How do you translate the word "non-fiction" into Tamil

159 views
Skip to first unread message

Mani Manivannan

unread,
Jul 23, 2013, 12:36:39 AM7/23/13
to tamilmanram

அண்மைக்காலத்தில் "non-fiction" என்பதை அபுனைவு என்று எழுதுகிறார்கள். இதை எப்படி உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புனைவு என்பதில் பகரம் வல்லொலி.  அபுனைவு என்பது தமிழாகவே தெரியவில்லை.  இருப்பினும் அதை abunaivu என்று மெலிந்து ஒலிக்கத்தான் தோன்றுகிறது.  அதை அ-புனைவு என்று படிப்பதும் மரபல்ல.

தமிழில் எதிர்மறைகள் பின்னொட்டு வழியாகத்தான் வருபவை.  சென்னைப் பல்கலைப் பேரகராதியில் “அபு” என்று தொடங்கும் சொற்கள் எவையும் இல்லை என்பதே இதன் தொன்மையான மரபைக் காட்டுகிறது.

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார்.

பிராணிக்கு எதிர்மறை அபிராணியா?  அதை அப்பிராணி என்றா சொல்வார்கள்? அப்படிச் சொன்னால், அதை அந்தப் பிராணி என்றல்லவா புரிந்து கொள்ள நேரிடும்?

Non-Congress, non-Communist என்பவற்றை அகாங்கிரஸ் கட்சி, அகம்யூனிஸ்ட் என்று சொன்னால் தலை சுற்றவில்லையா? Non-payment க்கு அகட்டணம் என்று சொல்லிப்பாருங்கள்!

புனைவுக்கு எதிர்ச்சொல்லாக புனைவிலி என்று ஒரு ஆட்சியைப் பார்த்தேன். தாழ்வில்லை.  

பெயர்ச்சொல்லுக்கு முன் அ- முன்னொட்டை இட்டு அதை எதிர்மறையாக மாற்றுவது ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் இலக்கண முறையாக இருக்கலாம்.  இரவற்சொற்களில் கூட இவை எடுத்தாளப் படலாம்.  ஆனால் தமிழ்ச்சொல்லுக்கு இவை பொருந்துமா?

இலக்கணம் மாறுகிறதே!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

Hari Krishnan

unread,
Jul 23, 2013, 1:05:10 AM7/23/13
to தமிழ் மன்றம்

2013/7/23 Mani Manivannan <mmani...@gmail.com>

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார்.

அப்ராமணர் என்பது அதன் உச்சரிப்பு.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Elangovan N

unread,
Jul 23, 2013, 1:26:08 AM7/23/13
to tamilmanram
"அல்" முன்னொட்டைக் கருதலாம்.
அல்-புனைவு என்பது பொருத்தமா? என்பது ஒருபுறமிருக்க, இதற்கு என்ன முறை என்றறிய ஆவல்.
புனைவிலி உச்சரிக்க எளிதாக இருக்கிறது. புனைவறு நூல் என்று எழுத நான் முற்படுவேன்.

"No Parking" என்பதை எப்படித் தமிழில் சொல்வது என்று ஒருவர் கேட்டார். நான் அல்-நிறுத்தம் என்று சொன்னேன். 
பயந்து போய் ஓடிவிட்டார் ;-))) பின்னர் அவர் என்னை பயமுறுத்தும் சொற்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
"நிறுத்தம்" என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?

அன்புடன்
நாக.இளங்கோவன்

2013/7/23 Mani Manivannan <mmani...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
C.R. Selvakumar

unread,
Jul 23, 2013, 1:30:04 AM7/23/13
to தமிழ் மன்றம்
//"நிறுத்தம்" என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?//

நிறுத்தாவிடம்

2013/7/23 Elangovan N <nela...@gmail.com>

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Hari Krishnan

unread,
Jul 23, 2013, 1:45:51 AM7/23/13
to தமிழ் மன்றம்

2013/7/23 Elangovan N <nela...@gmail.com>

"No Parking" என்பதை எப்படித் தமிழில் சொல்வது என்று ஒருவர் கேட்டார். நான் அல்-நிறுத்தம் என்று சொன்னேன். 
பயந்து போய் ஓடிவிட்டார் ;-))) பின்னர் அவர் என்னை பயமுறுத்தும் சொற்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
"நிறுத்தம்" என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?

