கல்வி பரவ சிரமண சமயங்கள் உதவின: சங்கராச்சாரியார்

108 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 9, 2016, 11:01:43 PM3/9/16
to மின்தமிழ்
நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

மாணவன் மாணாக்கன்

POSTED ON DECEMBER 23, 2014 
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/மாணவன்-மாணாக்கன்/

சிஷ்யன் என்றும் வித்யார்த்தி என்றும் ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வதை நாம் மாணவன், மாணாக்கன் என்கிறோம். செய்யுளில் இதுவே ‘மாணி’ என்று வரும், வாமனாவதாரத்தைப் பற்றி திவ்ய ப்ரபந்தத்தில் ‘மாணி’, ‘மாணி’ என்று வரும். ‘மானவ’ என்று இரட்டைச் சுழி ‘ன’ போட்டுச் சொன்னால் மநுஷ்யன் என்றுதான் அர்த்தம். மநுவிலிருந்து ஜீவகுலம் தோன்றியது. அதனாலேயே ‘மநுஜன்’, ‘மநுஷ்யன்’, ‘மானவன்’, தமிழில் ‘மனிதன்’, ‘மானுடன்’ முதலான பெயர்கள். Man என்பதும் மநு ஸம்பந்தமானதே. மனஸ் என்ற சிந்தனா சக்தி படைத்தவன் மநு. Man என்றால் thinking animal என்று இதே அபிப்ராயத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள். மானவன் என்றால் மனிதம். ‘மாணவ’ என்று மூன்று சுழி போட்டுச் சொன்னால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். சின்ன வயஸிலேயே கல்வி கற்கத் தொடங்குவதால் வித்யார்த்தியை மாணவன், மாணாக்கன் என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது. தமிழ் ‘மாணி’யும் இதிலிருந்தே வந்திருந்தாலும், மாணி என்பது, ‘மாணவன்’ என்பதுபோல் எந்த ஜாதியையும் சேர்ந்த ஸ்டூடண்டைக் குறிக்காது; மாணி என்பது உபநயனமான ப்ரம்மசாரியைத்தான் குறிக்கும். ஆதியில் ப்ராமண ப்ரம்மசாரியே பெரும்பாலும் ஸ்டூடண்டாக இருந்ததால்தான் இப்படிப் பிற்காலத்திலும் சொல்வதாக வந்திருக்கிறது.

இம்மாதிரி அக்காலத்தில் ப்ராமணப் பசங்களுக்கு மட்டும் வித்யாப்யாஸம் விசேஷமாக இருந்தது இதரர்களுக்கு வித்யாஸமாகத் தோன்றவில்லை. தங்கள் தொழிலுக்கும் வாழ்முறைக்கும் குருகுலவாஸம் தேவையில்லை; அவசியப்படும்போது தங்கள் தொழிலில் டெக்னிகலான, சிக்கலான ஸமாசாரங்களை மட்டும் ‘அய்ய’ரிடம் போய்த் தெரிந்து கொண்டால் போதும் என்று நல்லறிவு அவர்களுக்கு இருந்தது. ‘அவர் மட்டும் ஏதோ சிலது படிக்கிறாரே; அவர் மட்டும் அந்த அநுஷ்டானம் பண்ணுகிறாரே!’ என்று நினைக்காமல் அவரும் ஸரி, தாங்களும் ஸரி அவரவருக்கும் குலதர்மப்படி வந்ததைப் பண்ணிகொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம், எல்லாருக்கும் நிறைவு என்ற நல்லெண்ணத்தோடு இருந்து வந்தார்கள்.அய்யர் சொல்கிற வேதமும், அவர் செய்கிற யாகமும் நம் க்ஷேமத்தையும் உத்தேசித்தது; அவருக்குப் போட்டிருக்கிற கடும் ஒழுக்க விதிகள் நமக்கும் லக்ஷ்யத்தைக் காட்டிக் கொடுக்கிறது*. ஆனபடியால் அவர் கார்யத்தை, அவருக்கான வாழ்க்கை முறையை அநுஸரித்துக்கொண்டு அப்படியே இருக்கட்டும்; அவரைப் போய் நாம் தொந்தரவு பண்ண வேண்டாம், அவரோடு போட்டிபோட வேண்டாம்’ என்று இதரர்கள் நினைத்தவரை (இப்படித்தான் யுகாந்தரமாக நடந்து வந்திருக்கிறது) எல்லாம் ஸரியாயிருந்தது. ஸமூஹ வாழ்வு க்ரமமாக, ஐக்ய மனப்பான்மையுடன் போய்க் கொண்டிருக்கிறது.
---
அந்தணரை மையப்படுத்தி குருகுலங்கள் வளர்ச்சி

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/அந்தணரை-மையப்படுத்தி-குர/

இதற்கு முன்னிருந்த நிலைமையைத்தான் முன்னேயே சொன்னேன்; ரொம்பவும் specialised ஸமாசாரம் கற்றுக்கொள்வதற்கு மட்டுமே வைச்ய – சூத்ர ஜாதியினர் ப்ராமண ஆசார்யனிடம் போகவேண்டியிருந்தது என்றும், மற்றபடி அவனுடைய குருகுலம் ப்ரம்ம – க்ஷத்ர சிஷ்யர்களுக்கானதாகவே இருந்தது என்றும் சொன்னேன். இதிலும் குறிப்பாக ப்ராமணப் பசங்களுக்கு உரியனவாகத்தான் அவை இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் குருகுலம், வித்யாப்யாஸம் முதலிய விஷயங்களே முக்யமாக ப்ராமணனைக் குறித்தவை மாதிரிதான் இருந்திருக்கின்றன. க்ஷத்ரியர்களிலும் ராஜகுமாரர்கள், ராஜ குடும்ப முக்யஸ்தர்களின் பசங்கள், ப்ரதான அதிகாரிகளின் பிள்ளைகள் ஆகியோர் குருகுலவாஸம் செய்தனர். அந்த ஜாதியில் மற்ற எல்லாச் சிறுவர்களும் – அதாவது ஸாதாரண ஸேனாவீரர்கள், சிப்பந்திகள் ஆகியவர்களது பிள்ளைகள் – வீட்டிலேயே தகப்பனிடமும், அல்லது ஆயுதப் பயிற்சி சாலைகளிலும்தான் அப்யாஸம் செய்திருப்பார்களென்று தோன்றுகிறது. குருகுலவாஸம் செய்த பசங்களுங்கூட, தங்களுக்குரிய முழுக்கோர்ஸும் ப்ராமணப் பசங்களோடேயே சேர்ந்து கற்றுக் கொண்டிருப்பதற்கில்லை. முன்னேயே சொன்னதை மீண்டும் சுருக்கிச் சொல்கிறேன்.

வேதாதி சதுர்தச வித்யைகளைப் ப்ராமணப்பிள்ளைகளைப்போல அவ்வளவு ஆழ்ந்து, அலசிப் படிக்க வேண்டிய அவச்யம் க்ஷத்ரியர்களுக்கு இல்லை. இதேபோல, ப்ராமணப் பிள்ளைகளில் பிற்காலத்தில் தாங்கள் தநுர்வேத – அர்த்தசாஸ்திர ஆசார்யர்களாகிக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தேசமுள்ள மாணவர்கள் மாத்திரம் இவற்றை ஆப்ஷனலாக எடுத்துக்கொண்டு படித்திருக்கலாமே தவிர மற்றவர்கள் ஜீவனத்துக்கு அவசியமில்லாத இந்த ஆயுத சாஸ்திரத்தையும், ராஜாங்க நிர்வாஹ சாஸ்திரத்தையும் deep-ஆகக் கற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆகையால் ப்ரம்ம – க்ஷத்ர ஜாதி வித்யார்த்திகளுக்கு பாடங்களும், பாட முறையும் வித்யாஸமாக இருந்திருக்கவேண்டும். சதுர்தச வித்யைகளுக்கு மட்டும் அவ்வப்போது ப்ராமணப் பசங்களும், க்ஷத்ரியப் பசங்களும் சேர்ந்த ஒரே குருகுலத்தில் அப்யாஸம் செய்திருக்கிறார்களென்பது நிச்சயம்.

வைச்யர்களுக்கும் வேதத்தில் அதிகாரமுண்டாதலால் அவர்களும் இப்படி ப்ராமண குருகுலங்களில் கொஞ்சம் சேர்ந்து படித்திருக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் ஜன ஸங்கியைப் பெருகி, புதுப் புதுச் சரக்குகளை உற்பத்தி செய்து விற்பது, அந்நியத் தொடர்புகள் அதிகமாகிக் கடல் கடந்துகூட வர்த்தகப் பரிவர்த்தனை விஸ்தரிப்பது என்றெல்லாம் ஏற்பட்டபோது, வேதாப்யாஸத்தைப் பின்னுக்குத் தள்ளி அவர்களுக்கென்றே ப்ரத்யேகமாக ஏற்பட்ட வாணிஜ்யம் (வாணிபம்), கோ ஸம்ரக்ஷணை இரண்டை மாத்திரமே பால்யத்திலிருந்து ஆயுஸ்காலக் கல்வியாகவும் தொழிலாகவும் அவர்கள் மேற்கொள்ளவேண்டி வந்திருக்கிறது. அதோடு அன்றன்றும் உள்ள நிலவரங்களைப் பொறுத்துக் கணக்குப் பண்ணித் திட்டம் போடுவதும், அன்றன்றும் கிடைக்கிற வாடிக்கைக்கு ஏற்ப ஸமயோசிதமாக நேரே மநுஷ்யர்களோடு பழகி ஸமாளிக்க வேண்டியதுமான வைச்யர்களின் கார்யதைத் திறம்படச் செய்வதற்கு அவர்கள் புஸ்தகத்தைப் பார்த்து முடியாது. இதற்கு அந்நாளில் புஸ்தகமும் இல்லை. ஆகையால் அந்தப் பசங்கள் பெரிசாக வித்யாப்யாஸம் என்று பண்ணப் போகாமல், கொஞ்சம் வேதம், ஸமயாசாரம், தங்கள் தொழிலுக்கான சின்ன சாஸ்திரங்கள் இவற்றை மற்றும் படித்துவிட்டு, சின்ன வயஸிலிருந்தே அப்பனோடு, பாட்டனோடு நேரே தொழிலில் பிரவேசித்து அதன் knack-களை (ரஹஸ்யங்களை, ஸாமர்த்யங்களை, நுட்பங்களை)க் கற்றுக்கொள்வதாக ஏற்பட்டது.

மொத்தத்தில், ஆதி நாளில் வித்யாப்யாஸம் பிராமணனோடுதான் விசேஷமாகப் பொருத்தப்பட்டது. இதனால்தான் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடும் வேதத்துக்கே உரிய “பாடம்” வைத்தே கல்விக்கூடத்துக்குப் “பாடசாலை” என்று பெயர் நீடித்து வந்திருக்கிறது. காயத்ரி உபதேசத்தில் ஆரம்பித்து ஸம்பூர்த்தியாகக் கற்பிக்கிறவருக்கு ஏற்பட்ட “ஆசார்ய” என்ற பெயர்தான் இன்று நாஸ்திகம், கம்யூனிஸம் சொல்லிக்கொடுப்பவரிடமும் “ஆசிரியர்” என்பதாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காயத்ரி உபதேசம் செய்யாமல், ஜீவனோபாயத்தை உத்தேசித்து வேத சாஸ்திரம் கற்பிப்பவருக்குரிய “உபாத்யாயர்” என்பதுதான் இன்றும் “வாத்தியார்” என்று நம் பேச்சில் அடிபடுகிறது.
---

தேமொழி

unread,
Mar 9, 2016, 11:20:22 PM3/9/16
to மின்தமிழ்
தொடர்ச்சி ....

நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

புது மதங்களில் பெரிய வித்யாசாலைகள்

POSTED ON DECEMBER 23, 2014 
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/புது-மதங்களில்-பெரிய-வித/

இப்படி புத்தரும் ஜினரும் புது மதங்கள் உண்டாக்கியபோது ப்ராமணன் சொல்லிவந்த வேத ப்ராமாண்யம், வைதிக அநுஷ்டானம், வர்ணவிபாகம் இவை அந்த மதங்களில் இல்லை. வேதத்தை இன்னார்தான் அப்யஸிக்கலாம், இன்னார் கூடாது என்று விதி இருப்பதுபோல் இல்லாமல், அந்த மதங்களில் எல்லாரும் அவர்களுடைய ஆதார க்ரந்தங்களைப் படிக்கலாம் என்று வைத்தார்கள். இதனால் அவர்கள் ஸர்வ ஜனங்களுக்குமாக (பழைய வைதிக குருகுலங்கள் போலச் சின்னதாக இல்லாமல்) பெரிய பெரிய வித்யாசாலைகள் வைக்கவேண்டியதாயிற்று.

ஸர்வ ஜனங்களும் சேருவதற்கு ஸாதகமாக இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. குருகுலங்களில் வ்யாகரணத்தினால் நன்கு சுத்தி செய்யப்பட்ட ஸம்ஸ்க்ருத சாஸ்திரங்களே போதிக்கப்பட்டன. ஸாமான்ய ஜனங்களுக்கு ஸம்ஸ்க்ருதம் வராது. அவர்கள் அதன் கொச்சையான ப்ராக்ருத பாஷைகளைத்தான் அறிவார்கள். புத்தமதத்தின் ஆதார நூல்களாகிய த்ரிபிடகம் என்ற மூன்று தொகுப்புக்களும் பாலி என்ற ப்ராக்ருத பாஷையிலேயே எழுதப்பட்டன. ஜைனர்களின் ஆதார நூலான ‘அங்க’ங்கள் என்பவையும் ப்ராக்ருத பாஷைகளில் இன்னொன்றான ‘அர்த்தமாகதி’ என்பதில்தான் எழுதப்பட்டவை.

பொதுமக்களுக்கு எழுத்தறிவு இல்லாத நிலையில் ஒரு தேசத்தில் பலவந்த முறையில் போகாமல் மதமாற்றம் செய்யும்போது அதற்குப் பள்ளிக்கூடம் வைத்து அவர்களுக்குக் கல்வியறிவு தந்து தங்கள் ஸமய நூல்களைச் சொல்லிக் கொடுப்பது ஒரு முக்யமான அங்கமாகிவிடுகிறது. கிறிஸ்துவ மிஷனரிகள் விஷயம் நமக்குத் தெரிந்ததுதானே? ஐந்நூறு வருஷத்துக்கு முந்தி நானக் இதேபோலப் பஞ்சாபில் தம்முடைய ஸிக்கிய மதத்தைப் பரப்ப நினைத்தபோது அந்த பாஷைக்கு முறையாக லிபியே இல்லை. அதனால் லிபியும் மதகுருவே கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. (நானக்கை அடுத்து குருவாக வந்து, அவர் உபதேசங்களை எல்லாம் திரட்டி ப்ரசாரம் செய்த அங்கத் என்ற) குருவினால், குருமுகமாக உண்டானதாலேயே அந்த லிபிக்கு “குர்முகி” என்று பெயர். அடித்துப் பிடித்துத் தங்கள் மதத்துக்கு மாற்றாமல் ஸாத்விகமாக, அல்லது ஸாமர்த்யமாக மாற்ற நினைக்கிற மதஸ்தர்கள் பொதுமக்களுக்கு வித்யா சாலைகள் வைப்பதன் மூலமும் அதை ஸாதித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் பாயிண்ட். அறிஞர்களுக்கே தெரிந்த ஸம்ஸ்க்ருதத்தை விட்டு பொதுஜன பாஷையான ப்ராக்ருதத்துக்கு ஏற்றம் தந்து பௌத்த – ஜைனர்கள் இந்த உபாயத்தைக் கையாண்டார்கள்.

ஆனால், போகப் போக தத்வ வாதங்கள் கிளைவிட்டுக் கொண்டே போய் நுட்பமான விஷயங்களைச் சொல்ல வேண்டி வந்ததில் பிற்கால பௌத்த – ஜைனர்களும் ஸம்ஸ்க்ருதம்தான் இதற்கு ஏற்ற பாஷை என்று கண்டுகொண்டார்கள். அதிலேயே புஸ்தகங்கள் எழுத ஆரம்பித்தார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனன் காலத்தில் சைனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஹ்வான்-த்ஸாங், பௌத்தர்கள் ஸம்ஸ்க்ருதத்திலேயே தங்களுடைய ஆலோசனைகளையும் வாதங்களையும் நடத்தினார்களென்று சொல்லியிருக்கிறார். அது எப்படியானாலும் ஆரம்பத்தில் ஸர்வஜனங்களுக்கும் ஸர்வஜன பாஷையிலேயே கல்வி என்று அவர்கள் ஆரம்பித்ததில்தான் விஸ்தாரமான வித்யாசாலைகள் முன்னைவிட அதிமாக ஏற்படலாயின.
---
அறிவு ரீதியிலேயே எதிர்ப்பு

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/அறிவு-ரீதியிலேயே-எதிர்ப்/

ஆனால், இதை அதோடு முடித்துவிடுவதற்கில்லை. நிஜமாகவே அறிவுச் செருக்கும், ஜாதிக்கொழுப்பும் படைத்தவர்களாக ப்ராமணர்கள் இருந்தால் எத்தனை பண்புள்ள இதர ஜாதியாரும் அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் கொடுத்து வைக்க முடியுமா? ந்யாயமாகவே பார்த்தாலும் இப்படித் திமிரும் அஹந்தையும் பிடித்தவர்களாக ஒரு ஜாதி இருந்தால் அதை அடக்கி, ஒடுக்கித்தானே வைக்க வேண்டும்? தேஹபலம் போதாத ஒரு ஜாதியை ஸுலபமாகவே இப்படி அடக்கியும் போட்டுவிடலாமே! இப்படியெல்லாமிருந்தும் அம்மாதிரி அடக்கவில்லையென்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது? ப்ராமணர்களும் நிஜமாகவே மரியாதைக்குகந்த நல்ல குணசீலங்களையும், சிறந்த புத்தி வன்மையையும் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இப்படிப்பட்ட புத்தியை அவர்களுக்கு அளித்தது வித்யை; புத்தி மட்டுமில்லாமல் அதோடு குணசீலங்களைத் தந்தது அக்கால வித்யாப்யாஸ முறை – குறிப்பாக குருகுல முறை.

அபூர்வமாக ப்ராமண எதிர்ப்பு வலுவாக ஏற்பட்ட போதும் அது பௌதிக பலத்தைக் காட்டிச் செய்த எதிர்ப்பாக இல்லாமல் வேத மதத்துக்கு விரோதமாகவோ வித்யாஸமாகவோ இன்னொரு மதத்தைக் காட்டி ஸித்தாந்த ரீதியில் செய்த எதிர்ப்பாகவே இருந்ததும் ப்ராமணர்களின் வித்யாபலத்துக்குச் சான்றேயாகும். பௌத்த, சமண, ஸிக்கிய மதங்கள் தோன்றியதைத்தான் சொல்கிறேன்.

ஸிக்கிய மதத்தை பௌத்தத்தையும் சமணத்தையும் போல் அவ்வளவு வேத விரோதமானது என்று சொல்லக்கூடாதுதான். வேத மதத்துக்கு முதுகெலும்பாயுள்ள வர்ண, தர்மம், சடங்குகள் ஆகியவற்றை அந்த மதம் விலக்கிவிட்டாலுங்கூட, தன்னை தாய்மதத்துக்கு விரோதமானதாக ப்ரகடனம் பண்ணிக்கொண்டதில்லை. துருஷ்கரின் கொடுங்கோன்மைக்கு ஆளான ப்ராமண பண்டிதர்களுக்குத் தஞ்சம் கொடுத்து, அவர்களுக்காகத் துருஷ்கர்களோடு யுத்தமே செய்த ஸிக்கிய குருமார்கள் உண்டு.

க்ஷத்ரியர்களான புத்தர், ஜினர், நானக் முதலானவர்கள் ப்ராமணர்கள் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றிருந்தார்களோ, அந்த ஸமயத் தத்வத்திலேயே புதிய அபிப்ராயங்களையும் வழிகளையும் ஸாத்விகமான ரீதியில் காட்டித்தான் அவர்களோடு மோதினார்கள்.

அக்காலங்களில் ப்ராமணர்கள் ஆத்ம பலத்தில் கொஞ்சம் பின்னே போயிருந்தாலும் அவர்களிடம் பாரம்பர்யமாக வந்திருந்த சாஸ்திரத்தின் பலம்தான் அவர்களுடைய உண்மையான பலம் என்று புரிந்துகொண்டே அந்த சாஸ்திரங்களைத் தாக்கி ஜயிப்பதுதான் அவர்களை ஜயிப்பதாகுமே தவிர அவர்களையே ஸ்தூலமாகத் தாக்குவது அல்ல என்று அவர்களிடம் மனோபேதம் கொண்ட க்ஷத்ரியர்களுக்கு ஓர் உணர்ச்சி இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ரேஸ் கான்ஷஸ்னஸ்’, ‘கிளாஸ் கான்ஷஸ்னஸ்’ என்றெல்லாம், (தனி மநுஷ்யனுக்கு இருக்கிறாற்போலவே) ஒவ்வொரு கூட்டதுக்கும்கூட இருந்து அதற்குச் சக்திவாய்ந்த ப்ரதிநிதிகளாகவே அந்தக் கூட்டத்தில் அவ்வப்போது தலைமை தாங்கும் மநுஷ்யர்கள் தோன்றுவதாக இப்போது மனோதத்வ சாஸ்திரத்தில் சொல்கிறார்கள். இம்மாதிரி, எல்லா க்ஷத்ரியர்களுக்கும் இல்லாவிட்டாலும் அதிலே ஒரு பகுதிக்கு ப்ராமணர்களிடமிருந்த மனோபேதத்தில் அவர்களைத் தத்வ ரீதியில் ஜயிக்கவேண்டும் என்றிருந்த எண்ணத்துக்கு ப்ரதிநிதிகளாகவே புத்தர், ஜினர் போன்றவர்கள் தோன்றினார்கள். இது இரண்டு தரப்புக்குமே பெருமை தரும் விஷயம்.

என்ன சொல்கிறேனென்றால், ‘அறிவு, தத்வம் என்பனவற்றுக்கு ப்ராமணன்தான் ‘ரெபாஸிடரி’ (குடியிருப்பு)-ஆக இருக்க வேண்டுமென்பதில்லை; அவன் காட்டும் சாஸ்திர ரீதிக்கு அடங்கியே, அவனை மந்த்ரியாக வைத்துக்கொண்டு ஆலோசனை கலந்தே செயலாற்றுகிற எங்களுக்கு வெறும் புஜபலம் மட்டுமில்லாமல் இந்த புத்தி பலமும் உண்டு’ என்று ஒரு கூட்டு consciousness க்ஷத்ரியர்களில் ஒரு பிரிவுக்கு உள்ளூற இருந்து அதுவே இப்படி அவர்களைப் புது மதங்களை ஸ்தாபிக்கும்படித் தூண்டியிருக்கலாம்.

இந்த சைகாலஜி ஸூக்ஷ்மம் இன்னொரு அம்சத்திலுங்கூடத் தோன்றுகிறது. ப்ராமணர்களைத்தானே ரொம்பவும் ஸாத்விகர்களாக சாஸ்திரத்தில் வைத்திருக்கிறது? பொது வழக்கிலும் அவன்தானே மற்றவர்களைவிட ஸாதுவாக இருந்திருக்கிறான்? இதற்கு நேர்மாறாக க்ஷத்ரியர்கள் நிரம்ப ராஜஸமுள்ளவர்களாகவும், வீரர்களாகவும், யுத்தத்துக்குத் தினவு எடுத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதனாலேயே சைகலாஜிகலாக உண்டாகிற மனப்போக்கில் (ப்ராமணனைப் போல அல்லது அவனைவிடவும் தங்களுக்கும் புத்தி பலமும், தத்வ விசார நைபுண்யமும் (நிபுணத்தன்மையும்) உண்டு என்று காட்டிப்புதிய மதஸித்தாந்தங்களைச் செய்தார்போலவே), அவனைவிடவும் தாங்கள் ஸாத்விகர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ளவும் எண்ணம் இருந்திருக்கலாம். அதனாலேயே புத்தரும், ஜினரும் ப்ராமணன் பசுபலி தந்து செய்கிற யஜ்ஞத்தை எதிர்த்து, பரம அஹிம்ஸையை வலியுறுத்தும் மதங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இதனால் அவர்களுடைய அஹிம்ஸா வாதத்தின் அந்தரங்க சுத்தத்தை ஸந்தேஹிப்பதாக ஆகாது. இந்த ‘கன்விக்ஷ’னுக்கு (உறுதிக்கு) அந்த கான்ஷஸ்னஸும் (உணர்ச்சியும்) உரம் கொடுத்திருக்கலாம் என்பதே அர்த்தம்.
---

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 10, 2016, 12:48:18 AM3/10/16
to mintamil
சங்கராசாரியாரின் பரந்துபட்ட அறிவும் வாதத்திறனும் வியக்கவைக்கின்றன.
வேதமதத்தை விட அகிம்சை, கல்வி உட்பட எல்லா விஷயங்களிலும் மேம்பட்டு அனைவரையும் சென்றுசேர்வது புத்த,சமண மதங்களின் உறுதிப்பாடு என்பது புலனாகிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2016-03-10 9:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

தேமொழி

unread,
Mar 10, 2016, 1:07:10 AM3/10/16
to மின்தமிழ்
கருத்துரைக்கு மிகவும்  நன்றி சொ.வி. ஐயா.  

இந்த நூல் விற்பனையில் சாதனை செய்து பலபதிப்புகளாக வந்து அனைவரும் விரும்பிப் படிக்கும் நூல் என்பது தெரிகிறது.

இந்த நூல் காட்டும் வழியில்  "இந்தியாவில் கல்வியின் பரிணாம வளர்ச்சி" என்ற கோணத்தில் அணுக எண்ணினேன்.

இனி ...தொடர்கிறேன்...

அன்புடன்
..... தேமொழி

தேமொழி

unread,
Mar 10, 2016, 1:07:52 AM3/10/16
to மின்தமிழ்
*** தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருக்கும் "தெய்வத்தின் குரல்"  கட்டுரைகளில், கீழ்காணும் கட்டுரைகளில் கல்வி பற்றிய குறிப்புகள்  எதுவும் காணப்படாததால் நான் கடந்து செல்கிறேன்...

படிக்க விரும்பியவர்கள் கொடுக்கப்பட்ட சுட்டிகள் வழி சென்று படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
---

மோதலிலும் மரியாதைப் பண்பு

POSTED ON DECEMBER 23, 2014 
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/அத்வைதமும்-அரசாங்கமும்/

---

அத்வைதமும் அரசாங்கமும்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/அத்வைதமும்-அரசாங்கமும்/
---

தேச ஒருமை வேத தர்மத்தினாலேயே; பிற தர்மங்களால் கட்டுக்குலைவே!

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/தேச-ஒருமை-வேத-தர்மத்தினா/
---

வைதிகத்தில் நான்காம் வர்ணத்தவரின் அபிமானம்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/வைதிகத்தில்-நான்காம்-வர்/
---

க்ஷத்ரியரும் ப்ராமணரும்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/க்ஷத்ரியரும்-ப்ராமணரும்/
---

புத்தர் கால அந்தணர் நிலைமை

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/புத்தர்-கால-அந்தணர்-நிலை/
---

மாறுபாடான இரு கதைகள்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/மாறுபாடான-இரு-கதைகள்/
---

தேமொழி

unread,
Mar 10, 2016, 1:08:11 AM3/10/16
to மின்தமிழ்
தொடர்ச்சி ....

நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

---

பாடதிட்டத்தில் வேறுபாடுகள்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/பாடதிட்டத்தில்-வேறுபாடு/

ஆனபடியால் குருகுலம், வித்யாப்யாஸம் முதலான ஸமாசாரங்களே போகப் போக ப்ராமணர்களை முக்யமாக கொண்ட விஷயங்கள் மாதிரியாகிவிட்டன. க்ஷத்ரியர்களிலும் ராஜகுமாரர்கள், ராஜ குடும்ப முக்யஸ்தர்களின் பிள்ளைகள் ஆகியோர் நீண்டகாலம் குருகுலவாஸம் செய்து நிரம்பவும் வித்யாப்யாஸம் செய்து தேர்ச்சி பெற்றார்கள்.

ஆனால் ப்ராமணப் பசங்களின் பாடத்திட்டத்தில் சதுர்தச வித்யைகளுக்கு * ப்ராதான்யம் கொடுத்து, தநுர் வேதம், அர்த்த சாஸ்திரம் முதலானவற்றை ‘எலிமென்டரி’யாகத்தான் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். ஏனைய ஜாதியினருக்கும் அவர்களுடைய தொழிலை போதிக்க பிராமணன் தகுதி பெற்றிருக்கவேண்டுமாதலால், ப்ராமணப் பசங்களிலேயே பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் குருகுல வாஸம் செய்கிறவர்களில் சிலருக்கு தநுர் வேதம், சிலருக்கு அர்த்த சாஸ்திரம், சிலருக்கு சில்பம், சிலருக்கு ஸங்கீதம் என்றிப்படிப் பிரித்து, மற்றவர்களுக்கான தொழிலைக் குறித்த கல்வியும் புகட்டினார்கள். ஆக, இது எல்லா ப்ராமணர்களுக்குமான பொதுப் பாடதிட்டமில்லை.

க்ஷத்ரியப் பசங்களிலோ அத்தனை பேருக்குமே தநுர் வேதப்படி நிறைய அஸ்த்ர சஸ்த்ர சிக்ஷை தரவேண்டும். ராஜ நீதி, அர்த்த சாஸ்திரங்களையும் இவர்களுக்கு deep-ஆக போதிக்க வேண்டும். ஆனதால் ப்ராமணப் பசங்களுடையதற்கு வித்யாஸமானதாகவே இவர்களுக்குக்கெனத் தனி ‘கர்ரிகுலம்’, ‘ஸிலபஸ்’ போட்டு அதன்படியே சிக்ஷை தந்திருக்கவேண்டும். இவர்களுக்காக முழுக்கவே தனியாக குருகுலம் இருந்திருக்கலாம்; அல்லது வேதாதி சதுர்தச வித்யைகளில் ப்ராமணப் பசங்களின் குருகுலங்களிலேயே ஒரு கட்டம் வரையில், அல்லது நடு நடுவே சில க்ளாஸ்களில் சேர்ந்து கல்வி கற்பதாகவும், ஆயுதப் பயிற்சி, ஆட்சி முறைக்கல்வி முதலியவற்றைத் தனியான (exclusive) குருகுலங்களில் கற்பதாகவும் இருந்திருக்கலாம். Inter-collegiate க்ளாஸ்கள் என்று தற்காலத்தில் வெவ்வேறு காலேஜ் மாணவர்கள் சில ஸப்ஜெக்ட்களை மட்டும் சேர்ந்து படிக்கிற மாதிரி இருந்திருக்கலாம். ப்ராமணரான த்ரோணரோடேயே அவருடைய பிதாவான பரத்வாஜரிடம் க்ஷத்ரியனான த்ருபதன் குருகுலவாஸம் பண்ணியிருக்கிறான். க்ஷத்ரிய க்ருஷ்ணரும், ப்ராமண குசேலரும் சேர்ந்து படித்திருக்கிறார்கள்.
---

“ப்ரத்யேகச் சூழ்நிலை”

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/ப்ரத்யேகச்-சூழ்நிலை/

“அதென்ன ப்ரத்யேகச் சூழ்நிலை?” என்றால்,

ப்ராமணன்தான் எல்லா ஜாதியாருக்கும் அவரவருக்கான தொழிலைக் கற்பிக்க வேண்டியவன் என்பது நம் பூர்விகர்களுடைய ஏற்பாடு. தொழில் மாத்திரமின்றி தர்மம், ஆத்ம க்ஷேமத்துக்கான விஷயம் முதலியவற்றையும் ப்ராமணர்கள் பிறருக்கு போதிப்பார்கள். ஆனாலும் இப்படி போதிக்கும்போது நாலாம் வர்ணத்தாராகிய ஜன ஸமூஹத்துக்கு வேதத்தை மட்டும் நேராக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஜனங்களிடையே பலவேறு தொழில்களையும் பாரம்பர்யமாகப் பங்கீடு செய்து வைத்த நம்முடைய வர்ண தர்மத்தின்படி வேதக் கல்வியும் அதன்படியான அநுஷ்டானங்களும் ப்ராமணன் ஒருத்தனுக்குத்தான் ஆயுள் காலத் தொழில் என்று பங்கீடு பண்ணி வைத்து விட்டதால் இவற்றை ஓரோர் அளவுக்கு மாத்திரம் க்ஷத்ரியர்களுக்கும் வைச்யர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது, நாலாம் வர்ணத்துக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தார்கள்1. நேராக வேதத்தைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அதன் அபிப்ராயங்களையும், தத்வார்த்தங்களையும் புராண இதிஹாஸங்களாகவும் நீதி நூல்களாகவும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனாலும் இந்த ஆத்மார்த்தமான போதனை என்பது பொதுஜனக்ஙளுக்கு குரு – சிஷ்யரென்று க்ளாஸில் பாடம் நடத்துவதுபோல அதிகம் நடக்கவில்லை. குருகுலத்தில் முக்யமாக வேத அத்யாபனமே நடந்தது. அத்யாபனம் முடித்து, ஆசார்யர்கள் போஜனம் பண்ணிவந்த பிற்பாடே மற்றவர்கள் வந்து அவர்களிடம் போதனை பெறுவதாக இருந்தது. இந்த ஆசார்யர்களை விடப் பௌராணிகர்கள், உபந்யாஸகர்கள் ஆகியவர்கள்தான் புராண இதிஹாஸம், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பொது ஜனங்களுக்கு அதிகமாக ப்ரசாரம் செய்து தத்-த்வாரா அவர்களுக்கு ஆத்ம முன்னேற்றத்துக்கான விஷயங்களைப் பரப்பினார்கள்.

இதரர்கள் (நாலாம் வர்ணத்தார்) அவர்களுடைய ஜாதித் தொழில்களை வெகு நன்றாகச் செய்து கொண்டிருக்கும்போது அதை விட்டுவிட்டுத் தொழில் கற்றுக்கொள்வதற்காக எங்கோ ஒதுக்குப்புறத்திலிருந்த குருகுலத்துக்கு அவர்களுடைய குழந்தைகள் போகவேண்டிய அவச்யமிருக்கவில்லை. வீடே அவர்களுக்குப் பள்ளிக்கூடமாகவும் இருந்தது.

வேதத்தைத்தான் ப்ராமணனிடமிருந்தே கற்க வேண்டுமென்றும், மற்ற தொழில்களுக்கான சாஸ்த்ரங்களை அந்தந்த ஜாதியாரே தங்களுக்குள் கற்றுக்கொடுத்துக் கொள்ளலாம் என்றும் ஸ்ம்ருதிகள் அநுமதிக்கின்றன. நடைமுறை ஸெளகர்யத்தை உத்தேசித்தே இவ்வாறு அநுமதித்திருப்பது. தொழிலாளி ஸமூஹப் பசங்கள் ஒரு காலத்தில் படித்துவிட்டு, அப்புறம் பிற்காலத்தில் அதை ‘அப்ளை’ பண்ணித் தொழில் செய்வது என்றில்லாமல், ஆரம்பத்திலிருந்து வீட்டுப் பெரியவர்களுக்கு அஸிஸ்டெண்டாகத் தொழிலில் உதவி செய்து, அப்போதே கற்றுக் கொள்ளவும் செய்தார்கள். ஏதாவது ஸந்தேஹம் வந்தாலோ, ஏதோ ஒரு நுணுக்கம் தெரியவேண்டுமென்றாலோ மட்டுமே அந்தத் தொழிலைப் பற்றிய சாஸ்த்ர அபிப்ராயம் தெரிவதற்காக ப்ராமண ஆசார்யனிடம் போய்க் கேட்டுக்கொண்டால் போதும் என்று இருந்தது. இப்படிப்பட்ட நுணுக்கங்கள் தெரிந்த அநுபவஸ்தர்களுங்கூட இந்த ஜாதிகளிலேயே இருந்ததால் இதற்குங்கூட “அய்ய”ரிடந்தான் போகணுமென்று கட்டாயம் இருக்கவில்லை. தட்டார்களை, சில்பிகளை, தச்சர்களையெல்லாங்கூட “ஆச்சாரி” என்று சொல்வதிலிருந்து அந்தந்த ஜாதியிலும் அவர்களைச் சேர்ந்தவர்களே நிரம்ப விஷயஜ்ஞர்களாகி ஆசார்யஸ்தானத்தில் இருந்துகொண்டு கற்றுக் கொடுத்திருக்கிறார்களென்று தெரிகிறது.

