தம்மக்கள்

38 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 30, 2012, 1:47:57 AM12/30/12
to பண்புடன்
* - அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் / சிறுகை அளாவிய கூழ்
* -
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்/ தம்தம் வினையால் வரும்.
* -
குழல் இனிது; யாழ் இனிது' என்ப-தம் மக்கள்/மழலைச் சொல் கேளாதவர்.
* - தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து/மன்உயிர்க்கு எல்லாம் இனிது.



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 30, 2012, 1:07:53 PM12/30/12
to பண்புடன்
தம் மக்கள் - ஹரி கிருஷ்ணன்
'ஆமா, அது என்னய்யா தம் மக்கள்?' கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார் பேச்சாளர். வள்ளுவர் தேவையில்லாத சொற்களைப் போடமாட்டார் என்று முதலில் பேசியவர் பேசி முடித்திருந்தார். 'இல்லை... இல்லவே இல்லை... தேவையில்லாத சொற்களை வேணமட்டும் போட்டிருக்கிறார்' என்று இவர் விளாசிக்கொண்டிருக்கிறார். 'குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்' என்று சொன்னா வெளங்கலியா? போதலியா? 'தம் மக்கள்' ஒண்ணு எதுக்கு ஒட்டுங்கறேன், ஆ? பக்கத்து ஊட்டுக் கொழந்த பேசினா சந்தோசப் பட மாட்டியா? எதிர் ஊட்டுக் கொழந்த பேச்சு வேற மாதிரி தோணுமா? அனாத இல்லத்துல இருக்கற கொழந்தன்னா அந்தப் பேச்சு என்னா 'பீப்பீ' மாதிரி தோணாதா? ஐ... இன்னாய்யா சொல்றாரு இந்தாளு?'

சிரித்துக்கொண்டேன். மேடையும் மைக்கும் இப்போது அவருடையது. நான் கேட்கமட்டும்தான் வந்திருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டும். 'தம் மக்கள்'தான் அந்தக் குறளிலேயே உயிர்ப்பான சொற்கூட்டு. உணர்வுகளில் தோய்ந்தாலொழிய அதன் பொருள் சிக்கிவிடுமா? மனம்தான் எவ்வளவு நுட்பமானது! மேம்போக்காக மேய்ந்துகொண்டு போவதே தொழிலாகக் கொண்டிருக்கும் மேடைப் பேச்சாளர்கள்! எதையும், எப்படியும் தூக்கியெறிந்து பேசலாம். மேடை போட்டு, மாலை வேறு போட்டாகிவிட்டது. போதாக் குறைக்கு ஒலிபெருக்கி. தன் குரலைத் தானே எட்டுத் திக்கும் எதிரொலிக்கக் கேட்கும் ஆனந்தம்.

அனுபவத்தைப் பற்றியல்லா பேசுகிறார் அந்தக் குறளில்! தான் கலக்காத அனுபவம் ஓர் அனுபவமாகிவிடுமா? எவ்வளவு உயர்வானதானாலும் அல்லது அப்படி இல்லாததானாலும் தான் சம்பந்தப்பட்டது தரும் அனுபவமும், தன்னை நேரடியாகப் பாதிக்காத ஒன்று தரும் அனுபவமும் ஒன்றாகிவிடுமா? தான் வளர்த்த மான் என்ற காரணத்தால்தானே அவ்வளவு பெரிய நாட்டையும், அரச அதிகாரத்தையும் நொடியில் துறந்த ஜடபரதர் உயிர் போகும் தருணத்தில் அந்தக் குட்டியின் நிலையைப் பற்றியே எண்ணியவாறு உயிர்விட்டார்? அதனால்தானே இன்னும் இரண்டு பிறவிகள் அவர் எடுக்க நேரிட்டது? அவரை விட்டுவிடலாம். ஏதோ புராணத்தில் வரும் ஒரு பாத்திரம். நம்மைப் பார்ப்போம். தெருவில் திரியும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும், தான் வளர்க்கும் குட்டியாகிவிடுமா?

அட இருக்கட்டும். அங்கேயாவது தெரு நாய், சாதி நாய் என்று பாகுபாடு இருக்கிறது. அனாதைக் குழந்தையே ஆனாலும், அதே குழந்தை தன்னுடைய வளர்ப்புப் பிள்ளையாக மாறும் போது நேற்றைக்குக் கேட்ட மழலை இன்றைக்கு வேறு மாதிரியாகத்தான் தோன்றுமில்லையா? இல்லை, தோன்றாதா? எனில், தான் பெற்றது என்றால்? மனம் தன்னிச்சையாகப் பின்னோக்கிப் பயணப்பட்டது.

=o=o=


வீடு வாங்கவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரம் அது. தாம்பரத்திலிருந்து போரூர் போகும் வழியில் மெயின் ரோடுக்குப் பக்கத்திலேயே அருமையான வீடு இருக்கிறது என்று தெரிந்தவர் ஒருவர் சொல்லியிருந்தார். அந்த வீட்டுக்கு அருகில்தான் அவரும் குடியிருக்கிறார். ஸ்கூட்டரில் நானும், மனைவியும், என் பெரிய பிள்ளையும் அந்த வீட்டைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறோம். அவனுக்கு அப்போது ஒரு ஆறு வயதிருந்திருக்குமோ? இருக்கலாம். இப்போது வளர்ந்துவிட்டான். வேலைக்கும் போயாகிவிட்டது.

சென்னைக்கு மிக வெளியே பரபரப்பான, ஆனால் குறுகிய சாலை. மெயின் ரோடு என்ற சொல் அதற்கு உயர்வு நவிற்சியா, இடக்கரடக்லா, யூஃபமிசம் என்பார்களே அதுவா என்று கூட்டம் கூட்டி விவாதிக்கலாம். ப்ளூமெட்டல் எனப் பெயரெழுதிய, குட்டியான, பேய்வேகத்தில் செல்லும் கருங்கல் ஜல்லி லாரிகள் ஒவ்வொரு நிமிடமும் என் ஓட்டுத் திறனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தன. ஒரு லாரி வந்தால், தெருவில் முக்காலுக்கும் மேல் அடைத்துக்கொள்ளும். 'பத்திரம், பத்திரம்' என்று ஒவ்வொரு வினாடியும் உள்ளம் எச்சரிக்கிறது. முன்னால் பிள்ளை. பின்னால் மனைவி. பல்லைக் கடித்துக்கொண்டு வண்டியைச் செலுத்திக்கொண்டிருக்கிறேன். திடுமென்று வளைத்துத் திருப்பி முன்னால் இருந்த காரை முந்தி, எனக்கு எதிரில் ஒரு கருங்கல் லாரி சடக்கென்று முளைத்தது. சாலைத் திருப்பம் வேறு. அதிர்ந்துபோய் சாலையின் பக்கச்சரிவில் இறக்கிவிட்டேன். வண்டி உருண்டது. முன்னால், என் கைக்கிடுக்கில் நின்றுகொண்டிருந்த பிள்ளை உருண்டான். வண்டியை அப்படியே போட்டுவிட்டு அவனைப் பற்றினேன். பதற்றம் வினாடிக்கு வினாடி ஏறியது. 'அடி கிடி பட்டிருக்கா?' எனக்குக் குரல் நடுங்கியது. மனைவி அழவே ஆரம்பித்துவிட்டாள். பிள்ளை தைரியமாகத்தான் இருந்தான். 'ஒண்ணுல்ல. சும்மாரு..' என்று அவன் கூச்சம் பிடுங்கச் சொன்னாலும், திருப்பித் திருப்பிப் பார்த்து, கை, கால், உடல் என்று நன்றாகப் பரிசோதித்த பிறகல்லவா நாங்கள் அன்று தொடர்ந்தோம்.

நண்பர் வீட்டுக்குப் போனால், நாங்கள் பார்க்கப் போயிருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு மணி நேரத்துக்கு முன்னால்தான் போயிருந்தார். அந்தக் குடும்பம் இந்த வீட்டில் இல்லையாம். ஒரு மாதத்துக்கு முன்னால் காலி பண்ணிக்கொண்டு நகரத்தைப் பார்க்கப் போய்விட்டார்களாம். நாங்கள் வரப்போகிறோம் என்று கேள்விப்பட்ட வீட்டுக்காரர் வந்திருந்திருக்கிறார். நேரமாகிவிட்டது. போய்விட்டார். நல்ல வேளை. சாவி நண்பரிடமிருந்தது. 'நீங்க போய் தெறந்து பாருங்க. இங்கதான் தாம்பரத்துக்கிட்ட போயிருக்கார். ஃபோன் நம்பர் கொடுத்திருக்கார். நான் போய் அவரை வரச்சொல்றேன்' என்று சாவியைக் கொடுத்துவிட்டு நண்பர் ஃபோன் தேடிப் போய்விட்டார். செல்லாவது, கொல்லாவது! அந்த நாளில் தொலைபேசிக்கே அரை கிலோமீட்டராவது நடக்கவேண்டும். 'சூடான பொட்டக்காடு ஜோராகக் கத்திப் பாடு' என்று நிலைமை புரியாமல் என்னுடைய வாண்டு கத்தியபடி காற்றைப் பிளந்துகொண்டு இஷ்டத்துக்குத் திறந்த வெளிகளில் ஓடுகிறான்.

வீட்டைப் பார்த்தோம். சின்னதுதான். எங்களுக்குப் போதாது என்று தோன்றியது. அங்கங்கே பாதிப் பாதி கட்டி நிறுத்தியிருந்தது. மாடியில் அறை மாதிரி ஒன்று முளைத்து, கூரையில்லாக் குட்டிச் சுவராய் நின்றிருந்தது. வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை.... வரவேற்பறைக்கும் படுக்கையறைக்கும் நடுவில் திடுமென ஒரு புதிய அறைக்கான ஒற்றைக்கல் தடுப்பு. அப்படியே பாதியில் நிற்கிறது. பின் பக்கம் போனால், அங்கே சின்னத் தோட்டம். அங்கேயும் ஒரு அறை. மூன்று பக்கம் கட்டி முடித்து, கூரையும் முடிந்து ஒற்றை மின்வடம் வீட்டுக்குள்ளிருந்து கிளம்பி உச்சியில் விளக்கு நுனியோடு தொங்கிக்கொண்டிருந்தது. வாசல் பக்கம் முடிந்தபாடில்லை.

