Re: [தமிழ் வாசல்] படிப்புதான் உண்மையான ராஜயோகம்!

110 views
Skip to first unread message

shylaja

unread,
May 17, 2013, 10:49:57 AM5/17/13
to தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள், vallamai
உண் மைதான் வாசித்தல் ஒரு தவம் வாசித்தல்  பெரிய யாகம்  ராஜயோகம்தான்!  நீங்கள் எழுதியதை நான்   முதலில் படித்துவிட்டேன்!


2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.

மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.

படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.

கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.

உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.

நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.

எனக்குத் தெரிந்தவரை இல்லை என்று கொஞ்சம் மரியாதையாகச் சொல்கிறேன். பச்சையாகப் பிளந்து சொல்ல வேண்டும் என்றால் ‘கிடையவே கிடையாது’.

மற்ற எல்லா வழிகளும் உன்னைக் குனிய வைத்து சிலர் பச்சைக் குதிரை தாண்டத்தான் பயன்படும்.

இல்லையேல் யாராவது காட்டும் சர்க்கஸ் வேலைகளுக்கு நீ கைதட்டும் கூட்டமாக ஆகத்தான் வழிவகுக்கும்.

நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் - எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் - படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.

படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.

படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.

ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.

படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.

இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.

தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.

உடனே மூக்கால் அழாதே. ‘எங்கண்ணா நேரம் இருக்கு. ஏகப்பட்ட வேலை..’

நிறுத்து. உனக்கு ஒரே ஒரு வேலைதான் உண்டு. படிப்பது. உனக்கு முக்கியம் என்று பட்ட துறையில். உலகத் துறையா, உள்ளத் துறையா, ஆன்மிகமா, தத்துவமா - ஒரே ஓர் உண்மையான ராஜயோகம் - படிப்பு.

படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.

பெரியவாள்ளாம் சில பேரு, மஹான்கள், புத்தகப் படிப்பைக்  கண்டிச்சிருக்காளே என்று கலங்காதே.

எந்தப் பெரிய மஹான் சொன்னாலும் அபத்தம் அர்த்தம் உள்ளதாக ஆகிவிடாது.

தாகம் கொள்ளை தாகம், பயங்கர வெயில். அந்த நேரத்தில் தண்ணீர்தான் தாகம் போக்கும் என்பதற்கு எந்த மஹானின் உபதேசம் வேண்டும்?

அதே போல் நம் அடிமைத்தனம் நீங்க எந்தத் துறையிலும் சரி, புத்தகம் படிப்பதுதான் வழி என்பது அனுபவ சித்தமாகத் தெரியும் போது எந்த மஹானின் வார்த்தையையும் லட்சியம் பண்ணாதே.

உன் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எழுதி வைத்துக் கொள் -

படிப்புதான் உண்மையான ராஜயோகம்.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Parvathy Ramachandran

unread,
May 17, 2013, 11:23:58 AM5/17/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
சத்தியமான வார்த்தைகள். என்னைப் பொறுத்தவரை, புத்தகங்கள் இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்பேன் என்று நினைக்கக் கூட முடியவில்லை. நீங்கள் எழுதிய வார்த்தைகள் அனைத்தையும் சேமித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை....

மிக்க அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

sk natarajan

unread,
May 17, 2013, 9:09:33 PM5/17/13
to thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள், vallamai
படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

உண்மை
 அற்புதமான வரிகள் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.

Karuannam Annam

unread,
May 18, 2013, 3:55:40 AM5/18/13
to thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள், vallamai
2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.
 
மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான். 



படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.

படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.

ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.

படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.

இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.

தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.
 
படிப்புதான் உண்மையான ராஜயோகம். 
 

மிகச் சிறப்பான சிந்தனை. 
கிருத யுகத்தில் வாழக்கிடைத்த நற்பேற்றிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
படிப்பது பழக்கமாக வேண்டும். 
சாந்துணையும் உடன் வரும்.
பிள்ளைகளுக்குச் சொல்லிப் பார்க்கிறேன். ஒரு பேத்தி மட்டும் நிறையப் படிக்கிறாள். படித்ததை அழகாகச் சொல்கிறாள். மற்றவர்கள் தொலைக்காட்சியில் மூழ்கிப்போகிறார்கள்.
அமெரிக்கப் பள்ளிகள் நூலகப் படிப்பை ஊக்குவிக்கின்றன. நான் உயர்நிலைப் பள்ளி படித்த நாட்களில் நூலகம் செல்லாத நாளில்லை. அண்மையில் ஊருக்குச் சென்றிருந்தபோது விசாரித்தேன். பிள்ளைகள் வருவதில்லையென்றார்.
சென்ற ஆண்டு எனது பேரனின் பள்ளிக்குப் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்குச் சென்றபோது எனது நூலக அனுபவத்தைச்சொல்லிப் பிள்ளைகளுக்குப் படிப்பைப் பழக்கமாக்க வேண்டுமெனக் கேட்டுகொண்டேன். ஒத்துக்கொண்ட நிர்வாகம் வாரம் ஒரு புத்தகம் கொடுத்துப் பதிவேட்டில் பதிந்து ‘புக் லவ்வர்’ என்று சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு என் பேரனுக்கு அவன் வகுப்பில் சான்றிதழ் கிடைத்தது மகிழ்ச்சியளித்தது. ஆசிரியர் சொன்னால் கேட்கிறார்கள். நாம் சொல்வதைக் கேட்பதில்லை. 
திரு மோகனரங்கனின் சிந்தனை வருங்காலத்தில் கிருதயுக பிரஜைகளை உருவாக்குவது பற்றிய என் எண்ணங்களையும் சிறு முயற்சிகளையும் பகிர்ந்துகொள்ள வைத்தது. (அண்மையில் கண்டரமாணிக்கம், நெற்குப்பை நூலகங்களில் புரவலர் திட்டத்தில் இணைந்துள்ளேன். 22.5.2013 வரை சிவங்கை மாவட்டத்தில் கிளை நூலகங்களிடையே புரவலர் சேர்ப்பு போட்டி அமுலில் உள்ளது. பிற மாவட்டங்களிலும் இருக்கலாம்.) இழையிலிருந்து சிறிது விலகியத்ற்குப் பொறுத்துக்கொள்ளவும்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2013, 5:30:54 AM5/18/13
to vall...@googlegroups.com, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Innamburan Innamburan
'மரமண்டை' என்ற சொல்  ராஜயோகினி ராஜத்துக்குப் பிடித்த சொல்.மரமண்டையோ எனக்கு.
'அம்மா சொல்படி ராஜூ' பதிவு செய்யும் போது தான் 60 வருடங்களாக நாங்கள் எட்டு சகோதர, சகோதரிகளின் 'மரமண்டையில்' ஏறாத சமாச்சாரம் என் தலையை உருட்டியது. ஓடோடிப்போய் என் தங்கை கமலாவிடம் சொன்னேன். அழுதோம். நாங்கள் பெற்றோர்கள் வறுமையிலும் குடும்பக்கட்டுப்ப்பாடு பற்றி கவலைப்படவில்லை என்று கேலியாக பேசிக்கொள்வோம். குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம் என்று பல இடங்களில் சொன்ன அம்மா ஒரு இடத்தில், குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம் என்று 25 வருடங்கள் இப்படியும் அப்படியுமாக பிரிந்து இருந்ததை எழுதியிருந்தார். நான் விழுந்து, விழுந்துப் படித்தேன். படிக்கிறேன். ஆனால் என் மரமண்டையில் அந்த ராஜயோகியையும், ராஜயோகினியையும் புரிந்து கொள்ளத்தெரியவில்லையே. கண்கள் குளமாயின.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2013/5/18 Karuannam Annam <karu...@gmail.com>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 7:29:45 AM5/18/13
to vall...@googlegroups.com, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Innamburan Innamburan
கற்றிலன் ஆயினும் கேட்க என்றான் ஐயன்

அது எப்படி?


