மனோ வைத்தியம் - 3 -

33 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 19, 2014, 11:35:17 PM6/19/14
to Minthamil, வல்லமை, தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, நட்புடன், A K Rajagopalan, Mazalais

மனோ வைத்தியம்

 

வைத்தியங்களில் கஷ்டமானது மனோ வைத்தியம் என்று சொல்லலாம்.  கால், அரை, முக்கல், முழுசு என பலதரப் பட்ட பயித்தியங்களோடு பழக வேண்டி இருப்பதால் அவருக்கே மனோ வைத்தியம் செய்திட வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.

 

வாருங்கள் நாமும் பார்க்கலாம் சில மனோ வைத்தியர்களை தினம் ஒருவராய்.


3. ஊசி போடலாம் வாங்க





 

“டாக்டர் நீங்க பிரபல மனோ வியாதி வைத்தியர்னு கேள்விப் பட்டிருக்கேன்.”

 

“ஆமாம் அதுலெ என்ன சந்தேகம்?  ஒங்களுக்கு என்ன கஷ்டம்னு சொல்லுங்க.  ரெண்டே நாளுலெ சரி செஞ்சூடலாம்.”

 

“எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லெ டாக்டர்.  எம் பொண்ணு தான் எனக்கு ப்ராப்ளம் டாக்டர்.”

 

“என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க.  பொண்ணெயும் அழெச்சிட்டு வாங்க.  நான் ஒரு ஊசி போட்டேன்னா எல்லாம் சரியாப் போயிடும்.”

 

“எம் பொண்ணு கிட்டெ எப்பொ கல்யாணப் பேச்செ எடுத்தாலும் இப்பொ என்னம்மா அவசரம்?  அப்புறம் பாத்துக்கலாங்கறா.  எனக்கு வயசு ஏறிகிட்டே போகுது.  அவளுக்குந்தான்.  சரியான வயசுலெ கல்யாணம் பண்ணி வெச்சு அவொ காலா காலத்துலெ புள்ளெ குட்டியெப் பெத்துக்க வாணாம்?”

 

“நீ பொண்ணெக் கூட்டிண்டு வாம்மா.  ஒரே ஊசிலே சரி படுத்தறேன் பாரு.”

 

மறு நாள்.

 

“டாக்டர் இவதான் எம் பொண்ணு தேனு.  இவளெ செல்லமா தேனுப் பாப்பான்னு கூப்டது தப்பாப் போச்சூன்னு நெனெக்கிறேன்.  வயசு முப்பதெ நெருங்கிக் கிட்டு இருக்குது.  ஆனா இவளுக்கு தான் இன்னமும் சின்னப் பாப்பான்னே நெனெப்பு.  யாரெப் பாத்தாலும் சாக்கி வேணும் சாக்கி வேணும்னு கேக்குறா.  கல்யாணங்கறெ பேச்செ எடுத்தா விஸ்வரூபம் எடுக்கறா.”

 

“பாப்பா இந்த ரோஜாப் பூவெ மோந்து பாரு எவ்வோளோ வாசனையா இருக்குன்னு.”

 

தேனு பூவை வாங்கி முகர்ந்தது பார்க்கிறார்.

 

“ஹைய்ய்ய்ய்ய்ய்ய்……..நல்ல வாசனையா இரு…………………”

 

சொல்ல வந்ததை முடிக்க வில்லை தேனு.  டாக்டர் தான் ரோஜாப் பூவில் மயக்க மருந்தையும் தடவி இருந்தாரே.  அடுத்த நிமிஷம் தேனுவுக்கு ஊசி போடுகிறார் டாக்டர்.

 

ஐந்து நிமிஷம் கழித்துக் கண்ணை விழித்த தேனு மெல்லப் பேசுகிறாள், ”அம்மா எனக்கு எப்பொம்மா கல்யாணம் பண்ணி வைக்கப் போறே?  இந்த டாக்டரெ எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கும்மா.  இவரையே எனக்குக் கல்யாணம் பண்ணி வைம்மா.”

 

“அய்யய்யோ.  எனக்கு ஏற்கெனெவே கல்யாணம் ஆயி ரெண்டு கொழெந்தைங்க வேறெ இருக்கே.  எம் பொண்டாட்டி காதுலெ இது உழுந்தா வெளெக்கு மாத்தடி கெடைக்குமே எனக்கு.”

 

“டாக்டர்….. சட்டுனு தேனுவுக்கு மாத்து ஊசி போட்டூடுங்களேன் டாக்டர்.”

 

“மாத்து மருந்து என்னான்னு எனக்குத் தெரியாதேம்மா.  ஒண்ணு பண்ணுறேன்.  ராவோட ராவா என் குடும்பத்தோடெ இந்த ஊரெ உட்டே ஓடிப் போயிடறேன்.”

 

திரை விழுகிறது. 


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Innamburan S.Soundararajan

unread,
Jun 22, 2014, 10:47:54 AM6/22/14
to vall...@googlegroups.com, Minthamil, தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, நட்புடன், A K Rajagopalan, Mazalais
கதை தொடருகிறது…
டாக்டருடன் கூட ஓடிப்போக அவரது குடும்பம் சம்மதிக்கவில்லை. 
அதனால், தேனுவுடன் ஓடிவிட்டார்.
முதல் காரியமாக, அவள் ஊசியை பிடுங்கி வைத்துக்கொண்டாள்.
இனி, அவள் தான் மனோ வைத்தியர். 
இனி, அவளுக்கு டாக்டர்  அலுத்துப்போய்விட்டார். அவரிடம் தான் ஊசியில்லையே!
அவளும் அடுத்த வீட்டு அண்ணா சாமிக்கு ஊசி போட்டாள்.
இருவரும் சென்னைக்கு ஓடிப்போய்விட்டார்கள்.
ஊசியை எலம் போடப்போகிறார்கள்.
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 22, 2014, 9:49:00 PM6/22/14
to வல்லமை
ஏலத்தில் எடுக்க எக்கச் சக்க கூட்டமாம்.  கூட்டத்தை சமாளிக்க அதிரடிப் படை வரவழிக்கப் பட்டதாம்.  அவர்களில் ஒருவர் ஏலம் போடுபவர் மேஜை மீதிருந்து ஊசியை எடுத்துக் கொண்டு தலை மறைவாகி விட்டாராம்.  அவர் பற்றிய தகவல் அளிப்போருக்கு ஒரு லட்சம் பரிசளிக்கப் போவதாக மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளதாம்!

இனி மேலே தொடருங்கள்.

Innamburan S.Soundararajan

unread,
Jun 23, 2014, 6:30:16 AM6/23/14
to vall...@googlegroups.com
ஒரு உரையாடல்:
மருத்துவ கவுன்சில் தலைவர், காரியதரிசியிடம்:
அப்பா! ஊசியை காணோம் என்று ஆவணப்படுத்தாதே. ஆடிட்காரன் பார்த்தால் வம்பு.

கா: சார். அவங்க ஏற்கனவெ லாஸ் ரிஜிஸ்டெர் கேட்டாங்க. பரிசு ஒரு லக்ஷம் ரூபாய்க்கு பட்ஜெட் இல்லையே என்று ஆடிட் நோட் அனுப்பிச்சிருக்கான்.

த: என்ன பண்ணலாம் சொல்லு.

கா. ஆடிட்காரன் கால்லெ விழறத்துக்கு ஏலக்காரன் கால்லெ விழலாம் சார். 

இருவரும் தேனுவையும் அண்ணாசாமியையும் சந்திக்கிறார்கள், வருமுன் காப்போர்களாக.

உரையாடல்:

த: இந்த ஊசி விவகாரம் மாவர்த்தமா போயிடுத்து, தேனு. ஆடிட் வந்திருக்கு.

தே: நீங்க கவர்ண்ட்மெண்ட். நாங்கள் அம்பாணி மாதிரி தனியார் துறை. ஆடிட் அண்டமுடியாது இல்லெ.

அண்ணாசாமி: நம்ம போலி ஊசியைல்லெ ஏலத்துக்கு அனுப்னோம். நிஜ ஊசி எங்கிட்ட. இல்லாட்டா, எங்கிட்ட இவ்வலவு சல்லாபமா இருப்பையா.

தலைவர் நிஜ ஊசியை பிடுங்கிண்டு ஓட்றார்.

திரை விழுகிறது. அதற்குள் தேனுவை காணோம் என்று அண்ணாசாமி அலறல்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 23, 2014, 10:27:29 PM6/23/14
to வல்லமை
தேனு:  ஊசி இல்லேன்னா காசில்லே.  காசு இல்லா ஆளுகிட்டெ இந்தத் தேனு இல்லெ. ஆட்டுக் கொம்பு மாதிரி மீசெ வெச்சுக்கிட்ட்டு அண்ணாசாமீன்னு பேரு வெச்சிக்கிட்டா மட்டும் போதுமா?  ஆட்டு மூளெ இல்லெ இருக்குது அவருகிட்டெ?  தலைவரு முன்னாடி நெஜ ஊசியெ வெச்சுக் கிட்டா நிப்பான் ஒரு ஆளு?  தலைவரு இப்போ எனாக்காக பெரிசா ஒரு சின்ன வீடு பாத்துக் கிட்டு இருக்காரு.  உக்கூம்!


