் விரிவாகக் காணும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. 

சேதுராமன்

unread,
Sep 23, 2019, 1:03:18 AM9/23/19
to மின்தமிழ்
தமிழரின்பூர்வீகமதம்இந்துமதம் என்பதுதவறு.தாயுமானவர்சைவ சமய  மேசமயம் எனப்பாடியுள்ளார்.தமிழர்மதங்கள்-சைவம்,மாலியம்.புத்தம்,சமணம். முருகன்\காளிவழிபாடுகள் சைவத்தில்அடங்கும்.

On Wednesday, July 31, 2019 at 11:49:45 AM UTC+5:30, தேமொழி wrote:
source:  https://www.vikatan.com/news/common/madurai-keeladi-land-excavation-news

Today at 7 PM

`கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு!' - மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!
அருண் சின்னதுரை
வி.சதிஷ்குமார்

மேலும் இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.


கீழடி சுவர்கீழடி சுவர் ( சதிஷ்குமார் )

கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடி
கீழடிசதிஷ்குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதற்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


கீழடி
கீழடிசதிஷ்குமார்

இதில் 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருள்களும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன.


கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கீழடி

மேலும், இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

N. Ganesan

unread,
Sep 23, 2019, 8:45:47 AM9/23/19
to S. Jayabarathan, housto...@googlegroups.com, mintamil, vallamai, vannan vannan, vaiyavan mspm, Satish Kumar Dogra, Ramachandran Nagaswamy
கீழடியில் சமயம் இருந்ததில்லை என்று சொல்லிவிட முடியாது.

(1) கீழடியின் பழைய பெயர்: பெருமணலூர். இதனை மூத்த கல்வெட்டாய்வர் வெ. வேதாசலம் போன்றோர்
கூறியுள்ளனர். பெரு என்ற முன்னடை முக்கியமான நகரங்களுக்கு இருப்பதை முன்னர் விளக்கமாக
எழுதியுள்ளேன். மணலூர் மதுரை (மதிரை) அல்ல. 

(2) மணலூரில் பாண்டியன் அரண்மனை ஒன்று இருந்துள்ளது. சுங்கம் போன்றவி வசூல்
செய்ய இருந்திருக்கலாம். அல்லது, பெரிய தலைநகர வாழ்க்கையை விட்டு கிராமப்புறத்திற்கு
ஓய்வு எடுக்க இருக்கலாம். இங்கே இருந்த பாண்டிய இளவரசியை அர்ஜுனன் மணந்தான் 
என்று மஹாபாரதத்தில் செய்தி உள்ளது. இது பற்றி சங்கப் பாடல்கள் இருந்திருக்கின்றன.
அவற்றில் ஒன்று மட்டும் கிடைக்கிறது. தெலுங்கு, கன்னட இலக்கியங்களில் (பெரு)மணலூரில்
நடந்த அர்ஜுனன் - இளவரசி காதல் பிரபலம். பல சினிமாக்கள் வந்துள்ளன.

(3) இடைக்காலத்திலே மிகப்பெரிய உரையாசிரியர் பிறந்திருக்கிறார்.
ஆழ்வார் பாசுரங்களுக்கு அவரது உரைகள் மிக முக்கியமானவை.

(4) கீழடி பானை ஓடுகளில் பல மீன் சின்னங்கள் கிடைக்கின்றன.
இவை விண் மீன்கள். தமிழர் வானியல் சிந்து வெளி எழுத்துகளில்
வானத்தின் விண் மீனை அடிப்படையாகக் கொண்டது.
தொல்காப்பியரும், வட நாட்டில் இருந்து வந்த தமிழ் மாதப்
பெயர்களை நட்சத்திரஙகளின் அடிபடையிலே தான் அமைத்து
அப்பெயர்களின் இலக்கணத்தை விளக்கியுள்ளார்.

அதை விடுத்து, 2000 ஆண்டு பின் வந்த ராசி சக்கரத்தின் படி
மலையாள மாதங்கள் அமைகின்றன. கின்னரம் எனும்
யக்‌ஷர்கள் (அஃறிணை) மிதுன ராசிக்கு சின்னம். பாடவையாடவை
என்னும் உம்மைத்தொகையை  தமிழ்நூல்கள் காட்டுகின்றன.

(5) கீழடி கால கட்டத்தில் “பல்யாகம் வேட்ட முதுகுடுமிப்
பெருவழுதி” வாழ்ந்திருக்கிறான். அவன் வெளியிட்ட
காசுகளில் அசுவமேத யாகம், யூபஸ்தம்பம், குளக்
கரைகளில் யாகங்களில், அதை ஏற்கும் மகரம் (முதலை)
பற்றி ஆய்வுக் கட்டுரைகளில் விரிவாக விளக்கியுள்ளேன்.

இதெல்லாம் சமயம் இல்லை என்றா காட்டுகிறது?
சிந்து சமவெளியிலும்கீழடி போலவே கோயில்கள்
இல்லை. ஆனால், மகர விடங்கர் வழிபாடு உள்ளது.
அங்கே உள்ள மகரம் எழுத்தைப் போல
தமிழ் நாட்டில் மிகுதியான எழுத்துகள் கிடைத்துள்ளன.
சாணூர் (வட ஆற்காடு), சூலூர் (மண்கிண்ணம், பிரிட்டிஷ் ம்யூஸியம்),
‘மழுவாள் நெடியோன்’ (Anthropomorphic Axe) மோட்டூர், உடையானத்தம்,
சித்தன்னவாசல், ....

(6) மகரவிடங்கர் சின்னம் கீழடியில் கிடைத்துள்ளது 
அதன் அருகே திருப்பரங்குன்றில் “மூ நாகரா, மூ சக்தி”
தமிழ் ப்ராமி. முதலைக்குளம் என்னும் ஊரில்
வேம்பத்தூர் எனக் குறிப்பிடும் கல்வெட்டு,
வேம்பத்தூர் அந்தணர்கள் 20-ஆம் நூற்றாண்டு வரை
புகழ்பெற்ற தமிழ்ச் சங்கத்தார் ஆவர். பழைய 
திருவிளையாடல் புராணம் அவர்கள் செய்ததுதான்.

இவற்றை எல்லாம் அறியாமல், ஆராயாமல்
கீழடியில் (= பெருமணலூரில்) சமயமே இல்லை
என்பது இருக்கிற ஆதாரங்களுக்கு முற்றிலும்
மாறானது 

பிற பின்!
நா. கணேசன்

S. Jayabarathan

unread,
Sep 23, 2019, 10:36:01 AM9/23/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்

இந்துமதம் உலக மதங்களில் முன்னணி வகுப்பது.  தமிழர் முதலில் இந்துமதத்தைப் பின்பற்றிய பிறகுதான் புத்த மதத்திற்கு மாறியிருப்பர்.  கிறித்துவ மதம் பைபிளை காட்டி, அப்பத்தைக் காட்டி மக்களுக்கு ஆசை ஊட்டியது.  இஸ்லாம் தமிழர் மீது திணிக்கப் பட்டது.  

இந்து மதத்தில் பேரளவு சுதந்திரம் உள்ளது. சைவம், புத்தம், சமணம் இந்து மதத்தின் கிளைகள், விழுதுகள்.

சி. ஜெயபாரதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 23, 2019, 11:13:56 AM9/23/19
to vallamai, S. Jayabarathan, housto...@googlegroups.com, mintamil, vannan vannan, vaiyavan mspm, Satish Kumar Dogra, Ramachandran Nagaswamy


இவற்றை எல்லாம் அறியாமல், ஆராயாமல்
கீழடியில் (= பெருமணலூரில்) சமயமே இல்லை
என்பது இருக்கிற ஆதாரங்களுக்கு முற்றிலும்
மாறானது 


சமயம் இல்லை. வழிபாடுதான் இருந்துள்ளது.

S. Jayabarathan

unread,
Sep 23, 2019, 11:49:50 AM9/23/19
to வேந்தன் அரசு, vallamai, housto...@googlegroups.com, mintamil, vannan vannan, vaiyavan mspm, Satish Kumar Dogra, Ramachandran Nagaswamy
வேந்தர் வேந்தே, 

பட்டம் துறந்து பல வருடங்கள் ஆகிவிட்டனவா ?

உமது கிரீடத்தில் சிவலிங்கம் இல்லயா ?

சமயத்தின் இரத்தம் ஓட்டம்தான் வழிபாடு. 

சமயம் உடல்; வழிபாடு உயிர்.

சி. ஜெயபாரதன்  

Pandiyaraja

unread,
Sep 23, 2019, 1:54:48 PM9/23/19
to மின்தமிழ்
" கிறித்துவ மதம் பைபிளை காட்டி, அப்பத்தைக் காட்டி மக்களுக்கு ஆசை ஊட்டியது."


திடீர் திடீரென இவ்வாறு பிதற்றுவது இவருக்கு வேலையாகிப்போய்விட்டது. இவரது பிதற்றல்களை மன்னிக்கச்சொல்லி எத்தனைதரம்தான் பிதாவை வேண்டுவதோ தெரியவில்லை. சொந்த பந்தங்களை விட்டு, சொத்து சுகத்தைத் துறந்து, அலைகடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம்செய்து, அம்மை,காலரா போன்றவற்றின் நடுவில் ஆண்டவரைப் பற்றி எடுத்துச்சொன்ன, மிஷனரிமாரின் தியாகத்தைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? அவர்கள்மட்டும் கல்விப்பிச்சை போடவில்லையென்றால் எங்களைப் போன்றவர்கள் இன்னும் இவர்களைப் போன்றவர்களின் அடிமைகளாகக் கைகட்டிக்கொண்டுதான் நின்றுகொண்டிருப்போம். தலைமை பறிபோய்விட்டதே என்ற அந்த ஆத்திரம்தான் இவர் புத்தியை மட்டு ஆக்கிவிட்டது.
பிதாவே இவரை மன்னியும்.
ப்.பாண்டியராஜா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 23, 2019, 3:00:52 PM9/23/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்
///" கிறித்துவ மதம் பைபிளை காட்டி, அப்பத்தைக் காட்டி, கல்வியைக் காட்டி மக்களுக்கு ஆசை ஊட்டியது."////

இப்படிச் சொன்னவர் பெர்னாட் ஷா.  இதில் தவறில்லை. 

////அவர்கள்மட்டும் கல்விப்பிச்சை போடவில்லையென்றால் எங்களைப் போன்றவர்கள் இன்னும் இவர்களைப் போன்றவர்களின் அடிமைகளாகக் கைகட்டிக் கொண்டு தான் நின்றுகொண்டிருப்போம். ///  

உங்கள் கூற்றே சான்று. எல்லாம் கிறித்துவ மதம்தான் தமிழருக்குச் செய்ததா ?  காமராஜர் இலவச உணவுக் கல்வித் திட்டம் பெரும்பான்மை ஏழைகட்குப் பயன் அளிக்க வில்லையா ? 

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Sep 23, 2019, 6:02:30 PM9/23/19
to மின்தமிழ்
இன்றைய சமூகத்தால் மறையும் கீழடி பெருமை !!!

Sep 21, 2019


இன்றைய சமூகத்தால் மறையும் கீழடி பெருமை | LMES


 Sep 21, 2019

நேரம்: 6:25

அறிவியல் எவ்வாறு தொன்மை கண்டுபிடிக்க உதவியது ?

C12 - C 14 அணுக்கள் மற்றும் கரிமக் காலக்கணிப்பு விளக்கம் 

*** முடியும்வரை பார்க்கத் தவறாதீர்கள் ***

Innamburan S.Soundararajan

unread,
Sep 23, 2019, 7:04:02 PM9/23/19
to mintamil
தமிழுக்கு ஒளி என்று பெயர் என்று ஒலிக்கும் போதே பரவசம் ஆகுதடி, பாப்பா.

இன்னம்பூரான்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Sep 24, 2019, 12:07:48 AM9/24/19
to மின்தமிழ்
"இப்படிச் சொன்னவர் பெர்னாட் ஷா"
பெர்னாட்ஷா என்ன, எந்தக் கொம்பன் சொன்னாலும், நான் மீண்டும் அழுத்திக் கூறுகிறேன்.
கண்டம் விட்டுக் கண்டம் வந்து பல கஷ்டங்களையும், நோய்களையும் எதிர்த்துப்போராடி, இந்நாட்டுக் கடையர்களுக்கும் ஒரே கர்த்தனை அறிமுகப்படுத்தி அவர்களை ஈடேற்றிய அந்தக் கிறித்தவ இறைத்தொண்டர்களின் தியாகமும் உழைப்பும் அளப்பரியது. அவற்றைக் குறைசொல்வோரோ, குறைத்து மதிப்பிடுவோரோ அறிவுக்குருடர்கள்.


எல்லாம் கிறித்துவ மதம்தான் தமிழருக்குச் செய்ததா
ஆக, கிறித்தவ மதமும் ஏதோ செய்திருக்கிறது என்று ஒத்துக்கொண்ட அளவில் மிக்க நன்றி.
இப்போது, காமராசரைப் பற்றிய ஒப்பீடு எதற்கு? சொல்லப்போனால், கீழடியில் மதம் சார்ந்த தொல்பொருள்கள் கிடைக்கவில்லை என்ற செய்தியின் அடியில் கிறித்தவரைப்பற்றிய பழிச்சொல் எதற்கு? முதலில் உமது மனத்தில் உள்ள அழுக்கைக் கழுவும்.
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 24, 2019, 12:33:09 AM9/24/19
to மின்தமிழ்

