‘ச’ என்னும் எழுத்து மொழி முதலில் வராது என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் ‘சங்கம்’ என்பதையே ‘கழகம்’ என்பர். ஆனால், ‘ச’ மொழி முதலில் வரும். (பேரா.சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி நூலில் விளக்கி உள்ளார்.) இந்த அடிப்படையில் ‘சங்கிலி’ தமிழ்ச்சொல் அல்ல என எண்ணுகின்றனர். சங்கம் என்பது இணைந்து இருப்பதைக் குறிக்கிறது. அதுபோல் இணைத்து அமைக்கப்படுவன ‘சங்கிலி’ எனப்படுகின்றது. நுண்ணிய சங்கிலியே ‘தொடர்’ எனப்படுவது. “சங்கிலி நுண்தொடர்” (சிலப்பதிகாரம் 6.99) என்பதை விளக்கும் பொழுது சங்கிலி என்பது வைரச்சங்கிலி எனவும் நுண்தொடர் என்பது நுண்சங்கிலி எனவும் குறிக்கப்பெறுகின்றன. எனவே, நுண்சங்கிலியே தொடர் எனவும் கண்ணிகளை இணைக்கும் வகையில் அல்லது வளைவுகளை இணைக்கும் வகையில் செய்யப்படுவன சங்கிலி எனவும் கொள்ளலாம்.
சங்கிலி போல் அமைந்த பிரண்டை வகையானது சங்கிலிப்பிரண்டை எனவும் பின்னல் வகை சங்கிலிப் பின்னல் எனவும் குறிக்கப் பெறுகின்றன.
சங்கிலியால் இணைத்த கரண்டியுடன் கூடிய விளக்கு சங்கிலி வட்டகை எனப்படுகின்றது. சங்கிலி வடிவில் அமைந்த கழுத்தணி சங்கிலி வடம் எனப்படுகின்றது. தேர் இழுக்கும் இரும்புச் சங்கிலியும் சங்கிலி வடம் எனப்படுகின்றது.
நீரி ( நீர்வாழ் உயிரினமாகிய) சங்கு என்பதில் இருந்தே சங்கம் தோன்றியது.
பெருவிரல் நிமிர மற்ற நான்கு விரல்களும் வளைந்து சங்கு போல் தோற்ற மளிக்கும் முத்திரைக்குச் சங்கு என்றே பெயர்.
இலட்சம்கோடி எனப்படும் பேரெண் சங்கு/ சங்கம் எனப்படுகிறது. இவ்வாறு, சங்கின் அடிப்படையில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. சங்கிலி என்பது நில அளவை ஒன்றின் பெயர்; அதனை அளக்கப்பயன்படும் கருவியின் பெயரும் ஆகும்.
சங்கிலி இலிருந்து சங்கிலிப் பொறியை வேறுபடுத்துவதற்காக அதனை ‘இடங்கணிப் பொறி’ என்றனர்.
எனவே, சங்கிலியும் சங்கிலி அடிப்பிடையில் பிறந்த சொற்களும் தமிழ்ச் சொற்களே!
‘காலி’ என்னும் சொல் எப்பொருளில் அமைந்ததை அயற் சொல் என்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால், இதுவும் நல்ல அறிவியல் தமிழ்ச்சொல்லே. ஏனம் அல்லது கொள்கலனில் பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கும் பொழுது அதை வெற்றிடம் எனக் கூறக் கூடாது என்பதற்காகக் காற்று தவிர வேறு இல்லாதது என்னும் பொருளில் காற்றை உடையது என்றனர். இதுவே கால் +இ = காலி ஆகும். முக்காலி, நாற்காலி முதலான இடங்களில் வருவன உடலின் கால்பகுதி உறுப்பாக அமைந்த கால் என்பதன்அடிப்படையில் பிறந்த நல்ல தமிழ்ச் சொற்களே!
ஏமத்தின் பொருட்டுச் சேர்த்து வைப்பது சேர்மம் ஆகிச் சேமம் ஆனது. இதுவும் தமிழ்ச்சொல்லே. ஆய்ந்து பார்த்தால் பிறவும் தமிழ்ச்சொற்கள் என அறியலாம்.
