--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஜவஹர்லால் நேரு
வானத்தைத் தொட எண்ணி வளர்ந்தமலை மேரு
வரலாற்றில் இமயமென உயர்ந்தவர் எம் நேரு
ஈனத்தை மனம் கொண்ட கொடியவனாம் வெள்ளை
எதிரியினைக் கதறவைத்தார் மோதிலால் பிள்ளை
தானெத்தைச் செய்தாலும் மக்களது நன்மை
தனைக்கருதிச் செய்தவராம் நேருமனம் மென்மை
மானத்தை இழக்காமல் பாரதத்தின் வீச்சு
வளர்ந்திடவே வைத்ததுகாண் நேருஜியின் பேச்சு
பொற்கிண்ணத்தில்பாலைத் தாதியர்கள் ஏந்தி
பொழுதெல்லாம் கெஞ்சிடுவார் வாவாவா என்பார்
கற்கின்ற அறையினிலே ஆசிரியர் வந்து
காத்திருப்பார் கற்பிக்க, மென்னிலவம் பஞ்சின்
பொற்பான மெத்தையினைப் பொறுப்பாகப் பார்த்துப்
போட்டிடுவார் ஜவஹர்லால் தான்படுத்துக் கொள்வார்
பெற்றோரும் மற்றோரும் போற்றிவந்த பிள்ளை
பின்னாளில் சிறையினிலே பெற்றதெல்லாம் தொல்லை
மண்சட்டி தனில்சோறு, வேகாத ரொட்டி
வயிற்றைக் குமட்டிவரும் வேண்டாத நாற்றம்
புண்பட்ட தரைமீதில் எப்போதும் ஈரம்
பொழுதெல்லாம் கடிகொசுக்கள் இரத்தம் குடிக்கும்
கண்கட்டி விட்டதுபோல் காரிருளில் ஆங்கே
காலடியில் கருந்தேளும் பூரானும் நெளியும்
பண்பட்ட நேருமகன் அன்னைவிலங் கொடிக்கப்
பட்டதுயர் எடுத்துரைக்க யாராலே கூடும்?
மனைவியினைப் பறிகொடுத்தார், தந்தையினைப் பிரிந்தார்
மகள்மழலை கேட்பதற்கும் வகையின்றி இருந்தார்
தனிமையிலே சிறையினிலே அவர்கழித்த துன்பம்
தடியடியின் பெருந்தாக்கம், இவையெல்லாம் பெற்றும்
எனதுதுயர் பெரிதில்லை, எந்நாடு வாழ்ந்தால்
எனக்கதுதான் பேரின்பம் எனமுழக்கம் செய்தார்
இனியொருவர் நேருவைப்போல் இருப்பாரோ என்றே
எல்லோரும் புகழ்ந்திடவே வாழ்ந்திருந்தார் அன்றே!
காந்திமகான் பாதையிலே கைவிளக்கு நேரு
காலமெல்லாம் பாரதத்தைக் காத்துவந்த மேரு
பாந்தமுடன் மக்களின்மேல் மாறாத அன்பு
படைத்ததுதான், நேரு,மகான் மிகச் சிறந்த பண்பு
ஏந்துபுகழ் பாரதமும் பெற்றிடவே வேண்டி
எத்தனையோ தொழில்வளர்ச்சித் திட்டங்கள் போட்டார்
காந்தமென அவர்வாழ்ந்து மக்களைக் கவர்ந்தார்
கண்ணியமாய் மக்களது நெஞ்சினில் சிறந்தார்.
1964 மே 27ம் தேதி நேரு மறைந்த பின்னர் அவரது அஸ்தியைக் கன்னியாகுமரிக் கடலில் கரைக்க எடுத்துவந்தனர். அந்த வண்டியில் பாடிக்கொண்டு செல்வதற்காக ஒரு பாடல் எழுதித் தரும் படி கேட்கபதற்காக என்னுடைய பேராசிரியர் அ.சீ.ரா வீட்டுக்கு வந்தார்கள். அவர் ஊரில் இல்லை. உடனே பாடல் வேண்டும் என்பதால் அப்பொழுது அவர் வீட்டில் தங்கியிருந்த என்னிடம் கேட்டார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன். அந்தப்பாடலைத் தான் உருக்கமாகப் பாடிக்கொண்டு சென்றனர். வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பபட்டது. அந்தப் பாடல் இதோ: )
ஏன்விட்டுச் சென்றாயோ?
ஏன்விட்டுச் சென்றாயோ ஐயா? - இன்னும்
இருப்பேன் இறவேன் என்பது பொய்யோ? (ஏன்..)
