“ஙங்ஙஃ”
(கிறுக்கன்)
“ஙங்கலந்தன ஙேதிஙேவலல்
ஙங் கலந்தன ஙாஙிஙாவரம்
ஙுங்கலந்தன ஙூஙௌஙோரிது
ஙெங் கலந்தன ஙேரிஙீத்தலே”
அன்பார்ந்த சகோதரி, சகோதர்களே! ஆச்சரியப் படாதீர்கள்! அல்லது சிரிக்காதீர்கள்! அல்லது குழப்பமடையாதீர்கள்! மேலே காட்டப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாமலிருந்தால், அதற்கு நீங்களே காரணமாவீர்கள். ஏன் அதையெல்லாம் பாடசாலையில் படிக்காமல் இருந்தீர்கள்? “ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமலிருந்தால் எங்களுக்குத் தெரியவில்லை என்றால், ஆசிரியரிடம் தொந்தரவு செய்து ஏன் கேட்டுத் தெரியாமலிருந்தீர்கள்? பாவம். உங்களுடைய பரிதாபகரமான தற்போதைய நிலைக்கு நான் இரங்குகிறேன்.
நான் கூறினாலன்றி இத்தக்கு குசுகுசுவினாலும் அதைத் தெரிந்து கொள்ளப் போவதில்லை. இப்போது கவனித்துப் பாருங்கள்! கிறுக்கனுக்கு நிகரானவரோ, சமமானவரோ இந்த உலகத்தில் ஒருவருமில்லையல்லவா? ஹா!! ஹா!! ஹா!!! மேலே கூறப்பட்டுள்ளதை இன்னது என்பதை எவர் அறிவித்தாலும் சரி, அவருக்கு ஆயிரம் கோடி பரிசளிக்கத் தயார்.
பாவம்! இன்னும் உங்களைக் குழப்ப நிலையில் வைக்க விரும்பவில்லை. எனவே இது இன்னது என்பதை விளக்கி வைக்கிறேன். கவனியுங்கள் “ஙங்ஙஃ” என்றால் பாடல் என்பது நான் கண்டுபிடித்த பொருளாகும். ஆகவே அதன்கீழ் கூறப்பட்டிருப்பது ஒரு புதிய பாடலாகும். அதன் பொருளை வரிசையாகக் கூறுகிறேன்.
| பதவுரை | ||
| ஙிங்கலந்தன | - | கடவுளைப்பற்றி |
| ஙேதி | - | கவலைப்படுகிறவர்கள் |
| ஙேவலல் | - | கடைந்தெடுத்த |
| ங்ங் கலந்தன | - | முட்டாள்களேயாவர் |
| ஙாஙி | - | நீ |
| ஙாவரம் | - | முன்னேற |
| ஙங்கலந்தன | - | விரும்பினால் |
| ஙூஙென | - | சுயமரியாதை |
| ஙோரிது | - | இயக்கத்தில் |
| ஙெங்கலந்தன | - | சேர்ந்து |
| ஙேரி | - | அதை (முன்னேற்றத்தை) |
| ஙீத்தலே | - | அடைவாயாக |
என்பதே அப்புதிய பாடலின் பொருளாகும். கருத்துரை யாதெனில் “கடவுளைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவார்; நீ முன்னேற்றமடைய விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக” என்பதேயாகும்.