கீழடி அகழாய்வில் அறியப்பட்ட குவிரன் என்ற சொல் வடமொழிச் சொல் என சாதிக்க நினைக்கும் சில வடமொழி ஆதரவாளர்களுக்குத் தக்கதொரு பதிலாக தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலுவின் பதில்..
தவறான தகவல்கள் பகிரப்படுவதை தவிர்க்க இச்செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

~~~~~~~~~

குவி என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல்.ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் அல்லது பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என் வருகிறது. காலம் கணிக்கப்பட்ட பின்பு கூட வடமொழியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது நடுநிலையான ஆய்வாளர்களுக்கு அழகல்ல.
-டாக்டர் ராஜவேலு, கடல்சார் தொல்லியல் அறிஞர்.

தேமொழி

unread,
Sep 24, 2019, 1:35:52 AM9/24/19
to mint...@googlegroups.com
"தீவிர வடமொழி பற்றாளர்  பொய் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர்"

[குறிப்பு:  குவிரன் என்பது வடசொல் என்கிறார்,  தமிழி எழுத்து பிராமி வழி வந்தது என்கிறார் தொல்லெழுத்தாய்வாளர் ராமச்சந்திரன் என்ற கருத்துக்கு   தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சு. ராஜவேலு அவர்கள் வாட்சப் குழுமத்தில் வழங்கிய விரிவான விளக்கம்.]

குவி என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல்.ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் அல்லது பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என் வருகிறது. காலம் கணிக்கப்பட்ட பின்பு கூட வடமொழியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது நடுநிலையான ஆய்வாளர்களுக்கு அழகல்ல.

குவி பெயர் சொல்லாக கொடுமணலிலும்  குகை கல்வெட்டிலும் பயின்று வருகின்றது.கொடுமணலில் மட்டும் 4 சில்லுகளில் இச்சொல் உள்ளது. ஒன்றில் குவிரன் அந்தை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

வடமொழி கல்வெட்டு வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஹத்திபாடா என்ற இடத்தில் தான் முதன்முதலில் காணப்படுகிறது. ருத்ரதாமனின் ஜூனாகத் கல்வெட்டும் வடமொழி கல்வெட்டு. இவற்றின் காலம் கி.பி  1 ஆம் நூற்றாண்டு. சமஸ்கிருத பெரும் பண்டிதரும் இந்தியக் கல்வெட்டுகளில் 15 மொழிகள் அறிந்த கே.வி இரமேஷ் கல்வெட்டுத் துறையின் மேனாள் தலைமை இயக்குநர் வடமொழி கல்வெட்டுகளின் காலத்தை கணித்துள்ளார். இதை விட நமக்கு வேறு சான்றுகள் தேவை இல்லை.

சான்றுகள் இல்லாமல் அறிவியல் காலக்கணிப்பு இல்லாமல் மேம்போக்காக நாகசாமி போல் சொல்லிக் கொண்டு தான் இருப்பர்.  கணித்தல் - கணி என்பதை  ஐராவதம் Gani  என வலிந்து என படித்தது போன்று தான் இதுவும். அதன் ஆதன் என்பதை தன்ம என படித்தது போல் தான் இதுவும். செருப்பு க்கேற்ப காலை வெட்டும் கதை.

சிரவணபெளகோல கதை தான் இதுவும். பிராமி யே இல்லாத ஊரில் இருந்து வந்தவன் தமிழனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தான் என்பதை தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்கள் அந்த காலத்தில் ஏற்றுக் கொண்டவர்கள் தானே. நடுவண் அரசின் தொல்லியல் துறையின் சிறந்த கல்வெட்டு ஆய்வாளர்களான கே.வி இரமேஷ் எம்.டி சம்பத் பி.ஆர் சீனிவாசன் போன்றோர் தமிழியே காலத்தால் முற்பட்டது எனக் கூறியவர்கள். இவர்கள் பாராதியார் போல். பல மொழிகளின் கல்வெட்டுகள் படிப்பதில் மிகச் சிறந்த அறிஞர்கள். யாமறிந்த பல மொழிக் கல்வெட்டு எழுத்துக்களில் தமிழி எழுத்துக்களே காலத்தால் முற்பட்டது என கூறியவர்கள்.

தி.ந. சுப்பிரமணியம், கேஜி கிருஷ்ணன் போன்ற கல்வெட்டு அறிஞர்கள் ஏற்கனவே தமிழி குறித்து ஆய்வு செய்து தமிழி காலத்தால் முற்பட்டது என கூறியவர்கள். கே.வி இரமேஷ் Indian epigraphy published by chandeep Praksham என்ற நூலிலும் ஒரு ஆய்வுக் கட்டுரை இதே தலைப்பில் ICHR publication  எழுதி உள்ளார். சம்பத் சில ஆய்வுக் கட்டுரைகள் journal of science and Archaeology  என்ற இதழில் எழுதி உள்ளார். நான் south Indian history Congress journal  இல் எழுதி உள்ளேன். இவை ஆங்கில கட்டுரைகள். தமிழில் எனது கட்டுரை தொல்லியல் சுடர்கள் புது எழுத்து வரலாறு ஆய்வு இதழ்கள் ஆகியவற்றில் எழுதி உள்ளேன். வரலாற்றில் ஐராவதம் மகாதேவன் நிறுவிய அறக்கட்டளை சொற்பொழிவு கட்டுரை அது. அவருக்கு தெரியும்.  அவர் இன்று இருந்திருந்தால் தனது கருத்தை கண்டிப்பாக மாற்றிக் கொண்டிருப்பார். இந்த அறிவியல் காலக்கணிப்பு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நாங்கள் தொல்லெழுத்தியல் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இவை.


---

[9:19 PM, 9/23/2019] S Rajavel: #whatsapp

Pandiyaraja

unread,
Sep 24, 2019, 3:18:58 AM9/24/19
to மின்தமிழ்
செங்குவிரன் என்ற சொல் , மதுரை சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரசிங்கபுரப் பிராமி கல்வெட்டில் (சின்ன உண்டாங்கல்லு)  இருக்கிறது.
ப.பாண்டியராஜா

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Sep 24, 2019, 5:54:37 AM9/24/19
to mint...@googlegroups.com
தொகுத்துத் தந்தமைக்கு நன்றி.   

வியா., 29 ஆக., 2019, பிற்பகல் 12:33 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:


கீழடியில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு 
29 Aug 2019



சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.

2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.

மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a3e4294f-d7cf-40ff-9669-3560c5c09e0c%40googlegroups.com.

Kanaka Ajithadoss

unread,
Sep 24, 2019, 7:46:46 AM9/24/19
to mint...@googlegroups.com


திரு. இராசவேலு அய்யா  அவர்கள்   சென்னை அருகே  உள்ள கொளப்பாக்கத்தில் கைவிடப்பட்ட  மிகவும் தெளிவான தீர்த்தங்கர் சிலைகளை  10 ஆம் நூற்றாண்டு புத்தர் சிலைகள் என  அடையாளம் கண்டு பின்னர்  திருத்தம் வெளியிடப்பட்டது. இந்து நாளிதழில் இவை யாவும் வெளிவந்தன .இது அறிஞர்  அவர்களிடம் குறை காண்பதற்கல்ல. 

 மறைந்த அறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன்  அவர்கள் நடுநிலையாளர் என்பதே. சிந்து வெளி    திராவிடர் நாகரிகம் என்பதாகவே அவருடை கருத்து  இருந்தது .தமிழின் தொன்மையை  மிகவும் மூத்த மொழி என்பதில் அன்னார்  உறுதிப்படுத்த தயங்கியதேயில்லை .

இன்றும் கொளப்பாக்கத்தில் இரு சிலைகளும் உள்ளன வேம்புலி அம்மன் கோயிலை அடுத்து 

Rajavelu, epigraphist, ASI, had recently found that the third inscription belonged to “Sri Vijaya Maharaja,” a king from Sumatra, and that it was issued in his eighth regnal year. The inscription mentions his donating 250 kuzhi (a measurement) of land to Agatheeswarar at Kolapakkam, which was in Perur nadu (country), a sub-division of Puliyur. Sri Vijaya was a contemporary of Raja Raja Chola and the palaeography of the inscription showed the script was similar to that of the period of Raja Raja Chola. Sri Vijaya had a cordial relationship with the Chola kingdom. Although the inscription mentioned Sri Vijaya’s donation to the temple, it indirectly indicated Buddhist activity nearby, because Sri Vijaya was a Buddhist.

Dr. Satyamurthy and Dr. Rajavelu explored the area and found the ruins of a Buddhist temple close to the Agatheeswarar temple. The two Buddha sculptures and ornamental pillars, in granite, were unearthed. The Buddha sculptures are three feet tall. One sculpture has a dharma chakra on either side of the Buddha. This was sculpted in the ancient region that is now Tamil Nadu. The other sculpture has a three-tiered umbrella above the Buddha’s head and women bearing fly-whisks.

According to Dr. Satyamurthy, the face of this Buddha has Mongoloid features and this sculpture shows South-East Asian influence. One of the ornamental pillars unearthed has a bas-relief of a human face, with a head-gear that shows South-East Asian influence. An image of Ganesa is carved on this pillar.

Kolapakkam perhaps was a centre of Buddhist activity. According to Dr. Rajavelu, this area coming under Tondaimandalam was noted for Buddhist activity about 1,000 years ago, prior to the Chola period. [Buddha statues unearthed near Chennai]


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/792d7448-2f1c-4cc2-ae4e-5c527cf4e315%40googlegroups.com.


--
Prof. Dr. Kanaka ..Ajitha doss 

N. Ganesan

unread,
Sep 24, 2019, 8:29:54 AM9/24/19
to மின்தமிழ், vallamai
On Mon, Sep 23, 2019 at 12:03 AM சேதுராமன் <sethura...@gmail.com> wrote:
தமிழரின்பூர்வீகமதம்இந்துமதம் என்பதுதவறு.தாயுமானவர்சைவ சமய  மேசமயம் எனப்பாடியுள்ளார்.தமிழர்மதங்கள்-சைவம்,மாலியம்.புத்தம்,சமணம். முருகன்\காளிவழிபாடுகள் சைவத்தில்அடங்கும்.


சைவம் என்றால் புரிகிறது. மாலியம் - இது என்ன? வைஷ்ணவமா?.
வைஷ்ணவம் சைவத்தில் அடங்குமா?

NG
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 24, 2019, 9:28:31 AM9/24/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்
எல்லாம் கிறித்துவ மதம்தான் தமிழருக்குச் செய்ததா ?  ”
////ஆக, கிறித்தவ மதமும் ஏதோ செய்திருக்கிறது என்று ஒத்துக்கொண்ட அளவில் மிக்க நன்றி.
இப்போது, காமராசரைப் பற்றிய ஒப்பீடு எதற்கு? சொல்லப்போனால், கீழடியில் மதம் சார்ந்த தொல்பொருள்கள் கிடைக்கவில்லை என்ற செய்தியின் அடியில் கிறித்தவரைப்பற்றிய பழிச்சொல் எதற்கு? முதலில் உமது மனத்தில் உள்ள அழுக்கைக் கழுவும்.
ப.பாண்டியராஜா//////

   கிறித்துவ மதம் பைபிளை காட்டி, அப்பத்தைக் காட்டி மக்களுக்கு ஆசை ஊட்டியது.

இது உண்மை வரலாறு.

சி.ஜெ

On Mon, Sep 23, 2019 at 10:35 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

Pandiyaraja Paramasivam

unread,
Sep 24, 2019, 9:48:57 AM9/24/19
to mint...@googlegroups.com
இல்லை, இது உமது அற்ப சந்தோஷம்.
ப.பாண்டியராஜா

S. Jayabarathan

unread,
Sep 24, 2019, 11:12:40 AM9/24/19
to mintamil, vallamai, tamilmantram
இல்லை நண்பரே,

நான் ஏசு நாதரையும், அன்னை தெரேசாவையும் நேசிப்பவன்.  
ஆனால் மதப்பீடாதிபதிகள் வேறு, மனித தூதர் வேறு.  

2004 தெற்காசிய சுனாமியில் வீடுகளை இழந்த புத்தமத மக்களுக்கு 
உதவ முன்வந்த கிறித்துவத் தொண்டர் முதலில் அவர்கள் மதம் மாற 
வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

சி. ஜெயபாரதன்

Pandiyaraja

unread,
Sep 24, 2019, 11:41:52 AM9/24/19
to மின்தமிழ்
நீர் முதலில் கூறியது :

”கிறித்துவ மதம் பைபிளை காட்டி, அப்பத்தைக் காட்டி மக்களுக்கு ஆசை ஊட்டியது.”

இப்போது கூறுவதற்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடு?

இன்னும் சொல்கிறேன்.

சாதி, மத, இன பேதம் அற்ற எத்தனையோ கிறித்தவத் தொண்டுகள் நடைபெற்றுள்ளன, நடைபெறுகின்றன, இனியும் நடைபெறும்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 24, 2019, 1:19:30 PM9/24/19
to mintamil, vallamai, tamilmantram
//2004 தெற்காசிய சுனாமியில் வீடுகளை இழந்த தாய்லாந்து ஏழை புத்தமத மக்களுக்கு உதவ முன்வந்த கிறித்துவத் தொண்டர் முதலில் அவர்கள் மதம் மாற 
வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.///

இதற்கு ஏனோ பதில் இல்லை. 

சி. ஜெயபாரதன்

Pandiyaraja Paramasivam

unread,
Sep 24, 2019, 1:36:08 PM9/24/19
to mint...@googlegroups.com
Simply making a statement does not make it true. I still doubt it. Please come out with proof.
P.Pandiyaraja

S. Jayabarathan

unread,
Sep 24, 2019, 5:23:35 PM9/24/19
to mintamil, vallamai, tamilmantram
I collected a lot of information on the 2004 Southasian Tsunami and wrote about it. It was true event.

S. Jayabarathan

Pandiyaraja

unread,
Sep 24, 2019, 10:19:53 PM9/24/19
to மின்தமிழ்
Who gave you that information? Where  did you get it from? I simply don't believe a bit of it, since it comes from a person wearing a tainted glass against Christians. That statement is the most biased one.
P.Pandiyaraja
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

சேதுராமன்

unread,
Sep 24, 2019, 10:55:36 PM9/24/19
to மின்தமிழ்
மாலியம்என்பது விண்ணவம்\வைணவம் என்னும்நெறி.விண்ணவம்  சைவம்போல் தனிநெறி.

தேமொழி

unread,
Sep 24, 2019, 10:59:35 PM9/24/19
to மின்தமிழ்
கீழடி: ‘திமில் காளை’ எலும்புகள் எதைக் குறிக்கின்றன? 

சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. 


தேவை நேரம்: 06:23
Sep 22, 2019
#கீழடி  #திமில்காளை  #ஜல்லிக்கட்டு
சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், கீழடியில் கிடைத்த திமில் காளை எலும்புகள் பற்றியும், அவற்றின் வரலாற்றுப் பயணம் மற்றும் பயன்பாடு குறித்தும் விளக்கம் தருகிறார். 

S. Jayabarathan

unread,
Sep 24, 2019, 11:39:06 PM9/24/19
to mintamil, vallamai, tamilmantram

Religious aid groups try to convert victims

Muslim clerics object as Western Christian groups hand out food and Bibles, reports Jason Burke in Banda Aceh

Jason Burke

Sun 16 Jan 2005 09.12 GMTFirst published on Sun 16 Jan 2005 09.12 GMT

Shares
21
Dozens of religious groups have moved in to Aceh, looking to help tsunami victims - and convert them and others, creating tensions in the disaster area.

The arrival of Western Christian groups with records of aggressive preaching risks confrontation with local Muslim leaders which could jeopardise the provision of aid to the 600,000 local people made homeless by the disaster. The death toll in Aceh stands at around 110,000 and is expected to rise.

Reacting to the attempts of one American group to fly hundreds of local children to a Christian orphanage, Din Syamsuddin, head of the Indonesian Council of Clerics, said any attempt to spread religion under the cover of aid was wrong.

'The Muslim community will not remain quiet. This a clear statement, and it is serious,' he said.

Many survivors of the disaster are deeply traumatised by their experience and thus, experts say, vulnerable to religious groups. The disaster has led to a huge increase in religious sentiment. Many Acehnese speak of the wave as a punishment from God for immorality and lax Islamic practice, pointing out that in many villages only the mosque was left standing.

'I had faith but never did what I should have done,' said Shinta Ekhsani, a 29 year-old English teacher. 'I did not pray five times a day. I did not teach my children about Islam. I was too materialistic. Now I have changed.'

Most Indonesians follow a moderate strand of Islam, very different from more hardline varieties increasingly prevalent in the Middle East. Local Muslim groups were among the first to bring help to victims. Aceh is Indonesia's most religiously conservative province.

However, more radical Muslim groups started arriving in the province within days. These include the Islamic Defenders' Front, which has attacked bars and shops selling alcohol in Jakarta, the Indonesian capital, and Lashkar Mujahideen, which endorses a militant ideology and has alleged links to the killing of Christians.

Last week, speaking outside a tent at Banda Aceh's busy military airport under a banner reading 'Islamic Law Enforcement', Salman al-Farizi said his group were in Aceh to give medical and food assistance, remove corpses, evacuate refugees and to preach. 'The survivors will be helped to spread the true word of Allah,' al-Farizi said.

Elsewhere, groups are handing out Korans and even veils alongside aid. Volunteers from the al-Azhar Foundation in Jakarta said they had distributed 1,993 Korans to refugees from Lokh Nga, one of the worst-hit villages. 'Many want to read the Koran to help them with their trauma,' said Anwar Sani, director of the foundation.

Some Christian groups, however, are instructing workers not to display church names or wear crosses.

'We prefer to address the physical needs first,' said William Suhanda, an Indonesian whose Christian group, 'Light of Love for Aceh', is helping distribute food in Banda Aceh and hopes to bring 50 children to a Christian orphanage in Jakarta. 'We also want to expose them to Christian values... so they can see the other side, that we're about the love of Christ,' he said.

Mark Kosinski, an American evangelist who arrived in Aceh from Malaysia last week, said: 'These people need food but they also need Jesus. God is trying to awaken people and help them realise salvation is in Christ.'

One US Christian group was revealed last week to have tried to airlift 300 'tsunami orphans' to a Christian children's home. WorldHelp started raising funds for the operation until it learned that the Indonesian government had banned non-Muslims from adopting Acehnese orphans.

'What we were attempting to do in finding a home for these orphans is no different from what Mother Teresa did in placing Hindu orphans in a Christian children's home,' said Vernon Brewer, president of WorldHelp.

The Church of Scientology has also established a presence in Banda Aceh, setting up a base opposite the governor's mansion. 'We are not here to proselytise. That would be distasteful,' said Greg Churilov. 'We hope we are just seen as another relief group.'

However, there are also opportunities for co-operation. The US navy's high-profile effort to assist Indonesia deliver aid has helped counter anger over the Iraq war. The Islamic Defenders' Front spent much of this week removing corpses from collapsed homes alongside an Indonesian Christian group. Mormons have teamed up with Islamic relief operations to send aid to the region.

Last week, the UN even asked Lashkar Mujahideen to unload a plane of relief supplies because it was short of personnel.

Since you’re here...

... we have a small favour to ask. More people are reading and supporting The Guardian’s independent, investigative journalism than ever before. And unlike many new organisations, we have chosen an approach that allows us to keep our journalism accessible to all, regardless of where they live or what they can afford. But we need your ongoing support to keep working as we do.

The Guardian will engage with the most critical issues of our time – from the escalating climate catastrophe to widespread inequality to the influence of big tech on our lives. At a time when factual information is a necessity, we believe that each of us, around the world, deserves access to accurate reporting with integrity at its heart.

Our editorial independence means we set our own agenda and voice our own opinions. Guardian journalism is free from commercial and political bias and not influenced by billionaire owners or shareholders. This means we can give a voice to those less heard, explore where others turn away, and rigorously challenge those in power.

We need your support to keep delivering quality journalism, to maintain our openness and to protect our precious independence. Every reader contribution, big or small, is so valuable. Support The Guardian from as little as £1 – and it only takes a minute. Thank you.


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a67cc9ff-6a5d-4fef-9c6c-d19cd7dc1022%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 25, 2019, 12:31:12 AM9/25/19
to மின்தமிழ்
source: http://newkalviseithi.blogspot.com/2019/09/blog-post_528.html

கீழடி ஆதாரங்கள் - சில குறிப்புகள் - பேராசிரியர் அ.ராமசாமி.

-September 21, 2019

கீழடிச் சான்றுகளைச் சங்ககாலச் சான்றுகள் எனச் சொல்வதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவை ஒரு பழைய நாகரித்தின் ஆதாரங்கள். முச்சங்கம், சங்கம், இறையனார் அமர்ந்து தமிழாய்ந்தது போன்றன புராணிகம் தமிழ்நாட்டிற்குள் பரவிய காலகட்டத்துக் கருத்துகள். அதனை ஏற்று நிறுவும் முயற்சிகள், கிடைத்த அறிவியல் ஆதாரங்களையும் புராணிகத்தன்மை கொண்டவைகளாக மாற்றிவிடும்.
கீழடிச் சான்றுகளைச் சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல் பேசுவதே சரியானது.

மொழி, இலக்கிய ஆய்வியல் காத்திரமான பங்களிப்புச் செய்த பலரும் சங்ககாலம் என்பதை ஏற்றுப் பேசுவதில்லை. சான்றோர் இலக்கியங்கள், வீரநிலைக்காலம், வீரநிலைக்கவிதைகள், செவ்வியல் கவிதைகள், செவ்வியல் இலக்கியக்காலம் போன்றவற்றையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இப்போது அறிவியல் ஆய்வகத்தின் வழி கீழடி என்னும் இடத்தில் கிடைத்துள்ள தரவுகள், 2600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டக் கட்டட அமைப்பும், நகரஅமைப்பும், வாழ்க்கைக்கான வசதிகளும் கொண்ட நகரம் ஒன்று இருந்தது என்பதற்கான ஆதாரங்களாக ஆகியிருக்கின்றன. அங்கு வாழ்ந்தவர்கள் மண்பாண்டங்களில் எழுதினார்கள்; விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வரிவடிவங்களாகத் தீட்டினார்கள் என்பதோடு உலோகங்களால் செய்த கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. தங்கத்தில் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்தார்கள். அவை விற்பனைப்பண்டங்களாக இருந்தன. தங்களுக்குள் தொடர்புகளைச் செய்ய எழுத்துப் பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று விவரிப்பதற்கான பருண்மையான ஆதாரங்கள் இவை. அதனால் வைகைக் கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் கொண்டது என்பதல்ல. அதற்கும் சில ஆயிரங்களுக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாகரிகம்.

கீழடிச் சான்றுகள் வழி உறுதியாகியுள்ள தகவல்களைத் தமிழின் தொல்லிலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஏற்கெனவே தந்துள்ளன. கீழடி தரும் செய்திகளைத் தமிழின் தொல் இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடை விரிவாகச் சொல்கிறது.