'இந்த பொட்டைக் காட்டில் குடியிருக்க முடியாமல்தான் அவர்கள் நகரத்தை நோக்கிப் போய்விட்டார்கள் போலிருக்கிறது.' 'குடியிருக்கப் போறதில்லன்னா பின்ன எதுக்கு அங்கங்க மொட்ட மொட்டச் செவுரா கட்டிப் போட்டிருக்காங்க?' 'வாங்கி ரீ மாடல் பண்ணிக்கலாம்...' 'வெலயக் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும்...' 'பீரோவயும் கட்டிலயும் போட்டா இது ரொம்பிடும். அப்புறம் எங்க நடக்கறது?' சம்பந்தமில்லாத துணுக்குகளாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது வாசலில் மோட்டார்சைக்கிள் சத்தம். வீட்டுக்காரர் வந்துவிட்டார்.

கருப்பாய், உயரமாய் இருந்தார். தலை கலைந்திருந்தது. கண் சிவந்திருந்தது. 'சார் கம்சீல்டாஸ் ஆப்பீஸ்லதான் இருக்கார். ஆப்பீசர்.' அறிமுகம். வணிகவரி அலுவலக உத்தியோகம். கண் ஏன் சிவந்திருக்கிறது? அருகில் வந்ததும் காரணம் புரிந்தது. குடித்திருக்கிறார். 'ரொம்ப சாரி சார்' கை நீட்டினார். சம்பிரதாயத்துக்கு ஒரு முறை தொட்டு எடுத்தேன். 'என்னடா இவன் குடிச்சிட்டு வந்து நிக்கறான்' என்று கொஞ்சம் கோபமும் வந்தது. 'இப்பத்தான் ஃப்ரெண்டோட ஓட்டலுக்குப் போனோம். நீங்க வர்ல போலன்ட்டு நென்ஷ்டேன்.' நா குழறியது. 'அப்பால இவுரு ஃபோன் பண்ணாறா, பாதில அப்டியே போட்டுட்டு வன்ட்டோம்.' ஓஹோ, பாதி குடியில் இருந்திருக்கிறார். கம்சீல்டாஸ் ஆப்பீசர். அங்கே கடையில் எல்லாத்தையும் தனியாக எடுத்து வைத்திருப்பான். இங்கே முடித்தபிறகு அங்கே போய் 'தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன்' என்று பாங்கனோடு போய்விடலாம். விட்ட இடத்திலிருந்து தொடர. நண்பர் அந்த ஓட்டலை(!)த்தான் தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார் தொலைபேசி எண் கொடுத்து, அழைக்கச் சொல்லும் அளவுக்கு உரிமையாளர் தெரிந்தவராய் இருக்கவேண்டும். பழக்கமான இடமாயிருக்கும். தினந்தோறும் மூழ்கித்தான் எழுவார் போலிருக்கிறது.

'வூட்டப் பாத்தீங்களா... பாருங்க பாருங்க...' நடந்தார். தொடர்ந்தோம். 'இங்க ஒரு ரூம் போடறதா இருந்துது. பய்யன் பத்தாது வந்ததும் கட்ட ஆரம்பிச்சோம்.' வரவேற்பறைக் குட்டிச்சுவருக்கு விளக்கம். 'இங்க குந்திக்கினு படிக்கட்டும்னுதான் இத்தக் கட்னது' மாடியில் நிற்கும் குட்டிச் சுவர்களுக்கு விளக்கம். 'பத்தாது வண்ட்டானே... ஹால் கிட்ட ரூம் போட்டா டிவி பாக்க வந்துருவான். டிவி பாத்துக்கினே இர்ந்தா எப்புடின்னுட்டுதான் பின்பக்கம் கட்னோம். அல்லாம் கிட்டத்தட்ட முடிஞ்ச கணுக்குலதான்' பேசிக்கொண்டே போனார். வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, வரவேற்பறைக்குத் திரும்பினோம்.

'இந்த வீடு விக்கணோம்னே இல்லீங்க. நாங்க நல்லாத்தான் இருக்கோம். அவுசரமே இல்லீங்க.' பேசிக்கொண்டே போனவரின் கண்கள் வரவேற்பறையின் வாசலுக்கு அருகில் அடிக்கடி பார்ப்பதாகத் தோன்றியது. அந்தப் பக்கச் சுவரில் அவர் கண்கள் நிலைக் குத்தி நிற்கும். பேச்சு தடைப்படும். மறுபடியும் செருமிக்கொண்டு தொடர்வார். பேச்செல்லாம் பய்யன்... பய்யன்... பய்யன்... 'யோவ் அறுக்காதயா... சீக்கிரமா விட்டுத் தொலை. நீ பேசற நிலைல இல்ல. நாங்க போய் அப்புறம் சொல்லி அனுப்பறோம்' சொற்கள் நாக்கு நுனி வரை வந்து வந்து நின்றன. சொல்ல முடியவில்லை. அவர் குரலில் ஒரு தழுதழுப்பு இருந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். குடித்த நாவு தடுமாறுகிறது என்று தோன்றியது. இல்லை இது வேறு என்னவோ ஒன்று என்றும் தோன்றியது. வீடு விற்கவேண்டுமென்று சொல்லி, வாங்க ஆள்வந்து நிற்கும் வேளையிலா குடித்துவிட்டு வருவது?

'களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று' என்று ஒரு பக்கம் உள்ளே ஓடுகிறது. இன்னொரு பக்கம், கார்காலம் முடிந்தும் சீதையைத் தேட இன்னும் ஏன் ஏற்பாடு பண்ணவில்லை என்று கோபமாக வந்து நிற்கும் இலக்குவனோடு பேச இயலாத நிலையில், கள் மயக்கத்தில் கிடக்கும் சுக்ரீவன் வந்து போகிறான். 'ஆ அடக்குடா... நீ ரொம்ப ஒழுங்கு' என்று இன்னொரு பக்கம் இடக்குப் பண்ணுகிறது.

'இங்கதான் சோபா போட்ருந்தோம்,' அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சுவரைத் தொட்டுக் காட்டுகிறார். 'அதோ அங்க டிவி இருக்கும்.' எதிர்ப்பக்கம். 'பய்யன் இங்கதான் குந்திக்கினு, இதோ இப்புடி (தலையைப் பின் பக்கம் தொங்கவிட்டுக் காட்டுகிறார்) செவுத்துல சாஞ்சிக்கினு டிவி பாப்பான்.' தடுமாற்றம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் இருக்கும் போது தலையை வேறு பின்பக்கம் சாய்த்தால் கிர்ர் அதிகமாகாமல் என்ன ஆகும்?

'இதோல்ல... எண்ணக் கற... அவன் தலை எண்ணக் கறதான்' அந்த இடத்தை வாஞ்சையாகத் தடவுகிறார். 'செவுத்துல சாஞ்சி சாஞ்சி இந்த எடம் கறயாயிடுச்சி.' கண்ணில் நீர் வழிகிறது. என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு? நான் சற்றே கூர்மையாகப் பார்க்கத் தொடங்கினேன். குடிகாரன் பேச்சாக இல்லை இது. அப்போதுதான் என் கண்ணுக்கு அந்த எண்ணெய்க் கறை பட்டது.

'ஏன், என்ன ஆச்சு? ஏன் அழறீங்க' என்று என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கித் தயங்கிச் சொற்களை அடுக்கினேன். விம்மினார். உடைந்தார். வெடித்து அழுதார். 'சார் சொல்லலீங்களா? ரெண்டு மாசம் மின்னாடி ரோட்ட க்ராஸ் பண்ணச் சொல்லோ கர்ங்கல் லாரிக்காரன் அஷ்ட்டான் சார்...' அழுகை வெடிக்கும். அடக்கப் பெரும் யத்தனம் நடக்கும். நா குழறும். சொல் தடுமாறும். துண்டு துண்டாய் உடைந்து விழும். ஐயோ! இதுவா! இதுவா காரணம்! சட்டென்று எல்லாம் அதனதன் இடத்தில் விழுந்தன. அதுதான் இங்கேயே அடிக்கடி பார்த்தாரா? எனக்கு அந்தக் கறை இது வரை கண்ணிலேயே படவில்லையே! பையன் விபத்தில் இறந்துவிட்டான். அவன் விட்டுச் சென்றிருக்கும் தடம் இது. அவருக்கு இது அவருடைய பய்யன். 'செத்துட்டான்,' 'விபத்து' 'விபத்தில் போயிட்டான்' போன்ற சொற்களை அவர் முயற்சி பண்ணித் தவிர்க்கிறார் என்பது புரிந்தது. அவன் அங்கேதான் இருக்கிறான். எண்ணெய்க் கறையாக.

'ரெண் நாள் தெருவுல ரத்தமா இருந்தது. மண்ணப் போட்டு மூடினாங்க. ஆனாக் கூட என் கண்ணு அந்த மண்ணுல சேப்பு தெரீதான்னே பாக்கும்...' நிலமே அம்மியாக, தலையற்ற உடலே குழவியாக அக்ககுமாரனைத் தரையோடு தரையாக அனுமன் அறைத்த இடத்தில் குருதி தேங்கி நின்றதாம். இராவணன் அதைப் பார்க்க ஒண்ணாது கதறினானாம். எந்த அப்பனானால் என்ன? பிள்ளைப் பாசம் அவ்வளவு எளிதில் விடுமா?