“இதென்னையா! புதுமையாய் இருக்கிறது! இப்படியும் ஒரு பாட்டு உண்டா? “ங” வரிசையில் பெரும்பாலான எழுத்துக்களுக்குத் தமிழ் மொழியில் அர்த்தமில்லாமல் இருக்கின்றனவே! அப்படியிருக்கும்போது நீர் என்னவோ கூறுகிறீரே?” என்பதாகப் பலரும் ஐயுறக்கூடும். நான் முதலிலேய குறிப்பிட்டு இருக்கின்றேனே, இது புதிய பாடல் என்பதாக. ங, வரிசையில் பல எழுத்துக்கள் அநாவசியமாக விடப்பட்டிருப்பதை நிவர்த்தி செய்து அவற்றிற்கும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று கச்சையை வரிந்து கொண்டு முதலில் ஒரு பாடல் போட்டேன். இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால் அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அவசியமானவைகளாகச் செய்துவிடலாம்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதாவது நான் மேலே ஆக்கியுள்ள பாடலும் பாடல்தான். ஏனென்றால், ஆதியில் என்னைப்போலவே முதலில் எழுத்துக்களையும் வாக்கியங்களையும் உண்டாக்கினார்கள். எனவே அவர்களும் மனிதர்தாம்; நானும் மனிதர்தான். ஆகவே நான் புதுமுறையில் பாடல் போட்டிருப்பது தவறாகுமா? இதே பாடல் மக்களிடம் சில ஆண்டுகள் வழங்கிவரின் இதுவும் மற்றவையும் ஒன்றாகிவிடாதா என்பது கவனத்திற்கு உரியது. எனவே, புதுமை என்பதைக் கொண்டு வெறுப்பதோ, அதிசயிப்பதோ அறிவீனமாகும். என்ன நேயர்களே! எல்லாம் விளங்கி விட்டதா?
இந்தப் பாட்டுக்கு அர்த்தம் கூறுகிறர்வளுக்கு ஆயிரம் கோடி பவுன் பரிசளிப்பதாக நான் முதலில் சொல்லியிருந்ததற்கு, நானே பொருள் கூறிவிட்டேனாதலால் அந்தப் பரிசும் எனக்கே உரியதாகும் என்பதுடன் அமர்கிறேன். ஆ! ஆ!! ஆ!!!
புதுவை முரசு, மார்ச்சு, 1932
_____________________________________________________________________________________________________
எனது குறிப்பு: கலைச்சொல் உருவாக்குவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து 👇
இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால் அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அவசியமானவைகளாகச் செய்துவிடலாம்.
https://groups.google.com/d/msg/mintamil/TFDzVWlExj4/SuSqvFl5BQAJ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/caf24868-c1fb-45cc-b6b5-572cb56feaf4%40googlegroups.com.
14.கண்டொன்று சொல்லேல்.
15.ஙப் போல் வளை.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjQzS1W3Q%2Bt6wTe1sJ%3DaR2DMBTPYkw%3D0xY1Fv_maJo2dbE8%2BA%40mail.gmail.com.
- ஙல்லும் திருக்குறளில் (ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். 673 ) ஙல்லும் எனும் சொல் உண்டு9b05-69ecfd001b31%40googlegroups.com.
16 ம் பாடல் ஙகரத்தில் தொடங்குவது05.097 சிந்திப் பார்மனத் - I want to share this Thirumurai with you.இந்தத் திருமுறையை Shaivam.org Mobile செயலியில் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. பகிர்கின்றேன். படித்து மகிழவும்.https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/203/thirunavukkarasar-thevaram-sitthathokai-thirukkurunthokai-sindhip-paarmanthஇந்த இலவசச் செயலியைப் பதிவிறக்கம் செய்க: https://play.google.com/store/apps/details?id=org.shaivamNamahshivaya
Ganesh
For Shaivam.org
--------------------------------
Install Shaivam.org mobile app for Android (https://play.google.com/store/apps/details?id=org.shaivam) or Apple (http://itunes.apple.com/in/app/shaivam-org-mobile/id1363893783?mt8)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85jw0kppuZLF-BRCHa%2BqViRH9RJTigOteLFRSgmkP220Gw%40mail.gmail.com.
rnk
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/47c03947-d294-49f3-b2bd-26aa477a3725%40googlegroups.com.
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.
ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?யோகியார்
On Tue, Sep 3, 2019 at 7:22 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும்.திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.
இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை
’ccc
அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவதுஎன அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்குஅண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.சளிப்பிடித்துப் பேசும்போது ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)நா. கணேசன்
----
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUd0R%2BYWZx-XPTYhfcxZLYqT20Jhs-zWzs%3DQidMqPoMU_g%40mail.gmail.com.
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50970&padhi=097&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC5.97.16ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.தருமை ஆதீன உரைநூலில் உள்ள குறிப்பு:ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான். படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார்.ஆகவே, நீங்கள் தந்த செய்தி புதிது அன்றுபோல் தோன்றுகின்றது.