அது மதுரை மாநகரைப் பாடல்வெளியாகக் கொண்டது. பரிபாடலில் வையை நதியின் பெருக்கமும் பரவலும் நகரின் விரிவும் தரப்பட்டுள்ளன.

இன்னொரு கடல் நகரமான காவிரிப்பூம்பட்டினத்து வாழ்க்கையைப் பட்டினப்பாலை விவரித்திருக்கிறது. துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளை விவரிக்கவும் செய்கிறது. முல்லைப் பாட்டில் காத்திருக்கும் தலைவியின் வீடும் கூட வசதியான வீடுதான். இவையெல்லாம் நகரநாகரிக வாழ்க்கையின் பதிவுகளைத் தருகின்றன.

இவற்றிற்கிணையாகக் கிராமப் புறங்களையும் மலைப் பாதைப் பயணங்களையும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற ஆற்றுப்படைகள் விவரித்திருக்கின்றன.

குறிஞ்சிப்பாட்டு வன அறிவையும் மலைவளத்தையும் கொண்டிருந்ததை -பயன்படுத்திக்கொண்டதைத் தருகின்றது. இவையெல்லாம் பத்துப்பாட்டு என்னும் நெடும்பாடல்கள் வழி அறியப்படும் நாகரிக வாழ்க்கை.
நெடும்பாடல்களுக்கு முன்னால் எட்டுத் தொகையிலிருக்கும் குறும்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பெற்ற காலம் சில ஆயிரங்களுக்கு முன்பு. அவற்றிற்கும் முன்னால் வாய்மொழித்தன்மை கொண்ட ஐங்குறுநூற்றுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் மொழியமைப்புக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றின் மொழிநடைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. வாய்மொழிப்பாடல்களில் இறுக்கம் ஏற்படச் சில நூற்றாண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பது மொழியியலும் இலக்கியவரலாறும் சொல்லும் செய்திகள்.

இலக்கியங்கள் தரும் தகவல்களைப் போலப் பன்மடங்கு செய்திகளையும் தமிழர்களின் இயற்கை அறிவியல் பார்வையையும் மொழிபற்றிய கோட்பாட்டையும், நூலாக்கம், சமூக அமைப்பு குறித்த கருத்துகளையும் தொல்காப்பியப் பனுவல் குறிப்பிடுகின்றது. உயிரித் தோற்றவியலும் மானுடவியல் கூறும் அறிவுத்தோற்றம், குடும்பம், அரசு, கோட்டை, காப்பரண் போன்றவைகளை உருவாக்குதல் பற்றியெல்லாம் அது விரிவாகப் பேசியுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை மரபுக்கு ஆதாரமாக இருக்கும் அரிஸ்டாடிலின் பனுவலையொத்த பனுவலாக இருக்கிறது தொல்காப்பியப் பனுவல். ஆனால் சிக்கல் என்னவென்றால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ்த் தொல்நூல்களின் காலத்தையும் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்ய முடியவில்லை என்பதுதான்.

 இப்போது கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் ஆய்வுகள் வழி உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகள்,
இலக்கியங்கள் பேசும் உண்மைகளை உறுதி செய்கின்றன என்பதில்தான் நாம் மகிழும் காரணங்கள் இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியைச் சங்கப்புனைவுகளோடு இணைத்துக் கெடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.



Pandiyaraja

unread,
Sep 25, 2019, 1:17:47 AM9/25/19
to மின்தமிழ்
"Muslim clerics object as Western Christian groups hand out food and Bibles"

பைபிளைக் கொடுப்பது விருப்பமிருந்தால் படித்துப்பாருங்கள் என்பதற்காக. இதில்கட்டாயம் ஏதும் இல்லை.  மதம் மாறினால்தான் உதவியே கிடைக்கும் என்று நீர் விட்ட அண்டப்புளுகு இப்போது ஆகாசப்புள்கு ஆகிவிட்டது. இங்கு வற்புறுத்தல் இல்லை.
இதுபோல் அரைகுறையாகச் செய்திகளை அர்த்தம் செய்துகொண்டு ஆகாசப்ப்புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு அவதூறு பேசுவதை இத்துடனாவது நிறுத்திக்கொள்ளும்.
ப.பாண்டியராஜா
எல்லாம் கிறித்துவ மதம்தான்<span style="color:rgb(34,34,34);line-height:18.4px;f

N. Ganesan

unread,
Sep 25, 2019, 6:32:06 AM9/25/19
to மின்தமிழ், vallamai
>   அவை விற்பனைப்பண்டங்களாக இருந்தன. தங்களுக்குள் தொடர்புகளைச் செய்ய எழுத்துப் 
> பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று விவரிப்பதற்கான பருண்மையான ஆதாரங்கள் இவை. 
> அதனால் வைகைக் கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் கொண்டது என்பதல்ல. அதற்கும் சில 
> ஆயிரங்களுக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாகரிகம்.  (அ. ராமசாமி)

தவறான கருத்து. கீழடியில் மனிதர்கள் வாழத் தொடங்கியது கி.மு. 580.
கட்டிடங்கள் அதன் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் ஆகும். கீழடி
காட்டுவது அங்கே கிமு 580-க்கு முன்னர் இரண்டாயிரம் வருஷமாய்
நகர வாழ்க்கை என்றல்ல. தமிழ்நாட்டில் வடக்கே இருந்து வேளிர்
நாகரீகம் வந்து வேளாண்மை தொடங்கி, அதன் விளைச்சல்
மிகுதியால் நகர நாகரீகம் ஆரம்பிக்கிறது எனக் காட்டுவன:
கொடுமணல், பொருந்தல், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள்.

கீழடியின் மெகாலித்திக் காலம். இரும்பு மிகப் பயனுக்கு வந்துவிட்ட காலம்.
நியோலித்திக் காலம் என்பதே தமிழ் நாட்டில் காணோம்.  see the Comments
by A. Parpola, Dorian Fuller and Nicole Boivin on Sembiyan Kandiyur cert.
The certs available in Keezhadi must have been produced in Andhra & Karnataka

செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் உள்ள மகரம் போல,
கீழடியில் கிடைத்துள்ளது மிக முக்கியமானது. இரண்டையும்
தொடர்புபடுத்தி எந்த ஆர்க்கியாலஜிஸ்ட்டும் இதுவரை பேசக் காணோம்.
ஆதிச்ச நல்லூர் பானையோடு, சாணூர் பானைஓடு, சூலூர் கிண்ணம், ...

பிரேமானந்த் என்ற இளைஞர் சங்க இலக்கியத்தில் கூறப்படும்
மரையா (நீல்காய்) என்னும் மரை-மானை கொங்குநாட்டின் 
பழையகோட்டைக் காளை என்கிறார். சங்க இலக்கியத்தின்
பல பகுதிகளை விளக்குவன கீழடிப் பொருட்கள்.

நா. கணேசன்

எழுத்துகள் பல வட இந்தியப் பெயர்களைத் தருகின்றன.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

abdul rahuman

unread,
Sep 25, 2019, 7:06:03 AM9/25/19
to மின்தமிழ்
நம் வரலாற்றைத் தேடும் அழகிய இழையில் மதத்தை நுழைத்து, வெறுப்பால் பிளவு ஏற்படுத்தும் செயலைச் செய்வது ஏன்?

கிறிஸ்தவம் அப்பத்தைக் காட்டி ஆசையூட்டியது எனவும் இஸ்லாம் தமிழரில் திணிக்கப்பட்டது எனவும் பொத்தாம் பொதுவாக அடித்துவிடுவது, இழையின் மையப்பொருளை விட்டு விலகி அநாவசிய வாத-பிரதிவாதங்களுக்கே வழிவகுக்கும்.

பசியில்லாமல் இருப்பவனுக்கு அப்பத்தின் மீது ஆசை வருமா? இல்லை, விருப்பமில்லாமல் ஒருவரின் வாயில் அப்பத்தைத் திணிக்கத்தான் முடியுமா? திணித்தாலும் அதனைத் துப்பி விடுவது மிக எளிது என்பது புரியவில்லையா?

ஒரு இஸ்லாமியனோ கிறிஸ்தவனோ இல்லாமலிருந்த நாட்டில் அவ்விரு மதங்களையும் இங்கே வந்து திணித்தது யார்? அதற்கு எம் மூதாதையர் ஏன் இடமளித்தனர்? இஸ்லாமும் கிறிஸ்தவமும் புத்தமும் இங்கே ஏன், எப்படி பரவின என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். இப்போதும் பலர் விரும்பி ஏற்றுகொள்கின்றனர். பெரியார்தாசனிலிருந்து உதாரணம் பல கொடுக்க முடியும். 

இவ்விழை அதற்கான இழையல்ல. தேவையற்ற இந்த விவாதத்தைத் தள்ளி வைத்து, நம் யதார்த்த வரலாற்றை அறிவதில் ஆர்வமுடன் ஒன்றிணைவோம்.

S. Jayabarathan

unread,
Sep 25, 2019, 8:50:53 AM9/25/19
to mintamil, vallamai, tamilmantram, நா. கணேசன்

S. Jayabarathan

unread,
Sep 25, 2019, 8:53:38 AM9/25/19
to mintamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 25, 2019, 10:03:04 AM9/25/19
to மின்தமிழ்
உண்மை. ஜெயபாரதன் தனி இழை துவக்கி கிறித்துவர்கள் மதத்தொண்டு புரியும்போது
மதமாற்றம் செய்கிறார்கள் என எழுதலாம். அதை மறுப்போரும் பங்கு பெறலாம்.
அமெரிக்காவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள கிறிஸ்துவ மக்களில்
ஒரு பகுதியினரை ரைஸ் க்றிஸ்டியன் என சொல்வர்: https://en.wikipedia.org/wiki/Rice_Christian

இந்த இழையில் கீழடி பற்றிப் பேசலாம். அரிய காணொளிகளை
தேமொழி தருகிறார். பார்த்துவிட்டு அவற்றைப் பேசுவோம்.

-------

புத்தர் இந்தியாவில் பிறந்தவர். இந்து மதத்தின் போக்குகளை மாற்றத்
தனி மதம் கண்டவர். இப்போது பேரியக்கமாக, இந்திய மாநிலங்களில்
நியோ-புத்திஸம் அம்பேத்கார் தொடங்கியதில் இருந்து வளர்ந்து வருகிறது.
நமக்கு ஒரே ஒரு நூல்தான் தமிழிலே கிடைக்கிறது: மணிமேகலை.
அண்மையில் அதைப் படித்த ஆன் மோனியஸ் (ஹார்வர்ட்) இளம்வயதில்
காலமானார்.

மிகப் பெரிய சமயமாக இந்தியாவில் பௌத்தம் வரும் என நினைக்கிறேன்.
சங்க இலக்கியத்தில், சங்க காலத்தில் பௌத்தம் மிகக் குறைவு.
தமிழ் மன்னர்கள் சமண (ஜைந) சமயத்தை ஆதரித்தனர், அதனால்.
வடக்கே ஆந்திரம், தெற்கே சிங்களம் அவர்கள் பௌத்தர்.
எனவே, தமிழ் அரசர்கள் பௌத்தத்தை என்றும் பெரிய அளவில் ஆதரிக்கவில்லை.
இனி வரும் அரசுகள் இதனை மாற்றக்கூடும்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Sep 25, 2019, 10:08:56 AM9/25/19
to மின்தமிழ்
செய்திகளைத் திரித்தும், வளைத்தும், நீட்டியும் உம் விருப்பதிற்கேற்ப மாற்றிக் காண்பிக்கும் உமது பித்தலாட்டம் உமது கூற்றின் வழியாகவே நிரூபணம் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நீர் முறுக்கிக்கொண்டு வருவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இனி இதுபற்றி நீர் கூறும்/கூறப்போகும் சொற்களுக்கு இந்தப் படங்கள்தான் எனது பதில்.
ப.பாண்டியராஜா


ignore-2.jpg

ignore-1.jpg 

S. Jayabarathan

unread,
Sep 25, 2019, 10:23:42 AM9/25/19
to mintamil


Rice Christian

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search

Rice Christian is a term used, usually pejoratively, to describe someone who has formally declared himself/herself a Christian for material benefits rather than for religious reasons.[1]

The term comes from Asian countries, such as IndiaChina and Japan. Concerns have been expressed both by Christian missionaries and by those opposed to Christian missions that people in these situations are only nominally converting to Christianity in order to receive charity or material advancements.[2] One of the earliest examples of this concept in English appeared in 1689 with the writings of William Dampier when he wrote regarding the French priests' effort to convert people of Tonkin that "alms of rice have converted more than their preaching."[3]

This term and the topic were very extensively written about by Thomas Hale, Jr.. He introduced the topic in his first 1986 book "Don't Let the Goats Eat the Loquat Trees" and spoke and taught on best practices in missions summarizing his work in his 1995 book "On Being a Missionary" The term has also been used pejoratively to describe conversions by missionaries who exploit poverty and famine, where food and other allurements are given in exchange for conversion.[4][5] In Christian Witness in a Multi-Religious World: Recommendations for Conduct, a document issued by the World Council of Churches in 2011, one of the points raised states "If Christians engage in inappropriate methods of exercising mission by resorting to deception and coercive means, they betray the gospel and may cause suffering to others." Principles 4 and 5 of this document outline that "..Acts of service, such as providing education, health care, relief services and acts of justice and advocacy are an integral part of witnessing to the gospel. The exploitation of situations of poverty and need has no place in Christian outreach. Christians should denounce and refrain from offering all forms of allurements, including financial incentives and rewards, in their acts of service." and "..as they carry out these ministries, fully respecting human dignity and ensuring that the vulnerability of people and their need for healing are not exploited."[6] These points are seen as to prevent false conversions which produce "Rice Christians".[7][8]

The term "Rice Christians" appears in Harper Lee's book To Kill A Mockingbird, in Chapter 13. Scout's Aunt Alexandra uses the word referring to Missionary Society refreshments during "long reports on Rice Christians." To Kill A Mockingbird was first published in 1960.

An example of "Rice Christianity" was used in A.J. Cronin's novel The Keys to the Kingdom, about a Scottish priest who does missionary work in China. While the term is never used in print, the example is shown when the protagonist is hosted by a Chinese couple named Hosannah and Ferdinand Wang. Through getting to know his host couple, the protagonist sees they have little interest in aiding him in his missionary work and are mainly hosting him for the money they receive from his church in Scotland.

See also[edit]


References[edit]

  1. ^ "Rice Christians"Brewer's Dictionary of Phrase and Fable. 1898. Retrieved 2007-04-17.
  2. ^ Way of Life Baptist publication (2005-07-11). "Baptists Tired of Being Swindled by Rice Christians". ChristianAggression.org. Archived from the original on 2007-09-26. Retrieved 2007-04-17.
  3. ^ Diana & Michael Preston (2004). A Pirate of Exquisite Mind. Walker & Company. ISBN 042520037X.Chapter XV
  4. ^ http://www.phnompenhpost.com/national/proselytising-amid-poverty
  5. ^ https://www.washingtonpost.com/wp-srv/newsweek/religion.htm
  6. ^http://www.vatican.va/roman_curia/pontifical_councils/interelg/documents/rc_pc_interelg_doc_20111110_testimonianza-cristiana_en.html
  7. ^ http://www.eastwestreport.org/42-english/e-20-1/331-new-code-of-conduct-for-christian-witness
  8. ^ http://www.csduppsala.uu.se/devnet/CivilSociety/Outlookserien/2012,%20Faith/FCV_Clarke.pdf


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 25, 2019, 10:33:44 AM9/25/19
to mintamil, vallamai, tamilmantram, நா. கணேசன்
செய்திகளைத் திரித்தும், வளைத்தும், நீட்டியும் உம் விருப்பதிற்கேற்ப மாற்றிக் காண்பிக்கும் உமது பித்தலாட்டம் உமது கூற்றின் வழியாகவே நிரூபணம் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நீர் முறுக்கிக்கொண்டு வருவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இனி இதுபற்றி நீர் கூறும்/கூறப்போகும் சொற்களுக்கு இந்தப் படங்கள்தான் எனது பதில்.
ப.பாண்டியராஜா


ignore-2.jpg

ignore-1.jpg 
n Wed, Sep 25, 2019 at 1:17 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
"Muslim clerics object as Western Christian groups hand out food and Bibles"

பைபிளைக் கொடுப்பது விருப்பமிருந்தால் படித்துப்பாருங்கள் என்பதற்காக. இதில்கட்டாயம் ஏதும் இல்லை.  மதம் மாறினால்தான் உதவியே கிடைக்கும் என்று நீர் விட்ட அண்டப்புளுகு இப்போது ஆகாசப்புள்கு ஆகிவிட்டது. இங்கு வற்புறுத்தல் இல்லை.
இதுபோல் அரைகுறையாகச் செய்திகளை அர்த்தம் செய்துகொண்டு ஆகாசப்ப்புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு அவதூறு பேசுவதை இத்துடனாவது நிறுத்திக்கொள்ளும்.
 

Religious conversion in India

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search

N. Ganesan

unread,
Sep 25, 2019, 10:48:00 AM9/25/19
to மின்தமிழ், சி. ஜெயபாரதன்
திரு. ஜெயபாரதன்,

இது கீழடி இழை. அகழ்வாராய்ச்சி தரும் செய்திகள் பற்றி மட்டுமே இதில் பேசுவோம்.

தனி இழையில் கிறித்தவம் பற்றி எழுதுங்கள். நன்றி.

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
Sep 25, 2019, 11:43:22 AM9/25/19
to N. Ganesan, மின்தமிழ்
புதிய இழை துவங்கி விட்டேன்

சி. ஜெ.

தேமொழி

unread,
Sep 25, 2019, 2:29:29 PM9/25/19
to மின்தமிழ்
கீழடியில்அருகாட்சியகம் தாமதமாவதற்கு காரணம் என்ன? -சுபாஷிணி  
|Subashini Interview About Keeladi




#Subashini #Keeladi

தேவை நேரம்: ~25:00

தேமொழி

unread,
Sep 25, 2019, 9:43:35 PM9/25/19
to mint...@googlegroups.com


கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . . 

 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.


கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது என்பதால்
வினா விடையாக இப்பதிவுகள்.‌

1.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

விடை:
ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தைச் சேர்ந்தது. கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை "வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு" என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌ சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லைப் பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது "புரிதல் விகாரத்தில்" போய் முடியும். அது நல்லது அல்ல.

2.
கேள்வி:
சிந்துவெளி பற்றிய உரையாடல்களில் "திராவிடம்" என்ற "தமிழ்" என்ற சொல்லாடல்களின் பொருத்தப்பாடு என்ன?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டைக் கட்டமைத்தவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தாலும் சிந்துவெளி மகுடத்திற்கான முக்கியமாக இரண்டு வேட்பாளர்கள் தான்.

1. "திராவிட மொழிக் குடும்பம்" ( கிழக்கு ஈரான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி நடு இந்தியாவிலும் கிழக்கு இந்தியா நேபாளம் ஆகிய இடங்களில் அங்கும் இங்கும்; தென்னகம் முழுவதும்; இலங்கையிலும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகிற பல மொழிகள் அடங்கியது) என்று அறியப்படும் மொழியை / அல்லது மொழிகளைப் பேசிய பண்பாட்டினர்.

2. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் என்ற வட மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டினர்.

சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் தமிழ்த்தொன்மங்களுக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சி என்ற முறையில் ஒரு மிக ஆழமான உறவு இருந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

ஆனாலும் இந்த தொடர்பு மொழியியல் அடிப்படையில் "திராவிடக் கருதுகோள்" என்றே ஆய்வாளர்களிடையே தொடக்கம் முதல் அறியப்படுகிறது. சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இது வரை வாசிக்க இயலாததால் குறிப்பிட்ட ஒரு மொழி என்று சொல்லாமல் மொழிக்குடும்பத்தின் பொது அடையாளமாக "திராவிடம்" என்ற அடையாளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிராகுயி என்ற திராவிட மொழி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைவாசல் பகுதிகளில் இன்றும் பேசப்படுவதாலும் கோண்டி போன்ற நடு இந்திய திராவிட மொழியின் சில பண்பாட்டுக் கூறுகள் சிந்துவெளி பொறிப்புகளுடன் நெருக்கம் காட்டுவதாலும் இத்தகைய பொதுவான சித்தரிப்பு தேவைப்படுகிறது.

சிந்துவெளிப் பண்பாடே பல்வேறு திணைகளைச் ( நிலப்பின்னணிகள்) சேர்ந்த பலவகையான சமூகப் பொருளாதார பண்பாட்டுப் பின்னணியின் கூட்டு இயக்கம் தான் என்று தோன்றுகிறது. மலை நில மக்களின் வாழ்விற்கும் கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களின் வாழ்க்கைக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும். ஆனால் சிந்துவெளிப் பண்பாடு இந்த இரண்டு துருவங்களும் எளிதில் சேர்ந்து இயங்கிய பண்பாட்டின் தொடர்ச்சியும் நகர்மய வாழ்வின் உன்னதமான உச்சக் கட்டமும் ஆகும்.

சிந்துவெளியின் பரந்த நிலப்பரப்பிலும் பல்வேறு நகரங்களிலும் நகர அமைப்பு, செங்கல் அளவு, எடைக் கற்கள், எழுத்துப் பொறிப்புகள், முத்திரைகள் என்று பொதுக்கூறுகள் உள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாடு ஒரு பண்பட்ட மொழி/ தொடர்பு மொழி இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால் அந்த மொழி எதுவென்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

ஆனால் அந்த உயர் நாகரிகத்தின் தொடர்ச்சியை அந்தப் பண்பாட்டோடு பொருத்தப்பாடு கொண்ட இன்னொரு ஆவணப்படுத்தப்பட்ட அடுத்தகட்ட பண்பாட்டு மரபில் இலக்கிய மரபில் தான் தேட வேண்டும். அங்கு தான் சங்க இலக்கியம் முக்கியமான சான்றாக நிற்கிறது.

ஒருவேளை சிந்துவெளிப் பண்பாட்டின் பொது நாகரிக மொழியாகத் தமிழ் அறியப்படும், நிறுவப்படும் சூழல் வந்தால் அப்போது ஆய்வாளர்கள் சிந்துவெளிக்கான மொழி அடையாளம் குறித்துத் தெளிவாக உரையாடுவார்கள்.

அதுவரை சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி குறித்த தேடலில் "திராவிடக் கருதுகோள்" என்ற சொல்லாடல் தேவையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும்.

இல்லையென்றால் அது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

3.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வுகள் உண்மையில் எவ்வளவு முக்கியமானவை ? இந்த அகழ்வாய்வுகளின் முக்கிய பங்களிப்பு என்ன?

விடை:
கீழடி அகழ்வாய்வுகள் மிக மிக முக்கியமானவை. காரணங்கள்.

1. பழந்தமிழ் நாட்டில் நகர வாழ்வியலுக்கான முதல் அகழ்வாய்வுத் தடயம் கீழடி. இதற்கு முன் ஆதிச்சநல்லூரில் கிடைத்த புதைகுழிப் பகுதிகளில் கிடைத்த தரவுகள் மேலும் முன்னெடுக்கப்படவில்லை. அரிக்கமேடு, கொடுமணல், அழகன்குளம் போன்ற பல அகழ்வாய்வுகள் உள்நாட்டு வெளிநாட்டு வணிக மரபிற்குச் சான்றளித்தன. ஆனால் நகர வாழ்க்கை குறித்த தடயங்கள் இல்லை என்ற குறையைத் தீர்க்கிறது கீழடி.

2. இந்தியாவின் ஆகச் சிறந்த வாழ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் தீட்டும் துல்லியமான சொற்சித்திரம் கற்பனையான கட்டுக்கதை அல்ல; அவற்றில் பண்பாட்டு வரலாற்றுக்கான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன என்ற கருத்தை கீழடி மெய்ப்பிக்கிறது.

3. "தமிழி" யா தமிழ் பிராமி யா என்ற சொல்லாடல்களை விட என்பதை விட முக்கியமானது இந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்த வரிவடிவத்தின் கால நிர்ணயம் கி.மு 6 ஆம் நூற்றாண்டிற்கு நகர்ந்துள்ளது என்பது தான். (இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்). அத்தகைய ஆய்வாளர்கள் சொல்வதைத் திறந்த மனதோடு செவி மடுக்க வேண்டும். இதில் முரண்பட்ட கருத்துகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

4. நான்காம் கட்ட‌ ஆய்வில் மட்டும் 1001 பானைக்கீறல்கள் கிடைத்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியது. இவற்றில் சில சிந்துவெளி பொறிப்புகளோடு ஒத்துப் போகின்றன என்பதும் கவனத்திற்கு‌‌ உரியது. சிந்துவெளி- தமிழ்த் தொடர்பை இதை வைத்து மட்டுமே வைத்து உறுதி செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் சிந்துவெளி- சங்க காலம் - தமிழக பானைக்கீறல்களை பொருத்திப் பார்ப்பது இது முதல் தடவை அல்ல. பல. அறிஞர்கள் இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். கீழடியில் இது மேலும் தெளிவாகிறது அவ்வளவுதான். அதே நேரத்தில் சிந்துவெளி பொறிப்பைப் போலவே இதன் பொருள் என்ன என்பது புரியாவிட்டாலும் இது முக்கியமான துணைச்சான்று என்பதை மறுக்கமுடியாது.

4.
கேள்வி:
கீழடியில் இதுவரை வெளியான அகழ்வாய்வுத் தரவுகளின் அடிப்படையில் அங்கு சமயம் மற்றும் இறைவழிபாட்டை முன்னிலைப்படுத்தும் தடயங்கள் கிடைக்கவில்லை என்பதை வைத்து வைகைக் கரை தமிழ்ப்பண்பாட்டு மக்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் என்ற முடிவுக்கு வர முடியுமா?

விடை :
முடியாது. ஏனெனில் கீழடியில் இது வரை தோண்டப்பட்டு இருப்பது சிறு பகுதியே. எதிர்காலத்தில் தோண்டப்படும் போது எத்தகைய சான்றுகள் கிடைக்கும் என்பதை இப்போது ஊகிக்க முடியாது.‌ அப்படியே எதுவும் கிடைத்தாலும் அடுக்கு நிலை அகழ்வாய்வின் அடிப்படையில் (Stratigraphy) எந்த அடுக்கில் என்ன கிடைக்கிறது என்பதே முக்கியமானது. அதைப் பொறுத்தே கால நிர்ணயம் மற்றும் பண்பாட்டு நிலை பற்றி முடிவு செய்வார்கள்.

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நடுகல் வழிபாடு, மரத்தில் உறையும் தெய்வம், கொல்லிப் பாவை, கானுறை தெய்வம், அணங்கு, வேலன் வெறியாட்டு போன்ற மரபுகள் பேசப்படுகின்றன. திணை சார்ந்த கருப்பொருளாகவும் கடவுளர் அடையாளம் காட்டப்படுகிறார்கள். தாய்த் தெய்வ வழிபாட்டின் மேலதிகச் செல்வாக்கும் புலனாகிறது.

ஆனால் சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ( Beliefs and Faith System) இருந்தன என்றாலும் மனித வாழ்வியலின் நடைமுறை எதார்த்தமே காத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

என்ற‌ புறநானூற்று ( 335) வரிகள் தொல்தமிழர் சமயத்தின் முன்னுரிமையைத் தெளிவாக்குகிறது. எதிரிகளிடமிருந்து தனது குடிகளைக் காக்கப் போரிட்டு மாண்ட வீரனுக்கு எழுப்பப்படும் நடுகல் தான் தமிழர் வழிபாட்டு மையப்புள்ளி என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அதுவே நீத்தார் பெருமையின் நிலைக்களன்.

எதுவாயினும் வைகை கரை தமிழ்ப் பண்பாட்டுக் காலத்தின் வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள், முன்னுரிமைகள், பற்றி எதிர்கால அகழ்வாய்வுகள் சான்றளிக்கக் கூடும்.

எனவே இதுபற்றி தீர்மானமான தீவிரக் கருத்துகளைத் தவிர்ப்பது நலம் என்று தோன்றுகிறது.

There is an aphorism, "Absence of evidence is not evidence of absence,"

"தடயம் கிட்டவில்லை என்பது தடயம் இல்லை என்பதற்கான தடயம் இல்லை"

இது சிந்துவெளிக்கும் கீழடிக்கும் மட்டும் அல்ல எந்தச் சூழலுக்கும் பொருந்தும்.

May like to google for:

Evidence of absence
Absence of Evidence

( தொடரும்...)



தேமொழி

unread,
Sep 26, 2019, 12:33:40 AM9/26/19
to மின்தமிழ்
#மீள்பதிவு 


மண்ணின் கீழ் அடியில் சென்ற கீழடி


-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.


மதுரையிலிருந்து  சுமார்  ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள கீழடியில், நடுவண் அரசின் கீழ் இயங்கும் ‘இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை’ கடந்த இரண்டாண்டுகளாக ( 2014-15, 2015-16)  மேற்கொண்ட அகழ்வாய்வின் போது வெளிப்பட்ட “பண்டைய நகரம்”, வெள்ளத்தால் மண்ணுக்கு அடியில்  புதையுண்டது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்த வெள்ளம் எங்கிருந்து வந்தது என்பதுதான் வினா? இன்றைய வைகை ஆற்றிலிருந்து கீழடி, சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளதே , இவ்வளவு தூரம் ஆற்று வெள்ளம் சென்று தாக்க இயலுமா என்றெல்லாம்  நம் அன்பர்கள் சிலருக்கு ஐயம் எழுந்துள்ளது. இந்த ஐயம் நியாயமானதே. இந்த ஐயத்தைத் தீர்ப்பதும் மிக எளிதானதே.

தடம் மாறும் ஆறுகள்:
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை ஆகிய அனைத்து ஆறுகளும் தங்கள் தடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றன.  இது ஓர் புவியியல் உண்மை. உலகம் முழுக்க இந்த வரலாறு  உண்டு. சற்று அனுபவம் உள்ள கண் கொண்டு நோக்கினால், நமது செய்கோள் பதிமங்களிலேயே இவற்றைக் கண்டறிய இயலும். சில ஆறுகள் தடம் மாறியதற்கு இலக்கிய சான்றுகளும் காட்ட இயலும். அவற்றில் ஒன்று எங்கள் கடலூர் அருகே கடலில் கலக்கும் தென்பெண்ணையாறு.

கீழடிக்கும் வைகை ஆற்றிற்கும் போகும் முன், நான் கூற வரும் ஆறுகள் தடம் மாறும் நிகழ்வை எளிதில் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, கொஞ்சம் தென்பெண்ணை ஆற்றிற்குப் போவோம். ஓரிரு சிவதலங்களையும் காண்போம்.

முதலில், திருவெண்ணெய்நல்லூர் செல்லலாம். ஆமாம், ஆமாம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை “பித்தா” என்று அழைத்துப் பாடிய திருத்தலம். முதலில் அந்தப் பாடலைப் பார்ப்போம்:

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

இந்த இனிய பாடலைப் படிக்கும் போதும், பாடும் போதும், நம் முன் சிவன் தோன்றுகிறாரோ இல்லையோ, திருவருட்செல்வர் சிவாஜி தோன்றி விடுவார். டி . எம் . எஸ். குரல் , மகாதேவன் இசை, சிவாஜியின் அருமையான முகபாவங்கள், இதை எழுதும்போது கூட எழுதுவதை நிறுத்திவிட்டு அந்தப் பாடலைப் பார்த்து விட்டுத்தான் எழுதுகிறேன். அருமை.

சரி, பாடலுக்குப் போவோம். இதில் நாம் கவனிக்க வேண்டியது பாடலின் மூன்றாவது வரி

“வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறை”

பொருள் : பெண்ணை ஆற்றின் தென்புறம் உள்ள திருவெண்ணெய் நல்லூர் எனும் துறை.

கீழேயுள்ள படத்தைப் பாருங்கள் ...



இன்றைய தென்பெண்ணை ஆறு, திருவெண்ணைநல்லூருலிருந்து சுமார் ஐந்தரை கி.மீ. தொலைவில் உள்ளது. சுந்தரர் பொய் சொல்லவில்லை. திருவெண்ணைநல்லூருக்கு உடனடி வடக்கில் ஒரு ஆறு இருக்கிறது. அதற்குப் பெயர் ‘மலட்டாறு’. தண்ணீரே இருக்காது ஆதலின் அந்தப் பெயர். எனினும் தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு  நிகழுங்காலை, மலட்டாற்றில் சிறிது நீர் வரும்.

ஆக, சுந்தரர் காலத்தில் திருவெண்ணைநல்லூருக்கு உடனடி வடக்கில் ஓடிய தென்பெண்ணை, தன் பாதையை மாற்றிக்கொண்டு, இன்று ஐந்தரை கி.மீ. தொலைவில் வடக்கில் ஓடுகிறது. அன்றைய தென்பெண்ணை இன்று மலட்டாறு எனும் பெயரில் நீரின்றி கிடக்கின்றது. பெண்ணையாறு, இடைப்பட்ட காலத்தில் தன் தடத்தை மாற்றிக்கொண்டுவிட்டது. இதற்கு சுந்தரரே சாட்சி.

அடுத்து, திருத்துறையூர் செல்வோம் வாருங்கள்.

விழுப்புரத்திற்கும் பண்ருட்டிக்கும் இடையில் உள்ள தொடர்வண்டி நிலையம் திருத்துறையூர். இறைவன் பாசுபதேஸ்வரர். இறைவி: பூங்கோதை நாயகி.

திருமணம் தவிர்த்த புத்தூரில் (இன்றைக்கு மணப்புத்தூர் என வழங்கப் படுகிறது) சுந்தரரின் மணத்தைத் தவிர்த்த இறைவன், அவரை அழைத்துக்கொண்டு   திருத்துறையூர் வரும் வழியில் கீழப்பாக்கம் எனும் இடத்தில் அவரை ஆட்கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. பெண்ணையின் தென்பால் உள்ள வெண்ணை நல்லூரிலிருந்து, வடபால் உள்ள திருத்துறையூருக்கு  ஆற்று வெள்ளம் காரணமாக செல்ல முடியாமல் சுந்தரர் தவித்தபோது, இறைவனும் இறைவியும் முதியோர் வடிவில் வந்து ஓடத்தில் ஏற்றிச் சென்றதாகவும் கதைகள் உள்ளன. இவைமூலம் நாம் அறிவது வெண்ணை நல்லூருக்கும் , திருத்துறையூருக்கும் இடையே  அந்நாளில் பெண்ணை ஓடி இருக்கிறது.

திருத்துறையூருக்கு தெற்கே  பெண்ணை ஓடியது என்பதற்கான இலக்கிய சான்றுகள் தேடி மீண்டும் சுந்தரரிடமே செல்வோம். கீழேயுள்ள தேவாரப் பாடல்கள் ஒன்பதிலும் , இரண்டாவது வரியைக் கவனியுங்கள். பெண்ணை வடபால் திருத்துறையூர்  இருந்திருப்பது தெளிவாகிறது. ஆனால் , இன்றைய பெண்ணையாறு திருத்துறையூருக்கு மூன்று கி.மீ. வடக்கே உள்ளது. திருத்துறையூருக்கு தெற்கே  மலட்டாற்றின் தடம்தான் உள்ளது.

மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்   
கலையார் அல்குற்கன் னியர் ஆடும்துறையூர்த்   
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.1

மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்      
பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்   
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.2

கந்தங் கமழ்கா ரகில்சந் தனம் உந்திச்   
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்      
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.3
              
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்       
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்    
கரும்பார் மொழிக்கன் னியர்ஆடுந் துறையூர்     
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.4

பாடார்ந் தனமாவும் பலாக்க ளும்சாடி    
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்     
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்  
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.5
              
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி    
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்   
கொட்டாட் டொடுபாட் டொலிஓவாத் துறையூர்ச்  
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.6

மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரைஉந்தித்      
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்      
போதார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர்      
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.7
              
கொய்யா மலர்க்கோங் கொடுவேங் கையுஞ்சாடிச் 
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்    
மையார் தடங்கண் ணியர்ஆடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.8
              
விண்ணார்ந்தன மேகங்கள் நின்றுபொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்     
பண்ணார் மொழிப் பாவையர் ஆடும்துறையூர்    
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.9

கீழே உள்ள படத்தை மீண்டும் பாருங்கள் ...


ஆக,பெண்ணையாறு தன் பாதையைக் கடந்த 1200 ஆண்டுகளில் மாற்றிக் கொண்டுள்ளது எனத் தெளிவாகிறது. பழைய பெண்ணையாற்றிற்கும் புது பெண்ணையாற்றிற்கும் இடையே ஐந்து கி.மீ. க்கும் அதிகமான இடைவெளி உள்ளதும் தெரிய வருகிறது.

தேவாரம் காட்டும் உண்மைகள் கூகிள் பதிமத்திலும் நன்கு தெரிவதால், நான் பெண்ணையை விளக்கினேன். இது போன்ற இலக்கிய சான்றுகள் பல இருக்கலாம். படித்தறிய வேண்டும்.

 
அடுத்த கேள்வி, தொல் வைகை ஆற்றால் அழிந்ததா கீழடி?

கீழூர் அருகே பள்ளிசந்தை திடலில், அண்மையில் அகழ்ந்தறியப்பட்ட பண்டை நகரத்தை எப்படி மண் மூடியது எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.  வைகை ஆற்றின் கரையில் இருப்பதால் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இந்நகரம் அப்படியே அழிந்திருக்கலாம்   என்பது எளிதான  விடை. வைகை ஆற்றிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளதே இவ்வளவு தூரம் வெள்ளம் வருமா என்பதும் சிலரின் ஐயம்.

இது குறித்து தொல்லியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.  தொல்லியலாய்வாளர் சாந்தலிங்கம்:

“தொல்லியல் ஆய்வாளர் என்ற முறையில் என்னால் ஒன்றை யூகிக்க முடிகிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கிபி 1650 முதல் 1700 வரையிலான காலகட்டத்தில் மதுரையை ஆண்ட அரிகேசரி என்ற மன்னன், இன்றைய குருவிக்காரன் சாலை அருகே வைகை ஆற்றில் அணை கட்டி, தண்ணீரைக் கால்வாய் வெட்டி பாசனத்திற்குக் கொண்டு சென்றுள்ளான். அந்தக் கால்வாய் கொந்தகை, கீழடி, திருச்சுழி வழியாக வீரசோழன் வரையில் இருந்திருக்கிறது. வைகையில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்தக் கால்வாய் வழியாகப் பாய்ந்து கீழடியை மூழ்கடித்திருக்கும் என்று கருதுகிறோம். ஆய்வு தொடர்ந்தால் தான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.”

இதன் அடிப்படையில் கூகிள் பதிமத்தையும் , இஸ்ரோவின் புவன் பதிமத்தையும் ஆய்ந்த போது வைகையிலிருந்து ஒரு சிறு கிளை பிரிந்து கீழடி – வீர சோழன் வழியே சென்று கடலில் கலக்கிறது. இது ஒரு கிளைநதிதானா அன்றி வைகையின் தொல்தடமா? என்பது அடுத்த கேள்வி. இந்தக் கிளை ஆற்றின் நெளிவு சுழிவுகளைக் காணும்போது இது ஓர் வெட்டப்பட்ட கால்வாயன்று, இயற்கையான வாய்க்கால்தான்  என்று தெளிவாகிறது. தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இருப்பதைப் பார்க்கையில் இது தொல்தடமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. (புவியியலாளர்களுக்கு தொல்தடங்கள் மீது எப்போதுமே ஒரு காதல் என்பது வேறு விஷயம்). இதற்கிடையில், இங்குப் பணியாற்றிய திரு அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் சொல்வதையும் கேட்போம்


பெரும்பாலான அகழ்வாய்வுக் குழிகளில் ஒரு குறிப்பிட ஆழத்திற்குக் கீழ்  ஆற்று மணல் படிவங்கள் கிடைக்கின்றன.பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு தொல்ஆற்றுத் தடம் இருந்திருக்கும் என்பதை இவை காட்டுகின்றன” (In most of the trenches, below a certain level, layers of river sand have been found, signalling the existence of paleochannels in the area many centuries ago).

ஆக, புவன் மற்றும் கூகிள் பதிமங்களில் நாம் காண்பது, தொல்லாற்றுத்தடமாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

மேலும், இந்த கீழடி- வீரசோழன் ஆற்றினை அப்படியே இழுத்து கடலுக்குக் கொண்டுபோனால் அங்கே நம்மை வரவேற்க, ஒரு பவளத் தீவு திட்டும் காத்திருக்கிறது. 

இந்த தொல் ஆற்றுத் தடம் அகழ்வாய்வுக் குழிகளில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குக் கீழ்  உள்ளதால், இது இந்தப் பண்டை நகரம் உருவாகும் முன்பே இருந்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதனால் நகரம் அழிந்திருக்க வாய்ப்பில்லை.

பிறகு என்னதான் ஆனது?




 ________________________________________________________ 
  
________________________________________________________ 

இசையினியன்

unread,
Sep 26, 2019, 12:52:53 AM9/26/19
to மின்தமிழ்
https://www.theweek.in/news/india/2019/09/23/keezhadi-excavation-its-different-dimensions-hindi-imposition-debate.html


Keeladi excavation and different dimensions of the 'language war'

“The findings have again proved that Tamil is the oldest language"

Web Desk September 23, 2019 14:31 IST
keezhadi-siteKeeladi excavation site

On September 19, the Tamil Nadu Archaeological Department (TNAD) released a report Keeladi-An Urban Settlement of Sangam Age on the Banks of River Vaigai. The report reveals "cultural deposits", which were discovered in excavations in Keeladi near Sivaganga in Tamil Nadu, were dated to a period between "6th century BCE and 1st century CE".

The products could be dated as far back as 580 BCE, the report noted. The evidence provided by the dig: A settlement by the Vaigai plains, which was urbanised in Tamil Nadu around 6th century BCE.

The report found: The recent scientific dates obtained for Keeladi findings push back the date of Tamil-Brahmi to another century—6th century BCE. These results clearly ascertained that they attained the literacy or learned the art of writing as early as 6th century BCE. In short, the Sangam era, which marked the largest social and cultural developments in Tamil Nadu, could be much earlier than 300 BCE when it was assumed to have commenced.

Another finding: But it is to be noted that this site didn’t yield any objects meant for worship so far. This has sparked a debate on the historical connotations of the findings, and the larger political aspect.

First, a short history primer, with regards to a THE WEEK report on two scientific papers in Science and Cell. Genetic and archaeological studies have long indicated three major waves of migration into India. The first one is the Out-of-Africa (OoA) migration that gave us the earliest Indians 60,000 years before.

Secondly, in the early Neolithic period, it was believed there was an influx of Iranian farmers from the Zagros region, mixing with the earliest Indians to produce a population strain commonly known as the Ancestral South Indians (ASI). The latter largely populated the Harappan civilisation, spread over 2600 and 1900 BCE, and considered one of the largest urban societies of its time with Dholavira in Gujarat, Mohenjo Daro in Sindh and Rakhigarhi in Haryana as some of its major centres.

Thirdly, in the turn of the second millennium (2000 BCE), when the IVC was in a stage of decline, traditional literature claims an influx of central Asian Steppe pastoralists (referred to as the Aryans), who brought with them Vedic culture and Indo-European languages including the first iterations of Sanskrit. ASI mingled with the pastoralists, producing a second population strain, Ancestral North Indians (ANI).

Almost all mainland Indians are a mix of ANI and ASI in differing proportions. The steppe ancestry is more pronounced in sections of traditional upper castes, as David Reich, geneticist at the Harvard Medical School, wrote in his study Reconstructing Indian Population History. The reports in Science and Cell found incontrovertible evidence for an 'Aryan movement' post the decline of the IVC: Steppe pastoralist ancestry is absent in the Harappans. This could bear out the inference that the ‘Aryans’ arrived at the later, declining stages of the IVC.

Coinciding with the arrival of the pastoralists, we find a south-eastern movement of the IVC people. That is, they are believed to have moved to an area that is now commonly referred to as south India. Where they migrated to was the big question, with ancient urban settlements not forthcoming in archaeological excavations. Until Keeladi, that is.

The political repercussions are manifold. A recent National Education Policy draft required students in non-Hindi-speaking states to study Hindi and English, along with their regional language. Parties in Tamil Nadu, including the DMK, on Saturday strongly opposed the three language formula, alleging it was tantamount to "thrusting" Hindi and wanted it junked. The issue had led to a major wave of 'anti-Hindi imposition' protests, with the Centre acquiescing in the end by amending the portion. Parties like DMK led by M.K. Stalin and MNM, led by Kamal Haasan, were at the forefront of the agitations.

The findings by the Tamil Nadu archaeological department buttress that long-held belief of the Dravidian parties that the Indus Valley Civilisation script was proto-Dravidian, related to Tamil, as opposed to Sanskrit (Prakrit) as some studies put it. To put it simplistically, this is the very essence of the Dravidian-Aryan debate in India.

Even much earlier, there have been speculations that the Harappans spoke a language resembling the now-defunct Iranian Elamite, which was hypothesised to be related to the Dravidian languages now spoken mainly in south India. Even now, Brahui—a Dravidian family language—is spoken in Balochistan. But, with the Indus Valley Script still undeciphered, no solid proof could be offered to back up the claims. The presence of Tamil-Brahmi in the 6th century BCE urban settlement could be a game changer in that regard.

Politically, Keeladi was always significant. A year back, Stalin had shot off a letter to Culture Minister Mahesh Sharma, seeking action on "stalled excavation" at Keeladi. Several personnel had even faced controversial transfers from the site. "While people of Tamil Nadu were anxiously waiting to know the true and ancient history of the state, in a sudden and surprise move, Archaeological Survey of India has been refused fund and permission to continue the excavation—though in northern and eastern States such excavations are being allowed liberally to continue even for more than ten years. People of the state were not only agitated over this calculated denial, but it also has become a great shock and disappointment to the people," he had then said.

"Each and every one in the state suspects whether the Central advisory board of archaeology is attempting to scuttle the excavations that will bring to light the prestigious and true history belonging to the people of Tamil Nadu. I sincerely hope that you will appreciate the fact that the sentiments of the people should not be in any way hurt by such unilateral and unjust decision of Central Board of Archaeology of India."

After the archaeology department report, Stalin reportedly wanted the BJP government at the Centre to ensure that the Keeladi site was declared a "protected monument" and an “international museum set up to display exhibits”.

Madurai MP Su Venkatesan, a CPI leader and state committee member, and one of the most vocal proponents for the continuation of Keeladi excavation, told The New Indian Express, “The findings have again proved that Tamil is the oldest language and the similarities in the markings discovered in Keeladi and Indus Valley are new keys to rewrite Tamil history.” The CPI(M) has urged the State and Centre to take steps to expand the excavation at Keeladi to bring to fore the site’s archaeological richness. CPI(M) Tamil Nadu State Secretary K. Balakrishnan expounded upon the necessity to expand excavation at the site.

இசையினியன்

unread,
Sep 26, 2019, 1:01:58 AM9/26/19
to மின்தமிழ்
இந்த இழையில் ஐந்தாம் கட்ட அகழாய்வு கட்டுரைகள் மட்டுமா தொகுக்கப்படுகின்றன?

?

unread,
Sep 26, 2019, 1:19:45 AM9/26/19
to Mintamil, isaiyini
https://timesofindia.indiatimes.com/city/chennai/sangam-age-is-older-than-previously-thought-carbon-dating-of-keeladi-materials-suggests/articleshow/71200476.cms

Keeladi excavation site
CHENNAI: Sangam age is generally considered between 300 BC and 300AD. But the Sangam age materials unearthed from the Keeladi excavation site in Sivaganga district of Tamil Nadu could be dated between 600 BC and 100 AD, scientific examinations have suggested.
The Tamil Nadu state archaeology department that conducted the excavations released the findings on Thursday, after analysing the AMS (accelerator mass spectrometry) dates obtained from Keeladi materials.
