--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்உன் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எழுதி வைத்துக் கொள் -அதே போல் நம் அடிமைத்தனம் நீங்க எந்தத் துறையிலும் சரி, புத்தகம் படிப்பதுதான் வழி என்பது அனுபவ சித்தமாகத் தெரியும் போது எந்த மஹானின் வார்த்தையையும் லட்சியம் பண்ணாதே.தாகம் கொள்ளை தாகம், பயங்கர வெயில். அந்த நேரத்தில் தண்ணீர்தான் தாகம் போக்கும் என்பதற்கு எந்த மஹானின் உபதேசம் வேண்டும்?எந்தப் பெரிய மஹான் சொன்னாலும் அபத்தம் அர்த்தம் உள்ளதாக ஆகிவிடாது.பெரியவாள்ளாம் சில பேரு, மஹான்கள், புத்தகப் படிப்பைக் கண்டிச்சிருக்காளே என்று கலங்காதே.நிறுத்து. உனக்கு ஒரே ஒரு வேலைதான் உண்டு. படிப்பது. உனக்கு முக்கியம் என்று பட்ட துறையில். உலகத் துறையா, உள்ளத் துறையா, ஆன்மிகமா, தத்துவமா - ஒரே ஓர் உண்மையான ராஜயோகம் - படிப்பு.உடனே மூக்கால் அழாதே. ‘எங்கண்ணா நேரம் இருக்கு. ஏகப்பட்ட வேலை..’தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.படிப்பு என்பது பெரிய தவம்.ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் - எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் - படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?இல்லையேல் யாராவது காட்டும் சர்க்கஸ் வேலைகளுக்கு நீ கைதட்டும் கூட்டமாக ஆகத்தான் வழிவகுக்கும்.மற்ற எல்லா வழிகளும் உன்னைக் குனிய வைத்து சிலர் பச்சைக் குதிரை தாண்டத்தான் பயன்படும்.எனக்குத் தெரிந்தவரை இல்லை என்று கொஞ்சம் மரியாதையாகச் சொல்கிறேன். பச்சையாகப் பிளந்து சொல்ல வேண்டும் என்றால் ‘கிடையவே கிடையாது’.நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.
தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.
இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.
படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.
***
*
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.
மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.
படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.
ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.
படிப்பு என்பது பெரிய தவம்.
தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.
எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.
படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.
இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.
தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.
--
’உம்’மை கற்பதின் சிறப்பை உணர்த்தும்.
கற்றலின் கேட்டல் நன்றுகேட்டலின் காண்டல் நன்று
நீங்களே செய்து பாருங்கள். ஆசானிடம் போய்க் கேட்பது உங்களுக்குப் பிடித்தது என்றால் அது போல் செய்யுங்கள். இல்லை படிப்பது எவ்வளவோ சிறந்தது என்றால் அதைச் செய்யுங்கள்.
எனக்கு இந்த ஆசானிடம் கேட்கறது என்ற மயக்கம் எல்லாம் இல்லை.தெளிவு - படிப்பு.படிப்பில் சேர்ந்ததுதான் மடலாடுவது, வீடியோ கல்வி எல்லாம். அதாவது படிப்பைப் பல்லூடகத் தன்மையாய் ஆக்கிவைத்திருக்கும் போது எங்க ஆசான் இருக்காருன்னு போய் பார்த்து குந்துக்க உட்காருங்களேன். யார் வேண்டாம் என்பது :-)
நல்ல நகைச்சுவை.