On Mon, Sep 2, 2019 at 9:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு
ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.
(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)
இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு. பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை)
இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர். (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.
தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார். அவருக்கு ஒரு பொறி தட்டியது. இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது. இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.
--"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNATejtibnNj2N06dLeEEoUh4NB6GKM54jwZuxGGVBJSA%40mail.gmail.com.
இப்போது புரிகிறது " ஙப்போல் வளை " என்ற தொடர், ஆத்திசூடியின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பது!- புலவர் இராமமூர்த்தி .
On Tue, Sep 3, 2019, 03:01 N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Sep 2, 2019 at 11:36 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?யோகியார்சரிதான் ஐயா.இடபத்தின் முதுகில் கம்பளம்: ஙகர எழுத்தின் கிண்ணக்குழிக்கு ஒப்பு.நா. கணேசன்
On Tue, Sep 3, 2019 at 7:22 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும்.திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.
இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை
’ccc
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeFO1PyvQdBzhR0NOEPt_k8Xn03_JscZsv7V4JTs0%3D19A%40mail.gmail.com.
{Entry: A01__448}
முற்கு வீளை இலதை - முதலியன ஒரோவழிப் பொரு ளுணர்த்தினவேனும், எழுத்து ஆகா ஒலிகளாம். கடலொலி சங்கொலி முதலியன பொருள் உணர்த்தாத, எழுத்தாகா ஒலிகளாம். முற்கு - வீரர் போர்க்கு அழைக்கும் அறைகூவல் கர்ச்சனை; வீளை - சீழ்க்கையிடும் ஒலி; இலதை - அடிநா அடியில் தோன்றுவதோர் ஒலிக்குறிப்பு; ஆடுமாடுகளை ஓட்டும் ஒலி. (தொ.பாயிரம், நச்.)
தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயின வும், தன்னொடு மணவினையும் மகிழ்வும் முதலாய பிற பொருளையும் உணர்த்தும் சங்கொலி நகையொலி முதலா யினவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித் தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படாத ஆயின. (பா. வி. பக். 170) http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/A01.html
{Entry: N14__427}
எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.
முற்கு - முக்குதல்; வீளை - சீழ்க்கை அடித்தல்;
இலதை - கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் - போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.
எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே - சென்று
மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
அறியாயோ அண்ணாக்கு மாறு’
என ‘ உஃகுவஃகு ’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி - எழுத்தாணி; முறி - தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395, 396)
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/N14.html
On Ideophones from PiGkalantai NikaNTu.
[****** ]
[****** ]
[****** ]
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CANzcpMeJk63cVsE-nRxQ6avHtAYu%2BerozmwGBmBfOtz9gwXXnA%40mail.gmail.com.

ஙகரம் என்னும் எழுத்தின் உருவத்தால் குறுணி (மரக்கால்) குறியாகவும், நந்தி (அப்பர்) என்றும் பொருள் பெறுவதைப் பார்த்தோம் [1]. இன்னும் ஒரு சொல், ஙனம் பற்றி இலக்கண உரையாசிரியர் விவரித்துள்ளனர். ஙனம் தனியாக இயங்காது. சுட்டெழுத்து, வினாவெழுத்துடன் சேர்ந்து விகுதியாகவே செயல்படும்.
ஙனம் ṅaṉaம் , part. Affix in the sense of place, manner, room, mode, way, used after the demonstrative particles அ, இ, உ, எ, யா, as அங்ஙனம், etc.; சுட்டெழுத்து வினாவெழுத்துக்களை ஒட்டித் தன்மை, இடம் முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல். (நன். 106, உரை.)
அங்கு நப்பிரத்தியம் பெற்று அங்கனம் என்று வரும். அங்கனம் > அங்ஙனம். மலையாள மொழியில் -ங்க- எல்லாம்
-ங்ங- என்று திரிந்துவிடும். ஆனால், தமிழில் ஙனம் என அ, இ, உ, எ, யா-வுக்குப் பின்னால் வரும் இடைச்சொல்
மட்டும் மாறுகிறது. எனவே தான், தனியாக நன்னூல் உரைகாரர் குறித்துள்ளார்.