'இங்கியே இர்ந்தாக்க ஒரே னாபகமா வர்து சார்... அதான் காலி பண்ணிட்டு போய்ட்டோம். இத்தப் பாக்கச் சொல்லோல்லாம் ஒரே அழயா வருது' எண்ணெய்க் கறையைத் தடவுகிறார். அவருக்கு அது பிள்ளை. 'இது மேல சுண்ணாம்பு அட்சிடலாம் பாத்தா மன்சு வர்ல சார்... அப்புடியே உட்டாலும் பேஜாராவுது. அத்தான், வூட்ட வாங்கறவங்க இன்னாவே பண்ணிக்கட்டும்னு அப்புடிய உட்டுட்டோம்...'

ர்ர்ர்ர்ர்ர்ர் என்று காற்றில் லாரி ஓட்டிக்கொண்டு, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளை உள்ளே ஓடிவந்தான். என்னுள் இருக்கும் அப்பன் எதிரில் இருக்கும் அப்பனை உணர்ந்தான். அதுவரை என்னை அரித்துக்கொண்டிருந்த குடிகாரன் போன திசை தெரியவில்லை. அன்னியம் உடைந்தது. தன்னையறியாமல் அவரை அணைத்துக்கொண்டேன். தோளில் தட்டி, முதுகில் தடவி, மெளனமாக அவரை அமைதிப்படுத்த முனைந்தேன். இப்போதுதான் என் பிள்ளை ஒரு விபத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறான். எனக்குத் தெரியும் இதன் பரிமாணம். எனக்குப் புரியும் இந்த நிலை. அங்கே இருப்பது செங்கல்லும், சிமிட்டியும், வர்ணப் பூச்சும், கொஞ்சம் எண்ணெய்த் தடமுமா?

அது மற்றவர்களுக்கு. சில வினாடிகளுக்கு முன்வரை எனக்கும்.

=o=o=


மனைவியைக் கவிதையாகப் பார்த்தான் பாரதி. கவிதையை மனைவியாகப் பார்த்தான் என்றாலும் பொருந்தும்.

... ... ... ... சக்தி நிலையமே, நன்மனைத்
தலைவீ, ஆங்குஅத் தனிப் பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன் நிறை அனுபவம் ஆக்கி
உயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து
ஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள் புரிந்து......

(வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி..)

என்று சொல்லிக்கொண்டே போவான். மிகச் சாதாரணமான செய்திகளும் கவிதைக்குள் பயன் நிறை அனுபவமாகின்றன. அனுபவம் என்பது எப்போது பூரணம் ஆகிறது என்றால், அங்கே 'தான்' உணரப்படும்போது. இன்னொரு முறை. உணரப்படும்போது. அகம்பாவத்தில் எழும் தான் இல்லை இது. இது வேறு. மக்கள் அனுபவத்தை விளைவித்தால் அதைப் பரிபூரணமாக்குவது 'தம்'. அது எண்ணெய்க் கறையானாலும் சரி; மழலைச் சொல்லானாலும் சரி. 'தம் மக்கள்' என்ற சொற்களை எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும் சொற்கூட்டம். அடுக்கிவைத்த செங்கல். உணர்ச்சியற்ற ஒலியன்.

நான் என் உலகிலிருந்து மீளும்போது கூட்டம் முடிந்து நன்றியுரை நடந்துகொண்டிருந்தது.

*****


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2012/12/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 30, 2012, 1:13:27 PM12/30/12
to பண்புடன்

நன்றி பி.கே.எஸ் (http://pksivakumar.blogspot.in/2004/03/blog-post_29.html)

தம்பொருள் என்ப தம்மக்கள்

குழந்தைகள் அற்புதங்கள். குழந்தைகள் ஞானவான்கள். எந்தக் குழந்தையும் சிலாகிக்கவும் கொஞ்சவும் தக்க அழகும் அறிவும் நிரம்பியதே. குழந்தைகள் நமக்குக் கற்றுத் தருகிற பாடங்களுக்குக் குறைவில்லை. குழந்தைகள் வளர வளர அவர்களுக்குச் சொல்லித் தருகிறோம் என்ற பெயரில் குழந்தைகள் மனதில் நாம் விதைக்கிற விஷ(ய)ங்களுக்கும் குறைவில்லை. நான் ஏன் குழந்தையாகவே இல்லாமல் போனேன் என்பது என் பெரும்குறை. என் குழந்தைகள் நாளும் வளர்கிறார்கள். அறிவையும் கனவையும் தேடுகிற பயணத்தில் குழந்தமையைத் தொலைத்துக் கொண்டு வருகிறார்களே என்கிற எதுவும் செய்ய இயலாத ஏக்கமும் இருக்கிறது. பொருள் தேடி ஓடிக் கொண்டேயிருக்கிற அவசர கதியிலும், கிடைக்கிற சொற்ப நேரத்தில் இலக்கியம், வாசித்தல் இன்னபிற என்று பங்கிட்டுக் கொள்வதிலும் நான் என் குழந்தைகளுடனான நேரத்தை எவ்வளவு குறைத்துக் கொள்கிறேன் என்றும், எத்தகைய மீண்டும் கிடைக்காத சந்தோஷங்களை இழக்கிறேன் என்றும் என் மனைவி அடிக்கடி சொல்லும்போது, குற்ற உணர்வுடன் மௌனம் காப்பதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றுவதில்லை. நான் மட்டுமில்லை; பெரும்பாலோர் இப்படித்தான் என்று அறிய நேரும்போது ஆறுதலைவிட வருத்தமே அதிகரிக்கிறது.

