காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்
10.11.2021 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்: எழுத்தாளர் K.R.A. நரசய்யா
புத்தகம்:
“விடுதலை வீராங்கணை ருக்மிணி லட்சுமிபதி”
ஆசிரியர்: ரகமி
பேச்சாளர் பற்றி:
திரு K.R.A. நரசய்யா அவர்கள் இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். சிவாஜி போர்க்கப்பலில் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தி்ல் உருவாக்கத்தில் பங்கேற்று, அதன் விமானத் தளத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றவர். விசாகப்பட்டினத் துறைமுகத்தின் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994-ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம்பெற்று பணியாற்றியவர். தன்னுடைய படைப்புகளுக்காக நான்கு முறை தமிழக அரசினால் விருதுகளை வழங்கி கெளரவிக்கப் பட்டிருக்கிறார். பல்வேறு சிறுகதைகளையும், "சொல்லொணாப் பேறு" "கடல்வழி வணிகம்" "மதராசப்பட்டினம்" "கம்போடியா நினைவுகள்" மற்றும் “எந்தையும் தாயும்” என பல புகழ்பெற்ற நூல்களையும் எழுதியவர். 1972-ஆம் ஆண்டில் வெளியான "கடலோடி (ஒரு கப்பலோட்டியின் நினைவலைகள்)" என்னும் இவரது நூல் அமெரிக்க நூலகங்களின் தொகுப்பு நூல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் புதன் வாசகர் வட்டத்தில் “The Nonviolent Struggle For Indian Freedom, 1905-1919”, “Subramania Bharati Poems”, “Gandhi Illustrated Biography” மற்றும் “The Sino-Indian War of 1962: New perspectives” உள்ளிட்ட நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.
.
நூல் பற்றி:
1892-இல் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்த ருக்மிணி லட்சுமிபதி அவர்களின் வாழ்க்கை வரலாறே இந்நூல். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அழைப்பை ஏற்று அன்றைய மெட்ராஸ் நகரத்தில் களமிறங்கிய பெண்களில் முக்கியமானவர் ருக்மிணி லட்சுமிபதி ஆவார். ஆசந்தா ராமராவ் என்ற மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். 1933-இல், காந்தியடிகளின் சென்னை வருகையின் போது ருக்மிணி அவர்கள் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் வழங்கினார். 1926-இல் பாரிசில் நடைபெற்ற அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றியத்தின் 10-வது மகாநாட்டில் கலந்து கொண்டார். 1930-இல் வேதாரண்யத்தில் மேற்கொள்ளப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். மொத்தமாக தன் வாழ்நாளில் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 1942-லிருந்து 1945-வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும்,. 1946-இல் தமிழ்நாட்டின் அமைச்சரவையில் மந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஆசிரியர்:
இந்நூலின் ஆசிரியர் அமரர் “ரகமி” அவர்களின் இயற்பெயர் டி.வி.ரங்கசுவாமி ஆகும். சுதேசமித்திரன் இதழில் பணியாற்றியவர். வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதுவதில் திறமைசாலியான இவர் தான் “ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை” அவர்களின் வாழ்க்கையையும் எழுதியவர். வாழ்க்கை வரலாறுகளுக்காக விஜில் அமைப்பின் பாஞ்சஜன்யம் விருது பெற்றவர்.
தொடர்புக்கு:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 600017
https://zoom.us/j/9185846813?from=join#success
Meeting ID: 918 584 6813
No
Passcode
One tap mobile
+14388097799 9185846813# Canada
+15873281099 9185846813# Canada
Dial by your location
+1 438 809 7799 Canada
+1 587 328 1099 Canada
+1 647 374 4685 Canada
+1 647 558 0588 Canada
+1 778 907 2071 Canada
+1 204 272 7920 Canada
Find your local number: https://us02web.zoom.us/u/kb7UuxyLCH
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f1ea2770-7ff4-4af3-9552-8e8785cbe99an%40googlegroups.com.
மலேசிய பாரதி தமிழ் மன்றம்
This year FICCI Publishing Awards will recognize and facilitate best of the books in Business, translation, Designing, Children’s literature etc.
CATEGORIES
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/50325140-6c42-4611-84b7-3e964e549988n%40googlegroups.com.