வேத வித்யையில் அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாருக்கும் பழங்கால வித்யாசாலைகளில் சேரத் தகுதியிருந்தாலும் உபநயன ஸம்ஸ்காரத்தை இந்த வர்ணத்தினர்களுக்கு வேறு வேறு வயஸில் வைத்திருப்பதை இங்கே குறிப்பிடவேண்டும். உபநயனத்துக்கு முந்தியே அக்ஷராப்யாஸம் என்று ஒன்று வந்தது பிற்காலத்தில்தான். நாற்பது ஸம்ஸ்காரங்களில் அக்ஷராப்யாஸம் இல்லை2. அக்ஷராப்யாஸத்தில் குழந்தையின் கையைப் பிடித்து எழுதுவிப்பதுதான் முக்யமாயிருக்கிறது. ஆதி ஸ்கூலிலோ எழுதுவது, எழுத்து என்பவையே அதிகம் கிடையாது, காதால் கேட்டுத்தான் பாடம் பண்ணணும் என்று சொன்னேனே! அப்போது உபநயனமேதான் வித்யாப்யாஸத்துக்கு ஆரம்பமாக இருந்தது. உபநயனத்தில் செய்யும் காயத்ரி மஹாமந்த்ரோபதேசம்தான் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ணுவதற்கு அங்குரார்ப்பணம். உபநயனம் பண்ணி குருகுலத்தில் விடுவதே வழக்கம்.

இப்படிப் பண்ணுவதில் ப்ராமணப் பிள்ளையானால் எட்டு வயஸுக்கே பூணூல் போட்டு குருவிடம் அனுப்புவது என்றும், க்ஷத்ரியப் பிள்ளைக்குப் பதினோரு வயஸிலும் வைச்யப் பிள்ளைக்குப் பன்னிரண்டு வயஸிலும் இப்படிச் செய்வதெனறும் இருந்திருக்கிறது.

ப்ராமணப் பிள்ளையைப் பதினாறு வயஸுக்கு மேல் பூணூல் போடாமல் வைக்கப்படாது. இதேமாதிரி க்ஷத்ரியனுக்கு ‘அப்பர் லிமிட்’ இருபத்திரண்டு வயஸு. வைச்யனுக்கு இருபத்திநாலு.

ரொம்ப சூட்டிகையாயிருந்தால் ப்ராமணப் பிள்ளைக்கு ஐந்து வயஸிலும், க்ஷத்ரியப் பிள்ளைக்கு ஆறு வயஸிலும், வைச்யப் பிள்ளைக்கு எட்டு வயஸிலும் பூணூல் போட்டு வித்யாப்யாஸம் ஆரம்பிக்கலாம்.

ஏன் இப்படி ப்ராமணனைவிட மற்ற ஜாதியாருக்கு வித்யாப்யாஸத்தை வித்யாஸப்படுத்தியிருக்கிறது, தள்ளிப் போட்டிருக்கிறது என்றால்…

எந்தக் குழந்தையானாலும் அதற்கு அதனுடைய இயற்கையான வீட்டுச் சூழ்நிலையில், அதற்கான வாழ்க்கைத் தொழிலில் இயல்பான ருசி ஏற்படும் என்பதுதான் காரணம். இமிடேட் பண்ணுவது குழந்தையின் குணம். ப்ராமணனைத் தவிர மற்றவர்கள் உடம்பாலே நிறையத் தொழில் செய்பவர்கள். ஒருத்தன் கத்தி சுழற்றுவான். இன்னொருத்தன் உழுவான். இன்னொருத்தன் நெசவு செய்வான், இப்படிப் பல. அந்த ஜாதித் தொழில்களை ஸ்வதர்மமாகக் கொண்ட குழந்தைகள் குருகுலத்திலே அந்தத் தொழில்களில் எதுவுமே நடப்பதைப் பார்க்கமுடியாது. தொழில் செய்கிற இடமில்லை குருகுலம். தொழில்முறையை அறிகிற, அறிவைப் பரப்புகிற இடம்தான் அது. இப்போது மாண்டிஸோரி முதலானவர்கள், செய்து தெரிந்துகொள்ள வேண்டியவற்றைப் பாடமாகச் சொல்லிக் கொடுப்பது முறையில்லை; இப்படிச் செய்வது ஒரு குழந்தையை ஸரியாக உருவாக்காது, அந்தக் கார்யமும் இதனால் ஸரியாக உருவாகாது என்று அபிப்ராயப்பட்டு புது தினுஸான கல்விமுறை கொண்டுவந்திருக்கிறார்கள் அல்லவா? இது புது தினுஸே இல்லை. நம் ஆதிகால மூதாதையர் இந்த வழியைத்தான் பின்பற்றினர். அதனால்தான் அறிவை வளர்ப்பதையே ஆயுஸ்காலத் தொழிலாகக் கொண்ட ப்ராமண ஜாதியில் பிறந்த குழந்தைகளைத் தவிர மற்ற ஜாதிக் குழந்தைகளை ரொம்பவும் சின்ன வயஸில் குருகுலத்தில் அடைக்க வேண்டாம்; அந்தக் குழந்தைகள் அகத்திலேயே அப்பன் பாட்டனோடு ஸந்தோஷமாக வஸித்துக்கொண்டும், அவர்களோடேயே ஆயுதசாலைக்கோ கடைக்கோ நிலத்துக்கோ பட்டறைக்கோ போயும் அவர்கள் செய்யும் தொழிலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, ‘இமிடேஷன்’ செய்கிற ‘இன்ஸ்டிங்க்டி’ல் அதே மாதிரி செய்துகொள்ளட்டும் என்று விட்டார்கள். இப்படி வேலையில் குழந்தை ஒத்தாசை செய்வது அந்த ஜாதியாருக்கு வேலையையும் குறைத்து வருமான லாபத்தையும் உண்டாக்கிற்று.

இன்னொரு அம்சத்தையும் கவனிக்கவேண்டும். மந்த்ர சக்தியை உண்டாக்கிக்கொள்ள வேண்டியதை முன்னிட்டு ஆஹாரம் முதலானவற்றில் ப்ராமணக் குழந்தைக்கு இருக்கிற கட்டுப்பாடு மற்ற ஜாதிக் குழந்தைகளுக்கு இல்லை. ப்ராமமணன் நடத்தும் குருகுலத்தில் அந்த மற்றக் குழந்தைகளுக்குப் பழக்கமான, அவர்களுக்குத் தேவையான ஆஹாராதிகளை எப்படிச் சேர்க்கமுடியும்?

இத்யாதி காரணங்களால் அந்தக் குழந்தைகள் கொஞ்சம் நாக்கைக் கட்டக்கூடிய பருவத்தில் குருகுலத்துக்கு வந்தால் போதும் என்று உபநயன வயஸை உயர்த்தி நிர்ணயித்தார்கள்.

தங்கள் தங்கள் தொழிலை மட்டும் கற்றுக் கொள்வதானால் மற்ற ஜாதிக் குழந்தைகள் தங்களுடைய குடும்பத்திலிருந்துகொண்டே அதைப் பெரிய அளவுக்குச் செய்து விடலாம். எனவே அவர்கள் குருகுலத்துக்கு வந்ததே முக்யமாக வேத சாஸ்த்ர அப்யாஸத்துக்காகத்தான். இதில் அவர்கள் ப்ராமணப் பசங்களைப் போல தேர்ச்சி பெற வேண்டிய அவச்யமில்லை. அப்படிச் செய்தால் அப்புறம் அவர்கள் செய்யவேண்டிய ஸ்வதர்மத் தொழிலே பாதிக்கப்பட்டுவிடும். எனவே ஓரளவு வேத சாஸ்த்ர ஞானம் அவர்களுக்குப் போதுமானதாயிருந்தது. இதைப் பெறுவதற்காக அவர்கள் ப்ராமணப் பசங்கள் மாதிரி நீண்டகாலப் வித்யாப்யாஸம் செய்ய வேண்டியிருக்கவில்லை.

1வர்ண தர்மம் குறித்து முன் மூன்று பகுதிகளிலும் உரைகளும் உரைப்பகுதிகளும் உள்ளன. குறிப்பாக முதற்பகுதியில் ‘வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?‘ என்ற உரை பார்க்கவும்.

2 இரண்டாம் பகுதியில் “நாற்பது ஸம்ஸ்காரங்கள்” என்ற உரை பார்க்க.

---

தேமொழி

unread,
Mar 10, 2016, 1:34:27 AM3/10/16
to மின்தமிழ்
தொடர்ச்சி ....

நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

---

புது மதங்களும் பெரிய கல்வி நிலையங்களும்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/புது-மதங்களும்-பெரிய-கல்/

ஆனாலும் புத்த, ஜின மதங்கள் வந்ததிலிருந்துதான் புது ஸித்தாந்த ப்ரசாரம் மாத்திரமின்றி மற்ற எல்லாக் கலைகளும் விஞ்ஞானங்களும் ஜாஸ்தியானதால் பெரிய ஸ்கேலில் வித்யாசாலைகள் நடத்துவது ரொம்பவும் குறிப்பிடும் அளவுக்கு வ்ருத்தியானது. அதற்கு முந்தி, மிகப் பெரும்பாலும் தனி மநுஷ்யராக உள்ள குருவிடம் ஒருசில வித்யார்த்திகளே சிக்ஷைபெறும் குருகுலவாஸ முறைதான்.

புது மதங்களோடு பெரிய ஸ்கேல் வித்யாசாலை வந்ததற்கு இன்னொரு முக்யமான காரணமும் உண்டு. இந்தப் புது மதங்களுக்கு ஹிந்துக்களைத் திருப்பியவர்களுக்கு நிஜமாகவே எல்லா ஜனங்களுக்கும் அறிவை வ்ருத்தி செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கலாம். இருந்தாலும் கன்வர்ஷன் (மதமாற்றம்) என்று வரும்போது வேறு உள்நோக்கமும் இருந்திருக்கக்கூடும் என்பது நம்முடைய ஸமீபகால சரித்ரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.

ஸமீப காலத்தில் என்ன பார்த்தோம்? இலவசமாகப் படிப்புச் சொல்லித் தருவதற்காக எங்கே பார்த்தாலும் ஸ்கூல் வைத்து, நைஸாக அதன் மூலமே மதப் பிரசாரம், மதமாற்றம் எல்லாம் பண்ணுவதை நிறையப் பார்த்திருக்கிறோமல்லவா? அதனால் ஆதியில் இந்த தேசத்திலேயே அவைதிகமான புது மதங்கள் உண்டானபோதும் ஆள் பிடிப்பதற்கு உபாயமாக வித்யாசாலைகளை பெரிய அளவில் ஏற்படுத்தியிருகக்லாமென்று தோன்றுகிறது. இதைக் காட்டி பொதுஜனங்களை வசீகரிப்பதற்கு நம்முடைய ப்ரத்யேகச் சூழ்நிலை நல்ல வாய்ப்பு தருவதாக இருந்ததையும் சொல்லவேண்டும்.

---

பழங்காலக் கல்விப் பெருநிலையங்கள்

POSTED ON DECEMBER 23, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/பழங்காலக்-கல்விப்-பெருநி/

தக்ஷசிலா பஞ்சாபில் இருப்பது. புத்தர் காலத்துக்கு மிகவும் முந்தி உபநிஷத நாட்களிலிருந்தே புகழ்பெற்ற க்ஷேத்ரமாக அது இருந்திருக்கிறது. அக்காலத்தில் அந்த ப்ரதேசத்துக்கு காந்தார தேசம் என்று பெயர். காந்தாரி அந்த நாட்டு ராஜகுமாரியாகப் பிறந்தவள். பாண்டவர்களின் கொள்ளுப் பேரனான ஜனமேஜயன் ஸர்ப்பயாகம் பண்ணினதும், அவனுக்கு முன்னால் மஹாபாரதம் முதல் முதலாக “அரங்கேற்ற”மானதும் இங்கேதான். இது அந்த ஊருக்கு உள்ள மஹாபாரத ஸம்பந்தம். ராமாயண ஸம்பந்தம் இதைவிட அதிகமாக அதற்கு உண்டு. பரதனின் பிள்ளையாக தக்ஷன் ஸ்தாபித்த ஊரானதாதலால்தான் அதற்குத் தக்ஷசிலம் என்ற பெயரே ஏற்பட்டது. இப்படி வைதிக மத ஸம்பந்தமுள்ளதாயிருந்த அந்த ஊர், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஃபாஹியன் இந்தியாவிலே சுற்றுப் பிரயாணம் செய்து குறிப்புகள் எழுதியபோது பௌத்தர்களின் சைத்ய, விஹாரங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்கிறது. அப்புறம் ஹுணர் என்ற அந்நிய நாட்டு ம்லேச்சர்கள் அந்த ஊரைச் சூறையாடிச் சிதைத்து விட்டனர். ஃபாஹியனுக்கு இருநூறு வருஷத்துக்கு அப்புறம் ஹுவான் த்ஸாங் வந்து சுற்றுப்பிரயாணம் செய்தபோது தக்ஷசிலம் ஒரே ‘ரூயின்ஸ்’ (இடிபாடுகள்) மயமாயிருந்ததாக எழுதி வைத்திருக்கிறார்.

பௌத்தர்களின் பெரிய வித்யா ஸ்தானமாக அது இருந்தபோது ஒரே ஸர்வகலாசாலையின் கீழ் பல துறைகளாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ‘ஸெட்-அப்’பில் இல்லை என்றும், அநேகச் சின்னச் சின்ன வித்யாசாலைகள் ஒரே இடத்தில் சேர்ந்திருந்ததாக மட்டுமே இருந்தது என்று தெரியவருகிறது.

ஒரு ஸென்ட்ரல் ‘ஸெட்-அப்’பில் இல்லாவிட்டாலும் இங்கே வேதவித்யை உள்படப் பதினாறு சப்ஜெக்ட்களில் பாடம் நடத்தியிருக்கிறார்கள். சாணக்யர் போன்றவர்கள் கூட அங்கே வித்யாப்யாஸம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கால யுனிவர்ஸிடி ஸெட்-அப்பிலேயே இருந்தது நாலந்தா வித்யாசாலைதான். அங்கேதான் ‘ரூயின்’ஸைப் பார்க்கும்போது பெரிய பெரிய லெக்சர் ஹால்கள், ஹாஸ்டல்கள் ஆகியன இருந்தது தெரியவருகிறது. இது பழைய காலத்தில் மகதம் எனப்பட்ட இன்றைய பிஹாரில் இருக்கிறது. புத்த விஹாரங்கள் நிறைய ஏற்பட்டது மகத தேசத்தில்தான். விஹாரம், விஹார் என்பதே பிஹார் என்றாயிற்று. அதைத் தப்பாக பீஹார் என்கிறோம்! பட்னா என்கிற பாடலிபுத்ரத்துக்கு ஸமீபத்தில் புத்தர் வாழ்க்கையோடு ஸம்பந்தப்பட்ட ராஜக்ருஹம் (ராஜ்கிர்) இருக்கிறது, அதற்குப் பக்கத்தில் நாலந்தா இருக்கிறது. பௌத்த தத்வதர்சிகளில் முக்யம் வாய்ந்த ஒருவரான நாகார்ஜுனர் இந்த இடத்தை ஸர்வகலாசாலை, அல்லது விச்வ வித்யாலயம், அல்லது தமிழில் பல்கலைக் கழகம் என்கிற ரீதியில் பெரிய கல்விச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்தார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நரஸிம்ஹ பாலாதித்யரின் காலத்தில் நாலந்தா விச்வ வித்யாலயம் பூர்ண வளர்ச்சியைப் பெற்றதாகத் தெரிகிறது. பௌத்த சாஸ்த்ரங்கள் மட்டுமின்றி, ஓரளவு வேத வித்யையும் மற்றும் விஸ்தாரமாகவே கணிதம், ஜ்யோதிஷம், தர்க்கம், ஸங்கீதம், வைத்யசாஸ்த்ரம் ஆகியனவும் இங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே பத்தாயிரம் பேர் ரெஸிடென்ஷியலாகத் தங்கிப் படித்தார்களென்று தெரிகிறது. ஆசியாவிலுள்ள வெளி தேசங்களிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கூட நல்ல அறிவுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்காக இங்கே வந்தார்கள் என்று தெரிந்து கொள்ள நமக்கு மிகவும் பெருமையாயிருக்கிறது. ஆனாலும், தக்ஷசிலத்தில் அக்கால இன்ஜீனீயரிங் முதலான டெக்னிகல் ஸப்ஜெக்ட்களை போதித்ததுபோல இங்கே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் அட்மிஷன் இருந்தாலும், குறிப்பாக பிக்ஷுமார்களை உண்டாக்குவதே நாலந்தா கலாசாலையின் நோக்கமாயிருந்ததால் காரிய ரீதியில் மிகவும் லௌகீக ஸம்பந்தமுண்டாக்குவதான டெக்னிகல் ஸப்ஜெக்ட்களை இங்கே பாடதிட்டத்தில் சேர்க்கவில்லை என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் ஜ்யோதிஷம் ஒரு ஸப்ஜெக்டாக இருந்ததால் இங்கே வான மண்டலத்தை தீர்க்க த்ருஷ்டிக் கருவிகளால் ஆராய்வதற்காக ஒரு சிறந்த ‘ஆப்ஸர்வேடரி’ இருந்திருக்கிறது. ஒன்பது மாடிகளுள்ள ஒரு பெரிய லைப்ரரியும் இருந்திருக்கிறது.

கஜனி முஹமது, கோரி முஹமது முதலானவர்கள் படையெடுத்து நம் கலாசாரத்துக்குப் பெரிய ஹானி உண்டாக்கி, அப்புறம் துருக்கர்களின் Slave Dynasty (அடிமைவம்ச) ஆட்சி பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டபோது நாலந்தா யுனிவர்ஸிடி, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நசித்துப் போய்விட்டது. எட்டு நூற்றாண்டுகள் இப்படி ஒரு யுனிவர்ஸிடி நடைபெற்றதென்பதே மிகவும் பெருமைக்குகந்த விஷயம்.

நாலந்தா யுனிவர்ஸிடி பூர்ணரூபம் பெற்ற ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்நூறு வருஷங்கள் அப்புறம், வங்காளத்தில் பால வம்சத்தவர் ஆட்சியில் ஏற்பட்டது விக்ரமசிலம். கங்கைக்கரையில் ஒரு குன்றின்மேல் தர்மபாலன் என்ற அரசின் பௌத்த மடாலயமும் அதைச் சேர்ந்ததாக இந்த வித்யாசாலையும் ஸ்தாபித்தான். திபெத்திலிருந்தே பிக்ஷுக்கள் நிறைய வந்து இங்கே கல்வி கற்றிருக்கிறார்கள். இங்கிருந்து பிக்ஷுக்கள் திபெத்துக்குப் போயும் பௌத்தமதப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். அநேக பௌத்த நூல்கள், குறிப்பாக தாந்த்ரிகமானவை (தந்த்ர சாஸ்த்ரத்தைக் குறித்தவை) பிற்காலத்தில் இந்தியாவில் கிடைக்காமல் திபெத்திலிருந்தே நாம் பெறும்படியாக இருந்தது. இப்போதுங்கூட இப்படிப் பல பழைய புஸ்தகங்கள் திபெத் மடாலயங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை அங்கே போய்ச் சேர்ந்ததற்கு நாலந்தா – விக்ரமசிலா யுனிவர்ஸிடிகளால் ஏற்பட்ட பரிவர்த்தனைதான் காரணம்.

ஹிந்து சாஸ்த்ரங்களிலும், ஹிந்து மதப் பூர்விகர்களின் இதர கலைகள் ஸயன்ஸ்கள் ஆகியவற்றிலும் விஸ்தாரமாக போதனை தரும் இடங்களாகவும் பல ஆதி காலத்திலிருந்து இருந்திருக்கின்றன. இவற்றில் வடக்கே காசியும், தெற்கே காஞ்சியும் முக்யமானவை. மேற்கே காந்தி பிறந்த கத்தியவாரில் வலபீ சிறந்த வித்யா பூமியாக இருந்திருக்கிறது. விக்ரமாதித்யனின் உஜ்ஜயினி மத்ய பாரதத்திலே பெரிய centre of learning -ஆக இருந்திருக்கிறது. வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தியம் சொன்னேன். கிழக்கு, பாக்கி. அங்கே ஹிந்து மதத்தோடு ஸம்மந்தப்பட்ட வித்யாபூமியாக வங்காளத்தில் நவத்வீபம் இருந்தது. ‘நடியா’ என்று சொல்கிற இடம். பூர்வத்தில் ஹிந்து தர்சனங்கள் எல்லாமே அங்கே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் துருக்கர் செய்த உத்பாதத்தில் நாலந்தாவையும் விக்ரம சிலாவையும் போல நவத்வீபமும் நசித்ததென்றாலும், மறுபடியும் அது பதினைந்தாம் நூற்றாண்டில் தலைதூக்கிற்று. ஆனால் பூர்வத்தில் ஸகல வித்யைகளுக்கும் அது இருப்பிடமாயிருந்திருக்க, மறுபடி அது புத்துயிர் பெற்றபோது தர்க்க சாஸ்த்ரத்துக்கு மாத்திரமே ப்ரஸித்தி அடைந்தது.

ஆனால் வைதிகத்தோடு சேர்த்து வித்யை சொல்லிக் கொடுத்த இந்த எல்லா இடங்களிலுமே யுனிவர்ஸிடி அமைப்பில் கல்வி அளிக்காமல் அநேக தனித்தனி குருகுலங்கள் ஒரு இடத்தில் சேர்ந்து கற்றுக்கொடுப்பதாகத்தான் இருந்தது.

இப்படிச் சொல்வதால், இந்த அமைப்பு ஹிந்து மதத்தோடு சேர்ந்த கல்வியில் அடியோடு இருந்ததில்லை என்று அர்த்தமாகாது. பௌத்த – ஜைன மதங்கள் ஏற்படுவதற்கு முன்னுங்கூட அங்கங்கே சில பெரிய குருகுலங்கள் இருந்திருக்கத்தான் செய்தன. வேதமத ஆதாரமான பதிநாலு வித்யைகளில் புதுப்புது வ்யாக்யான நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் சேர்ந்துகொண்டே போயிருந்திருக்கும்; காவ்ய நாடகாதிகளும் ஏராளமாக விருத்தியாகிக் கொண்டே இருந்திருக்கும்; புதுப்புது சாஸ்த்ரங்கள், ஸயன்ஸ்கள், அலெக்ஸாண்டர் படையெடுப்பிலிருந்து அந்நிய தேசஸ்தர் தொடர்பால் புதிசு புதிசாகத் தெரிய வந்த விஷயங்கள் எல்லாமும் ஜெனரேஷனுக்கு ஜெனரேஷன் அதிகமாகிக் கொண்டேதான் போயிருக்கும். எனவே ஒரே குரு, அல்லது ஓரிரண்டு அஸிஸ்டென்ட்கள் மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் குரு போதாமல், இந்நாளில் உள்ள யுனிவர்ஸிடி மாதிரியான பெரிய அமைப்பில் அநேக குருக்கள் அநேக சிஷ்யர்களுக்கு ஒரே இடத்தில் சேர்ந்து சொல்லிக் கொடுப்பதென்பது பௌத்த, ஜைன மதஸ்தர்களிடம் மட்டுமின்றி வைதிக வழியிலிருந்தவர்களிடமும் கொஞ்சம் இருந்ததுதான். ஸப்ஜெக்ட்கள் விரிவடைந்தபோது எல்லாவற்றையும் ஒரே மாணவன் படிப்பதென்பதும் ஸாத்யமில்லாததால் ‘பேஸிக்’காக (அடிப்படையாகச்) சிலது மட்டும் எல்லா மாணவர்களுக்கும் எனவும், பாக்கியில் ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொன்று இஷ்டபாடம் (ஆப்ஷனல்) என்றும் பூர்வத்திலேயே கொஞ்சம் ஆகியிருக்க வேண்டும். இப்படித்தான் சிதம்பரத்தில் பதஞ்ஜலி மஹர்ஷியிடம் பாடம் கேட்க ஆயிரம் பேர் வந்து, பல தினுஸுப் பாடங்களைக் கேட்டபோது, அவர் ஆதிசேஷ அவதாரமாதலால், ஒரு திரையைப் போட்டுக் கொண்டு அதன் பின்னாடி சேஷஸ்வரூபத்தில் ஆயிரம் வாய்களை எடுத்துக்கொண்டு ஒரே ஸமயத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு வாயால் பாடம் சொல்லிக் கொடுத்தாரென்று கதை இருக்கிறது.
---

தேமொழி

unread,
Mar 10, 2016, 1:58:12 AM3/10/16
to மின்தமிழ்
ஒரு குறிப்பு:

இந்தியாவில் கல்வியின் வளர்ச்சி - சிரமண மதங்களின் உதவி என்ற கோணத்தில் வழங்க விரும்பியதால்

கட்டுரைகளின் வரிசையை அதற்கேற்றவாறு பின்னிருந்து முன் என்ற வரிசையில் அமைத்தேன்.

இவை நூலில்....

நான்காம் பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள்.

அக்கட்டுரைகளை இங்கு 
குரு
குரு குலம்; கடிகா ஸ்தானம்
பகுதியின் கீழ் காணலாம்

https://dheivathinkural.wordpress.com/நான்காம்-பகுதி/

Suba

unread,
Mar 10, 2016, 2:06:02 AM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
மிக அவசரமாக வாசித்தேன் இதுவரை  தந்தவையை வாசிக்க சில மணி நேரங்கள் ஆகும். அலுவலக வேலை இடையில் இருக்கின்றது. ஆக மாலையில் முடிந்தால் நானும் சில கருத்து பதிகிறேன். கொஞ்சசம் கொஞ்சமாக பகிர்ந்தால் புன்ணியம் உங்களுக்கு உண்டாகும் தேமொழி :-)

சுபா 

தேமொழி

unread,
Mar 10, 2016, 2:12:28 AM3/10/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
இன்னமும் இரண்டு.... 

சரி..சரி... ஓகே  ....நாளைக்கு தொடர்கிறேன் சுபா. 

..... தேமொழி

Suba

unread,
Mar 10, 2016, 4:17:35 PM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
தெய்வத்தின குரல் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்திருக்கின்றேன். அப்போது என் புரிதல் வேறு . இப்போது என் புரிதல் வேறு. ஒவ்வொரு பதிவிலும் பல கேள்விகள் எழுகின்றன. சிலவற்றை பதிகின்றேன்.

2016-03-10 5:01 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

மாணவன் மாணாக்கன்

POSTED ON DECEMBER 23, 2014 

சிஷ்யன் என்றும் வித்யார்த்தி என்றும் ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வதை நாம் மாணவன், மாணாக்கன் என்கிறோம். செய்யுளில் இதுவே ‘மாணி’ என்று வரும், வாமனாவதாரத்தைப் பற்றி திவ்ய ப்ரபந்தத்தில் ‘மாணி’, ‘மாணி’ என்று வரும். ‘மானவ’ என்று இரட்டைச் சுழி ‘ன’ போட்டுச் சொன்னால் மநுஷ்யன் என்றுதான் அர்த்தம். மநுவிலிருந்து ஜீவகுலம் தோன்றியது. அதனாலேயே ‘மநுஜன்’, ‘மநுஷ்யன்’, ‘மானவன்’, தமிழில் ‘மனிதன்’, ‘மானுடன்’ முதலான பெயர்கள். Man என்பதும் மநு ஸம்பந்தமானதே. மனஸ் என்ற சிந்தனா சக்தி படைத்தவன் மநு. Man என்றால் thinking animal என்று இதே அபிப்ராயத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள். மானவன் என்றால் மனிதம். ‘மாணவ’ என்று மூன்று சுழி போட்டுச் சொன்னால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். சின்ன வயஸிலேயே கல்வி கற்கத் தொடங்குவதால் வித்யார்த்தியை மாணவன், மாணாக்கன் என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது. தமிழ் ‘மாணி’யும் இதிலிருந்தே வந்திருந்தாலும், மாணி என்பது, ‘மாணவன்’ என்பதுபோல் எந்த ஜாதியையும் சேர்ந்த ஸ்டூடண்டைக் குறிக்காது; மாணி என்பது உபநயனமான ப்ரம்மசாரியைத்தான் குறிக்கும். ஆதியில் ப்ராமண ப்ரம்மசாரியே பெரும்பாலும் ஸ்டூடண்டாக இருந்ததால்தான் இப்படிப் பிற்காலத்திலும் சொல்வதாக வந்திருக்கிறது.

இம்மாதிரி அக்காலத்தில் ப்ராமணப் பசங்களுக்கு மட்டும் வித்யாப்யாஸம் விசேஷமாக இருந்தது இதரர்களுக்கு வித்யாஸமாகத் தோன்றவில்லை. தங்கள் தொழிலுக்கும் வாழ்முறைக்கும் குருகுலவாஸம் தேவையில்லை; அவசியப்படும்போது தங்கள் தொழிலில் டெக்னிகலான, சிக்கலான ஸமாசாரங்களை மட்டும் ‘அய்ய’ரிடம் போய்த் தெரிந்து கொண்டால் போதும் என்று நல்லறிவு அவர்களுக்கு இருந்தது.
​கல்வி என்பதை ஒரு குலத்துக்கு என ஒதுக்கி அதனைக் கடைபிடிப்போர் தாம் நல்லறிவுடன் இருப்போர்  எனும் கொள்கை கொண்ட காலகட்டம் இப்போது இல்லாமல் போனதை நினைத்து மனம் மகிழ்கின்றேன். நினைத்துப் பார்க்கும் போதே திக் என்றிருக்கின்றது.  இந்த கால மாற்றத்திற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும் என்று உடன் மனதில் தோன்றுகின்றது.

அவர் மட்டும் ஏதோ சிலது படிக்கிறாரே; அவர் மட்டும் அந்த அநுஷ்டானம் பண்ணுகிறாரே!’ என்று நினைக்காமல் அவரும் ஸரி, தாங்களும் ஸரி அவரவருக்கும் குலதர்மப்படி வந்ததைப் பண்ணிகொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம், எல்லாருக்கும் நிறைவு என்ற நல்லெண்ணத்தோடு இருந்து வந்தார்கள்.
​ஒருவர் குலத்தொழில் எனும் போது மரவேலை செய்வதும் ஒரு குலத்தொழில். பாடம் படித்தலும் கற்றுக் கொடுத்தலும் ஒரு குலத்தொழில் வண்ணான் வேலை செய்வதும் ஒரு குலத்தொழில்.  மலம் அள்ளுவதும் ஒரு குலத்தொழில். ​ ஒருவனின் மகன் தன் தந்தை செய்த வேலையையே செய்து வந்தால் அதுவே அனைவருக்கும் ஷேமம் என்பது எவ்வளவு பெரிய நல்லெண்ணம்? இந்த நல்லெண்ணத்துடன் நான் இன்னமும் கூட இந்தியாவில் பல இடங்களில் குலத்தொழில் தொடர்கின்றதோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. 

அய்யர் சொல்கிற வேதமும், அவர் செய்கிற யாகமும் நம் க்ஷேமத்தையும் உத்தேசித்தது; அவருக்குப் போட்டிருக்கிற கடும் ஒழுக்க விதிகள் நமக்கும் லக்ஷ்யத்தைக் காட்டிக் கொடுக்கிறது*. ஆனபடியால் அவர் கார்யத்தை, அவருக்கான வாழ்க்கை முறையை அநுஸரித்துக்கொண்டு அப்படியே இருக்கட்டும்; அவரைப் போய் நாம் தொந்தரவு பண்ண வேண்டாம், அவரோடு போட்டிபோட வேண்டாம்’ என்று இதரர்கள் நினைத்தவரை (இப்படித்தான் யுகாந்தரமாக நடந்து வந்திருக்கிறது) எல்லாம் ஸரியாயிருந்தது. ஸமூஹ வாழ்வு க்ரமமாக, ஐக்ய மனப்பான்மையுடன் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் கல்வி வேண்டும் என வேறு குலத்தொழிலை செய்பவர் நினத்தால் அது போட்டி எனக் கருதுவதாக எண்ணம் கொண்டிருப்பது, என்பதன் பின்னனியில் ஒரு சுயனலம் சார்ந்த குரல் ஒலிக்கின்றது.

சுபா
 
Suba

unread,
Mar 10, 2016, 4:20:20 PM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-10 5:01 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:

---
அந்தணரை மையப்படுத்தி குருகுலங்கள் வளர்ச்சி

POSTED ON DECEMBER 23, 2014

இதற்கு முன்னிருந்த நிலைமையைத்தான் முன்னேயே சொன்னேன்; ரொம்பவும் specialised ஸமாசாரம் கற்றுக்கொள்வதற்கு மட்டுமே வைச்ய – சூத்ர ஜாதியினர் ப்ராமண ஆசார்யனிடம் போகவேண்டியிருந்தது என்றும், மற்றபடி அவனுடைய குருகுலம் ப்ரம்ம – க்ஷத்ர சிஷ்யர்களுக்கானதாகவே இருந்தது என்றும் சொன்னேன். இதிலும் குறிப்பாக ப்ராமணப் பசங்களுக்கு உரியனவாகத்தான் அவை இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் குருகுலம், வித்யாப்யாஸம் முதலிய விஷயங்களே முக்யமாக ப்ராமணனைக் குறித்தவை மாதிரிதான் இருந்திருக்கின்றன. க்ஷத்ரியர்களிலும் ராஜகுமாரர்கள், ராஜ குடும்ப முக்யஸ்தர்களின் பசங்கள், ப்ரதான அதிகாரிகளின் பிள்ளைகள் ஆகியோர் குருகுலவாஸம் செய்தனர். அந்த ஜாதியில் மற்ற எல்லாச் சிறுவர்களும் – அதாவது ஸாதாரண ஸேனாவீரர்கள், சிப்பந்திகள் ஆகியவர்களது பிள்ளைகள் – வீட்டிலேயே தகப்பனிடமும், அல்லது ஆயுதப் பயிற்சி சாலைகளிலும்தான் அப்யாஸம் செய்திருப்பார்களென்று தோன்றுகிறது. குருகுலவாஸம் செய்த பசங்களுங்கூட, தங்களுக்குரிய முழுக்கோர்ஸும் ப்ராமணப் பசங்களோடேயே சேர்ந்து கற்றுக் கொண்டிருப்பதற்கில்லை. முன்னேயே சொன்னதை மீண்டும் சுருக்கிச் சொல்கிறேன்.

வேதாதி சதுர்தச வித்யைகளைப் ப்ராமணப்பிள்ளைகளைப்போல அவ்வளவு ஆழ்ந்து, அலசிப் படிக்க வேண்டிய அவச்யம் க்ஷத்ரியர்களுக்கு இல்லை. இதேபோல, ப்ராமணப் பிள்ளைகளில் பிற்காலத்தில் தாங்கள் தநுர்வேத – அர்த்தசாஸ்திர ஆசார்யர்களாகிக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தேசமுள்ள மாணவர்கள் மாத்திரம் இவற்றை ஆப்ஷனலாக எடுத்துக்கொண்டு படித்திருக்கலாமே தவிர மற்றவர்கள் ஜீவனத்துக்கு அவசியமில்லாத இந்த ஆயுத சாஸ்திரத்தையும், ராஜாங்க நிர்வாஹ சாஸ்திரத்தையும் deep-ஆகக் கற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆகையால் ப்ரம்ம – க்ஷத்ர ஜாதி வித்யார்த்திகளுக்கு பாடங்களும், பாட முறையும் வித்யாஸமாக இருந்திருக்கவேண்டும். சதுர்தச வித்யைகளுக்கு மட்டும் அவ்வப்போது ப்ராமணப் பசங்களும், க்ஷத்ரியப் பசங்களும் சேர்ந்த ஒரே குருகுலத்தில் அப்யாஸம் செய்திருக்கிறார்களென்பது நிச்சயம்.

வைச்யர்களுக்கும் வேதத்தில் அதிகாரமுண்டாதலால் அவர்களும் இப்படி ப்ராமண குருகுலங்களில் கொஞ்சம் சேர்ந்து படித்திருக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் ஜன ஸங்கியைப் பெருகி, புதுப் புதுச் சரக்குகளை உற்பத்தி செய்து விற்பது, அந்நியத் தொடர்புகள் அதிகமாகிக் கடல் கடந்துகூட வர்த்தகப் பரிவர்த்தனை விஸ்தரிப்பது என்றெல்லாம் ஏற்பட்டபோது, வேதாப்யாஸத்தைப் பின்னுக்குத் தள்ளி அவர்களுக்கென்றே ப்ரத்யேகமாக ஏற்பட்ட வாணிஜ்யம் (வாணிபம்), கோ ஸம்ரக்ஷணை இரண்டை மாத்திரமே பால்யத்திலிருந்து ஆயுஸ்காலக் கல்வியாகவும் தொழிலாகவும் அவர்கள் மேற்கொள்ளவேண்டி வந்திருக்கிறது. அதோடு அன்றன்றும் உள்ள நிலவரங்களைப் பொறுத்துக் கணக்குப் பண்ணித் திட்டம் போடுவதும், அன்றன்றும் கிடைக்கிற வாடிக்கைக்கு ஏற்ப ஸமயோசிதமாக நேரே மநுஷ்யர்களோடு பழகி ஸமாளிக்க வேண்டியதுமான வைச்யர்களின் கார்யதைத் திறம்படச் செய்வதற்கு அவர்கள் புஸ்தகத்தைப் பார்த்து முடியாது. இதற்கு அந்நாளில் புஸ்தகமும் இல்லை. ஆகையால் அந்தப் பசங்கள் பெரிசாக வித்யாப்யாஸம் என்று பண்ணப் போகாமல், கொஞ்சம் வேதம், ஸமயாசாரம், தங்கள் தொழிலுக்கான சின்ன சாஸ்திரங்கள் இவற்றை மற்றும் படித்துவிட்டு, சின்ன வயஸிலிருந்தே அப்பனோடு, பாட்டனோடு நேரே தொழிலில் பிரவேசித்து அதன் knack-களை (ரஹஸ்யங்களை, ஸாமர்த்யங்களை, நுட்பங்களை)க் கற்றுக்கொள்வதாக ஏற்பட்டது.

மொத்தத்தில், ஆதி நாளில் வித்யாப்யாஸம் பிராமணனோடுதான் விசேஷமாகப் பொருத்தப்பட்டது. இதனால்தான் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடும் வேதத்துக்கே உரிய “பாடம்” வைத்தே கல்விக்கூடத்துக்குப் “பாடசாலை” என்று பெயர் நீடித்து வந்திருக்கிறது. காயத்ரி உபதேசத்தில் ஆரம்பித்து ஸம்பூர்த்தியாகக் கற்பிக்கிறவருக்கு ஏற்பட்ட “ஆசார்ய” என்ற பெயர்தான் இன்று நாஸ்திகம், கம்யூனிஸம் சொல்லிக்கொடுப்பவரிடமும் “ஆசிரியர்” என்பதாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காயத்ரி உபதேசம் செய்யாமல், ஜீவனோபாயத்தை உத்தேசித்து வேத சாஸ்திரம் கற்பிப்பவருக்குரிய “உபாத்யாயர்” என்பதுதான் இன்றும் “வாத்தியார்” என்று நம் பேச்சில் அடிபடுகிறது.

​ஆக, பாடசாலைகளைவிட பள்ளிக்கூடங்கள் தான் பொதுமக்களுக்கு கல்வியை வழங்கியிருக்கின்றன என்று நன்கு தெளிவாகின்றது.

சுபா

Suba

unread,
Mar 10, 2016, 4:38:36 PM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-10 5:20 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தொடர்ச்சி ....

நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

புது மதங்களில் பெரிய வித்யாசாலைகள்

POSTED ON DECEMBER 23, 2014 

இப்படி புத்தரும் ஜினரும் புது மதங்கள் உண்டாக்கியபோது ப்ராமணன் சொல்லிவந்த வேத ப்ராமாண்யம், வைதிக அநுஷ்டானம், வர்ணவிபாகம் இவை அந்த மதங்களில் இல்லை. வேதத்தை இன்னார்தான் அப்யஸிக்கலாம், இன்னார் கூடாது என்று விதி இருப்பதுபோல் இல்லாமல், அந்த மதங்களில் எல்லாரும் அவர்களுடைய ஆதார க்ரந்தங்களைப் படிக்கலாம் என்று வைத்தார்கள். இதனால் அவர்கள் ஸர்வ ஜனங்களுக்குமாக (பழைய வைதிக குருகுலங்கள் போலச் சின்னதாக இல்லாமல்) பெரிய பெரிய வித்யாசாலைகள் வைக்கவேண்டியதாயிற்று.
​இந்த காரணத்தினால் தான் ஒரு சமூகம் என்று மட்டுமில்லாமல் கல்வி என்பது மேலும் பரவலாக்கப்பட்டது. ​

ஸர்வ ஜனங்களும் சேருவதற்கு ஸாதகமாக இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. குருகுலங்களில் வ்யாகரணத்தினால் நன்கு சுத்தி செய்யப்பட்ட ஸம்ஸ்க்ருத சாஸ்திரங்களே போதிக்கப்பட்டன. ஸாமான்ய ஜனங்களுக்கு ஸம்ஸ்க்ருதம் வராது. அவர்கள் அதன் கொச்சையான ப்ராக்ருத பாஷைகளைத்தான் அறிவார்கள். புத்தமதத்தின் ஆதார நூல்களாகிய த்ரிபிடகம் என்ற மூன்று தொகுப்புக்களும் பாலி என்ற ப்ராக்ருத பாஷையிலேயே எழுதப்பட்டன. ஜைனர்களின் ஆதார நூலான ‘அங்க’ங்கள் என்பவையும் ப்ராக்ருத பாஷைகளில் இன்னொன்றான ‘அர்த்தமாகதி’ என்பதில்தான் எழுதப்பட்டவை.

​சாமான்ய ஜனங்கள் என்றும் அசாமான்ய ஜனங்கள் என்றும் பிரிக்கும் நிலையை எப்படி புரிந்து கொள்வது? 
சாமான்ய ஜனங்கள் என்போர் யாவர். 
அசாமான்ய ஜனங்கள் எ
​ன்போர் யாவர்? 
ஒருவரை சாமான்யர்  அல்லது 
அசாமான்ய
​ர் என்று தரம் பிரிக்க இருக்கும் அளவு கோல் யாது?​

2 வார்த்தைகள் தாம் என்றாலும் ​அதன் பின்னனியில் இருக்கும் பொருள் சமூக உயர்வு தாழ்வை மிகத்தெளிவாகப்  படம் பிடித்து காட்டுகின்றது.

பொதுமக்களுக்கு எழுத்தறிவு இல்லாத நிலையில் ஒரு தேசத்தில் பலவந்த முறையில் போகாமல் மதமாற்றம் செய்யும்போது அதற்குப் பள்ளிக்கூடம் வைத்து அவர்களுக்குக் கல்வியறிவு தந்து தங்கள் ஸமய நூல்களைச் சொல்லிக் கொடுப்பது ஒரு முக்யமான அங்கமாகிவிடுகிறது. கிறிஸ்துவ மிஷனரிகள் விஷயம் நமக்குத் தெரிந்ததுதானே? ஐந்நூறு வருஷத்துக்கு முந்தி நானக் இதேபோலப் பஞ்சாபில் தம்முடைய ஸிக்கிய மதத்தைப் பரப்ப நினைத்தபோது அந்த பாஷைக்கு முறையாக லிபியே இல்லை. அதனால் லிபியும் மதகுருவே கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. (நானக்கை அடுத்து குருவாக வந்து, அவர் உபதேசங்களை எல்லாம் திரட்டி ப்ரசாரம் செய்த அங்கத் என்ற) குருவினால், குருமுகமாக உண்டானதாலேயே அந்த லிபிக்கு “குர்முகி” என்று பெயர். அடித்துப் பிடித்துத் தங்கள் மதத்துக்கு மாற்றாமல் ஸாத்விகமாக, அல்லது ஸாமர்த்யமாக மாற்ற நினைக்கிற மதஸ்தர்கள் பொதுமக்களுக்கு வித்யா சாலைகள் வைப்பதன் மூலமும் அதை ஸாதித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் பாயிண்ட். அறிஞர்களுக்கே தெரிந்த ஸம்ஸ்க்ருதத்தை விட்டு பொதுஜன பாஷையான ப்ராக்ருதத்துக்கு ஏற்றம் தந்து பௌத்த – ஜைனர்கள் இந்த உபாயத்தைக் கையாண்டார்கள்.

நினைத்துப் பார்க்கின்றேன். மதத்தைப் பரப்பும் சுயநலமாகவே கூட இருந்தாலும்...இந்த பௌத்த சமண கிறித்துவ போதகர்களின் ​செயல்பாடுகள் மட்டும் இருந்திராவிட்டால் இன்றைய தமிழகம் கல்வி அறிவு என்பதையே நுகராத மிகப்பெருவாரியான ஒரு சமூகமாகத்தான் இருந்திருக்கும் என்பது அச்சமூட்டக்கூடிய ஒரு விஷயமாகவே புலப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

ஆனால், போகப் போக தத்வ வாதங்கள் கிளைவிட்டுக் கொண்டே போய் நுட்பமான விஷயங்களைச் சொல்ல வேண்டி வந்ததில் பிற்கால பௌத்த – ஜைனர்களும் ஸம்ஸ்க்ருதம்தான் இதற்கு ஏற்ற பாஷை என்று கண்டுகொண்டார்கள். அதிலேயே புஸ்தகங்கள் எழுத ஆரம்பித்தார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனன் காலத்தில் சைனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஹ்வான்-த்ஸாங், பௌத்தர்கள் ஸம்ஸ்க்ருதத்திலேயே தங்களுடைய ஆலோசனைகளையும் வாதங்களையும் நடத்தினார்களென்று சொல்லியிருக்கிறார். அது எப்படியானாலும் ஆரம்பத்தில் ஸர்வஜனங்களுக்கும் ஸர்வஜன பாஷையிலேயே கல்வி என்று அவர்கள் ஆரம்பித்ததில்தான் விஸ்தாரமான வித்யாசாலைகள் முன்னைவிட அதிமாக ஏற்படலாயின.

​மக்கள் பேசும் தாய்மொழியிலே கல்வி இருப்பது தான் நல்லதொரு கல்வியாக அமையும். 

சுபா

Suba

unread,
Mar 10, 2016, 4:58:03 PM3/10/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-10 5:20 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​..
---
அறிவு ரீதியிலேயே எதிர்ப்பு

POSTED ON DECEMBER 23, 2014

ஆனால், இதை அதோடு முடித்துவிடுவதற்கில்லை. நிஜமாகவே அறிவுச் செருக்கும், ஜாதிக்கொழுப்பும் படைத்தவர்களாக ப்ராமணர்கள் இருந்தால் எத்தனை பண்புள்ள இதர ஜாதியாரும் அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் கொடுத்து வைக்க முடியுமா? ந்யாயமாகவே பார்த்தாலும் இப்படித் திமிரும் அஹந்தையும் பிடித்தவர்களாக ஒரு ஜாதி இருந்தால் அதை அடக்கி, ஒடுக்கித்தானே வைக்க வேண்டும்? தேஹபலம் போதாத ஒரு ஜாதியை ஸுலபமாகவே இப்படி அடக்கியும் போட்டுவிடலாமே! இப்படியெல்லாமிருந்தும் அம்மாதிரி அடக்கவில்லையென்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது? ப்ராமணர்களும் நிஜமாகவே மரியாதைக்குகந்த நல்ல குணசீலங்களையும், சிறந்த புத்தி வன்மையையும் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இப்படிப்பட்ட புத்தியை அவர்களுக்கு அளித்தது வித்யை; புத்தி மட்டுமில்லாமல் அதோடு குணசீலங்களைத் தந்தது அக்கால வித்யாப்யாஸ முறை – குறிப்பாக குருகுல முறை.

அபூர்வமாக ப்ராமண எதிர்ப்பு வலுவாக ஏற்பட்ட போதும் அது பௌதிக பலத்தைக் காட்டிச் செய்த எதிர்ப்பாக இல்லாமல் வேத மதத்துக்கு விரோதமாகவோ வித்யாஸமாகவோ இன்னொரு மதத்தைக் காட்டி ஸித்தாந்த ரீதியில் செய்த எதிர்ப்பாகவே இருந்ததும் ப்ராமணர்களின் வித்யாபலத்துக்குச் சான்றேயாகும். பௌத்த, சமண, ஸிக்கிய மதங்கள் தோன்றியதைத்தான் சொல்கிறேன்.

ஸிக்கிய மதத்தை பௌத்தத்தையும் சமணத்தையும் போல் அவ்வளவு வேத விரோதமானது என்று சொல்லக்கூடாதுதான். வேத மதத்துக்கு முதுகெலும்பாயுள்ள வர்ண, தர்மம், சடங்குகள் ஆகியவற்றை அந்த மதம் விலக்கிவிட்டாலுங்கூட, தன்னை தாய்மதத்துக்கு விரோதமானதாக ப்ரகடனம் பண்ணிக்கொண்டதில்லை. துருஷ்கரின் கொடுங்கோன்மைக்கு ஆளான ப்ராமண பண்டிதர்களுக்குத் தஞ்சம் கொடுத்து, அவர்களுக்காகத் துருஷ்கர்களோடு யுத்தமே செய்த ஸிக்கிய குருமார்கள் உண்டு.

​தமிழகத்தைப் பொறுத்தவரை வேதம் என்பது இந்த நிலத்தின் தாய்மதம் அல்ல. அதற்கு முன்னரே இருந்த குலதெய்வ வழிபாடு மூதாதையர் வழிபாடு இறந்தோர் வழிபாடு இயற்கை வழிபாடு என்பனவே அடிப்படை வழிபாட்டியல் கூறுகளாக இருந்தன. ​
 
க்ஷத்ரியர்களான புத்தர், ஜினர், நானக் முதலானவர்கள் ப்ராமணர்கள் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றிருந்தார்களோ, அந்த ஸமயத் தத்வத்திலேயே புதிய அபிப்ராயங்களையும் வழிகளையும் ஸாத்விகமான ரீதியில் காட்டித்தான் அவர்களோடு மோதினார்கள்.

அக்காலங்களில் ப்ராமணர்கள் ஆத்ம பலத்தில் கொஞ்சம் பின்னே போயிருந்தாலும் அவர்களிடம் பாரம்பர்யமாக வந்திருந்த சாஸ்திரத்தின் பலம்தான் அவர்களுடைய உண்மையான பலம் என்று புரிந்துகொண்டே அந்த சாஸ்திரங்களைத் தாக்கி ஜயிப்பதுதான் அவர்களை ஜயிப்பதாகுமே தவிர அவர்களையே ஸ்தூலமாகத் தாக்குவது அல்ல என்று அவர்களிடம் மனோபேதம் கொண்ட க்ஷத்ரியர்களுக்கு ஓர் உணர்ச்சி இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ரேஸ் கான்ஷஸ்னஸ்’, ‘கிளாஸ் கான்ஷஸ்னஸ்’ என்றெல்லாம், (தனி மநுஷ்யனுக்கு இருக்கிறாற்போலவே) ஒவ்வொரு கூட்டதுக்கும்கூட இருந்து அதற்குச் சக்திவாய்ந்த ப்ரதிநிதிகளாகவே அந்தக் கூட்டத்தில் அவ்வப்போது தலைமை தாங்கும் மநுஷ்யர்கள் தோன்றுவதாக இப்போது மனோதத்வ சாஸ்திரத்தில் சொல்கிறார்கள். இம்மாதிரி, எல்லா க்ஷத்ரியர்களுக்கும் இல்லாவிட்டாலும் அதிலே ஒரு பகுதிக்கு ப்ராமணர்களிடமிருந்த மனோபேதத்தில் அவர்களைத் தத்வ ரீதியில் ஜயிக்கவேண்டும் என்றிருந்த எண்ணத்துக்கு ப்ரதிநிதிகளாகவே புத்தர், ஜினர் போன்றவர்கள் தோன்றினார்கள். இது இரண்டு தரப்புக்குமே பெருமை தரும் விஷயம்.

என்ன சொல்கிறேனென்றால், ‘அறிவு, தத்வம் என்பனவற்றுக்கு ப்ராமணன்தான் ‘ரெபாஸிடரி’ (குடியிருப்பு)-ஆக இருக்க வேண்டுமென்பதில்லை; அவன் காட்டும் சாஸ்திர ரீதிக்கு அடங்கியே, அவனை மந்த்ரியாக வைத்துக்கொண்டு ஆலோசனை கலந்தே செயலாற்றுகிற எங்களுக்கு வெறும் புஜபலம் மட்டுமில்லாமல் இந்த புத்தி பலமும் உண்டு’ என்று ஒரு கூட்டு consciousness க்ஷத்ரியர்களில் ஒரு பிரிவுக்கு உள்ளூற இருந்து அதுவே இப்படி அவர்களைப் புது மதங்களை ஸ்தாபிக்கும்படித் தூண்டியிருக்கலாம்.

இந்த சைகாலஜி ஸூக்ஷ்மம் இன்னொரு அம்சத்திலுங்கூடத் தோன்றுகிறது. ப்ராமணர்களைத்தானே ரொம்பவும் ஸாத்விகர்களாக சாஸ்திரத்தில் வைத்திருக்கிறது? பொது வழக்கிலும் அவன்தானே மற்றவர்களைவிட ஸாதுவாக இருந்திருக்கிறான்?
​ 
​தனக்கு கல்வியும் கிடைக்காமல் சமூகத்தில் கீழ் நிலையில் அங்கம் வகிக்கும் உரிமையையும் பெற்ற ஒருவன் வாய்மூடிக் கொண்டு ​
​மிக அமைதியாக பிறர் சொல்வதைக் கேட்டு தன்னும் தன் குடும்பமும் வழி வழி சந்ததிகளும் வாழ்ந்தார்களே.. அவர்களது பொறுமையை எப்படி விளக்குவது ? அதி சாத்வீகம் என்றா என்ற கேள்வி தான் மனதில் எழுகின்றது.

