On Saturday, September 28, 2013 9:32:19 PM UTC-7, DEV RAJ wrote:
On Sunday, 29 September 2013 01:13:20 UTC+5:30, N. Ganesan wrote:
தமிழின் சுரம் ஸ்வரம் வடமொழியில் ஆகிறது.
சங்க இலக்கியம் சுரம் எனும் சொல்லை எப்பொருளில் சொல்கிறது ?
பிற இலக்கியங்களில் வடசொற் கலப்பு மிகுதி என்பதை
அறிஞர்கள் ஒருமனத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புண்டரிகம், பங்கயம் அவ்வகை சேர்ந்த சொற்கள்.
புடகம்/புண்டரிகம் (< புள்-), அரவிந்தம் தமிழ்/த்ராவிடச் சொற்கள் - வடமொழி பெற்றவை.
சுரம் - தமிழில் இருவகையாகப் பிறந்துள்ளது.
(1) சுரசுர/சரசர - அநுகரணவோசைச் சொல் (ideophone).
இது சுரை (துளை) உள்ள இயற்கைப் பொருள்களில் உருவாக்கும்
hissing, humming ஓசையைக் குறிக்கத் தமிழிலும், பிற இந்திய
மொழிகளில் உள்ளது. சுரம். இதிலிருந்து வடமொழி
உருவக்கும் சொல்: ஸுரம் > ஸ்வரம். ஏழு சுரம் > சப்த ஸ்வரம்,
வேத ஸ்வரம்,...
சுள்ளி, சூள்ளை, சூடு உறவுடையது சுரீர், சூரியன் - வெம்மையைக் குறிக்கும்
சொற்கள். -ள்-/-ர்- உறவுண்டு: உ-ம்: காளி/காரி, ஆளத்தி/ஆரத்தி,
நாளிகேரம்/நாரிகேரம் (நாளம்:நார்), நாள்- ‘கருமை’ நாளணன்:நாரணன் ‘விஷ்ணு < விண்ணு’.
சுள்ளி சுரம் ‘பாலை’. இது ஜுரம் என்றாகி ஜ்வரம் என்று வடமொழி செய்துள்ளது.
-ர்-/-ல்- திரிபு ஜ்வரத்திலிருந்து ஜ்வலித்தல், ஜ்வாலா, ... என்று சுள்-/சுரம் ‘வெம்மை’
த்ராவிடச் சொல்லை வடமொழி விரித்துள்ளது. சுவடு:சோடு > ஜோடி, ஜோடனை
ஆதல் போல், சுரம் > ஜுரம் > ஜ்வரம்.
ஏதோ அடிப்படை ஸம்ஸ்கிருத இலக்கணத்தில்
ஷட்ஜம் என்னும் சுரம் பற்றி இருப்பதாக எழுதுகிறீர்கள்.
எந்த இலக்கணம்?
ஸமாஸம் இலக்கணம் இல்லையா ?
ஸமாஸம் இலக்கணம் இருக்கிறது: காம்பௌண்ட்.
ஏன் ஷட்ஜம் என்ற பெயர்? என்பதே ஆய்வுக் கேள்வி.
வெறும் வடமொழி இலக்கணம் மாத்திரம் பார்த்தால் இதற்கு விடை கிடைப்பதில்லை.
ஸ ரி க ம ப த நி - முதலெழுத்தாக ஒரு சொல்லைத் தேடியுள்ளனர்.
த என்பது தைவதம். என்ன பொருள்? என்பது தெளிவில்லை என்கின்றனர்.
அதே போல், ஸ என்பதற்கு ஷ என்றாக்கி ஷட்ஜம் என்றனர்.
ஸ சுரமா? ம சுரமா? எது முதற்சுரம் - ஒரு நல்ல கட்டுரை:
ச என்னும் சுரம் 6 இடங்களில் (=தானங்களில்) பிறப்பதில்லையே.
ஆனால், சார்ங்கதேவரும், அதனைப் பின்பற்றி தியாகையரும் (சோபில்லு சப்தஸ்வர ...)
சொல்வது சம்ஸ்கிருத அகராதி (மோனியர்-வில்லியம்ஸ்) தருகிறது.
தமிழில் பரவலாக “குரல்” என்ற கலைச்சொல்லை இசைக்கு, இசைக்கருவிகளும்,
மக்கள் மிடறும் எழுப்பும் சுரமாக ஏராளமான இலக்கியங்கள் சங்க காலத்தில்
இருந்தே பதிவு செய்துள்ளன (பார்க்க: நா. மம்மது, தமிழிசைப் பேரகராதி).
இந்த ‘குரல்’ என்னும் டெக்னிக்கல் சொல்லை தமிழிசைச் சுரத்தின் சொல்லை
சார்ங்கதேவர் ஷட்ஜம் என்று மொழிபெயர்த்து விளக்கம் தந்துள்ளார்.
அதாவது 6 தானங்களில் மனிதன் குரல் எழும்புகிறது. எனவே,
குரல் என்னும் இசைச் சுரம் ஷட்ஜம் என்று பெயர் தருகிறார்கள்.
அதாவது ‘குரல்’ 6 இடங்களில் மனிதன் முகத்தில் தோன்றுதலைச்
சொல்லியுள்ளனர். குரல் என்னும் வார்த்தை > ஷட்ஜம் என்றாகியுள்ளது.
அது ஸ-வுக்கு அருகே உள்ள ஷ என்னும் நாவளை ஒலி ஆகியிருக்கிறது.
ஸ ரி க ம ப த நி எல்லாவற்றுக்கும் அவற்றை முதல் எழுத்தாகக் கொண்ட
பெயர்கள் சுரங்களுக்கு அமைத்துள்ளார் சார்ங்கதேவர்.
தமிழின் சுரம் > ஸ்வரம், குரல் > ஷட்ஜம் (loan translation).
நா. கணேசன்