Six carbon samples collected from Keeladi were sent to Beta Analytic Lab in the US for AMS dating. The dates of all six samples fell between the 6th century BC and 3rd Century BC, said commissioner of department of archaeology T Udhayachandran. The result was released after consulting scholars like K Rajan, who also agreed that Keeladi presented strong evidence to some of the hitherto held hypotheses.
“The results suggest that the urbanisation of Vaigai plains happened in Tamil Nadu around 6th century BCE as happened in the Gangetic plains. Likewise, the recent scientific dates obtained for Keeladi findings push back the date of Tamil-Brahmi to 6th century BC,” he said.
These results clearly ascertained that the people who lived in Keeladi attained the literacy or learned the art of writing as early as 6th century BC. The new findings prove that a well advanced urban habitation exited in Keeladi from 600 BC.
Trace of agrarian society and cattle rearing were also noticed. The 70 samples of skeletal fragments collected from Keeladi had been sent to Pune’s Deccan College to analyse the faunal remains.
“Species such as cow, ox, buffalo, sheep, goat, nilgai, blackbuck, wild boar and peacock were identified from the skeletal remains. There was no trace of big animals like elephant. Some skeletal remains are yet to be identified,” he said.
Minister for Tamil official language and Tamil culture K Pandirajan said the new findings would redefine the Sangam era. “It’s a great achievement in the history of the department,” he said after releasing a book on Keeladi. This is the first time a book on Keeladi has been brought out by the department after it began excavation on the site in 2017.

Responding to a question, Pandirajan said the government would open a site museum at Keeladi in March 2020.
Excavation in Keeladi was first conducted by the Archaeological Survey of India’s excavation branch (Bengaluru) in 2014.

தேமொழி

unread,
Sep 26, 2019, 1:29:43 AM9/26/19
to மின்தமிழ்


On Wednesday, September 25, 2019 at 10:01:58 PM UTC-7, இசையினியன் wrote:
இந்த இழையில் ஐந்தாம் கட்ட அகழாய்வு கட்டுரைகள் மட்டுமா தொகுக்கப்படுகின்றன?

கீழடியின் நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியான பிறகு....அது தொடர்பான விவாதங்களும் கருத்துகளும் கொண்ட காணொளிகளும் கட்டுரைகளும் கூட உள்ளன.

அதாவது...கீழடி 5 கட்ட அகழாய்வுக் காலத்தைய  நடவடிக்கைகள் குறித்த ஒரு தொடர் இழை எனக் கொள்ளலாம்  

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Sep 26, 2019, 1:47:33 AM9/26/19
to mint...@googlegroups.com
கிருஸ்துவுக்குமுன் - இருந்த நாகரிகச் சிறப்பை அறிகிறோம்.  "உரையாடல் தடம் மாறிச் செல்லக்கூடாது" உண்ம். 

வியா., 26 செப்., 2019, முற்பகல் 10:03 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 26, 2019, 6:41:58 PM9/26/19
to மின்தமிழ்


On Wednesday, September 25, 2019 at 10:29:43 PM UTC-7, தேமொழி wrote:
கீழடியின் நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியான பிறகு....அது தொடர்பான விவாதங்களும் கருத்துகளும் கொண்ட காணொளிகளும் கட்டுரைகளும் கூட உள்ளன.
அதாவது...கீழடி 5 கட்ட அகழாய்வுக் காலத்தைய  நடவடிக்கைகள் குறித்த ஒரு தொடர் இழை எனக் கொள்ளலாம்  


மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்...



26 Sep 2019

கீழடி: திமிறும் காளை 

keezhadi-excavation

சு.வெங்கடேசன்

உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் காலகட்டத்திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும் என்பதையும் இங்கு நாம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

மூன்று கட்ட ஆய்வுகள்

நான்காண்டுகளாக கீழடியில் ஆய்வு நடந்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறை முதல் மூன்றாண்டுகள் ஆய்வுகளை நடத்தியது. அதில் முதல் இரண்டு ஆண்டுகள் ஆய்வுகளை நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு 102 குழிகள் அகழ்ந்தது. அவற்றில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், 2017 பிப்ரவரியில் இடைக்கால அறிக்கை கொடுத்தார் அமர்நாத் இராமகிருஷ்ணன். ‘தமிழகத்தில் முதன்முறையாக நகர நாகரிகத்துக்கான விரிவான கட்டுமானங்கள் கிடைத்திருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டார்.

விரைவிலேயே அவர் பணியிடம் மாற்றப்பட்டார். மூன்றாவது ஆண்டில் ஆய்வுகளை நடத்திய ஸ்ரீராமன், வெறும் 10 குழிகளை மட்டுமே அகழ்ந்தார். ‘புதிய ஆதாரங்களோ, கட்டுமானத்தின் தொடர்ச்சியோ கிடைக்கவில்லை; புதிய சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை’ என்று ஒரு பக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அவர் அனுப்பினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கீழடி ஆய்வை முடித்துவிட்டு வெளியேறியது மத்திய தொல்லியல் துறை.

இந்தக் கட்டத்திலிருந்துதான் நான்காம் ஆண்டில் சிவானந்தம் தலைமையில், தன்னுடைய அகழாய்வைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 34 குழிகளில் நடத்தப்பட்ட இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகளை உயரிய ஆய்வு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி, அவர்கள் அளித்த மதிப்பீட்டின்படியே தன்னுடைய அறிக்கையை அது சமீபத்தில் சமர்ப்பித்தது.

ஒரு ஆண்டில் கிடைத்த சான்றுகளே மறு ஆண்டும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. முதல் ஆண்டில் விரிவான ஆதாரங்கள் கிடைத்து, மறு ஆண்டில் எதுவும் கிடைக்காமலும் போகலாம். ஆய்வு என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், சான்றுகள் என்று எது கருதப்படுகிறதோ அது கிடைத்த இடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு சம முக்கியத்துவம் பெற்றதுதான் கிடைக்காத இடமும். சான்றுகள் கிடைத்த இடத்துக்கும் கிடைக்காத இடத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி தொல்லியல் அறிஞர்கள் விவாதிக்கட்டும். நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, இந்த அறிக்கைகள் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவுகள் தொடர்பில்தான்.

சர்ச்சைகளும் முடிவுகளும்

ஏற்கெனவே, கீழடி ஆய்வில் தீவிரமான ஆர்வம் காட்டிவந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டது உள்ளூர் மக்களிடம் அதிருப்தியையும் சந்தேகத்தையும் உண்டாக்கிய நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற ஸ்ரீராமன், கீழடி ஆய்வையே முடிக்கும் அளவுக்குக் கொடுத்த அறிக்கையையேனும் மத்திய அரசு கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். “ஒரு வருஷம் முழுக்கவுமே வெறும் 10 குழிகள் அளவுக்கு மட்டுமே அகழாய்வு நடத்த முடிந்ததா? ஓராண்டில் இந்த ஆய்வுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கூட நீங்கள் ஏன் செலவிடவில்லை? இன்னும் கொஞ்சம் முயன்றுபார்க்கலாமா?” என்றுகூடக் கேட்காமல் ஸ்ரீராமன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அப்படியே கீழடியைக் கைவிட்டது மத்திய அரசு.

இப்போது மாநிலத் தொல்லியல் துறை நடத்தியிருக்கும் ஆய்வு கீழடியின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணர்த்தியிருக்கும் சூழலிலேனும், கீழடியை இனி கூடுதல் முக்கியத்துவத்துடன் அணுக முற்பட வேண்டும். முழு ஆய்வையும் முடிக்காமல் ஒரு அதிகாரி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆய்வை முடித்துக்கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும்.
கீழடியில் உள்ள தொல்லியல் மேடு என்பது தனித்த ஒன்றல்ல, 110 ஏக்கர் கொண்ட அம்மேட்டுக்குப் பக்கத்தில் 90 ஏக்கரில் இன்னொரு மேடு உள்ளது. கீழடியைச் சுற்றி கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய கிராமங்களும் இதே அளவு தொல்லியல் எச்சங்களோடு உள்ளவை என்று கருதப்படுபவை.

இவை அனைத்தும் ஒரே குவிமைய நிலப்பரப்பு என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியதாகும். ஒரு பெரும் நீர்நிலையைச் சுற்றிய நிலவியல் அமைப்பாக இது இருந்திருக்கலாம். வைகையின் நீரைக் கால்வாய் வழியாக இரண்டு கிமீ தூரம் பிரித்து வந்து, நீர் தேக்கி வேளாண்மையில் ஈடுபட்டவர்களாக அங்கு வாழ்ந்தவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இவையெல்லாம் தொடர் ஆய்வுகளில் நிறுவப்பட வேண்டியவை.

இரு கோரிக்கைகள்

ஆகவே, கீழடியைச் சுற்றியுள்ள இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் பணி முதன்மையானது. உத்தர பிரதேசத்தில் பாக்பத்தில் உள்ள சனவுலி கிராமத்தில் 28.67 ஏக்கர் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட நிலமாக சில நாட்களுக்கு முன் மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். அங்கு கடந்த ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் பழங்காலச் சவப்பெட்டிகளும் கல்லறைகளும் கிடைத்துள்ளன. அவற்றின் காலத்தைக் கணிக்கக் காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் முடிவுகள் வருவதற்கு முன்பே அவ்விடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது மத்திய தொல்லியல் துறை.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும் கட்டுமானச் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகளை அனுப்பி, கால நிர்ணயம் செய்யப்பட்ட கீழடியின் ஆய்வுக்குரிய நிலம் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்து, கீழடியில் சர்வதேசத் தரத்தில் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட வேண்டும். கீழடியில் ஆய்வு தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில், அகழாய்வு தொடங்கப்பட்டதும் பிரதமர் மோடியின் சொந்த நகரமான குஜராத்தின் வட் நகரில் இதுவரை கிடைத்த பொருட்களைக் கொண்டு, சர்வதேசத் தரத்தில் மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்க சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை மத்திய தொல்லியல் துறை கோரியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டலாம். மத்திய அரசிடம் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவது மாநில அரசின் கடமையும்கூட.

கீழடியில் கிடைத்த எலும்பை டெக்கான் கல்லூரிக்குப் பகுப்பாய்வுக்கு அனுப்பியதில், அது திமிலுடைய காளையின் எலும்பு என ஆய்வு முடிவுகள் கூறுவதாகச் சொல்கிறது தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை. வைகை நதியிலிருந்து கீழடியின் வழியே மேலேறும் திமிலுடைய காளை தமிழின் குறியீடு!

- சு.வெங்கடேசன்,

சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ நாவலின் ஆசிரியர். 

தேமொழி

unread,
Sep 27, 2019, 6:26:09 PM9/27/19
to மின்தமிழ்


கீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பெண்

-மரிய மைக்கேல், பிபிசி தமிழ், 27 செப்டம்பர் 2019


வழக்கறிஞர் கனிமொழி மதி

இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.

இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி அகழ்வாய்வை, தமிழக அரசே நடத்தவும், அங்கு கிடைத்த பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க இடம் ஒதுக்கப்படவும் வழக்கறிஞர் கனிமொழி மதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடுத்த பொதுநல வழக்கும் முக்கிய பங்காற்றியது.

கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதில் முக்கியமான பங்காற்றியுள்ள வழக்கறிஞர் கனிமொழி மதியை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.

கீழடியில் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருந்தபோதுதான், அது பற்றிய செய்திகள் வெளிவந்ததை பார்த்து வியப்படைந்துள்ளார் வரலாற்று மாணவியான கனிமொழி மதி.

திண்டுக்கல் பக்கத்திலுள்ள கிராமம் ஒன்றுதான் சொந்த ஊர் என்பதால் மதுரை பக்கத்திலுள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி என்றவுடன் இவருக்கு ஆர்வம் மேலிட்டுள்ளது.

கீழடியில் கட்டட சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கேள்விப்பட்டபோது இவரது ஆர்வம் இன்னும் அதிகமானது" என்கிறார் கனிமொழி.

கீழடி அகழாய்வில் கிடைத்தது என்ன?
கிணறு அமைப்பு, குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவது, கொண்டு செல்வது போன்றவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அங்கு சென்று பார்த்துள்ளார்.

இதற்குப் பிறகு நடக்கும் தொல்லியல் ஆய்வுகளில் இன்னும் அதிகமானவை கண்டுபிடிக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், அகழ்வாய்வு தொடராமல் இருந்ததும், கீழடியில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைக்காமல் எடுத்து செல்ல முற்பட்டதையும் பார்த்து தாம் ஆதங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கனிமொழி.

பின்னர் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் அவர்.

கல்லூரி நாட்களில் அருட்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருட்களை பற்றி அறிந்து வைத்திருப்பதால், இந்த பொருட்களை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டால், அவற்றை திருப்பி கொண்டுவர மிகவும் கடினம் என அவருக்கு புரிந்தது.

எனவே, பொருட்களை எடுத்து செல்வதை தடுத்து, உள்ளூரில் வைத்து காக்க ஏற்பாடு செய்யும் நோக்கத்தோடு இந்த பொதுநல வழக்கை தொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போதைய மக்கள் படிப்பறிவோடு வாழ்ந்து வந்துள்ளனர் என்கிற முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதை பார்த்து பெருமகிழ்ச்சியடைவதாக கனிமொழி தெரிவித்தார்.

அக்கால மக்கள் எதார்த்தமாக, சாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், நாம் கடைபிடிக்கும் சில மூடநம்பிக்கைகளால் எதார்த்தமான வாழ்க்கையை தொலைத்துவிட்டோமோ எண்ண தோன்றுகிறது என்கிறார் அவர்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புறநானூற்றுப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மனிதரை மதிக்கக்கூடிய அக்கால மக்களின் வாழ்வை இந்த பாடல் உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.

அறிவியல் கருத்துகளை எதார்த்தமாக உள்வாங்கி கொண்டு வாழ்ந்த சமூகமாக 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த சமூகத்தின் அடிப்படை இருந்திருக்கிறது என்றால், இந்த காலத்திற்கு பின்னர் வாழ்ந்தவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய, இந்த கீழடி கண்டுபிடிப்பு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று கனிமொழி தெரிவித்தார்.

இந்த பொதுநல வழக்கில் பெரிய தடைகளை எல்லாம் சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர், இந்த வழக்கை மதுரையில் தொடர வேண்டியிருந்தது என்பதால், கடைசி நேரத்தில் அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வருவது தெரியவந்தபோது, அன்றைய நாளில் சரியாக ஆஜராவதில் சில சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார் கனிமொழி.

ஆனால், இந்த பொதுநல வழக்கு ஒரு நாள் கூட பாதிப்பு இல்லாமல் நடைபெற வேண்டும். தனிப்பட்ட வழக்குகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஒருநாள் கூட ஆஜராகாமல் இந்துவிட கூடாது என்பதில் தான் மிகவும் கவனமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஏதாவது சிக்கல் என்றால், அது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே பாதிப்பு என்பதால் ஒவ்வொரு நாளும் சரியாக இந்த வழக்கில் ஆஜரானதாக கூறினார் கனிமொழி.

மதுரையில் தனக்கு முத்துமணி என்ற வழக்கறிஞர் உதவியதாகவும் அவர் கூறினார்.

"மத்திய தொல்லியல் துறை எங்கு அகழ்வாராய்ச்சி செய்தாலும், அறிக்கை வெளியிடுவதில்லை. ஆதிச்சநல்லூரில் இந்த நிலைதான் ஏற்பட்டது. மாநில அரசு தமிழகத்திலுள்ள பல இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, வரலாற்று புதையல்களை வெளிக்கொணர செய்வதே தனது நோக்கம்," என்கிறார் வழக்கறிஞர் கனிமொழி மதி.

யார் இந்த கனிமொழி மதி?
திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தேவத்தூர் கிரமத்தை சேர்ந்தவர் கனிமொழி மதி. எட்டாம் வகுப்பு வரை அதே கிராமத்தில் பயின்றுவிட்டு, 12ம் வகுப்பு வரை திண்டுக்கல்லில் கல்வி கற்றுள்ளார்.

திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியில் வரலாறு படித்து விட்டு, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.

மூத்த வழக்கறிஞர்களோடு எட்டு ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு, 2009ம் ஆண்டு தனியாக வழக்குகளை எடுத்து வாதிட தொடங்கியுள்ளார்.

"எனது தந்தை, பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர் என்பதால், அதிக புத்தகங்கள் வீட்டில் இருந்தன. அவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது," எனத் தெரிவித்தார் கனிமொழி.

மேலும், பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்று கொடுப்பதிலும் இவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

தேமொழி

unread,
Sep 28, 2019, 2:59:35 AM9/28/19
to மின்தமிழ்

கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . . 

 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.

தொடர்ச்சி....

5

கேள்வி :

கீழடியில் கிடைத்திருக்கிற எழுத்து‌ப் பொறிப்புகள் ஏராளமாகக் பானைக்கீறல்கள் எதைக்காட்டுகின்றன? சங்க காலக் கல்விப்பரவலாக்கத்திற்கு இதை ஒரு அடையாளமாகக் கருத இடமுண்டா?


விடை:

உறுதியாக.‌ கீழடி எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டதாக கருதப்படும் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டா, ஐந்தாம் நூற்றாண்டா என்பதை விட முக்கியமானது இது தமிழக மண்ணில் முதல் கண்டுபிடிப்பு அல்ல என்பதும் தான். இது தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன அவற்றின் காலகட்டம் கி.மு. மூன்றாம் - ஐந்தாம் காலகட்டத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. எனவே இது முதல் முறை அல்ல; இதன் கால நிர்ணயம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது தான் புதிய தகவல்.

ஆனால் என் மட்டில் நான் அதை விட முக்கியமானக் கருதுவது கீழடி வாழ்வியலுக்கும் சங்க இலக்கியத்திற்கும் இடையிலான இணக்கம்.


கல்விப் பரவலாக்கத்தின் முதல் உரைகல் ( you can say " litmus test") கருத்தியல் அடிப்படையிலும் நடைமுறை எதார்த்தத்திலும் கல்வி அனைவருக்குமானதா என்பதே ‌ ஆகும்.

கீழடி பானைக் கீறல்களும் "தமிழி" எழுத்துகளும் யாரால் கீறப்பட்டது அல்லது எழுதப்பட்டது என்பதும் முக்கியம். இவை பேரரசர்களின் கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இல்லை. இதில் "அரசாங்கத்தின்" கரங்கள் இல்லை.


அது பானையை வனைந்த‌ குயவன் எழுதியது என்றால் அது "முதுவாய் குயவ" ( Potter of the ancient wisdom ) என்ற சங்க இலக்கியப் பதிவுக்கு கிடைத்த சான்றிதழ். அது பானையை வாங்கிய பலராலும் எழுதப்பட்டது எனில் அது கல்விப் பரவலாக்கத்திற்கு உரைகல்.


இத்தகைய கல்விப்பரவலாக்கத்திற்கு சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலின் அறிவு சார்ந்த அணுகுமுறை ( Knowledge based approach) முக்கியக் காரணம் ஆகும்.


இதற்கு புறநானூற்றில் வரும் ஒரு பாடல் ஒரு சோற்றுப் பதம். இதோ அந்தப் பாடல். ( புறநானூறு 183)

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"

—(புறம்-183)

அப்போதே "வேற்றுமை தெரிந்த" சமூகப் படிநிலை முறைகள் தலைதூக்கி இருக்கவேண்டும். ஆனால் கவிஞனாகிய தமிழ் மன்னன் அதிலும் ஆரியப் படை கடந்தவன் என்று பெயர் சூட்டிக் கொண்டவன் (நெடுஞ்செழியன் என்ற பெயர் தொல் தமிழ்க் கல்வெட்டிலேயே வருகிறது) அறிவுடையோன் காட்டும் வழியில் தான் தனது அரசு செல்லும் என்று தனது கவிதையின் மூலம் அறிவிக்கிறான். கல்விப்பரவலாக்கத்திற்கான அரசு சார்ந்த / ஆவணப்படுத்தப்பட்ட முதல் குரல் எனக்குத் தெரிந்த வரையில் இது தான்.


இந்த அறிவிப்பு எதிர்பார்ப்போ புனைந்துரையோ இல்லை என்பதை சங்க இலக்கியப் புலவர்களின் சமூகப்பின்னணிகளே சான்றளிக்கும் .

கொற்றவனும்...குயத்தியும்...
கணியனும்...கணக்காயனும்...
குறமகளும்..‌கொல்லனும்...
வணிகனும்..வண்ணக்கனும்...
சேரனும் சோழனும் பாண்டியனும்...
கூடிப் பாடிய கூட்டியக்கம் தான் சங்கத்தமிழ் என்ற ஆவணக்களஞ்சியம்.


கீழடியில் வெளிவரும் எழுத்துப் பொறிப்புகளும் குயவரோ பானை உரிமையாளரோ கீறிய‌ பானைக் கீறல்களும் இந்தக் கருத்தியலின் இன்னொரு உடல் மொழிதான்.

இன்னொரு வகையில் சிந்துவெளி வாழ்வியலும் சங்க இலக்கிய வாழ்வியலும் தொன்மத்தின் தொடர்ச்சியாக அடிக்கோடிடும் இயக்கங்களில் / இணக்கங்களில் இதுவும் ஒன்று.

எனவே கீழடிப் பானை எழுத்துகள் கீறல்கள் கல்விப்பரவலாக்கத்திற்கு சான்று என்பது சரியான வாதமே.




( தொடரும்...)






?

unread,
Sep 28, 2019, 1:51:33 PM9/28/19
to mint...@googlegroups.com, isaiyini
கீழடி , மறைக்கப்படும் தமிழரின் பெருமை, கதைகளின் கதை, நியூஸ் 7


https://m.youtube.com/watch?v=pRTQ4wNCyh0

தேமொழி

unread,
Sep 28, 2019, 3:36:19 PM9/28/19
to மின்தமிழ்

கீழடி பற்றி இன்று நக்கீரனுக்காக பதிவு செய்யப்பட்ட எனது பேட்டி



About this website
#Nakkheeran #கீழடி_தமிழர்_நாகரிகம் #KeezhadiTamilCivilization #Keezhadi NKN2 Subscribe to Nakkheeran TV http://bit.ly/1Tylznxwww.Nakkheeran.in Social media ...
*******

N. Ganesan

unread,
Sep 29, 2019, 12:48:34 AM9/29/19
to மின்தமிழ், vallamai
தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன்,
கீழடி அகழ்வாய்வு தமிழக அரசு எப்படி நிதி வாங்கியது
என்பது போன்ற செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்:


நா. கணேசன்
 
Message has been deleted

தேமொழி

unread,
Oct 1, 2019, 5:43:52 PM10/1/19
to mint...@googlegroups.com
source: https://www.bbc.com/tamil/india-49888909

கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி? 

முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன?



மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டில் நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அந்த இடத்தை முதன்முதலில் கண்டுபிடித்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உடன் கீழடி குறித்தும் அங்கு அவர் நடத்திய ஆய்வுகள், கிடைத்த பொருட்கள் குறித்தும் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கே. கீழடி தொல்லியல் மேடு எப்படி அடையாளம் காணப்பட்டது?

ப. இதற்கு முன்பாக அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் என மூன்று பெரிய அகழாய்வுகள்தான் நடந்திருக்கின்றன. இதைத் தவிர விரிவான ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை. அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும்விதத்தில்தான் ஓர் ஆய்வை மேற்கொள்ள முடிவெடுத்தோம். இதற்கு முன்பாக ஆற்றங்கரையில் சில இடங்களில் அகழாய்வு நடந்திருக்கின்றன என்றாலும் பெரிய அளவில் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆகவே எங்களுடைய நோக்கம் ஆற்றங்கரையில், மக்கள் வாழ்ந்த இடங்களைக் கண்டறிய வேண்டும் என்பதாகவே இருந்தது.