சுபா

தேமொழி

unread,
Mar 11, 2016, 12:55:03 AM3/11/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
எழுத்துக்கு முக்யத்வம்

POSTED ON DECEMBER 29, 2014
https://dheivathinkural.wordpress.com/2014/12/29/எழுத்துக்கு-முக்யத்வம்/

பௌத்தர்களுடைய கலாசாலைகள் அடைந்த பெரிய வளர்ச்சிக்கு இன்னொரு காரணம்கூட அதில் பார்த்தேன். ப்ராமணர்கள் ஞாபகசக்திக்கு ரொம்பவும் முக்யத்வம் கொடுத்தவர்கள். ‘மயி மேதாம்’ என்று நல்ல தீக்ஷ்ணமான புத்திக்கே உரிய memory power-ஐ அவர்கள் விசேஷமாக பிரார்த்தித்துப் போற்றி வளர்த்துக்கொண்டவர்கள். இதை நன்றாக வளர்த்துக்கொண்டு எதையும் காதால் ஒருதரம், அல்லது இரண்டு மூன்று தரம், கேட்டே புத்திக்குள்ளே பதித்துக் கொள்வார்கள். சுத்தமான வாழ்க்கை; லௌகிக ஸௌகர்யங்களுக்குப் பறந்து புத்தி சக்தியை வ்ரயம் பண்ணிக்கொள்ளாத எளிய ஜீவனம்; கர்மானுஷ்டானங்களை நிரம்பப் பண்ணி சரீரத்தைச் சக்கையாய்ப் பிழிந்து அதன் பசிகளை வடித்து ஓட்டுவது–ஆகியவற்றால் பெறுகிற புத்தி ப்ரகாசம்; அதோடு காயத்ரி, வேதாத்யயனம், ப்ராணாயாமம் முதலியவற்றால் பிரம்மச்சர்யத்தின் மூலம் உண்டாகும் அறிவொளி–இத்தனையாலும் நல்ல ‘மெமரி பவ’ரை ‘டெவலப்’ பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதே ப்ராமணர்களின் பழக்கமாயிருந்திருக்கிறது. ஏனென்றால், இவனுக்கு ‘டீச்சிங்’ ஆறு கடமைகளில் ஒன்று. பல துறைக்காரர்கள், பல தொழில்காரர்கள் இவனிடம் விஷயங்கள் தெரிந்துகொள்ள வருவார்கள். வித்வத்ஸதஸில் பண்டிதர்கள் இவனைப் பல சாஸ்திர விஷயங்களைப்பற்றிக் கேட்பார்கள். அப்போதெல்லாம் இவன் ஒவ்வொன்றுக்கும் புஸ்தகத்தை நோண்டிப் பார்த்துப் பதில் சொல்வதென்றால் முடியுமா? ஆனதால் அத்தனை புஸ்தகமும் இவன் மூளைக்குள்ளேயே வந்துவிடும்படியாக அப்படிப் புத்தியைப் பளிச்சென்று கருக்காகத் தீட்டிவைத்துக் கொள்ள வேண்டும்; ஞாபகசக்தியை நன்றாகச் சாணை பிடித்து ஜ்வலிக்கப் பண்ணிக்கொள்ளவேண்டும்; இதற்கான த்யாகங்களை இவன் செய்தாக வேண்டும்–என்பதை ஸத்ப்ராமணர்கள் ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்து வந்தார்கள். அதனால்தான் இத்தனாம் பெரிசான வேதமே ‘ச்ருதி’ (காதால் கேட்கப்பட வேண்டியது; கண்ணால் படிக்கப்பட வேண்டியதல்ல) என்றும் ‘எழுதாக் கிளவி’ என்றும் பெயர் பெற்றிருக்கிறது. மூளைக்குள்ளே விஷயங்களைக் கொண்டுவராமல், புஸ்தகத்தில், சுவடியில் எழுதிவைப்பது என்றால், “புஸ்தகம்தான் இருக்கே, அதைப் பார்த்துக்கொண்டால் போச்சு” என்ற எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே போகிறது. “டெக்ஸ்ட்”டை மனப்பாடம் செய்வதில்லை என்பதோடு மட்டுமில்லாமல், எதையும் ஊன்றிப் படித்து அதன் தாத்பர்யத்தை க்ரஹித்துக்கொள்வதென்பதும் குறைந்துகொண்டு போகிறது. இதை ப்ரத்யக்ஷத்திலேயே பார்க்கிறோம். ‘எழுதி வைத்துவிட்டாயா? அப்புறம் அது ப்ரயோஜனத்துக்கு வராது என்றுதான் அர்த்தம்’ என்ற அளவுக்கு நம் பூர்வீகர்கள் நினைத்திருக்கிறார்கள். “ஸஹஸ்ரம் வத–ஏகம் மா லிக: ஆயிரம் விஷயத்தைச் சொல்லு; ஆனால் ஒன்றைக்கூட எழுதிவைக்காதே” என்றே வசனம்.

இந்தப் பழக்கத்துக்கு மாறாக எழுதுவது, எழுதி வைத்த சுவடிகளைப் படித்துப் பாடம் சொல்வது என்று பௌத்தர்களே ஆக்கினார்கள் என்று (ஸமீபத்தில் நான் பார்த்த) அந்தப் புஸ்தகத்தில் போட்டிருந்தது. இந்த நாள் ஆராய்ச்சிக்காரர்களின் அபிப்ராயப்படி, அலெக்ஸாண்டர் படைபடியெடுப்புக்குக் கொஞ்சகாலம் முந்தி, அதாவது கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் நம்முடைய சாஸ்திரம் ஒவ்வொன்றையும் ஸாரபூதமாகச் சுருக்கித் தரும் “ஸூத்ரங்கள்” என்பவை (ப்ரம்ஹ ஸூத்ரம், யோக ஸூத்ரம், வ்யாகரண ஸூத்ரம் போன்றவை) தோன்றின என்று இதை எழுதியவர் நினைக்கிறார். பாணினியின் வ்யாகரண ஸூத்ரத்தில் ‘லிபிகார’ (எழுதுகிறவன்) என்ற வார்த்தையும், புஸ்தகம் என்பதைக் குறிக்கும் ‘க்ரந்தம்’ என்ற வார்த்தையும் வருகின்றன. ஆனதால், ஸூத்ர காலத்திலேயே நம்மவர்களுக்கு ‘ரைட்டிங்’ (எழுதுவது) என்பது தெரிந்துதானிருந்தது என்பதற்குச் சான்று இருக்கிறதென்றும் அதில் கண்டிருக்கிறது. ஆனால், ரொம்பவும் ‘மினிம’மாகவே எழுதி வைப்பதை அக்கால இந்தியர்கள் கைக்கொண்டார்கள்; ராஜாக்கள் நிருபம் அனுப்புவது மாதிரியான காரியங்களுக்கு மட்டும்தான் ரைட்டிங்கைப் பயன்படுத்தினார்களே தவிர சாஸ்திரங்களையும் இலக்கிய ஸ்ருஷ்டிகளையும் எழுதாமல் வாயால் சொல்லிக்கொடுத்துத்தான் ‘மெமரைஸ்’ பண்ண வைத்தார்கள் என்று (அந்தப் புஸ்தகமெழுதியவர்) சொல்கிறார். வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் நினைக்கப்படும் அதன் ‘ஸம்ஹிதா’ பாகத்தில் மட்டுமன்றி, அவற்றின் சடங்குகளுக்கு விளக்கமாகச் செய்முறைகளைச் சொல்லும் ப்ராமணங்கள்’ தோன்றிய காலத்தில்கூட இவையும் எழுதப்படவில்லை; இவற்றிலே மரத்திலிருந்து உரித்த பட்டை தோல் ஆகிய பழங்கால பேப்பரைப் பற்றியோ, எழுத்தாணி அல்லது மை பற்றியோ குறிப்பில்லை என்று அவர் சொல்லிவிட்டு, ப்ராம்மி லிபியில் ரொம்பவும் பூர்வ காலத்தியதாக நமக்குக் கிடைத்திருப்பதே கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட அசோக சாஸனங்கள்தான் என்று காட்டியிருக்கிறார். இவை பௌத்த மதத் தொடர்புடையவைதான். ராமாயண, பாரதங்களில் ராமர், பாண்டவர்கள் ஆகியவர்கள் வித்யாப்யாஸம் பண்ணியதைப் பற்றி வந்தாலும் அவர்கள் எழுதக் கற்றுக் கொண்டார்கள் என்று அவற்றில் இல்லை என்றும், புத்தர் சரித்ரமான “லலிதவிஸ்தர”த்தில்தான் அவர் குழந்தையாயிருந்தபோது எழுதக் கற்றுக்கொண்டதாக வருகிறது என்றும் காட்டியிருக்கிறார். காதால் கேட்டு மட்டுமே அறியவேண்டியது ‘ச்ருதி’, நினைவில் வைத்திருந்தே தானும் அனுஷ்டித்துப் பிறருக்கும் சொல்லிதரவேண்டியது ‘ஸ்ம்ருதி’; ஆகக்கூடி இந்தப் பெயர்களே எழுதத் தெரிந்தாலும்கூட அப்படிப் பண்ணி விஷயத்தை ‘சீப்’பாகவோ, மறந்துபோகும்படியாகவோ பண்ணக்கூடாது என்று கொள்கையைத்தான் நிரூபிக்கின்றன என்று அவர் சொல்கிறார்.

வேதத்தை எழுத்திலே படித்துப் பாடம் பண்ணும் “லிகித பாடக”னை மஹாமட்டமான மாணவன், “பாடகாதமன்” என்றே சொல்லியிருக்கிறது. இதற்கு மாறாக சாஸ்திரங்களை எழுதி் வைப்பதென்று ஆரம்பித்தவர்கள் பௌத்தர்கள்தான் என்று அந்தப் புஸ்தகத்தில் பார்த்தேன்.

இதற்குக் காரணமில்லாமல் இல்லை.

க்ஷத்ரியர்களுக்கு யுத்தகார்யம், உள்நாட்டுப் போலீஸ் கார்யம், ராஜாங்க அதிகாரிகளாகப் பணி ஆற்றுவது முதலியவையே தர்மம். வைச்யன் கோஸம்ரக்ஷணமும் வியாபாரமும் பண்ண வேண்டியவன். நாலாம் வர்ணத்தவர் சரீர உழைப்பை ஜீவனத் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்களையெல்லாம் சின்ன வயஸில் ப்ராமணப் பசங்களைச் செய்கிற மாதிரியே குருகுலத்தில் வருஷக்கணக்காக அடைத்து வைத்து, ‘புத்தி சக்தியைத் தீட்டிக்கணும், ஞாபக சக்தியைக் கூர் பண்ணிக்கணும், எழுதிப் படிக்காமலே மனப்பாடம் பண்ணணும்’ என்று நெரிப்பதால், பிற்காலத்தில் அவர்கள் நடத்தப்போகிற வாழ்க்கைத் தொழிலுக்கு என்ன ப்ரயோஜனம்? ப்ரயோஜனமில்லாததோடு குந்தகமேகூட உண்டாகும். ஏனென்றால், பின்னாடி மேற்கொள்ளப் போகிற தொழிலுக்குப் பூர்வாங்கமாக பால்யத்திலேயே இவர்கள் அவரவர் வர்ணத்தைப் பொறுத்து தநுர்வேதம் அப்யஸிப்பது, நடைமுறையைப் பார்த்தே வ்யாபாரத் திறமைகளைக் கற்றுக்கொள்வது, சிற்றாள் மாதிரி அப்பனோடு பாட்டனோடு உழைத்தே தொழில் கற்றுக்கொள்வது ஆகியவற்றுக்கு அவகாசம் தராதபடி அல்லவா இந்த ஓயாத மனப்பாடமுறை குந்தகம் பண்ணும்? அதோடு நான் சொன்னபடி பூர்விகர் பெடல் பண்ணிவிட்ட பாரம்பர்ய உந்தல் சக்தியும் இவர்களுக்கு இந்த அம்சத்தில் இருக்காதே! அவர்களை நான் குறைவு படுத்திச் சொல்லவே இல்லை. அதனால்தான் ‘இந்த அம்சத்தில்’ என்று (அழுத்தம் கொடுத்துச்) சொல்கிறேன். அவரவருக்கும் அவரவருக்கான தொழிலில் பாரம்பர்யத் திறமை அலாதியாக சோபிக்கத்தான் செய்யும். ஒரு க்ஷத்ரியப் பிள்ளை கத்தி சுழட்டுகிற மாதிரி லாகவமாகப் பண்ண ப்ராமணப் பிள்ளைக்கு ஒரு ஆயுஸ் காலம் பிடிக்கும். ஒரு வைச்யப் பிள்ளை சரக்கைத் தரம் பார்த்தும், லாபமாகவும் கொள்முதல் பண்ணுகிறது போல் மற்ற ஜாதிக்காரரில் வயஸு வந்தவர்களாலும் முடியாது. இப்படியேதான் நாலாம் வர்ணத்தவரின் உழைப்புத் திறமையும், நம்மகத்துப் பெண்டுகள் ஒரு பஞ்சபாத்ரம் தேய்க்கிற நாழிக்குள் வேலைக்காரியோடு வருகிற குட்டி அத்தனை பாத்திரங்களையும் தேய்த்து (துலக்கி)ப் போட்டுவிடும்!

நான் சொல்வது என்ன என்றால்- அந்தப் புஸ்தகத்தில் பௌத்தர்கள்தான், கேட்பது (கேள்வி) என்றே அதுவரை இருந்த வித்யாப்யாஸத்தை இப்போது நாம் சொல்கிற மாதிரி படிப்பு என்பதாக எழுதிவைத்துக் கண்ணால் பார்த்துப் படிப்பதாக ஆக்கினார்கள் என்று சொல்லியிருப்பதற்கு ந்யாயமிருக்கிறது என்பதே. ப்ராமணர்களுக்கே பெரும்பாலும் வித்யாப்யாஸம் என்று இருந்தவரையில் கேள்வி போதுமானதாயிருந்தது. மற்றவர்களுக்காகவும் சேர்த்து பௌத்தர்கள் வித்யசாலைகள் ஸ்தாபிதம் பண்ணியபோது, மனப்பாடமாக இல்லாமல் அவ்வப்போது புஸ்தகத்தில் பார்க்கும்படியாக எழுத்து மூலம் கற்றுக் கொடுப்பது அவச்யமாயிற்று.

ஆனாலும் நான் முன்னேயே சொன்னபடி இந்த வித்யா சாலைகளிலும் ப்ராமணர்கள், அடுத்தபடி க்ஷத்ரியர்கள் ஆகியோர் சேர்ந்த அளவுக்கு மற்றவர்கள் சேரவில்லை. அதோடு ஸமீபகாலம் வரை அவர்கள் அவர்களுக்கு உண்டான தொழில் எதுவோ அதற்கான திறமையை ஒன்று ‘ப்ராக்டிகல் டிரெயினிங்’கால் அநுபவபூர்வமாகத்தான் பெற்றிருந்தார்கள்; அல்லது, அந்தத் தொழில் குறித்துச் செய்யுள் ரூபமாக ச்லோக ரூபமாக இருக்கப்பட்ட நூல்கள் ஆதி வழக்கப்படி மனப்பாடம் செய்து அறிந்ததாலேயே பெற்றிருந்தார்கள். ஒரு நாட்டு வைத்தியரிடம் போனால் தெரியும்: அவர் மருந்து தயாரிப்பு முறைகளைப் பாட்டாகவே கடகடவென்று சொல்லிக்கொண்டு போய் விடுவார். ஸ்தபதி ச்லோகமாக ஒப்பித்துக்கொண்டு போவார். “எழுதப் படிக்கத் தெரியுமா?” என்று கேட்கிறோமல்லவா, இதில் அநேக கிராம ஜனங்களுக்குப் போன தலைமுறை வரை இரண்டுமே தெரியாமல், ஆனால் தங்கள் தொழில் மட்டும் நம்முடைய B.E.க்கும் B.Tech-க்குங்கூடத் தெரியாத அளவுக்கு அத்தனை நுட்பமாகத் தெரிந்திருக்கும். இவர்களில் சிலர் படிப்பதற்கு மட்டும் தெரிந்துகொண்டு படித்ததை மனப்பாடம் பண்ணியிருப்பார்கள். மற்றவர்கள் காதால் கேட்டே மனப்பாடம் பண்ணியிருப்பார்கள். கொஞ்சம் பேருக்கே எழுதவும் தெரிந்திருக்கும். விசேஷமான ‘மெமரி பவர்’ இவர்களுக்கு இல்லாதுபோனாலும், அநாவசிய ஊர்க்கதைகள் இல்லாமல் தங்கள் ஸப்ஜெக்டை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும்போது, அதை மனப்பாடமாகவே மூளைக்குள் வைத்துக்கொள்கிற அளவுக்கு புத்தி தீக்ஷணம் இருக்கவே செய்தது.

இது அத்தனையும் நான் ஜெனரலாகச் சொன்னது. ப்ராமணர்களில் மக்குப் பிள்ளைகள் இல்லாமலில்லை. இதர ஜாதிகளில் மஹா புத்திமான்களாக பலபேர் வந்ததையும் பூர்வத்திலேயே பார்த்திருக்கிறோம்; இன்றும் பார்க்கிறோம்.

பெரிய பௌத்தக் கல்விக்கூடங்கள் ஏற்பட்டபின் எழுத்து மூலம் கற்பிப்பதுதான் வழி என்றாகிவிட்டது.

இதற்கு இன்னொரு காரணம், நாளுக்கு நாள் சாஸ்த்ரங்கள் விரிவடைந்துகொண்டுபோனதும், புதுப்புது சாஸ்த்ரங்களும், கலைகளும், ‘விஞ்ஞானம்’ என்று சொல்லப்படுகிற ஸயன்ஸ்களும் சேர்ந்துகொண்டேயிருந்ததுமாகும். எத்தனை குசாக்ர புத்தியானாலும் (தர்ப்பை நுனிபோல் கூரறிவானாலும்) இத்தனை விஷயங்களை எப்படி ஞாபகத்தில் வைத்தே காப்பாற்ற முடியும்? அதனாலும் எழுதி வைத்து போதிக்க வேண்டியதாயிற்று.

---

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 11, 2016, 1:14:56 AM3/11/16
to mintamil, Dr.Subashini
2016-03-11 3:08 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

2016-03-10 5:20 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
 அடித்துப் பிடித்துத் தங்கள் மதத்துக்கு மாற்றாமல் ஸாத்விகமாக, அல்லது ஸாமர்த்யமாக மாற்ற நினைக்கிற மதஸ்தர்கள் பொதுமக்களுக்கு வித்யா சாலைகள் வைப்பதன் மூலமும் அதை ஸாதித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் பாயிண்ட். அறிஞர்களுக்கே தெரிந்த ஸம்ஸ்க்ருதத்தை விட்டு பொதுஜன பாஷையான ப்ராக்ருதத்துக்கு ஏற்றம் தந்து பௌத்த – ஜைனர்கள் இந்த உபாயத்தைக் கையாண்டார்கள்.

