கலைகளைத் தேடி ...

255 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 14, 2019, 12:31:35 AM9/14/19
to மின்தமிழ்

AUGUST 24, 2019

மூவர் கோயில் கொடும்பாளூர்



——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


            விராலிமலைக்கு  அருகே  புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவில் திருச்சி-மதுரை  சாலையில் கொடும்பாளூர் அமைந்துள்ளது. சங்ககாலம் முதலே  புகழ்பெற்ற இவ்வூர் கொடும்பை நகர் என்றும் அழைக்கப்பட்டதை அறிகிறோம். 



கோயில் அமைப்பு:
            பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூவர் கோயிலானது, தெற்கு வடக்காக மேற்கு நோக்கிய நிலையில் இரண்டு கோயில்கள் முழுமையானதாகவும் மற்ற ஒரு கோயில் அடித்தளத்தை மட்டும் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 

            மூவர் கோயிலின் மூன்று கோயில்களுக்கும் பொதுவான மகா மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடமும் மற்றும் பிரகார சுற்றில் 16 பரிவார தெய்வங்களுக்கான சன்னிதியின் அஸ்திவாரங்கள் மட்டுமே உள்ளன. மேற்கே ஒரு கோபுரமும் இருந்த அடையாளம் காணப்படுகிறது.

            இது அதிட்டானம் முதல் கலசம் வரை கல்லாலான கல் கோயிலாகும். இக்கோயில் சதுரவடிவ இரு தள விமான அமைப்பு உடையதாக உள்ளது.  முழுமையாக உள்ள  ஒரு கோயிலின் கருவறை உள்ளே மட்டும் ஆவுடையார் இல்லாத லிங்க வடிவில் மூலவர் உள்ளார். விமானத்தின் உள் பகுதியானது உள் கூடாகக் காணப்படுகிறது.



சிற்பங்கள்:
            இந்த இரண்டு கோயில்களின் கோட்டங்களிலும் மற்றும் விமானத்திலும் காலசம்ஹாரமூர்த்தி, கங்காதரர்,அந்தகாசுர வதை மூர்த்தி, உமா சகிதர், கஜசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், போன்ற சிற்பங்கள் உள்ளன.   கண்ட பகுதியின் நான்கு மூலைகளிலும் நந்தி காணப்படுகிறது.  துவார பாலகர்களும் மகரத் தோரணமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அதிட்டானத்தின் சிறப்பு:
            பாதபந்த அதிட்டானத்தில் ஜகதியானது பத்ம ஜகதியாகவும், குமுதம் விருத்தம் ஆகவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பட்டிகை வரி வியாள வரியாகக் காட்டப்பட்டுள்ளது. கருவறை சுவரின் மேலே பூதகண வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 

            இருபதாம் நூற்றாண்டில் இக்கோயில்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் போது கட்டுமான கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பது சில இடங்களில் பொருத்தமில்லாததாகக் காணப்படுகிறது.




தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.

தேமொழி

unread,
Sep 18, 2019, 4:41:14 AM9/18/19
to மின்தமிழ்
தூங்கானை மாடக்கோயில்கள்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ள விமானத்துடன் கூடிய கோயில்கள்  தூங்கானை மாடத் திருக்கோயில்கள். கஜபிருஷ்ட விமானம் என்ற பெயர் சிற்பசாஸ்திரம் ஆகமத்திலிருந்து கிடைக்கிறது. இவை  கஜபிருஷ்ட கோயில் அல்லது ஆலக்கோயில் அல்லது ஆனைக்கோயில் எனவும் அழைக்கப்படும். 

இந்த கட்டிடக்கலை அமைப்பு பெரும்பாலும் தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரியது. மாமல்லபுரத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் ரதம் என தற்பொழுது வழங்கப் பெறும் கோயில்களில்  நகுலன்-சகாதேவன் ரதம் தூங்கானை விமானம் கட்டுமானத்தை உடையது.