2013-14ல் பெங்களூரில் இருந்த இந்தியத் தொல்லியல் துறையின் ஒரு சிறிய அணியைச் சேர்ந்த நாங்கள் இந்தப் பணியில் இறங்கினோம். அந்த அணியில் நான், ராஜேஷ், வீரராகவன் ஆகிய உதவி தொல்லியலாளர்கள், பேராசிரியர் வேதாச்சலம் என்ற கல்வெட்டாளர், ஆறு ஆராய்ச்சி மாணவர்கள் இருந்தோம்.

தமிழகத்தில் வைகைதான் மிகப் பழமையான நதி. 250 கி.மீ. தூரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் வைகை பாய்கிறது. அதில் குறிப்பாக எட்டு கி.மீ. தூரத்தை நாங்கள் தேர்வுசெய்தோம். அதில் நதியின் இருபுறங்களிலும் 293 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் மக்கள் வாழக்கூடிய பகுதிகள், பெருங்கற்கால புதைமேடுகள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோவில்கள், சத்திரங்கள் என பல தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.

இந்த 293 இடங்களும் ஆவணப்படுத்தப்பட்டன. எங்களுடைய நோக்கம் ஒரு வாழ்விடப் பகுதியைத் தேடுவதாகத்தான் இருந்தது. இந்த 293 இடங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடப் பகுதிகள் கிடைத்தன. மதுரையைப் பற்றி ஆய்வு நடத்துவது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், மதுரை நகருக்குள் அந்த ஆய்வை நடத்த இடம் ஏதும் இல்லை. அங்கு தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே மதுரைக்கு வெளியில்தான் அந்த ஆய்வைச் செய்ய வேண்டியிருந்தது.

முடிவில் மூன்று இடங்கள் இறுதிப்படுத்தப்பட்டன. ஒன்று மதுரைக்கு மேற்கே இருந்த சித்தர் நத்தம். இந்த இடம் நகரில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கீழடி மதுரைக்கு கிழக்கே 12 கி.மீ தூரத்தில் இருந்தது. மற்றொரு இடம் மாற நாடு. இது மதுரைக்குக் கிழக்கே 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த மூன்று இடங்களிலும் உள்ள தொல்லியல் மேடுகளை ஆய்வுசெய்தபோது, கீழடி சரியான இடமாகப்பட்டது. தென்னந்தோப்புகளால் சூழப்பட்டிருந்த அந்த இடம் கடந்த நாற்பதாண்டுகளாக யாராலும் சிதைக்கப்படாத ஒரு பகுதியாக இருந்தது. ஆகவே இந்த இடத்தைத் தேர்வுசெய்தோம்.

2014-15ல் மார்ச்சில் முதல் ஆய்வு தொடங்கப்பட்டது. அப்போது மக்கள் வாழ்ந்த ஒரு பகுதி (habitation site) முழுமையாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை பெரும்பாலும் புதைமேடுகளே அகழாய்வில் கிடைத்துவந்தன. கீழடி அந்த நிலையை மாற்றியது. 2014-15, 2015-16 என இரு கட்டங்களாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இரண்டாவது ஆய்வில் மிகப் பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக நடந்த ஆகழாய்வில் வாழ்விடப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இதுபோல பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் எங்கேயும் கிடைக்கவில்லை. அதுதான் கீழடியை மிக முக்கிய இடமாகக் கருதுவதற்கு காரணமாக அமைந்தது.


கே. தமிழகத்தில் இதற்கு முன்பாக வேறு எங்கு கட்டடப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன?

ப. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், திருக்காங்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்திருக்கின்றன. ஆனால், இவை எல்லாமே சிறிய அளவிலானவை. பெரிய அளவில் கட்டடப் பகுதிகள் கிடைக்காததால், தமிழகத்தில் நகர நாகரிகமே கிடையாது என்று சொல்லிவந்தார்கள். செங்கல் பயன்பாட்டை வைத்துத்தான் ஓர் இடம் நகரப் பகுதியா, கிராமப் பகுதியா என முடிவுசெய்யப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் செங்கலால் ஆன கட்டடத் தொகுதிகள் கிடைக்காது. நகர்ப்புற பகுதிகளில் செங்கலால் ஆன கட்டடத் தொகுப்பு இருக்கும். இங்கு அப்படியான கட்டடத் தொகுதிகள் கிடைத்ததால்தான் இதை நகர்ப்புறப் பகுதி என முடிவெடுத்தோம்.

இது வைகை நதி நாகரிகத்தின் முதல் எச்சம்தான். இன்னும் நூறு இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டினால்தான் மிகப் பெரிய நாகரிகம் இருந்ததா என்பது குறித்து தெரியவரும். சிந்துவெளி நாகரிகம் என்பது ஹரப்பாவை வைத்து மட்டும் சொல்லப்படவில்லை. அதைத் தொடர்ந்து பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அது நாகரிகமாக கருதப்படுகிறது. கீழடியைத் தொடர்ந்து பல இடங்களில் தோண்டி, தொடர்புகளை உறுதிப்படுத்தும்போது இதை ஒரு நகர நாகரிகமாக அழைக்கலாம். ஆனால், கீழடி ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை.

டி. கல்லுப்பட்டியில் 1947ல் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அங்கே கிடைத்த பானை ஓடுகளும் இங்கே கிடைத்த பானை ஓடுகளும் ஒன்றுபோல இருக்கின்றன. ஆகவே இவை எல்லாம் சேர்ந்து ஒரே நாகரிகம் என்ற அனுமானத்திற்கு வருகிறோம்.


கே. 2014-15, 2015-16 ஆகிய இரண்டு தடவைகளாக நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் உங்களுக்குக் கிடைத்த முடிவுகள் என்ன?

ப. நாங்கள் ஒரு மக்கள் வாழ்விடப் பகுதியைக் கண்டறிந்திருக்கிறோம். அந்த வாழ்விடப் பகுதியில் செங்கற்களால் ஆன விரிவான கட்டட அமைப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மக்கள் வளமையாக வாழ்ந்ததற்கான தொல்பொருள் ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. கீழடியில் கிடைத்த அனைத்துப் பொருட்களும் முழுமைபெற்ற பொருட்கள்.

கீழடி ஒரு தொழில்பகுதியாக இருக்கலாமோ என தற்போது விவாதிக்கப்படுகிறது. ஆனால், அப்படிக் கருதவதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. தொழிற்பகுதியாக இருந்தால், மூலப் பொருட்கள், மீந்த பொருட்களின் எச்சங்கள் கிடைக்கும். அப்படி ஏதும் எங்கள் ஆய்விலும் கிடைக்கவில்லை. இப்போதைய மாநில அரசின் ஆய்விலும் கிடைக்கவில்லை. ஆகவே இன்னும் இது தொடர்பாக ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.

கொடுமணலில் கட்டடத் தொகுதிகள் கிடையாது. ஆனால், நிறைய மூலப்பொருட்களும் தொழிற்சாலைகளில் எஞ்சியிருக்கும் பொருட்களும் கிடைத்தன. கீழடியில் எல்லாமே முழுமையான பொருட்களாகத்தான் (finished goods) கிடைத்திருக்கின்றன. ஆகவே இங்கு வாழ்ந்த மக்கள் அந்தப் பொருட்களை வெளியில் இருந்துதான் வாங்கி வந்துள்ளனர் என்ற முடிவுக்கு வருகிறோம்.

அப்படி வாங்கக்கூடியவர்கள், அதற்கான திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே கீழடி என்ற நகரத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய பல இடங்கள் இருக்கலாம். அந்த இடங்களை எல்லாம் ஆய்வுசெய்தால், இதை ஒரு நாகரிகமாக கருதலாம்.


கே. கீழடி நெசவுத் தொழில் அதிகம் நடந்த இடம் என்றும் சொல்லப்பட்டது...

ப. சாயப்பட்டறையாக இருக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி முடிவாகவில்லை. பாபின்கள், நூல் சுற்றக்கூடிய ஸ்பின்டில்கள் கிடைத்திருக்கின்றன. அதை வைத்து முடிவாக ஏதும் சொல்ல முடியாது. இங்கே இரட்டை அடுக்குகள் கொண்ட அடுப்புகள் கிடைத்திருக்கின்றன.

இம்மாதிரி அடுப்புகளில் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். அம்மாதிரி அடுப்பை எதற்காகப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை.


கே. கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் என்னென்ன? அதை வைத்து என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?

ப. அங்கே பல தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக மதிப்புமிக்க கற்கள் கிடைத்துள்ளன. அம்மாதிரி கற்கள் தமிழ்நாட்டில் இயற்கையாகக் கிடைக்காது. அவை குஜராத், மகாராஷ்டிரா, பலூசிஸ்தான் பகுதிகளில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆகவே இது கண்டிப்பாக வர்த்தகம் நடந்த இடமாக இருந்திருக்கலாம். ஆனால், மேலும் பல ஆய்வுகளை நடத்தி இதை உறுதிசெய்ய வேண்டும்.

கீழடியிலிருந்து இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள் கிடைத்தன. இவை பெரும்பாலும் வீடு மற்றும் விவசாய உபயோகத்திற்கானவை. அவற்றின் உலோகக் கலவையை சோதிக்க வேண்டும்.

நாங்கள் ஆய்வு நடத்திய பகுதிகளில் கிடைத்த கரிமப் பொருளின் கால அளவு அதிகபட்சமாக கி.மு. 280ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு கி.மு. 583வரை கால அளவு சென்றிருக்கிறது. இன்னும் ஆழமாகத் தோண்டி, அங்கு கிடைக்கும் கரிமப் பொருளை ஆய்வுசெய்தால் காலம் இன்னும் பின்னோக்கிச் செல்லலாம்.

என்னைப் பொருத்தவரை கீழடி நம் வரலாற்றைக் கட்டமைப்பதற்கான ஓர் இடம். அந்த இடத்தில் கால நிர்ணயம் செய்யும் நோக்கத்திற்காக ஒரு குழியைத் தோண்ட வேண்டும். அதில் கீழே இருந்து மேல்மட்டம்வரை கிடைக்கும் அனைத்து கரிமப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அதனைப் பகுப்பாய்வு செய்தால், எந்த காலத்திலிருந்து எந்த காலம் வரை கீழடி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


கே. கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், அதிலிருந்து கிடைத்த தகவல்கள் என்னென்ன?

ப. பானை ஓடுகளைப் பொறுத்தவரை, தமிழகத்தில்தான் பெயர்கள், எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கும். இந்தியாவில் வேறு எங்குமே இப்படிக் கிடைக்காது. கொடுமணல், பொருந்தல், அகழன் குளம், கீழடி என எல்லா தொல்லியல் ஆய்வுகளிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.

பானைகளில் எழுதுவது இங்கு மட்டுமே இருந்திருக்கிறது. அடிப்படையான எழுத்தறிவு இங்கே இருந்திருக்க வேண்டும். மக்கள்தான் பானைகளில் தங்கள் பெயர்களை எழுதுவார்கள். அரசன் எழுதப்போவதில்லை. இப்போதும் சாதாரண சில்வர் பாத்திரங்களில் நாம் பெயர்களை எழுதுகிறோம். இந்தியாவில் வேறு எங்கும் இந்தப் பழக்கம் இல்லை. ஆகவே, இந்தப் பழக்கத்திற்கு ஒரு தொடர்ச்சி இருந்திருக்க வேண்டும்.

அசோகனுடைய பிராமி கல்வெட்டுகள் மிகப் பெரிய சாசனங்கள். அவற்றை அரசன் சொல்ல, ஒருவர் எழுதியிருப்பார். ஒருவர் வரைந்திருப்பார், ஒருவர் வெட்டியிருப்பார். ஆனால், இங்கே சாமானியர்கள் செய்திருக்கிறார்கள்.

இங்கே கிடைத்த பானை ஓடுகள் அனைத்திலும் தமிழ் பிராமி எழுத்துகள்தான் இருந்தன. ஆனால், மொழியில் வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு திசன், குதசா போன்ற பிராகிருத மொழி சொற்கள் கிடைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பிராகிருத மொழி சமணத் தொடர்புகள் மூலம் இங்கே வந்திருக்கலாம்.

இதற்கு முன்பாக புலிமான் கொம்பையில் அந்துவன் என்ற கல்வெட்டுக் கிடைத்தது. பொருந்தலில் பிராமி எழுத்துகள் கிடைத்தன. ஆகவே இந்த பிராமி எழுத்துகள் இங்கிருந்து சென்றிருக்கலாம் என்ற வாதம் இப்போது முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால், எழுத்துகள் எளிமையான வடிவத்திலிருந்து கடின வடிவங்களுக்குச் செல்லும். அசோகன் பிராமி மிகச் சிக்கலானது. அதில் எல்லா வடிவங்களும் வர்க்கங்களும் உண்டு.

ஆனால், தமிழில் அப்படி இல்லை. சமீபத்தில் மாநிலத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில், 'ஆதன்' என்ற பெயர் கிடைத்தது. ஆனால், அது 'அதன்' என்றுதான் எழுதப்பட்டிருந்தது. ஓர் எழுத்தை வைத்து நமக்கு வேண்டிய ஒலியை உச்சரிப்பது மிக எளிய, அடிப்படையான வடிவம். ஆகவே பேராசிரியர் ராஜன், ராஜவேலு ஆகியோர் இங்கிருந்துதான் பிராமி வடக்கே சென்றிருக்க வேண்டுமெனக் கருதுகிறார்கள். ஆனால், மேலும் பல ஆய்வுகளின் மூலம்தான் இதனை முழுமையாக நிரூபிக்க முடியும்.


கே. அசோகனுடைய கல்வெட்டு விரிவானது. ஆனால், தமிழில் கிடைத்த ஒரே ஒரு கல்வெட்டு மற்றும் பானை ஓட்டு எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி முன் தோன்றியதாகச் சொல்ல முடியுமா?

ப. அசோகனுடைய கல்வெட்டைப் பொறுத்தவரை அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கல்வெட்டை உருவாக்கியிருக்கிறார். இங்கே மக்கள் எழுதியிருக்கிறார்கள். அசோகர் காலத்தில் வாழ்ந்த மக்கள் கல்வி அறிவு படைத்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் கிடையாது. தவிர, அசோகருடைய பெயரைக் கொண்டு யார் வேண்டுமானாலும் அந்தக் கல்வெட்டை உருவாக்கியிருக்கலாம். அசோகர்தான் உருவாக்கினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

அந்தக் கல்வெட்டுகள் பௌத்தத்தை சொல்பவை. பௌத்தத் துறவிகள் அதை வைத்திருக்கலாம். அதேபோல, சமணத் துறவிகள் இங்கே பிராகிருத மொழிச் சொற்களை கொண்டுவந்திருக்கலாம். ஆனால், பிராமி எங்கிருந்து வந்தது என்பது முழுமையாக முடிவாகவில்லை.

சிந்துச் சமவெளியில் சித்திர குறிகள் கிடைக்கின்றன. அதிலிருந்து நேராக எழுத்துகள் வந்திருக்க முடியாது. அதற்கடுத்து, பானைக் கீறல்கள் கிடைக்கின்றன. அதிலிருந்து எழுத்துகள் வந்திருக்க முடியும்.

தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைக்கின்றன. அதற்குக் கீழடுக்கில் கீறல்கள் கிடைக்கின்றன. அந்தக் கீறல்களில் இருந்துதானே ஒலியைக் குறிக்கும் எழுத்துகள் வந்திருக்க முடியும். ஆனால், இதை நிரூபிக்க ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.


கே. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன தொழிலைச் செய்திருக்க முடியும்?

ப. பெரிதும் விவசாயம் சார்ந்த சமூகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். உற்பத்தி பெருக்கத்தின் காரணமாக வியாபாரத்தை மேற்கொண்டிருக்கலாம். அதன் மூலம் வேறு இடங்களில் இருந்து பொருட்கள் வந்திருக்கலாம். இங்கிருந்தும் பொருட்கள் போயிருக்கலாம்.


கே. இங்கு கிடைத்த கரிமப் பொருளின் காலம் கி.மு. 583 எனக் கிடைத்திருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன? சங்க காலத்தை இதோடு தொடர்புபடுத்த முடியுமா?

ப. அது ஒரு முக்கியமான கால நிர்ணயம் என நினைக்கிறேன். ஏற்கனவே பொருந்தலிலும் கொடுமணலிலும் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் இந்த கால நிர்ணயத்தை பார்க்கிறேன்.

சங்க காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது ஒரு சார்புநிலை கால மதிப்பீடுதான் (relative dating). தவிர, பெருங்கற்காலமும் சங்க காலமும் வேறு வேறா என்ற பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. ஏனென்றால் காலத்தை இன்னும் நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியவில்லை.

சிந்துச் சமவெளி நாகரீகத்தில் அதைச் செய்திருக்கிறார்கள். மெகார்கர் பகுதி, புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது ஹரப்பாவுக்கு முந்தைய நகரமாகக் கருதப்படுகிறது. அதன் காலகட்டம் கி.மு. 7000. இதற்குப் பிறகு முதிர்ந்த ஹரப்பா நாகரீகம். அதற்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என இந்தக் காலவரிசை தொடர்கிறது.

ஆனால், அதுபோல ஆய்வுகள் தமிழகத்தில் நடக்கவில்லை. இங்கேயும் பழங்கற்காலம், புதிய கற்காலம், இடை கற்காலம் ஆகியவை உண்டு. இதற்கிடையில்தான் பெருங்கற்காலம் வருகிறது. இது எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

மேலும் தமிழ்நாட்டில் தமிழ் பிராமி குறித்த முழுமையான ஆய்வுகள் தேவை. அப்படி நடந்தால்தான், கீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி உருவானது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியும். கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது என்பதை ஆராய வேண்டும்.


கே. தமிழ் பிராமி எழுத்துகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன..

ப. ஆமாம். இந்தியாவிலேயே தமிழ் பிராமி எழுத்துகள் அதிகம் கிடைக்கும் பகுதி இந்தப் பகுதிதான். வட இந்தியாவில் அசோகர் கல்வெட்டைத் தவிர வேறு இடங்களில் அந்த பிராமி எழுத்துடன்கூடிய கல்வெட்டுகள் கிடையாது. பானை ஓடுகளில் எழுத்துகள் கிடைக்காது. இதுபோல மக்கள் பயன்பாட்டில் எழுத்துகள் இருந்தது கிடைப்பது வைகைச் சமவெளியில் மட்டும்தான். கங்கைச் சமவெளியில் கிடையாது.


கே. உங்கள் ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்த்தால், கீழடியையும் சிந்துச் சமவெளியையும் தொடர்புபடுத்த முடியுமா?

ப. இல்லை. அதற்கு மேலும் ஆய்வுகள் தேவை. சிந்துச் சமவெளியில் கிடைத்தது போன்ற ஓட்டையிடப்பட்ட பானை ஓடுகள் இங்கேயும் கிடைத்துள்ளன. அவை வேறெங்கும் கிடைக்கவில்லை. பானைகளை வைக்கக்கூடிய மண்ணாலான ஸ்டாண்டுகள் சிந்துவெளியைப் போல இங்கும் கிடைத்திருக்கின்றன. மற்றபடி, மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.


கே. நீங்கள் செய்த ஆய்வுகளில் வழிபாட்டு உருவங்கள் ஏதும் கிடைத்ததா?

ப. பொதுவாக இந்த காலகட்டத்தில் வழிபாட்டு உருவங்கள் ஏதும் கிடைக்காது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடுகள்தான் இருந்தன. மதங்கள் கிடையாது. அந்த காலகட்டத்தில் இயற்கையைக் கண்டுதான் மனிதன் பயந்தான். ஆகவே வேறு உருவங்கள் கிடைக்காது.

சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் இயற்கை குறித்த குறிப்புகள்தான் விரிவாகக் கிடைக்கின்றன. அதில் இறைவனைக் குறிப்பதாக நாம் இன்று கருதும் சொற்கள் அந்த காலகட்டத்தில் வேறு யாரையாவது குறிக்கலாம். ஹீனயான பௌத்தத்தில் ஸ்தூபம்தான் வழிபடப்பட்டது. மஹாயான பௌத்த மதம் வரும்போதுதான் புத்தரின் உருவத்தை வழிபடுவது துவங்கியது. அசோகர் காலத்தில் ஸ்தூபமாக இருந்தது, ஹர்ஷர் காலத்தில் உருவமாக மாறியது.


கே. இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகளை வைத்து அவை எம்மாதிரியான கட்டடங்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

ப. நமக்குக் கிடைத்திருப்பது எச்சங்கள்தான். அவற்றை வைத்துக்கொண்டு அந்த காலகட்ட கட்டங்களை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் தோலேவராவில் அதைச் செய்திருக்கிறார்கள். இங்கே கூரைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் கிடைத்துள்ளன. ஓடுகள் கிடைத்துள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக ஆராய வேண்டும்.

தவிர இந்த கட்டங்கள் ஒவ்வொன்றும் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என கால நிர்ணயம் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஓர் இடத்தில் கால்வாய் இருந்தால், அந்தக் கால்வாயைப் பயன்படுத்திய பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேறொரு கால்வாயைக் கட்டுகிறார்கள். பல கட்டங்களில் இங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.


கே. எத்தனை நூற்றாண்டுகள் கீழடியில் மக்கள் வாழ்ந்திருப்பார்கள் எனக் கருதுகிறீர்கள்?

ப. இப்போது கிடைத்திருக்கும் காலக் கணிப்பின்படி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருக்கலாம். பத்தாம் நூற்றாண்டுக்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. ஆனால், நிச்சயமாக கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை இங்கு மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள்.


கே. கீழடியில் மனிதர்களின் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை..

ப. கீழடியில் கிடைக்காது. கொந்தகையில் கிடைக்கும். கீழடிக்கான புதைமேடு கொந்தகைதான். இப்போதுதான் அகரம், கீழடி, கொந்தகை என தனித்தனி ஊர்களாக இருக்கின்றன. அந்த காலகட்டத்தில் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன. அதன் முக்கியமான மேடு, கீழடிதான். அன்றைக்கு கீழடியும் கொந்தகையும் என்ன பெயரில் அழைக்கப்பட்டன என்பது யாருக்கும் தெரியாது.


கே. கீழடியில் எவ்விதமான உணவுப் பழக்கம் இருந்திருக்கக்கூடும்?

ப. பிரதான உணவாக அரிசி இருந்திருக்கலாம். பல பானை ஓடுகளில் நெல்லின் உருவம் பொதியப்பட்டிருக்கிறது.


கே. கீழடிதான் பழைய மதுரையா அல்லது மதுரையின் நீட்சியா?

ப. இருக்கலாம். மதுரையில் இதுவரையில் ஆய்வு நடக்கவில்லை. மதுரையின் பழமை ஆராயப்படவில்லை. மதுரை எப்போது உருவானதென்பது யாருக்கும் தெரியாது. இன்றுள்ள மதுரை பழைய மதுரையா என்பது யாருக்கும் தெரியாது. தற்போதுள்ள மதுரை நகரில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துள்ளனர். ஆகவே கீழேயுள்ள பகுதி சேதமடைந்திருக்கும். அதில் ஆய்வுசெய்ய முடியாது. கைவிடப்பட்ட பகுதிகளில்தான் ஆய்வுகளை நடத்த முடியும்.

மதுரையில் ஒரே ஒரு இடத்தில் அகழாய்வு செய்யும் வாய்ப்பு இருந்தது. அதாவது, பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் தோண்டிப் பார்த்திருந்தால் ஏதாவது கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பும் போய்விட்டது.


கே. நீங்கள் கீழடியில் செய்த ஆய்வின் முடிவுகள் எப்போது வெளியாகும்?

ப. நான் மேற்கொண்ட ஆய்வின் இடைக்கால அறிக்கையைக் கொடுத்துவிட்டேன். முழு அறிக்கைக்காக பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பல ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இதற்கான அறிஞர்கள் தேவை. இதையெல்லாம் முடிக்க நாட்களாகும்.

தேமொழி

unread,
Oct 1, 2019, 6:09:40 PM10/1/19
to மின்தமிழ்
கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . . 

 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.

தொடர்ச்சி....


6.
கேள்வி:
தாமிரவருணி மற்றும் வைகைக் கரையோர வாழ்வியலுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் ஏதோ ஒரு (சமகால அல்லது சற்று பின்னரான) தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்பது கீழடி ஆய்வுத் தடயங்களின் அடிப்படையில் புதிதாக முன்வைக்கப்படும் புதிய வாதமா அல்லது இக்கருத்தியல் ஏற்கனவே நிலவியதா?

விடை:
இது இப்போது திடீரென்று தோன்றிய புதிய முன்மொழிவு அல்ல. இதற்கு ஏற்கனவே நீண்ட‌ பின்னணி உண்டு. ஏற்கனவே அகழ்வாய்வாளர்கள் "இருக்கக்கூடும்" என்று நினைத்ததை, பேசியதை, எழுதியதைத் தான் கீழடி அகழ்வாய்வுகள் "இருக்கிறது" என்று கண்கூடாகத் தடயங்களைச் சாட்சி வைத்து நிறுவி வருகின்றன.

அறிந்ததிலிருந்து அறியாததை அறிய முயற்சி செய்வது அகழ்வாராய்ச்சியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் தான் இப்போது கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வு போன்ற அகழ்வாய்வுகளின் தேவையை 80 ஆண்டுகளுக்கு முன்பே கே. என். தீட்சித் 1939 இல் கோடிட்டுக் காட்டினார். அப்போது அவர் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் (Director General of Archaeological Survey of India). 1937 இல் இருந்து 1944 வரை அப்பொறுப்பிலிருந்த அவர் நிகழ்த்திய உரையொன்றை 1939 இல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தீட்சித்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மொகஞ்சதாரோவில் நடந்த சிந்துவெளி ஆய்விலும் ஈடுபட்டவர் அவர். சர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் போன்றோருடன் பணியாற்றியவர். எனவே சிந்துவெளிப்பண்பாடு பற்றிய ‌நேரடியான கள அனுபவம் அவருக்கு உண்டு.

பெண்கள் சங்கு வளையல்கள் அணிவது என்பது சிந்துவெளியின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். சங்கு வளையல் தொழிலை மனதில் வைத்து அகழ்வாராய்ச்சி செய்தால் சிந்துவெளிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பை நிறுவி விடலாம் என்ற எதிர்பார்ப்பு அப்படி ஒன்றும் மிகையான எதிர்பார்ப்பு அல்ல என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே தீட்சித் சொல்லியிருக்கிறார். அவரது கருத்து பின்வருமாறு:

"At no great distance from these newly discovered places is the Gulf of Cambay. It was at the ports of Cambay and Broach that the carnelian industry of India was concentrated and the extensive use of this material in the Indus cities renders its almost certain that further investigation in the Narbada valley will bring to light other settlements of that period.

Considering that the conch shell which is typical of the Indus valley civilization and which seems to have been in extensive use in Indus cities was obtained from south-east coast of the Madras Presidency, it would not be too much to hope that a thorough investigation of the area in Tinnevelly Dt. and the neighbouring regions such as the ancient sea port of Korkai will one day lead to the discovery of some site which would be contemporary with of even little later than the Indus civilization.” (Dikshit 1939: 13)"

இதில் கடைசி ஐந்தாறு வரிகளில் தீட்சித் தின் பட்டறிவை, தொலைநோக்குப் பார்வையை விளக்கும் வைர வரிகள். "தீட்சித்தின் தீர்க்க தரிசனம்" என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அவர் சொன்னது ஆர்வக் கோளாற்றால் அல்ல. அனுபவ அறிவும் தரவு சார்ந்த தேடல்களின் மீதிருந்த நம்பிக்கையும் தான் இதற்குக் காரணம்.

பழங்காலத் தமிழ்நாட்டில் சங்கு அறுக்கும் / சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிற் கூடங்கள் இருந்ததற்கான தடயங்கள் பல இடங்களில் கிட்டியுள்ளன. இப்போது கீழடி அகழ்வாய்வுகளிலும் சங்கு தொழில் தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன. இது தமிழ்நாட்டில் முதல் முறையும் அல்ல. சங்கு தொழிற்கூடத்திற்கான தடயம் கொடுமணலில் கிடைத்துள்ளது. அழகன்குளம் கொற்கை போன்ற இடங்களும் சான்றளிக்கின்றன.

80 ஆண்டுகளுக்கு முன்பு தீட்சித் கோடிட்டுக் காட்டியபடி " விரிவான விசாரணை" ( "thorough investigation") செய்திருந்தால் தமிழ்த்தொன்மங்கள் மட்டுமின்றி இந்தியாவின் தேதியிடப்படாத காலகட்டங்கள்/ அவற்றின் தொடர்ச்சியை எங்கு எப்படித் தேட வேண்டும் என்பதில் கூடுதல் தெளிவு கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கீழடி போன்ற அகழ்வாய்வுகள் பாய்ச்சும் புது வெளிச்சத்தை தீட்சித் போன்ற அனுபவம் மிக்க அகழ்வாய்வாளர்களின் நெடுநோக்குப் பார்வையின் துணையோடு சீர்தூக்கிப் பார்ப்பது தரவு சார்ந்த ஆய்வுகளின் தவிர்க்க முடியாத அணுகுமுறை ஆகும்.

(தொடரும்)



On Friday, September 27, 2019 at 11:59:35 PM UTC-7, தேமொழி wrote:

கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . . 

 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.

தேமொழி

unread,
Oct 2, 2019, 3:41:51 AM10/2/19
to மின்தமிழ்
source:  https://i.ytimg.com/vi/iNMSLX7gQpc/hqdefault.jpg?sqp=-oaymwEZCPYBEIoBSFXyq4qpAwsIARUAAIhCGAFwAQ==&rs=AOn4CLAW3MEN1S5WzJvReqXhuhJUJ8dsiw

கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணி வரும் ஜனவரி மாதம் தொடங்கும்: தொல்லியல் துறை

October 02, 2019

தமிழர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்திய கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழ்த்துறை சார்பில் கல்வெட்டு பயிற்சி பட்டறை குறித்த முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை முகாமை தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தொடக்கி வைத்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் கிடைத்த பொருட்கள் நகர நாகரிகத்தின் சான்றாக விளங்குகிறது என தெரிவித்தார். கீழடி நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என குறிப்பிட்ட அவர்,  கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை ஆய்வு செய்தபோது இதன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இங்கு வசித்த மக்கள், வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், இங்கு வாழ்ந்த மக்கள், அறிவியல் சார்ந்த சமூகமாக வாழ்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேமொழி

unread,
Oct 2, 2019, 3:48:37 AM10/2/19
to மின்தமிழ்

காலத்தின் குரல் : தமிழனின் பெருமையை உயர்த்திவிட்டதா கீழடி?

 | Keezhadi | 30.09.2019

30,584 views
Sep 30, 2019


தேவை நேரம்: ~ 50:00

தேமொழி

unread,
Oct 7, 2019, 7:13:50 AM10/7/19
to மின்தமிழ்
கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? 
| அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna
Oct 7, 2019-KULUKKAI




Time-13:40

சமூக ஊடச் செயல்பாட்டாளர்கள் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில்,  கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று சிறப்பாகச் செய்த தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் ஆற்றிய உரை

N D Logasundaram

unread,
Oct 8, 2019, 9:49:42 AM10/8/19
to vallamai, தமிழ் மன்றம், mintamil, thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Kanaka Ajithadoss, Suresh Kumar, Thenee MK, thirumurai, Raji M, Muthu muthali
நூ த லோ சு
மயிலை
 மிகச் சிறப்பானது 
நடுவண் ஆட்சியில்  இருக்கின்ற அரசின் தமிழனின் சிறப்பினை மறைக்கும் காவி ஆரிய மாயை முகத்திரையை கிழித்தெறியும் பேருரை 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 8, 2019, 5:44:29 PM10/8/19
to மின்தமிழ்
காலத்தைக் கணக்கிட உதவும் கரிமக் காலக்கணிப்பு சிறந்த அறிவியல் முறையா ?
| அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna
Oct 7, 2019-KULUKKAI



Time: 10:16

சமூக ஊடச் செயல்பாட்டாளர்கள் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில்,  கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று சிறப்பாகச் செய்த தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.

தேமொழி

unread,
Oct 8, 2019, 5:50:49 PM10/8/19
to மின்தமிழ்
அகழ்வாய்வில் இடைச் செருகி, திரிபு செய்ய வாய்ப்புண்டா? 
| அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna
KULUKKAI, Oct 7, 2019



Time:  12:00

சமூக ஊடச் செயல்பாட்டாளர்கள் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில்,  கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று சிறப்பாகச் செய்த தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.

தேமொழி

unread,
Oct 9, 2019, 10:30:17 PM10/9/19
to மின்தமிழ்

கீழடி கருப்பு, சிவப்பு பானை குறித்து 
| அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna
•Oct 7, 2019 #KULUKKAI



Time:  9:16

தேமொழி

unread,
Oct 10, 2019, 5:12:39 PM10/10/19
to மின்தமிழ்
கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . . 

 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.

தொடர்ச்சி....


கீழடி
சில கேள்விகளும் ‌விடைகளும்..

தொடர்ச்சி . . . 

7.
கேள்வி:
கீழடி செங்கல் கட்டுமானங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கல், சிந்துவெளி நாகரிக கால கட்டுமான செங்கல் – இவற்றுக்கு இடையே தொடர்பு ஏதும் உண்டா? இதை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவை (அதாவது நீளம், அகலம், உயரம்) மட்டும் வைத்துப் பார்த்தால் சிந்துவெளிச் செங்கற்களையும் கீழடிச் செங்கற்களையும் ஒன்றெனக் கூற முடியாது.

சிந்துவெளிப் பண்பாட்டு செங்கற்களின் அளவு பெரும்பாலும் 28 செ.மீ*14 செ,மீ* 7 செ.மீ என்ற அளவில் (நீள, அகல, உயரம்) 4:2:1 என்ற விகிதத்தில் அமைந்தவை. கீழடியில் கிடைத்துள்ள செங்கற்கள் பெரும்பாலும் 36*24*6 செ.மீ என்ற அளவில் (6:4:1) என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. கீழடியில் சில இடங்களில் 34*24*7 செ.மீ மற்றும் 38*24*7 செ.மீ 33*23*6 செ.மீ என்ற அளவிலும் செங்கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் பெரும்பாலும் 36*24*6 என்ற அளவே மிகுதியாக உள்ளது.

சிந்துவெளிப் பண்பாட்டை அறிவிக்கும் (1924) முன்னரே 1905 இல் அகழ்வாய்வு செய்யப்பட்ட, இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் முதல் அகழ்வாய்வுச் செங்கல் சுவர் தடயம் என்று கருதப்படும் பீகாரிலுள்ள ராஜ்கீரில் (மௌரியப் பேரரசின் காலம்) கிடைத்த பழங்கால் மதிற்சுவர்களில் பயன்படுத்தப்பட்ட செங்கல் 52*25*7 செ.மீ என்ற அளவில் (7.4: 3.5:1) என்ற விகிதத்திலும் 42*27*6 செ.மீ என்ற அளவில் 7:4.5:1 என்ற விகிதத்திலும் அமைந்துள்ளன.

இதனடிப்படையில் பார்த்தால் சிந்துவெளியின் ஆகச்சிறந்த செங்கல் பரிமாணத்தை வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவில் எந்த பிந்தையப் பண்பாடும் எட்டவில்லை என்பதே உண்மை. இதுபற்றி தனது கருத்தை கே.என் .தீட்சித் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். அசோகர் காலத்து செங்கற்களின் அளவு சிந்துவெளிச் செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனாலும் இந்த கேள்விக்கான விடையை – சிந்துவெளிச் செங்கல்லிற்கும் கீழடிச் செங்கற்களுக்கும் இடையிலான அளவின் அடிப்படையில் நேரிடையான தொடர்பு இல்லை என்று கூறி முடித்துவிட முடியாது.‌ அளவின் அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் பயன்பாட்டு ஒப்புமை ( சுவர்கள், வடிகால்கள், தரைத்தளங்கள்) கவனிக்கத்தக்கது.

சிந்துவெளிப் பண்பாட்டின் மிக அடிப்படையான அடையாளம் செங்கற்களும் அச்செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும் கட்டிடங்களும் தான். சிந்துவெளிக்கு என்று ஒரு நிற அடையாளம் காட்டவேண்டும் என்றால் அது செவ்வண்ணம் தான். ஹரப்பா, மொகஞ்சதாரோ சிதைவிடங்களில் சிதறிக் கிடக்கும் செங்கற்களும் செம்பானை ஓடுகளும் தான் இதற்கு சாட்சியம்.

சிந்துவெளிப்பண்பாடு இருந்த இடம் தெரியாமல் புதைந்ததற்கு பின்னால் வடமொழி இலக்கியத்தில் செங்கல் அப்படி ஒன்றும் பெரிதாகப் போற்றப்படவில்லை. ஆனால் செங்கல் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளும் செங்கல் என்ற சொல்லின் பின்புலனாக விளங்கும் பொருளமைவு சார்ந்த கருத்தாக்கமும் முற்றிலும் மாறானது.

செங்கல் என்ற தமிழ்ச்சொல் ஒரே நேரத்தில் இரண்டு கருத்தை தெரிவிக்கும். செங்கல்லின் ஒரே அளவான செம்மை, ஒழுங்கு என்பது செங்கல்லின் தரக்கட்டுப்பாடும் தகுதியுமாகும். அதனால் தான் செங்கல்லை ஒரே அளவாக அறுப்பதற்கான அச்சு "செங்கல் கட்டளை" என்றும் கட்டளைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது செங்கல்லின் செந்நிறம். அது செம்மையாகவும் இருக்கிறது; சிவப்பாகவும் இருக்கிறது. செங்கல்லின் உறுதியை உறுதி செய்வது அது சுட்டசெங்கல் என்பது தான். அதனால் தான் சுடாத செங்கல்லை ‘பச்சைக் கல்’ – (பச்சைக் குழந்தை, பச்சைக் காய்கறி என்று சொல்வது போல) - என்று சொல்கிறார்கள். செம்மைக்கும் ( ஒழுங்கிற்கும்) சிவப்பிற்குமான ( செந்நிறம்) வேர்நிலையான மானுட உளவியலுக்கு செம்மை, செம்பு, செப்பு, செப்புத்துறை, செந்தண்மை, செங்கோல், செங்களம், சே, சேய், சேயோன் போன்ற சொற்களின் ஆக்கமுறையை துருவினால் தெளிவு கிடைக்கும்.

சங்க இலக்கியத்தில் செங்கல் பற்றிய துல்லியமான சொல்லாடல்கள் ஏராளம். ”சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்” (பெரும்பாணாற்றுப் படை 405) என்ற சங்க இலக்கிய ஒற்றைவரிச் சொல்லாடல் சுட்ட செங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் கொண்ட ஒரு நகரம் பற்றி பேசுகிறது. சுட்ட செங்கற்களால் ஆன குடியிருப்பிற்கு கீழடி சான்றளித்திருக்கிறது. அது மட்டுமின்றி அத்தகைய சுவர்களைச் சித்தரிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியம் செம்பு என்ற உலோகத்தால் செய்யப்பட்டது போன்ற சுவர் என்றே திரும்பத் திரும்பக்
கூறுகிறது.

செம்பு விலையுயர்ந்த அரிய உலோகம். முழுவதும் செம்பைப் பயன்படுத்தி சுவர் எழுப்ப முடியாது. ஆனால் செம்பால் கட்டியது போன்ற சுவர் என்பது சுட்ட செங்கற்களின் செம்பு போன்ற வனப்பு, உறுதித்தன்மை, மேலும் செம்பு போன்ற ‘செந்நிறம்’ ஆகியவற்றை மனதில் வைத்து உயர்வு நவிற்சியாக கூறப்பட்டுள்ள ஆனால் இது உண்மையில் சுட்ட செங்கற்கள் பற்றிய சித்தரிப்பே ஆகும். "உவமை என்பது உயர்ந்ததன் மேற்றே" என்பது தொல்காப்பியம். எனவே இது பொருத்தமாகவே உள்ளது.

சங்க இலக்கியம் சொல்வதைப் போன்ற சுவர்கள் எதிர்கால அகழ்வாய்வுகளில் மேலும் கிடைக்கலாம். இப்போது தானே கீழடி போன்ற இடங்களைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம்.

எனது மதிப்பீட்டில் நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைத்து வருகிறேன். “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே” என்பது தான். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் சுட்ட செங்கல் சுவர்களின் பிரமாண்டம் குறித்த சொல்லாடல் கி.மு ஆறாம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டத்தின் செங்கல் கட்டிடங்களின் நேர்முக வர்ணனை மட்டுமல்ல; தமிழ்த் தொன்மங்களுக்குள் அதற்கு முந்தைய நெடுங்காலமாக நிலைபெற்று இருந்த ‘செங்கல் பண்பு” (Brick Culture) குறித்த மீள் நினைவுக்குமான சாட்சியமுமாகும்.

புறநானூற்றில் இருங்கோவேள் என்ற வேளிர் தலைவனின் முன்னோர்கள் அவனுக்கு 49 தலைமுறைக்கு முன்பே துவரை என்ற நகரை ஆண்டவர்கள் என்ற மீள் நினைவு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலிலும் துவரை நகரின் சுவர் செம்பால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. செம்பு போன்ற செங்கல் தான் அது என்பது தெளிவு.

ஆனால் இத்தகைய இலக்கிய சாட்சியம், ஆவணங்கள் வடநாட்டு ராஜகிருகம் போன்ற நகரங்களுக்கு இல்லை. சிந்துவெளிப் பண்பாட்டின் பிரமாண்டமான செங்கற் கட்டுமானங்கள் வேத இலக்கியங்கள் உள்ளிட்ட வடமொழி இலக்கியங்களுக்கு தெரியாத ரகசியம்.

"ரிக் வேத காலத்தில் செங்கல் என்ற கட்டுமானப் பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான அகழ்வாய்வுத்தடயமோ மொழியியல் தடயமோ இல்லை" என்று எச். எஸ் கன்வர்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். யஜூர் வேதத்தில் இடம் பெறும் ”அக்னி சயனா” சடங்கில் தான் அதுவும் வழிபாடு சார்ந்த பயன்பாட்டுப் பொருளாக செங்கல்லின் பயன்பாடு முதன்முறையாக பதிவுபெறுகிறது என்றும் "சதபாத பிராமணத்தில்" தான் அது முழுமையாக வளர்ச்சி பெற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிரிட்ஸ் ஸ்டால் என்ற அறிஞரும் கிட்டத்தட்ட இக்கருத்துடன் உடன்படுகிறார்.
"இஷ்ட்டிகா" என்ற வடசொல்லின் மூலமே "சுட்ட கல்" என்ற தமிழ்ச்சொல் தான் என்ற கன்வெர்சின் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதா இல்லையா என்பதை விடவும் முக்கியமானது சுட்ட செங்கல் தொழில் நுட்பத்தின் உச்சத்தைக் கொண்டாடிய செங்கல் பண்பாட்டின் எச்சத்தை சிந்துவெளிப் பண்பாட்டிற்குப் பின்னர் சங்க இலக்கியங்களில் தான் காணமுடிகிறது என்பது தான்.

குறிப்பாக சுட்ட செங்கல்லும், அதன் உறுதியும் வனப்பும், செம்பு போன்ற அதன் நிறப்பொலிவும் நெடும் பெரும் சுற்றுச் சுவர்களுக்கான அதன் பயன்பாடும் போற்றப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு சான்றாக நிற்பது சங்க இலக்கியம் தான். வேறொன்றுமில்லை.

"சிந்துவெளி காலம் வேறு சங்க இலக்கியம் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்ட தொகுக்கப்பட்ட காலம் வேறு" என்பதை காலண்டர் பார்த்தே சொல்லிவிடலாம். அதற்கு கரிம ஆய்வு கூடத் தேவையில்லை.

இன்றைய தேதியில் இப்போது வரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தான் நாம் வாதிட வேண்டும். அந்த வகையில் கீழடிப்பண்பாடு சிந்துவெளி கட்டுமானங்களின் கருத்தியலோடு தொடர்ச்சி காட்டுகின்றன என்பது தான் முக்கியம். இதை சங்க இலக்கியம் என்ற வழித்துணையோடு வாசிக்கும் போது மேலும் தெளிவு கிடைக்கும். ஆனால் அதற்கு திறந்த மனமும் தரவு சார்ந்த தேடலும் தேவைப்படுகிறது.

எதிர்கால அகழ்வாய்வுகள் தமிழ்த்தொன்மங்களை,நகர வாழ்வியலுக்கான காலகட்டங்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்று இப்போது சொல்லமுடியாது.

ஆனால், சிந்துவெளிச் செங்கல் சுவர்களுக்கும் கீழடிச் செங்கல் சுவர்களுக்கும் அளவால், கால நிர்ணயத்தால் இடைவெளி இருக்கிறது என்றாலும் இந்த இரு சுவர்களுக்கும் இடையிலான தூரத்தை நிரப்பும், விளக்கும் மரபின் தொடர்ச்சிக்கு சங்க இலக்கியம் மட்டும் தான் சான்றாக இருக்கிறது‌ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ”செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை” யாகவும் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பாகவும் நிமிர்ந்து நிற்கிறது தமிழ் போலவே. இதற்கு ஒரு சோற்றுப் பதமாய் வெளிவந்துள்ளன கீழடிச் செங்கல் சுவர்கள்.

சிந்துவெளி விட்ட இடமும்
சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!

ஆர்.பாலகிருஷ்ணன்.
09/10/2019

தேமொழி

unread,
Oct 14, 2019, 2:29:09 AM10/14/19
to மின்தமிழ்
கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . . 

 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.

தொடர்ச்சி....


கீழடி
சில கேள்விகளும் ‌விடைகளும்..

தொடர்ச்சி . . . 


கேள்வி:
கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உறைக்கிணறு பற்றி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களிலும் இது பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. உறைக்கிணறு என்பதன் முக்கியத்துவம் என்ன? இதுபற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறதா?

விடை:
ஆமாம். சங்க இலக்கியம் உறைக்கிணறு பற்றி பின்வருமாறு கூறுகிறது.

"பறழ்ப் பன்றி பல் கோழி,
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட" (75-77)

இது பட்டினப்பாலையில் வரும் சொற்சித்திரம்.

காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே அமைந்த புறநகர்ப்பகுதியை (sub-urban habitat) பற்றிய துல்லியமான படப்பிடிப்பு இது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடந்த அகழ்வாய்வுகளில் பல்வேறு இடங்களில் உறைக்கிணறுகள் கிடைத்துள்ளன. உறையூர், பூம்புகார், அரிக்கமேடு, திருக்கோவிலூர், கொற்கை, காஞ்சிபுரம், செங்கமேடுதிருவாமுத்தூர், திருவேற்காடு, மாமல்லபுரம், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ள உறைக்கிணறுகள் இதன் பரவலான பயன்பாட்டிற்குச் சான்றாகும். இப்போது கீழடியில் கிடைத்துள்ளது.

எனவே உறைக்கிணறு என்பது சங்ககால வாழ்வியலின் பொதுவான உரைகல் என்பது தெளிவாகிறது.

காவிரிப்பூம்பட்டினம் அருகே இருந்த உறைக்கிணறு அமைந்த ஒரு புறநகர்ப்பகுதி பற்றிய மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியச் செய்தியைக் கையில் வைத்துக்கொண்டு கீழடி அகழ்வாய்வுக் களத்திற்குச் செல்லுங்கள்.

அதற்கு முன்பு அந்த மூன்று வரிகளின் எளிய பொருளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

”அது ஒரு புறஞ்சேரி, நகரத்தை ஒட்டிய குடியிருப்புப் பகுதி. உறைக்கிணற்றோடு கூடிய அந்தக் குடியிருப்பில் பன்றிகள் பல குட்டிகளுடனும், பல வகையான கோழிகளும், ஆட்டுக் கிடாய்களும், கவுதாரிகளும் விளையாடிக்கொண்டிருந்தன.”

இப்போது கீழடியில் நமக்குக் கிடைத்திருக்கிற தடயங்களைப் பார்ப்போம். உறைக்கிணறு இருந்த கீழடியில் பன்றி, ஆடுகள் மாடுகள் வளர்க்கப்பட்டதற்கான எலும்புத் தடயங்கள் (புனே நகரிலுள்ள ஆய்வுக்கூடம் உறுதி செய்தபடி) கிடைத்துள்ளன.

காட்டுப்பன்றியின் உருவம் பொறித்த சூதுபவளம் கிடைத்துள்ளது. வேறென்ன வேண்டும்?

இப்படிப்பட்ட சூழலை நேரில் பார்த்தால் அப்படித் தான் எழுதத்தோன்றும்.
சங்க இலக்கியங்கள் புனைகதைகள் அல்ல. அன்றாட வாழ்வியலின் அழகிய படப்பிடிப்பு என்பது தான் உண்மை.

கீழடியும் தமிழகத்தின் ஏனைய அகழ்வாய்வுக் களங்களும் அழுத்திச் சொல்வது சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையைத் தான்.

இந்த உறைக்கிணற்றுக் கவிதைக்கும் உண்மையில் நம் கண்முன் அகழ்ந்தெடுக்கப்படும் இந்த உறைக்கிணறுகளும் இடையிலான சூழல் ஒருமை நமக்கு வியப்பூட்டுகின்றன. தமிழகத்தின் பல இடங்களிலும் மேலும் மேலும் தோண்டவேண்டியதன் தேவையையும் இவை அடிக்கோடிடுகின்றன.

தேமொழி

unread,
Oct 14, 2019, 5:32:35 AM10/14/19
to மின்தமிழ்


KEELADI EXCAVATIONS
Excavations at Keeladi open a new window into old times
R. SIVANANTHAM
SUNDAR GANESAN
Print edition : October 25, 2019

Excavations at Keeladi have the potential to throw light on the civilisational antiquity of the ancient Tamil country and its people.

The first major urban settlement to be unearthed in India was Rajgir, or “Rajagriha” (abode of the king), in Bihar’s Nalanda district and it was assigned to the 6th century BCE. Rajgir was excavated as early as 1905; since then, several excavations have been conducted and sites discovered around the region. Archaeologists confirmed that this was part of the Second Urbanisation Phase in India, the first being Mohenjo-daro and Harappa even though they were discovered only in 1924. Urban settlements are usually large and characterised by brick structures, industrial activity and water management, with agricultural and economic activities. A Second Urbanisation Phase situated in the south was never considered a possibility. It is in this context that the excavations at Keeladi have provided a new window to historians.

In 2014, when the Archaeological Survey of India (ASI) was digging at Keeladi, the Tamil Nadu State Department of Archaeology (TNSDA) was excavating at Alagankulam, a port city of the Pandya kings located where the Vaigai river meets the Bay of Bengal.

The Alagankulam excavations were carried out for seven seasons (a season usually runs from October to September) and evidence of four distinct cultures was unearthed: 4th century BCE to 1st century CE, where black and red ware (BRW) were found; 1st century CE to 2nd century CE where rouletted ware, amphorae and Roman coins were unearthed; 2nd century CE to 4th century CE in which BRW, grey ware and a specially named Alagankulam Ware (ceramics are usually compared with similar typology and for this ware there was no comparison, hence the name) were found; and in the topmost layer, Chola coins and Chinese ware were unearthed.

In the olden days, during the north-east monsoon, sailors from the West used the Pattanam port in the western coast in Kerala, avoiding Alagankulam on the eastern coast. Similarly, they used Alagankulam during the south-west monsoon, avoiding Pattanam. Goods were transported between these two points and to several other locations such as Madurai and Karur.

In 2013-14, the ASI conducted a survey and identified 293 sites along the Vaigai’s course. Keeladi was one of the sites and it covers an area of 110 acres (one acre=0.4 hectare). The mound identified at Keeladi is one kilometre from the village of the same name and to the west of the Manalur irrigation tank. The mound is locally known as “Pallichandai Thidal” and also as “Mettu Punjai”. The area was littered with black-and-red ware, red slipped ware, red ware, coarse red ware, black ware, terracotta discs, beads and other items.

The ASI began excavation at Keeladi with a team that was headed by Amarnath Ramakrishna for two seasons. He was replaced by P.S. Sriraman for the third season.