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Mohanarangan V Srirangam

unread,
May 18, 2013, 8:35:08 AM5/18/13
to vallamai, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
’உம்’மை கற்பதின் சிறப்பை உணர்த்தும்.




--

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 3:19:27 PM5/18/13
to tamizhs...@googlegroups.com, vallamai, mintamil, thamizhvaasal


18 மே, 2013 8:35 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

’உம்’மை கற்பதின் சிறப்பை உணர்த்தும்.

கற்றலின் கேட்டல் நன்று
கேட்டலின் காண்டல் நன்று

பொத்தகம் இருந்தாலும் ஆசான் வாயால் கேட்கணும்
ஆசான் வாயால் சொன்னாலும் செய்முறையால் காட்டணும்.

இந்த மடலாடல்கள் எல்லாம் கேட்பதற்கு நேர். கற்பதற்கு அல்லவே!
 

DEV RAJ

unread,
May 18, 2013, 3:34:02 PM5/18/13
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, vallamai, mintamil, thamizhvaasal
On Sunday, 19 May 2013 00:49:27 UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:
கற்றலின் கேட்டல் நன்று
கேட்டலின் காண்டல் நன்று
 

எல்லாம் கல்விக்கான
மாற்று ஏற்பாடுகள்;
பார்வை இழந்தோர் கேட்டுக்
கற்கின்றனர். கல்வி அறிவு
அதிகம் இல்லாத வேளாண்
குடிமக்கள் பண்ணைச் செய்முறைகளை
நகர் படம் வாயிலாகக் கண்டு
கற்கின்றனர். நாம் யூ ட்யூப்
வாயிலாக மொழிகள் கற்கலாம்.
உலகன் ஐயா சொல்லிவரும்
சுமேரு மொழியை அதில் அறிமுகம்
செய்கின்றனர்; புத்தகம் வாங்க
வேண்டாம்


தேவ்

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 3:48:58 PM5/18/13
to tamizhs...@googlegroups.com, vallamai, mintamil, thamizhvaasal


18 மே, 2013 3:31 PM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:



2013/5/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நீங்களே செய்து பாருங்கள். ஆசானிடம் போய்க் கேட்பது உங்களுக்குப் பிடித்தது என்றால் அது போல் செய்யுங்கள். இல்லை படிப்பது எவ்வளவோ சிறந்தது என்றால் அதைச் செய்யுங்கள்.

எனக்கு இந்த ஆசானிடம் கேட்கறது என்ற மயக்கம் எல்லாம் இல்லை.

தெளிவு - படிப்பு.

படிப்பில் சேர்ந்ததுதான் மடலாடுவது, வீடியோ கல்வி எல்லாம். அதாவது படிப்பைப் பல்லூடகத் தன்மையாய் ஆக்கிவைத்திருக்கும் போது எங்க ஆசான் இருக்காருன்னு போய்  பார்த்து குந்துக்க உட்காருங்களேன். யார் வேண்டாம் என்பது :-)

இப்போது நீங்கதான் ஆசான்.
 

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 3:58:46 PM5/18/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், mintamil, thamizhvaasal


18 மே, 2013 3:52 PM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
நல்ல நகைச்சுவை.


உங்கள் அருமை உங்களுக்கு தெரியலே.

எனக்கு ஒரு கொடிய நோய் பிணித்து இருக்கு.
அது அறிவாளிகள் சொல்வதை மறுக்கணும் எனும் மறுப்புநோய்.. 
கட்டளைக்கல்லொடு மோதினால் வாள் கூர்மை ஆகும்

-- 

Karuannam Annam

unread,
May 18, 2013, 10:26:00 PM5/18/13
to vallamai, தமிழ் சிறகுகள், mintamil, thamizhvaasal
இரண்டு ஆசான்கள்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 1:18:49 AM5/19/13
to vallamai
2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.


டிஸ்கி:
​  முதலில் போட்டுவிட்டுத் தொடங்குகிறேன்.  இந்த வயதான காலத்தில் காடு வா வா ​என்ற நிலையில் உள்ள வவ செய்வது ஓவர் என்று கனம் இழை உரிமையாளர் கடிந்துகொள்ளக் கூடாது.  எல்லாம் தொழில் முறை நியாயம்தான். முதியோர் தொடர்கல்வித்துறையில் பேராசிரியராக இருந்ததால் புத்தகம் பற்றிய மாற்றுக் கருத்து உண்டு

புத்தகம் என்பது புதிய் கருத்து உறையும் எல்லா ஊடகங்களையும் குறிக்கும் அச்சு ஊடக நூல்கள் மட்டும் என்றூ கருத இயலாது.  குமுகத்தில் உள்ள மனிதர்கள் அவர்கள் பட்டறிவு புதிய் தலைமுறைக்குப் புத்தகமே காதல் வயப்பட்ட தமிழர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் புத்தகமே

http://www.youtube.com/watch?v=-8Og0Oosym8

அச்சு ஊடகம் வெளியிட்ட புத்தகங்கள் குழுவாக வாழ்ந்த தமிழ் இனத்தைக் கூறுபோட்டு தனிமைப் படுத்தியது ஒவ்வொருவனும் ஒரு நூலைக் கையில் எடுத்துக்கொண்டு தனிமையில் அமர்ந்து படித்தால் அவன் அறிவு வளரும். உண்மை

முன்னர் கலையில் கவிதையில் சொல்லாடலில் சிறந்த ஒருவர் வாய்வழியே சொல்லக் கேட்டு குழுமம் பெற்ற அறிவு புத்தகத்தால் அழிக்கப்பட்டுவிட்டது

புத்தகமே குமுகத்தில் அறிவுள்ளவர் அறிவில்லாதவர் என்று குமுகத்தைப் பிளவு படுத்தியது

புத்தகம் படிக்கத் தெரியாதவன் நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம் என்றழைக்கப்பட்டு வாய்மொழி வழியே  பட்டறிவை மற்றவருடன் பகிரும் புத்தகம்  காலப்போக்கில் காணாமல் போக அவர்கள் கல்லாதராக் ஆகிப்போனார்கள்

புத்தகங்கள் பீடாதிபதிகளிடமும் மடாதிபதிகளிடமும் மன்னர்களிடமும் கற்றறிந்த சிலரிடமும் இருப்பதாக கருதிக்கொண்டு ஒவ்வொரு பாமரனின் அகத்திலும் புதுக் கருத்துக்கள் புகமுடியாமல் போய்விட்டது ஒரு பெரிய சோகம்

வவ

Tthamizth Tthenee

unread,
May 19, 2013, 2:23:55 AM5/19/13
to vall...@googlegroups.com
புத்தகம்   படிப்பது ஒரு பெரும் தவம்

அதற்கு  ஒருமனப்பட்ட நிலை வேண்டும்

அது ஒரு தவம் போன்றது

சுற்றுச்சூழலை மறந்து  புத்தகத்திலே  லயித்து படித்தால் மட்டுமே  கற்க முடியும்

அந்த லயிப்பு இல்லாமல் படித்தும் உபயோகமில்லை



படிப்பதில் இரண்டு வகை உள்ளது

ஒன்று   படித்து மனனம் செய்து ஒப்பித்து மதிப்பெண் பெறுவது

இன்னொன்று  புரிந்து கொள்ள ,  ஆழ்ந்து படித்து  புரிந்துகொண்டு  அதை மனதுக்குள்ளேயே  ஆராய்ந்து மேலும்  ஆழ்வது

புத்தகங்களை ஆண்டால்தான்  ஆழ  முடியும்


அதனால்தான்  அகல உழுவதை விட ஆழ உழுவது மேல் என்று சொல் உள்ளது

அன்புடன்
தமிழ்த்தேனீ



2013/5/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Vallavanukku Vallavan

unread,
May 19, 2013, 9:11:16 AM5/19/13
to vall...@googlegroups.com




அந்தக்கால வகுப்பறை ஒரு மாணவன் கையில் நூல்.  மற்றவர்கள் கையில் ஓலைச் சுவடி.  அவை இல்லாதவர்களுக்கு சிலேட்டு.  அதுவும் இல்லாதவர்களுக்கு மண்தரை


