இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி - வெளியீடு

0 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jan 29, 2019, 1:08:12 AM1/29/19
to freetamil...@googlegroups.com, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், FreeTamilEbooksForum, kuzhu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu
வணக்கம்,

இன்று http://tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இது ஒரு கட்டற்ற மென்பொருள்.
Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது.
அறிமுகம்

இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech)

எப்படி மாற்றுவது?

  1. இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். http://tts.kaniyam.com/signup/
  2. உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை உறுதி செய்ய, ஒரு இணைப்பு வரும். அதை சொடுக்கவும்.
  3. புகுபதிகை செய்யவும். (Login)
  4. http://tts.kaniyam.com/upload/ பக்கத்துக்கு சென்று, ஒரு தமிழ் உரைகள் கொண்ட கோப்பை பதிவேற்றம் செய்யவும்.
  5. இப்போது, பின்புலத்தில் உங்கள் உரைக்கோப்பு, ஒலிக்கோப்பாக மாற்றம் செய்யப்படும். இதற்கு சற்று கால அவகாசம் ஆகும். சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் கூட ஆகலாம். இந்த காத்திருப்பு காலம், உங்கள் கோப்பின் அளவையும், மொத்தமாக அனைவரும் ஏற்றியுள்ள கோப்புகளின் எண்ணிக்கை, அவற்றின் வரிசைகளைப் பொறுத்து மாறும்.
  6. MP3 ஆக மாற்றியபின், உங்கள் மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு வந்து சேரும். உங்களுக்கான http://tts.kaniyam.com/ முகப்பு பக்கத்தில் காட்டப்படும் உங்கள் கோப்புகளின் பட்டியலிலும் பதிவிறக்க இணைப்பு இருக்கும்.
  7. இணைப்பை சொடுக்கி, நீங்கள் ஒலிக்கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்


எந்த வகை கோப்புகளை பதிவேற்றலாம்?
ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் உள்ள, txt வகைக் கோப்புகளை மட்டுமே ஏற்றலாம். அதிக பட்சம் 100 MB இருக்கலாம்.

எனது தனிப்பட்ட கோப்புகளை ஏற்றலாமா? அதி இரகசியம் காக்கப்பட வேண்டியவை எனில் வேண்டாம். எந்த இணைய வழி தளத்தையும் நம்பாதீர். இது கட்டற்ற மென்பொருள்தானே. நீங்களே உங்கள் குனு/லினக்சு கணினியில் நிறுவி விடலாம். மற்றபடி, பொதுவான கோப்புகளை ஏற்றலாம். உங்கள் உரைக்கோப்புகளையும், ஒலிக்கோப்புகளையும் உங்களைத் தவிர, பிற பயனர் எவரும் அணுகாதபடியே கடும் கட்டுப்பாட்டு அமைப்புகளை சேர்த்துள்ளோம்.

எத்தனை நாட்கள் MP3 கோப்புகள் சர்வரில் இருக்கும்? இப்போதைக்கு சோதனை முறையில் 3 நாட்கள் வைத்திருப்போம். பிறகு அவை தானாகவே அழிந்துவிடும்.

ஏன் ஆண் குரல் மட்டும்? பெண் குரல் இல்லையா? பெண் குரல் சோதனையில் உள்ளது. விரைவில் சேர்ப்போம்

ஏன் தமிழ் மட்டும்? பிற மொழிகள்? பிற மொழிகளுக்கான கட்டற்ற உரை ஒலி மாற்றிகளை ஆய்ந்து வருகிறோம். தக்கனவற்றை சேர்ப்போம்.

இந்த மென்பொருள் பாதுகாப்பனதா? ஓரளவுதான். இது ஒரு கட்டற்ற மென்பொருள். இதன் மூல நிரலை இங்கே ( https://github.com/KaniyamFoundation/tts-web )பெற்று, நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள். மேலும் பல்வேறு பாதுகாப்புக்கான பல்வேறு செயல்கள் செய்யப்பட உள்ளன. உதாரணமாக SSL சேர்த்தல், கோப்புகளை மறைகுறியாக்கம் Encrypt) செய்தல் போன்றவை.

