வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் (நற்றிணை 341)

36 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 30, 2020, 8:05:19 PM5/30/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
    திணை : குறிஞ்சி.
    துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.

வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.

இப்பாடல், முக்கியமாக முதன் மூன்று அடிகள்,  பொருள் உரைக்க மிகுந்த சிக்கலைக் கொடுத்துள்ளமை பெருமழைப்புலவர் கூற்றால் விளங்கும்.
ஔவை சு.து. முணை என்பதை முனை என்று மாற்றிவிடுகிறார். ஆனால், வரிப்பறைக்கு முணை என்னும் கலைச்சொல் முக்கியமானது.

வரி = நெல் (Cf. வ்ரீஹி; அரிகி/அரிசி; வல்சி). வரிப்பறை நெல்லறுப்புக் காலத்திலே அடிக்கும் பறை. வரிப்பறை நற்றிணை 58-ம் பாட்டில்
உண்டு (பேரா. ச. கண்மணி). நற்றிணை 58-ன் வரிப்பறை தோளில் கோத்து அடிக்கும் உருமி, பம்பை போன்றது எனலாம். இது இருகட்பறை.
நற்றிணை 341-ல் வரும் வரிப்பறை எத்தனை கண் உடைத்து எனச் செய்தி இல்லை. கிணை (கிண்ணம் - Kettle drum) எனப்படும்
ஒருகட்பறை எனக் கொள்வோம். அதற்கு நற்றிணை 341-ன் முதல் அடியின் வர்ணனை பொருந்துகிறது. இக்காலத்தில் துடும்பு/துடுமு எனப்படுவது.
இடுப்பில் கட்டி முழக்குவது.

வங்கா = கொக்கு, நாரை (egrets, storks) போன்ற பறவை வகை. நீர்நிலைகளும் நெல்வயல்களும் உள்ள நிலங்களில் காணலாம். வா- என்பது வளைதல் பொருள்
கொண்டது. வாக்கு-/வாங்கு- இதில் இருந்து வக-/பக- baka என்னும் வடசொல்லும், வங்கா என்ற சங்க இலக்கியச் சொல்லும் உருவாகி இருக்கிறது. பகாசுரனைக் கிருஷ்ணன் வதைத்தான்.
https://en.wikipedia.org/wiki/Bakasana
https://en.wikipedia.org/wiki/Yaksha_Prashna

வங்கா என்னும் நெல்வயல்களில் காணும் கொக்கை எழுதிய (அ) கடியும் வரிப்பறை எனப் பாடல் தொடங்குகிறது.
முணை என்றால் வட்டம். சிறுபாடு முணை என்பது வரிப்பறையின் அடிப்பாகத்தில் தலைக்கண்ணில் உள்ள தோலை
விசித்துக் கட்டிய வட்டமான பொருள். இதனை hoop என்பர் ஆங்கிலத்தில். முள்-/முட்டை/முண்டகம் போன்றவற்றில்
வருவதுபோல, முணை = வரிப்பறையின் வளையம். இதில் பறைகளின் சவ்வை இழுத்து வள்வாரால் கோத்துக் கட்டுவர்.
ஒருகட் பறையில் முணை பார்க்க (வலக்கோடியில் உள்ள தாளவாச்சியம்): https://www.gutenberg.org/files/20668/20668-h/images/p114.jpg
ஒரிசாவில் கிணை:
image.jpeg
சிறுபாடு என்பது வரிப்பறையின் அடியில் சிறுவட்டமாக முடியும் துளை. அதை துளையாகவோ, அடைத்தோ வைப்பர்.
அதனைச் சுற்றி இருப்பது முணை ‘hoop, to tie the membrane of the drum via snares'.

பால் - சாராயத்துக்கொரு பெயர்; கள்ளை மரத்துப் பாலெனக் கூறும் வழக்குண்மையின் அறிக.
பால் என்பது = பனங்கள்ளின் பெயர். எண்ணெய் என்பது எல்லா நெய்களுக்கும் வருதற்போல, இப்பாட்டில் பால் = சாராயம்.
வட்டு நா = சாராயச் சாடியின் மூடியைத் திறந்தால், மது வார்க்க உள்ள நாக்கு.
முதல் அடியைத் தவிர, மற்றவற்றிற்கு பின்னத்தூரார் உரையைப் பயன்கொள்ளலாம்.

வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.

(சொ - ள்.) வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் - வங்கா என்னும் கொக்கை வரைந்த/கடியும் நெற்பறையினது சிறுபாட்டைச் சுற்றி உள்ள முணை வளையத்தைப்போல உள்ளது சாராயந்தேக்கிய சாடியின் மூடியும், அதைக் காப்பிட்ட செவ்வரக்கும். செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால்மடுத்து - அச் சாடியில் சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டும் நாவும் அடைத்துள்ளது. அதனைத் திறந்தால் நாக்கு வழியாகச் சாராயம் வடிந்தோடும். காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத மதுவின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; உலையா உலவை ஓச்சிச் சில கிளையா - அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து உறவினர்களுடன்; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை; - குன்றகத்துள்ள தன் ஐ (ஐ = தந்தை, அண்ணன்) ஆகிய குறவனொடு சிறுநொடி [1], மெலிதாகத் தன் ஐமாருடன் அறிவுரை பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்;

