அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

11 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 16, 2016, 3:32:57 PM2/16/16
to thiru thoazhamai

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)


தலைப்பு-சரக்கஞ்சல் - cargo

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான  சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

  துபாயில் செயல்பட்டு வரும்  தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது.
சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம்  கட்டணமாகப் பெறப்படுகிறது.   பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி.
அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும்  தூதஞ்சல் பணி இருந்து வருகிறது.
மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார்  தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய பொருட்களை அனுப்பிப் பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு எண் /  பகிர்பேசி( whats App) :
052 – 610 3729
mohamed...@emstarcourier.com
www.emstarcourier.com
குறிப்பு :
தங்களது இடத்துக்கே வந்து சரக்குகள் எடுத்துக் கொள்ளப்படும்.
முத்திரை-எம்ஃச்டார்-muthirai_emstar
– முதுவை இதாயத்து


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Feb 16, 2016, 7:02:54 PM2/16/16
to வல்லமை, thiru-th...@googlegroups.com
cargo courier = தூது அஞ்சல்   
என்ற   மொழிபெயர்ப்பு cargo courier என்பதன் பொருளைக் கொடுப்பதைவிட குழப்பத்தைத்தான் தருகிறது ஐயா.

Messenger என்பதை தூது என்ற பொருளில் இங்கு கொள்ள முடியுமா எனத்தெரியவில்லை. 

cargo courier  சேவையை  நாம் விரைவாக பொருட்களை, தகவலை அனுப்பப் பயன்படுத்துவதால் 

cargo+express+messenger  என்ற மூன்று பொருளும் கொடுக்கும் வகையில் "சரக்கு விரைவஞ்சல்"
express courier/post/delivery என்பதை விரைவஞ்சல் என்றும் குறிக்கலாம் ...
அத்துடன் விரைவஞ்சல்  என்பது ஏற்கனவே புழக்கத்திலும் உள்ளது.

..... தேமொழி

Anna Kannan

unread,
Feb 17, 2016, 2:37:42 PM2/17/16
to Vallamai
கூரியர் என்ற சொல்லுக்குத் தூதஞ்சல் என்ற சொல், பரவலான புழக்கத்தில் உள்ளது. புரபஷனல் கூரியர் நிறுவனம், தன் பெயர்ப் பலகைகளில் இவ்வாறே எழுதியுள்ளது.

விரைவஞ்சல் என்று எழுதும்போது அது, ஸ்பீடு போஸ்டைக் குறிக்கும் வாய்ப்பு அதிகம். எக்ஸ்பிரஸ் அஞ்சல்களுக்கு அதிவிரைவஞ்சல் என எழுதலாம்.

கார்கோ அஞ்சல்களுக்கு வெறுமனே சரக்கஞ்சல் என்றே எழுதலாம். தேவைப்பட்டால் வான்வழி சரக்கஞ்சல், கடல்வழி சரக்கஞ்சல் என்று எழுதலாம். எக்ஸ்பிரஸ் கார்கோ அஞ்சல்களுக்கு அதிவிரைவு சரக்கஞ்சல் என எழுதலாம்.




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.Annakannan
Localization Lead
Indus OS

தேமொழி

unread,
Feb 17, 2016, 3:48:20 PM2/17/16
to வல்லமை

என் கருத்து தவறு என்று தெரிகிறது.  

இடையிட்டு குழப்பியதற்கு வருந்துகிறேன். 

தகவலுக்கு நன்றி அண்ணாகண்ணன்.  
Reply all
Reply to author
Forward
0 new messages