நினைத்துப் பார்க்கின்றேன். மதத்தைப் பரப்பும் சுயநலமாகவே கூட இருந்தாலும்...இந்த பௌத்த சமண கிறித்துவ போதகர்களின் ​செயல்பாடுகள் மட்டும் இருந்திராவிட்டால் இன்றைய தமிழகம் கல்வி அறிவு என்பதையே நுகராத மிகப்பெருவாரியான ஒரு சமூகமாகத்தான் இருந்திருக்கும் என்பது அச்சமூட்டக்கூடிய ஒரு விஷயமாகவே புலப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

:)

Tthamizth Tthenee

unread,
Mar 11, 2016, 1:36:00 AM3/11/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
தேமொழியாரே  நீங்கள் போட்டிருக்கும் பதிவு  பல முறை படித்து மகிழவேண்டிய ஒரு பதிவு

எழுத்துக்கும் பதிவுக்கும் முக்கியமான ஒரு  பொக்கிஷம் போன்ற  பதிவு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Mar 11, 2016, 4:17:16 AM3/11/16
to min tamil
பெரியவரின் உரைத் தொகுப்பை ஒரு சேரத் தந்து படிக்க வாய்ப்பு தந்தமைக்கு தேமொழி அவர்களுக்கு நன்றி.

***

sundararajan srinivasagam

unread,
Mar 11, 2016, 7:17:24 AM3/11/16
to mint...@googlegroups.com
dear sir/madam
christian missionaries who came to spread the gospel were fascinated by tamil and they did more service to tamil than to christianity
kalingalrajan

Megala Ramamourty

unread,
Mar 11, 2016, 10:25:45 AM3/11/16
to மின்தமிழ்

அன்புத் தேமொழி,

சங்கராசாரியாரின் கூர்த்த அறிவும், அனுபவ ஞானமும் ’தெய்வத்தின் குரலில்’ ஓங்கி ஒலிக்கக் காண்கின்றேன். பகிர்வுக்கு நன்றி!

அன்புடன்,
மேகலா

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 11, 2016, 12:53:34 PM3/11/16
to mintamil
2016-03-11 2:47 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
தெய்வத்தின குரல் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்திருக்கின்றேன். அப்போது என் புரிதல் வேறு . இப்போது என் புரிதல் வேறு. ஒவ்வொரு பதிவிலும் பல கேள்விகள் எழுகின்றன. சிலவற்றை பதிகின்றேன்.

2016-03-10 5:01 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இம்மாதிரி அக்காலத்தில் ப்ராமணப் பசங்களுக்கு மட்டும் வித்யாப்யாஸம் விசேஷமாக இருந்தது இதரர்களுக்கு வித்யாஸமாகத் தோன்றவில்லை. தங்கள் தொழிலுக்கும் வாழ்முறைக்கும் குருகுலவாஸம் தேவையில்லை; அவசியப்படும்போது தங்கள் தொழிலில் டெக்னிகலான, சிக்கலான ஸமாசாரங்களை மட்டும் ‘அய்ய’ரிடம் போய்த் தெரிந்து கொண்டால் போதும் என்று நல்லறிவு அவர்களுக்கு இருந்தது.
 
​கல்வி என்பதை ஒரு குலத்துக்கு என ஒதுக்கி அதனைக் கடைபிடிப்போர் தாம் நல்லறிவுடன் இருப்போர்  எனும் கொள்கை கொண்ட காலகட்டம் இப்போது இல்லாமல் போனதை நினைத்து மனம் மகிழ்கின்றேன்.
:):)

அவர் மட்டும் ஏதோ சிலது படிக்கிறாரே; அவர் மட்டும் அந்த அநுஷ்டானம் பண்ணுகிறாரே!’ என்று நினைக்காமல் அவரும் ஸரி, தாங்களும் ஸரி அவரவருக்கும் குலதர்மப்படி வந்ததைப் பண்ணிகொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம், எல்லாருக்கும் நிறைவு என்ற நல்லெண்ணத்தோடு இருந்து வந்தார்கள்.
 
​ஒருவர் குலத்தொழில் எனும் போது மரவேலை செய்வதும் ஒரு குலத்தொழில். பாடம் படித்தலும் கற்றுக் கொடுத்தலும் ஒரு குலத்தொழில் வண்ணான் வேலை செய்வதும் ஒரு குலத்தொழில்.  மலம் அள்ளுவதும் ஒரு குலத்தொழில். ​ ஒருவனின் மகன் தன் தந்தை செய்த வேலையையே செய்து வந்தால் அதுவே அனைவருக்கும் ஷேமம் என்பது எவ்வளவு பெரிய நல்லெண்ணம்? இந்த நல்லெண்ணத்துடன் நான் இன்னமும் கூட இந்தியாவில் பல இடங்களில் குலத்தொழில் தொடர்கின்றதோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. 

அய்யர் சொல்கிற வேதமும், அவர் செய்கிற யாகமும் நம் க்ஷேமத்தையும் உத்தேசித்தது; அவருக்குப் போட்டிருக்கிற கடும் ஒழுக்க விதிகள் நமக்கும் லக்ஷ்யத்தைக் காட்டிக் கொடுக்கிறது*. ஆனபடியால் அவர் கார்யத்தை, அவருக்கான வாழ்க்கை முறையை அநுஸரித்துக்கொண்டு அப்படியே இருக்கட்டும்; அவரைப் போய் நாம் தொந்தரவு பண்ண வேண்டாம், அவரோடு போட்டிபோட வேண்டாம்’ என்று இதரர்கள் நினைத்தவரை (இப்படித்தான் யுகாந்தரமாக நடந்து வந்திருக்கிறது) எல்லாம் ஸரியாயிருந்தது. ஸமூஹ வாழ்வு க்ரமமாக, ஐக்ய மனப்பான்மையுடன் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் கல்வி வேண்டும் என வேறு குலத்தொழிலை செய்பவர் நினத்தால் அது போட்டி எனக் கருதுவதாக எண்ணம் கொண்டிருப்பது, என்பதன் பின்னனியில் ஒரு சுயனலம் சார்ந்த குரல் ஒலிக்கின்றது.

தேமொழி

unread,
Mar 12, 2016, 12:59:53 AM3/12/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
பௌத்த – ஜைனர் கல்விச் சிறப்பு

POSTED ON DECEMBER 29, 2014 
https://dheivathinkural.wordpress.com/2014/12/29/பௌத்த-ஜைனர்-கல்விச்-சிறப/

ஸமய ஸித்தாந்தம், தத்வவாதம், மதமாற்று யுக்திகள் ‘அஹிம்ஸை’ என்று வானளாவச் சொல்லிக்கொண்டே மாற்று மதக்காரரை உப்பரிகையிலிருந்து உருட்டித்தள்ளுவது1. அவர்களுடைய மடாலயத்துக்கு நெருப்பு வைப்பது2 ஆகியவையெல்லாம் எப்படியோ போகட்டும். கல்வி, அறிவாற்றல், தத்வ சோதனம் என்று எடுத்துக் கொண்டால் பௌத்தர்களும் ஜைனர்களும் இவற்றில் நல்ல சிறப்புப் பெற்றிருந்ததை ஆக்ஷேபிப்பதற்கில்லை. இலக்கியத்திலும் இவர்கள் தொண்டு அல்ப ஸ்வல்பமானதல்ல. இவர்களில் வடக்கே பௌத்தர் செல்வாக்கு அதிகம். தெற்கே சமணர் செல்வாக்கு அதிகம்.

“பள்ளி” என்று தமிழில் ஸ்கூல்களுக்குப் பேர் வந்ததற்குக் காரணமே முதலில் சமணப் பள்ளிகள் எனப்படும் ஜைனர்களின் துறவிச்சாலைகளிலேயே ஸகல ஜாதி ஜனங்களுக்குமான புதுமுறை போதனை தொடங்கியதுதான் என்கிறார்கள். ‘பள்ளி என்று பல ஊர் பேர்கள் முடிவதும் அங்கேயெல்லாம் சமணப் பள்ளிகள் இருந்ததால்தான்; சிரா என்ற சமண முனிவரின் பள்ளி இருந்த இடம்தான் (திருச்)சிராப்பள்ளி’ என்றெல்லாம் அபிப்ராயமுண்டு.

(பள்ளி என்கிறபோது வேடிக்கையாக ஒன்று: பள்ளி கொள்வது, பள்ளியறை என்கிறபோது பள்ளி என்பது படுத்துக்கொள்வதைத்தானே குறிக்கிறது? மழைக் குகைகளில் வஸித்த அநேக சமணத் துறவிகள் திறந்தவெளியில் கல்லையே மழமழ என்று நைஸ் பண்ணித் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருந்த படுக்கைகள் இப்போதும் பாண்டி நாட்டிலும் திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களிலும் உள்ளன.

கேசத்தை ஒவ்வொன்றாய் பிடுங்கிக்கொண்டே தலையை மொட்டையாக்கிக் கொள்ளவேண்டும் என்பது போல, தேஹ ச்ரமத்தையே முக்யமாகக் கொண்டு, அதனால் ‘ச்ரமணர்’ (சமணர்) என்றே பெயர்பெற்றவர்களானாலும், அவர்களிலும் தாரதம்யம் அதிகம் பார்க்காமல் நிறையத் துறவிகளை உண்டாக்கினபோது, கல்லைக்கூடப் பஞ்சாகப் பண்ணிக்கொள்ளும் ஸொகஸுக்கு இடம் கொடுக்க வேண்டியிருகிறது! நான் எந்த மதத்தையும் தாக்கவில்லை; கேலி பண்ணவும் இதைச் சொல்லவில்லை. பொது மனுஷ இயற்கை எப்படியிருக்கிறது? அதைக் கவனிக்காமல் லக்ஷ்ய நிலையைப் பரவலாக அமல் பண்ணப் பார்த்தால் எப்படி லக்ஷ்யமே நீர்த்துப் போகிறது என்றுதான் காட்ட வந்ததேன்.

பள்ளி–படுக்கை ஸம்பந்தத்துக்காகச் சொன்னேன்.

சமணப் பள்ளி, பௌத்த பள்ளி என்பதை வைத்தே பிற்பாடு துருஷ்க மதம் பரவினபோதும் மசூதிக்குப் பள்ளி வாசல் என்று பெயர் வந்திருக்கிறது. இதிலே பாமர ஜனங்களுக்கு உண்டான குழறுபடியால் பரமதஸ்தரில் எவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் மலையாள தேசத்தில் இப்போதும் துருஷ்கர்களை ‘பௌத்தன்மார்’ என்று சொல்வதைக் கேட்கிறோம்!)

சமண–பௌத்தர்கள் கல்விக்கும் இலக்கியத்துக்கும் செய்த சேவை பற்றியல்லவா சொல்லிக்கொண்டிருந்தேன்?

ஐம்பெரும் காப்பியம் என்பவையே அவர்களுடையவைதான்.

தமிழிலக்கியத்தில் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லும் “சிலப்பதிகார”த்தை எழுதிய இளங்கோ சமணத் துறவிதான். “மணிமேகலை” எழுதியவர் பௌத்தரான சீத்தலை சாத்தனார். “குண்டலகேசி”யும் பௌத்த காவியம்தான். “சீவகசிந்தாமணி” திருத்தக்கதேவர் என்ற சமணர் செய்தது. “கலிங்கத்துப்பரணி” எழுதிய ஜயங்கொண்டாரும் சமணர்தான். ‘நன்னூல்’ என்ற இலக்கண நூல், ‘யாப்பருங்கலக்காரிகை’ என்ற செய்யுளிலக்கண நூல், ‘அறநெறிச்சாரம்’ என்று வைராக்யத்தைச் சொல்லும் நூல், ‘நாலடியார்’ என்ற நீதிநூல் முதலானவையும் சமணர் எழுதியவைதான். ‘வீர சோழியம்’ என்ற இலக்கண நூல் பௌத்தர் எழுதியது.

வடக்கே பௌத்தர்களின் ஸர்வகலாசாலைகள் அந்நிய தேசங்களில் பெயரெடுக்கும்படியாக அவ்வளவு பெரிய அளவில், அநேக faculty-களுடன் (பாடத்துறைகளுடன்) பாட திட்டமும் ரொம்ப க்ரமமாக வகுத்து நடந்திருக்கின்றன. சீன யாத்ரிகர்கள் பலர் நம் நாட்டுக்கு வந்ததற்கு முக்யமான காரணமே இவற்றில் சேர்ந்து புத்தமத தத்வங்களைப் படிப்பதற்குத்தான், இவர்களில் ஹுவான்-த்ஸாங் என்பவர் இங்கே படித்தது மட்டுமில்லாமல் நாலந்தா ஸர்வகலாசாலையில், தற்போது Dean என்று சொல்கிற ஸ்தானத்தில், ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்று ஸமீபத்தில் படித்தேன்.
_____________________________________________________

1 முதற் பகுதியில் ‘முருகனின் வடநாட்டு அவதாரம்‘ என்ற உரை பார்க்க.

2 ஞானஸம்பந்தர் வாழ்க்கை குறிப்பிடப்படுவது தெளிவு.

---

தேமொழி

unread,
Mar 12, 2016, 1:00:04 AM3/12/16
to மின்தமிழ்
இந்த இழையின் பதிவுகள் மறுவாசிப்பாக பலருக்கு உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

..... தேமொழி

N D Logasundaram

unread,
Mar 12, 2016, 3:16:45 AM3/12/16
to mintamil
திரு தேமொழி அவர்களுக்கு 
இந்த தெய்வத்தின் குரல் எனும் தொடர் சங்கரமடம் வெளியிட்ட தா ? ஆம் எனின் இந்த கருத்துக்களை எழுதிவர்  யார் அதாவது அந்த வெளியீட்டில் காணப்படுவது 

ஒன்று 
நீங்கள் கா ட்டும் இவை  மறு வெளியீடா அல்லது முதல் முத்ல்  வரும் கன்னி வெளியீடா? (காலத்துடன் )
முதலில் வெளியிட்ட ஊடகம் எது 

முடிந்தால் வைக்கலாம் 

அன்புடன் 

நூ த லோ சு 
மயிலை 

--
--

தேமொழி

unread,
Mar 12, 2016, 3:54:27 AM3/12/16
to மின்தமிழ்

On Saturday, March 12, 2016 at 12:16:45 AM UTC-8, selvi...@gmail.com wrote:
திரு தேமொழி அவர்களுக்கு 
இந்த தெய்வத்தின் குரல் எனும் தொடர் சங்கரமடம் வெளியிட்ட தா ?

அன்பு நூதலோசு ஐயா, இந்த நூல்  சங்கரமடத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கிறது...

ஆம் எனின் இந்த கருத்துக்களை எழுதிவர்  யார் அதாவது அந்த வெளியீட்டில் காணப்படுவது 

சங்கரமடத்தின் http://www.kamakoti.org/ வலைத்தளத்தில் காணப்படும் முன்னுரையில் சங்கராச்சாரியாரின் கட்டுரைகளையும், உரைகளையும் தொகுத்ததாக கீழ்காணும் குறிப்பு கூறுகிறது...  அதே குறிப்புதான் இத்தளத்திலும், PDF இணைப்பிலும் கிடைக்கிறது.

இது ஒர் அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம், அறிஞர் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம், இந்த தெய்வத்தின் குரலை, பல டேப் களிலிருந்தும் கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர் காஞ்சிப் பெரியவர்ளிள் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு.ரா. கணபதி அவர்கள்.
 
ஒன்று 
நீங்கள் கா ட்டும் இவை  மறு வெளியீடா அல்லது முதல் முத்ல்  வரும் கன்னி வெளியீடா? (காலத்துடன் )
முதலில் வெளியிட்ட ஊடகம் எது 

இவர்கள் எந்தப் பதிப்பை தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்ற குறிப்பைக் கொடுக்கவில்லை ஐயா. 

நூல் வைத்திருப்பவர்கள், படித்தவர்கள் மேலதிகத் தகவல் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். 

..... தேமொழி

முடிந்தால் வைக்கலாம் 

அன்புடன் 

நூ த லோ சு 
மயிலை 

2016-03-12 11:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்த இழையின் பதிவுகள் மறுவாசிப்பாக பலருக்கு உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Hari Krishnan

unread,
Mar 12, 2016, 4:34:38 AM3/12/16
to mintamil

2016-03-12 14:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இவர்கள் எந்தப் பதிப்பை தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்ற குறிப்பைக் கொடுக்கவில்லை ஐயா. 

நூல் வைத்திருப்பவர்கள், படித்தவர்கள் மேலதிகத் தகவல் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். 

கல்கியில் ரா கணபதி தொடராக எழுதி, வானதி பதிப்பகம் ஏழு தொகுதிகளாக வெளியிட்டது.  

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Mar 12, 2016, 4:43:05 AM3/12/16
to மின்தமிழ்

On Saturday, March 12, 2016 at 1:34:38 AM UTC-8, Hari wrote:

2016-03-12 14:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இவர்கள் எந்தப் பதிப்பை தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்ற குறிப்பைக் கொடுக்கவில்லை ஐயா. 

நூல் வைத்திருப்பவர்கள், படித்தவர்கள் மேலதிகத் தகவல் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். 

கல்கியில் ரா கணபதி தொடராக எழுதி, வானதி பதிப்பகம் ஏழு தொகுதிகளாக வெளியிட்டது.  

தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி திரு. ஹரிகி.

..... தேமொழி

Suba

unread,
Mar 12, 2016, 11:06:39 AM3/12/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-10 7:08 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தொடர்ச்சி ....

நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

---

பாடதிட்டத்தில் வேறுபாடுகள்

POSTED ON DECEMBER 23, 2014
​..
---

“ப்ரத்யேகச் சூழ்நிலை”

POSTED ON DECEMBER 23, 2014

“அதென்ன ப்ரத்யேகச் சூழ்நிலை?” என்றால்,

ப்ராமணன்தான் எல்லா ஜாதியாருக்கும் அவரவருக்கான தொழிலைக் கற்பிக்க வேண்டியவன் என்பது நம் பூர்விகர்களுடைய ஏற்பாடு. தொழில் மாத்திரமின்றி தர்மம், ஆத்ம க்ஷேமத்துக்கான விஷயம் முதலியவற்றையும் ப்ராமணர்கள் பிறருக்கு போதிப்பார்கள். ஆனாலும் இப்படி போதிக்கும்போது நாலாம் வர்ணத்தாராகிய ஜன ஸமூஹத்துக்கு வேதத்தை மட்டும் நேராக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்.

​சரி. இவர் என்ன சொல்ல வருகின்றார். ​சூத்திரர்களுக்கு பிராமணர்கள் வேதத்தை சொல்லிக் கொடுக்க மாட்டர்கள் என்று சொல்வதன் வழி இது தான் சரி.. இதுதான் மரபு என்கின்றாரா அல்லது வேறு என்ன?
 