வண்டியை நிறுத்தாதீர் என்று நேரடியாகச் சொல்வது எளிது என நினைக்கிறேன்.

சென்னை அண்ணா சாலையில் தற்போது அலங்கார் தியேட்டர் இருக்குமிடத்தில் (அறுபதுகளின் தொடக்கதில்) நேரூஸ் கஃபே என்றோ, மை காஃபி பார் என்றோ ஒன்று இருந்தது.  மாடிப் படிக்கட்டில் ஏறும்போது, படிக்கட்டு திரும்பும் இடத்தில் ஒரு பெரிய நிலைக் கண்ணாடியை வைத்திருந்தார்கள்.  கண்ணாடியைப் பார்க்கும் யாருக்கும் உடனே, சீப்பை எடுத்துத் தலை சீவத்தான் தோன்றும்  (அதாவது, அந்தக் காலத்தில் அப்படி என்றேன்!).  ஆகவே, நிலைக் கண்ணாடிக்கு அருகில் Don't Comb என்று எழுதி வைத்தார்கள்.  அவசரத்தில் Don't Come என்று படித்துவிட்டு, பலர் மாடிப் பகுதி சேவைக்குப் போவது குறைந்து விட்டது.  அதன் பிறகு, ‘இங்கே வாராதீர்கள்’ என்று எழுதி வைத்தார்கள்!  என்ன பயன்!  பொருளில் ஒரு மாற்றமுமில்லையே!   இது இன்னமும் தெள்ளத் தெளிவாக Don't Come என்றல்லவா சொல்கிறது! தலை வாராதீர்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

நேஷனல் ஜியோக்ரஃபிக்குகக்காக மொழிபெயர்க்கும் சமயத்தில் சந்தடி சாக்கில் ஆங்காங்கே புதுச் சொல்லாக்கங்களை நுழைத்துவிடுவேன்.  Parking Lot என்பதை வாகன வெளி என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.  Audio Quality Auditம் இதை ஏற்றுக் கொண்டுவிட்டது. :)

அபுனைவு, எனக்குத் தெரிந்து சுமார் இருபதாண்டுகளாக சிறு பத்திரிகைகளில் வெளிவந்து, ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் பரவலாகவும் புழங்குகிறது. புழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினமான வேலை.  உள்ளதை ஏற்றுக் கொள்ளலாம்.  (எனக்கும் அபுனைவு ஒவ்வாமையாகத்தான் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.)

நிறுத்தம் என்பதன் எதிர்ப்பதத்தை திரு செல்வகுமார் அழகுறச் சொல்லியிருக்கிறார்.

iraamaki

unread,
Jul 23, 2013, 2:02:45 AM7/23/13
to tamil...@googlegroups.com
அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஏனென்றால் 
 
”அல்வழி யெல்லாம் உறழென மொழிப” - தொல்.எழுத்து.புள்ளி 73;
“அறனை நினைப்பானை யல்பொருள் அஞ்சும்” - திரிகடுகம் 72.
“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர்கோன் - திவ். திருப்பல்.11. 
”அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்” - மணிமே. 16:89
”அழுக்காற்றின் அல்லவை செய்யார்” - குறள் 164
“அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும்” - தொல்.பொருள்.செய்.183. பேரா.உரை
   
என்ற முன்னோர் காட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சிந்தனையிற் தோய்ந்தே ”அத்வைதம்” என்பதற்கு ”அல்லிருமை” என்ற இணைச்சொல்லை நான் ஏற்கனவே பரிந்துரைத்தேன்.
 
புனைவிலி என்பது புனைவே இல்லாதது (no imagination) என்றாகும்; அதனால் “முற்றிலும் உள்ளமை (totally real) என்ற பொருட்பாடு வந்துவிடும். Non-fiction என்பது இதுவல்ல. அது கதையல்லாதது; எனவே வேறொரு வகையைக் குறிக்கும்.
 
இல்ல, அல்ல என்ற இருவகைக் கருத்துக்களுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை இங்கு நுண்ணி எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லுதலும், அல்லுதலும் வேறு வேறானவை.
 
அன்புடன்,
இராம.கி.
.

C.R. Selvakumar

unread,
Jul 23, 2013, 2:10:27 AM7/23/13
to தமிழ் மன்றம்
தமிழில் இப்படி அபுனைவு என்பது கசப்பாகவே உள்ளது.