வவ

பழமைபேசி

unread,
Oct 27, 2013, 11:08:42 AM10/27/13
to tamizhs...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், vallamai
ஆமென்

Innamburan S.Soundararajan

unread,
Oct 27, 2013, 12:46:27 PM10/27/13
to vall...@googlegroups.com, Innamburan S.Soundararajan, தமிழ் சிறகுகள், min tamil, தமிழ் வாசல்
நேற்று ஶ்ரீரங்கம் மோஹனரங்கனுடன் ஒரு சம்பாஷணை. நாங்கள் இருவரும் eccentric ஆனாலும், அதுவும் இருதுருவத்து வாசிகள் ஆனாலும், சமயத்தில் ஒத்து ஊதிக்கொள்வோம். தற்செயலாக மாஜி ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் Sir Frederick Von Hayek அவர்களிடமும், எதிர்துருவமாகிய Sir Karl Popper அவர்களிடமும் படித்ததின் அரும்பயனை பற்றிச்சொன்னேன். ஆம். படிப்புதான் உண்மையில் கண்கண்ட ராஜ யோகம். 

வேந்தன் அரசு

unread,
Oct 27, 2013, 2:42:54 PM10/27/13
to vallamai, Innamburan S.Soundararajan, தமிழ் சிறகுகள், min tamil, தமிழ் வாசல்
வள்ளுவரு மூன்று அதிகாரம் எழுதினார்
கல்வி, கல்லாமை, கேள்வி.


27 அக்டோபர், 2013 12:46 PM அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Tthamizth Tthenee

unread,
Oct 27, 2013, 4:00:51 PM10/27/13
to vall...@googlegroups.com
ஒரு சின்ன சந்தேகம்
 
 
எழுதுவது  ராஜ யோகமா
 
படிப்பது ராஜ யோகமா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/10/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Oct 27, 2013, 4:24:01 PM10/27/13
to vall...@googlegroups.com
சிந்திப்பது என்ன யோகம், தமிழ்த்தேனீ?
2013/10/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 27, 2013, 8:36:33 PM10/27/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

இதைத்தான் நானும் பல் ஆண்டுகளாக சொல்லி வருகின்றேன். சைவ சித்தாந்த அநாதிப் பொருளியல் அடிப்படையில், பினாங்கு வட்டாரத்தில் பரவி வரும் ஓர் கோட்பாடு இது. ஆகம வுளவியலின் அடிப்படையும் ஆகும்.'
'
மூல கருத்துக்கள்,.

1. கற்றல் என்பது அறியாமை நீக்கம். ஆணவ  மலத்தின் தாக்கத்தால்  அகத்தே  செறிந்திருக்கும் ஞான அந்தராத்தை நீக்குவதே கற்றல்,

2/ இது பொருட்கலவி என்றும் தற்கல்வி என்றும் முடிவாக இறைக்கல்வி என்றும் தொடரும்.

பொரருட்கல்வி யாவது பாச ஞானம் என்றும் சைவத்தில் சொல்லப்படும். ஐம்புலனகளின் பொறிலியப் பார்வைக்கு வரும் அறிவின் தெளிவுகள் இங்கு பொருட்கல்வி ஆகின்றது. உலகியல் அறிவு எனினும் ஒக்கும்.

இதனைச் சார்ந்து எழுவதே தன்னைப் பற்றி ஆன்மா கற்கும் கலவியாகிய தற்கல்வி.  பொருட்கல்வி தானே தற்கல்விக்குச் இட்டுச்  செல்லும். இங்கு பொறிலியப்  பார்வையோடு  நூலியப் பார்வையும் மெயாகிட, அசித்துப்பொருட்களோடு சித்துப் பொருட்களும் உண்டு என்ற விழிப்பு உண்டு.

தற்கல்வி தொடர் இறைக்கல்வி தோன்றும். தன்னைப் பற்றிய விசாரனையில் தன்னுள் தெய்வ வடிவங்கள் பல மூர்த்திகள் இருந்து உதவுவது தெரிய வர பதிக்கல்வியாகிய இறைக்கல்வி தொடங்கும்

இங்கு நுதலிப்பார்வையும் அதற்கு மேலான பல  பார்வைகளும்  மெய்யாகும். முடிவானப் பார்வை பாரவையற்ற பார்வை

3
எல்லாக் கற்றல்களும் இந்த முத்திறக் கற்றலில்  அடங்கும். ஏனெனில் அநாதிப் பொருட்களாக பதி பசு பாசம் தான் இருக்கின்றன.

இதனைப் பற்றி எனது 'திருநெறித் தெளிவு "  'அழிவில் உணமை' போன்ற நூற்களில் இன்னும் விரிவாக கூறியுள்ளேன்

உலகன்


2013/10/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
படிப்பைப் பற்றி இப்படி விதந்து எழுதிவிட்டு எனக்கே கொஞ்சம் தோன்றியது. ‘கொஞ்சம் அதிகப்படியா சொல்லிவிட்டோமோ?’ என்று. அதற்குத்தான் இவ்வளவு நாள் விட்டுப் பார்த்தேன். ஆனால் இப்பொழுதும் எனக்குத் தோன்றுவது யாதெனில் மிக நிதர்சனமான உண்மையை எழுதியுள்ளேன் என்று. ஆம். படிப்பு என்பதைப் போல உண்மையான ஆன்மிகம், மத வழிபாடு, சத் சங்கம் என்பது வேறு எதுவும் இல்லை. 

ஞானமே உருவானவர் கடவுள் என்பது உண்மையானால், அந்தக் கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அல்லது ஒருவர் என்று கிடையாது, அது அனுபூதி நிலை, எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்க! ஞானமே உருவான ஒன்றிற்கு அணுக்கமான வழி அறிவை வளர்க்கும் படிப்புதானேவொழிய வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் படிப்பு என்பது தன்னுடைய ஆர்வம், உண்மையான ஊக்கம், முழு ஈடுபாட்டுடன் கூடிய தீவிரமான படிப்பு என்று இருக்க வேண்டும். சும்மாவாக, மற்றவர்க்குக் கண் மயக்குவதற்காக என்று இருக்கக் கூடாது. 

அது ஜபமோ, தவமோ, அனுஷ்டானமோ எதுவும் படிப்பு என்பதற்கு இணை கிடையாது. 

அறியாமை என்பது அகலுவதைக் கண்கூடாக நாம் படிப்பு என்பதில் காண முடியும். எந்தப் படிப்பு ஆயினும். 

படிப்புக்கு வயசு சொல்லாதே! எந்த வயசாயிருந்தாலும் படி. படி. படி. 

அது வாழ்க்கையின் இடைவிடாத இதயத் துடிப்பாக இருக்கட்டும். படி. படிப்பதைச் சிந்தி. சிந்தித்ததை நினைவில் கொள். அந்த நினைவோடு அடுத்து மேலும் படி. பொருத்திப் பார். யோசி. மறுக்க வேண்டும் என்றால் துணிந்து மறுத்து சிந்தித்துப் பார். மறுத்ததை மீண்டும் கொள்வதற்கு இடம் உண்டு என்று பட்டால் தயங்காதே! எந்த விதத்தில் கொள்ள வேண்டும் என்பதைத் துல்லியமாக ஆழ்ந்து ஆய்ந்து பார். 

இதுதான் கண்கண்ட, கைகண்ட ஒரே தவம்! பொய்க்காத தவம் என்றால் இதுதான். நீ ஒவ்வொரு நாளும் புது புது உலகங்களில் நுழைந்து கொண்டிருப்பாய். புதிய மனிதராக ஆகிக்கொண்டிருப்பாய். ஏன்? மனிதர் என்பதையெல்லாம் கடந்தும் போய்க் கொண்டிருப்பாய். உனக்கு என்ன கவலை? படிப்பு என்னும் பெருந்தவம் வாய்த்தவளாக, வாய்த்தவனாக, வாய்த்தவராக நீ இருக்குங்கால், உன் ஆன்மிகப் பரிணாமம் உன் கண் முன்னாலே, கருத்தின் கண்ணிலேயே நிகழும் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பாய். நிறுத்தாதே.! 