சமீபத்தில் என் மூன்று வயது மகளுக்கும், என் மனைவிக்கும் நிகழ்ந்த உரையாடல்களில் சில:

"மாமி, நான் ஒரு ஜோக் சொல்லட்டுமா?"

"சரி, சொல்லு"

என் மகள் ஒரு ஜோக் சொல்கிறார். சொல்லிவிட்டுப் புரிந்ததா என்று கேட்கிறார்.

"புரியவில்லையே." - மனைவி.

"ஆமாம். இந்த ஜோக் மிஸ்டரி" - மகள்

"மிஸ்டரின்னா என்னம்மா" - மனைவி

தயக்கமே இல்லாமல் பட்டென்று வந்த பதில் - "கோயிங் பார் ஷாப்பிங்"

என் மனைவி ஷாப்பிங் போகும்போதெல்லாம் என் மகள் உடன் போவார் என்கிற செய்தி மேற்கண்ட உரையாடலை மேலும் ரசிக்கவும், இன்னொரு கோணத்தில் பொருள் கொள்ளவும் உதவலாம்.

ஒருநாள் இரவு தூங்குவதற்கு முன் நடந்த உரையாடலில்:

"ஐ லவ் யூ கண்ணு" - மனைவி மகளிடம்.

"ஐ லவ் யூ மாமி. யூ ஆர் த பெஸ்ட் மாமி இன் த வோல் வேர்ல்ட்" - மகள்

"உன் அளவும், உன் அண்ணா அளவும் என்னை நேசிப்பதாகச் சொன்னவர்கள் யாருமில்லை. நேசித்தவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படி அடிக்கடிச் சொன்னவர்கள் யாருமில்லை." - மனைவி.

"வொய்? வாட் அபவுட் யுவர் மாமி?" - மகள்

என் குழந்தைகள் மட்டுமில்லை. எல்லாக் குழந்தைகளுமே இப்படிக் குழந்தைப் பருவத்தில் மேதைமையும் சூட்டிகையும் அன்பும் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை பிறரின் குழந்தைகளைப் பார்க்கும்போதும், அவர்களிடம் உரையாடும் போதும் நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் வளர்ந்த பின்னே, ஒருவருக்குப் படிப்பு சரியாக வரவில்லை என்று சொல்கிறோம். ஒருவர் முரடராகி விட்டார் என்று சொல்கிறோம். ஒருவரை மக்கு என்கிறோம். எனவே, குறை என்பது நாம் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கிறதா? தவறு எங்கே நிகழ்கிறது? குழந்தைப் பருவத்தில் எல்லாக் குழந்தைகளும் காட்டுகிற சுட்டித்தனத்தைத் தொலைக்க வைப்பது எது என்பது குறித்து ஒரு தந்தையாக நான் நிறைய யோசிக்கிறேன்.

குழந்தைகள் வளர வளர அவர்களிடம் நம்முடைய எதிர்பார்ப்புகள் வளர்ந்து கொண்டே போவதும், நம் கனவுகளையெல்லாம் நிறைவேற்ற வந்தவர்கள் என்று அவர்கள் மீது நம் ஆசைகளைத் திணிப்பதும், புத்திசாலித்தனம் என்ற பெயரில் சுயநலத்தையும், பொறாமையையும், போட்டியையும் நியாயப்படுத்துவதும் என்று பல கோணங்களில் இவற்றுக்கானக் காரணங்களைத் தேட வேண்டும். உளவியல் ரீதியாகவும், ஞானபூர்வமாகவும் பெற்றோரும், சமூகமும், சம வயதினரும், கல்விக் கூடங்களும் குழந்தைகளை எந்த அளவுக்கு மேம்படுத்துகிறார்கள் என்ற ஆராய்ச்சி இன்றைக்கு அவசியமான ஒன்று. இதைத் தேர்வுகளினால், படிப்பறிவால் அளந்துவிட முடியும் என்று தோன்றவில்லை.

ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் நம் சமூகமும் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவனவற்றின் போதாமை குறித்தும், நம் கல்விமுறையின் குறைமிகுந்த கோட்பாடுகள் குறித்தும் சொல்லியிருப்பன நினைவுக்கு வருகின்றன. இவைபற்றியெல்லாம் பிரக்ஞை இருந்தும் மகன் வீட்டுப் பாடம் செய்துவிட்டாரா, மியூசிக் கிளாஸ் போனாரா என்கிற கவலைகள் கொள்கிற ஒரு சராசரி தந்தையாக இருக்க வேண்டியிருக்கிறதே என்று வெட்கமாகவும் இருக்கிறது.

Innocence is a bliss.
Posted by PKS at 9:47 PM

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 30, 2012, 1:34:56 PM12/30/12
to பண்புடன்

"அம்மா.. என்ன  இன்னைக்கு சாப்பாடு செஞ்சு வச்சிருக்க.. ஒரே உப்பா இருக்கு "

பெரிய மகளின் குரல் ஓங்கி ஒலித்தது.

" ஏண்டிம்மா.. ஒருநாள் ஒரு கல்லு உப்பு அதிகமானா சாப்பாடு இறங்காதா "

அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரிந்து விட்டது. 

" எனக்கு சாப்பாடு வாணாம்.. எனக்கு  ஒரு டம்ப்ளர் பால் குடு போதும் "

ஆஹா ஆரம்பித்துவிட்டது, பஞ்சாயத்து மெதுவாக என்னிடம் நகரப் போகிறது.

" எப்படி கத்தறா பாரு. சின்னவ தூங்கிட்டு இருக்காளே அப்படிங்கற நெனப்பு இருக்கா... பாங்னு கத்தறா "

இவர்கள் இருவரின் கத்தலில் தூங்கிக் கொண்டிருந்த பதினொரு  மாதக் குழந்தை எழுந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

" அப்பா  பாருப்பா.... ஒரே உப்பு சாப்பாடு.. எனக்குப் பிடிக்கல. உப்பில்லா சாப்பாடு  குப்பையிலே... உப்பு சரியா இருந்தா தொப்பையிலே.. உப்பு கரிக்கும் சாப்பாடு  குப்பையிலே " தட்டை என்னிடம் வைத்து விட்டு,  மகள் அம்மாவைப் பாத்து கிண்டலடித்துக் கொண்டே வெளியில் ஓடினாள்.  எடுத்து சாப்பிட்டுப் பார்த்தேன். கொஞ்சம்  உப்பாய் தான் இருந்தது.

"ஆமாண்டி.. உப்பாத்தான் இருக்கு "

"ஹ்ம்க்கும். கொறை சொல்றதுல என்ன கொறச்சல்.  உங்களுக்கும் உங்க பொண்ணுங்களுக்கும்  வக்கனையா வடிச்சுக் கொட்டறேன் பாரு என்னை சொல்லனும்.   இந்தச் சின்னவளைக் கொஞ்சம் பிடிங்க. அடுக்களையில போட்டது போட்டபடியே இருக்கு "

குட்டிம்மா  என் மடியில் உட்கார்த்தி வைக்கப் பட்டாள்.

" பாத்துக்கோங்க தட்டுல இருக்கிற சோத்தையெல்லாம் கீழக் கொட்டி நிராவி வைப்பா உங்கப் பொண்ணு... அப்பாவும் பொண்ணுங்களும் எனக்கு வேலை வைக்கறதுக்குன்னே  இருக்குங்க " தோள்பட்டையில் ஒரு செல்ல இடி இடித்துக் கொண்டு அடுக்களைக்கு சென்றாள் மனைவி.

குட்டிம்மா என் மீது குதித்து குதித்து விளையாடினாள்.

" பாப்பா  அப்பா உனக்கு ஊட்டவா "

" ப்பா.. ப்பா "

" என் பட்டு .. என் செல்லம் .. கேட்டுக்கோடி இவளே.. என் பொண்ணு மொத மொதலா கூப்டறதே அப்பான்னு தான். "

" ஆமா பெரிய பெருமை .. போங்க.. நீங்களும் உங்க பொண்ணுங்களும். நான் போறேன் எங்கப்பா வீட்டுக்கு "

விளையாட்டாய் பேச்சு வளர்ந்து கொண்டே இருந்தது.. குட்டிம்மா என் மடியில் இருந்து இறங்கி தட்டைப் பிடித்து இழுத்தாள்.

" வாண்டாம் பாப்பா... கொட்டிடுவ.. "

" ப்பா... ஆ.. ஆ .. "

கையில் இரண்டு சோற்றுப் பருக்கைகள் தான் இருக்கும். தட்டை ஒருதடவை நன்றாக அளாய்ந்து விட்டு என் வாயை நோக்கிக் கையை நீட்டினாள்.

" பாத்துக்கோ. என் பொண்ணு எனக்கு ஊட்டறா... என் பொண்ணுன்னா  எம் பொண்ணு தான் "

" கீழ எரைச்சு வைங்க இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் "

எச்சரிக்கை அடுப்படியில் இருந்து வந்தது.  அதற்குள் பெரியவள் வெளியில் இருந்து ஓடி வந்தாள்.

" பாப்பு.. அக்காக்கு ஆ குடுடா "

" க்கா... ஆ.. ஆ "

பருக்கைப் பருக்கையாய் அக்காவிற்கு தங்கை ஊட்ட ஆரம்பித்தாள்.

" ஏண்டா கண்ணு.. இப்ப உப்பா இல்லையா "

" ஹ்ம்ஹூம். டேஸ்ட்டா இருக்கு. பாப்பு அப்பாக்கு ஒரு வாயி குடேன் "

"ப்பா.. ஆ.. ஆ "

ஒரு கையால் என் சட்டையைப் பிடித்துக் கொண்டு என் வாயில் ஊட்ட எழுந்து நின்று குட்டிம்மா வாயில் கையைத் திணித்தாள்.   அந்த உப்புச் சாப்பாடு அமிர்தமாய் தான் சுவைத்தது. தெரியாமலா சொல்லிவிட்டார் வள்ளுவர் ?