.
Inline image 2
Inline image 3



தூங்கானை மாடத் திருக்கோயில்களைக் கீழ்க்காணும் இடங்களில் காணலாம்...
1.  பார்பரா குன்று 
2.  அஜந்தாவின் 10 ,19, 26 
3.  பேட்சா 
4.  நாகார்ஜுன கொண்டா
5.  புதுப்பாடி
6.  ஐகோலே
7.  குடிமல்லம் 
8.  தர்மராஜ ரதம்
9.  சகாதேவ ரதம் 
10.  பெண்ணாகடம் 
11.  தின்னனூர் 
12.  குன்றத்தூர் 
13.  மணிமங்கலம் 
14.  திருமழிசை 
15.  திருவேற்காடு 
16.  வில்லிவாக்கம் 
17.  வடபழனி 
18.  மாசிலாமணி 
19.  சிறுகரும்பூர்
20.  கூரம்
21.  பொழாச்சலூர் 
22.  திருக்கழுக்குன்றம்  
23.  திருவெண்காடு 
24.  திருமீயச்சூர் 
25.  கொரட்டூர் 
26.  அயனாவரம் 
27.  குளித்தலை 
28.  திருப்பனந்தாள் 
29.  திருதலிஸ்வரர் 
30.  திருப்புலிவனம் 
31.  ஓரியூர் 
32.  அனந்தபுரம் 
33.  வீரட்டானேஸ்வரர்
34.  திரிபுராதகேஷ்வரர்
35.  போரூர் 
36.  தென்னேரி 37.தேனம்பாக்கம்
‌ இன்னும் பல ...

படங்கள் உதவி:  புகைப்படங்கள்  இணையத்திலிருந்து...

Innamburan S.Soundararajan

unread,
Sep 18, 2019, 5:58:41 AM9/18/19
to mintamil
பாடஸ்தலமாகிய இன்னம்பூர் எழுத்தறிவு நாதர் கோய்லையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னம்பூரான்

தேமொழி

unread,
Jan 17, 2020, 4:26:08 AM1/17/20
to மின்தமிழ்

மதுரை திரௌபதி அம்மன் கோயில்

மதுரை திரௌபதி அம்மன் கோயில்


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


            கிபி 1884இல் வாலா.பா. ராம கிருஷ்ண பாகவதர் அவர்களால் மதுரை தெற்கு மார்ட் வீதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மதுரை சௌராஷ்டிர தருமராஜர் சபைக்குப் பாத்தியமான கோயில்.  இக்கோயிலின் கும்பாபிஷேகம் 24. 1. 2016 அன்று நடத்தப்பட்டது.



கோயில் அமைப்பு:
            இரண்டு கருவறைகள், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

கருவறை:
            இரட்டை கருவறைகளில் ஒன்றில் இரண்டு அடி உயரம் உடைய நின்றகோலத்தில் திரௌபதி அம்மனும் மற்றொரு கருவறையில் தர்மராஜனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

அர்த்தமண்டபம்:
            அர்த்தமண்டபத்தில் பஞ்சலோகத்தால் ஆன பஞ்ச மூர்த்தியும், காளியம்மன்,கமல கன்னி, சந்தோஷிமாதா மற்றும் விநாயகர் இறை உருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.

மகாமண்டபம்:
            மகாமண்டபமானது சதுரம், எட்டு பட்டை, சதுரம், தரங்க போதிகை மற்றும் செவ்வகம், எட்டு பட்டை, செவ்வகம் தரங்கப் போதிகைகளுடன் கூடிய 25 எளிமையான தூண்களுடன்  காணப்படுகிறது.

            மகாமண்டபத்தில் கோயிலைக் கட்டிய ஸ்தாபகர் வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதர், உபதேச கிருஷ்ணன், முத்தாலு ராவுத்தர் சுவாமி (குதிரை வாகனத்தில்), ஸ்ரீ நல்லமுடி அரவாண் (ஐந்தடி உயரத்தில் முகம் மட்டும் கொண்ட சுதைச் சிற்பமாக), ஸ்ரீ சத்திய நாராயணன், ஸ்ரீ சுப்பிரமணியர்,  சித்திரகுப்தர் (பஞ்சலோகத்தில்), குரு (யானை வாகனத்தில்), சனீஸ்வரர் என்று அனைத்து உருவங்களும் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

            கோயிலின் வெளியே மகா முனீஸ்வரர் மற்றும் சூலக்கல் ஒன்றும் தனித்தனியாகச் சன்னிதியில் அமைக்கப்பட்டுள்ளன.



தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.

தேமொழி

unread,
Jan 25, 2020, 3:33:49 AM1/25/20
to மின்தமிழ்

கற்குவேல் அய்யனார் கோயில்



——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


திருச்செந்தூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது குதிரைமொழி கிராமம். இது ஒரு தேரி குடியிருப்பு.  தேரி என்றால் செம்மண்.  குமரிமுனையிலிருந்து தொடங்கி நாங்குநேரி, சாயர்புரம் வரை தேரி விரிந்து கிடக்கிறது. ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவர் இங்கு கிடைத்த புதிய கற்கால கருவிகளை ஆராய்ந்து இவை 10,000 ஆண்டிற்கு முற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். கால்டுவெல் தேரி மண்ணை எடுத்து வியன்னா ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்து இம்மண்ணை போன்று வேறு எங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார் மானாடு என்பது  மானவீரவளநாடு  என்றும் அழைக்கப்பெற்றது. இங்கு கி.பி. 1639 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது.  இப்பகுதியை ஆண்ட 10 நாடார் குறுநில மன்னர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் உள்ளது. இக்கல்வெட்டில் இந்த ஐயனார் கருக்கு வேலையன் என்று குறிக்கப்படுகிறார். கி.பி. 1703 இல் செம்பால் செய்த நகரா ஒன்று தானமாக அளிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

மூலவர்:
கற்குவேல் அய்யனார்; மகாமண்டபத்தில் விநாயகர், லாட சன்னியாசி போன்றோர் அமைக்கப்பட்டுள்ளனர்.



பரிவார தெய்வங்கள்:
பரிவார தெய்வங்களாக முன்னடியான், வன்னியராசர், பட்டவராயன், சுடலைமாடன், கருப்பசாமி, சின்னத்தம்பி, மாடசாமி, பொன் காத்த அய்யனார், பெரியாண்டவர், இருளப்பர், பிண மாலை சூடும் பெருமாள் செருக்கன், துப்பாக்கி மாடசாமி, எமதர்மர், புலமாடி அம்மன், புலமாடன் சாமி போன்றவர்கள் உள்ளனர் .



பெண் தெய்வங்கள்:
பேச்சி அம்மன், பிடிமண் அம்மன், பத்திரகாளி, பிரம்மசக்தி, இசக்கி அம்மன் மற்றும் சப்தகன்னியர்கள் பெண் தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள்.



திருவிழா:
கள்ளர் வெட்டு திருவிழா; இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வில்லுப்பாட்டு இசைக் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.



தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியர், மதுரை.
devi...@yahoo.in
https://www.facebook.com/devipharm


kanmani tamil

unread,
Jan 25, 2020, 5:23:06 AM1/25/20
to mintamil
இன்று கற்குவேல் ஐயனார் என்று அறிவிப்புப் பலகை இருப்பினும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையாரோடு சென்றபோது 'கற்குவாலை ஐயனார்' என்று யாரோ ஒருவர் உபயமாக வழங்கிய இரும்பு கேட்டில் பொறித்து இருந்தது நன்றாக நினைவில் உள்ளது. 

ஊர் திரும்பியவுடன் அதற்கு என்ன பொருள் என்று அகராதியில் தேடினேன். குவாலை = கற்குவியல் என்று இருந்தது. 
மணற்பாங்கான அவ்விடத்தில் ஏதோ கற்குவியல் இருந்திருக்க வேண்டும்;  அதனால் அப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். 