(It is important to know that the Adichanallur excavations in another part of Tamil Nadu were done in 1904 by Alexander Rea, who announced that it was a megalithic site. It was after 100 years that the ASI dug the site again, but the reports are yet to be published. The Madurai bench of the Madras High Court has given orders to send the Adichanallur samples for testing and writing reports.) By this time Keeladi had gained a lot of attention, generating curiosity relating to Tamil antiquity. People flocked to the spot for a first-hand glimpse of the site.

TNSDA steps in

The TNSDA took up the fourth season during 2017-18. Learnings were borrowed from the ASI. Eleven trenches (each 10 m x 10 m) were laid in which 34 quadrants (4.25 m x 4.25 m each) were opened during this season and 5,820 antiquities were unearthed.

(A trench area is too large and hence quadrants are marked within one trench area with a gap of 0.5 m between each quadrant and only the quadrants are opened. Quadrants are usually opened only when there is a potential for finding objects in that particular trench area.)

It is in this context that the fourth season’s findings become crucial. The TNSDA, which has released the fourth season’s report, has already ventured into the fifth season which is proving even more interesting. The report was vetted by senior archaeologists outside the department, one of them being Prof. K. Rajan, who excavated the Porunthal and Kodumanal sites. The department plans to translate the report into several languages.

The stratigraphy of all the trenches at Keeladi from the lower level to the top level carries distinct features with the same culture. The most significant findings came from trench/quadrant YP7/4. There were three cultural layers found in this quadrant, the lowest layer being 353 cm to 200 cm below surface belonging to circa 580 BCE. The natural soil was found at 410 cm. These cultural layers are identified by archaeologists on the basis of soil deposit, soil colour, texture and the nature of the artefacts found. The middle layer being 200 cm and above was placed between the mid-third century and 1st century BCE. According to Prof. Rajan, the lowest level can be called Phase 1 of the Early Historic Phase and the middle level can be called Phase 2 of the Early Historic Phase.

What Keeladi tells us

First, Keeladi essentially comes under the Second Urbanisation Phase like Rajgir. The factors determining an urban settlement are the size of a settlement, its trade activities within the region and outside, the existence of trade routes, sophisticated technologies and industries, the existence of multiethnic and linguistic groups, usage of luxury/elite items, usage of script, a codified language, literacy level and the existence of statecraft. Some of these are evident from the artefacts obtained in the site (see table).

Second, the lowest layer has yielded potsherds with Tamil Brahmi (also called Tamili) inscriptions and graffiti. With additional evidence, this will attest to the use of writing during this period. The earlier view of a writing system in Tamil from the 3rd century BCE now gets pushed back to the 6th century BCE from the carbon sample obtained in the same cultural layer. Since this is a predominantly industrial site and not a habitational or burial site, more evidence must emerge.

Amarnath Ramakrishna has said that this could also be a habitational site as it contains finished goods. The establishment of carbon-dated reference may make Keeladi an “index site”.

So far, the Iron Age of Tamil Nadu was generally dated on the basis of pottery like BRW and other megalithic antiquities that could not be dated accurately owing to non-availability of radiometric dates for some earlier excavated areas. Testing of the Keeladi artefacts has cleared the air to a great extent. However, these conclusions are based on the limited data available at hand. When more artefacts are unearthed, there may be more surprises.

Key findings

While excavation is a major activity, following it up with accurate dating of excavated artefacts is important. This is done by testing them at certified laboratories. Reliable practices are followed around the world for samples such as terracotta, charcoal and other artefacts.

The charcoal obtained at the lowest layer was sent to the Beta Analytics Laboratory in Miami, Florida, United States. Charcoal and wood are considered to be the most widely used and preferred materials for accelerator mass spectrometry (AMS) radiocarbon dating as these materials do not need complex pretreatment. Willard Libby, the Nobel leaureate and a pioneer in radiocarbon dating, has identified charcoal to be the most reliable material to carbon–date. For petrographic analysis, samples were sent to the Earth Science Department of Pisa University (ESDPU) in Italy. On the basis of the results obtained from these laboratories the following conclusions were drawn.

One of the significant discoveries in the site was the unearthing of heaps of pottery, suggesting the existence of a pottery-making industry at the site. The minero-petrographic analysis conducted on samples by the ESDPU revealed that the pottery was made from locally available material while a few pieces came from other areas. This suggests the existence of similar settlements and exchange of goods from neighbouring regions, probably through traders, craftsmen and visitors.

The archaeological material unearthed depicts the lifestyle of the Keeladi people, their commerce and the existence of industries at the site.

To quote from the report of the ESDPU: “It is worthy of note that in Keeladi the technological routine employed to obtain red and black ware is unvaried over the time; particularly, compositional and textural features are homogenous in potteries dated from 600 BCE to 200 BCE, testifying the convey of technology and raw material source exploitation over all the site occupancy.”

The AMS analysis of the carbon material taken from charcoal at the Beta Analytics Laboratory found that it belonged to 580 BCE. Charcoal was found at 353 cm depth, which is the lowest layer, and the potsherds with Tamil Brahmi scripts were found in the same layer. This charcoal was used for testing.

Nearly 56 potsherds containing Tamil Brahmi inscriptions have been found. Some of them read as “vananai”, “atan”, “kuviran atan”, “atanedunka”, “kothira”, “tira an”, and “oy”. Out of the 56 potsherds, more than 20 were found below 3 m depth from the surface and more than 50 per cent of them were black and red ware.

During its excavations, the ASI had unearthed 72 Tamil Brahmi-inscribed potsherds at a level of 2 m and they were dated to the 2nd century BCE. The inscriptions were read as “athan”, “tisan”, “uthiran”, “iyanai”, “vendhan”, “sampan”, “perayan”, “kuviran kuravan”, and so on. The potsherds with inscriptions have to be seen in a larger perspective. So far, 27 AMS dates have been received from four Early Historic sites of Tamil Nadu yielding Tamil Brahmi-inscribed potsherds: they are Keeladi (16), Alagankulam (4), Porunthal (2) and Kodumanal (5). The time range falls between 6th century BCE and 1st century BCE.

Rajan says, “Of the 27 dates, five dates fall between 5th and 4th centuries BCE, four dates between 4th and 3rd centuries BCE, 15 dates between 3rd and 2nd centuries BCE, two dates between 2nd and 1st century BCE and one date goes back to 6th century BCE. The availability of more than a thousand inscribed potsherds in different stratigraphical contexts, besides considerable number of inscribed seals, rings and coins in different parts of Tamil Nadu, clearly suggests the long survival of this script. Of the 27 AMS dates, five fall in 5th century BCE. Hence, the availability of one date in 6th century BCE has to be studied along with the remaining AMS dates.”

The brick structures were found at the level of the second phase of the Early Historic period.

A ring well (diameter 92 cm and each ring with a height of 32 cm) emerged in another trench (A1/2), in eight courses, probably cut out of lower level of layer-1 and upper level of layer-2 and the same continues until layer-4. It was traced at the middle of the trench adjacent to the northern section.

The existence of a dyeing industry in Keeladi was already identified during the ASI excavation. The latest excavation yielded spindle whorls, sharply pin-pointed bone tip tools used for design creations, hanging stones of the yarn, terracotta spheres, copper needles and earthen vessels to hold liquid, which suggest the existence of various stages of a weaving industry.

Many objects excavated point to the artistic, cultural richness and prosperous lifestyle of the Keeladi people. Artefacts such as gold ornaments, copper articles, beads of gems, beads of semi-precious stones, glass beads, shell bangles, ivory bangle pieces and ivory comb from the site reflect this. A large heap of more than 477 glass beads indicates the presence of a glass bead industry. Agate and carnelian beads were found as finished products, suggesting that they might have been imported through a commercial network. (Several factors are taken into consideration including comparison with material identified from other excavation sites to decide if they were made in situ.)

Games and pastimes

Another important finding is the material relating to games and pastimes. Dice, both terracotta and ivory, gamesmen, and hopscotch evidence (around 600) have been unearthed. Even now the game of hopscotch known as “pandi” or “nondivilayattu” is prevalent in Madurai and its neighbourhood. Some 80 gamesmen of similar shape but of various sizes were also unearthed. The excavation also yielded terracotta figurines of humans and animals.

Sangam literature has several references to pastimes such as dice and other games, and the Keeladi findings seem to validate them. In his book, The Tamils 1,800 Years Ago, V. Kanakasabhai draws heavily on the evidence of the Sangam poems and from inscriptional evidence to paint a picture of a sophisticated society. Indrapala, Champakalakshmi and Rajan Gurukkal have also written on the trade and urbanisation of the region using these sources.

Sangam literature date

Until now, it was believed that Sangam literature belonged to the period from 300 BCE onwards, but this needs to be relooked at by scholars in the light of the current findings.

One of the faunal remains that was tested was found to be Bos indicus (also called Zebu cattle), a native species. These humped bulls are described in the Kalithogai for the famous “eru thazhuvudhal” sport still practised in this region.

Nearly a thousand graffiti marks have been found in addition to Tamil Brahmi script on potsherds. Some of the graffiti appears similar to the Indus signs. The department identified several of them but listed only a few single signs that resemble the Indus signs in its report.

The sign list provided by the Indus scholar Iravatham Mahadevan in his 1977 work The Indus Script: Texts, Concordance and Tables has been taken for this comparison and their numbers have been provided. Whether there is any connection between the two needs to be explored further.

The first systematic survey of the Keeladi region was done in the 1950s by Dr K.V. Raman of the ASI, who conducted a formal village-to-village survey in Madurai, Thirumangalam and Melur. In 2013, the Vaigai was chosen for archaeological exploration by the ASI for the role it played in the development of the early Pandya kings of Madurai. The objective was to understand the missing links of the Iron Age to the Early Historic period in the Vaigai river valley, according to Amarnath Ramakrishna.

A major chunk of the Tamil Brahmi inscriptions found in Tamil Nadu were from the Vaigai river region. So, Keeladi and all other potential sites close to the banks of the Vaigai were mapped. This river starts from the Suruli hills of the Western Ghats and meanders through Sinnamanur, Madurai and Paramakudi and drains in the Bay of Bengal near Alagankulam in Ramanathapuram district.

It runs for nearly 250 km and all the identified potential archaeological sites are by the riverside. There are numerous references to the river in Sangam literature. The south-west and the north-east monsoon fill the river like any other river in southern India.

The department decided to call Keeladi a river-based civilisation as it is on the banks of the river along with several other potential sites. Alagankulam has already been excavated at one end. Not much is known about the weather pattern and flow of water 2,500 years ago. The only reference would be the Sangam literature which talks about it, and the archaeology seems to validate it.

The Sangam literary works Akananuru, Purananuru, Madurai Kanchi, Kalithogai and Paripadal describes the grandeur of Madurai. The area has been continuously inhabited since ancient times. As in the case of Rajgir, which is referenced in the Pali Canon, Keeladi may be considered a case for Sangam literature.

A poem on Madurai city and one on Vaigai from the Sangam literature provide a glimpse:

“There are merchants who buy lovely gems, pearls

And gold and sell imported things from fine countries…

…their gorgeous houses are clustered together,

Appearing like a group of hills.” (Madurai Kanchi-500)

“May I lose the great joy in the company of my friends who are as precious to me as my own eyes —Mavan who is the ruler of Maiyal town and cities surrounded by the famous Vaiyai River with abundant riches and unending prosperity, Anthai of long established Eyil town, Anthuvan Sathan of great renown, famous Athan Alisi, Iyakkan with intense rage and others!” (Puram 71)

(translated by Vaidehi Herbert, courtesy www.learnsangamtamil.com).

It is important to note that some of the names in these poems are found on the potsherds and more research needs to be done on this. Prof. Dilip K. Chakrabarti (Emeritus Professor of South Asian Archaeology, Cambridge University), in his book Ancient Routes of the Deccan and the Southern Peninsula (2010), ascribes the general date of the formation of the Sangam literature to about 500 BCE and states that the earliest ancient Pandyan kingdom could be dated, even on the basis of the testimony of Megasthenes, to 6th-7th century BCE. However, these aspects may be left to scholars for more insight.

The department has commenced work on the fifth season and has taken some important steps. Instead of digging everywhere, it has decided to use three important tools to identify potential locations and execute the excavations in an efficient manner. Normally, field survey and surface exploration provide some leads to identify a site. Using unmanned aerial vehicles (UAVs), nearly 15 sq km have been surveyed. Through this method, material such as clay, iron and magnesium are identified in the top surface up to a certain depth. This would help locate the mounds and potentially stronger anomalies (objects under earth).

The second step is employing a magnetometer. Of the areas identified by the UAV, the TNSDA shortlists those close to the earlier excavated sections of seasons 1-3 using the magnetometer. Further sections are identified and zeroed in. Then a ground-penetrating radar is used to further refine the areas indicated in the previous process. Structural anomalies are identified up to a depth of 8 m. These anomalies are positioned and marked with GPS information.

Now, excavations can be done in specific locations where objects are most likely to occur. These are mapped and reports will be made available to any agency wanting to excavate. This technology is being deployed for the first time in India at Keelaadi. The UAV and ground-penetrating radar support was taken under the guidance of the Institute for Remote Sensing Department of Anna University. The magnetometric survey was supported by the Indian Institute of Geomagnetism at Navi Mumbai.

In the fifth season, the department has already unearthed a large brick structure, a 16-metre-long wall with three rows of bricks exposed. It is a water channel-like structure, exposed at a depth of 50 cm, which is a continuous structural activity previously exposed by the ASI. The length of the structure goes up to 5.80 m and width 1.60 m. At the surface of the channel, an alignment of roofing tiles has been noticed, indicating the secondary usage of roofing tiles as flooring until the middle of the channel. A small terracota pipeline which may be a drain line has also been unearthed but is yet to be labelled. The details of these new findings are expected to be published at the end of this season.

The most significant features of the Keeladi excavations are, firstly, the enormity of structural features and the fineness of the artefact assemblage indicating urban character. The assemblage raises the question of the antecedents of what can be defined as urban culture. The material culture, technology, engineering and aesthetics reflected in the artefacts and features support this.

Ancient Tamilakam

The noted archaeologist P.J. Cherian says: “Treating archaeological sites in isolation is a bane of archaeological practices. South India is no exception. There are several sites in ancient Tamilakam (comprising present-day Tamil Nadu and Kerala) and Muciri Pattinam or Muziris site at Pattanam on the Periyar delta region that have given both typological evidence and radiocarbon dates, again from secure stratigraphic contexts, confirming the beginnings of such a settlement to be around 1000 BCE.”

The Keeladi excavations so far have not produced any known religious motifs. Considering that only four seasons have been completed, we may have to wait for further excavations to see if any object relating to the faith of the people of the time is revealed. In Adichanallur, a mother goddess made of bronze was unearthed.

Cherian also believes that a comparative study of sites such as Veeram Pattinam (Arikamedu), Poompuhar, Korkai, Alagankulam and Pattanam (Muziris) in the hinterland sites of ancient Tamilakam could help unravel the civilisational foundations of south India.

The technological advances reflected in the archaeological data at Keeladi, Pattanam, Kodumanal and many other sites clearly bring out the industrial vigour of ancient Tamilakam. Keeladi, along with contemporary sites, confirm that the agrarian and technological revolution implied in the five thinai geographies of Tamilakam facilitated both hinterland and transoceanic trade during the Early Historic period. This is the milieu in which the Keeladi archaeological data become pathbreaking.

Keeladi has emerged as a significant site as archaeologists consider this as an index site. Earlier references were drawn from other sites to determine dates. For example, Arikamedu was dated based on Roman coins as a reference. Keeladi, with the carbon samples from the excavations by the ASI and the TNSDA, may provide “absolute dating” and become a reference for future excavations.

Interest in south Indian history began with British officials such as F.W. Ellis, partly because of curiosity regarding the country.

The latest revelations from Keeladi have rekindled interest in the region’s antiquity, offering tremendous scope and a lot of hope.

R. Sivanantham is Deputy Director of the Tamil Nadu State Department of Archaeology. Sundar Ganesan is Director, Roja Muthiah Research Library.

Reply all
Reply to author
Forward
0 new messages