யாம் அரு வெம் பகைமுனை - யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; தண் பெயல் பொழிந்தென நீர் ஈர்ங் கரை நாள் - குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் இரவுக்காலையிலே; கூதிரொடு வேறுபுல வாடை அலைப்ப மயங்கி - கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; துணை இலேம் தமியேம் பாசறையேம் - அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; எ - று.
[1] குறுநொடி - பொய்நொடி. குறுநொடி - குறளை நொடி; குறுநொடி பயிற்றல் செல்லமாக, தன் ஐயுடன் அவன் மதிமயக்கத்திற்குக் காரணம் சாராயம் என மருட்டுதல்.
நொடி⁵ noṭi , n. < நொடி²-. [M. noṭi.] 1. [T. noḍi.] Word, phrase, language, speech; சொல். புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும் (பெருங். உஞ்சைக். 33, 72). (சூடா.) 2. Wise sayings; முதுமொழி. பிசியுநொடியும் (பெருங். உஞ்சைக். 33, 175). 3. Riddle, enigma; பிதிர். (சூடா.) Probably, this pair is cross-cousins, which is the norm in South Indian kinship, hence called Dravidian Kinship: https://en.wikipedia.org/wiki/Kinship_terminology#Dravidian_kinship

இச் செய்யுட்கு "வங்கா வரிப்பாறைச் சிறுபாடு முனையின்" என்றும் 'அலையா உலவை யோச்சி' என்றும், 'நீர் இரங்கு அரைநாள் மயங்கி' என்றும் பாடவேறுபாடுகளும் உண்டு. இவை சிறப்பாகத் தோன்றவில்லை.

N. Ganesan

unread,
May 31, 2020, 6:24:40 AM5/31/20
to மின்தமிழ், vallamai
On Sun, May 31, 2020 at 3:07 AM Sathivel Kandhan Samy <sat...@msn.com> wrote:
முனைவர் அவர்கள் எதை நிறுவ முயல்கிறார்?   அடிப்படை தத்துவம்


பின்னத்தூர், ஔவை சு.து., பெருமழைப்புலவர் உரைகளைப் படித்துப் பாருங்கள். புரியும்.

முதல் அடியில், “வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்” இந்த நாலு வார்த்தை உவமையாக வரும்
சாராய ஜாடியின் வர்ணனை.

நா. கணேசன்

kanmani tamil

unread,
May 31, 2020, 8:40:50 AM5/31/20
to vallamai, mintamil
பாராட்டுக்கள் முனைவர் கணேசன் !
உரையாசிரியர் கருத்துக்கு மாற்றாக வேறு கோணத்தில் பொருள் காண முயற்சித்து இருக்கிறீர்கள்.
ஒளவை.சு.து. உரை என்னிடம் இல்லை.

'வரிப்பறை' பொருளை ஏற்றுக்கொண்டமை குறித்து மகிழ்ச்சி.
கிணையின் தோற்றம், முணை குறித்த தகவல்கள் புத்தறிவூட்டின.
சிறுபாடு=?....விளக்கம் போதவில்லை.
தொகைநூல்கள் காலத்தில்... கள் குடித்தமை அறிவேன்.
மூங்கில் குழாயில் தேனைப் புளிக்க வைத்துப் பருகியமை கண்டுள்ளேன்.
சாராயம் காய்ச்சியதை இன்றுதான் அறிந்தேன்.
அந்த "செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்" ..கற்பனைசெய்யத் தெரியவில்லை.
பெரும்பாலும் திரைப்படங்களில் சாராயம் காய்ச்சுவதைச் சண்டைக் காட்சிகளில் தான் பார்க்க இயலும். 
சில நொடிகளில் அந்தச் செய்கலனை (apparatus) நொறுக்கி விடுவதாகக் காட்டுவர். அதனால் வட்டும் நாவும் பிடிபடவில்லை.

இது தொடர்பாக எழுந்த அறியாவினாக்கள்:
சாராயம் காய்ச்சிக் குடித்தவர் குறிஞ்சித்திணை மாந்தர் என்று பாடல் காட்டுகிறது.
இந்தப் பழக்கம் இன்றுவரை சமுதாயத்தில் நிலைத்தும் உள்ளது....
2000ஆண்டுகளாகக் குடிப்பழக்கம் மாறவில்லை.
2000ஆண்டுகளாக மண்ணையும் மரத்தையும் வழிபடும் சமயக் கொள்கை மாறவில்லை.
ஆனால் திராவிட நாகரிகம் pole reversal ஆகி இல்லாமல் போய்விட்டது எனக் கூறுவது எந்த வகை ஆராய்ச்சியில் சேர்த்தி?
 
என் கோணத்தில் பாடல்பொருள் ...என் மறுப்புகள் இழையில் பதிகிறேன். 
சக  
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdQLXayk86oc4_64nmbYcvRQ2myxRuy3TQAKWFAoQievQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 31, 2020, 9:32:52 AM5/31/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Sun, May 31, 2020 at 7:40 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாராட்டுக்கள் முனைவர் கணேசன் !
உரையாசிரியர் கருத்துக்கு மாற்றாக வேறு கோணத்தில் பொருள் காண முயற்சித்து இருக்கிறீர்கள்.
ஒளவை.சு.து. உரை என்னிடம் இல்லை.

'வரிப்பறை' பொருளை ஏற்றுக்கொண்டமை குறித்து மகிழ்ச்சி.
கிணையின் தோற்றம், முணை குறித்த தகவல்கள் புத்தறிவூட்டின.
சிறுபாடு=?....விளக்கம் போதவில்லை.

முணை பற்றிய நல்லபாடல் சிந்தாமணியில் உண்டு. பார்ப்போம்.

கிணை = கிண்ண உருவம் ஆதலால். Kettle drum எனப்படுவது.
ஆசியா முழுதும் மருதப்பறை இதுதான். அரிகிணை என இலக்கியத்தில் வரும். இங்கே, அரி < வரி ‘நெல்’.