ஆனால் தமிழில் அல்வழி (வேற்றுமையல்லாத வழி, தகாத வழி)
அல்வழக்கு, 
அல்லியன் (குழுவைப் பிரிந்த யானை), 
அல்லிப்பிஞ்சு (பூவிழாத பிஞ்சு )
அல்லும்பகலும் என்னும் சொல்லாட்சியில் அல் என்பது இரவு (கதிரவனின் பகல்
வெள்ச்சம் இல்லாதது).  
இனும் பல சொற்கள் உள்ளன. ஆகவே அல் என்னும் முன்னொட்டுடன் வரும்
தமிழில். 

புனை என்பது தமிழில் வினையாகவும் பெயர்ச்சொல்லாகவும் வரும்.
புனைவு என்பது தேவை இல்லை. புனை என்றால் இட்டுக்கட்டுதல்.
புனைசுருட்டு என்றெல்லாமும் உண்டு.
புனைவிலி என்பது ஏற்கனவே உள்ல சொல் (இதன் பொருள் உபமானப்
பொருளாம்).
புனைவிலிநவிற்சியணி என்று உள்லதைப் பற்றிக்கூட கூருகின்றார்கள்.

ஆகவே புனைவு-அல்புனை (fiction--non-fiction) அல்லது புனை-அல்புனை
எனலாம் புனைவிலி என்றும் கட்டாய சொல்லலாம். 
நான் எழுதிய நூல் அல்புனை வகையில் சேரும் என்று சொல்லலாம்.
பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

"Harikirshnan" உங்கள் நன்மொழிக்கு மிக்க நன்றி ஐயா!

அன்புடன்
செல்வா

2013/7/23 Mani Manivannan <mmani...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Elangovan N

unread,
Jul 23, 2013, 10:15:55 AM7/23/13
to tamilmanram
Park என்ற சொல்,

Park = பூங்கா (சோலை)
Veh. Park = வாகன வெளி (திரு.அரி), நிறுத்தா இடம் (பேரா.செல்வா)
பெரிய வணிக/தொழில் கட்டிடங்களையும் Park என்கிறோம். காட்டாக
Tidel Park = டைடல் பூங்கா; என்று அழைக்கப் படுவதைச் சொல்லலாம்.

ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது இயல்புதான்.

ஆனால் டைடல் பூங்கா என்று அழைப்பது உண்மையில் சிரிப்பை வருவிக்கிறது.

நிறுத்தா இடம் என்பது பொருத்தமாக இருப்பது போல இருக்கிறது. ஆனால் சரியா என்பது ஐயமே.
Bus Stop = பேருந்து நிறுத்துமிடம். (நல்ல வேளை பேருந்து நிறுத்தா இடம் என்று ஒன்றும் புழக்கில் இல்லை.)

வாகனவெளி எனும்போது Closed Parking Lot, Open Parking Lot என்ற பயன்பாடு வரும்போது "வெளி" என்ற சொல்
இடரக்கூடும். Open Parking Lot என்பதை வாகன வெளி என்றே கூறலாம் என்றாலும், Covered/Closed Car Park எனும்போது பொருந்துவது ஐயம்.

Park என்ற சொல்லுக்குள் ஒரு முறைமை இருக்கிறது.

அது பூங்கா என்றாலும், ஒத்த தொழில் சார் கட்டடங்களானாலும், ஊர்திகளுக்கான நிறுத்துமிடங்கள் என்றாலும் 
அவற்றில் ஒரு வரிசை முறை, அடுக்க முறை இருக்கின்றன. 

ஆகவே Park என்பதற்கு விதப்பான ஓர் சொல் தேவை என்று கருதுகிறேன்.

வாகனங்கள்/ஊர்திகள் நிறுத்துமிடங்களைப் பொருத்தவரை, எனக்கு,
மறைமலையடிகள் குதிரைகளைக் கட்டுமிடத்தை "குதிரைப் பந்தி" என்று சொல்வது நினைவுக்கு வருவதுண்டு.
ஊர்திப் பாத்தி, வாகனப் பாத்தி என்று நான் பயன்படுத்தியதுண்டு.
ஆனால் No-Park(ing) என்றால் எப்படிச் சொல்வது என்பதில் எனக்குக் குழப்பம் உண்டு.

ஒரு கொசுறுச் செய்தி:
கோவையில் ஒரு நிறுவனம் இடச்சிக்கனத்திற்காக, இராட்டினம் மாதிரி சீருந்துப் பாத்தி கட்டி விற்கிறார்கள்.
இராட்டினமேதான். சீருந்தை நிறுத்த வேண்டுமானால், காலியான பாத்தி வந்து நிற்கும். நமது வண்டியை அதில் விட்டு 
இறங்கிவிட்டால் இராட்டினம் மெல்ல சுற்றி மேலே போய்விடும். அடுத்த காலிப்பாத்தி தயாராக வந்து நிற்கும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2013/7/23 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

iraamaki

unread,
Jul 23, 2013, 10:58:59 AM7/23/13
to tamil...@googlegroups.com
12 ஆம் நூற்றாண்டுத் திருவாலவாய்ப் புராணத்தில் குதிரை செல்லும் வீதி வையாளி வீதி என்று சொல்லப் பெறும்.
குதிரைப் பந்தி என்பதும் அதே நூலிற் குதிரை நிறுத்தி வைக்கும் இடங் குறித்த சொல்லாகும். இவையிரண்டையும் நினைவிலிருந்து சொல்கிறேன். வேறு ஏதேனும் சொல்லிருக்கிறதா என்று மீண்டும் திருவாலவாய்ப் புராணம் படித்துச் சொல்கிறேன்.
 
எங்கள் ஊர்ப் பக்கம் முதலாம் கட்டு, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு என்று வீட்டின் வெவ்வேறு பகுதிகள் சொல்லப்படுவதையொட்டிக் கட்டுத்துறை என்ற சொல்லால் மாடுகள் கட்டப்படும் இடம் சொல்லப்படும். அங்குதான் அவற்றை நிறுத்திக் கவனிப்பார்கள். வைக்கோலும், கழுநீரும் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அடுத்த நாள் காலையில் சாணியள்ளுவதும் அங்கிருந்து தான். பொதுவாக எல்லா வீட்டு விலங்குகளும் அங்கே தான் கட்டப்பெறும். எங்கள் வீட்டிலேயே கட்டுத்துறை இருந்தது.
 
கட்டுத்துறை என்பதை இன்று வண்டிகளை/உந்துகளை நிறுத்திவைப்பதற்கும் பயன்படுத்தலாம்.. நிறுத்துறை/நிறுத்திடம் என்றுங் கூட எண்ணிப் பார்க்கலாம்.
 
கட்டுத்துறை/நிறுத்துறை/நிறுத்திடம் அல்ல என்பது no parking என்பதற்கு உகந்ததாகலாம்.
 
அன்புடன்,
இராம.கி.      

C.R. Selvakumar

unread,
Jul 23, 2013, 11:02:45 AM7/23/13
to தமிழ் மன்றம்

2013/7/23 Elangovan N <nela...@gmail.com>

Park என்ற சொல்,

Park = பூங்கா (சோலை)
Veh. Park = வாகன வெளி (திரு.அரி), நிறுத்தா இடம் (பேரா.செல்வா)
பெரிய வணிக/தொழில் கட்டிடங்களையும் Park என்கிறோம். காட்டாக
Tidel Park = டைடல் பூங்கா; என்று அழைக்கப் படுவதைச் சொல்லலாம்.

National Park போன்ற சொல்லாட்சிச் சூழல்களில் நான்  புரவகம் என்று பயன்படுத்துகின்றேன்
தானுந்து/மகிழுந்து போன்றவற்றை நிறுத்தி வைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை
உந்து ஒதுக்கிடம்  அல்லது உந்து ஒதுக்கு எனலாம். பாத்தல் என்பது பகுத்தல்தான்
எனவே நீங்கள் சொல்லும்படி பாத்தி என்று சொல்லலாம்,. பாத்தூண் என்றால்
பகுத்து உண்ணுதல் அல்லவா?  திருவள்ளுவர் அழகாகச் சொல்லுவாரே:

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

அப்படி  வெற்றிடம் பார்த்து  நிறுத்தலாம்.  பாத்திடம் (பகுத்து விடப்பட்ட இடம் என்றும்
கூறலாம்). தானுந்து மகிழுந்துக்கான பாத்திடம். பகுவது பாக்கு என்றால் பாக்கிடம் என்றும்
சொல்லலாம் :)  பாக்கம், பாக்கை ஊர்/இடப் பெயர்கள்தான்.  எனவே பாக்கிடம் என்பதும்
பொருந்தும்.  

ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது இயல்புதான்.

ஆனால் டைடல் பூங்கா என்று அழைப்பது உண்மையில் சிரிப்பை வருவிக்கிறது.

தைடல் வளாகம் என்பது சரியான சொல்லாட்சிகளுள் ஒன்று.

நிறுத்தா இடம் என்பது பொருத்தமாக இருப்பது போல இருக்கிறது. ஆனால் சரியா என்பது ஐயமே.
Bus Stop = பேருந்து நிறுத்துமிடம். (நல்ல வேளை பேருந்து நிறுத்தா இடம் என்று ஒன்றும் புழக்கில் இல்லை.)

வாகனவெளி எனும்போது Closed Parking Lot, Open Parking Lot என்ற பயன்பாடு வரும்போது "வெளி" என்ற சொல்
இடரக்கூடும். Open Parking Lot என்பதை வாகன வெளி என்றே கூறலாம் என்றாலும், Covered/Closed Car Park எனும்போது பொருந்துவது ஐயம்.

Park என்ற சொல்லுக்குள் ஒரு முறைமை இருக்கிறது.

இல்லை என்பது என் கருத்து :)  We park the car in the drive way, but drive the car in parkway
புகழ்பெற்ற வாசகம் (இசுடீபன் பிங்க்கர் முதலில் கூறினார் என்று நினைக்கின்றேன், 
Language Instinct?)

தமிழில் பார்க்கு என்பதற்கு ஒத்துக்கிடம் என்பது பொருளாகக் கொள்ளலாம்.
ஒதுக்கப்பட்டது என்றும் கொள்லலாம், ஆனால் இப்பொருளை எல்லா இடங்களிலும்
தமிழ்ச்சூழலில் பயன்படுத்த முடியாது. எப்பொழுது ஒரு மொழியில் ஒரு சொல் சுட்டும்
எல்லாப் பொருள்களும், எல்லா இடங்களிலும் பயிலும் பயன்பாடுகளும் இன்னொரு
மொழியில் இயல்பாகவோ பொருத்தமாகவோ இராது என்பது பொது விதி. 
ஆங்கிலத்தில் sea shore, river bank என்பது வழக்கம் ஆனால்  sea bank or river shore 
பொதுவாகச் சொல்லுவதில்லை. தமிழில் கடற்கரை, ஆற்றங்கரை. எனவே
கரை என்பதை ஆங்கிலத்தில் சோ^ர் என்றோ பே'ங்க்கு என்றோ. ஒரே
சொல்லால் குறிக்க இயலாது. தமிழில் கரி என்றால் அடுப்புக்கரி, யானை, சாட்சி
போன்று பல பொருள்கள் இருக்கும், அதனை ஆங்கிலத்தில் ஒரே சொல்லால்
குறிக்கமுடியாது.  எனவே இப்படியான ஒரு சொல்லுக்கு ஒருசொல்தான் என்னும்
தேடல் பிழையானது. 

அது பூங்கா என்றாலும், ஒத்த தொழில் சார் கட்டடங்களானாலும், ஊர்திகளுக்கான நிறுத்துமிடங்கள் என்றாலும் 
அவற்றில் ஒரு வரிசை முறை, அடுக்க முறை இருக்கின்றன. 

இல்லை என்பது என் கருத்து.  மேலே பார்க்கவும். 

ஆகவே Park என்பதற்கு விதப்பான ஓர் சொல் தேவை என்று கருதுகிறேன்.

சூழலுக்கு ஏற்ற  நல்லதிரு சொல்லை நாம் நம் தேவைக்காகத் தேர்ந்து ஆளலாம். பிறர்
பார்க்கு என்கின்றார்கள், அன்லாகெ (Anlage) என்கிறார்கள் என்று பார்த்து
எதுவும் தமிழில் எழுத முற்படுதல் வேண்டாம். 

வாகனங்கள்/ஊர்திகள் நிறுத்துமிடங்களைப் பொருத்தவரை, எனக்கு,
மறைமலையடிகள் குதிரைகளைக் கட்டுமிடத்தை "குதிரைப் பந்தி" என்று சொல்வது நினைவுக்கு வருவதுண்டு.
ஊர்திப் பாத்தி, வாகனப் பாத்தி என்று நான் பயன்படுத்தியதுண்டு.
ஆனால் No-Park(ing) என்றால் எப்படிச் சொல்வது என்பதில் எனக்குக் குழப்பம் உண்டு.