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்


இது தங்கைக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் அக்காக்களுக்கும் பொருந்தும் இல்லையா ? குட்டிம்மாவிடம் ஒரு வாய் வாங்க வரிசையில் பெரியவளின் பின்னாள் நின்று கொண்டிருந்தாள் அவள் அம்மா.

Asif Meeran AJ

unread,
Dec 31, 2012, 2:02:16 AM12/31/12
to panb...@googlegroups.com
யோ சொக்கா!!
ளாளுக்கு லக்குறாங்ளே!!

நம்துரை யாவும் து போ தாது எழுதுவார்ன்னு நம்புறேன்
நானும் தாது எழுலாம்னு பார்த்தா எனக்குக் குளும் தெரிலை
குழந்தை ளர்ப்பும் தெரிலியே?! :-(

துரை.ந.உ

unread,
Dec 31, 2012, 2:07:30 AM12/31/12
to panb...@googlegroups.com
2012/12/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
தம் மக்கள் - ஹரி கிருஷ்ணன்

. 'சார் சொல்லலீங்களா? ரெண்டு மாசம் மின்னாடி ரோட்ட க்ராஸ் பண்ணச் சொல்லோ கர்ங்கல் லாரிக்காரன் அஷ்ட்டான் சார்...'
 
 எனக்குப் புரியும் இந்த நிலை. அங்கே இருப்பது செங்கல்லும், சிமிட்டியும், வர்ணப் பூச்சும், கொஞ்சம் எண்ணெய்த் தடமுமா?

 
அது மற்றவர்களுக்கு. சில வினாடிகளுக்கு முன்வரை எனக்கும்.

வாழ்க ஐயா ..... 
முன்பே படித்திருந்தாலும் ... இந்த முறையும் என்னால் கண்ணீரை அடக்க இயலவில்லை ....
( என் தொழில் களம் ... நான் வாழும் களம் ... என்னை சுற்றி இருக்கும் மக்கள் ....  நானும் தகப்பன் ) 

அந்தப் பதிவில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் முன்னாலும் விழுந்து வணங்குகிறேன் ...

பகிர்ந்த ஜீவ்ஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

(சொல்ல வந்ததை ..தெளிவாக எழுதவில்லை என்று உணர்கிறேன்... மன்னிக்க ,,,:((
சிறிது சரியானபின் வருகிறேன் )
 
 
--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Gokul Kumaran

unread,
Dec 31, 2012, 2:17:07 AM12/31/12
to panb...@googlegroups.com
நிராவி வைத்தல் - வெரசி வைக்கிறது -னு எங்கூருல சொல்வாங்க.

2012/12/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
" பாத்துக்கோங்க தட்டுல இருக்கிற சோத்தையெல்லாம் கீழக் கொட்டி நிராவி வைப்பா உங்கப் பொண்ணு... அப்பாவும் பொண்ணுங்களும் எனக்கு வேலை வைக்கறதுக்குன்னே  இருக்குங்க " தோள்பட்டையில் ஒரு செல்ல இடி இடித்துக் கொண்டு அடுக்களைக்கு சென்றாள் மனைவி.
 
--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 31, 2012, 3:02:04 AM12/31/12
to பண்புடன்
நன்றி தலைவரே,
நன்றி கோகுல்ஜி :) இதை வட்டார வழக்கு இழைல பதிஞ்சு வைங்களேன்.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2012/12/31 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
Dec 31, 2012, 3:29:36 AM12/31/12
to Groups
தம்மக்கள்...
 
ஹரிகி ஐயாவின் பதிவு  முறை படித்திருக்கிறேன்... ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் அந்த அதிர்வை மனம் உணரும்...
 
மற்ற இரண்டு பதிவுகளும் இப்பொழுது தான் வாசிக்கிறேன்....
 
தம்மக்கள் ... உண்மையில் நான் எனது என்று உரிமை கொண்டாட வேண்டிய விஷயங்கள், அந்த உரிமை தரும் அளப்பரிய உவகைகள் இவற்றை முன் நிறுத்துவதில் மூன்று பதிவுகளும் மனம் நிறையைச் செய்து விட்டது....
 
சில மடல்களைப் படித்தால் இத்துடன் இன்று வேறு மடல்களைப் படிக்க வேண்டாம் இந்த மடல் தந்த சந்தோஷத்திலேயே இன்று முழுவதும் திளைத்திருக்க வேண்டும் என நினைக்க தோன்றும் சில மடல்களைப் படிக்கும் பொழுது எனக்கு... அத்தகையதொரு மடல் இது....
 
பகிர்ந்தமைக்கு நன்றி...


2012/12/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
* - அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் / சிறுகை அளாவிய கூழ்
* -
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்/ தம்தம் வினையால் வரும்.
* -
குழல் இனிது; யாழ் இனிது' என்ப-தம் மக்கள்/மழலைச் சொல் கேளாதவர்.
Reply all
Reply to author
Forward
0 new messages