நற்றிணை 58-ல் இருப்பது: தெண்கிணை. அரிக்கோலால் தேய்த்து ஒருகண்ணும், அடிகோலால் மறுகண்ணில் அடிப்பது. இது உறுமி.
தோளில் கோக்கும் பறை இது. மாங்குடி கிழாரின் துடியன் வைத்திருப்பது இந்த தெண்கிணை ‘hourglass drum'. எனவே, அவன் துடியன்.
துடியன், பறையன், பாணன், கடம்பன். பாணன் = பாடுவோன் (மங்கலன்), கடம்பன் = வேலன் பூஜாரி. பறையன் வைத்திருக்கும் பறை
என்பது கிணை ‘கெட்டில் டிரம்’. நற்றிணை 341-ல் பேசப்படும் வரிப்பறை எனும் மருதப்பறை. இது தமிழ் இலக்கியத்தில் பறை எனப்படுவது.
அப்போது தப்பட்டைக்கு இப்போதைய நிலை இல்லை.

பெரும்பாடு = Drumhead. அடிகோலால் சவ்வை முழக்கும் membane. சிறுபாடு - பறைத்தலைக்கு கீழே உள்ள சிறிய வட்டமான பகுதி. அதைச்சுற்றி
முணை ‘hoop, வளையம்' இருக்கும். படம் கொடுத்துள்ளேன்.
சிறுபாடும், முணையும் =  circular bottom of kettle drum and the hoop around it.
சிறுபாட்டைத் தோலால் மூடுவதும் உண்டு. to get a resonator chamber effort.

பெரும்பாடு : பெரிதாக உள்ள பறைக்கண் (Drumhead). பறந்தலை = போர்க்களம் என்பது பறை முழக்குமிடம் என்பதால் இருக்கும்.
உலகிலேயே, ஸ்யாஹி என்னும் மா பற்றி முதலில் குறிப்பிடும் இலக்கியம் சங்க இலக்கியம் தான்.
பறைக்கண்ணில் கறுப்பாக இருக்கும் கரணை (ஸ்யாஹி): கரி, இரும்புத்தூள், மாங்கனீஸ் கல்பொடி, பசை சேர்ந்து தயாரிப்பது.
மாக்கிணை. பறையின் கண்ணில் கரணை கொண்டிருப்பது. மா = கருமை. (மா என்பது பெரிய என உரை சொல்வர். அவ்வாறில்லை)

சாராயம் பற்றி விளக்கியவர் பின்னத்தூரார். சிந்து சமவெளியிலே கண்டுபிடித்தது. இன்றும் டாஸ்மாக் என அரசு விற்பது.
சாராய ஜாடியைக் கிணைப்பரை (வரிப்பறை) உவமை ஆக்கும் அரிய பாடல்.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct_T74X6LS648gXkE2WXab6sy8%2BDNFMMcN_MUnLo8SSpg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 31, 2020, 9:45:42 AM5/31/20
to vallamai, mintamil
/// சாராயம் காய்ச்சிக் குடித்தவர் குறிஞ்சித்திணை மாந்தர் என்று பாடல் காட்டுகிறது ///  
தவறு ; முல்லைத்திணை மாந்தர் என்பதே சரி 
சக 

N. Ganesan

unread,
May 31, 2020, 10:49:05 AM5/31/20
to மின்தமிழ், vallamai
On Sun, May 31, 2020 at 8:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// சாராயம் காய்ச்சிக் குடித்தவர் குறிஞ்சித்திணை மாந்தர் என்று பாடல் காட்டுகிறது ///  
kanmani  > தவறு ; முல்லைத்திணை மாந்தர் என்பதே சரி 
சக 

இப்பாடல் குறிஞ்சித்திணைப் பாடல். குன்றக் குறவன் என்று தலைவியின் ஐமாரைக் குறிப்பிடுகிறார் புலவர்.
3000 அடிக்கு மேலே போய்விட்டால் ஸஹ்யாத்திரியில் குளிர் துவங்கிவிடும். அதுவும் இப்போதைய ஜன நெரிசலோ,
வன அழிப்போ, நிலநெய்யால் புவனச் சூடோ இல்லாக் காலம். கதகத என்று இருக்க குறிஞ்சி மாந்தர்
சாராயங்காய்ச்சுதல் வழமை. சாராயம் < சாறு. அதனைக் கூறும் அழகிய பாடல் இது. நிகழிடம்
தான்றிக்குடி, பெர்ரிஜாம் லேக், குன்னூர், ... போன்ற இடங்கள் என்க. தோன்றிக்கோ வேளின் தோன்றிமலையை
விட குறிஞ்சித்திணை தான் பொருத்தம்.

NG


On Sat, May 30, 2020 at 7:07 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
    திணை : குறிஞ்சி.
    துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.

வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ச்சிச் சில கிளையாக்
உலையா உலவை ஓச்சிச் சில கிளையாக்

குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.

(சொ - ள்.) வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் - வங்கா என்னும் கொக்கை வரைந்த/கடியும் நெற்பறையினது சிறுபாட்டைச் சுற்றி உள்ள முணை வளையத்தைப்போல உள்ளது சாராயந்தேக்கிய சாடியின் மூடியும், அதைக் காப்பிட்ட செவ்வரக்கும். செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால்மடுத்து - அச் சாடியில் சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டும் நாவும் அடைத்துள்ளது. அதனைத் திறந்தால் நாக்கு வழியாகச் சாராயம் வடிந்தோடும். காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத மதுவின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; உலையா உலவை ஓச்சிச் சில கிளையா - அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து உறவினர்களுடன்; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை; - குன்றகத்துள்ள தன் ஐ (ஐ = தந்தை, அண்ணன்) ஆகிய குறவனொடு சிறுநொடி [1], மெலிதாகத் தன் ஐமாருடன் அறிவுரை பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்;

யாம் அரு வெம் பகைமுனை - யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; தண் பெயல் பொழிந்தென நீர் ஈர்ங் கரை நாள் - குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் இரவுக்காலையிலே; கூதிரொடு வேறுபுல வாடை அலைப்ப மயங்கி - கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; துணை இலேம் தமியேம் பாசறையேம் - அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; எ - று.

N. Ganesan

unread,
May 31, 2020, 6:15:23 PM5/31/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நன்றி, கண்மணி அவர்களே. என்னிடம் உவேசா அவர்கள் பதிப்பித்த நற்றிணை இருக்கிறது. பார்க்கிறேன். பொதுவாக, உவேசா, பின்னத்தூராரை ஒட்டியே சென்றிருப்பார்.
திணை : குறிஞ்சி.
> எஸ்கே: தவறு; முல்லைத்திணை.[...]
   
துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
> எஸ்கே: தவறு; தலைவன் ஆற்றி இருக்கிறான்; தன் தலைவியை நினைத்து ஏங்குகிறான்.
எல்லோரும் குறிஞ்சித் திணைப்பாட்டு என்றும், துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
என்றும் ஏடுகளில் இருந்து பதிப்பித்துள்ளனர்.பேரா. ச. வையாபுரிப்பிள்ளையும் குறிஞ்சித் திணையென்றும்,
துறையும் முன்னவர்கள் கொடுத்ததைக் கொடுத்துள்ளார். எனவே, எல்லா ஏடுகளிலும் இவை உள்ளன
என்பது தெளிவு.

குன்றக்குறவன் - அவன் துணை : இந்த ஜோடி வேறு. தனியனாய் துணை இல்லாமல் உள்ள தலைவன் வேறு என்கிறீர்கள். அது இருக்கலாம்.

N. Ganesan

unread,
May 31, 2020, 6:22:31 PM5/31/20
to மின்தமிழ், vallamai
>பின்னத்தூரார் குன்றக்குறவனின் மனைவி (போதையில்) கிளையை ஒடித்துப் பேசுவதாகச் சொல்வது பொருளை மேம்படுத்தவும் இல்லை;
> சூழ்நிலைக்குப் பொருத்தவும் இல்லை. சக       

ஆமாம். நானும் அப்பொருள் என்னுரையில் தரலை. கிளை என்று பல சமூகங்களில் (உ-ம்: கொண்டையங்கோட்டை மறவர்) பங்காளிகளை, உறவுகளைச் சொல்கிறது. அப்பொருள் தான் இப்பாடலில் வருகிறது.

N. Ganesan

unread,
May 31, 2020, 10:33:00 PM5/31/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வரிப்பறை என்னும் கிணையிலே (< கிண்ணம். Kettle drum), சிறுபாடு பறையின் அடிப்பாகத்தில் உள்ள சிறுவட்டம். தோலாலோ, உலோகத்தாலோ அடைப்பர். சிறுபாட்டைச் சுற்றிவர உள்ள வளையம் முணை. இதில் snare எனப்படும் வள்வார் விசித்துக் கட்டப்படுவது முணை எனும் ’ஹூப்’பில். கிணைப்பறையில் சிறுபாடு ‘bottomhead', பெரும்பாடு ‘drumhead' உண்டு. செண்டை (Cf. சண்டை) போர்ப்பறையில் இரு சமபாடுகள் உள்ளன. செண்டையின் கீழ்ப்பாட்டில் தோல் போர்த்துவதால் Resonator chamber ஆகிறது. கிணை பறை எனப் பெயர் பெறுவதால், நெல் அளவைக்கும் பறை என்றே தமிழில் பெயர். சிந்துவெளியிலே கூட, மீன் என்றால் நீருயிரி, விண்மீன் போல. படி என்னும் அளவைக்குப் பெயரும் பறை என்ற சொல்லுடன் வேர்ச்சொல் தொடர்புண்டு, ”அன்னை உலகெல்லாம் படி அளக்கிறாள்” என்கிறோமே அந்தப் படி (ஈது பறைக்குச் சிறிது.)

              மண்மகள் இலம்பகம், சீவக சிந்தாமணி:
2222 குணில்பொரக் குளிறின முரசம்; வெள்வளை
பணைபரந் தார்த்தன; பம்பை வெம்பின;
விணையில வெழுந்ததாழ் பீலி; யெங்கணு
முணையினாற் கடலக முழக்க மொத்தவே.

பொருள் : முரசம் குணில் பொரக் குளிறின - முரசங்கள் குணில் பொருதலின் முழங்கின; வெள்வளை பணைபரந்து ஆர்த்தன - வெள்வளையும் பணைகளும் பரவி ஒலித்தன; பம்பை வெம்பின - பம்பைகள் ஒலித்தன; எங்கணும் இணையில தாழ்பீலி எழுந்த - எங்கும் ஒப்பற்றனவாகிய தாழ்ந்த ஒலியுடைய நகராக்கள் எழுந்தன; முணையினால் கடலக முழக்கம் ஒத்த - இவ்வோசை மிகுதியாலே கடலிடத்து முழக்கைப் போன்றன.விளக்கம் : பணை : முரசில் ஒருவகை. பம்பை : வாச்சியத்தில் ஒன்று. முணை மிகுதி; பெருக்கம். ( 121 ) முணையினால் கட்டும் வாரின் விசையை மாற்றுவதன் மூலம் முரசங்களில் எழும் ஒலியை மாற்றலாம். Tautness of the snare between the drumhead membrane and the bottom hoop "muNai" heavily influences the sound of the percussion instrument. அவ்வாறு மாற்றி கடல் அலை போன்ற முழக்கத்தை எழுப்பினார்கள். இதனை நாலாயிரப் பாசுரமும் பேசுகிறது. அப்பொருள் சிந்தாமணிப்பாட்டால் விளங்குகிறது. பழைய வியாக்கியானங்களில் இந்தப் பீலி என்பது ஆகுபெயராய் முரசுக்கு நிற்பது சொல்லப்படவில்லை. எருமையின் பேடு என்றால் கலித்தொகையில் முல்லை நிலமக்கள் கலியாணச் சீரில் மணவறையில் வைத்து வழிபடும் எருமைப்பெடைக் கோடு என்பதுபோல, இங்கே பீலி என்பது முரசுக்கு ஆகுபெயர் என அறிக.