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jun 23, 2014, 10:51:46 PM6/23/14
to vall...@googlegroups.com
தலைவரு முன்னாடி நெஜ ஊசியெ வெச்சுக் கிட்டா நிப்பான் ஒரு ஆளு?

~ தலைவருக்கு நாகபூஷணம் என்று பெயர். ஏற்கனவே அஞ்சு தலெ பாம்பின் நாகபூஷணத்தை வச்சுத்தான் பெரிய ஆளு ஆனார் இல்லையா?இப்போ நிஜ ஊசியை வச்சுக்கிணு ஜானுவையும் வளைச்சுப்போட்டுட்டாராம். தேனு-ஜானு சண்டை காண வாரீர்.

கதை, வசனம், இயுக்கம்: கல்பட்டார்.

இப்டிக்கு,
இன்னம்பூரான்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 25, 2014, 12:18:00 AM6/25/14
to வல்லமை

தேனு:  “அடி வாடி என் சக்கள்த்தி.  தலைவரு காசு பாத்து வந்து ஒட்டிக்கினையா?  வெளெக்குமாத்தாலெ வெச்சேன்னா ரெண்டடி வந்த வளி தெரியாமெ ஓடுவே.”

 

ஜானு:  “அடி போடி போக்கத்தவளே.  நீயே நாலு காசு பாக்கலா முன்னு ஊசி கூடவே வந்து ஒட்டிக் கிட்டவொ தானேடீ?

 

தலைவரு:  “யம்மா தேனூ ஜானூ தாங்க முடீலெ ஒங்க ரோதனெ.  போது விடிஞ்சா போது போனா கொளாயடிச் சண்டையாட்ட மில்ல ஓயாமெ போடுறீங்க சண்டெ.  போதும்மா தலெ வலி.  இப்பொவே அந்த பாளாப் போன ஊசியெத் தூர விட்டெறியுறேன்.  வாணாம் வாணாம்.  அந்த ஊசி எவன் கையிலெயாவது சிக்கி அவன் படுவான் கஷ்டம்.  அதெ பெட்ரோலு ஊத்திக் கொளுத்திடுறேன்.

 

சொன்னதைச் செய்திடத் தலைவர், ஜானுவும் தேனுவும் தங்கள் சொந்த வீடு திரும்புகிறார்கள். 

 

கதை முடிந்தது.  கத்தரிக்காய் காய்த்த்து. 

 

 

Innamburan S.Soundararajan

unread,
Jun 25, 2014, 12:21:15 AM6/25/14
to vall...@googlegroups.com
கதை முடிந்தது. கத்திர்ப்பூ ஊதா! தலைவர் சோதா. கத்தரிக்காய் காய்த்த்து.
2014-06-25 9:47 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
> தேனு: “அடி வாடி என் சக்கள்த்தி. தலைவரு காசு பாத்து வந்து ஒட்டிக்கினையா?

தேமொழி

unread,
Jun 25, 2014, 12:45:30 AM6/25/14
to vall...@googlegroups.com
நான் வேண்டுமானால் துப்பறியும் கதை போல எழுதிப் பார்க்கவா கல்பட்டு ஐயா?
எனக்கும் சுஜாதா போல கணேஷ் வசந்த் கதை எழுத ஆசையுண்டு.


..... தேமொழி

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 25, 2014, 11:27:15 AM6/25/14
to vall...@googlegroups.com

2014-06-25 10:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் வேண்டுமானால் துப்பறியும் கதை போல எழுதிப் பார்க்கவா கல்பட்டு ஐயா?
எனக்கும் சுஜாதா போல கணேஷ் வசந்த் கதை எழுத ஆசையுண்டு.


..... தேமொழி


அன்பு தேமொழி,
 
"சத்திரத்து சோற்றுக்கு தாத்தையங்கார் உத்திரவா?" என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.  அதுதான் என் நினைவுக்கு வருகிறது.  நீங்கல் துப்பறியும் கதை எழுத என்னைக் கேட்பானேன்?  தாராளமாக எழுதுங்கள்.
 
நான் கூட ஒரு துப்பறியும் கதை எழுத முயற்சி செய்திருக்கிறேன் முன்பு.  அது இணைப்பில் உள்ளது

--
சகல கலா வல்லவன் உமாபதி.pdf

தேமொழி

unread,
Jun 25, 2014, 11:27:29 PM6/25/14
to vall...@googlegroups.com

நன்றி கல்பட்டு ஐயா.

..... தேமொழி

தேமொழி

unread,
Jun 25, 2014, 11:33:11 PM6/25/14
to vall...@googlegroups.com

"ஈஸி... வசந்த்"

நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்... என்று திட்டியபடி செல்போனை  சோபாவில் வீசியெறிந்தான் வசந்த்.  அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

"ஈஸி... வசந்த்" என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

அந்த பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள்.  தலையில்  கிரீடமாகக்   கறுப்புக் கண்ணாடி...காற்சட்டையில் துழாவி தனது  செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள். 

கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான்.  ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது. 

முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கேப் புரியவில்லை. 

"ஹலோ" என்றான் அவளை நோக்கி, இவள் யார்  எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்தின் குரலில்.  

"ஹலோ" என்றால் அவளும், தனது போனில்.

"நான் உன்னிடம்தான் பேசுகிறேன்"

"நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை"

எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

"பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்கரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்"

"டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?"

"ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல"

"நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை"

விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது"

"நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்" என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

"உன்னை உதைப்பேன் என்கிறாள்"

"நீங்க வேற அதை  எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?" வசந்த் அவளை முறைதான்.

"ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட்,  வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக்  டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன்.  வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ்  பண்றேன்னு சொன்னார்". 

கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான். 

"நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?"

"நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்"

"அட சட்... பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு  ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்க சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்". 

"தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி ...தேவுடா..." என்று பாடி உதட்டை சுழித்து அழகு காட்டிய  தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.  

"அது சரி, நாங்க வந்த  போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?"

"ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ...." 

"ஓ ....அந்த அளவுக்கு முத்திப் போச்சா"

"பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க"

"நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்...  தேனு,  தேனுண்ணு ஒரு பொண்ணு"

"அதும் பேரும் தேனு தனா?"

"ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க , வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம்.  அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு.  இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர்  டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம்.  கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு  அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் ."

"பிறகு சென்னையில் அந்த  செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு  தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன்  விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும்  சுருட்டிக் கொண்டோடிவிட்டான்.   போதாக்குறைக்கு  ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான்.  ஜானுவுக்கும்  தேனுவுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை.  பொறுக்க முடியாமல்,  இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு  பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான்.  அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான்.  உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம்  புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க.  அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை.  தெருவில் உரண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க.  தெருவே வேடிக்கப் பாத்துது.  அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். "

"இதுக்கும்  நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது". 

"இருங்க பாஸ்.  பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட்.  அந்த மூணாவது பொண்ணு நேத்து  ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது.  அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான்  வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான்.  போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன்.  அவனிடம்  என்னை அறிமுகப் படுத்தி  வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன்  ரொம்பவே  உற்சாகமானான்."

"அந்த மாதிரி உற்சாகமானவனை  நீங்க   திட்ட  காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ்  ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்"

"தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க"

"கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?"

"அப்படி ஒரு  ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், "யோவ், நான்  உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே.  மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்.  சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன்.  பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க.  ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா?  மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன்.  தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன்,  தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில்  இருக்கிற தண்ணியெல்லாம்  முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன்.  நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே" அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

"நீ நெனச்சது சரிதான்"

"தேன்க் யூ  ப்ரபொசர்"

பாஸ்...என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து "இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்..." என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

"வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான்  ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற  லாயரா வருவேனா?" என்றாள் தேனு.

அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா  என வசந்திற்குப் புரியவில்லை.

"நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன்.  உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது".

"ஃபை..ஃபை..சொதப்பி   ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை" என்ற தேனு  எழுந்து ஆடினாள்.

"என்ன இங்க கொண்டாட்டம்?  ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது"

"வாங்க  ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்"

"நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர  பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு"

"பை, பை சீரியோ..."

தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும்.  ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன்.  "பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும்  கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?"

"ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு"

"என்ன பாஸ் திடீர்னு தத்துவம்"?

"தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?"

"இருக்கும்".... தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது "ஆனால் இருக்காது பாஸ்."

"ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?" பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையியோ நீட்டிக் கேட்டாள்.

"வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்"  

"வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு"

பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.  தேனுவிடம் போக வேண்டிய  இடத்தைச் சொன்னான் கணேஷ்.

அடுத்த சிக்னலில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்தார்கள், சிக்னல் கிடைத்தவுடன் காரைக் கிளப்ப முனைந்தபொழுதுதான் அது நடந்தது.  வேகமாக ஓடி சாலையைக் கடந்த ஒருவன், வயிற்றைப் பிடித்துக் கொண்டு  காரின் முன் விழுந்தான்.  அவனது கைகள், காரின் மேல் எங்கும்  இரத்தம்.  கதவைத் திறந்து மூவரும் அவனை நோக்கி ஓடினார்கள்.  க்ரீச் க்ரீச் என கார் டயர் ஒலியுடன், ஹாரன் ஒலியுடன் கார்கள் நிறுத்தப்பட்டன. 

(தொடரும்)  

Reply all
Reply to author
Forward
0 new messages