பாத்திடம் (பாதுகாப்பாக  பகுத்து ஒதுக்கப்பட்ட இடம் ) எனலாம்.

ஒரு கொசுறுச் செய்தி:
கோவையில் ஒரு நிறுவனம் இடச்சிக்கனத்திற்காக, இராட்டினம் மாதிரி சீருந்துப் பாத்தி கட்டி விற்கிறார்கள்.
இராட்டினமேதான். சீருந்தை நிறுத்த வேண்டுமானால், காலியான பாத்தி வந்து நிற்கும். நமது வண்டியை அதில் விட்டு 
இறங்கிவிட்டால் இராட்டினம் மெல்ல சுற்றி மேலே போய்விடும். அடுத்த காலிப்பாத்தி தயாராக வந்து நிற்கும்.

ஓ! எங்கே?

அன்புடன்
செல்வா 

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2013, 8:32:08 PM7/24/13
to tamil...@googlegroups.com

23 ஜூலை, 2013 1:30 AM அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

//"நிறுத்தம்" என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?//

நிறுத்தாவிடம்

நோ ஸ்டாப்பிங் என்பதற்கு?

அன்மொழித்தொகை என ஒன்றும் இருக்கு

 நிறுத்தம் அல்ல. நிறுத்திடம் அல்ல

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Mani Manivannan

unread,
Jul 28, 2013, 8:46:48 AM7/28/13
to tamilmanram
இந்த இழையின் பரிந்துரையை என் வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.  காண்க:

http://kural.blogspot.in/2013/07/blog-post_28.html

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

2013/7/23 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Mani Manivannan

unread,
Jul 28, 2013, 1:19:19 PM7/28/13
to tamilmanram
இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டில் ஒரு நற்செய்தி:

Indian has left a new comment on your post "”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?": 

இராம.கி அவர்களின் சொல்லாக்கங்களை தமிழ்ச் சொல்லாக்கம் என்ற வலைத்தளத்தில் தொகுத்துள்ளேன். இதுவரை தொகுத்த சொற்களின் எண்ணிக்கை : 1889. 

============

தாம் ஆக்கிய சொற்களின் பட்டியல் தம்மிடமே முழுதும் இல்லை என்று இராமகி ஒரு முறை எழுதியிருந்ததாக நினை.  இணையத்தில் யாராவது இப்படித் தொகுத்துவிடும் நல்ல வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

2013/7/28 Mani Manivannan <mmani...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jul 28, 2013, 2:16:45 PM7/28/13
to tamil...@googlegroups.com, vallamai, mintamil, vannan vannan
Non-fiction என்பதைத் தமிழில் "புனைவின்மை" என்று சொல்லலாம்.

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++++++++++

2013/7/23 Mani Manivannan <mmani...@gmail.com>

--

வேந்தன் அரசு

unread,
Jul 28, 2013, 9:27:12 PM7/28/13
to tamil...@googlegroups.com

28 ஜூலை, 2013 1:19 PM அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:

இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டில் ஒரு நற்செய்தி:

Indian has left a new comment on your post "”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?": 

இராம.கி அவர்களின் சொல்லாக்கங்களை தமிழ்ச் சொல்லாக்கம் என்ற வலைத்தளத்தில் தொகுத்துள்ளேன். இதுவரை தொகுத்த சொற்களின் எண்ணிக்கை : 1889. 

>>அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். 

அல்ப்புனைவு,  அல்-புனைவு அற்புனைவு என்றுதானே சொல்லணூம்

இல்லெனில் albunaivu என்று  பலுக்கணும்  பல்பு,  ஆல்பம்,  சால்பு

கல்+ பாறை= கற்பாறை
கல்+கண்டு கற்கண்டு
 பல்+ பசை = பற்பசை
--

iraamaki

unread,
Jul 28, 2013, 9:38:04 PM7/28/13
to tamil...@googlegroups.com
உண்மைதான் புணர்ச்சி பழகி அற்புனைவு ஆகும்.
 
அன்புடன்,
இராம.கி.

Sent: Monday, July 29, 2013 6:57 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] How do you translate the word "non-fiction" into Tamil

Reply all
Reply to author
Forward
0 new messages