சென்ற ஆண்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் அங்கு சென்றிருந்த போது என் வீட்டுக் குட்டிப் பிள்ளைகளுக்கு 'அந்தக் கோயில் முந்தைய கால சமணக்கோயில் ' என்று நான் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தது; பூசாரி காதில் விழுந்து விட்டது. "ஆமாம்" என்று நான் சொன்னதை ஆமோதித்தார். அத்துடன் 'இந்த ஐயனார் தான் இப்போது மிகவும் புகழ் பெற்றுள்ள ஐயப்பனும் ஆவார்' என்றார். 
'அதெப்படி? அவர் கன்னிச்சாமி என்கின்றனர்; இவர் இரண்டு மனைவியரோடு அல்லவா இருக்கிறார்' என்றேன்.   
'எல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றமும் மறதியும் தான்'. 
கூட்டம் மிகுதியாக இருந்தது. 
'கூட்டமில்லாத ஒருநாளில் வாருங்கள்; எல்லாக் கதையும் சொல்கிறேன்'   என்றார். 
அதற்கப்புறம் எனக்கு இன்னும் வாய்ப்பு கிட்டவில்லை. 
அன்று எடுத்த படங்கள் கூட இன்னும் என் சேகரத்தில் தான் உள்ளன.
சக 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/61d25f3d-1023-408a-9ab8-1bcbf03f2831%40googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 25, 2020, 7:56:06 AM1/25/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sat, Jan 25, 2020 at 4:23 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இன்று கற்குவேல் ஐயனார் என்று அறிவிப்புப் பலகை இருப்பினும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையாரோடு சென்றபோது 'கற்குவாலை ஐயனார்' என்று யாரோ ஒருவர் உபயமாக வழங்கிய இரும்பு கேட்டில் பொறித்து இருந்தது நன்றாக நினைவில் உள்ளது. 

ஊர் திரும்பியவுடன் அதற்கு என்ன பொருள் என்று அகராதியில் தேடினேன். குவாலை = கற்குவியல் என்று இருந்தது. 
மணற்பாங்கான அவ்விடத்தில் ஏதோ கற்குவியல் இருந்திருக்க வேண்டும்;  அதனால் அப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். 

குவாஅன் = குவியல் எனத் திருவாசகத்தில் உள்ளது. குவான்/குவால் = குவாலை.

குவால் kuvāl , n. < குவவு-. 1. Heap, pile; குவியல். (பிங்.) 2. Collection, group; கூட்டம். மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124). 3. Mound, hillock; மேடு. (திவா.) 4. Abundance, excess; அதிகம். இத்தையே திருவுள்ளத்திலே குவா லாகக்கொண்டு (ஈடு, 2, 7, 3). 5. Heap of threshed paddy; நெற்போர். (திவா.)  (MTL) 

ரா. ராகவையங்கார், திருவடிமாலை, பாடல் எண்: 87 :: குவால் (அ) குவாலை வருகிறது.
----------
ஐயனாருக்குப் பல ஊர்களில் பூரணை, புஷ்கலை என இரு மனைவியர் உண்டு.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jan 26, 2020, 7:08:20 AM1/26/20
to vallamai, mintamil
விளக்கத்திற்கு நன்றி .
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcjEC%2BG_Wt2ggYn4FaGNGmrog7NndmXKrdDLaKr76%2BKJQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 26, 2020, 11:47:15 AM1/26/20
to மின்தமிழ், vallamai
On Sun, Jan 26, 2020 at 6:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
விளக்கத்திற்கு நன்றி .
சக 


திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்வாலை என்ற இடத்தில் 1000+ ஆண்டு பாறை ஓவியங்கள் உண்டு.
கண்டுபிடித்து, ஜர்னல் ஆஃப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆசியன் ஸ்டடீஸ் வந்தபோது போயிருக்கிறேன்.

கீழ்குவாலை என்பது பெயர். கற்குவியல்கள் உள்ள இடம்:

பழைய பெயர் அறியாமையால், கீழ்வாலை, கீழ்குவாளை, கீழ்குவளை என்றெல்லாம் இணையத்தில் ....

நா. கணேசன் 

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctTtwWjNE15Fo0Obtiq4TfkfqHdsxBJpiwuOEpWDAD3fA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 26, 2020, 11:57:27 AM1/26/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai



On Sun, Jan 26, 2020 at 6:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
விளக்கத்திற்கு நன்றி .
சக 


திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்வாலை என்ற இடத்தில் 1000+ ஆண்டு பாறை ஓவியங்கள் உண்டு.
கண்டுபிடித்து, ஜர்னல் ஆஃப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆசியன் ஸ்டடீஸ் வந்தபோது போயிருக்கிறேன்.

கீழ்குவாலை என்பது பெயர். கற்குவியல்கள் உள்ள இடம்:

பழைய பெயர் அறியாமையால், கீழ்வாலை, கீழ்குவாளை, கீழ்குவளை என்றெல்லாம் இணையத்தில் ....

நா. கணேசன் 



தவாவலி அரக்கர் என்னும்
     தகா இருள் பகையைத் தள்ளி,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற
     காலத்தின் கூட்டம் ஒத்தார்;
அவா முதல் அறுத்த சிந்தை
     அனகனும், அரியின் வேந்தும்,
உவா உற வந்து கூடும்,
     உடுபதி, இரவி, ஒத்தார். - கவிச்சக்கரவர்த்தி கம்பர்
 
அருணகிரிநாதருக்கு விருப்பான சொல்: குவால்.

கள்ளக் குவாற்பை தொள்ளைப் புலாற்பை 

வரி வரால் குவால் சாய  

...
மறைந்துவிட்ட ஒரு பழஞ்சொல். குவால்/குவான்/குவாலை

kanmani tamil

unread,
Jan 26, 2020, 12:40:48 PM1/26/20
to vallamai, mintamil
புதுத்தகவல்கள் மூலம் அறிவு கொளுத்தியமைக்கு நன்றி .
சக  

தேமொழி

unread,
Mar 25, 2020, 12:12:13 AM3/25/20
to மின்தமிழ்
அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்

தேனி போடி சாலையில் கோடாங்கிபட்டி அருகில் உள்ள ஊர் தீர்த்தத்தொட்டி

இங்கு மூலவராக ஆறுமுகக் கடவுள் திரிதள விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி தருகிறார்.
இங்கு இருக்கும் சிற்பங்கள் நாக கணபதி நாக சுப்பிரமணியர் ருத்ராட்ச சிவன் சப்தகன்னியர் போன்றவை உள்ளன.
கோயில் வளாகத்தின் உள்ளே கோபுரத்திற்கு எதிர்புறம் வற்றாத நீர் வரும் நீர் ஊற்றாகத் தீர்த்த தொட்டி ஒன்றும் உள்ளது.

virupatchi temple1.jpg

virupatchi temple2.jpg

virupatchi temple3.jpg

virupatchi temple4.jpg



இக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு 27 4 2018 அன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுள்ளது.

தேமொழி

unread,
Mar 26, 2020, 12:01:30 AM3/26/20
to மின்தமிழ்
மதுரை மாரியம்மன் கோயில்
தெப்பக்குளம் மைய மண்டபம்

இந்த மைய மண்டபமானது கிபி 1635 ல் கட்டி முடிக்கப்பட்டது. மற்றும் கி.பி 1981இல் செப்பனிடப்பட்டு உள்ளது.
நாகலிங்க மரங்கள், வேப்ப மரங்கள் சூழ இம்மைய மண்டபமானது அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் 20, 12, 4 என்ற வகையில் நாயக்கர் கால சிற்பங்களைக் கொண்ட தூண்களுடன்( இதில் 28 அணி ஒட்டி தூண்கள்) இம்மண்டபத்தின் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் நாயக்கர் கால சிற்பங்களும், நாயக்க  மன்னர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாரியம்மன்1.jpg

மதுரை மாரியம்மன்2.jpg

மதுரை மாரியம்மன்3.jpg

kanmani tamil

unread,
Mar 26, 2020, 12:32:58 AM3/26/20
to mintamil
அந்த மையமண்டபத்தின் கோபுரமாடத்திற்குச் செல்லப் படிக்கட்டுகளும் உள்ளன.  ஆனால் பெரும்பாலும் அவை யாரும் மேலே ஏற இயலாத படி; கொச்சைக் கயிறு போட்டுக் குறுக்கும் மறுக்குமாகக் கட்டித்; தடை செய்யப்பட்டிருக்கும். 

இத்தெப்பக்குளத்தை வண்டியூர்த் தெப்பக்குளம் என்று சொல்வது பழைய வழக்கு. 
இந்தக் குளத்தைத் தோண்டும்போது கிடைத்தது தான் மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் முக்குறுணிப் பிள்ளையார். 
இது செயற்கையாகத் தோண்டப்பட்ட குளம். 
இங்கே தோண்டிய ஆற்று மண்ணைத்தான் திருமலை நாயக்கர் கட்டிட வேலைக்குப் பயன்படுத்தினாராம்.
சக 

   
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 31, 2020, 1:57:54 AM3/31/20
to மின்தமிழ்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பெரிய கோயில்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரமுடைய நாயனார் உடன் உறை
அருள்மிகு அறம்வளர்த்தநாயகி
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

கோயிலின் வேறு பெயர் குழந்தை வேல நாதசுவாமி.  இக்கோயில் பெரியகுளத்தில் உள்ள வராக நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது

கோயில் அமைப்பு:
மூன்று கருவறைகள் கொண்ட கோயில் மூன்றும் ஒரே நேர்கோட்டில் மற்றும் 3 கொடிமரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர்களாக அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வர நாயனார், அருள்மிகு அறம்வளர்த்தநாயகி இரு கரங்களுடனும், அருள்மிகு பால சுப்பிரமணியர் சுவாமி(ஆறு முகத்துடன் சண்முகர் மயில் வாகனத்தில் மூலவராக வீற்றிருக்கிறார்).

கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் மற்றும் ராஜ கோபுரத்துடன் கூடிய திருச்சுற்று  கொண்ட கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயில் சோழர் கால கட்டுமானம் கொண்ட கருவறையுடனும், பாண்டியர் மற்றும் நாயக்கர்களின் கட்டுமானங்களையும் கொண்டுள்ளது.
அதிட்டானம் - கபோத பந்த அதிட்டானம்
விமானம் - மூன்று தள விமானம் 
கிரீவம் மற்றும் சிகரம் வேசற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

3.jpg

2.jpg

1.jpg

4.jpg


கோட்டச் சிற்பங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள்:
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நிருத்தய விநாயகர், முருகனுடன் வள்ளி தெய்வானை, சரஸ்வதி, மகாலட்சுமி, சுமித்ர சண்டர், நடராஜர் ,பைரவர், ஜுரதேவர், இந்திரன், சூரியன், சந்திரன் 64 நாயன்மார்கள், நவ வீரர்கள், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், சண்டிகேஸ்வரி மற்றும் நவக்கிரகங்கள்

தல மரம்:
நெய்கொட்லா மரம்

கோயிலின் சிறப்புகள்:
மூலவர் சண்முகரின் வாகனமான மயிலானது இடதுபுறம் பார்த்த மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் கால தூணின் போதிகை மேலுள்ள  சிம்மத்தின்  நாக்கு மடித்த மாதிரியான அமைப்பு கொண்ட சிற்பமாக உள்ளது. அருள்மிகு அறம்வளர்த்த நாயகி இரண்டு கரங்கள் மட்டுமே கொண்ட மூலவராகக் காட்சி தருகிறார். திருவிளையாடற்புராணத்தில் வரும் பன்றிக்குப் பால் கொடுத்த நிகழ்வானது இங்கு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

முன் மண்டபத் தூண்களில் பிரம்மாண்ட அமைப்பு கொண்ட துர்க்கை, வீரபத்திரர், ஊர்த்துவ ஜானு போன்ற தூண் சிற்பங்கள் காட்சி தருகின்றன. மேலும் இங்கு தனியாக மயில் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்:
மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியனின் 26ஆம் ஆண்டு கல்வெட்டும், மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டும் மேலும் சில கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் திருப்பணியானது ஸ்தபதி.கரு.ஜெயராமன் இந்து அறநிலையத்துறை, மதுரை மண்டலம் அவர்களின் ஆலோசனைப்படி அவர்களது குழுவினரால் நடைபெற்றது. கும்பாபிஷேகமானது 25.6. 2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.


Reply all
Reply to author
Forward
0 new messages