முனைவர் பாண்டியராஜா அவர்கள் செந்தமிழ்த் திருத்தோ் அமைப்பால் சிறப்பிக்கப் பட்டார்

130 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 6, 2023, 3:55:18 AM11/6/23
to மின்தமிழ்

முனைவர் பாண்டியராஜா அவர்கள் செந்தமிழ்த் திருத்தோ் அமைப்பால் சிறப்பிக்கப் பட்டார்.  முனைவர் பாண்டியராஜா ஐயாவிற்குப் பொன்னாடை போர்த்தி, பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்துப் பாராட்டுப் பட்டயம் வழங்கி பாராட்டும் படமும், காணொளியும் . . .  
dr pandiarajan felicitation photo.png
காணொளி :

எங்களது செந்தமிழ்த் திருத்தோ் - தூயதமிழ் மாணவர் இயக்கத்தின் சார்பில் வேர்களைத்தேடும் விழுதுகள் என்ற திட்டத்தில் மூத்த தமிழறிஞர்களை அவர்தம் இல்லத்திற்கே சென்று வாழ்த்தியும் அவரின் பணிகளைப் பாராட்டியும் இற்றை மாணவரிடையே புழக்குவதை கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் நிகழ்த்தி வருகிறோம். அறிஞர் இராம கி அவர்களை முதற்கொண்டு தொடங்கிய இத்திட்டம், பாவலர். தமிழ் இயலன், புலவர். இராமலிங்கம், அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம் ஆகியோரைச் சிறப்பித்து இன்றளவும் அவர்களின் ஆய்வுகளைப் புழக்குகிறோம்.
அதன் வகையில், நேற்று (04.11.2023) மதுரை - அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் - துணை முதல்வர், Pandiyaraja Paramasivam முனைவர் ப.பாண்டியராசா ஐயாவிற்குச் சென்னையிலுள்ள அவரது வீட்டில் எங்களது செந்தமிழ்த் திருத்தேர் சார்பில் சிறப்பிக்கப்பட்டது.
அகரமுதலித் திட்ட இயக்கக மேனாள் இயக்குநர் (தங்க காமராஜ்)
திரு. தங்க.காமராசு,
தமிழ் வணிகச் சங்கத் தலைவர்
திரு. சோழ நாச்சியார் இராஜசேகர்,
பாவலர். தமிழ் இயலன் தமிழ் இயலன் இயக்குநர் உள்ளிட்ட அறிஞர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தனியொரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய அரும்பணியை முனைவர் ப.பாண்டியராசா அவர்கள் தனியாளாய் குறுகிய காலத்தில் தமிழ் மொழியினை இவ்வுலகப் பரப்பிற்கு
எடுத்தீந்துள்ளார்.
இவரின் குறிப்பிட்டப் பணிகளான சங்க இலக்கியச் சொல்லடைவு, சங்கச் சோலை என்னும் வலைதளங்கள் வெறும் அறுதிங்களில் செய்துமுடித்தவை எனுங்கால் இவரின் அளப்பரியத் தமிழ்த் தொண்டிற்கு இதுவே சான்று !
சங்க இலக்கியச் சொல்லடைவு
சங்கச் சோலை
சொற்கள் இலக்கியங்களில் ஆளப்பட்ட இடம், தன்மை ஆகியவற்றை அறிய ஆய்வு மாணாக்கர் முதல் மூத்த ஆய்வறிஞர் வரை இன்றளவும் இவ்வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கணிதம் - கணிணி ஆகிய இருதுறைகளிலும் வல்லுநராக இருந்து கணிதம் வழியாக மொழியியலை ஆய்ந்தச் சிறப்பிற்குரியவர்.
பத்துப்பாட்டு இலக்கியம் குறித்தான இவரின் சிறந்த ஆய்வுகள் இன்னும் இருதிங்களில் வெளிவரவுள்ளன.
இத்தனை பணிகளையும் அவர்தம் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே செய்துள்ளார் என்பது (20 ஆண்டுகள்) பெருவியப்பிற்குரியதொன்றே !
பெரிதளவிலான பாராட்டு நிகழ்ச்சிகள் கொடுக்காத நெகிழ்ச்சியினை இல்லந்தேடிச்சென்று ஐயாவினைச் சிறப்பித்ததில் நாங்கள் பெற்றோம்.
நிகழ்விற்கு நேரில்வந்து சிறப்பித்த மணி மணிவண்ணன் ஐயாவிற்கு நன்றி.
வாழ்த்துவதோடு நில்லாமல் இவரின் ஆய்வுகளையும் பணிகளையும் இற்றை மாணவர்களுக்கு எடுத்துச்சென்று பயன்பாட்டில் புழக்குவதே எங்களின் தலையாயக் கடமை !
முனைவர். ப.பாண்டியராசா ஐயாவினை எங்களுக்கு அறிமுகப்படுத்திய அறிஞர் ய.மணிகண்டன் ஐயாவிற்கும் முனைவர். வாணி அறிவாளன் அம்மாவிற்கும் மனமார்ந்த நன்றி !
முனைவர் ப.பாண்டியராசா அவர்களைப்பற்றி
பிறமொழிக் கலப்பில்லாத் தூயதமிழை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் எங்களது செந்தமிழ்த் திருத்தேரின் பணிகள் தொடரும் !
விழாவின் முழுத்தொகுப்பு ;

Jean-Luc Chevillard

unread,
Nov 6, 2023, 7:06:02 AM11/6/23
to mint...@googlegroups.com
முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Mes sincères félicitations

-- Jean-Luc
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/647aae98-52d2-44e7-af6c-e879209f8aban%40googlegroups.com.


Pandiyaraja Paramasivam

unread,
Nov 6, 2023, 9:15:14 PM11/6/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, தேமொழி அம்மையே!
ப.பாண்டியராஜா


Pandiyaraja Paramasivam

unread,
Nov 6, 2023, 9:15:48 PM11/6/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ழான் அவர்களே.
ப.பாண்டியராஜா

Dr. Mrs. S. Sridas

unread,
Nov 6, 2023, 9:57:22 PM11/6/23
to mint...@googlegroups.com
ஐயா பாண்டியராஜா அவர்களே,

உங்களை நினைக்க மிகவும் பெருமையாக இருக்கிறது.
வாழும்போதே உங்களை கவுரவித்தமை அதை விடச் சிறப்பு.
அன்பான வாழ்த்து ஐயா.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




Mohanarangan V Srirangam

unread,
Nov 7, 2023, 12:33:12 AM11/7/23
to mint...@googlegroups.com
பொதுவாகப் பாராட்டு ஒருவரைச் சிறப்புறக் காட்டும்.
ஆனால் சிலரைப் பாராட்டும் போது பாராட்டுக்குச்
சிறப்பு ஏற்படுகிறது. அத்தகைய சிலரில் ஒருவர்
முனைவர் பாண்டியராஜா. அவர் ஆற்றிக் கொண்டிருக்கும்
அருந்தமிழ்ப் பணிக்கு என்றும் தமிழ்நெஞ்சம் அவரைப்
பாராட்டிக் கொண்டிருக்கும்.

***

Pandiyaraja Paramasivam

unread,
Nov 7, 2023, 3:23:25 AM11/7/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, அம்மா.

Pandiyaraja Paramasivam

unread,
Nov 7, 2023, 3:23:38 AM11/7/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K R A Narasiah

unread,
Nov 7, 2023, 4:51:16 AM11/7/23
to mint...@googlegroups.com
Congratulations thiru Pandiyaraja! You are doing something that only full fledged Universities can undertake.
God bless you. 

Pandiyaraja Paramasivam

unread,
Nov 7, 2023, 6:28:16 AM11/7/23
to mint...@googlegroups.com
Thank you very much, Sir.
P.Pandiyaraja


Reply all
Reply to author
Forward
0 new messages