இந்தியப் பார்வையில் செவ்வாய்

4 views
Skip to first unread message

Pandian R

unread,
Aug 15, 2012, 1:21:58 AM8/15/12
to tamil...@googlegroups.com
எங்கூட்டு மச்சானும் கச்சேரிக்கிப் போகப்போறான்.....

Mars Orbiter Missionக்கு சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனை இன்றைய 66வது சுதந்திர தின விழாவில் பிரதமர் அறிவித்திருக்கிறார். ஏனைய நாடுகளின் சாகசத்தைப் பார்த்து ஏங்கிப் போயிருந்த நமக்கு சந்திரயான் செயல்திட்டம் நமக்கு ஆர்வத்தை அளித்தது. இந்த செயல்திட்டம் உலக வல்லரசாக நம்மை நாம் அறிவித்துக்கொள்ள மத்திய அரசாங்கத்திற்கு உதவினாலும் இயற்பியல் மாணவர்களுக்கு அது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் வியப்பில்லை.

Inline image 3

60களில் தொடங்கி நம் நாட்டிற்குப் பெறுமை தரும் விதமாக வளர்ந்து வந்த ISRO உலக நாடுகளின் தடைகள் காரணமாகவும், மோகம் தரும் கணினி அறிவியல் பெரும்பாலான பொறியாளர்களை வசீகரித்துவிட்ட காரணத்தினாலும் தற்காலத்தில் தொய்வடைந்து வருகிறது. வானவியல் ஆராய்ச்சி பந்தயத்தில் மிகவும் பின்தங்கிவிட்டோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பந்தயத்தில் ஜெயிக்கவேண்டும் என்பதில்லை ஆனால் நமக்கான இடத்தை இழக்காதிருப்பது நல்ல வானவியல் அறிஞர்களைத் தக்கவைக்க உதவும். ஆராய்ச்சிப் படிப்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

கிட்டத்தட்ட செயற்கைக் கோள்களை வான்வெளிக்கு அனுப்பும் ஒரு ஆம்னி பேருந்து நிறுவனமாக ISRO ஆகிவிடுமோ என்கிற பயம் சமீபத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் அது சார்ந்த விஞ்ஞானிகளின் தெருச்சண்டை மற்றும் அரசியல் வெளிவந்த போது இருந்தது.  அதை விடுத்து சந்திரயானைத் தொடங்கி செவ்வாய்க்கு நம் அணி போயிருப்பது நல்ல முன்னேற்றம். இன்னும் வேகம் மற்றும் உந்துதல் தேவை.

நிலவில் தண்ணீர் தடயங்கள் இருக்கிறது என்பதை தற்கொலை செய்து கொண்டு நிரூபித்த சந்திரயானின் கடைசி ரிசல்டை விட அது நிலவைச் சென்றடைந்த பாதை என்பது மிகுந்த சவால் வாய்ந்தது. திரில்லிங் கதை படிப்பதை விட சுவையானது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய நமது மக்கள் பாராட்டுக்குரியவர்களே.
Inline image 2

மேலும் அதையே மேம்படுத்தி தற்கொலை ராக்கெட்டாக அல்லாமல் அதை இன்னும் மேம்படுத்தவேண்டும். நிலவில் வெற்றி நடை போட ஒரு ஓடத்தைத் தயார் செய்ய வேண்டும். விண்வெளி ஆராய்சிக் கூடத்திற்கு ஆட்களை அனுப்ப சீனா ஆரம்பித்துவிட்ட நிலையில் அரசியல் ரீதியாகவும் அந்த பலத்தைப் பெற்றாகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

இந்த Mars Orbiter Mission மூலம் செவ்வாய்க்கு ஒரு செயற்கைக் கோளை அனுப்ப இருக்கின்றனர் நமது அறிஞர் பெருமக்கள். செவ்வாய்க்கு உயரே 100 கிமீக்குள்ளாக இந்த செயற்கைக் கோளை நிலை நிறுத்துகிறார்களாம். பருவநிலை, புவியியல் அமைப்பு, கிரகம் உருவான கதை என்று பலவற்றை ஆராய இந்த செயற்கைக்கோள் உதவும். 450 கோடியைத் தொடும் இந்த செயல்திட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது. சரித்திரகால பயண நாயகன் PSLV இதைத் தூக்கிச் செல்கிறது.

Inline image 1

பிறப்பு கால இறப்பு - நோய் தடுப்பு - ஊட்டச்சத்து குறைவு என்று அத்தியாவசிய தேவைகள் இருக்கையில் இந்த செயல்திட்டம் அவசியமில்லை என்கிற கூற்றை ஏற்பதாயில்லை. இதே 450 கோடியை இந்த செயல்திட்டத்துக்குக் கொடுத்தாலும் ஊழல் என்கிற படித்த பாடமே திரும்ப பாடமாய் கிடைக்கும். புதிதாய் ஒரு பாடம் படிப்போம். இந்தியப் பார்வையில் செவ்வாய்.

Murugapandian Ramaiah
Twitter: @pandianr79
L.in: http://in.linkedin.com/pub/murugapandian-ramaiah/17/aa7/224
---------------------------------------------------
*Free* software is a matter of liberty not price. You should think of "free" as in "free speech".
Proud user of Ubuntu 12.04 - X64





Reply all
Reply to author
Forward
0 new messages