============================================================================
நூ த லோ சு
மயிலை
ஓர் மடல் நகல் பகிர்வு
========================இதுபோன்றவை தலவரலாறுகள் போல் சாதிபெருமை பேச எழுந்த வேற்றுக் கற்பனைப் புராணக்கதைகள்
கற்பித்தலைத் தொழிலாகக் கொண்ட பிராமணர் செய்யும் புராணக் கூத்துகளிற்கு இணையான ஒன்றுதான் இது
இதனில் to read in between lines என ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரைப் போற்றிப்
பேச எழ்ந்த ஓர் தனி மனித பரிசில் வாழ்கப்புலவன் கற்பனையின் பிறந்தது அவனது அறிவுதான் இடைஇடைய காண்பது
மேலும் ஒரு சொல்லிற்கு மனம் போன வழி பொருள் காட்டும் நிலை - இளவேட்டனார் & பாடி'யில் உள்ளன
மெய்யிற்கு முற்றிலும் புறம்பான = பொய்யான ஏமாற்று தொழிலாகும் சோசியம் பயன்கொள்ளும்
திறன்களில் ஒன்றுதான் மக்களிடம் இருப்பதையே காட்டி அதனிலிருந்து கொண்டு தனக்குத்தேவையான
வற்றை அதனுடன் பிணைத்துப் புகுத்துவது அவ்வடியில் ஒன்றாகத்தான் பாடி இளவேட்டன் மந்தாரம் வாணிகன்
என்பவற்றைக் நான் காண்கின்றேன்
மந்தாரம் என்பது ஓர் மலை (சிறு குன்றுதான்) பிகாரில் உள்ளது அது சைவர்களுக்கு சமணர்களும் புனித தலம் ஆகும்
தேவாரம் திருவாசகம் மற்றும் இந்தியாவில் இவை மேனமையானவை எனும் மலைகளில் ஓன்றாகக் காணப்படுவதே
உவமை மட்டும்தான் சமவெளி பரப்பின் நடுவண் தனித்து வீங்கி நிற்கக்காணும் குன்று என்பதால் தோளிற்கு ஆளப்பட்டது
நான் காணும் தொடர்புடைய சில செய்திகள் இவை மட்டும்
இளவேட்டனார் எனபவர் சங்கநூல்களின் காலத்து புலவர்
இவர் இயற்றிய 5 பாடல்கள் கீழே காண்க
இவர் வணிகர் அதாவது அறுவை வணிகர் = துணிகளி விற்பனை செய்யும் வாணிகர்
வடநாட்டில் பாஜாஜ் எனும் குலதவர் துணிவணிகம் செய்பவர்களாகுமாம்
சங்க நூல்களில்
(மதிரை அறுவை வணிகன்) இளவேட்டனார்
எனும் புலவர் 5 பாடல்களுக்கு ஆசிரியராக இருகின்றமையைக்காணலாம்
மேலும் மந்தார மலை என்பது இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ளது
இங்கு மலைக்கு(குன்றிற்கு மேலும் கீழும் சமண சைவ கோயில்கல் பழமையனவை
எனும் தனித்தன்மையுடன் புனித தலமகின்றவை
செட்டிகள் எனும் சொல் வெண்மை நிறமான தோலை உடையவர்கள் அதாவது கருமை
நிற திராவிடருக்கு வேறானவர் முருகனை செட்டி என்பார் அருணகிரிநாதர் அதாவது
செவ்வேள் தகப்பன் சிவனைப் போல் சிவந்தவன் ஆனால் கருப்பு (பச்சை) நிற தாயருக்கு
மலையரசன் ( பர்வதராசன்) மகள் பார்வதிக்குப் பிறந்தவன் சிவந்த நிற இந்திரன் மகளாகிய
தெய்வானையையும் பச்சை நிற வேடர்குல வள்ளியையும் மணந்தவன்
"செக்கச் சிவந்திருப்பாள் செட்டிமகள் போலிருப்பாள்" என்பது யாதார்த்மாக வெளிவரும் ஓர்
நாட்டுப்புறப்பாடல் வரி
பிற்காலத்து வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக நின்று வாழ்பவர்கள் அல்ல அதனால் கலப்பினம்
ஆனவர்கள் அடிக்கடி சத்திரியர்கள் போல் நாடு விட்டு நாடு சென்றுதான் தன் தொழிலை செய்பவர்கள்
ஓர் இடமக இருந்து வாழ்பவர்கள் வேளாளர்கள்தான் மண்னின் மைந்தர்கள் இவர்கள்தான் ஓர் நாட்டு
மக்களின் இயல் பானவர்களாக கொள்ளத்தக்கவர் அதனல்தன் இவர்களை நாட்டு குடிகள் என்பர்
==========================================
(1)
மாப்புகை கமழும்
பாடியவர்: மதிரை அறுவை வாணிகன் இளவேட்டனார்திணை: வாகை துறை : மூதின் முல்லைஇல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே
புறநானூறு 328 185 குறிஞ்சி - தலைவி கூற்றுநுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே
[மதிரை அறுவை வாணிகன் இளவேட்டனார்] குறுந்தொகை 33 - பாலை - இளவேட்டனார்படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியாக் குன்றத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்கொல்லோ மெல்லியல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே 33
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு
அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது நற்றிணை
157 பாலை - இளவேட்டனார்இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம்
உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது நற்றிணை
344 குறிஞ்சி - மதிரை அறுவை வாணிகன் இளவேட்டனார்அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின் ஆயிழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்கொல் தானே உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து
செந் தினை உணங்கல் தொகுக்கும்
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது நற்றிணை