ஶைலஜா டீச்சர் - கேரளாவில் கொரானாவை முறியடித்த மந்திரி

11 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 24, 2020, 8:13:00 AM5/24/20
to Santhavasantham
கேரளத்தின் சுகாதார மந்திரி, ஶைலஜா தன் மாநிலத்தில் கொரானா அழிவை தடுத்து நிறுத்தியுள்ளார். அதை அவர் சாதித்த சரித்திரம்:

The coronavirus slayer! How Kerala's rock star health minister helped save it from Covid-19
Laura Spinney

KK Shailaja has been hailed as the reason a state of 35 million people has only lost four to the virus. Here’s how the former teacher did it
https://www.theguardian.com/world/2020/may/14/the-coronavirus-slayer-how-keralas-rock-star-health-minister-helped-save-it-from-covid-19

தெரிவு,
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 24, 2020, 8:46:15 AM5/24/20
to Santhavasantham
A note to prof. P. Pandiyaraja about usage of Tolkappiyar's PuLLi concept integrated into Grantha script. This "Linear Grantha" is very useful, aesthetic & good for deciphering inscriptions in Tamil Nadu. 1500 years old Grantha script, in linearized form can serve as one alternative to Hindi script. In India, like food, cloth, languages, bio life forms etc., script diversity is important. Not just Hindi script.

On Sat, May 23, 2020 at 10:01 PM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
எப்படியோ, அது இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது என்று காட்ட, அவ்வப்போது தண்ணீருக்குமேல் தலையைத் தூக்கிக்காண்பிக்கிறீர் - அது என்றைக்கோ இறந்துவிட்டது என்றுதெரியாமல்  வீண் முயற்சி.
ப.பாண்டியராஜா

 
அப்படி எல்லாம் இல்லை. சங்க இலக்கியத்தை ஆய்கிற மாதிரி, இணையத்தைக் கணிநிபுணர்கள் ஆய்ந்து பார்க்கலாம். யூனிகோடில் ஒரு எழுத்து எங்கே பயன்படுகிறது எனப் பார்க்கக் கருவிகள் உள்ளன. தமிழ் அல்லாத பிறமொழி வாசகங்கள், நூல்கள் எழுத்துப்பெயர்ப்பில் பயன்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அஶோக் சுப்பிரமணியன் போன்ற கவிஞர், நல்ல பாடகர்கள் தங்கள் பெயரைச் சரியாக எழுதுவதை சந்தவசந்தத்தில் பார்த்துள்ளேன். எழுத்து எழுதவோ, உள்ளீடு செய்யவோ தெரியாமல் நெருங்கி உள்ள எழுத்தைப் பயன்படுத்துவார் உள்ளனர். உ-ம்: பல  ஶைலஜாக்களுக்கும்,  அஶோக்குகளுக்கும் இவ்வெழுத்தை எழுத வேண்டும் என அறிந்தாலும், இன்புட் வசதி தெரியாது. ஆனால், காலப்போக்கில் மாறலாம். தமிழ்ப் பத்திரிகைகளிடம் தான் இருக்கின்றன. தினமணி, தினமலர் எழுதிக்காட்டினால் நடக்கும். தமிழ்நாடு, இந்தியா, ... அரசாங்கங்கள் தமிழ் எழுத்துவரிசையில் 5 வட எழுத்துக்களை அரசாங்கத் தரப்பாடு என அறிவித்துள்ளன. எனவே பயன்பாட்டில் உள்ளது.

சென்ற மாதம் ஸ்ரீலங்கா அரசாங்கம் சந்திரபிந்து என்ற எழுத்து ஆகாது என்றது. ஏற்கெனவே இருப்பதால் எடுக்கக்கூடாது என்று எழுதினேன். அதை ஆதரித்து யூனிகோட் அமைப்பின் தலைவர் எழுதினார். Lifetime Members என்ற நிலையில் என் பெயரைப் பார்க்கலாம், https://home.unicode.org/membership/members/
Lifetime Members:
  Fesseha Atlaw Aaron Babst Rebecca Bettencourt
  Bert Blodau Kevin Brown Jeremy Burge
  Craig Cummings Michael D'Errico Martin Dürst
  Peter Edberg Scott Ferreira
Naga Ganesan


-------------------------------------

ப்ராமியில் புள்ளிக்கோட்டை உருவாக்கிய இலக்கணி தொல்காப்பியர் என, பனம்பாரனார் பாயிரத்தை வைத்துப் பல்லாண்டு முன்னரே விளக்கினீர்கள். தொல்காப்பியர் புள்ளி, விராமம்  என்ற பெயரில், இந்தியாவின் எல்லா எழுத்தும் காட்டப் பயன்படுகிறது. இன்றும் தொல்காப்பியரின் கோட்பாடு எல்லா பிராமி எழுத்துக்கும் அடிப்படையாக இருப்பது வியப்பளிக்கிறது. தொல்காப்பியர் திருநாள் என்ற செ.வை.சண்முகம்-என் கட்டுரையில் குறிப்பிட உள்ளேன். Aristotle of the East என்றும் காப்பியர் வழங்கவேண்டும் என்பது என் அவா.

வினோத்ராஜன் அக்ஷரமுகம், அவலோகிதம் பலர் பயன்படுத்துகிறார்கள். அதை எழுதும் முயற்சியின்போது என் பெயரைக் குறிப்பிட்டும் நன்றி சொல்லியிருப்பார். ஸ்ரீரமணசர்மா, வினோத்ராஜன் புரப்போஸல் படி, வல்லின எழுத்துக்கள் தமிழ் கோட் பிளாக்கில் வர்க்க அக்ஷரங்கள் ஏற்றக் கூடாது என விரிவாக எழுதினேன். அப்போது கிண்டி கல்லூரி பி.இ. மாணவர். இப்போது முனைவர், சிறந்த ஆய்வாளர். பல எழுத்துக்களை இந்திய லிபிகளில் அவரால் ஏற்றப்பட்டுவருகின்றன.

காஞ்சி பெரியவர் இயற்றிய ஶிவாஷ்டபதி பாருங்கள். ஶிவனது பாரியை ஶைலஜா[1] இருக்கிறாளே.
இன்று இந்தியாவில் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த  ஶிவ  நாடார் தான் முதல் பணக்காரர். மாறன் பிரதர்ஸை விட.
வினோத் ராஜன் தொல்காப்பியரின் புள்ளியுடன் எழுதும் கிரந்த எழுத்து. சிறப்பான முயற்சி.
கல்வெட்டுக்கள் படிக்க உதவும். பல தமிழ்க் கல்வெட்டுக்களில் கூட்டெழுத்தாக உள்ள வார்த்தைகளை,
தொல்காப்பியரின் புள்ளியால் “லீனியர் கிரந்த” வழியாக எழுதினால் படிப்பது எளிது. அச்சிலும் அழகாக இருக்கும். ஹிந்தி லிபிக்கு மாற்றாக ஐஎஸ்ஓ 15919, லீனியர் கிரந்தம் பயன்படுத்தலாம். தொல்காப்பியர் தத்துவம் பயன்படும் புதிய வழி இது.

நா. கணேசன்
[1] கௌரி - கவரி: பெயர் ஆய்வு
Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  Dravidian word for Gauṛbison and Tibetan yak
 

தமிழில் புழக்கத்தில் இல்லை என்று சொல்லவியலாது. வடசொல் இது. சரியாக
எழுதும்போது பயன்படுத்தும் எழுத்து இது. 1500 ஆண்டுகளாக தமிழ்க்
கல்வெட்டுக்களில் உள்ள எழுத்து தான். கேரளத்தின் அமைச்சர் தன் பெயரை
எழுதும்முறை இது. பல வகையில் எழுதலாம்: சைலஜா, ஸைலஜா, ஶைலஜா, ஷைலஜா, ....
என்று. கேரள அமைச்சர் எப்படி எழுதுகிறாரோ, அதன்முறையில்
குறிப்பிடுகிறேன். வடசொற்களைச் சரியாக எழுத இவ்வெழுத்து ஆயிரக்கணக்கான
கல்வெட்டுக்களில் பயன்படுகிறது. தமிழர்கள் கல்வெட்டுகள், நூல்களில்
பெருவாரியாகப் பயன்படுத்தியிருப்பது.

> --
Reply all
Reply to author
Forward
0 new messages