சந்த வசந்தக் கவியரங்கம்- 42 தலைப்பு: வெள்ளம் அளித்த விடை

81 views
Skip to first unread message

Ramamoorthy Ramachandran

unread,
Mar 9, 2016, 11:36:41 PM3/9/16
to santhav...@googlegroups.com, Ramamoorthy Ramachandran



                                                                                     சந்த வசந்தக்  கவியரங்கம் - 42  
                                                                                     ******************************************

                                                                           தலைவர்: கவிவேழம்  இலந்தை இராமசாமி 
                                                                           *************************************************************
                                                                        அரங்கேறும் கவிஞர் :  புலவர் இரா.இராமமூர்த்தி.

                                                                                 வெள்ளம்  அளித்த   விடை 
                                                                ========================

                                                                      கடவுள்   வாழ்த்து!                                         
                                                                      **************************

                     
                                        விடைதேடு  வோர்முன்  விடையா  கிநின்ற
                                                              விதமேதும் சற்றும்  அறியேன்!
                                                         வினவும்வி  னாவை  விடுக்கும்முன்  என்முன்  
                                                                விடையான  நின்னை உணரேன்!
                                         கடையேன்   கருத்தில்  கண்மூக்கு   வாயும் 
                                                               காதோ  டுடம்பும் அறியும் 
                                                           கருத்தன்றி  உண்மைக்  கருத்தை எந்நாளும் 
                                                                 கருதாமை  சற்றும்  கருதேன்!      
                                        அடைவாய்  என்பாத மவைஎன்  றழைக்கும்    
                                                               அருட்சாடை  சற்றும் அறியேன்!                
                                               அவர்பின்  னும்பின்ன  ரிவர்பின்னும் சென்றே  
                                                                    அலைகின்ற போக்கில் அழிவேன்!
                                                   சடையா  லுமேறு  விடையாலும் யானை 
                                                                    உடையாலு முண்மை யுணரும் 
                                                            தனியான ஞானம் தனையின்று  தந்த
                                                                     தலைவா!  நின்தாளைத்  தரித்தேன்!   

                                                  அருள்வெள்ள  மென்றுஞ்  சிறிதல்ல! நம்மை 
                                                                   அடியாழந்  தன்னுள்  ஆழ்த்தும்! 
                                                          அறியா  மல்நம்மை  அழவைக்  கும்!பின்பு  
                                                                      தொழவைக்  கும்!கண்முன்  தொலையும்!
                                                  பொருளொன்றும்  என்றும்  புலனாத   லின்றிப்
                                                                    பொறியை யழித்துப்  புதையும்!          
                                                           புறமுள்ள  தாகி , அகமுள்ள  தாகிப்
                                                                    புறங்காட்டி   லாட்டம்    புரியும்!
                                                   மருளென்னும் ஆழச்  சுழலுக்குள்   வீழ்த்த, 
                                                                 மடியுள்   அனைத்துங்   கவிழும்!
                                                             மடியாத  பக்தி முடிவாகத்  தோன்றின்,  
                                                                     வரமா  கியின்பம்  வளரும்!
                                                    இருளுக்குள்  ஆழ்ந்த உயிருக்குள் இன்ப  
                                                                   ஒளியொன்  றெழுந்து  விரியும்!
                                                              இவையா  வுமந்த  இறையால் விளைந்த 
                                                                     தெனவுள்ளம் வணங்கி  மகிழும்! 

                                                       தமிழ்த்தாய் வாழ்த்து!
                                                       *****************************

                             முன்னைப்  பழம்பொருளே!  முதலனைத்தும்  தந்தவளே 
                             மன்னும்    உயிர்க்குலத்தின்  மௌனம்  கலைத்தவளே!

                             கல்மலைமேல்   குனிந்துநடை  காட்டிவந்த  மானுடத்தின் 
                             சொல்லுக்குள்  ஒளிசேர்க்கும் சூழ்ச்சி அறிந்தவளே!
 
                             மெல்ல  நடைபயின்று  வேதங்கள்  தமைப்பயின்றே,
                             கல்மேல்  எழுத்தாகி  ஓலையில்கண்  வளர்ந்தவளே!
     
                             பல்லா  யிரமாண்டிப்    பாருலகின்     மேற்பயின்றே 
                             நல்லறிவுத்   துறைஅரங்கில்  நர்த்தனங்கள்  புரிபவளே!

                             உழவுமுதல்  தொழிற்கெல்லாம்  உயிராகி  அவைவளரப்  
                             பழகிவரும்  வாணிகத்தின்  பாய்மரமாய்ப்  படர்ந்தவளே!

                             அழகுவளர்  கலைக்கெல்லாம்  அடிப்படையாம்  உணர்வாகி 
                             அழிவில்லா    யோகத்தின்    ஆறங்கம்     ஆனவளே!

                             கன்யாகுமரி  நெல்லை  கானாடு  சோணாடு 
                             மன்னும்  மதுரையுடன்  வளர்கொங்கு  ஆர்க்காடு 
   
                             என்னும்  இடத்தார்வாய்   எத்தனையோ  உருமாறிச் 
                             சென்னை  நகர்மேவிச்   செயலிழந்தும்   வாழ்பவளே!

                             தம்மாத்தூண்டு,  ஜல்ப்பு  பேஜாராப்  பூட்சென்றும் 
                             தெகிரியமா   இஸ்துண்போ இன்னா   நைனா''வென்றும்,

                             சொம்மாநீ  போய்னேரு   நாஷ்டாதுண்ட்யா''  என்றும் 
                             கூவாதே   கம்னுகெட  சோமாறி '' என்றுரைக்கும்   
                              
                             கன்னித்   தமிழரிடம்   கையற்று    நிற்பவளே!
                             சென்னைத்   தலைநகரில்  செம்மொழியாய் வாழ்பவளே!

                             பேசாத்  தமிழரையும்   பேச்சுப் புரட்டரையும் 
                             கூசாமல்  தலீவரெனக் கொண்டுவளர் கொற்றவையே!

                             சிக்குமண்ணைத்  தின்னாமல்  சிறுமாங்காய்  கடிக்காமல் 
                             பக்கத்துணை   இல்லாமல்,  பருவயிறு   சரியாமல்  
                             முக்கோணத்   தடைதாண்டி  மோகநிலை குறையாமல் 
                              தக்கவராய்ப்  பலகோடிப்  பிள்ளைகளைப்  பெற்றவளே!

                              வில்லாலும்   வாளாலும்  வீரம்வி   ளைத்திட்ட 
                              நல்லதமிழ்  வேந்தருடன், நயமார்ந்த  வள்ளுவனார் 

                              தொல்காப்பி   யர்கபிலர்   சூரரெனும்   நக்கீரர்
                              ஒல்காப்புகழ்   இளங்கோ  உயர்சீத்  தலைச்சாத்தர் 

                              திருத்தக்க   தேவர்நறுந்   தேவார   மூவருடன்
                              வருத்தத்தைப்   பாட்டாக்கும்   மாணிக்க  வாசகர்நல் 
                         
                               திருவாய்   மொழிமுதலாம்   நாலாயி  ரம்படைத்தோர் 
                               விருத்தத்தின்   வேந்தரென   இராமகதை  தனைவிரித்துக் 
                                  
                               கருத்துப்   புரட்சிசெய்த   கம்பருடன்   வில்லிமற்றும்
                               அருண  கிரிதாயு   மானார்இ   ராமலிங்கர்

                               முண்டாசுப்  புலவரெங்கள்  முறுக்குமீசை  பாரதியைக் 
                               கொண்டாடி   மக்களெனக்  கொண்டவளே!  இன்றிந்த 
            
                               மண்டெனையும்  நின்மகனாய்  வாரி எடுத்தணைத்துக் 
                               கொண்டவளே! நின்னடியைக்  கும்பிட்டுப்  போற்றுகிறேன்!
 
                                  
                                              
                              
                                         
                                                    
                                                 கவியரங்கத்தலைவர்!
                                                    **************************

                        எங்கள் கவிவேழம் ஏறுகிறார் அரங்கென்றால்
                        அங்கே  மதயானை அசைந்தசைந்தே ஆடிவரும்! 
                        திங்கள் பிறைபோன்ற தந்தங்கள் ஒளிவீச 
                        எங்கும் குரலோசை எட்டியிடவே  பிளிரும்!
                        வானத்துத்  தாரகைகள் மலராகி வந்து விழும்!
                        கானத்துக் குயில்பாட்டுக் கனித்தமிழில் இசைகூட்டும்!
                        போன பிறப்புடனே புதுப்பிறவி  நம்நினைவுள் 
                        ஆன  தெனவேநம் ஆன்மாவின்  மெய்சிலிர்க்கும்!
                        என்றோ இருந்திட்ட தொடர்பெல்லாம் மீண்டுவந்தே 
                        இன்றைக்கு  நம்மை இணைத்தணைத்துக் கொண்டுவிடும்!
                        சந்த  வசந்தத்தின் சபைக்கோர்  பொலிவேறும்!
                        இந்தப் பிறப்புக்கோர்  ஏற்றம் விளைந்து விடும்!
                        ''சொந்தம் நாமெல்லாரும்!'' என்றந்த  விண்வெளியில் 
                         வந்தங்கோர்  வானவில்லும் வரவேற்பாய்  வாய்திறக்கும்!
                         புவியின்  திசைக்கண்கள் கணினித்  திரைநோக்கிக் 
                         கவிதை எழில் கண்டே  களிப்பில் மலர்ந்திருக்கும்!
                         செவிகள் படிக்கும்! சிந்தை அதை உணரும்!
                         சிவனோ டுமையாடும்  ஜதித்தாளம் அரங்கேறும்!
                          ''இந்தப் புதுவித்தை எவர் செய்தார்?'' எனக்கேட்டே 
                          கந்தன் குறவள்ளி கன்னத்தைத தட்டிடுவான்!
                          ''வந்த கவிவேழம் வாய்திறந்தே  கவிபாடி 
                          முந்தித் தலைவரெனக் குந்துகிறார்!'', எனவள்ளி 
                          சொல்லக் கேட்டாங்கே  சுறுசுறுப்பாய் வந்தமர்ந்தே  
                          பத்தி திருமுகமோ  ராறோடு  பன்னிரண்டு
                           தித்திக்கும் கரங்கொண்டே சிவச்சிங்கம் ஆர்ப்பரிக்கும்!
                           பிரமன் வியப்படைவான்! திருமாலோ, மாலாவான்!
                           இரவும் பகலாகும்! எங்கும் தமிழோசை 
                           பரவும் இலந்தை புகழ்!
                             
                               சந்தவசந்தக் குழு !
                              *************************
               
                         எந்தத்   திசைசென்றே   எங்கே    இருந்தாலும்  
                         சந்தவசந்  தம்நம்மைச்  சாரவரும் - சிந்தை 
                         திகட்டும்  வரையிலும்  தேன்தமிழை  வாரிப் 
                         புகட்டும்  இதற்கார்  புரை?
                            
                          இராமசா  மிப்புலவன் ஏந்தி வளர்க்க 
                          விராவும்  இதன்புகழே  விண்ணை- அராவிச் 
                          சந்திரனின்  தண்மையைத்  தானே  எடுத்தளிக்கும்! 
                          வந்திருப்பார் பெற்றார்  வரம்!
                        
                         எல்லா  வகைப்பாவும்  இங்கே   இலவசமாய்
                         வல்லோ  ரெடுத்தளிப்பார் வையத்தில் - இல்லத் 
                         திருந்தே  திசையெட்டும் எட்டும்தட்  டத்தில் 
                         விருந்தை  நுகர்வார்  விரைந்து!

                        அந்தப்  பெருஞ்சபையில்  என்னை  அமர்வித்தே 
                        சொந்தங்கொண்  டாடிச்  சுடர்ப்பாவெள்  ளம்பாய்ச்சி
                        அந்தமே  சிந்த  அழைத்தாரி  லந்தையார் 
                        வந்தேன்   இசைந்தே  மகிழ்ந்து!  

                   
                 தலைப்பு :
                                     வெள்ளம் அளித்த விடை!
                                      ==============================

                       அண்மையிலே சென்னையிலே அனைவரையும் 
                                            அஞ்சவைத்த  அதிர்ச்சி   வெள்ளம்
                       கண்களில்கண்   ணீர்வெள்ளம்    உருவாக்கிக்
                                             கலங்கவைத்த  கடுமைக்   குப்பின், 
                       புண்ணதிலே    புளிப்பெய்த    விதம்போல
                                             புகழ்பெற்ற  இலந்தை   யார்தம்
                       கண்மணியைப்  பறித்தெம்மைக்  கருத்தழித்தான் 
                                            கருணையில்லாக்  கயவக்   காலன்!
                      

                      ஊர்வெள்ளம்,   துயர்வெள்ளம்,   உறவிழந்த
                                           உள்ளத்தை  உலுக்கும் துன்பப் 
                      பேர்வெள்ளம்  நம்முன்னே    பிணங்கிபல
                                            கேள்விகளைக்    கேட்ப   தாலே   
                     ஆர்வந்து  விடைதருவார்? ஆரெமக்கே  
                                           உதவிடுவார்? என்றே  நாமும் 
                     ஆர்வத்தோ   டிருக்கின்றோம்!  அவ்வெள்ளம் 
                                          எவ்வாறு   விடையை    நல்கும்?

                                                                     
                     வெள்ளந்தா     னளித்தவிடை   யாதெனவே 
                                 கேட்பதற்கே    விரும்பும்   முன்னே  
                     வெள்ளமெது?,  வெள்ளத்தின்  விடையுமெது?
                                   என்றவினா  வெழுப்பு   கின்றேன்!
                     வெள்ளமெனச்  சென்னைதனைக்  கலக்கிட்ட
                                     பேரலைநீர்  விரைந்து   பாய்ந்தே 
                     அள்ளிஎல்லாப்  பொருள்களையும் அழித்தபின்னே 
                                    அதைக்கேட்க  வினாவும்  யாது?

                     ஏன்வந்தாய்?    ஏனழித்தாய்?    இன்னும்நீ
                                   என்னசெய்வாய்?  என்று   நிற்பாய்? 
                     வானிருந்தே    எமைமுற்றாய்   அழிப்பதற்கா
                                   வந்திட்டாய்?  எனப்பல்   கேள்வி 
                     நானெழுந்து  கேட்பதன்முன்  நாடெழுந்து 
                                 கேட்கிறதே! பதிலை  நல்காய்!
                     தேனமுத    வள்ளுவனார்   செப்புகிறார்
                                எல்லாமே  நம்மால்   தானாம்! 

                     மேலிருந்தே  வீழ்ந்திட்டேன்  மழைஎன்றே 
                            அதைவையம் விரும்ப   லாச்சு! 
                     வீழுகின்ற  அருவியென விரைந்திட்டேன் 
                          அதில்நனைந்தே  குளிக்க  லானார்!!
                      சாலவுமே  ஆறாகிப்   பள்ளத்தில் 
                            பாய்ந்திட்டேன்! இடையில்  நின்ற(து)  
                       ஆலமரம்   என்றாலும்  அதைவீழ்த்திப்
                              புரட்டிட்டேன்! விரைந்து பாய்ந்தேன்!

                     காலமதன்   போக்கினிலே  ஏரிகுளம்  கேணிஎன
                           வடிவெடுத்தேன் ! களித்த  மக்கள் 
                     வேலையென  வேளாண்மை  செய்திட்டார் 
                           வேண்டுவன  விளைத்துக்கொண்டார்!
                     கோலிஎனை   நீர்நிலையாய்   பேரணையில்
                              சுவர்கட்டிக்   குறுக்கே  நின்றார்!
                     மேலுமொரு  புதுவரவாய்   எனைவைத்தே 
                              மின்சாரம்   விளைத்துக் கொண்டார்! 
                         
                    பள்ளத்தின்   பாலேநான்  பாய்கின்ற 
                           பழக்கத்தால், எங்கே  னும்ஓர்
                    விள்ளலெனச்   சுவர்விரிசல் கண்டிட்டால் 
                             அதையுடைத்தே  விரைந்து பாய்வேன்! 
                    வெள்ளமென  வளர்ந்துமிக    வேகத்தால் 
                            அனைத்தையுமே  வீழ்த்தித்  தள்ளிக் 
                    கொள்ளையிட்டுச்   சென்றிடுவேன்! இதைநீங்கள் 
                             கொடுமைஎனச்  சொல்ல   லேனோ?
  
                     நீங்களென்றன்   போக்கதனை    வன்முறையால் 
                               தடுக்கமட்டும்   நினைக்க   லாமோ?
                      நாங்களதை  மீறிநல்ல  விடுதலையை 
                              நண்ணிடுதல்  குற்ற   மாமோ?
                      தாங்கும்வரை  தாங்கிநின்றோம்! ஒருநாளில் 
                             தடைமீறித்  தாவிப் பாய்ந்தோம்!
                      ஈங்கதனைக்  கொடுமைஎனில்  இந்தியரே! 
                             விடுதலைப்போர்  இயற்ற  லாமோ?

                      முறையாக    எமைத்தேக்கி,  முறையாக
                               எமக்குவழி  திறந்து  வைத்தே 
                      முறையாக  விவசாயம்  செய்வதிலே 
                                எமக்கொன்றும்  முரண்பா  டில்லை!
                      முறைமீறி  யாம்தேங்கு  மிடமெங்கும் 
                                  வீடுபல   முளைக்க    வைத்தே 
                        உறைவதெனில் அதிலிருக்கும்  ஆபத்தை 
                                   உணாராமை   முறையோ அய்யா!

                       புயல்வீசும்!   சூரைக்காற்    றலைக்கழிக்கும்!
                                 எரிமலைபூ   கம்பம்  தாக்கும்!
                        தயங்காமல்  கடல்பொங்கும்! பேரலைகள் 
                                 தாவிமிகச்  சேதம் செய்யும்!
                        மயங்காமல்  மழைபொழிந்தே  மரம்சாய்க்கும்!
                                  வீடெல்லாம் மடிந்தே  வீழும்!
                        பயங்காட்டும்! இதையுணரும்  பகுத்தறிவை 
                                  ஏனிழந்தே  பாவம்   செய்தீர்?

                         வாழும்வகை  தனையறிந்தே மற்றவர்க்கும் 
                               தெரிவித்தே  வளர்ந்த  மக்கள் 
                         தாழும்நிலை  வருமுன்பே  தமைக்காத்துக்
                                கொள்ளுதலே  சரியாம்!  அன்றே 
                         ஆழமிகும்  தேக்கத்தில்  அடங்காமல்   
                                 மீறுமெனை  அரவ    ணைத்தே  
                         சூழுகின்ற முறையறிந்தே சிறுவழியில் 
                                  திறந்துவிடல்  சிறந்த  தன்றோ? 

                       குறைவாகச்   செலவழித்தல்,  நிறைவாகச் 
                              சேமித்தல்  இவற்றை  அன்றே 
                       முறையாக    ஆகாறு,   எனத்தொடங்கும்   
                               குறளால்வள்  ளுவரே  கூற,  
                        சிறைநீக்கிச்  சிறிதாக  வெளிவிட்டுச் 
                                   சேமிக்கத் தெரியா   ராகிப் 
                        பிறர்நம்மைக்  குறைகூறிப்  பிழைகாணப்  
                                 பேதையராய் விளங்க   லாமா? 

                     வெள்ளம்போல்  தமிழ்நூல்கள்  விளங்குவதைத் 
                              தமிழ்வாழ்த்தில்  விரித்துச் சொன்னேன்!
                     உள்ளத்தை அதில்செலுத்தி அவைஉரைத்த 
                               விடைகளைநீர்  உணர்ந்தி  ருந்தால் 
                     அள்ளியுமை  அலைக்கழித்த   என்வலியை
                                அடக்கிநலம்  அடைந்தி   ருப்பீர்!
                     தள்ளரிய    விடைபலவும்   தரும்தமிழ்நூல்!   
                             வெள்ளத்தின்   தகுதி      அ .:.தே!

                     இதற்கேற்ற விடையுடனே வேறென்ன  
                                விடைதேடி   வினவிட்   டாலும்
                     அதற்கேற்ற  விடைகள்பல  ஆயிரங்கள் 
                                வழங்கிடும் நம்மிலக்கி  யங்கள்!
                      பதற்றத்தைப்  போக்கிநமைப்  பக்குவமாய்க் 
                               காப்பாற்றும் தமிழ்வெள்   ளம்தான்,
                     எதற்கும்நல்  விடையளிக்கும் வெள்ளமெனில் 
                                 எல்லாரும் ஏற்பார்  அன்றோ?
                       
                              
                      படிக்கும் கவிஞர்க்கும் படித்தபின் பின்னோட்டம் 
                         வடிக்கும் கவிஞர்க்கும் நன்றிபல அளிக்கின்றேன்!
                      துடிக்கும் வகையில்பாத்    தொடுக்கும் புலவோர்தம் 
                          அடிக்கீழோர்  தொண்டனென  ஆக்கிடுவாய் தமிழ்த்தாயே!
                                  
                         நன்றி வணக்கம்!
                             
                                  
                            
                                                      
                            
                               
                                 
                                 
                   
                                   
                           

                       
                    
                                     
                                                 
                                                                       
                                                                                                         
                                       
                          
                                                    
                                                   
                                                                     

Subbaraman NV

unread,
Mar 10, 2016, 1:18:40 AM3/10/16
to santhav...@googlegroups.com
 ”பதற்றத்தைப்  போக்கிநமைப்  பக்குவமாய்க் 
                               காப்பாற்றும் தமிழ்வெள்   ளம்தான்,
                     எதற்கும்நல்  விடையளிக்கும் வெள்ளமெனில் 
                                 எல்லாரும் ஏற்பார்  அன்றோ?”
உறுதியாக ஏற்றிடுவோம். அருமையான கவிதை; கருத்துக்கள் அபாரம். நன்றி; வாழ்த்துகள்.
என் வி சுப்பராமன்.
                       

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

M. Viswanathan

unread,
Mar 10, 2016, 9:23:25 AM3/10/16
to Santhavasantham
அன்பு சந்தவசந்தக் கவிங்கர்களே ....வணக்கம்.

"புலவர் புலவர்தான் ! பொளந்து கட்டிவிட்டார் !
பலரும் போற்றும் படியாகக் கவிதையில்
கருத்தும் நயமும் கடலாகப் பெருகவிட்டார் !
பெருத்த கரகோஷம் செய்வோம் எங்கள்
இராமமூர்த்திப் புலவர் என்றும் பலமாக
இராமனைப்போல் புகழுடன் இளமையோ டிருக்கட்டும் !"

அன்பன்,
மீ.விசுவநாதன்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 10, 2016, 10:00:52 AM3/10/16
to santhav...@googlegroups.com
மீ. வி க்கு நன்றி!

Subbaiyar Ramasami

unread,
Mar 10, 2016, 12:42:45 PM3/10/16
to santhav...@googlegroups.com
வெள்ளத்தைத் தான்படைத்தே புலவரிங்கே
       விரைவாக ஓடவிட்டார், இந்தவெள்ளம்
உள்ளத்தில் ஓடுவது. பாயும் ஆனால்
       ஊறெதுவும் செய்யாது, மாறாய் நாமும்
கொள்ளத்தான் உற்சாகம் கொண்டு சேர்க்கும்
       கொட்டிவந்த பெருமழையா, இன்னதென்றே
விள்ளத்தான் முடியாதா கொடையா, இந்த
விருந்ததனை என்சொல்வேன், வ்ந்தை விந்தை!

பதினான்கு சீரினிலே பாய் ந்துவந்த இறைவணக்கப்பாடல்தானா?
பதிவோங்க ச் செந்துறையில் தமிழ்மகளைப் பரவிவைத்த பாடல்தானா
குதிபோட்டே வெண்கலிப்பா  இலந்தையினைப் போற்றுகின்ற பாடல்தானா
எதைச்சொல்ல ? வெண்பாவா, எழுசீரா இவண்தொடுத்த எல்லாம் வெள்ளம்.


இலந்தை

     

Subbaiyar Ramasami

unread,
Mar 10, 2016, 12:47:48 PM3/10/16
to santhav...@googlegroups.com
எதுகொடுத் தாலும் மதுகொடுத் தாற்போல்
புதிதாய்ப் படைக்கும் புதுமை-  விதமாய்
நகைச்சுவை யாகவே நம்சுவாமி நாதன்
பகருக நல்லதொரு பா!
  

2016-03-10 11:42 GMT-06:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

Narayan Swaminathan

unread,
Mar 10, 2016, 10:21:57 PM3/10/16
to santhav...@googlegroups.com
கடவுள் வாழ்த்து 

வெள்ளம் கொடுத்த விடைகள் விளக்க
வினாயகன் ஆசி தருக வேண்டி நின்றேன்

தலைவர் வாழ்த்து

பொழுதும் புதியதாய்ப் படைத்துக் கவிதை
அழகால் மனத்தைக் கவர்ந்து எழுதிக் 
கலக்கம் போக்கிக் கனிவாகச்  சொல்லும்
இலந்தைக்கு ஈடும் எவரே.

கவியரங்கத் தலைவர் இலந்தையாருக்கு என் வணக்கம்.

அவை வாழ்த்து

வெள்ளம் சொன்ன விதமான விடைகளை
வெல்லும் கவிதையில் சொல்லிக் கலக்கும்
சந்த வசந்தப் புலவர் குயில்களே
சத்தம் இன்றி வந்து சேர்ந்தேனே
காக்கை போலக் கரைய வந்தேனே
மரபில் துணிந்து எழுத முயன்றேன்
மரபு பிறழினால் மன்னித்து அருளும்
இலக்கணக் குறிப்பும் இடவே அச்சம்
இடித்து உரைக்கச் சிறிதும் அஞ்சாதீர்

அவையின் கவிஞர் சுவைஞருக்கு என் வணக்கம்

சந்த வசந்தக் கவியரங்கம்- 42

தலைப்பு : வெள்ளம் சொன்ன விடை


முன்னுரை

பள்ளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கினது கண்டனனே 
மெள்ளக் குவிந்த உறவினர் ஊடகச் செய்தியிலே ;
வெள்ளம் சொன்ன விடைகளைக் கேட்டு  அலைந்தனனே
வெள்ள விடைகள் எனக்குத் தந்தன வியப்புகளே !


மக்கள் சொன்ன விடைகள்

தரைதளம் தேடி வாங்கினோமே - அதில்
தண்ணீர் புகுமென அறியாமலே

வாஸ்து பார்த்து வாங்கியும் - நாம்
வாகாய் ஓடமொன்று மறந்தோமே

புவியினில் சிறந்த பதவியே - அது
தவிக்கும் மக்கட்கு உதவியே

மதமும் சாதியும் வெறுப்பு - எல்லாம்
துன்பம் வந்தால் போகுமே

அண்டை வீட்டு மனிதருக்கும் - அங்கே
அன்பும் பண்பும் உண்டாமே


எதிர்க் கட்சி தலைவர் சொன்ன விடை

வாயிருந்தும் வீணாகி வெந்தோம் கவலையிலே
வெள்ளம் தந்தது வெல்ல அவலையே

தன்னார்வத் தொண்டன் செய்தான் உதவியே
தண்ட அரசு அடைத்தது கதவைவே

ஆளும் அரசைக் குறைகூற வாய்ப்பே
ஆசை நமக்கு அரசின் சாய்ப்பே

கட்டு மரமாய்க் கூடி இருப்போம்
ஒட்டு மொத்தமாய் ஒன்று திரள்வோம்

ஈயென இளித்து நிற்க நேரமில்லை
ஈறைப் பேனாக்கும் பேனைப் பேயாக்கும்

வெள்ளம் சொன்ன விடையே
வாயால் வளைத்துக் காட்டும் வானத்தையே !


ஆளும் கட்சி அமைச்சர் சோக சோழன்
சொன்ன விடை

ஏரிகளைத் தூர்த்தோம் எறிந்த மண்ணால்
எங்கும் நிறைத்தோம் ஏராள வீடுகளை
வாய்க்கால் எங்கும் வீசிய குப்பையே
வடிநீர்க் குழாய் எங்கும் அடைப்பே
கரைவேட்டி தரையில் புரள வீழ்ந்தோமே
கரைகளைக் காக்கச் சிறிதும் கற்றோமா
ஓட்டு வங்கிய இழந்து விட்டோம்
ஓலம் இடுகிறோம் உரக்கப் புலம்பி
வெள்ளம் சொன்ன விடையே 
கொள்ளை போகும் நமது பதவியே

இன்னொரு அமைச்சர் கலங்காவேந்தன் 
சொன்ன விடை

தூர்ந்த ஏரிக்குத் துக்கம் வேண்டாம்
தெருவே ஏரியானால் சாதனை அல்லவா
நிலத்தடி நீரும் உயர்ந்து விட்டது
நமக்குப் பெரும் சாதனை தானே ?
துன்பம் கண்டு நாமும் துவள்வதா
துணிந்து எழுவோம் அணியாய் திரள்வோம்
வங்கக் கடலும் பொங்கிய சேதி
சங்க காலத்தும் உண்டாம் அன்றோ
ஆழியும் வானமும் சீறிப் பொழிந்தால்
ஆரே ஆவார் அதற்குப் பொறுப்பு ?
வெள்ளம் ,இருட்டில் வந்த மின்னல்
வழியைக் காட்டித் தீர்க்கும் இன்னல்
வாகை சூடி வெல்ல நமக்கு
வாய்ப்பு அன்றோ தந்து விட்டது 

அங்கும் இங்கும் அலைந்தோம் ஓடி
அஞ்சாதே என்றார் தலைவர் மோடி
தந்தார் நமக்கு நிதியாய்ப் பலகோடி
தாவி வாங்கினோம் (நம்)வளர்ச்சி நாடி

பொங்கும் மக்கள் வாயை அடைக்க
வங்கிக் கணக்கில் வீசுவோம் கொஞ்சம்

மக்களுக்கு மறதி அதிகம் அன்றோ
வம்பு தும்பில் காலம் போக்கும்
சிம்பு பாட்டை வம்பு பேசும்
கெல்லிக் கொம்பால் குத்திக் கொல்லும்
சல்லிக் கட்டைக் கேட்டு அலையும்
பூசை செய்யும் உரிமை கேட்டு
ஓசை எழுப்பி ஊர்வலம் போகும்
திரிஷா திருமணம் கேட்டு தீக்குளிக்கும்
ஒரிசா அரசியலை ஆவலாய் அலசும்
வெள்ளம் வந்தும் போயும் விட்டது
வெய்யில் வந்து வெள்ளம் காய்ந்தது
'தண்ணீர் !" என்று தாவி ஓடியவர்
'தண்ணீர் ?' என்று தாகத்தில் தவிப்பர்
நதிநீர் பிரச்னை நாளும் தொடரும்
நதிநீர் கேட்டு நடைகள் போவோம்
கடிதம் எழுதல் கைவந்த கலையே
கடிந்து எழுதி குடிநீர் கேட்போம்
கருப்புத் துணியை வாயில் கட்டுவோம்
கரையோரக் குடிசைகள் போனால் என்ன
கரையான் புற்றாய் எழுப்பி விடுவோம்
வாக்கு வங்கியை வளர்த்து விடுவோம்
வாகை சூடி வாழ்க்கை நடத்துவோம்
வெள்ளம் சொன்ன விடையென்ன
நேற்றே சொன்னார் நமது கவிகள்
"காற்றுள்ள போழ்தே தூற்றி கொள்ளெனவே"

முடிவுரை

வந்த வெள்ளம் ஒன்று மட்டுமே
தந்த விடைகள் மிகவும் பலவாம்
நொந்து போகாதீர் அருமை நண்பரே
தந்து உதவுவேன் சின்னக் கதையுமே

ஆற்றின் அருகே ஒரு சுவராம்
அதில் கரியால் எழுத்தாம்
"அமிழ அகலும் அழுக்கு"
அதில் கண்ட வாசகமாம்

சிறுவர் சிலரும் படித்தார்
சின்ன நாயாம் ஜிம்மியைக்
சீராய்க் குளிப்பாட்டும் வழியென்றார் 

சலவைத்  தொழிலாளி படித்தார்
சட்டை சுத்தம் செய்முறை
சொல்கிறது என்று செப்பினார்

மூதாட்டி ஒருத்தி படித்தாள்
முளைக்கீரை கழுவும் முறையென
முறுவலுடன் சொல்லி மகிழ்ந்தாள்

துறவி ஒருவர் படித்தார்
ஆண்டவன் பக்தியில் ஆழ்ந்தால்
அதுவே பாபம் போக்கும்
என்ற அறிவுரை இதென்றார்

கண்ட வாசகம் ஒன்றே
கொண்ட பொருள் பலவாம்

நீதி வெள்ளம் நித்தம் வருமாம்
நிறைய விடைகள் சொல்லிப் போகுமாம்
நீக்குவதும் கொள்வதும் நம்மிடமாம் !

======

நன்றி வணக்கம்.

சுவாமிநாதன்

(இதில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே.
யாரையும் எதையும் சுட்டுவன அல்ல,  காணும்
ஒற்றுமைகள் தற்செயலானவையே)








 





Subbaraman NV

unread,
Mar 10, 2016, 10:32:42 PM3/10/16
to santhav...@googlegroups.com
கண்ட வாசகம் ஒன்றே
கொண்ட பொருள் பலவாம்

நீதி வெள்ளம் நித்தம் வருமாம்
நிறைய விடைகள் சொல்லிப் போகுமாம்
நீக்குவதும் கொள்வதும் நம்மிடமாம் !

அருமையான கதை; அருமையான கவிதை;நன்றி சுவாமினாதன். வாழ்த்துகள்.
என் வி சுப்பராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Kaviyogi Vedham

unread,
Mar 10, 2016, 11:21:05 PM3/10/16
to santhavasantham
 நல்ல நகைச்சுவையாக வெள்ளம் வந்த விதம், மக்கள் போக்கு, அரசியலார் சதி எல்லாவற்றையும் சொன்ன நம் ஸ்வாமிநாதன் நீடு வாழி,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி--- pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
 Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/







Vis Gop

unread,
Mar 11, 2016, 12:10:55 AM3/11/16
to santhav...@googlegroups.com
மிக அருமையான சிந்தனைகள். வெள்ளம் அளித்த விடைகள் பல; அவை பல வாய்கள் மூலம் வெவ்வேறுபட்டு வெளியாகி இருக்கின்றன.  நமக்குப் புரிந்த விடை நம்மிடமே! அருமையாகச் சொன்னீர்கள்.

பொழுதும் புதியதாய்ப் படைத்துக் கவிதை          [புதிதாய்ப் 
அழகால் மனத்தைக் கவர்ந்து எழுதிக்                  [
கலக்கம் போக்கிக் கனிவாகச்  சொல்லும்             [கலக்கமும்
இலந்தைக்கு ஈடும் எவரே.                                [இலந்தைக்(கு) எவருண்டிங்(கு) ஈடு!

யதார்த்தமான சில சிந்தனைகள்:

வெள்ள விடைகள் எனக்குத் தந்தன வியப்புகளே !

வாயிருந்தும் வீணாகி வெந்தோம் கவலையிலே
வெள்ளம் தந்தது வெல்ல அவலையே

வெள்ளம் சொன்ன விடையே 
கொள்ளை போகும் நமது பதவியே

தூர்ந்த ஏரிக்குத் துக்கம் வேண்டாம்
தெருவே ஏரியானால் சாதனை அல்லவா

நீதி வெள்ளம் நித்தம் வருமாம்
நிறைய விடைகள் சொல்லிப் போகுமாம்
நீக்குவதும் கொள்வதும் நம்மிடமாம் !

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 11, 2016, 11:55:29 AM3/11/16
to சந்தவசந்தம்

வந்தது ஒருவெள்ளம் தந்தது பலவிடைகள்

எந்தவகை யேனும் ஏற்பீர் எனக்கூறிச்

சிந்திக்க வைத்தார்நம் சுவாமி!

 

கலங்கா வேந்தன் விடை கலக்கல்!


அனந்த்

 

>மரபு பிறழினால் மன்னித்து அருளும்;

பிழறினால் - பிழன்றால்?


2016-03-10 22:21 GMT-05:00 Narayan Swaminathan <swaminath...@gmail.com>:

தலைப்பு : வெள்ளம் சொன்ன விடை



இன்னொரு அமைச்சர் கலங்காவேந்தன் 
சொன்ன விடை

தூர்ந்த ஏரிக்குத் துக்கம் வேண்டாம்
தெருவே ஏரியானால் சாதனை அல்லவா
நிலத்தடி நீரும் உயர்ந்து விட்டது
நமக்குப் பெரும் சாதனை தானே ?
துன்பம் கண்டு நாமும் துவள்வதா
துணிந்து எழுவோம் அணியாய் திரள்வோம்
வங்கக் கடலும் பொங்கிய சேதி
சங்க காலத்தும் உண்டாம் அன்றோ
ஆழியும் வானமும் சீறிப் பொழிந்தால்
ஆரே ஆவார் அதற்குப் பொறுப்பு ?
வெள்ளம் ,இருட்டில் வந்த மின்னல்
வழியைக் காட்டித் தீர்க்கும் இன்னல்
வாகை சூடி வெல்ல நமக்கு
வாய்ப்பு அன்றோ தந்து விட்டது 

அங்கும் இங்கும் அலைந்தோம் ஓடி
அஞ்சாதே என்றார் தலைவர் மோடி
தந்தார் நமக்கு நிதியாய்ப் பலகோடி
தாவி வாங்கினோம் (நம்)வளர்ச்சி நாடி

பொங்கும் மக்கள் வாயை அடைக்க
வங்கிக் கணக்கில் வீசுவோம் கொஞ்சம்


Narayan Swaminathan

unread,
Mar 11, 2016, 8:05:01 PM3/11/16
to santhav...@googlegroups.com

என் இடுகையை ரசித்த கவிஞர்கள் சுப்புராமன் , யோகியார் , கோபாலுக்கும்  (சுட்டிய திருத்தங்களுக்கும் சேர்த்து) மிக்க நன்றி.


சுவாமிநாதன்

ramaNi

unread,
Mar 11, 2016, 10:18:45 PM3/11/16
to சந்தவசந்தம்
வெள்ளத்தை வைத்து அரசியல் வியாதியர் பிழைத்ததை நகைச்சுவை வெள்ளமாய்ச் சொன்ன எல்லேயார் பாடல் மிக அழகு. 
'அமிழ அகலும் அழுக்கு' என்ற அறிவுரை அருமை! வரும் தேர்தல் வெள்ளத்தில் அமிழ்ந்தே அகலட்டும் அரசியல் அழும்பு!

ரமணி

Subbaiyar Ramasami

unread,
Mar 11, 2016, 10:21:05 PM3/11/16
to santhav...@googlegroups.com
ஒவ்வொருவர் நோக்கில் ஒவ்வொரு விடையாக
எவ்விதம் வருமென்று இயம்பினார் சுவையாக
எதிர்பார்ப்பிற் கேற்ப இனிதாய்க் கவிபடைத்தார்
புதிர்போல்  ஒரு தொடர் பொருளோ பலவாக
வந்த விதம் சொன்ன வக்கணையை என்சொல்ல
சுவாமிநாதன்பா சுவையில் மகிழ்வுற்றோம்
வெள்ள விடைகள் விருந்தாய் அமைந்தனவே!

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Mar 11, 2016, 10:27:33 PM3/11/16
to santhav...@googlegroups.com
அடுத்த அழைப்பு- நிரஞ்சன் பாரதி

வெள்ளம் தந்த விடைகளை
   விவர மாக இவ்விடம்
உள்ளம் கவ்வும் வகையிலே
   உரைப்பார் நிரஞ்சன் பாரதி
துள்ளுகின்ற வார்த்தைகள்
   தொட்டுப் பார்க்கும் நேர்த்திகள்
கொள்ளக் கொள்ள தருகவே
    கோபு ரம்போல் வருகவே!

இலந்தை

Narayan Swaminathan

unread,
Mar 11, 2016, 11:17:47 PM3/11/16
to santhav...@googlegroups.com
எந் இடுகையை ரசித்த கவிஞர்கள் ரமணி , அனந்த், இலந்தையார்க்கு நன்றி.


சுவாமிநாதன்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 13, 2016, 9:49:46 AM3/13/16
to santhav...@googlegroups.com
எல்லேயார் கவிதை யில் அமிழ அகலும் அழுக்கு 
என்றும் சொல்லலாம்! கவிதைக் கருத்தில் அமிழ்ந்து 
கருத்துடையவன் ஆனேன்! நன்றி அன்புடன் 
புலவர் இராமமூர்த்தி.

--

Subbaiyar Ramasami

unread,
Mar 16, 2016, 9:33:38 PM3/16/16
to santhav...@googlegroups.com
நிரஞ்சன் கவிதை வரவில்லை,

அடுத்த அழைப்பு  கவிஞர் புஷ்பா கிரிஷ்டி

பற்பல இன்னல் சேர்ந்து 
    படுத்திய போதும் இங்கே
சொற்பொருள் மிகுந்த பாடல்
   தொடுத்தளிக்கின்றார் புஷ்பா
முற்படும் யாவற் றுள்ளும் 
    மூளுக நன்மைஎன்றே
அற்புதன் இறையை வேண்டி
    அவரையிங் கழைக்கின்றேன் நான்.

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Mar 16, 2016, 9:42:28 PM3/16/16
to santhav...@googlegroups.com
வெள்ளம் அளித்த விடை

கடவுள் வாழ்த்து

கருணைத் தெய்வமே
உருவின் உணர்வே
இருவிழியின் திருவே 
இறையின் அருளே
என் கருவின் அருகமர்ந்து
என் கருத்துக்கு உருத்தந்து
கவியமைக்க உதவிடுவாயே!

அவைவணக்கம் 

சபையோரே அவையோரே
சுவைகூட்டி என் வரிகளை
நீவீர் ரசித்து மகிழ்வீர்
தவறிருப்பின் மன்னிப்பீர்
சுட்டுவீர் என் பிழையை
மாற்றுவேன் என் தவற்றை

தலைவர் வணக்கம்

திரும்பும் திசையெங்கும்
அரும்பும் கவிச்செய்தி
கரும்பாய்த் தந்திடும் 
அருமைக் கவித்தலைவர்
பருவம் பார்த்துத் தான் 
அரும்தலைப்புத் தந்தார்..
ஐயா உங்களுக்குத் தமிழ்வணக்கம்
என் தலைவணக்கம் கூறி
வாழ்த்துகின்றேன். வணங்குகின்றேன்.. 
வாழ்க பல்லாண்டு. வாழ்க வாழ்கவே!

வெள்ளம் அளித்த விடை

வானமது வாயூறி வந்ததானால் மழையும் 
மானமது காத்திட மனதாரக் காற்றில்
தூறலாய் வந்து துதிபாடத் தொடங்கியே
மாறாது தானும் மாரியாய்ப் பொழிந்ததுவே

சின்னத் தூறலும் சிரித்துப் பொழிந்து
பென்னம் பெரியதாய் பெய்து முடித்தது
அன்னம் தரும் அருமை வயல்களும்
பின்னும் அனைத்தும் மிதந்தது தண்ணீரில்

காற்றுடன் மழையும் காட்டாற்று வெள்ளமாய்
மாற்றமின்றி பொழிந்து மார்தட்டி நின்றது
ஊற்றுப் பெருக்காகி ஊறிய கால்வாய்கள்
ஆற்று வெள்ளமாகி அணைகடந்து ஓடியது

அணைகள் உடைந்து அலைகள் மிகுந்து
துணைகள் பலவும் தனித்து தவித்து
நீரில் தவழ்ந்து நீந்திக் கடந்து
நீரில் அழிழ்ந்து மடிந்த உறவுகள்..

வாழ்வை இழந்த வாழ்ந்த மனிதங்களை
வாழ்ந்திடப் பாடுபட்டு வாழும் மனிதர்கள்
வாழ்வுக் கருவியாம் தம் வருமானப் படகில் 
வாழவைத்துக் காத்திட வாஞ்சையுடன் வந்தனர்.

உடைந்த அணைக்கட்டுக்களின் உக்கிரப் பசியால்
உடைந்தன வீடுகள், உடமைகள், வாகனங்கள்
அடைந்த துயரங்கள் அத்தனையும் போதாதென்று 
அடைமழை தானே அடுத்தடுத்துப் பெய்ததுவே!

அருமை மனிதங்கள், ஆடுகள், மாடுகள்
உருமையுள்ள நாய்கள் உயிரினங்கள் யாவும்
இருதயமில்லா நீரின் இயந்திர வேகத்தில்
உருத்தெரியாது அழிந்து உயிர் மாண்டனவே!

இளைஞர்கள் என்னும் இயந்திரச் சூரியர்கள்
களையற்ற மனத்துடன் களமிறங்கிச் சேர்ந்து
துளையற்ற இரயர்களின் துணையுடன் தாமும் 
பிளையின்றிக் காத்து பின்னும் உணவளித்தனரே

இவையாவும் நடந்து இடராய் முடிந்து
அவையும் கடந்து அனைத்தும் வழமையாக
சுவையற்ற அந்தச் சுனாமியாய், வெள்ளமும்
துவைத்துப் போட்டது என் தாயகத்தையே!

மழைத்தண்ணீரின் மதியினால் மறைந்தது
மழைநீரின் வேகம் அளித்தது சாதியை 
அன்பு, அறம், ஆசை, அனைத்தும் பசியாகி
அன்பே கடவுளாகி மனிதமே அன்பானது

விடைதேட விரைந்து நாமும் விழைவோமா
படையெடுத்து நாட்டின் அசுத்தம் போக்குவோம்
நடைபாதைக் குப்பைகளை நாமே அகற்றுவொம்
குடைபிடித்து நடந்தாலும் குனிந்து நடப்போமே!

அரசுகளும் அதிகாரங்களும் அன்று மட்டுமே
பரவசம் தந்திட நாமே என்றென்றுமே
இரந்திடும் ஏழையை அணைத்து காத்திடுவோம்
குரங்கினரிடமிருந்து எம் குவலயம் காத்திடுவோம்!

வெள்ளம் அளித்த விடையிது காண்போம்
கள்ளமில்லா மனத்துடன் கடமை செய்வோம்
உள்ளமெல்லாம் பிறர் நலன் காத்திடுவோம்
எள்ளளவும் இன்பம் பிறளாது வாழ்வோம்...

நன்றி 
வணக்கம்.

சோதரி
புஷ்பா கிறிஸ்ரி

Subbaraman NV

unread,
Mar 16, 2016, 9:48:49 PM3/16/16
to santhav...@googlegroups.com
அருமையான கவிதை சோதரி. வாழ்த்துக்களும், நன்றியும்.எல்லா நலன்களையும் வழங்கி இறைவன் அருள் புரிவாராக
என் வி சுப்பராமன்

GMAIL

unread,
Mar 16, 2016, 10:30:10 PM3/16/16
to santhav...@googlegroups.com
7வது கண்ணி 2ஆம் வரி:
உருமையுள்ள நாய்கள்

8வது கண்ணி 4ஆம் வரி:
பிளையின்றிக் காத்து

தட்டச்சுப்பிழைகளா அல்லது ஏதேனும் சிறப்புப் பொருள் இருக்கிறதா ?

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone

ramaNi

unread,
Mar 16, 2016, 10:46:35 PM3/16/16
to சந்தவசந்தம்
யதார்த்தம் எடுத்துரைத்த பாடலின் முடிவுரை அழகு!
ரமணி

Vis Gop

unread,
Mar 17, 2016, 1:09:57 AM3/17/16
to santhav...@googlegroups.com
வெள்ளம் அளித்த விடை:
படையெடுத்து நாட்டின் அசுத்தம் போக்குவோம்
நடைபாதைக் குப்பைகளை நாமே அகற்றுவொம்
குடைபிடித்து நடந்தாலும் குனிந்து நடப்போமே!

அரசுகளும் அதிகாரங்களும் அன்று மட்டுமே
பரவசம் தந்திட நாமே என்றென்றுமே
இரந்திடும் ஏழையை அணைத்து காத்திடுவோம்
குரங்கினரிடமிருந்து எம் குவலயம் காத்திடுவோம்!           என்கின்ற எண்ணத்தின் எழுச்சி!    அருமை!

கடவுள் வாழ்த்து
என் கருத்துக்கு உருத்தந்து              அழகு!

அவைவணக்கம் 
சபையோரே அவையோரே           சபை என்பதும் அவை என்பதும் ஒன்றே.

வெள்ளம் அளித்த விடை

சின்னத் தூறலும் சிரித்துப் பொழிந்து              |
பென்னம் பெரியதாய் பெய்து முடித்தது         |
அன்னம் தரும் அருமை வயல்களும்             |             அருமை!
பின்னும் அனைத்தும் மிதந்தது தண்ணீரில்      |


துணைகள் பலவும் தனித்து தவித்து                        அருமை

பிளையின்றிக் காத்து                                         பிழை?

வெள்ளமும்
துவைத்துப் போட்டது என் தாயகத்தையே!            நன்று.


மழைநீரின் வேகம் அளித்தது சாதியை                         அழித்தது சாதியை?


எள்ளளவும் இன்பம் பிறளாது வாழ்வோம்...             பிறழாது [இன்பம் பிறழாது என்றால்?]

Narayan Swaminathan

unread,
Mar 17, 2016, 1:33:17 AM3/17/16
to santhav...@googlegroups.com
புலவர் ராமமூர்த்தி , உங்கள் பாராட்டுக்கு  மிக்க நன்றி.

சுவாமிநாதன்

Kaviyogi Vedham

unread,
Mar 17, 2016, 8:27:30 AM3/17/16
to santhavasantham
ஆம்.. எளிமையாயிருந்தாலும் நல்லகருத்துடைய கவிதை(புது..?) சோதரி,
 வாழ்க,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி--- pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
 Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 17, 2016, 1:17:20 PM3/17/16
to சந்தவசந்தம்
எளிமைசேர் சொற்க ளாலே இயற்கையின் நிகழ்வாம் வெள்ளம்
அளித்தநல் விடையை இங்கே அழகுறத் தந்தார் புஷ்பா!

அனந்த்

Subbaiyar Ramasami

unread,
Mar 18, 2016, 7:56:13 AM3/18/16
to santhav...@googlegroups.com

பொருள்சிறக்கும் பாடலிங்குப் புஷ்பா கொடுத்தார்

வரவேற்றோம் நாமும் மகிழ்ந்து


Subbaiyar Ramasami

unread,
Mar 18, 2016, 7:59:15 AM3/18/16
to santhav...@googlegroups.com

அடுத்த அழைப்பு  கவிமாமணி சவகர்லால்,,

 

இதுகவிதை எனச்சொல்லும் வண்ணம் பாடல்

எழுதுவதில் வல்லவர்யார், எதைச்சொன்னாலும்

அதுபுதிதாய் விளங்கிடவே சொற்கள் கூட்டி

அளிப்பவர்யார், பொருளாழம் சொற்க ளுக்குள்

பொதிந்துவந்து படிக்கையிலே  புதிய காட்சி

புலப்படவே வைப்பவர்யார், அவரே எங்கள்

நிதிக்கவிஞர் சவகர்லால், இங்கே வந்து

நிகழ்த்துகிற கவிதைக்காய்க் காத்துள்ளோம் நாம்!


நிதிக்கவிஞர்- பொற்கிழிக் கவிஞர்

pushpa christy

unread,
Mar 19, 2016, 9:55:53 AM3/19/16
to santhav...@googlegroups.com

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நிச்சயமாகத் தட்டச்சுப் பிழைகள் தான்.. 


உரிமையுள்ள வ|ளர்ப்பு நாய்கள். செல்லப் பிராணிகள்...

பிழையின்றிக் காத்து.. 

தவறு செய்து விட்டேன்.. எழுதி விட்டு மீண்டும் சரி பிழை பார்க்கவில்லை.. 
மன்னியுங்கள் அன்பு உள்ளங்களே

சோதரி புஷ்பா கிறிஸ்ரி


On Wed, Mar 16, 2016 at 10:30 PM, GMAIL <krish...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (krish...@gmail.com) Add cleanup rule | More info

7வது கண்ணி 2ஆம் வரி:
உருமையுள்ள நாய்கள்

8வது கண்ணி 4ஆம் வரி:
பிளையின்றிக் காத்து

தட்டச்சுப்பிழைகளா அல்லது ஏதேனும் சிறப்புப் பொருள் இருக்கிறதா ?

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone

On 17 Mar 2016, at 7:12 AM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:

pushpa christy

unread,
Mar 19, 2016, 9:57:40 AM3/19/16
to santhav...@googlegroups.com
நான் சரி பிழை பார்க்கவில்லை. நேரப் பற்றாக்குறை.. திருத்திதி தந்ததற்கு நன்றி ஐயா,, 

சோதரி புஷ்பா கிறிஸ்ரி

On Thu, Mar 17, 2016 at 1:09 AM, Vis Gop <vis...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (vis...@gmail.com) Add cleanup rule | More info

வெள்ளம் அளித்த விடை:
படையெடுத்து நாட்டின் அசுத்தம் போக்குவோம்
நடைபாதைக் குப்பைகளை நாமே அகற்றுவொம்
குடைபிடித்து நடந்தாலும் குனிந்து நடப்போமே!

அரசுகளும் அதிகாரங்களும் அன்று மட்டுமே
பரவசம் தந்திட நாமே என்றென்றுமே
இரந்திடும் ஏழையை அணைத்து காத்திடுவோம்
குரங்கினரிடமிருந்து எம் குவலயம் காத்திடுவோம்!           என்கின்ற எண்ணத்தின் எழுச்சி!    அருமை!

கடவுள் வாழ்த்து
என் கருத்துக்கு உருத்தந்து              அழகு!

அவைவணக்கம் 
சபையோரே அவையோரே           சபை என்பதும் அவை என்பதும் ஒன்றே.

வெள்ளம் அளித்த விடை

சின்னத் தூறலும் சிரித்துப் பொழிந்து              |
பென்னம் பெரியதாய் பெய்து முடித்தது         |
அன்னம் தரும் அருமை வயல்களும்             |             அருமை!
பின்னும் அனைத்தும் மிதந்தது தண்ணீரில்      |


துணைகள் பலவும் தனித்து தவித்து                        அருமை

பிளையின்றிக் காத்து                                         பிழை?

வெள்ளமும்
துவைத்துப் போட்டது என் தாயகத்தையே!            நன்று.


மழைநீரின் வேகம் அளித்தது சாதியை                         அழித்தது சாதியை?


எள்ளளவும் இன்பம் பிறளாது வாழ்வோம்...             பிறழாது [இன்பம் பிறழாது என்றால்?]

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

--

pushpa christy

unread,
Mar 19, 2016, 10:00:14 AM3/19/16
to santhav...@googlegroups.com
நன்றி இலந்தை ஐயா. 
உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.. 
என் கவிதையை உரிய நேரத்தில் இட்டமைக்கு நன்றி 

சோதரி 
புஷ்பா கிறிஸ்ரி


On Fri, Mar 18, 2016 at 7:56 AM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kavim...@gmail.com) Add cleanup rule | More info

பொருள்சிறக்கும் பாடலிங்குப் புஷ்பா கொடுத்தார்

வரவேற்றோம் நாமும் மகிழ்ந்து

2016-03-17 12:16 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

pushpa christy

unread,
Mar 19, 2016, 10:06:31 AM3/19/16
to santhav...@googlegroups.com
என் அன்பு சந்த வசந்த சொந்தங்கட்கு, 
எல்லோரும் நலம் தானே

கணவருக்கு இருதய சத்திரசிகிச்சை, மகளின் உடல்நலமின்மை.. வீட்டு வேலைகள், பணி, கடைத்தெரு என்று மிகவும் வேலைப்பழு. எனவே தான் குழுமப் பக்கம் வரவில்லை.. 
இருப்பினும் உங்கள் அனைவரின் கவிதைகளையும் அவ்வப்போது படிக்க முடிந்தது. கருததுச் சொல்ல வரவில்லை. மன்னிக்கவும்.. 

என் வரிகட்குக் கருத்துச் சொன்ன இலந்தை ஐயா, சுப்பராமன் ஐயா, ரமணி, கோபால், சிங்கை குமார், கவியோகி வேதம் ஐயா, அனந்த ஐயா அனைவர்க்கும் என் பணிவான நன்றி.. 

முடிந்தவரை வர முயற்சிக்கின்றேன்.. 

அன்புச் சோதரி 
புஷ்பா கிறிஸ்ரி

Subbaiyar Ramasami

unread,
Mar 23, 2016, 6:07:27 AM3/23/16
to santhav...@googlegroups.com

அடுத்த அழைப்பு  கவிமாமணி சவகர்லால்,,

 

இதுகவிதை எனச்சொல்லும் வண்ணம் பாடல்

எழுதுவதில் வல்லவர்யார், எதைச்சொன்னாலும்

அதுபுதிதாய் விளங்கிடவே சொற்கள் கூட்டி

அளிப்பவர்யார், பொருளாழம் சொற்க ளுக்குள்

பொதிந்துவந்து படிக்கையிலே  புதிய காட்சி

புலப்படவே வைப்பவர்யார், அவரே எங்கள்

நிதிக்கவிஞர் சவகர்லால், இங்கே வந்து

நிகழ்த்துகிற கவிதைக்காய்க் காத்துள்ளோம் நாம்!


நிதிக்கவிஞர்- பொற்கிழிக் கவிஞர்

Subbaraman NV

unread,
Mar 23, 2016, 6:29:38 AM3/23/16
to santhav...@googlegroups.com
ஒற்கிழிக் கவிஞர் சவகர்லால் கவிதைக்குக் காத்து நிற்கும்
என் வி சுப்பராமன்.

Subbaiyar Ramasami

unread,
Mar 25, 2016, 12:35:32 PM3/25/16
to santhav...@googlegroups.com
சவகர்லாலும் தலைகாட்டவில்லை.

அடுத்த அழைப்பு.  
கவிஞர் கார்த்திக் இமயா

வார்த்தைச் சிறப்பும் சொல்லுகிற
            வகையின் சிறப்பும் உட்பொருளின் 
நேர்த்திச் சிறப்பும், புதுக்கவிதை
            நிகழ்த்தும் சிறப்பும். கவிதையினைப்
பார்த்துச் செதுக்கிப் படைக்கின்ற
           பண்புச் சிறப்பும் கொண்டுள்ள
கார்த்திக் இமயா  நல்லதொரு
           கவிதை இங்கே தந்திடுக!
இலந்தை


Subbaiyar Ramasami

unread,
Mar 26, 2016, 4:54:27 AM3/26/16
to santhav...@googlegroups.com
கவிதை எழுதித் தயாராக வைத்திருப்பவர்கள் எனக்கு எழுதுங்கள். அவர்களை ஒவ்வொருவராக அழைத்துவிடுகிறேன்.

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Mar 28, 2016, 8:12:25 PM3/28/16
to santhav...@googlegroups.com
யாருமே தயாரில்லையா?

karthik emaya

unread,
Mar 31, 2016, 1:33:40 PM3/31/16
to santhavasantham
என்னை கவிதை உலகில் கரம் பிடித்து நடத்திச் செல்லும் அவைக்கும், 

என் கவிதை குரு ஐயா. இலந்தையார் அவர்களுக்கும், நன்றியும் வணக்கங்களும்.!

வெள்ளம் அளித்த விடை

அன்றுதான்… ஆம்

தண்ணீர்க் காட்டில்

நகரம் மிதந்து கொண்டிருந்த

அன்றுதான்…


பலமுறை கவிதை புனைந்து 

கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல்

நகரம் கிழிந்து கிடந்த

அன்றுதான்…

 

பெயர் தெரியாத

முதியோர் இல்லம் ஒன்றில்..

பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்

அடுக்கி வைத்து அழகு பார்த்த

ஓர் ஈரம் பிசுபிசுத்த நாள்

அன்றுதான்…

 

கரைகளில் பிறந்தும்

கரை சேராத பலபேர்

நாளை என்பதை மறந்து

அன்றைக்கான இலவசத்திற்காய்

காத்திருந்த அன்றுதான்…

 

சின்னஞ்சிறு வயதில்

வயலோரம் நான்பார்த்து

சேற்றில் நின்ற கால்கள் சில

சேற்றுப்புண்ணோடு பிரண்டுகிடந்த

அன்றுதான்…

 

மரக்கால்களில்

அள்ளித்தந்த கைகள் சில

மறத்துபோய் பிச்சை ஏந்திய

அன்றுதான்…

 

விரிசல்விட்ட வீடு புறம்கிடக்க

கரிசல் காட்டில் உடல்கள் ஊரிக் கிடக்க

என் இனமோ,

வரிசைக் கட்டி அரிசி ஏந்திய

அன்றுதான்…

 

பசியில் நொந்து

அங்குல இடைவெளியில்

பானைபானையாய் நீர் இருந்தும்

பாலைவனமாய் வரண்டு கிடந்த

ஊரோரத் தமிழனொருவனின் நாக்கு,


அரசியல் கண்ணாடியில் வாக்காகத் தெரிந்த

அன்றுதான்…

 

சுனாமி சுருட்டி

‘தானே’ தடம்புரட்டிய

அந்த கடலூரானை

மழை சலவை செய்தது...

 

உடலளவில் எழுந்து

மனதளவில் குனிந்து கிடக்கும் அவன்

மடியேந்திய அன்றுதான்…

 

இல்லத்தைக் கடந்து

இல்லத்தரசி கைநீட்ட மாட்டாள்.

அவள் உள்ளத்தை உலுக்கி

தன்மானப் பாத்திரத்தோடு

வீதிகளில் திரியவிட்ட

அன்றுதான்…


ஆம், அன்றுதான்

வெள்ளம் அந்த விடையைச்

சொன்னது!

 

நாகரீகம் என்பது

வெறும் நகர்மயமாவதல்ல!


நாகரீகம் என்பது

பணம் மட்டும் சார்ந்ததல்ல!


நாகரீகம் என்பது

விழுந்தவனைப் பார்த்து வருந்துவதில்லை!

 

பரிணாமம் என்பது

பாத்திரத்தில் பரிமாறுவதல்ல!

 

பரிணாமம் என்பது

இரண்டு அறை, ஒரு கழிவறை

சொந்தம் கொள்வதல்ல!

 

மனிதாபிமானம் என்பது

உணவு, உடை மட்டும் சார்ந்ததல்ல!

 

மனிதாபிமானம் என்பது

ஒரு நாள், ஓரிரவு இச்சையல்ல!

 

தன்மானம் என்பது

கால்சட்டை, மார்சட்டை

மத்தியில் மட்டுமல்ல..

 

தன்மானம் என்பது

இனம் சார்ந்தது, சுயம் சார்ந்ததல்ல!

 

விழிப்பதென்பது விழிமட்டும்

சார்ந்ததல்ல!

 

எழுவதென்பது வலியை மறப்பதல்ல!

 

மாற்றம் என்பது

தலைகள் மட்டும் மாறுவதல்ல!

 

வெள்ளம் விடைசொல்லி வழிந்தோடியது

உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்!

 

-

உண்மையுடன்,

கார்த்திகேயன் இமயவரம்பன்

9710849500

 

 

 

 

 

Very Truly Urs,

Karthikeyan .E
Research Associate,
Analytical Research and Development,
Hospira Healthcare India Pvt Ltd.,
Chennai, Tamilnadu
+91-971-0849500

Subbaraman NV

unread,
Apr 1, 2016, 12:47:42 AM4/1/16
to santhav...@googlegroups.com
அருமை கார்த்திகேயன். இமயவரம்பன் அல்லவா நீங்கள்! வாழ்த்துக்கள்.
என் வி சுப்பராமன்

karthik emaya

unread,
Apr 1, 2016, 1:21:23 AM4/1/16
to santhavasantham

நன்றி அய்யா... 

Vis Gop

unread,
Apr 1, 2016, 1:31:17 AM4/1/16
to santhav...@googlegroups.com
அருமை! அணையைத் தாண்டும் வெள்ளம்போல் மரபைத் தாண்டிப் பாய்கிறது உங்கள் கவித்துவம்! வளர்க!
என் சுட்டல்களைக் கீழே காண்க.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2016-03-31 23:03 GMT+05:30 karthik emaya <kkn...@gmail.com>:
வெள்ளம் அளித்த விடை
.
.

பலமுறை கவிதை புனைந்து 

கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல்   [ஏன் அது புதையல்?]

நகரம் கிழிந்து கிடந்த அன்றுதான்…

 

பெயர் தெரியாத முதியோர் இல்லம் ஒன்றில்..

பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்

அடுக்கி வைத்து அழகு பார்த்த   [ஐயகோ! தாங்க முடியவில்லை!]

ஓர் ஈரம் பிசுபிசுத்த நாள் அன்றுதான்…

 

கரைகளில் பிறந்தும் கரை சேராத பலபேர்

நாளை என்பதை மறந்து

அன்றைக்கான இலவசத்திற்காய்

காத்திருந்த அன்றுதான்…          [அருமை]

 

.
.

மரக்கால்களில்

அள்ளித்தந்த கைகள் சில

மறத்துபோய் பிச்சை ஏந்திய  [அருமை!]

அன்றுதான்…

 

 

பசியில் நொந்து அங்குல இடைவெளியில்

பானைபானையாய் நீர் இருந்தும்

பாலைவனமாய் வரண்டு கிடந்த           [பரிதாபம்!]

ஊரோரத் தமிழனொருவனின் நாக்கு,

.
.
.

நாகரீகம் என்பது

வெறும் நகர்மயமாவதல்ல!   [நன்று]

.

.

மனிதாபிமானம் என்பது

உணவு, உடை மட்டும் சார்ந்ததல்ல! [நன்று! இத்தலைப்பில் நீங்கள் ஒரு கட்டுரை எழுதுங்களேன்!]

 .

 தன்மானம் என்பது

இனம் சார்ந்தது, சுயம் சார்ந்ததல்ல!     [மனித இனமா?].

.

வெள்ளம் விடைசொல்லி வழிந்தோடியது [கேள்வி? வாசிக்கும் அனைவரின் உள்ளத்தில் எழுந்தவை?]

உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்!    [சோகத்தில்?]

karthik emaya

unread,
Apr 1, 2016, 2:29:16 AM4/1/16
to santhavasantham

 
வரிவரியாக! :)
 
என் படைப்புக்கு, இப்படியான வாழ்த்து, இதுவே முதல் முறை.!
 
 
எந்த கவிஞனுக்கும் இது ஒரு பேரானந்தம்!
மிக்க நன்றி.


 
வெள்ளம் அளித்த விடை
.
.

பலமுறை கவிதை புனைந்து

கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல் [ஏன் அது புதையல்?]

எனக்கு ஒரு பழக்கமுண்டு, எனது கவிதையின் கிறுக்கல் மொத்தமும் சேர்த்து வைத்திருக்கிறேன்... அதில் நான் பயன்படுத்தி அடித்த வார்த்தைகளில் என்னைப் பற்றிய பல விடயங்கள் விரவிக் கிடப்பதை, அவ்வப்போது கண்டு நகைப்பேன்...

நகரம் கிழிந்து கிடந்த அன்றுதான்…

பெயர் தெரியாத முதியோர் இல்லம் ஒன்றில்..

பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்

அடுக்கி வைத்து அழகு பார்த்த [ஐயகோ! தாங்க முடியவில்லை!]

Little Drops old age home, iyappanthangal...  From Dec 1st to Dec 4th,  there were 13 deaths... That building was like an island and I witnessed..

கட்டுரை, நிச்சயம் எழுதுகிறேன்... உந்துதலுக்கு நன்றி..

இனம் சார்ந்ததல்ல [மனித இனமா ]

பாடங்கள் அதைத் தான் சொல்லிக் கொடுத்தன...  ஆனால் 2009 லிருந்து, எதிர்கொண்ட பிற நிகழ்வுகளின் காரணமாக, என்னில் ஒரு தத்துவப் பிறழ்வு நடந்திருக்கிறது... 

இந்த கவிதையைப் பொறுத்தவரை, இதன் அர்த்தம் படிப்பவரின் பார்வை சார்ந்தே இருக்கட்டும், என நான் நினைக்கிறேன்...

தொடர்ந்து ஊக்கம் தாருங்கள். படைக்கத் தூண்டுகிற உள்ளத்தில், கடவுள் ஒளிந்திருக்கிறார்...

-

--

Kaviyogi Vedham

unread,
Apr 1, 2016, 8:35:44 AM4/1/16
to santhavasantham
உங்கள் கவிதை மிக நன்று. ஒரு புதிய கோணத்தில் எனக்கு உம் வரிகள் பரவசம் தந்தன. வாழ்க இமயவரம்பன்,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி--- pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
 Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








2016-03-31 23:03 GMT+05:30 karthik emaya <kkn...@gmail.com>:

Siva Siva

unread,
Apr 1, 2016, 8:37:51 AM4/1/16
to santhavasantham
வெள்ளத்தின் தாக்கத்தை உங்கள் வார்த்தைகளில் கண்டேன்.

/இல்லத்தைக் கடந்து
இல்லத்தரசி கைநீட்ட மாட்டாள்./

கைநீட்டுதல்? கையேந்துதல்?

அகராதிப்படி இரண்டுமே யாசித்தல் என்ற பொருளில் வரும் எனினும்!

(கைநீட்டு-தல் kai-nīṭṭu- 
, v. < id. +. tr. 1. To beg, pray for gift or charity; இரத்தல். 2. To steal, pilfer; திருடுதல்.--intr. 1. To lift one's hand against another; அடிக்கக் கை யோங்குதல். 2. To condole; இழவு விசாரித்தல். (யாழ். அக.)

கையேந்து-தல் kai-y-ēntu-
, v. intr. < id. +. Lit., to hold out hands. To beg; [கையை யேந்துதல்] யாசித்தல்.)

அன்போடு,
வி. சுப்பிரமணியன் 

karthik emaya

unread,
Apr 1, 2016, 11:03:20 AM4/1/16
to santhavasantham

பாராட்டுகளுக்கு நன்றி...

கை நீட்டு / கையேந்து,  வேறுபாடு இதுவரை நான் அறியாத ஒன்று.

நன்றி..

--

Subbaiyar Ramasami

unread,
Apr 1, 2016, 10:07:13 PM4/1/16
to santhav...@googlegroups.com
இப்படித்தான் பின்னூட்டம் இருக்க வேண்டும்
     இடைவெளியில் சோர்வடித் திருந்த போது
செப்பிடத்தான் சிறப்பாகக் கவிதை ஒன்றைச்
     சிந்தனையில் உரமேற்றித் தந்தார் கார்த்திக்
எப்படித்தான் இவ்வண்ணம் எழுது தற்கே
     இயன்றதென எண்ணுகிறேன், வார்த்தை வேகம்
அப்படியே ஈர்க்கிறது, புதிய நோக்கில்
      அமைந்துளது கவிஞருக்கு வாழ்த்து. வாழ்க!

Subbaiyar Ramasami

unread,
Apr 1, 2016, 10:08:17 PM4/1/16
to santhav...@googlegroups.com
வெண்கொற்றன் பாடல் விருந்து படைத்திடவே
பண்மொண்டு நல்குக பா!

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Apr 1, 2016, 10:13:14 PM4/1/16
to santhav...@googlegroups.com
ஞாயிறு ராமசாமி நல்குக  தம்பாடல்
ஆயத்தம் ஆக அமர்ந்துள்ளோம்-  பாயட்டும் 
வெள்ளம் ,பகரட்டும் நல்விடை  ந்ற்கவிதை
உள்ளம் கவரும் உடன்

Narayan Swaminathan

unread,
Apr 2, 2016, 7:33:03 PM4/2/16
to santhav...@googlegroups.com

உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன்
வாழ்த்துகள், பாராட்டுகள்.


சுவாமிநாதன்

லாஸ் ஏஞ்சலஸ்

karthik emaya

unread,
Apr 3, 2016, 1:24:44 AM4/3/16
to santhavasantham

நன்றி

Subbaiyar Ramasami

unread,
Apr 4, 2016, 10:49:25 PM4/4/16
to santhav...@googlegroups.com
அழைக்கப்பட்டவர்கள் எவரும் கவிதை இடவில்லை. இனி அழைப்புத்தேவையில்லை. யார் கவிதை எழுதி வைத்திருந்தாலும் அழைப்பின்றி இடலாம். இரண்டு நாள்கள் பார்த்துவிட்டு, எவரும் இடவில்லை என்றால் கவியரங்கை நிறைவு செய்கிறேன்

இலந்தை

M. Viswanathan

unread,
Apr 5, 2016, 2:30:12 PM4/5/16
to Santhavasantham
அன்புக் கவிஞர் கார்த்திகேயன்  படைத்த கவிதை நெஞ்சைத் தொட்டது. 
என்னை ஈர்த்த வரிகள்:

"இல்லத்தைக் கடந்து

இல்லத்தரசி கைநீட்ட மாட்டாள்.

அவள் உள்ளத்தை உலுக்கி

தன்மானப் பாத்திரத்தோடு

வீதிகளில் திரியவிட்ட

அன்றுதான்…"


நல்வாழ்த்துகளுடன்,

மீ.விசுவநாதன்


Karthikeyan Emayavaramban

unread,
Apr 6, 2016, 9:14:40 AM4/6/16
to santhavasantham

மிக்க நன்றி...

படைக்கத் தூண்டுகிற பாராட்டுக்கள்... !

sudhavedham2008 sudhavedham2008

unread,
Apr 7, 2016, 10:49:39 AM4/7/16
to santhav...@googlegroups.com

மிக அருமையான கவிதை.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 7, 2016, 9:46:07 PM4/7/16
to சந்தவசந்தம்
>> வெள்ளம் விடைசொல்லி வழிந்தோடியது

உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்!


உள்ளத் துணர்வுகளைத் தெள்ள எடுத்துரைத்து வெள்ளம் அளித்த விடையின் தாக்கத்தைக் கவிதையில் வெளிப்படுத்திய விதம் மிக அருமை.,


2016-03-31 13:33 GMT-04:00 karthik emaya <kkn...@gmail.com>:

Subbaiyar Ramasami

unread,
Apr 9, 2016, 3:15:04 AM4/9/16
to santhav...@googlegroups.com
மேலும் விடைபகர் வேண்டி அழைத்திடினும்
சாலப் படைத்துத் தரவில்லை-  கால
இடைவெளி விட்டதால் இக்கட்டு, நாமும்
கடைகட்டி விட்டோம்  களம்

இலந்தை



Vis Gop

unread,
Apr 9, 2016, 4:11:08 AM4/9/16
to santhav...@googlegroups.com
வெள்ளத்தைக் கூப்பிட்டு விடைசொல்ல வைத்தார்கள்
உள்ளத்தைத் தொடவல்ல உயர்கவிகள் கவியரங்கில்.
தன்வாழ்வில் புயல்வீசத் தடமாட்டம் கண்டாலும்
அன்பான கவிவேழம் அரங்கத்தில் வெற்றிகண்டார்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Siva Siva

unread,
Apr 9, 2016, 9:47:07 PM4/9/16
to santhavasantham
இடையே நிகழ்ந்த துன்பத்தையும் தாங்கிக்கொண்டு கவியரங்கத்தைத் தொடர்ந்து நடத்தி நிறைவுசெய்த கவியரங்கத் தலைவரின் செயல் பாராட்டுக்குரியது.

அன்போடு,
வி. சுப்பிரமணியன் 

Subbaraman NV

unread,
Apr 9, 2016, 10:16:49 PM4/9/16
to santhav...@googlegroups.com
அருமையான துவக்கம்,அருமையான நிறைவு. தலைவருக்கு நன்றி.கவிஞர்களுக்கும், பின்னூட்டம் வழங்கி ஊக்கியவர்களுக்கும்  நன்றியும்,  வாழ்த்தும் பாராட்டும்.
என் வி சுப்பராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Apr 9, 2016, 11:11:52 PM4/9/16
to சந்தவசந்தம்
இடையே துக்கம் எழுந்தாலும்
. எடுத்த  செயலைத் தக்கபடி
முடித்து வைத்த கவிவேழம்
. முத்தன் அருளால் வாழியவே!
அடுத்த கவியின் அரங்கத்தை
. ஆரம் பிப்பார் கவியோகி
கொடுத்த தலைப்பென் றில்லாமல்
. கொளட்டும் கவிஞர் தம்தலைப்பே!

--ரமணி, 10/04/2016

*****

Kaviyogi Vedham

unread,
Apr 10, 2016, 4:21:49 AM4/10/16
to santhavasantham
ஓகோ கோ.. அடுத்ததற்கு இப்போதே கவிவேழம் எனக்குத் தலைவர் பதவி அளித்துவிட்டாரா என்ன ரமணி?
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி--- pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
 Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








ramaNi

unread,
Apr 10, 2016, 7:57:52 AM4/10/16
to சந்தவசந்தம்
யோகியார் அவர்களே!

இது பற்றிய உங்கள் பரிந்துரை கீழே:

yogiyaar 12/24/15
இலந்தையார்க்கு அடுத்த கவியரங்கில் 43-வதுக்கு- என்னைத் தலைவராகப்போடலாமே!, நன்றி,
யோகியார்

இலந்தையார் தலைவராக நியமிக்க, விரைவில் கவியரங்கத்தை ஆரம்பித்து ஜமாயுங்கள்.. அவரவர்க்குப் பிடித்த தலைப்பில் எழுதலாம் என்பது என் பரிந்துரை.

அன்புடன்,
ரமணி

Kaviyogi Vedham

unread,
Apr 10, 2016, 9:32:55 AM4/10/16
to santhavasantham
சரி.. ஆயின் எனக்குச் சுதந்திரம் வேண்டும். அற்புதமான ஒரு தலைப்பு வைத்துள்ளேன். தலைவர் அருள வேண்டும்,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி--- pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
 Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








Subbaiyar Ramasami

unread,
Apr 10, 2016, 12:20:05 PM4/10/16
to santhav...@googlegroups.com
சந்த வசந்தத்தில் இதுவரை தலைப்புக் கொடுத்தே வந்திருக்கிறோம். தலைப்புக்கொடுத்தால்தான்  எழுத முடிகிறது என்பது சிலர் கருத்து. தலைப்பு இதுவரை இலந்தைதான் கொடுத்து வந்திருக்கிறார். தலைப்பையும் நாளையும் குறித்துத்  தலைவரை அறிவித்த பிறகு கவியரங்கத் தலைவரின் உரிமையில் யாரும் தலையிடுவதில்லை. . தலைப்பு  என்னவென வேதம் எனக்குத் தனி அஞ்சலில் தெரிவிக்கவும். 

OAGAI NATARAJAN

unread,
Apr 10, 2016, 4:07:49 PM4/10/16
to santhav...@googlegroups.com
சந்த வசந்த அன்பர்கள் என்னை அன்புடன் மன்னித்து அருள வேண்டும். பாதி எழுதிய கவிதையை முடிக்க இயலாமல் பல வேலைகள் குருக்கிட்டதால் நேரத்துக்கு என்னால் கவிதையைத் தர இயலவில்லை. இணைத்திருக்கும் கவிதையை கவியரங்கில் சேர்க்காமல் தனிப்பதிவாகவும் கருதிக் கொள்ளலாம்.

அன்புடன் 
ஓகை நடராஜன்.

**********************************************

வெள்ளம் சொன்ன விடை:

அள்ளக் குறையா அறிவளிக்கும் அன்னையிடம்
உள்ள விழைவாய் எண்ணியது கேட்டிட்டேன்
வெள்ளம் விளம்பும் வினாவை யுடைக்கின்ற
வெள்ளைக் கமல விடை.


பிள்ளையாரின் செவியிரண்டும் பெரிதன்றோ தமிழ்கேட்க
வெள்ளமென்ன சொன்னதென்று விளம்பிடுக இங்கென்றே
ஒள்ளியதாம் கவியரங்கில் ஓடவிட்ட வினாவதுவும் 
பிள்ளைகட்கு விளையாட்டோ பேரூழி செயற்கெல்லாம்
கிள்ளைகளும் உள்ளுவதைக் கேட்கின்ற முயற்சியிதோ
பள்ளிசந்த வசந்ததின் பேராசான் இலந்தைக்குப்
பிள்ளையெந்தன் பெருவணக்கம் பின்னிருக்கும் குரவர்க்கும்
தள்ளிநில்லா தமையர்க்கும் தம்பியெந்தன் தலைவணக்கம்.

யூகப் பெருவெளி வேகப் பயணம்
சாநாள் வரைக்கும் சாதனை மனிதம்
ஊழியின் வினாக்கள் யுகமே தொடர
நாழியின் யூகமே நாம்சொலும் விடைகள்
யூகத் தொடங்குக உளமே
ஆகும் உருவகம் ஆக்கமாய்ச் செலவே!

நீரிடம் பள்ளமதில் நீரிடம் பிடித்தீர் 
நீரிடர் செய்தால் நீரென்ன செய்வீர்
நேரும்விடை ஈதென்றால் நகரங்கள் இலையே
மேல்வாழ்தல் நாம்வாழ எத்தனித்தல் ஓர்பிழையோ

நேரிடும் கள்ளமதில் நிறைவாழும் அரசியலார்
நாறிடும் உள்ளமதை நாம்காணச் செய்தவெள்ளம்
கூறிடிம் விடையிதும் குறையிலதோ கூடியிதை
மாறிடவும் செய்யாத மானிடரும் நாமிலையோ

பீறிடும் அன்புளமும் புறப்படச் செய்தவெள்ளம்
பாரறியச் சென்னைதனை பார்க்கவைத்த வெள்ளமிதே
ஊரறியச் சொன்னாரே உறுதருமச் சென்னையென
சீரறியும் வள்ளலாரும் செப்பியதும் முன்னமன்றோ!

வேறேதும் விடையுண்டோ மிண்டிடவும் முனைவேனோ
பேறேதும் பெற்றிலாதப் பேதையிவன் என்செய்வேன்!
வாராத விடைகளுக்காய் வந்தனவே பலவினாக்கள்
காராக வந்தவையும் கற்பனையைத் தூண்டிடுமோ?

இருநண்பர் நான்படைத்தேன் என்னுடைய கற்பனையில்
இருநேரம் இருக்கின்ற காலோடம் செயச்சொன்னேன்
உறுநண்பர் அவரும்தான் உலகியலின் அறிவியலார்
நறுமதியின் விளைவாக நல்லதொரு கருவிசெய்தார்

முத்தனைய புகார்நகரும் முடிந்துளத்தே நீர்ச்செயலால்
எத்தகைய பழிச்சொல்லும் எழுப்புதற்கும் ஏலாமல்
வித்தகர்கள் பல்லோரும் விளம்புதற்கும் ஏலாமல்
இத்தகைய விளைவுபல இதுவரையும் நடந்துளதே

பெருநீரால்  கடலமிழ்ந்தப் பழநகராம் புகாரடைய
கருவிதனை இயக்கிவிட்டார் காலங்கள் பின்சென்றார்
வருவிருந்து பார்த்திருந்து செழித்திருந்த நகருள்ளே
கருவியினை ஒளித்துவைத்து கடிநகரில் கால்வைத்தார்.
 
இலக்கியங்கள் சொன்னதெலாம் இனியதென்று உணர்ந்தாரோ
அலச்சியமோ ஆணவமோ அந்நகரில் கண்டாரோ
விலக்கியதாம் வழிகளவர் விரும்பியதைக் கண்டாரோ
துலக்கியது நானறிய தோன்றவிலை மீண்டுமவர்

மறைந்த விடையதை மண்டை உணர்ந்தது
மறைந்துள அனைத்தும் மனிதர் உணர்வரோ
ஊழின் பெருவலி யாவுள
வாழிநீர் வாழி விடையிது உணர்ந்தே!


























VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 10, 2016, 7:02:29 PM4/10/16
to சந்தவசந்தம்

வெள்ளம் அளித்த விடையின்

உள்ளே உறைந்த பொருளை

விள்ள முயன்ற விதத்தில்

உள்ள புதுமை நன்று.

 

அனந்த்

 

குறிப்பு:

கேட்டிட்டேன்?

வினாவை உடைக்கின்ற வெள்ளைக் கமல விடை: இங்கே விடை எப்படி வெள்ளைக் கமலம் ஆகிறது? மென்மையான கமலம் வினாவை உடைக்க வல்லதா?

கூறிடிம்?

வள்ளலாரும் செப்பியதும் முன்னமன்றோ- வள்லலார் கூறியதை விளக்கினால் நன்று.

இருநேரம் இருக்கின்ற காலோடம்? கால ஓடம் (காலவோடம்) ?

விளைவுபல இதுவரையும் நடந்துளதே- விளைவுபல இதுவரையும் நடந்துளவே (பன்மை)

 

ஒற்று:

வெள்ளமென்ன சொன்னதென்று; தள்ளிநில்லா தமையர்க்கும்; சென்னையென சீரறியும்; சென்னைதனை பார்க்கவைத்த;  பெற்றிலாத*ப்* பேதை; கடலமிழ்ந்தப் பழநகராம்; புகாரடைய

கருவிதனை; நானறிய தோன்றவிலை

 


2016-04-10 16:07 GMT-04:00 OAGAI NATARAJAN <enge...@gmail.com>:
சந்த வசந்த அன்பர்கள் என்னை அன்புடன் மன்னித்து அருள வேண்டும். பாதி எழுதிய கவிதையை

Kaviyogi Vedham

unread,
Apr 10, 2016, 11:33:04 PM4/10/16
to santhavasantham
நல்ல பாடல் கவிஞரே.. தாமதம் ஆயினும் கருத்துள்ள பாடல் அளித்தீர் வாழ்க,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. என் முகவரி--- pl. write in English. or in Tamil&
Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே ஃபிப்ரவரியிலிருந்து.
 Kaviyogi vedham,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








Vis Gop

unread,
Apr 11, 2016, 1:57:54 AM4/11/16
to santhav...@googlegroups.com
ஓகை நடராஜன்.
******************************
****************
வெள்ளம் சொன்ன விடை:                  அழகாய்ச் சொன்னது!

பிள்ளையெந்தன் பெருவணக்கம் பின்னிருக்கும் குரவர்க்கும்          [என்றன்?]
தள்ளிநில்லா தமையர்க்கும் தம்பியெந்தன் தலைவணக்கம்.

யூகப் பெருவெளி வேகப் பயணம்                [வேகமாகப் பயணிக்கும் மனித வாழ்வில் புரிவதென்பது
சாநாள் வரைக்கும் சாதனை மனிதம்              [யூகமே! வினாக்களைச் சந்திப்பதே சாதனை. நில்லாமல்
ஊழியின் வினாக்கள் யுகமே தொடர             [ஓடிக்கொண்டிருக்கும் காலம் சொல்வதே விடைகள்.
நாழியின் யூகமே நாம்சொலும் விடைகள்      [அவற்றையே நம் விடைகள் என யூகிக்கிறோம்!  சரியா?
யூகத் தொடங்குக உளமே                             [யூகம் தொடங்குக ?]
ஆகும் உருவகம் ஆக்கமாய்ச் செலவே!

நீரிடம் பள்ளமதில் நீரிடம் பிடித்தீர்        [
நீரிடர் செய்தால் நீரென்ன செய்வீர்       [   அருமை.

நேரிடும் கள்ளமதில் நிறைவாழும் அரசியலார்
நாறிடும் உள்ளமதை நாம்காணச் செய்தவெள்ளம்
கூறிடிம் விடையிதும் குறையிலதோ கூடியிதை
மாறிடவும் செய்யாத மானிடரும் நாமிலையோ      [காலத்திற்கேற்ற கேள்வி.

முத்தனைய புகார்நகரும் முடிந்துளத்தே நீர்ச்செயலால்        [உளதே?
எத்தகைய பழிச்சொல்லும் எழுப்புதற்கும் ஏலாமல்
வித்தகர்கள் பல்லோரும் விளம்புதற்கும் ஏலாமல்
இத்தகைய விளைவுபல இதுவரையும் நடந்துளதே

 
மறைந்த விடையதை மண்டை உணர்ந்தது                    [நீரின் போக்கைத் தடுத்திராத காலத்திலும்
மறைந்துள அனைத்தும் மனிதர் உணர்வரோ                 [வெள்ளம் நகரத்தை அழித்ததுண்டு.
ஊழின் பெருவலி யாவுள                                           [வாழ்வுக்கும் அழிவுக்கும் காரணங்கள் பல. அவை
வாழிநீர் வாழி விடையிது உணர்ந்தே!                          [நமக்குப் புலப்படா. இதுதான் விடை! சரியா?

அருமையான இக்கவிதை இயற்கையின் சீற்றமும் அதைத் தொடரும் அழிவும் விதி என்று சொல்கிறது. இது யாவரும் உணர வெண்டிய உண்மைதான். ஆயினும் அறிவியலால்/மதியால் விதியை வெல்ல முடியும் என்று தருக்குகிற மனிதன் தன் குழியைத் தானே தோண்டும் மூடத்துவத்தைக் கைவிடுவதில்லை! நுனிக் கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டினால் கிளை விரைவாக முறியும் என்பது அறிவியல் படி சரிதானே! இதுபோன்ற பிழைகளையும் இந்தக் கவியரங்கம் சுட்டியது. முதலில் இத்தலைப்பை ஏதோ தலைவரின் கையில் கிடைத்த பண்டம் என்று நினைத்தேன். ஆனால் அது இயற்கை, இறைமை, ஆன்மிகம், அறிவியல், விதி, மதி, அரசியல், அக்கறை, அன்புடைமை, வாளாவிருத்தல், பசி, நோய், அச்சம், தன்னலம், சமூகநலம், தொண்டு  . . . . என அலசி மனிதத்துக்கு ஒரு படிப்பினையைத் தந்தது. வென்றியும் என் நன்றியும் தலைவருக்கே!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

OAGAI NATARAJAN

unread,
Apr 11, 2016, 9:41:03 PM4/11/16
to santhav...@googlegroups.com
என் பாடலைப் பாராட்டிய அனந்தய்யா, யோகியார், கோபி மற்றும் படித்த அனைவருக்கும் நன்றி. 

கேட்டிட்டேன்?  -  தேமாங்காய்க்காகப் போட்டது. கேட்கின்றேன் என  மாற்றுகிறேன்.

வினாவை உடைக்கின்ற - தவறுதான்.  விடுக்கின்ற என மாற்றுகிறேன்.
 வெள்ளைக் கமல விடை - கலைவாணியின் விடையாக அன்மொழிதொகை போல குறிப்பிட்டேன்.

                                               இந்தப் பயன்பாடு தவறா?

வள்லலார் கூறியதை விளக்கினால் நன்று. - இந்தப் பாடலைக் குறித்து அவ்வாறு எழுதினேன்.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற   உத்தமர்தம் உறவு வேண்டும் 

        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்   உறவு கலவாமை வேண்டும் 
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை   பேசா திருக்க வேண்டும் 
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்  பிடியா திருக்க வேண்டும் 
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை  மறவா திருக்க வேண்டும் 
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற  வாழ்வுனான் வாழ வேண்டும் 
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்   தலமோங்கு கந்த வேளே 
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி   சண்முகத் தெய்வ மணியே. 

சென்னையைக் குறித்துப் பலராலும் பெருமையாக இப்பாடல் வரி குறிப்பிடப் படுகிறது.

 கால ஓடம் (காலவோடம்) ? - ஆம்.

மற்ற பிழைகளைச் சுட்டியதற்கு மிக நன்றி. திருத்தி மீண்டும் பதிக்கின்றேன்.

அன்புடன் 

ஓகை நடராஜன்.


--

Subbaiyar Ramasami

unread,
Apr 15, 2016, 8:43:59 AM4/15/16
to santhav...@googlegroups.com
நீரிழிவால் சென்னைக்கு நேர்ந்தவற்றை நடராஜன்
சீருரவே நல்லவிதம் செப்பினார்-  யாரெவரும்
ஊழில் விழுந்தே உழல்வதுபோல் மாநகர்க்கும் 
ஊழுண்டு போலும் உரை

Subbaiyar Ramasami

unread,
Apr 15, 2016, 8:51:14 AM4/15/16
to santhav...@googlegroups.com

வெள்ளம் அளித்த விடை


உள்ள நதியில் அடிக்கடியே
     ஓடிச் செல்லும் பெருவெள்ளம்
கள்ள மாசு பலப்பலவும்
      , கரைந்தே ஓடும், அதன் பின்னர்
மெள்ள மெள்ளத் தலை தூக்கும்
       வெள்ளம் மீண்டும் வந்தால்தான்
உள்ளம் சுத்தம் கிடவே
       ஓடும் வெள்ளம் தான் விடையா?


”தூய்மை யாகும் உள்ளமெனில்
  தொலைந்த வற்றுள் நல்லவையும்
தேய்ந்து போதல் ஓர் பயனோ
  திரும்பத் திரும்பச் சேர்ப்பதுவோ
ஓய்ந்து போன பின்னாலே
   உருவாக் கங்கள் செய்வதுவோ?
ஆய்ந்து நல்ல எண்ணங்கள்
    அழியா திருக்க அருள்வாயே!”


வெள்ளத்திடம்நான் இதைக் கேட்டேன்
     வேண்டிப் பெற்ற விடையிதுதான்
கள்ளம் என்பாய், பொய்யென்பாய்
     கனிவு காய்ச்சல், நல்லவைகள்
தெள்ளத் தெளியக் கோடிட்டுத்
      தீட்டும் எல்லை இல்லையடா!
அள்ளிச் செல்வேன் ஆனாலும்
      அறிவைச் சிதையேன் என்றதுவே

அடித்த உள்ள வெள்ளத்தில்
     அடியேன் இழப்புப் பேரிழப்பு
வடித்த வெள்ளம், சக்கையையும்
      வாரிச் சென்ற போதினிலும்

படிப்புத் தந்த புத்தகத்தைப்

     பாவி, கொண்டு போயிற்றே
அடித்துச் சொன்ன சொல் பொய்யோ?
     அறிவைக் கொண்டு போயிற்றே!


சுத்த அறிவே தொழுந்தெய்வம்
   தூய்மை மட்டும் அதிலுண்டு
செத்த சொத்தை என்பதெலாம்
   சேர்க்கும் சொத்து, நீகற்ற
வித்தை கூட விளையாட்டு
   வெள்ளம் தந்த விடைகேட்டு
புத்தி சிரிக்கும், பெற்றதெது
   போதம் தானா? இலை புதிரா?

இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2016, 11:27:34 AM4/15/16
to சந்தவசந்தம்
அருமையான முடிப்புக் கவிதை. 

>> வெள்ளம் தந்த விடைகேட்டு
>> புத்தி சிரிக்கும், பெற்றதெது
  >> போதம் தானா? இலைபுதிரா?

ண்ண வெள்ளத்(து) ஓட்டத்தில்
.. எழுந்த சொற்கள் எம்முள்ளே

வண்ணக் கலவை யாய்ப்படிந்து
.. வகைபல வாகப் பரவியதே

கண்ணாய் விளங்கும் அறிவினுள்ளே
.. கருத்தாய்த் திகழும் ஆன்மபலம்

திண்ணம் புதிரை விடுவிக்கும்
.. திரும்பக் கிட்டும்  தெளிந்தநிலை.

அனந்த்
15-4-2016
Reply all
Reply to author
Forward
0 new messages