எல்லாம் படிச்சு முடித்துவிட்டேன் என்று மனம் நைஸாக மாயை வேலை செய்யும். ஏமாறாதே! அந்த மனத்தையும் படி. மனிதன் என்பவன் படிக்கும் பிராணி. அதாவது யோசிக்கும் பிராணி. அதாவது கற்பனை செய்யும் பிராணி. அதாவது சிந்திக்கும் மிருகம். சிந்தனையாலேயே தன் பரிணாமத்தை மிருக நிலையிலிருந்து வெகு விரைவில் தேவ நிலைக்கு மாற்றக் கூடிய அற்புதம் நிகழ்த்தத் தெரிந்த ஒரே பிராணி! 

படிப்பு என்பதைப் பற்றிச் சொல்லி மாளாது. எனக்குத் தெரிந்ததைப் பொய் சொல்ல மாட்டேன். படிப்புதான் உண்மையில் கண்கண்ட ராஜ யோகம். 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--

Tthamizth Tthenee

unread,
Oct 27, 2013, 8:53:28 PM10/27/13
to vall...@googlegroups.com
சிந்திப்பது சிந்தனா யோகம்
 
 
சித்திப்பது என்ன யோகமோ  அதுதான் யதார்த்தம்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/10/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 27, 2013, 9:34:19 PM10/27/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு தேனீ அவர்களே

கற்றலே அடிப்படை, கற்றலுக்கு உதவுவது சிந்தனை.  ஆனால் சிந்தனைக்கு மூலம் காட்சிகள்- பல வகையான காட்சிகள். காட்சிகட்கு மூலம் பார்வைகள்.

ஆக கற்றல் பார்வைகளில் தொடங்குகின்றது.  இடையே வருவதுதான் சிந்தனை

இந்தப் பார்வைகளும் பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்று பலதிறப்படும்

கற்றலை அடிப்படையாக கொண்டு ஞான விசாரணை தொடங்கினால் கற்க வேண்டிய பெருநூல் இந்த உலகமே என்றுமாக நமக்கு வேதாகமங்கள் எல்லாம் ஓர் உதவியேத் தவிற பிரமாணங்கள் அல்ல,

எல்லா உண்மைகளும்  இந்த உலகிலேயே இருக்கின்றது. அது எல்லாருக்கும் பொது. சாதி மத பேதங்கள் எல்லாம கடந்தது.


உலகன்




2013/10/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Oct 28, 2013, 1:14:12 AM10/28/13
to vall...@googlegroups.com, mintamil, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திசை மாறியது, பசை ஒட்டவில்லை. அசையாது அமருக ஶ்ரீரங்கமோஹனரங்கா.

Rishi Raveendran

unread,
Nov 2, 2013, 11:27:31 PM11/2/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
 
 
மன்னிக்கவும். இந்த இடத்தில் நான் மாறுபடுகின்றேன்.
 
உண்மையில் படிப்பு  என்பது என்ன ?
 
சில தகவல்களை மூளைக்கு அனுப்புவது அவ்வளவே.  படித்து பண்டிதரான ஒரு ஞானி மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதாய் கொள்வோம்.  இப்பொழுது அந்த படிப்பு என்னவாயிற்று ? ராஜயோகம் என்னவாயிற்று ? இவைகளெல்லாம் நிலையல்ல. உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே நிஜம்.  ஆனால் நாம் நமக்கு நாலு கருத்துக்களை மூளைக்கு அனுப்பிவிட்டு ”எல்லாம் தெரிந்தவன்” எனப் பிதற்றிக்கொள்கின்றோம்.
 
ஒன்றுமேயில்லை.
ஆனால் அதில் எல்லாமே இருக்கின்றது.
ஒன்றுமேயில்லாததை அடைவது எப்படி ?



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


Nagarajan Vadivel

unread,
Nov 2, 2013, 11:52:18 PM11/2/13
to vallamai

On Sun, Nov 3, 2013 at 12:57 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
படிக்கும் முறைகள் பற்றியும் கொஞ்சம் அறிந்துகொள்வது நல்லதல்லவா? 

இந்த இணைப்பில் உள்ளது ஆப்பிள் ஐபோன் ஐபேட் அப்ளிகேஷன் தொடர்புடையது.  அந்தக் கருவிகளை வைத்திருப்போர் கற்றுக்கொள்ள வண்ண்டி வண்டியாக விழியக் காட்சிகள் உள்ளன

அப்ளிகேஷம் விலைக்கு வாங்க வேண்டிய்தில்லை

தரவிறக்கம் செய்ய​​


​வம்பாண்டி​

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2013, 11:59:34 PM11/2/13
to vallamai

2013/11/3 Rishi Raveendran <rishira...@gmail.com>

உண்மையில் படிப்பு  என்பது என்ன ?

​அமெரிக்காவின் தலை சிறந்த உளவியல் அறிஞர் பி.எஃப்.ஸ்கின்னர்

படிப்பதையெல்லாம் படித்து மறந்ததுபோக மீதி உள்ளது கல்வி என்றார்

மனித நினைவும் மறதியும் ஒன்ன்றோடொன்று இணைந்து மனிதனை அறிவுப்பாதையில் அழைத்துச் செல்கிறது

நினைவின் மூலம் மூன்றடி எடுக்கும் மனிதன் மறதியின் மூலம் இரண்டடி பின்னுக்குப் போகிறான்

எனவே மனிதனுக்கு நினைவுபோன்றே மறதியும் முக்கியம்

மறதி என்பதே முறையான நினைப்புக்கு வழி வகுப்பது 

பழையதும் வேண்டாததையும் மற என்றால் மறவாத மனம் என்ன மனம்

மூளை ஒரு கிட்டங்கி அதற்குள் எது இருக்கவேண்டும் எது குப்பைக் கூடைக்கு என்று தீர்மானிக்கும் சூத்திரதாரி யார்?

வம்பு


K. Loganathan

unread,
Nov 3, 2013, 12:36:32 AM11/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்க்ளே

B.F Skinner  வற்புறுத்தியது  Operant Conditioning  என்பது,    உருஷிய  Pavlov  என்பார் வற்புறுத்தியது   Classical Conditioning  என்பது. இருவருமே  Behaviorism  எனும் உளவியல் கோட்பாட்டிற்கு தலையாய்வர்கள்,  இவர் கற்றல் என்பதை  conditioning  என்றும் மறத்தல் என்பதை  di-conditioning  அல்லது counter conditioning   என்று கூறிச் சென்றுள்ளனர்,

இவர்களை மறுத்தே நான் கற்றல் அறியாமை நீக்கம் என்றும் அது பொருட்கல்வி தற்கல்வி இறைக் கலவி என்றவாறு செல்லும் என்றும் சைவ சித்தாந்த பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என்பதைத் தழுவி ஆகமவுளவியலின் கூறாக வளர்த்துள்ளேன்

கற்றல் என்பது படிப்பு மாத்திரம் அல்ல,  உலகில் கற்றல் இல்லாது யாதும் இல்லை. புதியதாக ஓர் பொருளைக் காணலும் அதன வழி ஓர் அறியாமை நீங்களும் கற்றல்தான்.

அறியாமை முற்றிலும் நீங்கிய நிலையே சிவஞான நிலை,

படித்தல் வழி அறிவு திரட்டல் என்பது வேறு, இவ்வாறு அறிவு தெருட்டலுக்கும் எல்லையே இல்லை, ஆனால அறியாமை நீக்கத்திற்கு எல்லை உண்டு,

அகத்தே செறிந்திருக்கும் ஆணவ மலத்தால் வரும் அந்தகாரம் முற்றிலும் நீக்கப்படும் ஆகவே கற்றல் என்பது அறியாமை நீக்கம் எனும் போது அதற்கு ஓர் முடிவு உண்டு. எல்லை உண்டு.

இது ஐரொப்பிய உளவியலில் கோட்பாடுகளில்  இல்லாது ஒன்று,

உலகன்


2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 3, 2013, 1:27:07 AM11/3/13
to mint...@googlegroups.com, vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Sunday, 3 November 2013 10:14:14 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
எனவே நாம் கவனிக்க விரும்புவதில்லை என்ற ஒன்றைத் தவிர, என்ன தவறு, ‘படிப்பு’ என்பதை உண்மையான ராஜ யோகம் என்று சொல்வதில்? 

 
படிப்பு அகவயத் தேடலுக்கு உதவுவது உண்மை.
ஆனால் அது மட்டுமே துரீயத்தில் நிலைக்க உதவுமானால்
இந்நேரம் பலர் அதை முயன்று ஒரு பாதை
ஆக்கியிருப்பார்களே 



தேவ்

துரை.ந.உ

unread,
Nov 3, 2013, 1:05:10 AM11/3/13
to Groups, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
இங்கே கோணம் மிக முக்கியம் என நினைக்கிறேன் 
1.Inline image 2

2.Inline image 3


3.Inline image 4


2013/11/3 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
0 099.jpg
0 0mjkjkk m (1).jpg
0 0mjkjkk m.jpg

Nagarajan Vadivel

unread,
Nov 3, 2013, 1:14:18 AM11/3/13
to vallamai
என்னைப் போன்ற வீண் வம்புகள் தெளிவுபெறச் சில விளக்கங்கள் தேவை

படி என்றால் என்ன பொருள்?

இராமகி அவர்கள் படி என்றால் மூலத்திலிருந்து ஒரு நகலை மனத்துக்குள் ஏற்றுவது என்பார்

குமுகத்தின் பொது வளங்களை குமுகத்தின் எதிர்கால உறுப்பினர்களாக ஆக்கத்தேவையான வளங்களைத் தேர்வுசெய்து அதை மனதில் படியுமாறு செய்வது படிப்பு என்று பொருள் கொள்ளலாமா?

இங்கே நீங்கள் யோகம் என்று குறிப்பிடுவதால சாங்கிய உளவியல் பற்றியும் சிரு குறிப்பு அல்லது விளக்கம் தரவேண்டும்

புத்தி, சித்தம், என்ற சொற்களின் பொருள் என்ன என்றும் குறிப்பிட வேண்டும்

அறியாமையை அறியாமைவே அறியாமை

அறியாமையை அறிவது அறிதலின் தொடக்கம் அல்லவா?

அகங்காரம் என்ற உள்ளவயமின்றி வெளியில் இருந்து வரும் தகவலைத் தரம்பிரிக்க எவ்வாறு இயலும் தான் என்ற அகங்காரம் இயல்பில் உள்ளதுதானே. அந்த ஆங்காரத்தை உள்ளடக்குவதா அல்லது அழிப்பதா படிப்பின் நோக்கம்?

வம்பாண்டி

வம்பு




2013/11/3 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Nov 3, 2013, 1:25:27 AM11/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

துரியம் துரியாதீதம் போனற அவத்தைகளைக் குறிப்பிடும்போது, அதன் தொடக்க நிலையாகிய சொப்பனாவத்தையை நாம் கருதவேண்டும் Freud  ஓர் தவறான கனாவியல் சொல்லியிருக்க Jung என்பார் அப்படி அல்ல.  ஆழமான ஞானக் கனவுகள மூரத்திகளின்( archetypes) விளையாடல் எனும்  கருத்தில் அவர் விளக்குவார். 

இப்பொழுது நான் விளக்கிவரும் திருமூலரின் புரானவியல் இப்படித்டன் செல்கின்றது. புராணங்கள் ஞானக் கனவுகள்

 இவ்வாறான ஞானக் க்னவுகள் கண்டு பெயர்த்து அறிந்து ஞானம் வளர்க்க சொப்பனாவத்தை  நிலையிலிருந்து  துரிய நிலை அடைவோம். பிறகு இன்னும் ஆழமான தியான நிலைபோன்ற அவத்தைகள்  தலைப்பட்டு துரியாதீத நிலை அடைவோம். இவை எல்லாம சாத்திரங்களை ஓதுவதால் மட்டும் வராது. உள்லபடியே அவற்றை ஒதுக்கிவிட்டு ஆழமான  ஞானக் அகனௌவுகள் ஆய்ந்து உயர வேண்டும்

ஆகமவுளவியலில் இது இறைக்கல்வி பால் அடங்கும்

உலகன்

 


2013/11/3 DEV RAJ <rde...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
Nov 3, 2013, 2:07:41 AM11/3/13
to vallamai
தமிழ்ச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை நான்காகக் குறிப்பிடும் அவையாவன 

1. விழி நிலை

2. அறி துயில் அல்லது கனவுடன் கூடிய துயில்

3. ஆழ் துயில் அல்லது கனவுகளற்ற துயில்

4. துரிய நிலை

மேலைச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை முன்றாகக் குரிப்பிடும்

1.விழி நிலை

2. அறியா மன நிலை

3. அறியவியலா மன நிலை 

ப்ராய்டும் யுங்கும் செயல்பாட்டு நிலைகளை மட்டும் விளக்கிச் செயல்படாத நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லை

வம்பு




2013/11/3 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Nov 3, 2013, 2:33:51 AM11/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரிய அவர்களே

இதற்கெல்லாம் மூலமாக உள்ள நூற்களை மேற்கோள் காட்டினல் சற்றுத் தெளிவாக இருக்கும். எந்த கலைசொற்கள எவ்வாறு தமிழ் படுகின்றீர் கள் என்று தெரியவில்லை,

அந்தகரணங்கள என்று வரும்போது அவை மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்று பகரப்படும்

காணக;

மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாயுள்ள மனோ புத்தி யகங்கார சித்தங்களில் ஒன்று அன்று என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.

 

விளக்கம்:

https://sites.google.com/site/meykandasastras/civanjana-botham-tamil/a5-sutra-4

இன்னொன்று அவத்தைகள், இவற்றை சாக்கிரம்(விழிப்பு நிலை, சொப்பப்னம்(கனா நிலை) சுழுத்தி ( சுழி முனை நாடிச் செலவு) துரியம் துரியாதீதம் என ஐந்து அவத்தை நிலைகளை குறிப்பர்,

மேலும் இவற்றின் உட்பிரிவுகளாக சாக்கிரத்தில்ல் சாக்கிரம் சாக்கிரதில் சொப்பனம் என்றவாறு ஒவ்வொரு அவத்தை நில்லையிலும் இவ்வாறு இன்னும் பல வகுப்புக்கள் இருப்பதாக சுட்டுவர். இப்படிப்பட்ட ஆய்வுகள் திருமூலர் திருமந்திரத்தில் தொடங்கி ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டு தத்துவப்பிரகாசம் எனும் நூலில் முடிவுற்றதாக தெரிகின்றது


மெய்கண்டார் சாகிரத்தில் அதீதம்ம் என்றோர் நிலையையும் குறிப்பிடுகின்றார்,

நான்காம் சூத்திரம்


மூன்றாம் படிமெய்

மேற்கோள்: இனி, இவ்வான்மா சாக்கிரஞ்  சொப்பனம் சுழுத்தி துரியந் துரியாதீதமாயுள்ள பஞ்சாவதித்தனாய் நிற்கும் என்றது.
ஏது: அதுதான் மலசொரூபத்தின் மறைந்து , அரூபசொரூபியாய் நிற்றலான்.\

மேலும்:

எடுத்துக்காட்டு 4.3.2

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய வுள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் -- இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே
அவ்வற்றின் நீங்கலது வாங்கு.