--
படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
படிப்பைப் பற்றி இப்படி விதந்து எழுதிவிட்டு எனக்கே கொஞ்சம் தோன்றியது. ‘கொஞ்சம் அதிகப்படியா சொல்லிவிட்டோமோ?’ என்று. அதற்குத்தான் இவ்வளவு நாள் விட்டுப் பார்த்தேன். ஆனால் இப்பொழுதும் எனக்குத் தோன்றுவது யாதெனில் மிக நிதர்சனமான உண்மையை எழுதியுள்ளேன் என்று. ஆம். படிப்பு என்பதைப் போல உண்மையான ஆன்மிகம், மத வழிபாடு, சத் சங்கம் என்பது வேறு எதுவும் இல்லை.ஞானமே உருவானவர் கடவுள் என்பது உண்மையானால், அந்தக் கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அல்லது ஒருவர் என்று கிடையாது, அது அனுபூதி நிலை, எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்க! ஞானமே உருவான ஒன்றிற்கு அணுக்கமான வழி அறிவை வளர்க்கும் படிப்புதானேவொழிய வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் படிப்பு என்பது தன்னுடைய ஆர்வம், உண்மையான ஊக்கம், முழு ஈடுபாட்டுடன் கூடிய தீவிரமான படிப்பு என்று இருக்க வேண்டும். சும்மாவாக, மற்றவர்க்குக் கண் மயக்குவதற்காக என்று இருக்கக் கூடாது.அது ஜபமோ, தவமோ, அனுஷ்டானமோ எதுவும் படிப்பு என்பதற்கு இணை கிடையாது.அறியாமை என்பது அகலுவதைக் கண்கூடாக நாம் படிப்பு என்பதில் காண முடியும். எந்தப் படிப்பு ஆயினும்.
படிப்புக்கு வயசு சொல்லாதே! எந்த வயசாயிருந்தாலும் படி. படி. படி.அது வாழ்க்கையின் இடைவிடாத இதயத் துடிப்பாக இருக்கட்டும். படி. படிப்பதைச் சிந்தி. சிந்தித்ததை நினைவில் கொள். அந்த நினைவோடு அடுத்து மேலும் படி. பொருத்திப் பார். யோசி. மறுக்க வேண்டும் என்றால் துணிந்து மறுத்து சிந்தித்துப் பார். மறுத்ததை மீண்டும் கொள்வதற்கு இடம் உண்டு என்று பட்டால் தயங்காதே! எந்த விதத்தில் கொள்ள வேண்டும் என்பதைத் துல்லியமாக ஆழ்ந்து ஆய்ந்து பார்.இதுதான் கண்கண்ட, கைகண்ட ஒரே தவம்! பொய்க்காத தவம் என்றால் இதுதான். நீ ஒவ்வொரு நாளும் புது புது உலகங்களில் நுழைந்து கொண்டிருப்பாய். புதிய மனிதராக ஆகிக்கொண்டிருப்பாய். ஏன்? மனிதர் என்பதையெல்லாம் கடந்தும் போய்க் கொண்டிருப்பாய். உனக்கு என்ன கவலை? படிப்பு என்னும் பெருந்தவம் வாய்த்தவளாக, வாய்த்தவனாக, வாய்த்தவராக நீ இருக்குங்கால், உன் ஆன்மிகப் பரிணாமம் உன் கண் முன்னாலே, கருத்தின் கண்ணிலேயே நிகழும் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பாய். நிறுத்தாதே.!எல்லாம் படிச்சு முடித்துவிட்டேன் என்று மனம் நைஸாக மாயை வேலை செய்யும். ஏமாறாதே! அந்த மனத்தையும் படி. மனிதன் என்பவன் படிக்கும் பிராணி. அதாவது யோசிக்கும் பிராணி. அதாவது கற்பனை செய்யும் பிராணி. அதாவது சிந்திக்கும் மிருகம். சிந்தனையாலேயே தன் பரிணாமத்தை மிருக நிலையிலிருந்து வெகு விரைவில் தேவ நிலைக்கு மாற்றக் கூடிய அற்புதம் நிகழ்த்தத் தெரிந்த ஒரே பிராணி!படிப்பு என்பதைப் பற்றிச் சொல்லி மாளாது. எனக்குத் தெரிந்ததைப் பொய் சொல்ல மாட்டேன். படிப்புதான் உண்மையில் கண்கண்ட ராஜ யோகம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
படிக்கும் முறைகள் பற்றியும் கொஞ்சம் அறிந்துகொள்வது நல்லதல்லவா?
உண்மையில் படிப்பு என்பது என்ன ?
எனவே நாம் கவனிக்க விரும்புவதில்லை என்ற ஒன்றைத் தவிர, என்ன தவறு, ‘படிப்பு’ என்பதை உண்மையான ராஜ யோகம் என்று சொல்வதில்?
.jpg?part=0.2)


--You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
தமிழ்ச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை நான்காகக் குறிப்பிடும் அவையாவன
ஆயினும் ‘அறிவு ஏற்படுவது’, ‘அறியாமை இரிவது’ என்னும் epistemological moments இவற்றைக் கருத்தில் கொண்டு, (‘போதோதயம்’, போதகத்வம், ’அஞ்ஞான பா4தம்’ ஆகியவற்றை மனத்தில் கொண்டு) நோக்கினீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ......................
