வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்

13 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 14, 2019, 3:20:10 AM2/14/19
to seshadri sridharan

வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்


1.   ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத்

2.   தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப்

3.   பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும்  புன்

4.   செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரை

5.   யும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும்

6.   (ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வே

7.   (லியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொ)

8.   ண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப்

9.   பண்ணுவதே. இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.

10. (இப்பட்டர்கள்) குடியிருக்

11. கிற மனைகளுக்கு நிலம் கா

12. லும் பாடிகாப்பானுள்

13. ளிட்டபணி செய் மக்களு

14. க்கு நிலம் காலும் ஆக நி

15. லம் முப்பத்திரு வேலியும்

16. சந்திராதித்தவரையும் இ

17. றையிலி ஆக விட்டோம்.

18. இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.

19. (கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)

இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு. 

மகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு. 

விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.

இந்த பிராமண வீடுகளை ஒட்டி நிலம் காலும் ஒதுக்கப்படுகின்றது. அவை கொல்லைப்புறமாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. இவர்களுடன் பாடிகாவல் உள்ளிட்ட பிற பணியாளருக்கும் இறையிலியாக தலைக்கு கால்நிலம் என 32 வேலி நிலம் நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் வரை செல்லக் கடவதாக வழங்கப்படுகின்றது.   

 

22 பேருக்கு 32 வேலியை வகுத்தால் ஒருவருக்கு ஒன்றரையாக (1.45) நிலம் கிட்டுகின்றது. இந்த ஒன்றரையில் கால் என்பது சற்றொப்ப 0.242 என வருகின்றது. அப்படியானால் பாடிகாவல் உள்ளிட்ட பிற கோவில் பணிசெய்வோருக்கு நிலம்கால் என்ற அளவில் 32 வேலி நிலத்தை வகுத்தால் 128 பேர் நிலம் பெறுகின்றனர். ஆக ஒரு பழைய கோவில் ஊரை திருத்திச் சீரமைத்து பெரிய ஊராக அமைத்தான் வாணகோவரையன் என்பது விளங்குகின்றது.  இந்த கால்நிலம் பெறும் 128 பேரில் 22 பிராமணரும் அடங்குவர் என்று தெரிகின்றது. அந்த 22 பேரைக் கழித்தால் 128 – 22 = 106 பிராமணரல்லாதார் நிலம் பெற்றனர். இந்த கால்நிலம் என்பது பயிர் நிலமல்ல மாறாக அவர்கள் தம் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்வதற்கே என்று புரிகின்றது. பிராமணருக்கு அரசனே வீடு கட்டிக் கொடுத்ததால் அவை அளவில் பெரியவாகவும் கிணறு உடையவாகவும் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. 

அதேநேரம் கால்நிலம் பெற்றவர்கள் எளியோர் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து பெரிய வீடு கட்ட முடியவில்லை என்பதோடு கிணறு வெட்டினால் கூடுதல் செலவாகும் எனபதால் கிணறுஅற்ற சிறு வீடுகளாகவே அவர்தம் வீடுகள் காட்சிப்படுகின்றன. கால்நிலம் என்பதும் சிறுபரப்பு நிலத்துண்டு தான் அதுவே சிறிய வீட்டிற்கும் காரணமாகின்றது.

மற்றொரு மடலாடல் குழுவில் 3 ஆண்டுகள் முன் பிராமணர் பிறர் வீடுகள் கிணறு அமையா வண்ணம் தடுத்துவிட்டனர் என்று தொல்லியலாளர் பத்மாவதி என்பவர் கருத்து கூறியதாக பதிவான போது அதை மறுத்து பிராமணர் வீடுகள் கிணறுடன் இருப்பதற்கு அவை வேந்தர், மன்னர், அரையர்களால் பெருஞ்செலவு செய்து  கட்டப்பட்டவை. பிறருடைய வீடுகள் கிணறு இன்றி சிறியவாக இருப்பதற்கு காரணம் அவர்தம் வீடுகள் அவர் தம் சொந்த செலவால் கட்டப்பட்டதே காரணம் என்று பிழையை சுட்டிக் காட்டினேன். தொல்லியலாளர் பத்மாவதி திராவிட கருத்தியலின் தாக்கத்தால் அவ்வாறு தவறான ஒரு கருத்தை கல்வெட்டில் செய்தியாக கூறப்பட்டுள்ளது என திணித்துள்ளார் என்று எடுத்துரைத்தேன். இப்போது போல அப்போது என்னால் கல்வெட்டுச் சான்று ஏதும் தரஇயலவில்லை என்பதே குறை.

தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் தம் சொந்தக் கருத்தை கல்வெட்டுச் செய்தியாக புகுத்தாமல், திணிக்காமல் இருப்பதுவே சாலவும் நன்று, அல்லவிட்டால் பல தலைமுறைக்கு அத்தவறான கருத்து எடுத்துச் செல்லப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதே நடப்பு உண்மை.

இப்போது இந்தக் கல்வெட்டின் மூலம் பெரம்பலூர் வட்டம் சித்தளி ஊரில் மட்டும் அல்ல, கோவில் அமைந்த பிற எல்லா ஊர்களிலும் இதே முறையில் தான் பிராமணருக்கு வீடும், பிறருக்கு வீட்டு மனை மட்டும் என வழங்கப்பட்டன. அதனால் தான் பிராமண வீடுகள் கிணறுள்ள பெரிய வீடாகவும், பிறருக்கு கிணறற்ற சிறிய வீடாகவும் அமைந்தன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  இன்றும் கோவில் ஊர்க் கிராமப் புறங்களில் வீடுகள் இதே நிலையில்தான் அமைந்துள்ளன என்பதைக் கண்டு தெளியலாம். இந்த வேறுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்கு வேந்தர், மன்னர், அரையர் தாம் காரணமே ஒழிய பிராமணர் காரணகர் அல்லர். அப்படியான நிலையில் பிராமணரைப் பழிப்பது நன்றன்று.

வேந்தர், மன்னர், அரையரான அரசர், நாட்டுக் கிழான் ஆகிய நாலடுக்கு அதிகார அமைப்பு பிராமணருக்கு வேத பாடசாலை அமைத்து கல்வி புகட்டி, கோவில் கட்டி வேலைவாய்ப்பு தந்து குடியிருக்க வீடும் ஏற்படுத்தித் தந்தது என்ற வகையில் 4 அகவை முதல் இறக்கும் காலம் வரை பாதுகாவலராக உத்தாரமாக (supportive) இருந்து தந்தைக்கு ஒப்பான நிலையில் பேணியதற்கு பிராமணர் நன்றி உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். ஆளப்பிறந்தவர், ஆண்டகுடி, மண்ஆண்டவர், அடக்கிஆண்டவர் என்று மார்தட்டிக் கொள்வோர் காரணமின்றி பிராமணரைப் பழிப்பது என்பது இதில் அவர்கள் போற்றும் அரசகுடியோரை பழிப்பதாகவே கருதத்தக்கதாக உள்ளது.

 

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III, பக். 100. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை – 8.

வல்லமையில் http://www.vallamai.com/?p=90621


sithali 2.jpg    sithali 1.jpg

sithali 6.jpg    sithali 5.jpg   

எனது கோரிக்கையை ஏற்று கோவில் படங்களையும் கல்வெட்டு படங்களையும் அனுப்பிய பட்டர் திரு. கல்யாண ராமன் அவர்களுக்கு நன்றி.

sithali 2.jpg
sithali 1.jpg
sithali 4.jpg
sithali 3.jpg
sithali 6.jpg
sithali 5.jpg

seshadri sridharan

unread,
Feb 15, 2019, 11:07:33 PM2/15/19
to seshadri sridharan, vall...@googlegroups.com
எண்ணில் நிழலாடும் கருத்து: இப்படி 4 அகவை முதல்  முதுமை வரை உத்தாரமாக இருந்த  அரசர்கள் ஆடவரைத் தான் அப்படி தாங்கினர். மகளிரை அவ்வாறு தாங்கி செய்த பொருளியல் உதவிகள் என்ன? உங்களில் எவரேனும் அறிந்தால் கருத்திட வேண்டுகிறேன், தேவரடியாரை தவிர்த்து. என்னுடைய தேடலில் அதையும் சேர்த்துக்கொள்ளுவேன்.  

பண்டு ஆட்சியாளர்கள் தம்மை ஆட்சியாளராக மட்டுமே கருதாமல் சைவ வைணவ மதங்களுக்கு தலைவராக கருதினர் என்பதால் தான் இப்படி கோவில் பணியாளர்க்கு உதவியுள்ளனர். இந்த நிலை எப்போது மாறுகிறது என்றால் தமிழ் வேந்தர் ஆட்சி ஒழிந்ததும் 15 ஆம் நூற்றாண்டில் சைவ மடங்களுக்கும் வைணவ சீயர் மடங்களுக்கும் இக்கோவில்களின் நிர்வாகமும் கண்காணிப்பும்  சென்றுவிட்டன . ஒவ்வொரு மடமும் 100 கோவில்கள் வரை தம் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தன.

காரிகிரிச்சன் 

seshadri sridharan

unread,
Feb 15, 2019, 11:09:15 PM2/15/19
to seshadri sridharan, vall...@googlegroups.com
என்னில் என்று திருத்துகிறேன் 

seshadri sridharan

unread,
Feb 16, 2019, 6:48:21 AM2/16/19
to seshadri sridharan, vall...@googlegroups.com
On Sat, 16 Feb 201

என்னில்  நிழலாடும் கருத்து: இப்படி 4 அகவை முதல்  முதுமை வரை உத்தாரமாக இருந்த  அரசர்கள் ஆடவரைத் தான் அப்படி தாங்கினர். மகளிரை அவ்வாறு தாங்கி செய்த பொருளியல் உதவிகள் என்ன? உங்களில் எவரேனும் அறிந்தால் கருத்திட வேண்டுகிறேன், தேவரடியாரை தவிர்த்து. என்னுடைய தேடலில் அதையும் சேர்த்துக்கொள்ளுவேன்.  

பண்டு ஆட்சியாளர்கள் தம்மை ஆட்சியாளராக மட்டுமே கருதாமல் சைவ வைணவ மதங்களுக்கு தலைவராக கருதினர் என்பதால் தான் இப்படி கோவில் பணியாளர்க்கு உதவியுள்ளனர். இந்த நிலை எப்போது மாறுகிறது என்றால் தமிழ் வேந்தர் ஆட்சி ஒழிந்ததும் 15 ஆம் நூற்றாண்டில் சைவ மடங்களுக்கும் வைணவ சீயர் மடங்களுக்கும் இக்கோவில்களின் நிர்வாகமும் கண்காணிப்பும்  சென்றுவிட்டன . ஒவ்வொரு மடமும் 100 கோவில்கள் வரை தம் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தன.



எனக்கு முன்னம் இவ்வாறு ஒரு கருத்தை எவரும் சொன்னதில்லை தான். ஆனால் நான் இதை எதன் அடிப்படையில் சொல்லுகிறேன் என்றால் சோழர் காலத்தில் ஆட்சியாளரின் நேரடி பணியாளாக கோவில் நடைமுறைகள் சீராகப் பின்பற்றப்படுகின்றனவா? திருவிழாக்கள், வேத பாடசாலைகள், மருத்துவமனைகள் (ஆதுரசாலைகள்) தக்கபடி இயங்குகின்றனவாக ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்க பிரம்மராயன் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டு அதை பிரமணர்களைக் கொண்டே ஆட்சியாளர்கள்  கண்காணித்து வந்துள்ளனர் என்பது அவர்களே சைவ வைணவ மதங்களின் தலைவர்கள் என்ற கருத்தினால் தான் எனத் தோன்றுகிறது. இராசராசன் காலத்தில் தேவாரம் வெளிப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்பிசைவு தந்தது குலோத்துங்கன் காலத்தில் நாயன்மார்கள் வரலாறு இயற்றப்பட்டு அவர்களுக்கு மதிப்பு செய்யப்பட்டு பின் அவர்கள் கோவிலில் சிலைகளாக நிறுத்தப்பட்டது ஆகியனவற்றை நோக்கினால் இந்தக் கருத்து  வலுப்பெறுகிறது. 

வைணவக் கோவில்சிலைகள் பல்லவ வேந்தர்களின் சாயலில், உடுப்பில் அமைக்கப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த கருத்திற்கு தான் இட்டுச்செல்கின்றன.

மேலும் கருத்துக்களை வரவேற்கிறேன்.

seshadri sridharan

unread,
Feb 17, 2019, 1:17:23 AM2/17/19
to seshadri sridharan, vall...@googlegroups.com
இந்து மதம் வேத மதம், புராண மதம், தந்திர யோக மதம் என்னும் மூன்று தனித்தனி மெய்யியலின் தொகுப்பு ஆகும். தந்திர யோகம் பல ஆயிரம் ஆண்டுகளாக இத்துணைக் கண்டத்தில் வழங்கியது. அதற்கு தலைவர் என்று யாரும் இல்லை. வேள்வி மதமான வேத மதம் பிராமணர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு தலைவர் என்று யாருமில்லை. புராணம் மதம் 6 ஆம் நூற்றாண்டில் வியாசரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வியாசர் இந்த மூன்று மதங்களுக்கும் பங்காற்றியவர் என்ற முறையில் அவரது மாணாக்கர்களால் இந்தமூன்று மதங்களும் 6 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்று வளர்கின்றன. அதனால் பிராமணர் வேதம், புராணம் ஆகிய இருமதங்களின் வினைப்பகுதிகளுக்கு முகாமையானவர்களாக ஆகினர் என்றாலும் புராண மதத்திற்கு வெளித்தோற்ற வடிவை தந்தவர்கள் ஆட்சியாளர்களான பல்லவரும் சாளுக்கியரும் ஆவர். அவர்கள் தாம் புராண மதத்தை கட்டியெழுப்பி வளர்த்தெடுத்தனர். அதன் பாதுகாவலராய் இருந்தனர்.  இப்போது இதன் தலைவர்கள் யார் என்பது புரிந்திருக்கும். பெருவாரியானா மக்கள் புராண மதத்தை தான் பின்பற்றுகின்றனர். தந்திர மதமும் வேள்வி மதமும் சிறுபான்மை மக்களால் மட்டுமே கைக்கொண்டு ஒழுக்கப்படுகின்றது.

வேந்தன் அரசு

unread,
Feb 17, 2019, 5:02:29 PM2/17/19
to vallamai, seshadri sridharan
நான் படித்த வரலாற்றுப்பாடங்களில் வாணகோவரையன் பெயரே இல்லை. வம்சதாரா  வாசித்தப்பின்னரே அவர்பற்றி அறிந்தேன்.

சனி, 16 பிப்., 2019, பிற்பகல் 10:17 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Feb 17, 2019, 10:24:50 PM2/17/19
to vall...@googlegroups.com
On Mon, 18 Feb 2019 at 03:32, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நான் படித்த வரலாற்றுப்பாடங்களில் வாணகோவரையன் பெயரே இல்லை. வம்சதாரா  வாசித்தப்பின்னரே அவர்பற்றி அறிந்தேன்.

நானும் தான். நான் நடுகல் கல்வெட்டுகளை 2012 இல் படிக்கும் வரை அப்படி ஒரு பெயரை கேட்டதே இல்லை. இத்தனைக்கும் நான் M.A. வரலாற்றியல் பட்டம் பெற்றவன். 

நடுகல் கல்வெட்டில் பல்லவரை நோக்கி எந்த படையெடுப்பு வந்தாலும் அதை முதலில் எதிர்ப்பது வாணர் தான்நேரடியாக பல்லவர் எதிர்கொண்டதில்லை. . மௌரிய படையெடுப்பின் போது முதலில் நன்னன் தான் அப்படையை எதிர்கொள்கிறான். நிலைமை மோசமான பின்பே சோழன் தலையிட்டு மௌரியரை வெற்றி கொள்கிறான். இதில் வேந்தன் மன்னர் என்ற இரண்டு அதிகார அடுக்கு உள்ளது. இதை வைத்து தான் நான் நான்கு ஆட்சிஅதிகார அடுக்கு உள்ளது என்ற முடிவு கொண்டேன்.   

பல்லவர் தொண்டை நாட்டை மட்டும் ஆளவில்லை. புதுக்கோட்டையை ஆண்டனர். அதே போல் கொங்கு சோழர் ஆட்சியில் அவர்க்கு பணிந்து கொங்கில் மன்னராக பல்லவர் ஆண்டனர். சோழரின் நம்பிக்கைக்குரிய (சாமந்தராக, பட்டராக, தண்ட நாயக்கராக) படைத்தலைவராக அங்கு  பல்லவர் இருந்துள்ளனர். இப்படி தொண்டை நாட்டை தவிர்த்து இவர்கள் வேறு எங்கெல்லாம் ஆட்சி செய்தனரோ அங்கெல்லாம் வாணரை அழைத்துக் கொண்டு போய் அரையர்களாக ஆக்கியுள்ளனர்  . இதை புதுக்கோட்டையிலும் கொங்கிலும் காணமுடிகிறது. வாணர் மதுரையையும் ஆண்டுள்ளனர் எனத் தெரிகின்றது. 

தொல்லியல் துறை (ASI) சரியான திட்டத்தோடு செயற்படவில்லை. தலைமையில் இருந்த ஆங்கில அதிகாரிகள் சமற்கிருத்தை மதித்து தேவநாகரி எழுத்தை பயன்படுத்தி சமற்கிருதம், பாளி மொழி கல்வெட்டுகளை epigraphica indica இல் வெளியிட்டனர். ஆனால்  தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிக்  கல்வெட்டுகளை அவ்வம்மொழி எழுத்தில் வெளியிடாமல் உரோமன் எழுத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் அக்கல்வெட்டுகளை சரிவர படித்து புரிந்து கொள்ள முடியாநிலை உள்ளது. நாடு விடுதலை கண்ட போதாவது உரோமன் எழுத்துக்களை கைவிட்டுவிட்டு அவ்வம் மொழி எழுத்தில் அச்சிட்டிருக்க வேண்டும்.  செய்தார்களா இல்லையே! இத்தனைக்கும் அப்போது முக்கால்வாசி பணியாளர்கள் பிராமணர்கள் தான்.

தமிழ் நாட்டில் படியெடுத்த கல்வெட்டுகளை அப்போதிருந்த சமீன்தார்கள், பண்ணையார்கள் உதவியோடு நூலாக வெளியிட்டிருக்கலாம். அதைச் செய்யவில்லை. இன்று அம்மைப்படிகள் இற்று உதிர்ந்து வீழும்நிலையில் உள்ளன. என்ன பயன் உழைப்பு மொத்தம் வீண். இதனால் உண்மை வரலாறு அறியப்படாமலேயே காலம் கழிந்துவிட்டது. உண்மையில் அப்படி கல்வெட்டுகள் புதுக்கோட்டை, திருப்பதி, திருவாங்கூர் சமஸ்தான கல்வெட்டுகள் போல் வெளிவந்திருந்தால் இந்த திராவிட இயக்கத்தின் பொய் உரைகள் எல்லாம் தவிடு பொடி ஆகியிருக்கும். பிராமணர் மீதான பழிகள் இல்லாமல் போயிருக்கும். தமிழ்த் தேசியமும் வளர்ந்திருக்கும். என் சினம் எல்லாம் அந்த பிராமணப் பணியாளர்கள் மீது தான்.

நான் தமிழ்நாடு அரசு தொல்லியல் இணை இயக்குனரிடம் இப்படி படியெடுத்த கல்வெட்டுகள் அப்படியே பூட்டிக் கிடப்பது நன்றாக தோன்றவில்லை என்றேன். குறைந்தது 150-200 கல்வெட்டுகள் மேல் உள்ள கோவில்களின், இதாவது. 40-50 கோவில்களின் கல்வெட்டுகளையாவது உடனடியாக வெளியிடுங்கள், காஞ்சி வரதர் கோவில் கல்வெட்டுகள் போல என்றேன். அதற்கு அவர் உமது கருத்து நன்றாக  உள்ளது என்றாலும் கல்வெட்டுகளை படிக்க போதிய பணியாளர்கள் இல்லையே  என்றார்.  நான் ஓய்வுபெற்ற பணியாளர்களை ஈடுபடுத்தியாவது பெரிய கோவில்களின் கல்வெட்டுகளை வெளியிடுங்கள் என்று கருத்து கூறிவந்தேன்.அவரும் அதற்கு தலை அசைத்தார். இந்த நேரடி உரையாடல் கடந்த வியாழன் நடந்தது.  திருவரங்கம் கோவிலில் மட்டும் 800 கல்வெட்டுகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

எவரேனும் அமைச்சர் மாஃபா பாண்டியராசனை சந்தித்து  இந்த கருத்தை சொன்னால் அவர் இதை விரைவு படுத்துவார் என்று நம்பிக்கை வருகின்றது.

காரிகிரிச்சன் 


வேந்தன் அரசு

unread,
Feb 17, 2019, 11:10:25 PM2/17/19
to vallamai
மாஃபா பாண்டியராசன்  அவர்கள் துவிட்டரில் துடிப்பாக இருக்கிறார்.

ஞாயி., 17 பிப்., 2019, பிற்பகல் 7:24 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Feb 17, 2019, 11:37:20 PM2/17/19
to vall...@googlegroups.com
நேரில் கண்டு பேசினால் அதன் மதிப்பே தனி 
Reply all
Reply to author
Forward
0 new messages