A. R. வெங்கடாசலபதி மேலெ குறிப்பூட்டுள்ள இடலில் உத்தரநல்லூர் நங்கையைப் பற்றியும் அவருடைய ஒரு கவிதையையும் குறிப்பிட்டுள்ளார். யார் இந்த உத்தரநல்லூர் நங்கை? அந்தக் கவிதையை அறிந்தவர்கள் யாரேனும் இங்கே இட முடியுமா?
சங்கரன்
--
Swaminathan Sankaran
கபிலரகவல், குலசங்காரமாலை போல தமிழில் புகழ்பெற்றது பாய்ச்சலூர்ப் பதிகம்.எல்லாவற்றுக்கும் மூத்தது மணிமேகலையின் ஆபுத்திரன் அகவல்.நா. கணேசன்
A. R. வெங்கடாசலபதி மேலெ குறிப்பூட்டுள்ள இடலில் உத்தரநல்லூர் நங்கையைப் பற்றியும் அவருடைய ஒரு கவிதையையும் குறிப்பிட்டுள்ளார். யார் இந்த உத்தரநல்லூர் நங்கை? அந்தக் கவிதையை அறிந்தவர்கள் யாரேனும் இங்கே இட முடியுமா?
உத்தரநல்லூர் நங்கை என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண்பாற் புலவர். பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற நூலை இயற்றியவர். இந்நூலில் சாதி அமைப்பையும் பாகுபாட்டினையும் கடுமையாகச் சாடியுள்ளார். இவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. இப்புலவர் திருச்சி மாவட்டம் திருப்பாச்சில் ஆசிரமம் என்னும் ஊரை அடுத்த உத்தரநல்லூர் என்னும் ஊரில் நந்தனார் குலத்தில் பிறந்தவர்.
அபிதான சிந்தாமணி [1] இவரைப் பற்றி “இவள் ஒரு பெண்கவி, பிராமணரை வசை பாடினாள்” என்று குறிப்பிடுகிறது. தமிழ் நாவலர் சரிதை [2] இவரை ”உத்தர நல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்கு காரணம் இன்னதென்றும் விளங்கவில்லை” என்கிறது. நங்கை குறித்து மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாற்றில் பின்வரும் நிகழ்வு தரப்பட்டுள்ளது:[3]
இந்த நங்கை இளம்வயதில் ஆற்றங்கரையில் மாடு மேய்த்து வந்தாள். வேதியச் சிறுவன் ஒருவன் அந்த ஆற்றில் நீராடி மந்திரம் சொல்லி, சந்தி முதலியன செய்வதைப் பலநாள் வேடிக்கை பார்த்து வந்தாள். வேதியச் சிறுவன் அவளோடு கள்ளம் கபடமின்றிப் பழகினான். வேதங்களைக் கற்றுத் தந்தான். ஊர் வேதியர் அவளைக் கண்டித்தனர். வேதியச் சிறுவன் நங்கைக்காக வாதாடினான். வேதியர் தம் சிறுவனுக்காக விட்டுக் கொடுத்தனர். நங்கை சிறுவனிடம் கற்ற கல்வியின் பயன் இந்த நூல்.
__________________________________
பாய்ச்சலூர்ப் பதிகம் தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவரால் எழுதப்பட்டது. சாதீய அமைப்புக்கும் நாற்வர்ணக் கொள்கைக்கும் எதிரான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது. பாய்ச்சலூர் எனும் ஊரில் நிலவிய சாதிய அமைப்பை எதிர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மொத்தம் 11 பாக்கள் உள்ளன.
சந்தனம் அகிலும் வேம்பும்
தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால்
அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால்
தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ
பாய்ச்சலூர் கிராமத்தாரே
ஊருடன் பார்ப்பார் கூடி
உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து
நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல
கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ?
பாய்ச்சலூர் கிராமத்தாரே
_______________________
பதினைந்தாம் நூற்றாண்டில்
உத்தர நல்லூர் நங்கை என்னும்
பெண்பாற்புலவர் பாடிய
பாய்ச்சலூர்ப் பதிகம் என்னும்
நங்கையார் பதிகம்
11 பாடல்கள் கொண்ட இந்த நூலில்
மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
பதினைந்தாம் நூற்றாண்டு நூலில் உள்ள எட்டுப் பாடல்கள்
1
ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே
சாதியும் ஒன்றை யல்லால் சகலமும் வேற தாமோ
வேதியன் படைத்த தல்லால் விதியினை வெல்லல் ஆமோ
பாதியிற் பழியே சூழ்ந்த பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
2
கொக்குமேற் குடுமி கண்டேன் கோழிமேற் சூடும் கண்டேன்
நெக்குறு வாலும் கண்டேன் நீரின்மேல் நெருப்பும் கண்டேன்
சற்குணம் என்று சொல்லிச் சதுர்மறை பேச வேண்டாம்
பக்குவம் அறிந்து பாரும் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
3
வெற்றிலை தாழை வாழை வித்தொன்று முளைப்ப தொன்றோ
பற்றிய யோனி பேதம் பாருளோர் அறிந்தி டாமல்
பெற்றவர் தம்மைத் தேடிப் பிறந்திருந் திறந்து போனார்
பற்றிநின் றலைவ தேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
4
குலம்குலம் என்ப தெல்லாம் குடுமியும் பூணும் நூலும்
சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்த துண்டோ
பலந்தரு பொருளும் உண்டோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
5
மகம்கொண்ட தேகம் தன்னில் மற்றொரு சுத்தம் காணீர்
அகம்கண்டு புறமும் கண்டும் அவனுக்கே தார மானேன்
சுகம்கண்டு துக்கம் கண்டு சுக்கில வழியே சென்று
பகம்கொண்ட தேனோ என்னில் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
(மகம் = மதம்)
6
ஊருள பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பிலே நெய்யை விட்டுக்
கார்வயல் தவளை போலக் கதறிய வேதம் தானும்
பாரைவிட் டகன்ற தாமோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
7
சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர்மணம் வீசக் காணோம்
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேற தாமோ
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
8
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்த வர்க்கே அதுவும் கள் இதுவும் கள்ளே
ஒருகுலை உயர்ந்த தேனோ ஒருகுலை தாழ்ந்த தேனோ
பறையனைப் பழிப்ப தேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

_______________________________
இங்கே கொஞ்சம் தகவல்:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தன் கொள்கைக்காக, ஒரு நல்ல மனிதர் புனேயில் உயிரிழந்திருக்கிறார் எனத் தெரிகிறது. பலருடையபிஸினஸ் பாதிக்கப்பட்டதோ?நா. கணேசன்
பதிகம் என்றால் பத்துப் பாடல்களின் தொகுப்புதானே. ஏன் 11 பாடல்கள்