அருளி அவர்கள் அயற் சொல்லகராதியில் பல தமிழ்ச்சொற்களை அயற் சொற்களாகக் காட்டியிருப்பார். ‘வருடை’ என்னும் ஓரையினைத் தொடக்கமாகக் கொண்ட ஆண்டு ‘வருடம்’ எனப்பட்டது. இதனை ‘வருசம்’ என்று சொல்லும் பழக்கம் வந்ததும் நம் சொல் அல்ல எனத் தூக்கி எறிகிறோம். நம் உடைமையை அடுத்தவன் உரிமைகோரும் பொழுது உரிமையை நிலைநாட்ட வேண்டுமே தவிர அதனைத் தாரை வார்க்கக்கூடாது. ஆனால், சொற்களைப் பொருத்தவரை தமிழ்ச்சொற்களை எல்லாம் அயற் சொற்கள என மயங்கிக் குழம்பி நிற்கின்றோம். ஆய்ந்து பார்த்தால் எல்லாச் சொற்களும் தமிழ் குறித்தனவே எனக் கண்டறியலாம்.
அன்புள்ள இளங்கோவன்,
திருவள்ளுவன் அவர்கள் பல நல்ல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
சங்கம், சங்கு, புலம்புரிச் சங்கம், வலம்புரிச் சங்கம், சங்க தருமன் ... ஆகிய வழக்கு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உண்டு; அதைத் திருவள்ளுவனும் எடுத்துச் சொல்லியிருந்தார். இந்தச் சொற்கள் குறிப்பவை: சங்குப் பூச்சி, எண்ணலளவையில் ஒரு குறியீடு, மக்கள் குழுமமாகக் கூடும் கூட்டம்.
இவற்றின் பொதுத்தன்மை என்ன? சங்குப் பூச்சியின் (சங்கின்) மேற்புறம் முள்ளு முள்ளான கூம்புகளோடு இருக்கும்; அதாவது, சமமான பரப்பில் ஓரிடத்தில் ஒன்று புடைத்து/துருத்திக்கொண்டிருப்பதுபோல. வளைகள் செய்யும்போதும் ஊதுசங்காகத் தயாரிக்கும்போதும் இந்தக் கூம்புகளை அறுத்து வழவழப்பாக்கிச் செய்வது வழக்கமாக இருந்திருக்கலாம்.
இந்தப் பொருளைச் “சங்கம்” என்ற சொல்லுக்கும் பொருத்திப் பார்க்கலாம். மக்கள் கூட்டத்தில் பலர் தம் வழியே போக, ஒரு சிலர்மட்டும் ஓரிடத்தில் திரளாகச் சேரும் அமைப்பு ‘சங்கம்,’ இல்லையா?
எண்ணலளவையில், ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் இடப்பட்ட ஓர் அடையாளக்குறியீடு (unit of measurement) சங்கம்.
நேராகப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் ஒரு முச்சந்தி வருவதானால், அந்தச் சந்தியே ‘சங்கம்’ என்று எடுத்துக்கொள்கிறேன்.
இதைக் கொஞ்சம் நீட்டித்து, “கணு” என்ற பொருளைப் பார்க்கலாம். கரும்பிலும் மூங்கிலும் பிற பயிர்களிலும் 'கணு' இருக்கு.
சங்கிலி
-------------
சங்கு + இலி == கணு இல்லாதது; இடையில் தடுப்போ துருத்தலோ இல்லாதது.
ஒரு வகைப்பட்ட வளையமே ஒன்றனுள் ஒன்று நுழைந்து பலவாகத் தொடர்ந்து வருவது சங்கிலித் தொடர். இதைப் பல பழைய உரோம, யவன விளக்குகளில் பார்க்கலாம். தேவையானால் படங்கள் ஒட்டிப் போடுகிறேன். இப்போதைய நம் ஊஞ்சல் சங்கிலியிலும் பார்க்கலாம்; புள்ளிக்கோலங்களிலும் பார்க்கலாம்; சங்கிலித் தையல் என்ற தையல் முறையிலும் பார்க்கலாம். இங்கே துருத்தி/புடைத்து நிற்கும் கணுக்கள் இல்லை, அதனால் அவை சங்கு + இலி.
குரல்வளையின் ஒரு பகுதி ‘சங்கு’ என்று குறிக்கப்படுகிறது. சில ஆண்களுக்கு அந்தப் பகுதி சற்றுப் புடைத்துப் பெரிதாகத் தோன்றும். சில பெண்களுக்குச் சங்குக்கழுத்து என்ற உவமையும் இதனால்தானோ?