பீலி = வாச்சியப் பொது. முரசங்களில் பீலி கட்டுவது வழக்கம். மோசிகீரனார் படுத்த அரசகட்டிலில் இருந்த முரசு பீலி அணிந்தது. புதுகவிஞர் ஒருவர் அரசாங்க ஆஃபீஸில் முதன்முதலாகத் தூங்கிக் காட்டியவர் மோசிகீரனார் எனப் புதுக்கவி புனைந்தார்.

பெரியாழ்வார் பாசுரம்

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*  தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி* 
குழல்களும் கீதமும் ஆகி*  எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு* 
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி*  மங்கைமார் சாலக வாசல் பற்றி* 
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்*  உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)

கண்ணபிரான் கன்றுமேய்த்து விட்டுத் தன்னோடொத்த நிறத்தனரான ஆயிரந்தோழன்மாருடன் கூடிப் பற்பல பீலிக்குடைகள் விசிறிகள் வாத்தியங்கள் முதலிய ஸம்ப்ரமத்துடன் வருகின்றவாற்றைக் கண்ட யுவதிகள் ‘ இவை மேகங்கள் திரண்டுருண்டு வருகின்றனவோ’ என்று தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு இவனை இடைவிடாது காண்கைக்காகத் தந்தம்மாளிகைகளில் சுவாக்ஷத்வாரத்தளவிலே நின்று காணலுற்று, கண்ணனுடைய அழகின் மிகுதியைக் காணக்காணப் பரவஸசகளாய், நின்றவிடத்தில் நிற்கமாட்டாமல் சிலர் அபிநிவேசாதிசயத்தால் கண் கலங்கிச் சன்னல் வழியாக வெளிப்புறப்பட முயல்வாரும், சிலர் மாமிமார் முதலியோருக்கு அஞ்சி அவ்விடத்திலேயே திகைத்து நிற்பாருமாய் இப்படி தந்தம் நெஞ்சுகளையிழந்து ஆஹாரவிருப்பத்தையும் மறக்கப் பெற்றார்கள் என்பதாம். http://www.tamilvedham.org/index.php?r=site/pasuram1&username=&song_no=254&alwar_id=&prabhandam_id=4

On Sat, May 30, 2020 at 7:07 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
    திணை : குறிஞ்சி.
    துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.

வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.

இப்பாடல், முக்கியமாக முதன் மூன்று அடிகள்,  பொருள் உரைக்க மிகுந்த சிக்கலைக் கொடுத்துள்ளமை பெருமழைப்புலவர் கூற்றால் விளங்கும். ஔவை சு.து. முணை என்பதை முனை என்று மாற்றிவிடுகிறார். ஆனால், வரிப்பறைக்கு முணை என்னும் கலைச்சொல் முக்கியமானது.

வரி = நெல் (Cf. வ்ரீஹி; அரிகி/அரிசி; வல்சி). வரிப்பறை நெல்லறுப்புக் காலத்திலே அடிக்கும் பறை. வரிப்பறை நற்றிணை 58-ம் பாட்டில்
உண்டு (பேரா. ச. கண்மணி). நற்றிணை 58-ன் வரிப்பறை தோளில் கோத்து அடிக்கும் உருமி, பம்பை போன்றது எனலாம். துடி எனும் இது இருகட்பறை. நற்றிணை 341-ல் வரும் வரிப்பறை எத்தனை கண் உடைத்து எனச் செய்தி இல்லை. கிணை (கிண்ணம் - Kettle drum) எனப்படும்
(சொ - ள்.) வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் - வங்கா என்னும் கொக்கை வரைந்த/கடியும் நெற்பறையினது சிறுபாட்டைச் சுற்றி உள்ள முணை வளையத்தைப்போல உள்ளது சாராயந்தேக்கிய சாடியின் மூடியும், அதைக் காப்பிட்ட செவ்வரக்கும். செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால்மடுத்து - அச் சாடியில் சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டும் நாவும் அடைத்துள்ளது. அதனைத் திறந்தால் நாக்கு வழியாகச் சாராயம் வடிந்தோடும். காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத மதுவின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; உலையா உலவை ஓச்சிச் சில கிளையா - அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து உறவினர்களுடன்; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை; - குன்றகத்துள்ள தன் ஐ (ஐ = கணவன், இங்கே) ஆகிய குறவனொடு சிறுநொடி [1], மெலிதாகத் தன் ஐமாருடன் அறிவுரை பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; (இங்கே, குறவனும், குறத்தியுமாகிய குறிஞ்சித்திணையின் ஜோடி).

தலைவன் புலம்பல்:
யாம் அரு வெம் பகைமுனை - யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; தண் பெயல் பொழிந்தென நீர் ஈர்ங் கரை நாள் - குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் இரவுக்காலையிலே; கூதிரொடு வேறுபுல வாடை அலைப்ப மயங்கி - கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; துணை இலேம் தமியேம் பாசறையேம் - அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; எ - று.
[1] குறுநொடி - பொய்நொடி. குறுநொடி - குறளை நொடி, கேலி; குறுநொடி பயிற்றல் செல்லமாக, தன் ஐயுடன் அவன் மதிமயக்கத்திற்குக் காரணம் சாராயம் என மருட்டுதல்.
நொடி⁵ noṭi , n. < நொடி²-. [M. noṭi.] 1. [T. noḍi.] Word, phrase, language, speech; சொல். புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும் (பெருங். உஞ்சைக். 33, 72). (சூடா.) 2. Wise sayings; முதுமொழி. பிசியுநொடியும் (பெருங். உஞ்சைக். 33, 175). 3. Riddle, enigma; பிதிர். (சூடா.) Probably, this pair is cross-cousins, which is the norm in South Indian kinship, hence called Dravidian Kinship: https://en.wikipedia.org/wiki/Kinship_terminology#Dravidian_kinship

இச் செய்யுட்கு "வங்கா வரிப்பாறைச் சிறுபாடு முனையின்" என்றும் 'அலையா உலவை யோச்சி' என்றும், 'நீர் இரங்கு அரைநாள் மயங்கி' என்றும் பாடவேறுபாடுகளும் உண்டு. இவை சிறப்பாகத் தோன்றவில்லை.