ஏன் இந்தக் ’கொலைவெறி’, :-)
நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha?
..... அதுவும் ராமன்! புத்தர் ஒரு அவதாரம்! ராமன் புத்தரைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளையா பயன்படுத்துவது?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சரி. ஏன் இவ்வாறு புத்தகப் படிப்பையும், அறிவு வாதத்தையும் இவர்கள் எரிச்சல் அடைந்து கண்டிக்கின்றனர் என்று பார்த்தால்.......
”எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்களை மறவாமல் இருப்பதினால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான்.”-- பீஷ்மர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
பாராயணம் பண்ணுவதும், படிப்பதும் ஒன்றாகிவிடுமா?பாராயணம் பண்ணுகிறவருக்கு அது ஒரு சடங்கு. பாராயணம் பண்ணுவதால் இந்தக் காரியம் நடக்கும்; அந்தக் காரியம் நடக்கும்; ஏதாவது காரியம் பலிதமாகும் என்ற நூலுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்தாம் முக்கியம்.இல்லாவிட்டால் யோசித்துப் பாருங்கள் - ஒரு நூலில் இன்னார் எழுதினார், இன்னார் பதிப்பித்தார் என்று போட்டிருக்கும். எந்த புத்திசாலியாவது நூலைப் படிக்கும் போது”எழுதியவர் இன்னார்நூலைப் பதிப்பித்தவர் இந்தப் பதிப்பகத்தார்அட்ரஸ் - இன்ன தெரு இன்ன இலக்கம், இந்த ஊர் இன்ன பின் கோட்விலை விவரம் இத்தனை ரூபாய்இந்த அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. ஃபோட்டோ ஆப்செட், டெமி ஆக்டேவோ, ”இப்படி ஒன்று விடாமல் படித்தார் என்றால் சரி ஒன்றும் புரியாத ஆள் பாவம், கண்ணில் கண்டதை மேய்ந்து கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருக்கும்.ஆனால், (மிகச் சிறுபான்மை உண்மையான விதவான்களைத் தவிர), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கிரந்தங்களைப் பாராயணம் பண்ணுகிறவர்களைப் பாருங்கள். கிட்டத்தட்ட இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள்.ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய:இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும்.மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும்.ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.ஸ்ரீபகவத் கீதை என்னும் உபநிஷத்தாகிய பிரம்ம வித்யையில், கீதை என்னும் யோக சாத்திரத்தில், ஸ்ரீகிருஷ்ண அர்ஜுனர்களிடையே நடந்த உரையாடலில், விபூதி யோகம் என்னும் பெயர் பெற்ற பத்தாவது அத்யாயம் இதுவாகும்.இந்தக் காலத்துல தலைப்பு கொடுத்து பேஜ் நம்பர் போட்டு முன்னாடி பொருளடக்கமும் கொடுத்துட்டா கதை முடிஞ்சுது. அந்தக் காலத்துல நெட்டுருப் பண்ணதால நினைவுல வைக்க வேண்டித் திருப்பிச் சொன்னாங்க.ஆனால் பாராயணம் பண்ணுகிறவருக்கு அதெல்லாம் கவலையில்லை. அங்கதான் விசேஷ சக்தி இருக்கிறதாக நினைத்துக்கொண்டு, அப்படி ஆடம்பரமா படிச்சார்னா அதனோட மகிமையே தனி! ஆனால் பொருள் மாத்திரம் கேட்கக் கூடாது. அது வேற கதை.
ஆனால் படிப்பு என்பதன் வழியே வேறு.நமது மகத்தான மரபுகளில் படிப்பு என்பது மிகச் சிறிய வட்டங்களில்தான் நடைபெற்றிருக்கிறது.பெரும்பாலும் பாராயணம்தான்.முதலில் சம்ஸ்கிருதத்தில் பாராயணம். அப்புறம் தமிழில், எந்த மொழியாய் இருந்தாலும் சரி பாராயணம்தான். இவ்வளவு நாள் ஓட வேண்டும். அதான் கணக்கு. காரிய சித்திக்கு அது போதாதோ?***
ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய:இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும்.மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும்.ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.