இதை விண்டோசில் நிறுவலாமா? முடியாது.

ஏன்? உங்களிடம் இரு சக்கர வாகனம்தான் இருக்கிறது என்றால், அதில் கார் சீட்டை பொறுத்தி ஓட்ட முயலமாட்டீர்கள் தானே.

பங்களித்தோர் -

ஊர் கூடி தேர் இழுக்கும் பெரும் பணி இது.

IndicTTS (https://www.iitm.ac.in/donlab/tts/index.php) எனும் திட்டம் வழியாக IIT Madras ம் SSN College of Engineering ம் இணைந்து, தமிழுக்கு ஒரு உரை ஒலி மாற்றி உருவாக்கி, கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ளனர். ( பிற மொழிகளுக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன ).

இதில் பங்களிப்போர்

இம்மென்பொருளை, உபுண்டு லினக்சு கணினியில் எளிதில் நிறுவும் வகையில் நிரல் எழுதியோர்

நிரல் இங்கே - http://github.com/tshrinivasan/tamil-tts-install

பலவகைகளில் சோதனைகள் செய்தவர்

இதை இணைய வழி மென்பொருளாக எழுதி, நிறுவி, பராமரிப்பவர்

இதற்கான சர்வரை நன்கொடையாக அளித்தவர்கள் -

இதற்கான யோசனைகள், திட்டங்கள், ஆலோசனைகளை அளித்தோர்
  • இந்திய லினக்சு பயனர் குழு, சென்னை - Indian Linux Users Group, Chennai http://ilugc.in
  • கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு - Free Software Foundation, TamilNadu http://fsftn.org
  • ஒருங்கிணைப்பு - கணியம் அறக்கட்டளை - http://kaniyam.com/foundation

தொடர்புக்கு kaniyamf...@gmail.com

பின் வரும் மாற்றங்களை விரைவில் எதிர் பார்க்கலாம்
  1. பெண் குரல்
  2. இன்னும் தரமான உரை ஒலி மாற்றம்
  3. பிற மொழிகளுக்கான உரை ஒலி மாற்றம்
  4. REST API வசதிகள்

எப்படி பிழைகளை புகார் செய்வது?
Github.com ல் ஒரு கணக்கு உருவாக்கி, https://github.com/KaniyamFoundation/tts-web/issues இங்கு உங்கள் புகார்கள், பிழைகள், யோசனைகள், ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.


நீங்களும் பங்களிக்கலாமே
  1. கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதும், அவற்றை பிறருக்கு அறிமுகம் செய்வதுமே பெரும் பங்களிப்பு.
  2. இதை பயன்படுத்தி, பிழைகளையும், மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் எங்களுக்கு எழுதுங்கள்
  3. இது பற்றிய பரப்புரைகளை ஊடகங்கள், செய்தித்தாள்கள், சமூக வலைதளங்களில் எழுதுங்கள்.
நன்கொடை அளியுங்கள் -

இது போன்ற பல கட்டற்ற மென்பொருட்களையும், வளங்களையும் உருவாக்க ஆவன செய்து வரும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளியுங்கள்

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618
நன்கொடை விவரங்களை kaniyamf...@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.




--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Shrinivasan T

unread,
Jan 29, 2019, 1:58:28 AM1/29/19
to நீச்சல் காரன், freetamil...@googlegroups.com, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், FreeTamilEbooksForum, kuzhu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu


செவ்., 29 ஜன., 2019, பிற்பகல் 12:20 அன்று, நீச்சல் காரன் <neecha...@gmail.com> எழுதியது:
மகிழ்ச்சியான செய்தி. கணியம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
ஏன் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு?


இப்போதுள்ள தமிழ் TTS மிகவும் மெதுவாகவே மாற்றுகிறது.
சில நிமிடங்கள் முதல், சில மணிநேரங்கள் வரை கூட ஆகலாம்.
அது வரை பயனரை காத்திருக்க வைப்பதை விட, மாற்றம் முடிந்தவுடன் பயருக்கு அறிவிப்பதே சிறந்தது.
பயனருக்கு அறிவிக்க அவரது மின்னஞ்சல் தேவைப்படுகிறது.
எனவே தான் பதிவை கட்டாயம் ஆக்கி விட்டோம்.

வேறு சிறப்பான வழிகள் இருந்தாலும் கூறுக.
நன்றி.

A. Alauvdheen

unread,
Jan 29, 2019, 3:48:30 AM1/29/19
to freetamile...@googlegroups.com, நீச்சல் காரன், freetamil...@googlegroups.com, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், kuzhu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu
வாழ்த்துக்கள்
சிறப்பான வளர்ச்சி மற்றும் முயற்சியுடன் இவ்வாண்டை தொடங்கி உள்ளீர்கள். தங்களின் இம்முயற்சிக்கு எனது நன்றிகள் பல. விரைவில் தமிழ் கணிணி உலகின் நீண்டகால தேவையான OCR உங்கள் மூலமாகவே நிறைவேறும் என நம்புகிறேன்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ஷேக்

--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To post to this group, send email to freetamile...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/freetamilebooksforum.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAND2796VS1gGAqc2uC4O4A8mthdogOLcK_3RUR9emAnA8%3DS2fg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ravi Natarajan

unread,
Jan 29, 2019, 8:41:43 AM1/29/19
to freetamile...@googlegroups.com, freetamil...@googlegroups.com, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், kuzhu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள். என்னுடைய சில கட்டுரைகளை சோதித்து பார்த்து சொல்கிறேன்.

 

நன்றி

ரவி நடராஜன்



--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To post to this group, send email to freetamile...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/freetamilebooksforum.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
Ravi Natarajan
Mississauga, ON, Canada

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2019, 10:23:01 AM1/29/19
to FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், kuzhu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu
அரியதொரு இணையத்தமிழ்த் தொண்டு.
நல்வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

Karuveli RaSa.Mahendran

unread,
Jan 29, 2019, 10:57:27 AM1/29/19
to freetamile...@googlegroups.com, freetamil...@googlegroups.com, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், kuzhu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu
அன்பிற்குரிய ஸ்ரீனி மற்றும் குழுவினருக்கு

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  தமிழுக்கு நீங்கள் ஆற்றி வரும் கொடை மிகப் பெரியது.   உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.  

பயன்படுத்த துவங்கியதும், எனது கருத்துக்களை பகிர்கிறேன்.


அன்புடன்,
"கருவெளி" ராச.மகேந்திரன்

"கருவெளியில் ஒரு துளியென துவங்கி ஒவ்வொரு துளியுமாகவே இவ்வாழ்க்கை பயணம்"

With Greetings,
"Karuveli" RaSa. Mahendran


On Tue, 29 Jan 2019 at 11:38, Shrinivasan T <tshrin...@gmail.com> wrote:

SELVASANKAR C

unread,
Jan 29, 2019, 11:53:15 PM1/29/19
to freetamile...@googlegroups.com
மிக அருமையான முயற்சி. நான் ஒலி மாற்றி செய்து பார்த்தேன். நன்றாக உள்ளது. உச்சரிப்புக்களும் சரியாகவே உள்ளன. வேகம் மட்டும் சற்று அதிகம் போல் தோன்றுகிறது. சற்று மெதுவாக பேசினால் சிறப்பே...

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏👏👏👏👏

செல்வா

Nooruddin Ahamed

unread,
Jan 30, 2019, 1:05:13 AM1/30/19
to freetamile...@googlegroups.com
செய்தியைப் பகிர்ந்துள்ளேன்.

முழு டீமுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.  


Reply all
Reply to author
Forward
0 new messages