சங்கிலி நுண்தொடர்
———————————————
"சங்கிலி நுண்தொடர்" என்ற சிலப்பதிகாரத் தொடர் சங்கிலி = தொடரி என்ற கருத்துக்கு ஆதாரம் அளிக்கவில்லை. ஒரே வடிவம் பலவாகத் தொடர்ந்து இருப்பதால் ‘தொடரி’ என்ற சொல் ‘சங்கிலி’ என்ற சொல்லுக்குப் பகரம் என்று எடுத்துக்கொண்டாலும் அது ‘சங்கிலி’ என்ற சொல்லின் அடிப்படைப் பொருளைச் சுட்டவில்லை.
“புலித்தொடர்” என்ற முல்லைப்பாட்டுச் சொல் (வரி 62) ‘சங்கிலி’ என்ற சொல்லைப் புழங்காதது காண்க.
எனவே சங்கிலி சங்கிலிதான்.
அயற்சொல்? தமிழ்ச்சொல்?
—————————————————
இந்த மாதிரி ஆய்வு என் அறிவுக்கு அப்பாற்பட்டது!!! அனுமான இயலிலும் ஊகம் செய்வதிலும் எனக்குத் தேர்ச்சி இல்லை! அதனால் … இது தமிழ்ச்சொல் இது அயற்சொல் என்று வரையறுக்க வரவில்லை.
சொல் வழக்காற்றைப் புரிந்துகொள்வதற்காக, தமிழ்ச்சொற்களுக்கு அடிப்படையான வேர் *சங்க்(+உ) என்று எடுத்துக்கொள்கிறேன்.
śaṅkuḥ என்ற செங்கிருதச் சொல்லின் பொருளையும் பார்க்கலாம்: http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.5.apte.2199628
ஏதோ ஓர் ஒப்புமை இருப்பது புலனாகிறது.
கொசுறு
—————
இங்கே சொல்லியிருக்கும் கருத்துகளை மேற்கொண்டு எண்ணிப்பார்க்க முயலவும்.
1. கெல்டிக் முடிச்சுகளுக்கும் (Celtic knots) சீன முடிச்சுகளுக்கும் (Chinese knots) வேறுபாடு உண்டு. முன்னது நம் புள்ளிக்கோலம் போன்றவை.
2. முடிச்சுகள் என்பவை பல வகைப் பொருள்களால் ஆகிப் பழங்காலத்தில் பாதை தெரிவிக்க உதவியிருக்கலாம். காட்டுப்பாதையில் வழி தவறாமலிருக்க வழி நெடுக, புற்களை முடிச்சாகப் போட்டுவைத்துப் போவது பற்றி எங்கோ கேட்ட நினைவு.
3. ‘முடிச்சுகள்’ (knots) கடல்வழிப் பயணிகளுக்கு ஓர் அளவை அல்லவா? இதே போல … சங்கம் என்ற கணுவும்/முடிச்சும் நமக்கு ஒரு நிறுத்தற்குறி; ஓர் அளவை (unit of measurement).
4. சங்கு என்றவுடன் சோவி என்ற சொல் நினவுக்கு வந்தது. இணையத்தில் தேடியபோது … ஒரு வகைக் கூடைப் பின்னல் விளக்கத்தில் இந்தச் சோவி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்கள் (http://payanikkumpaathai.blogspot.com/2011/03/1.html). மகிழ்ந்துபோனேன்! இந்த வகைச் சோவி/சங்கு இல்லாத பின்னல் சங்கிலிப் பின்னல்!
அன்புடன்,
ராஜம்
அன்புள்ள இளங்கோவன்,
சங்கிலி
-------------
சங்கு + இலி == கணு இல்லாதது; இடையில் தடுப்போ துருத்தலோ இல்லாதது.

கார்காலம் (வினை + பெயர்); கார்க்கின்ற, கார்த்தன என்ற பயன்பாடுகள் இலக்கியத்தில் .......
........ஒற்று விதிகள் மனதுக்குள் போயின. அதனை மனதில் கொண்டுதான் .......
ஐயா, அருள் கூர்ந்து தவறாக நினைக்க வேண்டாம்.மனத்துக்குள், மனத்தில் சரியான வடிவம் என எண்ணுகிறேன்
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லே பாடத்தான்
மனசுக்குள்ளே
தேரோட்ட
மைவிழியில்
வடம் புடிச்சான்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
நண்பர் இளங்கோவன்,கால் பந்தை எற்று என்பது ஏற்புடையதாய் எனக்குத் தோன்றுகிறது.சி. ஜெயபாரதன்
2014-07-01 11:12 GMT-04:00 Elangovan N <nela...@gmail.com>:
அன்பின் ஐயா,சொற்களுக்கு மிக்க நன்றி.கோல் என்பதற்கு நான் கவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
--