ஜனங்களிடையே பலவேறு தொழில்களையும் பாரம்பர்யமாகப் பங்கீடு செய்து வைத்த நம்முடைய வர்ண தர்மத்தின்படி வேதக் கல்வியும் அதன்படியான அநுஷ்டானங்களும் ப்ராமணன் ஒருத்தனுக்குத்தான் ஆயுள் காலத் தொழில் என்று பங்கீடு பண்ணி வைத்து விட்டதால் இவற்றை ஓரோர் அளவுக்கு மாத்திரம் க்ஷத்ரியர்களுக்கும் வைச்யர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது, நாலாம் வர்ணத்துக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தார்கள்1.

​நல்ல வேளை​. இப்போது கணினி இண்டெர்நெட் யுகத்தில்,  வேதத்தை மட்டுமல்ல, உலக ஞானங்கள் அறிவியல், கலை என எதை எதை படிக்க வேண்டுமோ அதனை அனைவரும் தங்கு தடையின்றி படிக்க முடிகின்றது. இதற்காக அறிவியல் வளர்ச்சிக்கும் அதில் உழைத்தோருக்கும் மனித குலமே நன்றிக்கடன் பட்டிருக்கின்றது. 

சத்திரியர் வைசியருக்குக் கூட கற்றுத்தரலாம் ஆனால் சூத்திரர்களுக்குக் கல்வி  கொடுக்கக் கூடாது... சரி.. இங்கேயும் இவர் என்ன சொல்ல வருகின்றார். இதுதான் மரபு என்கின்றாரா அல்லது.. ஆகா மனு தர்மத்தால் என்ன கொடுமை நடந்திருக்கின்றது என விளக்குகின்றாரா? 

நேராக வேதத்தைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அதன் அபிப்ராயங்களையும், தத்வார்த்தங்களையும் புராண இதிஹாஸங்களாகவும் நீதி நூல்களாகவும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.

​எப்படி .. எவ்வகையில் .. உதாரண நீதி நூல்கல் சூத்திரர்களுக்கு எப்படி பாடமாக வழங்கப்பட்டன? அறிந்து கொள்ள ஆவல்.​
 
இதரர்கள் (நாலாம் வர்ணத்தார்) அவர்களுடைய ஜாதித் தொழில்களை வெகு நன்றாகச் செய்து கொண்டிருக்கும்போது அதை விட்டுவிட்டுத் தொழில் கற்றுக்கொள்வதற்காக எங்கோ ஒதுக்குப்புறத்திலிருந்த குருகுலத்துக்கு அவர்களுடைய குழந்தைகள் போகவேண்டிய அவச்யமிருக்கவில்லை. வீடே அவர்களுக்குப் பள்ளிக்கூடமாகவும் இருந்தது.

​நான்காம் வர்ணத்தவர் எனப்படும் சூத்திரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் யாவை?
பிணம் எரித்தல்
சாக்கடை கழுவுதல்
முடி திருத்துதல்
மலம் அள்ளுதல்..
..ஆக இதற்கெல்லாம் வீட்டிலேயே பாடம் கிடைத்து விடும் என்று நான் புரிந்து கொள்கிறேன். என் புரிதல் பிழையென்றால் சூத்திரர்கள் தொழில்கள் யாவை என விளக்கினால் உதவும்.

சுபா

Suba

unread,
Mar 12, 2016, 11:24:39 AM3/12/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-10 7:08 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தொடர்ச்சி ....

நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...

​..
---

“ப்ரத்யேகச் சூழ்நிலை”

POSTED ON DECEMBER 23, 2014

“அதென்ன ப்ரத்யேகச் சூழ்நிலை?” என்றால்,

.
​.​

வேத வித்யையில் அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாருக்கும் பழங்கால வித்யாசாலைகளில் சேரத் தகுதியிருந்தாலும் உபநயன ஸம்ஸ்காரத்தை இந்த வர்ணத்தினர்களுக்கு வேறு வேறு வயஸில் வைத்திருப்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.

​வேத வித்யையில் அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தார்.. இன்னார் தான் அதிகாரம் பெற்றவர் என யார் வந்து எழுதி வைத்தார். மனுவா? அல்லது யார்?

இப்படிப் பண்ணுவதில் ப்ராமணப் பிள்ளையானால் எட்டு வயஸுக்கே பூணூல் போட்டு குருவிடம் அனுப்புவது என்றும், க்ஷத்ரியப் பிள்ளைக்குப் பதினோரு வயஸிலும் வைச்யப் பிள்ளைக்குப் பன்னிரண்டு வயஸிலும் இப்படிச் செய்வதெனறும் இருந்திருக்கிறது.

ப்ராமணப் பிள்ளையைப் பதினாறு வயஸுக்கு மேல் பூணூல் போடாமல் வைக்கப்படாது. இதேமாதிரி க்ஷத்ரியனுக்கு ‘அப்பர் லிமிட்’ இருபத்திரண்டு வயஸு. வைச்யனுக்கு இருபத்திநாலு.

ரொம்ப சூட்டிகையாயிருந்தால் ப்ராமணப் பிள்ளைக்கு ஐந்து வயஸிலும், க்ஷத்ரியப் பிள்ளைக்கு ஆறு வயஸிலும், வைச்யப் பிள்ளைக்கு எட்டு வயஸிலும் பூணூல் போட்டு வித்யாப்யாஸம் ஆரம்பிக்கலாம்.

ஏன் இப்படி ப்ராமணனைவிட மற்ற ஜாதியாருக்கு வித்யாப்யாஸத்தை வித்யாஸப்படுத்தியிருக்கிறது, தள்ளிப் போட்டிருக்கிறது என்றால்…

எந்தக் குழந்தையானாலும் அதற்கு அதனுடைய இயற்கையான வீட்டுச் சூழ்நிலையில், அதற்கான வாழ்க்கைத் தொழிலில் இயல்பான ருசி ஏற்படும் என்பதுதான் காரணம். இமிடேட் பண்ணுவது குழந்தையின் குணம். ப்ராமணனைத் தவிர மற்றவர்கள் உடம்பாலே நிறையத் தொழில் செய்பவர்கள். ஒருத்தன் கத்தி சுழற்றுவான். இன்னொருத்தன் உழுவான். இன்னொருத்தன் நெசவு செய்வான், இப்படிப் பல. அந்த ஜாதித் தொழில்களை ஸ்வதர்மமாகக் கொண்ட குழந்தைகள் குருகுலத்திலே அந்தத் தொழில்களில் எதுவுமே நடப்பதைப் பார்க்கமுடியாது. தொழில் செய்கிற இடமில்லை குருகுலம். தொழில்முறையை அறிகிற, அறிவைப் பரப்புகிற இடம்தான் அது.

​அப்பப்பா.. இப்படியெல்லாம் அறிவை ஒரு சமூகம் பெறுவதற்கு ஒரு சட்டம் இருந்திருக்கின்றது. 

 அறிவை வளர்ப்பதையே ஆயுஸ்காலத் தொழிலாகக் கொண்ட ப்ராமண ஜாதியில் பிறந்த குழந்தைகளைத் தவிர மற்ற ஜாதிக் குழந்தைகளை ரொம்பவும் சின்ன வயஸில் குருகுலத்தில் அடைக்க வேண்டாம்;
​இதை விட ஒரு டிஸ்கிரிமினேஷன் கொண்ட ஒரு வாக்கியம் எதுவாக இருக்க முடியும்?
 
அந்தக் குழந்தைகள் அகத்திலேயே அப்பன் பாட்டனோடு ஸந்தோஷமாக வஸித்துக்கொண்டும், அவர்களோடேயே ஆயுதசாலைக்கோ கடைக்கோ நிலத்துக்கோ பட்டறைக்கோ போயும் அவர்கள் செய்யும் தொழிலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, ‘இமிடேஷன்’ செய்கிற ‘இன்ஸ்டிங்க்டி’ல் அதே மாதிரி செய்துகொள்ளட்டும் என்று விட்டார்கள். இப்படி வேலையில் குழந்தை ஒத்தாசை செய்வது அந்த ஜாதியாருக்கு வேலையையும் குறைத்து வருமான லாபத்தையும் உண்டாக்கிற்று.

இனிமையான   இந்த வாக்கியங்களுக்குப் பின்னனியில் இருக்கும் சுயநலம் கொடூரமானதாகத் தெரிகின்றது.

இன்னொரு அம்சத்தையும் கவனிக்கவேண்டும். மந்த்ர சக்தியை உண்டாக்கிக்கொள்ள வேண்டியதை முன்னிட்டு ஆஹாரம் முதலானவற்றில் ப்ராமணக் குழந்தைக்கு இருக்கிற கட்டுப்பாடு மற்ற ஜாதிக் குழந்தைகளுக்கு இல்லை. ப்ராமமணன் நடத்தும் குருகுலத்தில் அந்த மற்றக் குழந்தைகளுக்குப் பழக்கமான, அவர்களுக்குத் தேவையான ஆஹாராதிகளை எப்படிச் சேர்க்கமுடியும்?

பிரிவினை ​
 
​என்பது பாடமாக இங்கே தான் பாடசாலையில் இளம் பிராயத்திலேயே குழந்தைகளுக்கு அக்காலத்தில் ஆரம்பிக்கபப்ட்டிருக்கின்றது என அழகாக விளக்கி விட்டார்.​ அதனால் தான்.." நாம்-அவர்கள்"  என்றபிரிவினை பிஞ்சு மனதிலேயே பதிந்தே  குழந்தைகள் வளர்ந்திருக்கின்றனர்.

எப்படி விலகும் சாதி எண்ணம் தமிழகத்தில் ..? 
இது ஆண்டாண்டு கால பயிற்சி
​யல்லவா​
... கொடுமை.. கொடுமை!! 

சுபா

Suba

unread,
Mar 12, 2016, 11:37:16 AM3/12/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-12 6:59 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பௌத்த – ஜைனர் கல்விச் சிறப்பு

POSTED ON DECEMBER 29, 2014 

ஸமய ஸித்தாந்தம், தத்வவாதம், மதமாற்று யுக்திகள் ‘அஹிம்ஸை’ என்று வானளாவச் சொல்லிக்கொண்டே மாற்று மதக்காரரை உப்பரிகையிலிருந்து உருட்டித்தள்ளுவது1. அவர்களுடைய மடாலயத்துக்கு நெருப்பு வைப்பது2 ஆகியவையெல்லாம் எப்படியோ போகட்டும். கல்வி, அறிவாற்றல், தத்வ சோதனம் என்று எடுத்துக் கொண்டால் பௌத்தர்களும் ஜைனர்களும் இவற்றில் நல்ல சிறப்புப் பெற்றிருந்ததை ஆக்ஷேபிப்பதற்கில்லை. இலக்கியத்திலும் இவர்கள் தொண்டு அல்ப ஸ்வல்பமானதல்ல. இவர்களில் வடக்கே பௌத்தர் செல்வாக்கு அதிகம். தெற்கே சமணர் செல்வாக்கு அதிகம்.

“பள்ளி” என்று தமிழில் ஸ்கூல்களுக்குப் பேர் வந்ததற்குக் காரணமே முதலில் சமணப் பள்ளிகள் எனப்படும் ஜைனர்களின் துறவிச்சாலைகளிலேயே ஸகல ஜாதி ஜனங்களுக்குமான புதுமுறை போதனை தொடங்கியதுதான் என்கிறார்கள். ‘பள்ளி என்று பல ஊர் பேர்கள் முடிவதும் அங்கேயெல்லாம் சமணப் பள்ளிகள் இருந்ததால்தான்; சிரா என்ற சமண முனிவரின் பள்ளி இருந்த இடம்தான் (திருச்)சிராப்பள்ளி’ என்றெல்லாம் அபிப்ராயமுண்டு.

(பள்ளி என்கிறபோது வேடிக்கையாக ஒன்று: பள்ளி கொள்வது, பள்ளியறை என்கிறபோது பள்ளி என்பது படுத்துக்கொள்வதைத்தானே குறிக்கிறது? மழைக் குகைகளில் வஸித்த அநேக சமணத் துறவிகள் திறந்தவெளியில் கல்லையே மழமழ என்று நைஸ் பண்ணித் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருந்த படுக்கைகள் இப்போதும் பாண்டி நாட்டிலும் திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களிலும் உள்ளன.

கேசத்தை ஒவ்வொன்றாய் பிடுங்கிக்கொண்டே தலையை மொட்டையாக்கிக் கொள்ளவேண்டும் என்பது போல, தேஹ ச்ரமத்தையே முக்யமாகக் கொண்டு, அதனால் ‘ச்ரமணர்’ (சமணர்) என்றே பெயர்பெற்றவர்களானாலும், அவர்களிலும் தாரதம்யம் அதிகம் பார்க்காமல் நிறையத் துறவிகளை உண்டாக்கினபோது, கல்லைக்கூடப் பஞ்சாகப் பண்ணிக்கொள்ளும் ஸொகஸுக்கு இடம் கொடுக்க வேண்டியிருகிறது! நான் எந்த மதத்தையும் தாக்கவில்லை; கேலி பண்ணவும் இதைச் சொல்லவில்லை. பொது மனுஷ இயற்கை எப்படியிருக்கிறது? அதைக் கவனிக்காமல் லக்ஷ்ய நிலையைப் பரவலாக அமல் பண்ணப் பார்த்தால் எப்படி லக்ஷ்யமே நீர்த்துப் போகிறது என்றுதான் காட்ட வந்ததேன்.

பள்ளி–படுக்கை ஸம்பந்தத்துக்காகச் சொன்னேன்.

​வேடிக்கைக்காகச் சொன்னாலும் அதில் உண்மை இருக்கவே செய்கின்றது.  தமிழகத்தில் இருக்கின்ற பாறைகள், குன்றுகள் குகைகள் எனப்பார்த்தால் அங்கெல்லாம் சமணப்படுக்கைகள், அதாவது கற்படுக்கைகள் தென்படுகின்றன. அதோடு பண்டைய பிராமி அதாவது தமிழி எழுத்துக்களும் மிகப் பெரும்பாலும் சமண முனிவர் வாழ்ந்த இடங்களில் கிடைத்தவையாகவே அமைகின்றன. 

சமணப் பள்ளி, பௌத்த பள்ளி என்பதை வைத்தே பிற்பாடு துருஷ்க மதம் பரவினபோதும் மசூதிக்குப் பள்ளி வாசல் என்று பெயர் வந்திருக்கிறது. இதிலே பாமர ஜனங்களுக்கு உண்டான குழறுபடியால் பரமதஸ்தரில் எவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் மலையாள தேசத்தில் இப்போதும் துருஷ்கர்களை ‘பௌத்தன்மார்’ என்று சொல்வதைக் கேட்கிறோம்!)

சமண–பௌத்தர்கள் கல்விக்கும் இலக்கியத்துக்கும் செய்த சேவை பற்றியல்லவா சொல்லிக்கொண்டிருந்தேன்?

ஐம்பெரும் காப்பியம் என்பவையே அவர்களுடையவைதான்.

தமிழிலக்கியத்தில் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லும் “சிலப்பதிகார”த்தை எழுதிய இளங்கோ சமணத் துறவிதான். “மணிமேகலை” எழுதியவர் பௌத்தரான சீத்தலை சாத்தனார். “குண்டலகேசி”யும் பௌத்த காவியம்தான். “சீவகசிந்தாமணி” திருத்தக்கதேவர் என்ற சமணர் செய்தது. “கலிங்கத்துப்பரணி” எழுதிய ஜயங்கொண்டாரும் சமணர்தான். ‘நன்னூல்’ என்ற இலக்கண நூல், ‘யாப்பருங்கலக்காரிகை’ என்ற செய்யுளிலக்கண நூல், ‘அறநெறிச்சாரம்’ என்று வைராக்யத்தைச் சொல்லும் நூல், ‘நாலடியார்’ என்ற நீதிநூல் முதலானவையும் சமணர் எழுதியவைதான். ‘வீர சோழியம்’ என்ற இலக்கண நூல் பௌத்தர் எழுதியது.

வடக்கே பௌத்தர்களின் ஸர்வகலாசாலைகள் அந்நிய தேசங்களில் பெயரெடுக்கும்படியாக அவ்வளவு பெரிய அளவில், அநேக faculty-களுடன் (பாடத்துறைகளுடன்) பாட திட்டமும் ரொம்ப க்ரமமாக வகுத்து நடந்திருக்கின்றன. சீன யாத்ரிகர்கள் பலர் நம் நாட்டுக்கு வந்ததற்கு முக்யமான காரணமே இவற்றில் சேர்ந்து புத்தமத தத்வங்களைப் படிப்பதற்குத்தான், இவர்களில் ஹுவான்-த்ஸாங் என்பவர் இங்கே படித்தது மட்டுமில்லாமல் நாலந்தா ஸர்வகலாசாலையில், தற்போது Dean என்று சொல்கிற ஸ்தானத்தில், ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்று ஸமீபத்தில் படித்தேன்.

​தமிழுக்குச் சமணமும் பௌத்தமும் வழங்கிய கொடையை இன்னமும் விரிவாக ஆராயாமல் இருப்பது தமிழர்​ தம் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள உதவாது.  மேல் குறிப்பிட்ட இரண்டு பத்திகளும் அந்தச் சிந்தனையை வலுக்கச் செய்வதாகவே காண்கின்றேன்.

சுபா

​ 

kandan

unread,
Mar 12, 2016, 12:03:23 PM3/12/16
to mint...@googlegroups.com

ர்த்த சாஸ்திரம் கூறும் வருண தருமங்களாவன:-

அந்தணர்க்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் இவ்வாறுமாம்.

அரசர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், உயிர்களைக் காத்தல் என்னும் இவ்வைந்துமாம்.

வணிகர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம் இவ்வாறுமாம்.

சூத்திரர்க்கு இருபிறப்பாளர் மூவர்க்கும் பணிபுரிதல், உழவு, பசுக்காவல், வாணிகம், காருகன்மம் (நெசவுத் தொழில்), குசீலவகன்மம் (குயிலுவம் என்பது தமிழ் வழக்கு - ஆடல் பாடல் முதலியன: குசீலவர்கள் - கூத்தாடுவோர்) என்னும் இவையாம். (முதல் அதிகரணம், முதற் பிரகரணம், மூன்றாம் அத்தியாயம்)

(not able to get exact reference)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages