தெரிந்து கொள்வோம்.
ஒரு மடத்து அன்பர் பதிவில் இருந்து..
காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பூஜை பற்றி நிறைய பிராமணர்களே
சரியாக தெரிந்து கொள்ளவில்லை.
என் உறவினர், நண்பர்களிடையே பல முறை சொல்லி விளக்கிய விபரத்தை
இங்கு தருகிறேன்.
இந்த மடத்தின் பீடாதிபதிகள் தங்களது "சந்யாச தண்டத்தை" வாழ் நாள் முழுவதும், தங்கள் கைகளில் மட்டுமே
ஏந்த வேண்டும். வேறு சாஸ்திரிகள் யாரும் அதைத் தூக்கிவரக் கூடாது.
ஸ்ரீசந்திரமௌலிஸ்வரர் ஸ்படிக லிங்கம்,
ஸ்ரீமஹாதிரிபுர சுந்தரி, மஹா மேரு, சாளக்கிராமம் போன்ற
பூஜா விக்ரஹங்களை, பீடாதிபதி மற்றும்
அடுத்த வாரிசு பீடாதிபதியான சந்யாசிகள் மட்டுமே பூஜை செய்யலாம்.
வேறு யாரும் பூஜை செய்யக் கூடாது.
மூன்று கால பூஜையையும் ஜகத்குரு மட்டுமே செய்ய வேண்டும்.
கோ பூஜை, கஜ பூஜையில் தொடங்கி அபிஷேகத்தோடு கூடிய முதல் கால பூஜையை மட்டுமே விஸ்தாரமாக
செய்து முடிக்க, அதிக பக்ஷம்
மூன்று மணி நேரம் ஆகும்.
சாதாரண நாட்களில் மற்ற இரண்டு கால பூஜைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மணி நேரம் ஆகலாம்.
வெள்ளிக் கிழமைகள், பிரதோஷம், பௌர்ணமி, பூஜைகள் இன்னும் ஒரு மணி நேரம் அதிகம் ஆகும்.
சிவராத்திரி இரவு நாலு கால பூஜை அபிஷேகத்துடன்.
வருஷத்தில் இரண்டு நவராத்திரிகள்.
சாதுர் மாஸ்ய...வியாச பூஜைகள்,
வினாயகர் சதுர்த்தி, ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீராமநவமி, தீபாவளி, மகர சங்க்ராந்தி,
போன்ற விசேஷ பூஜைகள்.
குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு, பூர்வாச்சார்யார்களுடைய வார்ஷிக ஆராதனைகள்....
அனைற்றையும் ஜகத்குரு
தானே செய்ய வேண்டும்.
ஸ்ரீமடத்து சாஸ்திரிகள் செய்யக் கூடாது.
தனுர் மாசம் 30 நாளும் தினசரி
காலை 4 மணிக்கு ஸ்நானம்
செய்து விட்டு பூஜை தொடங்கி
சூர்யோதயத்தின் போது தீபாராதனை...
அல்ப துவாதசி சிலசமயம் அதிகாலை
3 மணிக்கு முடிந்து விடும். அந்த நேரத்தில் பூஜை....
ஒவ்வொரு பூஜைக்கு முன்னரும் ஸ்நானம் கட்டாயம்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது
மூன்று ஸ்நானம்.
சிவராத்திரியன்று ஆறு ஸ்நானம்.
ஸ்ரீசந்திரமௌலிஸ்வரர் பூஜையில்
ஸ்ரீருத்ர ஜபம் செய்தபடி அபிஷேகம்.
இடது கையில் பிடித்த "தாரா பாத்ரம்"
இருபது நிமிடங்கள் அசையாது
(holding in the air)
அதில் வலது கையினால் அவ்வப்போது அபிஷேகத்திற்காக கிண்ணத்தினால் பாலைக் கோரி, தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
நம் வீட்டு பூஜையில் நாம் முயற்சித்தால்
கை நரம்பு தென்னி வலி தாங்க முடியாது
நம் அகத்தில் சாஸ்திரிகள் ஸ்ரீருத்ர ஜப அபிஷேகத்திற்கு stand வைத்து விடுவர்.
காமகோடி சங்கர மடத்தில், அம்பாள் ஸ்ரீ மஹாதிரிபுரசுந்தரியின் ஸ்வரூபமான
மஹாமேருவிற்கு நடைபெறும்போது,
அபிஷேகம், பூஜை, அலங்கார, நைவேத்ய, நேரங்களில் படுதா திறை போட்டு விடுவதால் பக்தர்கள் பாதி நேரம்
தரிசனம் செய்ய முடியாது.
இதை என் உறவினர்களும் நண்பர்களும் பெரும் குறையாக சொல்கிறார்கள்.
காலையில் 10 மணிக்கு,
கோ பூஜை, கஜபூஜை தொடங்கு முன் அமர்ந்து விடும் அனேக பக்தர்கள்,
பாதி நேரம் படுதாவையே பார்த்துக் கொண்டு கழித்து விட்டு,
கடைசியில் தீபாராதனை பார்த்து விட்டு தீர்த்தம் வாங்கி விட்டு சாப்பிட செல்லும் போது இரண்டு மணி ஆகிவிடும்.
ஆனால், மனம் லயித்து விட்டால்
அதுவே தியான நிலைக்கு வெகு சுலபமாக அழைத்துச் சென்றுவிடும்.
தீபாராதனை முடிந்து தண்டம் ஏந்தி
ஸ்ரீபாலபெரியவா அடிமேல் அடியெடுத்து
பூஜா மண்டத்தை வலம் வரும் போது தேஜஸ் ...அவர் கடாக்ஷம்....நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
பூஜையிலேயே பீடாதிபதிகளின் பெரும் பகுதி கழிந்து விடும்.
பூஜை முடிந்து, பக்தர் தரிசனம், விசாரிப்புகள் எல்லாம் முடிந்து
பிக்ஷைக்கு (உணவருந்த)
மாலை நாலு மணி ஆகிவிடும்.
அவர்களது பிக்ஷா பாத்திரங்கள் எல்லாம்
பித்தளைதான். குமுட்டி அடுப்பில்
விசிறியால் வீசி அந்த வெப்பத்தில்தான் இன்றைக்கும்....சமையல்...
ஸ்ரீ மடத்து நிர்வாக விவகாரங்கள்,
முக்கியமான பக்தர்கள் தரிசனம் எல்லாம் முடிந்து இரவு பிக்ஷை நள்ளிரவாகிவிடும்.
துறவு நெறி, தன் சரீரத்தை மிகவும்
வருத்திக் கொண்டே ஒவ்வொரு பக்தர்களிடமும் புன்னகையுடன் குறை கேட்டு ஆறுதல் கூறி.....
என்ன ஒரு கஷ்டமான ஆசாரம்.