பாரதத் தாயின் புதல்வா- நல்ல
பண்பே உருக்கொண்ட எங்கள் முதல்வா
தீரருள் தீரர் எம் நேரு - என்றே
தேசம் புகழ்ந்திட வாழ்ந்த எம் தேவா!
என்நாட்டு மக்களின் அன்பே - என்றன்
இதயம் நிறைத்தது என்றனை அந்த
அன்பும் மறந்திட லாச்சோ- அன்றி
ஆகும் செயல்கள் முடிந்திடப் போச்சோ?
அன்னை விலங்கை அறுத்தாய்- இன்று
அந்தோ உடம்பின் தளையை வெறுத்தாய்
கன்னல் சுவையின் நின் பேச்சும் - இளம்
காளைபோல் வீசும் யாம் எங்கினிக் காண்போம்?
விண்ணவர் நாட்டிலும் பூசல் - ஏதும்
மேவிடலாச்சோ சமரசம் செய்ய
எண்ணியோ உன்னை அழைத்தார்- எனில்
எங்களை விட்டுநீ ஏகிடலாமோ?
தேன்சிந்தும் மொழியும் எங்கே
சிந்தனைச் சிற்பி எங்கே
கானமும் எங்கே , துன்பம்
கனிந்திடும் போது முந்தி
ஏனெனும் குரலும் எங்கே
ஏறுபோல் நடையும் எங்கே
மானுட ஜோதி எங்கே
மாருதம் எங்கே எங்கே!
இந்திய மக்கள் அன்பே
இதயமாய்க் கொண்ட ஜோதி
சொந்தமாய் வானோர் வேண்டத்
தோன்றியே மறைந்த தம்மா
எந்தநாள் காண்போம் அம்மா?
இருளினைத் துரத்தி ஓட்டும்
அந்த நல் ஒளியும் போச்சே
அம்மவோ அம்ம அம்மா!
எங்கவன் சென்ற போதும்
என்றுமே நமது வாழ்வில்
பொங்கிடும் ஒளியாய் மாறிப்
புத்துயிர் கொடுப்பான் அம்மா!
இங்கு நம் உயிரே நேரு,
இந்தியப் பண்பின் மேரு
புங்கவன் வழியைப் போற்றிப்
போற்றியே வாழ்வோம் அம்மா!
ஜவஹர் தந்திரம்
பாலர்கள் நாலுபேர் கூடி- பந்து
ஆடினர் ஓடினர் சாடி
நாலுபேர் மத்தியில் நேரு- ஆடும்
ஆட்டமேதான் வெகு ஜோரு
பந்தினை எட்டி உதைத்தான்-போகும்
பாங்கினைக் கண்டு குதித்தான்
பந்தின்பின் ஓடியே சென்றான்-அதில்
பன்முறை கோல்போட்டு வென்றான்
போட்டிபோட்டான் ஒரு சிறுவன் - மனம்
பொருமி நின்றான் ஒரு சிறுவன்
ஓட்டமாய் ஓடியே வந்து - பந்தை
ஓங்கி உதைத்தானங் கொருவன்
சாலை மரத்தொரு பொந்து- அதைச்
சார்ந்து விழுந்தது பந்து
பாலர்கள் ஓடியே சென்றார்- அதைப்
பார்த்து மலைத்தனர் நின்றார்
*
பந்துக்குடையவன் தானழுதான் - சாமி
பகவானை வேண்டி மிகத்தொழுதான்
இந்த நிலையினை நேரு பார்த்தான்- உடன்
கொண்டுவா வாளியென் றாணையிட்டான்
பொந்தினை நாற்புறம் சுற்றிவந்தான்- அதில்
பொத்தல்கள் இல்லையெனத் தெளிந்தான்
வந்தது வாளியவ் வாளியில்நீர் மொண்டு
வாவெனச் சொன்னான் அவனும் சென்றான்
கொண்டுவந்தான் தண்ணீர் மொண்டுவந்தான் வாங்கிக்
கொட்டினான் பொந்து நிறையும்வரை
தண்ணீர் ஏறஏறப் பந்து மிதந்தது
தாவியே நேரு எடுத்துவிட்டான்.
சும்மா அழுவதால் என்னபயன்?- புத்திச்
சூட்டிகை யோடு செயல்படுக
தம்மாலே ஆகாததேதுமில்லை - நானும்
சாதிப்பேன் என்று முயன்றிடுக
இன்று நேரு தினம். அவரை நினைந்து...
...
ஜவஹர்லால் நேரு பற்றிக் குழந்தைப் பாடல்
ஜவஹர் தந்திரம்
கொண்டுவந்தான் தண்ணீர் மொண்டுவந்தான் வாங்கிக்
--