இந்திய விக்கிமீடியா கூடல் 2021

1 view
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Feb 14, 2021, 11:17:35 AM2/14/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், wikimedi...@lists.wikimedia.org, Mozillians Tamilnadu, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
ஒவ்வொரு ஆண்டு இந்திய அளவில் ஏதேனும் ஒரு நகரில் விக்கிமீடியா கூடல்  நடைபெறும். இந்த ஆண்டு முழுமையாக இணையவழியாக பிப்ரவரி 19,20,21 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

இந்தச் சந்திப்புகள் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் நடைபெறும். விக்கிச் சமூகத்தின் கொள்கைகள், வாய்ப்புகள், அனுபவங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிரும் களமாக இது நடைபெறுகிறது. மாணவர்கள், மொழி ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தொழில்நுட்பப் பிரியர்கள் என அனைவருக்கும் ஏற்ப அமர்வுகள் நடைபெறுகிறது. முழு அமர்வுகளை இங்கே காணலாம்.


இந்தாண்டு குறிப்பாக GLAM திட்டங்கள் மூலம் காப்பகங்களில் உள்ள முக்கிய வளங்களை ஆவணமாக்கல், அறக்கட்டளையின் நிதிநல்கை, காப்புரிமை/பொதுவுரிமை தொடர்பான நடைமுறைகள் போன்ற செயல்பாட்டு அமர்வுகள் நடைபெறவுள்ளன. முதன்முதலாக, தமிழகக் கல்லூரி மாணவர்களுக்கு விக்கியில் உள்ளகப்பயிற்சி(internship) வழங்கிய அனுபவம், கன்னட நூல்கள் மின்னுருவாக்க அனுபவம் உட்பட பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களின் அனுபவங்களும் பகிரப்படுகின்றன. விக்கித்திட்டங்களில் பயனர்கருவிகள்  உருவாக்கம், பொதுவகத்திற்கான Spell4Wiki பதிவேற்றி உட்படப் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகளும் உள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டு விரும்பிய அமர்வுகளிலும் கலந்து கொள்ளலாம்.


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages