விளாங்காய்ச் சீர்

47 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
May 2, 2014, 5:14:12 AM5/2/14
to santhavasantham

இதுபற்றி இக்குழுமத்தில் ஏராளமாக விவாதிக்கப்ட்டுள்ளதை அறிவேன்.

ஐயம்  இதுதான்.

(1)”  கனிச்சீர் வருவது பிழை.-  வரவே கூடாது” என்பது போல, இது வருவது பிழை. --  வரக்கூடாது.

அல்லது  

(2) வருவது தவிர்த்தல் நன்று  , வ்ராமற் பாஅவடித்தல் சிறப்பு.  (ஆனாலும்  வருவது   “ பிழை” யன்று)


மேலே சொன்னவற்றில்  எது சரியான நிலை? 

ஐயம்  எழக் காரனமான பா இதோ.

ஆலகால  நஞ்சினை  அஞ்சாமற்  கையேந்திச் 
சீலமுடன்  சேர்த்தார்  சிவன்பால் - ஞாலமுளோர்
அன்று  முதலன்னார்க்  காலால  சுந்தரர் 
என்றுபெய  ரிட்டா  ரிசைந்து.


அகிவ.

    

அகிவ

K.R. Kumar

unread,
May 2, 2014, 5:30:32 AM5/2/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள ராஜன்,

சில தட்டச்சுப் பிழைகள் கண்டேன்.
 
இவை தட்டச்சு செய்ததை மீண்டும் படிக்காமல் அனுப்புவதால் ஏற்படும் பிழைகள். கட்டாயம் தவிர்க்கலாம்; தவிர்க்க முடியும்.

//(1)”  கனிச்சீர் வருவது பிழை.-  வரவே கூடாது” என்பது போல, இது வருவது பிழை. --  வரக்கூடாது.

அல்லது  

(2) வருவது தவிர்த்தல் நன்று  , வ்ராமற் பாஅவடித்தல் சிறப்பு.  (ஆனாலும்  வருவது   “ பிழை” யன்று)//

அன்புடன்,
குமார்(சிங்கை)



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaier Ramasami

unread,
May 2, 2014, 7:49:47 AM5/2/14
to சந்தவசந்தம்
இரண்டாவதுதான் சரி. 

சிலசமயங்களில் கனிச்சீர் காய்ச்சீர்போலத் தோற்றமளிக்கும் அப்போது வெண்பாவில் பயன்படுத்தலாம். நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்.

விளாங்காய்ச்சீர் தவிர்ப்பது நல்லது.  ஓசை கூடும். அவ்வளவே! 
முறுக்குமீசை  என்ற சொல்லைத் தமிழழகன் பயன்படுத்தியிருக்கிறார்.

கி வ.ஜா விளாங்காய்ச்சீரைப் பயன்படுத்துவதை ஏற்கவில்லை.  

இலந்தை

இலந்தை


Varadharajan A K

unread,
May 2, 2014, 7:59:12 AM5/2/14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
 நன்றி குமார். இனி கவனமாக இருப்பேன் .-அகிவ

Sent from my iPhone Varadharajan.A.K

Hari Krishnan

unread,
May 2, 2014, 8:37:40 AM5/2/14
to santhavasantham

2014-05-02 17:19 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:
முறுக்குமீசை  என்ற சொல்லைத் தமிழழகன் பயன்படுத்தியிருக்கிறார்.

பயன்படுத்தினவன் நான்.  என் 20/22 வயதில் நல்லூர் இலக்கிய வட்டத்தில் நடந்த கம்பன் பட்டி மன்ற வரவேற்புக் கவிதையில், ஆசிரியர் நாகநந்தியைப் பற்றிச் சொல்லும்போது,

தும்பைப்பூ போலாடை; தொங்கா முறுக்குமீசை
அம்பைப்போல் தைக்குஞ்சொல், ஆராய்ச்சி - செம்பதனை
வேகமாய்த் தட்டின் எழும்புகுரல்; வேறாரே
நாகநந்தி என்றே நவில்.

இதைத்தான், மறுநாள் ஆசிரியர் வீட்டில் சந்திக்கும்போது, மீண்டும் சொல்லச்சொல்லி, எனக்கு விளாச்சீரைப் பற்றி அறிமுகம் செய்வித்தார், தசாவதானி ராமையா அவர்கள்.  இதை ஆசிரியர் நினைவுச் சொற்பொழிவின்போது குறிப்பிட்டேன்.  பாவம் தமிழழகன்!  என் பிழை என்னோடு போகட்டும்.  :))

ஆனால், exception என்று உதாரணமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  சிறப்பில் பங்கு கேட்பதாக இருக்கட்டுமே!
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
May 2, 2014, 10:03:26 AM5/2/14
to santhavasantham

2014-05-02 18:07 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
வேகமாய்த் தட்டின் எழும்புகுரல்; வேறாரே

எழுங்குரல் என்றிருந்திருக்க வேண்டும்.  ஏதோ நினைவில் தட்டியது.  அதிசயமாய் இது இன்னமும் நினைவில் இருக்கிறது!

Pas Pasupathy

unread,
May 2, 2014, 10:06:10 AM5/2/14
to santhav...@googlegroups.com
என் அனுபவம்: 

விளாங்காய்ச் சீர் நம் வெண்பாவில் நம்மை அறியாமல் சிலசமயம் புகுந்துவிடும். மீண்டும் படிக்கும்போது அது வந்துவிட்டது என்பதை அறிந்தபிறகு அதை எடுத்துவிட்டு வெண்பாவை அமைப்பதும் ஒரு நல்ல பயிற்சியாகி, மனத்திருப்தியைத் தரும். ஓசையும் கூடும். இத்தைகைய கட்டுப்பாடுகளே ஒவ்வொரு வடிவத்திற்கும் ஓர் அழகைத் தருகிறது. 



2014-05-02 7:49 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
இரண்டாவதுதான் சரி. 

சிலசமயங்களில் கனிச்சீர் காய்ச்சீர்போலத் தோற்றமளிக்கும் அப்போது வெண்பாவில் பயன்படுத்தலாம். நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்.

விளாங்காய்ச்சீர் தவிர்ப்பது நல்லது.  ஓசை கூடும். அவ்வளவே! 
முறுக்குமீசை  என்ற சொல்லைத் தமிழழகன் பயன்படுத்தியிருக்கிறார்.

கி வ.ஜா விளாங்காய்ச்சீரைப் பயன்படுத்துவதை ஏற்கவில்லை.  

இலந்தை

இலந்தை


sankara dass nagoji

unread,
May 3, 2014, 3:33:46 AM5/3/14
to santhav...@googlegroups.com
வெகு நாள் முன்பு forumhub-இல் இது விவாதிக்கப் பட்டது. நமச்சிவாய வாஅழ்க போன்ற
ஓரிரு இடங்கள் தவிர, பிற இடங்களில் விளாங்காய் வருவதே இல்லை என்றும், வரக்கூடாது
என்ற விதி சொல்லப்படா விடினும், முன்னோர் இந்தச் சீரை ஆளாத காரணத்தால்,
நாமும் அப்படியே செய்தல் நலம் என்றும் அறிஞர்கள் சொல்லியுள்ளனர்.

- sankara dass

Siva Siva

unread,
May 3, 2014, 12:29:55 PM5/3/14
to santhavasantham
தேவாரத்தில் நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவின் தோற்றமுடைய பாடல்களிலும் விளாங்காய் அரிதாகவே காண்கின்றேன்.

தேடியதில் கண்ட ஓர் இடம்:

அப்பர் தேவாரம் - 4.12.5
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ. 


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
Reply all
Reply to author
Forward
0 new messages