Virus-free. www.avast.com

N. Ganesan

unread,
Jun 5, 2020, 12:14:36 AM6/5/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
அரிப்பறை/வரிப்பறை - ஒரு குறிப்பு:
”ஆடுமகள்
அரிக்கோல் பறையின் ஐயென ஒலிக்கும்” - அகம் 151/10-11.
இங்கே, அரிக்கோல் - உறுமி போன்ற தாளக்கருவியின் தோன்முகத்தை
அரித்துத் தேய்த்து எழுப்பும் ஒலி எனலாம். இது தோட்பறை.
சிறுவர்களும் விளையாட்டுக்கு இந்த அரிப்பறையை வாசிப்பர்
”சிறு தோள் கோத்த செவ் அரிப்பறையின்” - நற் 58/2
போலும், நற்றிணை 58-ல் அவ்வாறு தோளில் கோத்த அரிப்பறை
ஒன்று பேசப்படுகிறது. இதற்கும் அரிக்கோல் அகம் 151 போல இருக்க வாய்ப்புண்டு.
அந்த அரிப்பறை வரிப்பறையாதலும் கூடும் என்கிறார் கண்மணி. இருக்கலாம்.

அரிப்பறை புள் ஓப்புதலும், மென்பறை புள்ளை இரியச் செய்தலும்:
அரிப்பறையால் புள் ஓப்பி - புறம் 395/7

அரிப்பறையான் புள் ஓப்புந்து - புறம் 396/4
[...]
மென் பறையான் புள் இரியுந்து - புறம் 396/6

புறம் 395, 396-ல் வரும் அரிப்பறை பறவைகளை ஓப்புகிறது.
அதாவது, வன்பறை இவை. kettle drums. முரசு, நகாரா போன்றவையும்
இப்பறைகளில் சாரும். கிணை, துடும்பு போன்றவை இவற்றில் சிறியன.
முரசு பறைகளின் ராஜா. துந்துபி எருமைத் தோல் போர்த்துச் செய்யப்படும்.
ஓப்புதல். அச்சத்தால் விரைந்து வானில் ஓங்கிப்
பறக்கச்செய்யும் வலிய ஓசை கொண்டன இப்பறைகள்.
இவை வரிப்பறை எனலாம்.

ஆனால், மென்பறையால், பறவைகள் இரியும். இரிதல்: இருக்கும் இடம் விட்டு
வேறோர் இடத்தில் சென்று இரைமேய்தல். மென்பறை என்பது தவுல் (இருளர்களிடம்
உள்ள பழைய வகை), உறுமி, ... போன்றன எனலாம்.
தவுல், நாகஸ்வரம்:
https://www.youtube.com/watch?v=RAs4BQKtvyY

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 5, 2020, 9:14:25 AM6/5/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
> அரிப்பறை/வரிப்பறை - ஒரு குறிப்பு:

Kettle drums - தமிழில் கிணைப்பறை. இவற்றில் ஒருவகை தடாரி. துடும்-துடும் என்றா ஓசை எழுப்பும் துடும்பு.
இடுப்பில் கட்டி குணிலால் (mallet) அடிக்கும் இந்த ஒருகட்பறை வரிப்பறை/அரிப்பறை.  இவை அரித்த ஓசை
எழுப்புவதல்ல. இங்கே, வரி/அரி = நெல். நெல்லரியும் காலத்து மருதப்பறை.
புறம் 393
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
ஆடுமக ளல்கு லொப்ப வாடிக்
கோடை யாயினுங் கோடி.......
காவிரி புரக்கு நன்னாட்டுப் பொருந
வாய்வாள் வளவன் வாழ்கெனப்
பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே.
20. கிணைப்பறைக்கு முழுமதி உவமை ; "மதியத் தன்னவென் விசியுறு தடாரி", "மாகவிசும்பின் வெண்டிங்கள், மூவைந்தான் முறைமுற்றக், கடனடுவட் கண்டன்னவெ னியம்" (புறநா. 371 : 17, 400 : 1 - 4)   [உவேசா]

புறம் 395
உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர்
யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினே னாக

"ஒருகண் மாக்கிணை யொற்றுபு" (புறநா. 392 : 5)
கிணைப் பறை = Kettle drums, ஒருகட் பறை (கிண்ணம் போன்றவை) என்பது தெளிவு. ஏகமுக வாத்தியம் = ஒருகட் பறை.

Long grain rice என்று மளிகைக்கடைகளில் விற்கின்றனர். அதன் சங்கப் பெயர்: நிமிரல்.
 கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) ; நற். 258 : 6.

அரித்தெழும் ஓசையை உடைய பறை: உறுமி வகை. Rubbing the membrane creates this noise: அரிக்கும்கோல், அரிக்கோல் பறை இது. தற்கால, றும் றும் என்னும் ஓசை எழுப்பும் உறுமி போன்றவை அரிக்கோல் அரிப்பறை.
அரிப்பறை - ஒருவகைப்பறை ; அரித்தெழும் ஓசையையுடையது ; 'அரிப்பறை வினைஞர்' ('ஐங்குறு.81) ; 'அரிக்கூட் டின்னியம் கறங்க வாடுமகள்' (குறிஞ்சிப். 193) ; ' அரிப்பறை யனுங்க வார்க்கும் மேகலை', 'அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே' (சீவக.2082, 2688)

இதனின்றும் வரிப்பறை/அரிப்பறை (Kettle drums) மாறானவை.
விசிபிணித் தடாரி விம்மென வொற்றி
ஏத்தி வந்த தெல்லா முழுத்த (புறம்  372)
விசிபிணித் தடாரி இம்மென ஒற்றி - விசித்துக் கட்டப்பட்ட கிணைப்பறை இம்மென வொலிக்கும்படி யறைந்து

ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதென் சிறுகிணைக் குரலே. புறம் 376
சிறுகிணை - small kettle-drum.

புறம் 378
"என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் பெரிய தடாரிப்பறை கண் கிழியுமாறு கொட்டி; எஞ்சா மரபின் வஞ்சிபாட - வலிகுன்றாத முறைமையினையுடைய பகைமேற் செல்லும் செலவாகிய வஞ்சித்துறைப் பாட்டுக்களை இசைத்துப் பாட; எமக்கென வகுத்தவல்ல - எம்மைப் போலும் பரிசிலர்க் களித்தற்கெனச் செய்யப்படாதனவான; மிகப்பல - மிகப்பலவாகிய; மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை - மேன்மையான சிறப்பினையுடைய பெறற்கரிய அணிகலங்களும் பிற பொருள்களுமாகிய செல்வத்தை; தாங்காது பொழிதந்தோன் - எம்மால் தாங்கமாட்டாத அளவில் வழங்கினான்" ஔவை சு.து.
இங்கே, கிணையர்கள் குழுத்தலைவன் அரண்மனைக்கு வெளியே நின்று பரிசில் வேண்டுகிறான். அரிக்கூடு மாக்கிணை. பல கிணைவர்கள் கூடி அடிக்கும் தடாரிப்பறைகள் (Kettle drums). இவை அரித்த ஓசை எழுப்புவை அல்ல. எனவே, உரை பொருந்துவதில்லை. அரிக்கூடு மாக்கிணை.
நெல்லரியும் காலத்தில் கூடிக் கிணையர்கள் அடிக்கும் கிணைகள். அரிக்கூடு = ensemble of kettle drums used during paddy harvest. "அரிக்கூடின்னியம்" (மதுரை: 612) என வருதல் காண்க.

"வஞ்சிப்போருடற்றித் தோற்ற வேந்தர் பணிந்து நல்கிய அருங் கலங்களைப் பொருநர் முதலாயினார்க்கு இளஞ்சேட் சென்னி நல்குகின்றானென்பான், "எமக்கென வகுத்த வல்ல...பொழிதந் தோனே" என்று இசைக்கின்றான். "பொழிதந்தோன்" என்றது, மழைபோல் சொரிந்தமை தோன்ற நின்றது. அருங் கலங்களைக் கண்ட கிணைப் பொருநன் சுற்றத்தார், "அவை தமக்கென வகுத்த வல்ல" என்பது காணாமல், சீதையின் "மதரணி கண்ட குரங்கின் செம்முகப், பெருங்கிளை இழைப் பொலிந் தாங்கு"க் கொண்டார் நகைக்கத்தக்க வகையில் அவ்வருங் கலன்களை அணியும் இடமும் முறையுந் தெரியாது அணிந்து மகிழ்ந்தனர் என்று சொல்லியின்புறுகின்றான். சுற்றத்துக்குத் தலைமை தாங்கிய தான் பெற்று வந்தது" அரும்பட ரெவ்வம்" எனவும், இப் போது பெறுவது "அறாஅ வருநகை" எனவும், கூறுவது பொருட்பேற்றிற் பிறந்த மருட்கை."

தெண்கண் மாக்கிணை
கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல்         20
எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர்
கேட்டொறு நடுங்க வேத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே. புறம் 382
சிறுகோல் = குணில் = mallet used on a kettledrum.
பறையரில் ஒரு வகுப்பார் முரசு என அழைக்கப்படுதலை எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.
கிணையர்கள் மங்கலப் பாணர்கள் போலன்றி தலைவர் மனைகளில் உள்ளே சென்று
பாடியதாக சங்க இலக்கியப் பாடல்கள் இல்லை.
“பகற்போதில் அவனூருக்குச் சென்று ஊர்க்கு முன்னேயுள்ள மன்றத்தே தங்கிப் பகற்போதைக் கழித்து இரவின் கடையாமத்தேகிணைப் பறை கொட்டித்தலைவன் புகழ்பாடுவது கிணைப்பொருநர் செயன்முறையாதல் பற்றி, பரிசில்தர நீட்டியாது விரைந்து தந்தமைதோன்ற, "பாடிநின்ற பன்னாளன்றியும்" என்றான்.”(ஔவை சு.து.)
“பன்முறையும் பாடிப் பரிசில் பெற்றவர் ஒளவையார். ஒருகால் அவர் பொகுட் டெழினியின் தகடூர்க்குச் சென்றிருந்தபோது அவன் செய்த சிறப்பைப் பொருநன் ஒருவன் எழினியின் பெருமனையின் முற்றத்தில் விடியற் காலையில் நின்று தன் ஒருகண் மாக்கிணை யென்னும் பறையைக் கொட்டிப்”

புறம் 387
வள்ளுகிர வயலாமை
வெள்ளகடு கண்டன்ன
வீங்குவிசிப் புதுப்போர்வை
தெண்கண் மாக்கிணை
வள்ளுகிர வயலாமை - கூரிய நகங்களையுடைய வயலிடத்து வாழும் யாமையினது; வெள்ளகடு கண்டன்ன - வெண்மையான வயிற்றைக் கண்டாற் போன்ற; வீங்கு விசிப் புதுப் போர்வை - பெரிதாய் வலித்துக் கட்டப்பட்ட புதிய தோல் போர்த்த;தெண்கண் மாக்கிணை இயக்கி -தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை யறைந்து;

ஆமையின் ஓடுபோன்று உள்ள சிறிய கிணைப்பறை இப்பாட்டில். ஆமையின் வெள்ளகடுபோல்வது கிணைப்பறை யென்பதை " ஆமை கம்புள் இயவனாக விசிபிணித் தெண்கட் கிணையிற் பிறமும்" (அகம். 356) என்று பிறரும் கூறுதல் காண்க

புறம் 395
”அரிப்பறையாற் புள்ளோப்பி - அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த கதிர்களை யுண்டற்கு வந்துபடியும் புள்ளினங்களை யோட்டி; ”  அரிப்பறை < வரிப்பறை. இங்கே, வரி/அரி = நெல். அரித்த ஓசை எழுப்புவதல்ல கிணைப்பறை. தடாரி, துடும்பு, முரசு, துந்துபி, நகாரா போன்றவை. இவை, வன்பறை.

NG

வேந்தன் அரசு

unread,
Jun 5, 2020, 9:50:48 PM6/5/20
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
<இரிதல்: இருக்கும் இடம் விட்டு
வேறோர் இடத்தில் சென்று இரைமேய்தல்>

அப்படி வாங்க வழிக்கு. 
அன்று இரிதல் என்றால் " அஞ்சி ஓடுதல்" எனப்பொருள் என அடம்பிடித்திர் .

"பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்"

'கங்கைக்கரை மக்கள்  இக்கரையிலிருந்து அக்கரைக்கு வெள்ளத்துக்கு  அஞ்சி படகில் சென்றனர்' என்று விளக்கம் கொடுத்தீர் ,

வெள்., 5 ஜூன், 2020, முற்பகல் 9:44 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jun 5, 2020, 10:15:03 PM6/5/20
to மின்தமிழ், vallamai
On Fri, Jun 5, 2020 at 8:50 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<இரிதல்: இருக்கும் இடம் விட்டு
வேறோர் இடத்தில் சென்று இரைமேய்தல்>

அப்படி வாங்க வழிக்கு. 
அன்று இரிதல் என்றால் " அஞ்சி ஓடுதல்" எனப்பொருள் என அடம்பிடித்திர் .

"பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்"

'கங்கைக்கரை மக்கள்  இக்கரையிலிருந்து அக்கரைக்கு வெள்ளத்துக்கு  அஞ்சி படகில் சென்றனர்' என்று விளக்கம் கொடுத்தீர் ,

இரியற்க  = don't panic. புள் இரியுந்து என்றாலும், அஞ்சி/வெருவி உளது.

https://groups.google.com/d/msg/mintamil/fKA_3hTTQwo/FaK53R-AIzoJ
On Wednesday, December 10, 2014 1:39:58 AM UTC-8, Pandiyaraja wrote:
மிக்க நன்றி ஐயா!
இரிவு = Panic என்று கொள்ளலாம்.

இரியல் என்றாலும்  Panic தான். இரியல் தவிர்க்க = don't be in a panic.
Here, panic is a noun.

don't panic = இரியவேண்டாம். (don't eat = உண்ண வேண்டாம், don't climb =  ஏற வேண்டாம்,  don't sleep =  தூங்க வேண்டாம், ... போல)

இதைக் தந்தவர் ருத்ரா. அவருக்கும் நன்றி.
ப.பாண்டியராஜா


On Wednesday, December 10, 2014 1:33:42 PM UTC+5:30, Hari wrote:

2014-12-10 13:02 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?

இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும்.  எடுத்துக் காட்டாக,

எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய

திசை யானைகளும் அஞ்சி ஓடின (உலகத்தை அழிப்பேன் என்று இராமன் சினம் கொண்டு நிற்கிறான்.  அவனை சடாயு சமாதானப்படுத்துகிறான்.

பேனிக் என்பதற்கு சமமான சொல்லாக இதைத் தமிழில் பயன்படுத்த முடியும்.

இரி என்பதே வேர்தான் என்று நினைக்கிறேன்.

n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்


பார்க்கவும்.
--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Jun 5, 2020, 10:37:53 PM6/5/20
to மின்தமிழ், vallamai
On Fri, Jun 5, 2020 at 8:50 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<இரிதல்: இருக்கும் இடம் விட்டு
வேறோர் இடத்தில் சென்று இரைமேய்தல்>

அப்படி வாங்க வழிக்கு. 
அன்று இரிதல் என்றால் " அஞ்சி ஓடுதல்" எனப்பொருள் என அடம்பிடித்திர் .

"பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்"

'கங்கைக்கரை மக்கள்  இக்கரையிலிருந்து அக்கரைக்கு வெள்ளத்துக்கு  அஞ்சி படகில் சென்றனர்' என்று விளக்கம் கொடுத்தீர் ,

இரியற்க  = don't panic. புள் இரியுந்து என்றாலும், அஞ்சி/வெருவி உளது.


பெரும்பாண். நச்சர் உரை:
இரியல் போகி (202) கட்சி சேக்கும் (205) - அவர்கள் ஆரவாரத்திற்கு அஞ்சிக் கெடுதற்றன்மையை உடையவாய் ஆண்டு நின்றும் போய்க் காட்டிலே தங்கும்,

432. பெரு நீர் போகும் இரியல் மாக்கள்-பெரிய நீரைக்கடந்து போம் கெடுதலையுடைய மாக்கள், கெடுபட்டுப்போவார் ஒருவர்க்குமுன்னே ஒருவர் விரைந்துபோதலைக் கருதுவர்.

Reply all
Reply to author
Forward
0 new messages