என்றும் கூறுகின்றார்

இங்கு இலாடத் தானம் என்பது மூளையின் முற்பகுதி- தெள்ளிய ஞானஞ் சுடரும் இடம். இங்கு ஐந்து அவத்தை எய்துதல் சாக்கிராதீதம் அடைதல,

இதுவொரு தியான அல்லது சிவயோக நிலை

இதன் விரிவான விளக்கமெல்லாம் கீழே வரும் சுட்டியில்:\

https://sites.google.com/site/meykandasastras/civanjana-botham-tamil/a5-sutra-4

உலகன்




2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தமிழ்ச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை நான்காகக் குறிப்பிடும் அவையாவன 

DEV RAJ

unread,
Nov 3, 2013, 4:51:57 AM11/3/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Sunday, 3 November 2013 12:33:56 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஆயினும் ‘அறிவு ஏற்படுவது’, ‘அறியாமை இரிவது’ என்னும் epistemological moments இவற்றைக் கருத்தில் கொண்டு, (‘போதோதயம்’, போதகத்வம், ’அஞ்ஞான பா4தம்’ ஆகியவற்றை மனத்தில் கொண்டு) நோக்கினீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ......................


ஞானத்தின் இயல்பான நிலை வெளிப்படுவதே அறியாமை இரிவு
என்பது நன்கு புரிகிறது.

போ₃தோ₄த₃யம், போ₃த₄கத்வம்,அஜ்ஞாந பா₃தா₄ இவை தோன்றி நிலைபெற்று
விளங்க உதவும் படிப்பு எது ? அதற்கான துறை என்ன ? இன்றைய விஞ்ஞானம்
எந்த அளவு துணை புரிகிறது ?

ஏதோ ஒருவழியில் புரிதல் நிலைகள் ஆற்றுப்படுமானால்
நேரமும், ஆற்றலும் விரயமாகாமல் மிச்சப்படும் என்பதால்
இவ்வினாக்கள்



தேவ்
 

DEV RAJ

unread,
Nov 3, 2013, 8:01:07 AM11/3/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Sunday, 3 November 2013 15:43:51 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஏன் இந்தக் ’கொலைவெறி’, :-) 

கண்ணனே காரணம், ஐயா :))
உங்களுக்குத் தெரியாத கீதையா ? 

|| தஸ்மாத்₃யோகீ₃ ப₄வார்ஜுந ||

|| தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக₃யுக்தோ ப₄வார்ஜுந ||

 

தேவ்

Sk Natarajan

unread,
Nov 4, 2013, 10:32:26 AM11/4/13
to தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள், vallamai
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.

உண்மை
அருமை , தொடருங்கள் ஐயா


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.

மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.

படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.

கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.

உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.

நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.



DEV RAJ

unread,
Nov 4, 2013, 9:10:16 PM11/4/13
to mint...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai
On Monday, 4 November 2013 21:34:09 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha? 


...............................விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் .................... 

நீங்களே இதையொட்டி ஒருமுறை பேசியுள்ளது
நன்கு நினைவில் உள்ளது.

ஆன்மிகம் ஒருபுறம் இருப்பினும் வேத சமயம்
உலக வாழ்க்கையில் தீவிர வெறுப்பைக் காட்டவில்லை;
மாந்தர் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றே முனைப்பைக்
காட்டுகிறது. பாரதத்தின் ராணுவ ஆற்றல் மழுங்கி தேசம்
வலிமை குன்றி, மாற்றார் வசப்படக் காரணமாக அமைந்தது
பவுத்தப் பரவலால் என அறிஞர் கூறுவர்



தேவ்

DEV RAJ

unread,
Nov 6, 2013, 9:41:57 PM11/6/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai
On Tuesday, 5 November 2013 19:27:55 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
..... அதுவும் ராமன்! புத்தர் ஒரு அவதாரம்! ராமன் புத்தரைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளையா பயன்படுத்துவது? 

ராமன் ஓர் அவதாரம், ஏன் பரசுராமரும்கூட ஓர் அவதாரம்.
இவர்களுக்குள் நேரடியான மோதலே நிகழ்ந்துள்ளது.
நாத்திக வாதம் பேசிய ஜாபாலிக்கு அயோத்தியில்
இடமில்லாமல் போய்விடவில்லை; வசிட்ட முனிவரே
இராமபிரான் முன்னிலையில் இவரைப் புகழ்ந்துள்ளார்.
பவுத்தாகமச் சிந்தனைகளை வேதாந்த விவாதங்களில்
இன்றும் விரிவாக அலசுகின்றனர். 

இராமபிரான் விசுவாமித்திரரைத் தொடர்ந்துசென்றது
தொடங்கி, போருக்கான ஆற்றலையும்
அறிவுப்புலத்துக்கான சித்தாந்தங்களையும்,  
சமன் செய்யும் பணியை மேற்கொண்டு 
வந்துள்ளதாகப் புரிந்துகொள்ள முடிகிறது
 

தேவ்

Banukumar Rajendran

unread,
Nov 8, 2013, 6:40:29 AM11/8/13
to மின்தமிழ், vallamai



2013/11/5 DEV RAJ <rde...@gmail.com>
போகிறப்போக்கில் இப்படித் தட்டிச் செல்கிறீர்களே?? தங்களுக்கே இது அபாண்டமாகத் தெரியவில்லை?

கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பெளத்தப் பரவலை எந்த அறிஞர்க் குறிப்பிடுகிறார்??

உலகின் சிறந்த, உன்னதமான மதத்தை/சமயத்தை, அதுவும் தற்போது அருகிய நிலையில் இவ்வாறு கூறுவது நன்றாகயில்லை.


:-(


இரா.பானுகுமார்,
சென்னை

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Nov 9, 2013, 11:00:47 PM11/9/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Saturday, 9 November 2013 18:09:52 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
சரி. ஏன் இவ்வாறு புத்தகப் படிப்பையும், அறிவு வாதத்தையும் இவர்கள் எரிச்சல் அடைந்து கண்டிக்கின்றனர் என்று பார்த்தால்.......


படகுப் பயணம் செய்து நீந்தத்தெரியாமல்  
நீரில் மூழ்கிய பண்டிதரைக் கேலி செய்யும் 
கதையும் குருதேவர் கூறியதுதான். ஒருகால் 
அப்பண்டிதரின் படிப்பு ராஜயோக ஸிலபஸில்
இல்லாததாக இருக்கலாம்



தேவ்

DEV RAJ

unread,
Nov 10, 2013, 3:20:29 AM11/10/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
                    ||ஸா வித்₃யா யா விமுக்தயே|| 

தத்கர்ம யந்ந ப₃ந்தா₄ய ஸா வித்₃யா யா விமுக்தயே| 
ஆயாஸாயாபரம் கர்ம வித்₃யSந்யா ஶில்பநைபுணம் ||
                                                                    - விஷ்ணு புராணம்

PRASATH

unread,
Jan 4, 2014, 12:06:18 PM1/4/14
to தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள், vallamai
:)))

மாறுபடுகிறேன் ஐயா...

பொருள் அறியாமல் வேதங்களை ஓதுபவனால் துயரதிலிருந்து விடுபட முடியும் என்பதையும், வேதங்களை மனன்ம் செய்து நினைவில் வைத்திருப்பவன் ஸ்வர்க்கத்தை அடைவான் என்பதையும் ஏற்க இயலவில்லை...

பொருளறிந்து வேதங்களை கற்ற்வன் துயரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இயலாவிடினும் துயரங்கள் என்பவை என்ன, என்பதில் தெளிவு கிடைத்து அத்துயரங்களின் பாதிப்பைத் தன்னை பாதிக்க விடாமல் செய்து கொள்ள முடியும்.

மேலும் பொருளறிந்து வேதம் கற்றவன், அதன்படி வாழ்வானாயின் மோஷத்தை அடைவான் என்பதில் மாற்று கருத்து இல்லை... 

என்னை/எனது கருத்தை மாற்றிக் கொள்ள மேலும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்

2014/1/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
”எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்களை மறவாமல் இருப்பதினால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான்.” 

-- பீஷ்மர். 


Innamburan S.Soundararajan

unread,
Jan 4, 2014, 12:28:26 PM1/4/14
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
அடடே! அந்தக் காலத்துலயும் நம்மளை மாதிரி யோசிச்சவங்க உண்டு போல இருக்கே! 

~ இது எப்படி இருக்கு என்றால்? … எதுக்கு வம்புக்கு போகணும் ராஜு? 'கம்'நு இரு அவர் மாதிரி.

2014/1/4 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 20, 2014, 11:11:37 AM1/20/14
to vallamai, min tamil
அருமை!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014/1/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாராயணம் பண்ணுவதும், படிப்பதும் ஒன்றாகிவிடுமா? 

பாராயணம் பண்ணுகிறவருக்கு அது ஒரு சடங்கு. பாராயணம் பண்ணுவதால் இந்தக் காரியம் நடக்கும்; அந்தக் காரியம் நடக்கும்; ஏதாவது காரியம் பலிதமாகும் என்ற நூலுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்தாம் முக்கியம். 

இல்லாவிட்டால் யோசித்துப் பாருங்கள் - ஒரு நூலில் இன்னார் எழுதினார், இன்னார் பதிப்பித்தார் என்று போட்டிருக்கும். எந்த புத்திசாலியாவது நூலைப் படிக்கும் போது 

”எழுதியவர் இன்னார் 

நூலைப் பதிப்பித்தவர் இந்தப் பதிப்பகத்தார் 
அட்ரஸ் - இன்ன தெரு இன்ன இலக்கம், இந்த ஊர் இன்ன பின் கோட் 

விலை விவரம் இத்தனை ரூபாய் 

இந்த அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. ஃபோட்டோ ஆப்செட், டெமி ஆக்டேவோ, ” 

இப்படி ஒன்று விடாமல் படித்தார் என்றால் சரி ஒன்றும் புரியாத ஆள் பாவம், கண்ணில் கண்டதை மேய்ந்து கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருக்கும். 

ஆனால், (மிகச் சிறுபான்மை உண்மையான விதவான்களைத் தவிர), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கிரந்தங்களைப் பாராயணம் பண்ணுகிறவர்களைப் பாருங்கள். கிட்டத்தட்ட இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள். 

ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல் 

ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: 

இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும். 

மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும். 

ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ். 

ஸ்ரீபகவத் கீதை என்னும் உபநிஷத்தாகிய பிரம்ம வித்யையில், கீதை என்னும் யோக சாத்திரத்தில், ஸ்ரீகிருஷ்ண அர்ஜுனர்களிடையே நடந்த உரையாடலில், விபூதி யோகம் என்னும் பெயர் பெற்ற பத்தாவது அத்யாயம் இதுவாகும். 

இந்தக் காலத்துல தலைப்பு கொடுத்து பேஜ் நம்பர் போட்டு முன்னாடி பொருளடக்கமும் கொடுத்துட்டா கதை முடிஞ்சுது. அந்தக் காலத்துல நெட்டுருப் பண்ணதால நினைவுல வைக்க வேண்டித் திருப்பிச் சொன்னாங்க. 

ஆனால் பாராயணம் பண்ணுகிறவருக்கு அதெல்லாம் கவலையில்லை. அங்கதான் விசேஷ சக்தி இருக்கிறதாக நினைத்துக்கொண்டு, அப்படி ஆடம்பரமா படிச்சார்னா அதனோட மகிமையே தனி! ஆனால் பொருள் மாத்திரம் கேட்கக் கூடாது. அது வேற கதை. 

ஆனால் படிப்பு என்பதன் வழியே வேறு. 

நமது மகத்தான மரபுகளில் படிப்பு என்பது மிகச் சிறிய வட்டங்களில்தான் நடைபெற்றிருக்கிறது. 

பெரும்பாலும் பாராயணம்தான். 

முதலில் சம்ஸ்கிருதத்தில் பாராயணம். அப்புறம் தமிழில், எந்த மொழியாய் இருந்தாலும் சரி பாராயணம்தான். இவ்வளவு நாள் ஓட வேண்டும். அதான் கணக்கு. காரிய சித்திக்கு அது போதாதோ? 

***

Innamburan S.Soundararajan

unread,
Jan 20, 2014, 12:02:24 PM1/20/14
to vall...@googlegroups.com, min tamil
'தானும் அதுவாக பாவித்து…' 
ஓ! ஶ்ரீரங்கம் மோஹனரங்கம் சொல்வது புரிகிறது.
2014/1/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2014, 11:11:08 AM1/24/14
to vall...@googlegroups.com, min tamil
சுவாரஸ்யம் தான். Meandrருக.
2014/1/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> - நம்ம நூல்களை, சாத்திரங்களை, புராணங்களை, இதிகாசங்களை எல்லாம் படிக்கணும்.
> இப்ப இருக்கற பசங்க எங்க அதெல்லாம் படிக்கறதுங்க..? எல்லாம் ஃபாரின் போகம்...
> நாவல்.. அது இதுன்னு
>
> -- அதெல்லாம் படிக்கணும்னா சம்ஸ்க்ருதம் தெரியணுமே... தமில் ஆங்கிலத்தில்
> யாராவது பொழிபெயர்ப்புகள் இருந்தா படிக்கலாம்.
>
> -- அதெல்லாம் இருக்கே... ஆஅனால் யார் படிக்கறேன்கிறா? ஒரு இண்ட்ரஸ்ட்
> வேணும்னா....அணா பைசாலயே பார்க்கக் கூடாது....
>
> -- யாரோட மொழிபெயர்ப்புகள் படிக்கலாம்?
>
> -- நீங்க என்ன பண்ணுங்கோ... ..அவர் மொழி பெயர்த்திருக்கிறார்... இன்னொருத்தர்
> கூட மொழிபெயர்த்திருக்கிறார்... அந்த ஒத்தரோட மொழிபெயர்ப்பு ரொம்ப நன்னா
> இருக்கும். ஆனால் கிடைக்கிறதா தெரியல்ல...
>
> சுவர் கடிகாரத்தில் முள்கள் ஓடுகின்றன. உதயம் அஸ்தமனம் உதயம். வாரம் மாதம்
> வருஷம்....
>
> -- நீங்க சொன்னீங்களே அந்த மொழிபெயர்ப்புல இப்படிப் போட்டிருக்கே...
>
> -- அதெல்லாம் நீங்க மூல மொழியில் படிக்கணும். சம்ஸ்கிருதத்துல படிச்சாத்தான்
> அது கரெக்டா புரிஞ்சுக்க முடியும். சும்மா மொழி பெயர்ப்புல பொத்தாம் பொதுவாப்
> போட்டிருப்பா.
>
> -- அப்படியா?
>
> காலம் நகர்கிறது. உருள்கிறது.
>
> -- நீங்க சொன்னது சரிதான். சம்ஸ்கிருதத்துல படிக்கும் போது மிகத் தெளிவா
> இருக்கு.
>
> -- பார்த்தீங்களா? அதுக்குத்தான் சொன்னேன். அதெல்லாம் தேவ பாஷை மாதிரி
> வராதுண்ணா...
>
> -- ஆனால் அதிலும் பார்த்த பொழுது அன்று கேட்டேனே கேள்வி அது இன்னும்
> வலுப்படுகிறதே....
>
> -- அதெல்லாம் விசாரம் பண்ணுங்கோ தப்பே கிடையாது. ஆனால் அதெல்லாம் ஒரு
> எல்லைக்குள்ள இருக்கணும்.
>
> -- இல்லை.. அந்தக் கேள்வி....
>
> - அதுக்கா.... அதுல பார்த்தீங்கன்னா.... அதுக்கு ஒரு காரிகை இருக்கு... அந்தக்
> காரிகைக்கு ஒத்தர் விருத்தி க்ரந்தம் எழுதியிருக்கிறார். அந்த விருத்தியைப்
> பார்த்தீங்கன்னு வச்சுப்போம்.. அதுல இது எல்லாத்தையும் அலசறார்.
>
> -- ஓஹோ அதுன் பேரு என்ன சொன்னிங்க....சரி
>
> காலம் ஓடுகிறது....
>
> - நீங்க சொன்ன விருத்தியைப் பார்த்தேன். அதுல.. அந்தக் கேள்விக்கு...
>
> - தோ பாருங்கோ நீங்க இதே பொழப்பா இருக்கற ஆளு... எனக்கு ஏகப்பட்ட வேலை... இப்ப
> பேச முடியாது. இத்த்னாந்தேதிக்குப் பிற்பாடு பேசுவோம்.
>
> -- சரி. அப்ப வரேன்.
>
> - பாருங்கோ பொறுமையா பாருங்கோ. அவசரம் இல்லாம பார்த்தீங்கன்னா எல்லாம் புரிய
> வரும்.
>
> காலம் அதுபாட்டுக்கு ஓடுகிறது.
>
> -- நீங்க இந்த தேதிக்குப் பிற்பாடு பார்க்கலாம்னு சொன்னீங்க
>
> -- ஓ சரி. என்ன விஷயம்? அதுக்கு என்ன விடை கிடைச்சுதா?
>
> - இல்லை அந்தக் கேள்வி....விருத்தி கிரந்தத்துல....சொல்லியிருக்கிற விஷயம்
> பார்க்கப் போனால் நான் சொன்னதை ஊர்ஜிதப் படுத்துகிறதே...அதுல இப்படிப்
> போட்டிருக்கு....அப்படீன்ன்னா இதுதானே முடிவு?
>
> - இங்க பாருங்க... நீங்க ரொம்ப படிச்சு பிரமையில் இருக்கீங்க...சரியா
> விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்... அதுக்குத்தான் குருமுகமா படிக்கணும் குருமுகமா
> படிக்கணும்கிறது... அப்ப சந்தேகம்லாம் வராது... எல்லாம் இந்தக் காலத்துல
> எல்லாத்துக்கும் புத்தகம் போட்டுக் குடுத்துட்றான். அது அது தறுதலைக் கணக்கா,
> தாந்தோணித்தனமா படிச்சுட்டு, முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்
> போட்டு... ஹி ஹி ஹி...நினைச்சுப் பாருங்கோ.... முழங்கால் எங்க இருக்கு?
> மொட்டத்தலை எங்க இருக்கு? என்ன ஓய்... ஒன்றும் பேச்சே காணோம்...முழங்கால் எங்க
> இருக்கு... மொட்டத் தலை.,, ஹா ஹாஹ் ஹா
>
> - இல்லை. அந்தக் கேள்விக்கு விடை... விருத்தி, காரிகை எல்லாவற்றிலும் ஒரே
> மாதிரிதான் இருக்கு... அப்ப முடிவு...
>
> -- நீங்க ஒன்றோட ஒன்ன போட்டுக் குழப்பிக்கிறீங்க... இதுக்குத்தான் சொல்றது...
> சாஸ்த்ர ஞானம் பஹு க்லேசம் புத்திச் சலன காரணம் -- சாத்திரங்களைப் படித்தல்
> என்பது மிகுந்த கிலேசத்தைக் கொடுக்கக் கூடியது, புத்தியைக் குழப்பும் காரணமாய்
> இருப்பது -- அப்படீன்னு சொல்வா....
>
> -- இல்லை இதுக்கு வேற பலர் எழுதின விளக்கங்களையும் படித்தேன். யாரோ எழுதின
> கண்டனத்துக்கு ஒருவர் மண்டனம் எழுதிய அந்த நூலையும் பார்த்தேன். அதையெல்லாம்
> பார்த்தப்புறம் இதுதான் முடிவு என்று படுகிறது.
>
> -- ஓஹோ...உங்களுக்கு முடிவுன்னு பட்ருத்துன்னா உடனே அதுதானா? பெரியவா
> பெருந்தலைன்னு ஒன்னும் கிடையாதோ...இல்லை தெரியாமத்தான் கேட்கறேன்.. அப்படி என்ன
> பெரிய ப்ராக்ஞனாப் போய்ட்டீங்க நீங்க...இந்தப் படிச்ச திமிரு இருக்கே... அது
> மனுஷாள அதள பாதாளத்துக்கு கொண்டு போய்ப் போட்டுடும்.. ஆமாம்
> ஜாக்கிரதை...இப்படித்தான் அந்தக் கோபாலி புள்ள...அப்படி இப்படின்னு ஏதேதோ
> படிக்கறானேன்னு பார்த்தா...அதுன்னான் இதுன்னான் கடைசில கம்யூனிஸ்டா
> போய்ட்டான்... போயி... ரஷ்யாலயே எங்கயோ போய் செட்டிலாயிட்டானான்.... எல்லாம்
> உருப்பட்றதுக் கில்ல.....ஆமாம்.... எல்லாம் நாமதான் படிச்சுட்டோஒமேன்னு
> திமிர்உல கேட்கப் படாது.. எல்லாம் நேத்திக்குப் பெஞ்ச மழையில இன்னிக்கு மொளைச்ச
> காளான்...
>
> -- இல்லை...இது சம்பந்தமா ஒரு வியாசம் ஒன்று... எழுதி...
>
> - ஓ அப்படியா... வியாசமே எழுதியாச்சோ.. மகா வித்வான்....
>
> என்றைக்கோ வாங்கிக் கட்டிக்கொண்ட திட்டுகள். இன்று நினைத்துப் பார்த்தால்
> சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
>
> படிப்பு என்பது ராஜ யோகம்தான்.

Dev Raj

unread,
Jan 25, 2014, 1:54:26 AM1/25/14
to mint...@googlegroups.com, vallamai
On Monday, 20 January 2014 07:16:06 UTC-8, Mohanarangan V Srirangam wrote:

ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்
ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: 

இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும். 
மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும். 
ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.
 


இது போன்ற பப்ளிஷிங் டீடெய்ல்ஸ் படித்துக் கூட்டம் சேர்ப்போரை என் 60 ஆண்டு
ஆயுளில் இதுவரை நான் பார்த்ததில்லை; ஒருவேளை ஸ்ரீரங்கத்தில் இதுபோல்
நீட்டி முழக்கிப் பாராயணம் செய்து ஆள் சேர்த்தோர் இருந்தனரோ தெரியாது.

கீதையின் அளவு எனும் நூலின்கண் ஸ்வாமி ராமஸுகதாஸ் அவர்கள்
இதைப் புஷ்பிகா என்கிறார்; இந்த முத்தாய்ப்பின் எழுத்துகளையும்
எண்ணிக் கணக்கிட்டுள்ளார்.

பொருள் தெரிகிறதோ இல்லையோ இதுபோல் சிரத்தையுடன் பாராயணம் செய்தோர்தான்
கீதா ப்ரெஸ் [கோரக்புர்] எனும் பெரிய நிறுவனத்தை அமைக்க ஸேட்ஜீ ஜயதயால் கோயந்தகா
அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்தனர் என்பதும் உண்மை. கீதையின் பலகோடிப்
படிகளைப் பல மொழிகளிலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தேவ்

Dev Raj

unread,
Jan 25, 2014, 8:39:05 AM1/25/14
to mint...@googlegroups.com, vallamai
விண்ணப்பம் செய்தல் எனும் மரபை ஒட்டிச்
சில வைணவர் குடந்தை ஆராவமுதன் திரு
முன்னிலையில் அவர்களுக்குத் தெரிந்த ஆழ்வாரின் 
ஒரு பதிகத்தை ஓத, அதுவே நாதமுனிகளுக்கு
நாலாயிரத்தையும் மீட்கும் வேட்கையைத்
தோற்றுவித்தது என்பது வரலாறு.

திருமந்திரப் பாக்கள் பலவற்றுக்கும் பொருள் புரிவதில்லை; 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வதே முறை
என்று காரணம் காட்டி அவற்றை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் 
என்று பரிந்துரைக்க முடியாது.அவற்றைக் காத்து அடுத்த 
தலைமுறைக்கு அளிப்பதே நம் கடமை. 


தேவ்
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages