வேளாங்கண்ணி மாதா கோயில் - வரலாற்றுப் பார்வையில்

404 views
Skip to first unread message

Suba

unread,
Nov 1, 2016, 4:02:55 AM11/1/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram

புதிய இழை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இழையில் வேளாங்கண்ணி மாதா கோயில் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

சுபா

---------- Forwarded message ----------
From: Dev Raj <rde...@gmail.com>
Date: 2016-11-01 4:14 GMT+01:00

கணேசர் அவர்களுக்கு நன்றி.

அவர் தந்துள்ள ஆதாரங்கள் கீழ்க்கடற்கரையில் சைவம் தன்படியே செழித்த நிலையில் இருந்ததை மேலும் மேலும்
உறுதி செய்கின்றன; காரைக்கால் அம்மை, வாயிலார் நாயனார்,அதிபத்த நாயனார், இயற்பகை நாயனார் போன்ற
 நாயன்மார்கள் கீழ்க் கடற்கரையில் அவதரித்துள்ளனர். முகமதியர் கடல் தலங்களைச் சேதப்படுத்தியதற்கு
ஆதாரம் காணப்படவில்லை.

மேலும் புத்தர் சிலைகளைத்  தோண்டி எடுத்தவண்ணம் உள்ளனர் எனும் செய்தியும்
பொய்த்துப்போகிறது.  

மயிலைக் கடற்கரையில் சம்பந்தர் பெருமான் பாடிய சிவாலயம் கிரித்தவரால் அழிக்கப்பட்டபின்
மாற்று ஏற்பாடாக ஏற்கெனவே சற்று உள்ளடங்கிய இடத்தில் அமைந்திருந்த சிங்கார வேலர்
ஆலயத்தினருகில் தற்போதைய கபாலீசுவரர் ஆலயம் நிறுவப்பட்டது. இந்தச் சிங்கார வேலர் ஆலயம்
தனித்த கொடிமரத்துடன் திகழும் எழில்மிக்க ஆலயமாகும்; சிங்கார வேலர் கிழக்கு நோக்கி
அமர்ந்துள்ளார்; ஈசனாருக்கும் முருகனுக்குமாக இரு  வேறு ஆலயங்கள் முன்பு இருந்துள்ளன. 
அதுபோல வேளாங்கண்ணியிலும் வில்லேந்திய வேலவருக்கும்,
ரஜத கிரீசுவரருக்கும் தனித்த ஆலயங்கள்  முன்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இது மற்றொரு திறக்கிலும் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. கடல் தலங்களில்
கார்த்திகேயர் தேவ ஸேநாபதியாக - யுத்த ஸந்நத்தராகப் போர்க்கோலம் தாங்கிய வடிவில் 
இருப்பதாக வடிவமைக்கும் மரபும் இருந்திருக்கலாம். சாயாவனம் ஆலயத்திலும் 
வில்லேந்திய வேலவர் உள்ளார்; வேளாங்கண்ணியிலும் அவ்வாறே. செந்திலம்பதி, செவ்வேள் 
போருக்குமுன் முக்கட்பிரானைப் பூசிக்கும் புகழ்பெற்ற தலம்.

ஆனால் வேளாங்கண்ணி மாதா கோயில் தொடர்பான ஐயப்பாடுகள் விடை காணாமல்
அப்படியே நிற்கின்றன

திருச்சாய்க்காடு :

தேவ்

nkantan r

unread,
Nov 1, 2016, 7:09:02 AM11/1/16
to மின்தமிழ்
Ma'am!

as i said in the other thread, the title reflects the attitude of the person and intent of the thread; so your thread intent is clear to look at the historic perspective; i also mentioned that if statues and figurines are found in and near the basilica, they need to be catalogued, categorised and present in display in or near the basilica; and the historical facts with proofs are presented for all visitors of the basilica.

hope actual proofs are given; it is very much understandable that there was another temple in velankanni for muruga /ambaal; but we need actual geographical proof and arachelogical supporting evidence apart from literary review

just literary surmises and assumptions wont help in anyway;

regards
rnkantan

Dev Raj

unread,
Nov 1, 2016, 9:45:27 AM11/1/16
to மின்தமிழ்
On Tuesday, 1 November 2016 16:39:02 UTC+5:30, nkantan r wrote:
hope actual proofs are given; it is very much understandable that there was another temple in velankanni for muruga /ambaal; but we need actual geographical proof and arachelogical supporting evidence apart from literary review

நன்றி, ஐயா.
அறிவுரை கூறுவதற்கு பதிலாக நீங்களே முன்னின்று முயன்று 
தடையச் சேகரிப்பை நடத்திக்காட்டுங்கள் ஐயா. வரலாற்று
ஆய்வுலகம் உமக்கு என்றென்றும் நன்றி செலுத்தும்

அன்புடன்
தேவ்

Innamburan S.Soundararajan

unread,
Nov 1, 2016, 10:06:41 AM11/1/16
to mintamil
ஆரோக்கியமாதாவை வெளி நாட்டில் இரு இடைய சிறுவர்கள் தரிசித்ததாகவும், அவள் அருள் அளித்ததாகவும் கிருத்துவத்தின் ரோமன் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். பெசண்ட் நகரிலோ, வேளாங்கண்ணியிலோ பிர்திஷ்டை செய்ய ஆணை பிறந்தது. நான் அந்த ஆரோக்கியமாதா சிற்பத்தை வெளி நாட்டிலிருந்து கொணர்ந்து பிரிதிஷ்டை செய்வதற்கு முன் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். 

N. Ganesan

unread,
Nov 1, 2016, 10:32:09 AM11/1/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
On Sunday, 30 October 2016 01:48:10 UTC+5:30, N. Ganesan wrote:
எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.
எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.

> இடம் எனும் பொருள் இல்லை; சங்கதப் பெயர் ‘அஷ்டநேத்ரபுரி’, என்கண் கொண்ட நான்முகனின் பெயர்.
‘திருவிண்சாருடையார்’ சுவாமி பெயர்; கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர். பொருள் தெரியவில்லை. 
அருணகிரிநாதர் காலத்துக்குப்பின் முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றிருக்கலாம்
> தேவ்

வேளாங்கண்ணி பகுதியில் (10 - 15 மைல் சுற்றளவில்) புதையுண்ட பல விக்கிரகங்கள் ஆண்டுதோறும் தோண்டி எடுக்கப்படுகின்றன.
அவை புதையுண்ட காலம் போர்ச்சுகீசியர் தம் கதைகளைக் கொண்டுவரும் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டது.

வேளாங்கண்ணி என்னும் ஊர்ப் பெயர் வெள்ளிமலையப்பர் - வேல்நெடுங்கண்ணி என்று ஸ்வாமி-அம்பாள் பெயர்களாகப்
பண்டைச் சைவர்களால் அளிக்கப்பெறக் காரணம் ஆயிற்று என்பதும் பார்த்தோம். எண்கண் என்பதனைப் பிழையாகப்
புரிந்துகொண்டு அஷ்டநேத்ரபுரி என வடமொழி ஆக்கியுள்ளனர். தனியிழையில் எண்கண்: கண் = இடம் என்பது பற்றி விளக்குகிறேன்.
 இதுபோல, வேளங்கண்ணி/வேளாங்கண்ணி (பேச்சுவழக்கில்
வெள்ளாங்கண்ணி எனவும் ஆகும். வேளான் - வெள்ளான். வெள்ளான்பிள்ளை, வெள்ளாஞ்செட்டி, ...) இரஜதகிரீஸ்வரம் என மொழியாக்கியுளர்.
இரஜதகிரி = வெள்ளிமலை = கைலாசம். வெள்ளிமலையப்பர் = கைலாசநாதர். வெள்ளியங்கிரிமலை கோவை அருகே உயரமானது,
அது கைலாயமலையின் பெயர் உயரத்தால் பெயர்பெற்றது. இங்கே கடற்கரை. மலை எதுவும் இல்லை. வேளங்கண்ணி என்னும் பெயரால்
வெள்ளியங்கிரிநாதர் என்ற பெயர் ஸ்வாமிக்கு. வேல்நெடுங்கண்ணாள் - அம்மை பெயர்.

VELANGKANNI-SIVAN/வேளாங்கண்ணி-சிவன்/வெள்ளியங்கிரிநாதர்

செல்லும் வழி: திருவாரூர்- நாகை.-
தகவல்கள்:

ஊர்:வேளாங்கண்ணி
இறைவன்:வெள்ளியங்கிரிநாதர்,ராஜதகிரீசுவரர் 
இறைவி:வேல்நெடுங்கண்ணி

http://www.naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1869-velankannisivan

சோழர் கலைப்படிமங்கள் உன்னத நிலையை அடையக் காரணமானவள்

செம்பியன்மாதேவி. அவள் பேராலேயே வேளாங்கண்ணி அருகே ஊர் இருப்பதுங் காண்க.

சோழமாதேவி ஆகிய இவ்வன்னையால் வேளாங்கண்ணி நடராஜர், மாகேசுவரி வடிக்கப்பட்டுள்ளனர் எனலாம்.

நா. கணேசன்

Suba

unread,
Nov 1, 2016, 1:56:58 PM11/1/16
to மின்தமிழ்
2016-11-01 12:09 GMT+01:00 nkantan r <rnka...@gmail.com>:
Ma'am!

as i said in the other thread, the title reflects the attitude of the person and intent of the thread; so your thread intent is clear to look at the historic perspective; i also mentioned that if statues and figurines are found in and near the basilica, they need to be catalogued, categorised and present in display in or near the basilica; and the historical facts with proofs are presented for all visitors of the basilica.

hope actual proofs are given; it is very much understandable that there was another temple in velankanni for muruga /ambaal; but we need actual geographical proof and arachelogical supporting evidence apart from literary review

just literary surmises and assumptions wont help in anyway;

​உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே.​
 
​அந்தத் தலைப்பில் இல்லாமல் ஆய்வு நோக்கில் இந்த இழையில் நல்ல முறை யில் உரையாடலாம்.
சான்றுகள், குறிப்புக்கள், புகைப்படங்கள் என சேகரிக்கும் போது மேலும் அது இந்த ஆய்வின் வரலார்றுப் பார்வைக்கு பலம் சேர்க்கும்.

சுபா

regards
rnkantan

N. Ganesan

unread,
Nov 1, 2016, 8:06:10 PM11/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Tuesday, November 1, 2016 at 7:32:09 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, 30 October 2016 01:48:10 UTC+5:30, N. Ganesan wrote:
எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.
எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.

> இடம் எனும் பொருள் இல்லை; சங்கதப் பெயர் ‘அஷ்டநேத்ரபுரி’, என்கண் கொண்ட நான்முகனின் பெயர்.
‘திருவிண்சாருடையார்’ சுவாமி பெயர்; கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர். பொருள் தெரியவில்லை. 
அருணகிரிநாதர் காலத்துக்குப்பின் முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றிருக்கலாம்
> தேவ்

வேளாங்கண்ணி பகுதியில் (10 - 15 மைல் சுற்றளவில்) புதையுண்ட பல விக்கிரகங்கள் ஆண்டுதோறும் தோண்டி எடுக்கப்படுகின்றன.
அவை புதையுண்ட காலம் போர்ச்சுகீசியர் தம் கதைகளைக் கொண்டுவரும் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டது.

வேளாங்கண்ணி என்னும் ஊர்ப் பெயர் வெள்ளிமலையப்பர் - வேல்நெடுங்கண்ணி என்று ஸ்வாமி-அம்பாள் பெயர்களாகப்
பண்டைச் சைவர்களால் அளிக்கப்பெறக் காரணம் ஆயிற்று என்பதும் பார்த்தோம்.

வேல்நெடுங்கண்ணி - இரு தேவார ஸ்தலங்களில்:

கடல்நாகைக் காரோணம்:
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல்நெடுங்கண்ணி வியன்கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னைகொல்? செப்புமினே!

சிக்கல்:
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய 
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான், 
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

வடமொழியில் வேல் ஶக்தி என்றும், நெடிய ஆயத (aayata) என்றும்,
கண்ணி அக்ஷி என்றும் வழங்கும்
வேல் நெடுங் கண்ணி ==> ஶக்தி ஆயத அக்ஷி ==> ஶக்தாயதாக்ஷி
('sakti = spear, aayata = long, akSi = with eyes)

N. Ganesan

unread,
Nov 1, 2016, 8:19:15 PM11/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
 ஶக்தாயதாக்ஷி - Like this name, there is a parallel name for Vishnu in V. Sahasranaamam:

Pundareekaayataaksham – It is an expansion of the term ‘Kamalanayanam’ which we saw in the last Shloka. Pundareeka means Lotus, Aayata means long and wide and Aksha means the eye. Pundareekaayataaksham means – Eyes are long and wide as beautiful as the Lotus flower.

NG

N. Ganesan

unread,
Nov 2, 2016, 12:49:24 AM11/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

வடமொழியில் வேல் ஶக்தி என்றும், நெடிய ஆயத (aayata) என்றும்,
கண்ணி அக்ஷி என்றும் வழங்கும்
வேல் நெடுங் கண்ணி ==> ஶக்தி ஆயத அக்ஷி ==> ஶக்த்யாயதாக்ஷி
('sakti = spear, aayata = long, akSi = with eyes)

வேளாங்கண்ணி - பழைமையான சிவன் கோவிலில்:
வேல்நெடுங்கண்ணி உடனாய வெள்ளிமலையப்பர்
=
ஶக்த்யாயதாக்ஷி ஸமேத ரஜதகிரீஶுவரர்
(பல தளங்களில், தமிழ் உடம்படுமெய் சேர்த்து சக்தியாயதாட்சி என இருக்கும்.)

வெ-/வே- எனத் தொடங்கும் ஊர்களில் வேற்கண்ணி (ஶக்திநேத்ரி),
வேல்நெடுங்கண்ணி (ஶக்த்யாயதாக்ஷி) என அம்பிகையின் பெயர் இருக்கிறது.

நாகைக் காரோணம், தினைநகர் கோவில்களில், நீல ஆயத அக்‌ஷி = நீலாயதாக்‌ஷி
பயற்றூரில், நீல + உத்பல + ஆயத + அக்‌ஷி = நீலோத்பலாயதாக்‌ஷி.
புண்டரீகாயதாக்‌ஷம் (விஷ்ணு ஸஹஸ்ரநாமம்).

பிற பின்!
நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 2, 2016, 1:44:17 AM11/2/16
to மின்தமிழ்
On Sunday, 30 October 2016 20:26:09 UTC+5:30, N. Ganesan wrote:
வேளனை வேண்டல் (புலவர் செங்கை பொதுவன்)
அன்பு மலர வேண்டும் – அதற்கு 
அடியேன் உதவ வேண்டும்
இன்பம் பொங்க வேண்டும் – வேளா 
எளியேன் உதவ வேண்டும் 1

’வேள்’ என்பதன் ஸம்போதநமாக ‘வேளா’ எனும் விளியை
வள்ளலாரோ, அருணகிரியாரோ பயன்கொண்டதாகத் தெரியவில்லை.

வேலன் - வேலா எனும் விளிவேற்றுமையாகும்.
வேள் - வேளே என்பதுதான் விளி.
மால் - ‘மாலே’ என விளி, ‘மாலே, மணிவண்ணா !’
‘மாலா’ எனும் விளி கிடையாது. 
தேன், பால், மான் போன்ற பெயர்ச்சொற்களின் விளி வேற்றுமை யாது ?

கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே !
        - இராமலிங்க அடிகளார்

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப்பெருமாளே !

அரக்கர்தலைக்குலை கொத்திய  வேளே !

குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே !

கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால்
புணர் கந்தவேளே !

சோதிமுரு காநித் தாபழய ஞானச்
     சோணகிரி வீதிக்  கந்தவேளே !

அழகான மேனி தங்கிய வேளே நமோநம !
வீர கண்டைகொள் தாளா நமோநம !
                                  - அருண்கிரிநாதர்

’அழகான மேனி தங்கிய வேளா நமோநம’
என அவர் பாடவில்லை.
தாளை உடையவன் ‘தாளன்’ , அதனால் ‘தாளா’ எனும் விளி.
வேலை உடையவன் ‘வேலன்’, அதனால் ‘வேலா’ 

ஆளை உடையவன் ஆளன்
‘வேளாளர்’ ஆளன், ஆளர் / அன் , அர் விகுதி பெறும் சொற்கள்.
அது சுருக்கம் பெற்று வேளான், வேளார் ஆகிறது

தேவ்

N. Ganesan

unread,
Nov 2, 2016, 10:41:24 AM11/2/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai
On Tuesday, November 1, 2016 at 10:44:17 PM UTC-7, Dev Raj wrote:
On Sunday, 30 October 2016 20:26:09 UTC+5:30, N. Ganesan wrote:
வேளனை வேண்டல் (புலவர் செங்கை பொதுவன்)
அன்பு மலர வேண்டும் – அதற்கு 
அடியேன் உதவ வேண்டும்
இன்பம் பொங்க வேண்டும் – வேளா 
எளியேன் உதவ வேண்டும் 1

’வேள்’ என்பதன் ஸம்போதநமாக ‘வேளா’ எனும் விளியை
வள்ளலாரோ, அருணகிரியாரோ பயன்கொண்டதாகத் தெரியவில்லை.

வேலன் - வேலா எனும் விளிவேற்றுமையாகும்.
வேள் - வேளே என்பதுதான் விளி.
மால் - ‘மாலே’ என விளி, ‘மாலே, மணிவண்ணா !’
மாலா’ எனும் விளி கிடையாது. 

இருக்கிறது, ஐயா. திருப்புகழில். இன்னும் ஒரு 10 லட்சம் பக்திப்பாடல்கள் இருக்கும். யாரும் படிக்காமல் தூங்கும் நிலை, 
பக்தகோடிகளின் பலலட்சம் செய்யுள்கள் அழியும் நிலையிலும் உள. பார்க்க வேண்டும்.

நல்ல விளக்கம். மால் மாலன் என்று ஆகும். அதன் விளி: மாலா (திருப்புகழ்).
பாபநாசம் சிவன்: கண்ணனைப் பணி மனமே! https://www.youtube.com/watch?v=RB93iJYzdEg
“மங்கள மூலனை கோகுல பாலனை மணமிகு துளசி மாலனை பாலனை”

கேள், கேளிர் (பன்மை). கேள் - கேளன் எனவும் வரும். மாலனை “மாலா” என
அருணகிரிநாதர் விளிப்பது போல, “கேளா” என்று கேளனைத் தேவாரம் விளிக்கிறது
எனவும் உரைக்கலாகும்.

மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!

இப் பதிக முதற் பாடலைப் போல, பார்த்தால் இரண்டாம் பாடல்:
வாளார் கண்ணிபங்கா! மழபாடியுள் மாணிக்கமே!
கேளா! நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே!   

J.P.Fabricius Tamil and English Dictionary
கேள் kēḷ   s. love, friendship, அன்பு; 2. relationship, உறவு; 3. a friend; 4. husband.
கேளன், (pl. கேளர், கேளீர்) a friend, relation.
கேள்வன், husband, lover, master, lord.
கன்னடத்திலும் கேள உண்டு: கேளன் kēḷaṉ, n. < id. [K. kēḷa.] Friend, companion; தோழன். (W.) (MTL)

கேள் (கேளன்), கேளிர் போல, வேள் (வேளன்), வேளிர் என்று எடுத்து
புலவர் செங்காட்டுப்பட்டி பொதுவன் ஐயா வேளனை வேளா எனப் பாடியுள்ளார்.
(ஐயாவும் அம்மாவும் மகரவிடங்கர் சிற்பங்கள் மழுவாள் நெடியோனாக
கி.மு.800 - கி.மு. 500 வாக்கிலே யமுனை-கங்கை பிரதேசத்திலிருந்து
வேளிர் வருகையுடன் தமிழகத்துக்கு வருதலை அருட்செல்வர் நா. மகாலிங்கம்
தலைமையில் ஆசியவியல் நிறுவனத்தில் ஆற்றிய சொற்பொழிவுக்கு
திருமதி பொதுவன் ஐயா அம்மாவொடு வந்திருந்தார்கள்.)

வெள்ளாளன், வில்லாளன், எண்டோளன் (எண்தோளன்), தோழன் போல, கேளன், வேளன்.

திராவிட (in the sense of Caldwell) பாஷையினின்றும் தமிழ் பிரிந்து
-அன் என ஆண்பாலுக்கும், -அள் எனப் பெண்பாலுக்கும் விகுதி ஏற்பதன் முன்னமே
வேள், கேள், மால், .... போன்றன பொருளுடையனவாக இருந்தன. அம்மரபிலே, 
-அன் விகுதி இல்லாமலே பெரும்பான்மைப் பயன்பாடு, முருகு என்பது ஒரு அணங்கு (afflicting power).
அது முருகனாகி, சுப்பிரமணியனாக வேதத்தொடு இணைந்தது பிற்காலம்.
வேள் - முருகவேள், காமவேள் - afflicting power - பால்பாகுபாடில்லை (முதற்காலங்களில்).

வேளன்/வேளான் உள்ள வேளாங்கண்ணியில் வேளன்/வேளான் முருகன் என எடுத்து
யுத்த ஸந்நத்தராக, சோழர்கள் இலங்கை, தென்கீழ் ஆசியாவை கடற்பிரயாணங்களில்
வெற்றிகொண்டபோது அருமையான சிலைகள் வடித்துள்ளனர் என்பது தெரிகிறது.
சாய்க்காடு, மற்ற ஊர்களில் உள்ள சிற்பங்கள் (பிற்காலப் பாண்டியர்? விஜயநகர்?
உ-ம்: சாய்க்காடு) காலத்திற்கு முற்பட்டதாக வேளாங்கண்ணி வில்லேந்திய வேளவன் இருக்கிறான்.

தணிகைப் புராணம்: முருகன் வில்கொண்டு போரிட்டது. 
           மருங்கமை பூதர்கள் வீரர்கண் மீதுவ டிக்கணை தானவர்கோன்
  முருங்கவு கைத்தனன் வேளவன் வில்லைமு ரித்தனன் மற்றொருவில்
  இருங்கையெ டுத்தும றைந்துறு மாயையி னிம்மென வானிடையுற்
  றொருங்கிய சிந்தையி னின்றன னுற்றம ராடின னும்பர்பிரான்.

(இ - ள்.) சூரபதுமன் பக்கத்தேநின்ற பூதர்கண்மிசையும் வீரர் மேலும் வடித்த அம்புகளை அவர் அழியுமாறு செலுத்தினன். அது கண்ட முருகவேள் அவ்வசுரனுடைய வில்லை முறித்தனன். அவ்வளவில் அவன் மற்றொருவில்லைத் தனதுபெரிய கையிலெடுத்துக்கொண்டு தனது மாயவித்தையாலே சடுதியில் வானத்தேசென்று போர்செய்தற்கு ஒரு பட்ட மனதோடு நின்றனன். தேவதேவன் அங்குஞ்சென்று அவனோடு போர்செய்தனன்.

(வி - ம்.) மருங்கு - சுற்றமுமாம். வடிக்கணை : வினைத்தொகை. முருங்க - அழிய. இம்மென : விரைவுக்குறிப்பு. உம்பர்பிரான் - முருகன்.

வேளவன் = வேள் (தேவர்பிரானாகிய சுப்பிரமணியர்). சோழப் பேரரசர்களும், அவர்கள் பெண்டுகளும் (உ-ம்: செம்பியன்மாதேவி) வேளவனை வில்லேந்துவேளாக வடித்ததில் வியப்பில்லை.
அவர்கள் இருந்திருந்தால் ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் மடிவரோ?

 போத கந்தரு கோவே நமோநம
    நீதி தங்கிய தேவா நமோநம
    பூத லந்தனை யாள்வாய் நமோநம     பணியாவும்
  பூணுகின்றபி ரானே நமோநம
    வேடர் தங்கொடி மாலா நமோநம
    போத வன்புகழ் ஸ்வாமீ நமோநம        (திருப்புகழ்)

மாலன் = மாலவன். வேளன் = வேளவன். கேளன் = கேள்வன்

நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 3, 2016, 8:00:30 AM11/3/16
to மின்தமிழ்
On Wednesday, 2 November 2016 20:11:24 UTC+5:30, N. Ganesan wrote:
நல்ல விளக்கம். மால் மாலன் என்று ஆகும். அதன் விளி: மாலா (திருப்புகழ்).
பாபநாசம் சிவன்: கண்ணனைப் பணி மனமே! https://www.youtube.com/watch?v=RB93iJYzdEg
“மங்கள மூலனை கோகுல பாலனை மணமிகு துளசி மாலனை பாலனை”

கேள், கேளிர் (பன்மை). கேள் - கேளன் எனவும் வரும். மாலனை “மாலா” என
அருணகிரிநாதர் விளிப்பது போல, “கேளா” என்று கேளனைத் தேவாரம் விளிக்கிறது
எனவும் உரைக்கலாகும்.

இவை சரியான காட்டுகள் ஆகா. 
’மணமிகு துளசி மாலனை ’ 
வேலை உடையவன் வேலன் ஆவதுபோல
மாலையை உடையவன் மாலன்;
கேண்மையை உடையவன் கேளன்.

‘வேள்’ என்பதை வேட்கை , விருப்பம் எனப் பொருள்கொண்டால்தான்
வேளன் என்பது பொருத்தமாகும் -
விருப்பத்தை உடையவன் ‘வேளன்’
அதையொட்டி ‘வேளா’ எனும் விளியும் உருப்பெறும்.
வேள் - வேள்வி, வேட்டல், வேட்கை என்பனவற்றின் வேராகலாம். 

சொல்லாராய்ச்சி சுகமாகத்தான் இருக்கிறது; விஷயத்துக்குள் 
வருவோம். 

நீங்கள் தந்த மாஹேச்வரி, ஆடவல்லான் படங்கள்
13ம் நூற்0 ஒட்டியதான காலகட்டம். பிற்காலச் சோழர் ஆட்சியின்
இறுதிப் பகுதியில் அவை உருவாகியிருக்க வேண்டும். இல்லையெனில்
சுந்தர பாண்டியன் சோழ அரசைக் கைப்பற்றியபின் உருவானவையாக
இருக்க வேண்டும். சுந்தர பாண்டியன் தில்லைக்கோயில்,
திருவரங்கம் ஆலயம் இரண்டிற்கும் பொற்குவை தந்து திருப்பணி
செய்த பாண்டிய மன்னன்.

இந்தக்கால கட்டத்தில் சோழவளநாட்டில் உருவான ஆலயங்கள் எவை 
என்பதைத்  தகவல் களஞ்சியமான தாங்கள் தெரிவித்தால் நல்லது.

தேவ்

N. Ganesan

unread,
Nov 3, 2016, 11:19:58 AM11/3/16
to மின்தமிழ், vallamai

On Thursday, November 3, 2016 at 5:00:30 AM UTC-7, Dev Raj wrote:
On Wednesday, 2 November 2016 20:11:24 UTC+5:30, N. Ganesan wrote:
நல்ல விளக்கம். மால் மாலன் என்று ஆகும். அதன் விளி: மாலா (திருப்புகழ்).
பாபநாசம் சிவன்: கண்ணனைப் பணி மனமே! https://www.youtube.com/watch?v=RB93iJYzdEg
“மங்கள மூலனை கோகுல பாலனை மணமிகு துளசி மாலனை பாலனை”

கேள், கேளிர் (பன்மை). கேள் - கேளன் எனவும் வரும். மாலனை “மாலா” என
அருணகிரிநாதர் விளிப்பது போல, “கேளா” என்று கேளனைத் தேவாரம் விளிக்கிறது
எனவும் உரைக்கலாகும்.

இவை சரியான காட்டுகள் ஆகா. 
’மணமிகு துளசி மாலனை ’ 
வேலை உடையவன் வேலன் ஆவதுபோல
மாலையை உடையவன் மாலன்;
கேண்மையை உடையவன் கேளன்.

கொடுத்திருப்பவை சரியான காட்டுகளே.

துழாஉ விரும்பும் திருமால் துளசி மாலன் எனப்படுகிறார் கீர்த்தனையில்.
மாலன் = மால் (பெருமாள்), இதனைச் சில தேவாரங்களிலும் காணலாம்.
திருப்புகழில் திருமாலை மாலா என விளிப்பதும் காட்டியுள்ளேன்.

-ஐ தமிழில் முக்கியமானது. பொருள் வேறுபாடு காட்டும்.
துழாய் மாலையன் என்றால் பொருள் மாலை அணிந்தவன் என்றாகும்.
மாலன் என்றால் மால், தேவாரப் பாடல்களிலிருந்து பார்க்கலாம்.
மாலை அணிந்தவன் மாலன் என்று எங்கும் காணோம்.

-ஐ வேறுபாடு காட்டும் கிள்- (கிளத்தல்), கிளை- (உறவினர், கேள்- கேளன், கேளவன், ..)
பார்த்தோம். அதுபோல், மாலன் = மால். மாலையன் = மாலை அணிந்தான்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 4, 2016, 1:01:35 AM11/4/16
to மின்தமிழ்
மால் மாலவனை ‘ மாலான்’ எனச் சுட்டும்
வழக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

வேள் வேளன் ஆகிறது என்கிறீர்.
மால் ‘மாலன்’ஆகிறதா ? இலக்கியப் பரப்பில்
இன்னும் ஆராய வேண்டும் -
 
ஆலாலத்தை அயின்ற நம்பனோ, 
மாலானோ, வனசத்தில் அண்ணலோ, 
பாலார் தந்தி படைத்த கள்வனோ 
மேலார் இங்கு உனை விட்ட தன்மையார் 
                                                - கந்தபுராணம்

மாலாரொடு மந்தரம் மாசுணமும் 
மேலாகிய தேவரும் வேண்டும்?' எனா, 
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய...
                            - கம்பராமாயணம்

தேவ்

Dev Raj

unread,
Nov 4, 2016, 1:30:28 AM11/4/16
to மின்தமிழ்
வேளாங்கண்ணி மாதாவை உயர்த்திப்பிடிக்கும் லேடஸ்ட் வரலாறு 

ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதத்தைக் காப்பியடித்து
வேளாங்கண்ணி மாதா துதி -

கிரித்தவத்தில் வேதம் எது ? வேதாந்தம் எது ?
பூர்வ மீமாம்ஸையும் கிரித்தவத்தில் உண்டா ?
இத்துதியில் விவிலியத்துக்கே முரணான பல
கருத்துகள்.

துதி செய்யுங்கள்; பிசாசுகளை வழிபடும் இந்துக்களின்
மெட்டு உமக்கு எதற்கு ? மெட்டுக்கும் பஞ்சமா ?

தேவ்

N. Ganesan

unread,
Nov 4, 2016, 1:35:39 AM11/4/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Thursday, November 3, 2016 at 10:01:35 PM UTC-7, Dev Raj wrote:
மால் மாலவனை ‘ மாலான்’ எனச் சுட்டும்
வழக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

மால் என்பது மாலன், மாலான், மாலவன் என்பது போல,
வேள் என்பதும் வேளன், வேளான், வேளவன் என்றாகலாம்.
இன்னொன்றும் கொடுத்துள்ளேன்: கேள் என்பது கேளன், கேளான், கேளவன்
கேளன் விளியாக தேவாரத்தில் காண்க.

தேவாரங்களில் மால் என்பது மாலன் என்று சில இடங்களில் வருவதை இவ்விழையில்
குறிப்பிட்டுள்ளேன். மால் > மாலன் என்று ஆகும். அதன் விளி: மாலா (திருப்புகழ்).
பாபநாசம் சிவன்: கண்ணனைப் பணி மனமே! https://www.youtube.com/watch?v=RB93iJYzdEg
“மங்கள மூலனை கோகுல பாலனை மணமிகு துளசி மாலனை பாலனை”
இந்தக் கிருதியில், மாலன் = மால் ஆகும். துழாய் விரும்பும் திருமால் துளசி (அணிகிற) மாலன் எனப்படுகிறார் கீர்த்தனையில்.
மாலன் = மால் (பெருமாள்),  -ஐ தமிழில் முக்கியமானது. பொருள் வேறுபாடு காட்டும்.
துழாய் மாலையன் என்றால் பொருள் மாலை அணிந்தவன் என்றாகும்.
மாலன் என்றால் மால், தேவாரப் பாடல்களிலிருந்து பார்க்கலாம்.
மாலை அணிந்தவன் மாலன் என்று எங்கும் காணோம்.

-ஐ வேறுபாடு காட்டும் கிள்- (கிளத்தல்), கிளை- (உறவினர், கேள்- கேளன், கேளவன், ..)
பார்த்தோம். அதுபோல், மாலன் = மால். மாலையன் = மாலை அணிந்தான்.
There is semantic differences between (1) kiLa- "to ask, to listen" vs. kiLay "relation, branch of a tree, kulam 'branch of a family' ",
and (2) maala- "related to Vishnu, Kaamadeva" vs. maalay "garland Cf. malar 'flower' ". Only Tamil retains amongst Dravidian,
while Malayalam, Telugu, Kannada have lost ay (later used as ai).

 போத கந்தரு கோவே நமோநம
    நீதி தங்கிய தேவா நமோநம
    பூத லந்தனை யாள்வாய் நமோநம     பணியாவும்
  பூணுகின்றபி ரானே நமோநம
    வேடர் தங்கொடி மாலா நமோநம
    போத வன்புகழ் ஸ்வாமீ நமோநம        (திருப்புகழ்)

கேள், கேளிர் (பன்மை). கேள் - கேளன் எனவும் வரும். மாலனை “மாலா” என
அருணகிரிநாதர் விளிப்பது போல, “கேளா” என்று கேளனைத் தேவாரம் விளிக்கிறது.

வேள்+அம்+கண்ணி = வேளங்கண்ணி. இது பேச்சுவழக்கில் வேளாங்கண்ணி ஆதல் இயற்கை.
புளி+அம்+மரம் =  புளியாமரம், ஆல் +அம் + காடு = ஆலாங்காடு, .... என்பன போல்
இந்தப் பெயர் ஸ்பானிஷ், போர்ச்சுகீசு பாதிரிகளை ஈர்த்திருக்கிறது. தங்கள் கன்னி மாதா
புராணங்களை பரப்ப பணம் இன்வெஸ்ட் செய்ய நல்ல இடம் என்று தேர்ந்தெடுத்து
வேளாங்கன்னி என்று ஸ்தாபிதம் செய்துள்ளனர். எல்லாம் மற்ற ரிலிஜன்ஸ் செய்யும் அதே திருப்பணி தான்.

நா. கணேசன் 

வேள் வேளன் ஆகிறது என்கிறீர்.
மால் ‘மாலன்’ஆகிறதா ? இலக்கியப் பரப்பில்
இன்னும் ஆராய வேண்டும் -
 
மாலன் ஆகிறது பல இலக்கியங்களில். உ-ம்: ’மாலனை’ என்ற புகழ்பெற்றபாடல்.
தேவார திருப்புகழ மரபுகளை கிருதியாசிரியர் பயன்படுத்துகிறார்.

தேமொழி

unread,
Nov 4, 2016, 1:40:58 AM11/4/16
to மின்தமிழ்
திரு தேவ். இப்பதிவு  எந்தவகையில் வேளாங்கண்ணி என்ற ஊரின் வரலாற்றை அறிவதில் உதவுகிறது?!?!?!?!

மட்டுறுத்தர்கள் கலந்தாலோசித்து சுபா ஊரில்  இருந்து வந்து முடிவெடுக்கும் வரை  தற்காலிகமாக தேவ் அவர்களை மட்டுறுத்தலில் 
வைக்குமாறு பரிந்துரைக்கிறேன்

..... தேமொழி 
 
தேவ்

N. Ganesan

unread,
Nov 4, 2016, 1:57:52 AM11/4/16
to மின்தமிழ், vallamai
மால் - மாலான்

சோமேசர் முதுமொழி வெண்பா
(133 பாடல். திருக்குறளின் ஒரு அதிகாரத்திற்கு ஒரு நேரிசை வெண்பா.)
கண்ணோட்டம்:
மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்
தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

------------

சிவஞான சித்தியார்
சுபக்கம் - பாயிரம்

மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும்
குறைவிலா அளவி னானுங் கூறொணா தாகி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே. 

Dev Raj

unread,
Nov 4, 2016, 5:53:43 AM11/4/16
to மின்தமிழ்
On Friday, 4 November 2016 11:10:58 UTC+5:30, தேமொழி wrote:
மட்டுறுத்தர்கள் கலந்தாலோசித்து சுபா ஊரில்  இருந்து வந்து முடிவெடுக்கும் வரை  தற்காலிகமாக தேவ் அவர்களை மட்டுறுத்தலில் 
வைக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

தோண்டிய இடங்களிலிருந்தெல்லாம் புத்தர் சிலைகள் கிடைத்த வண்ணம் உள்ளன எனப் பெரிய
வரலாற்றய்வாளர்போல்  பில்ட் அப் கொடுத்தீர்கள்; ஏதோ இரண்டு இடங்கள் மட்டும் கிடைத்தன
போலும் . மற்றவை எங்கே ? என்னை மட்டுறுத்துவதில் காட்டும் வேகத்தை வரலாற்றாய்வில்
காட்டிச் சான்றுகளை வழங்கினால் நல்லது

தேவ் 

Dev Raj

unread,
Nov 4, 2016, 6:14:09 AM11/4/16
to மின்தமிழ்
On Friday, 4 November 2016 11:27:52 UTC+5:30, N. Ganesan wrote:

மால் - மாலான்

சோமேசர் முதுமொழி வெண்பா
(133 பாடல். திருக்குறளின் ஒரு அதிகாரத்திற்கு ஒரு நேரிசை வெண்பா.)
கண்ணோட்டம்:
மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்
தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

------------

சிவஞான சித்தியார்
சுபக்கம் - பாயிரம்

மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும்
குறைவிலா அளவி னானுங் கூறொணா தாகி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே. 
 
கருத்துச்செறிவும் இனிமையும் வாய்ந்த அற்புதமான பாடல்கள்; நன்றி.
நவில்தொறும் நூல்நயம் போலும்’  திருவள்ளுவ தேவ நாயனார்
காட்டிய உவமை என்றால் சும்மாவா ?

அகழ்வில் கிடைத்த சிற்பங்கள், அருங்காட்சியகச் சிற்பங்கள்
இவற்றின் காலகட்டம் குறித்து உங்கள் கருத்து யாது ?
அது குறித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்

Dev Raj

unread,
Nov 4, 2016, 12:51:59 PM11/4/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர்  சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம்.  

புதையுண்ட புத்தர் சிலைகள் தமிழகத்தில் கிடத்திருப்பது உண்மையே
ஒரு 10/ 20 தேறலாம். ஆனால் அவற்றை சிவாலய வளாகத்திலிருந்து
அகழ்ந்தெடுத்ததாகச் சொல்ல இயலாது. 

தமிழக சிவாலயங்களின் எண்ணிக்கை என்ன ? மண்ணிலிருந்து வெளியான
புத்தர் சிலைகளின் எண்ணிக்கை என்ன ?

ஒரு சில சிலைகள் ஆலயப் பாதுகாப்பைப் பெற்றுள்ளது உண்மை,நாகேசுவரம், காஞ்சி கருக்கிலமர்ந்தாள் ஆலயம், 
முத்துமாரியம்மன் கோயில், பட்டீசுவரம் கோபிநாதப் பெருமாள் ஆலயம் போன்ற தலங்களில்.

பவுத்த - சமண ஆலயங்களைத் தகர்த்து அங்கு ஈசனார் சிலையை நிறுவ சிவ ஆகமங்கள்
அனுமதிப்பதில்லை. மாறாக, அவை பசித்து வரும் பவுத்த - சமணர்க்கு அன்னமிடச் சொல்கின்றன.
கருவறை வெளிச்சுவரில் ஜிநசீர்ஷம் [சமணர் தலை] செதுக்கப்பட்ட  சிவாலயங்கள்
உள்ளன.

[இணைப்பாக தியாகனூர் புத்தர்] 

தேவ்
a1.jpg

N. Ganesan

unread,
Nov 8, 2016, 9:27:33 AM11/8/16
to மின்தமிழ், vallamai

On Tuesday, November 8, 2016 at 3:03:45 AM UTC-8, Dev Raj wrote:
தேமொழி அவர்கள் தெரிவித்த கருத்து [மயிலையார் எழுதிய நூலின் அடிப்படையில்] :

நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், 'புது வெளிக் கோபுரம்' என்றும், 'சீனா கோயில்' என்றும், 'கறுப்புக் கோயில்' என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).

படம் 1.

நாகைப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.1846-இல் இந்த நிலையில் இருந்தது.

இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள்.

இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள். ////

கிட்டத்தட்ட இதே போக்கில்தான் நானும் எழுதியுள்ளேன். 

மேற்கத்தியக் கிரித்தவர் சிவாலயத்தை இடித்தனர் என்று குற்றம் சாட்டவில்லை; ஐயப்பாட்டைத் தெரிவித்தேன். பழைய பவுத்த வழிபாட்டுத்தலத்தை இடித்தனர்; சிலைகள் மட்டும் கிடைத்துள்ளன. வேளாங்கண்ணியிலும் இதே விதமாகத்தான் வரலாறு அமைந்திருக்கக் கூடும்.

 வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,
கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன். 16-ஆம் நூற்றாண்டிலிருந்து
கிறித்துவர்கள் தென்னிந்தியா முழுதும் மதமாற்றம் நடக்கிறது. அதற்கு முக்கிய
தலமாக விளங்கும் வேளாங்கண்ணி மாதாகோயில் -கன்னி என்ற பெயரொப்புமைக்காக
தேர்ந்தெடுத்திருக்கலாம் போர்த்துகீசியர், 

வடக்கே இருந்து துருக்கர்கள் தென்னிந்தியா
வந்தபோது பல முக்கிய கோயில்களின் சிலைகள் அருகே சில நூறு மீட்டர்களில் 
புதைக்கப்பட்டன. அவ்வப்போது வேளாங்கண்ணியிலும், அந்த சுற்றுவட்டாரத்திலும்
எடுக்கிறார்கள். அப்படி வந்ததுதான் 2010-ல் ஆரோக்கியசாமி வாங்கிய நிலத்தில்
கிடைத்த சோழர் காலச் சிலைகள்.

நா. கணேசன்

தேவ்

Dev Raj

unread,
Nov 8, 2016, 12:09:44 PM11/8/16
to மின்தமிழ்
On Tuesday, 8 November 2016 19:57:33 UTC+5:30, N. Ganesan wrote:

வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன்.

கோயிலின் புகைப்படத்தை முதல் பதிவிலேயே நான் கொடுத்துள்ளேன். கடல் தலங்கள் பலவற்றில் ஓர் ஊருக்கு ஒரு கோயில்தான்
என அமைந்திருக்கவில்லை என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளேன். மயிலையில் மட்டும் கபாலீசுவரருக்கு கடலுக்கு அருகிலும்,
சிங்கார வேலருக்கு சற்று உள்ளடங்கிய பகுதியில் தனி ஆலயமும் இருந்துள்ளன. காரணீசுவரர் ஆலயம் இன்னும் சற்றுக் கடலுக்கு அண்மையில் 

வடக்கே இருந்து துருக்கர்கள் தென்னிந்தியா வந்தபோது பல முக்கிய கோயில்களின் சிலைகள் அருகே சில நூறு மீட்டர்களில் 
புதைக்கப்பட்டன. 

கடற்கரைப் பகுதிக்குத் துருக்கர் வந்ததாகச் செய்தி இல்லை; A Forgotten Empire Vijayanagar நூலில் சான்று கிடைக்க வழியுண்டு
என்கிறார் ஒரு நண்பர்

தேவ்

Parvathy ramanathan

unread,
Nov 8, 2016, 12:17:18 PM11/8/16
to mint...@googlegroups.com

I have that book  . I can check .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Nov 8, 2016, 6:10:06 PM11/8/16
to மின்தமிழ்
On Tuesday, 8 November 2016 22:47:18 UTC+5:30, pramanathan42 wrote:

I have that book  . I can check .

மிக்க நன்றி, ஐயா

தேவ் 

Parvathy ramanathan

unread,
Nov 8, 2016, 7:05:21 PM11/8/16
to mint...@googlegroups.com
திரு தேவ் அவர்களே
எதைப்பற்றி என்று குறிப்பாக எழுதினால், தேட வசதியாக இருக்கும்.
நான் இதை ஒரு சரித்திரப்புரிதலுக்காகவே படித்துள்ளேன். ஏன் ஹம்பி பயணத்தின் போது வாங்கியது
நன்றி
பார்வதி

--
Message has been deleted

Dev Raj

unread,
Nov 8, 2016, 8:15:38 PM11/8/16
to மின்தமிழ்
மிக்க நன்றி.

தென்னிந்தியாவில் போர்த்துகீசியர் வருகை தொடர்பான செய்திகள், கடல் சார்ந்த பகுதிகளை அவர்கள் 
ஆக்கிரமிப்புச்  செய்த குறிப்புகள், கிரித்தவ மதப்பரவலுக்காக அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் 
போதுமானவை.

தேவ்

Parvathy ramanathan

unread,
Nov 8, 2016, 9:31:27 PM11/8/16
to mint...@googlegroups.com

Ok. Thanks.

--

N. Ganesan

unread,
Nov 9, 2016, 5:38:19 AM11/9/16
to மின்தமிழ், vallamai
On Tuesday, November 8, 2016 at 4:05:21 PM UTC-8, pramanathan42 wrote:
திரு தேவ் அவர்களே
எதைப்பற்றி என்று குறிப்பாக எழுதினால், தேட வசதியாக இருக்கும்.
நான் இதை ஒரு சரித்திரப்புரிதலுக்காகவே படித்துள்ளேன். ஏன் ஹம்பி பயணத்தின் போது வாங்கியது
நன்றி
பார்வதி

என்னிடமும் ராபர்ட் ஸீவெல்லின் புஸ்தகம் இருக்கிறது. வேளாங்கண்ணி பற்றி ஒன்றும் அதில் இல்லை.

முதல் பதிப்பு (1900, லண்டன்) இணையத்தில் உள்ளது. தரவிறக்கிப் படிக்கலாம்.

A Forgotten Empire(Vijayanagar) a Contribution to the History of India

Front Cover
S. Sonnenschein & Company, Limited, 1900 - Travel - 427 pages

கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டில் பிறந்தவர் (தேவிகாபுரம்). அவரது தந்தை துளுவர். தாய் தமிழச்சி. நடனமாது, தேவரடியாளாக இருந்தவர். அப்போதெல்லாம், கல்வி, பல கலைகளும் கற்பது பெண்களில் கணிகையர் மாத்திரமே. எனவே, சாளுக்ய, சோழ, விஜயநகர மன்னர்களின் சில முக்கியமான மனைவியராக தேவதாசிகள் இருந்திருக்கின்றனர். த்ராவிட கட்சிகளின் ஜனநாயக தலைவர்கள், தலைவிகள் இப்போக்கு 20-ஆம் நூற்றாண்டிலும் தொடர்வதை அவதானிக்கலாம். 

தேவ் எழுதிய வேளாங்கண்ணி கட்டுரைக்கு என் குறிப்புகள்:

 வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,
கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன். 16-ஆம் நூற்றாண்டிலிருந்து
கிறித்துவர்கள் தென்னிந்தியா முழுதும் மதமாற்றம் நடக்கிறது. அதற்கு முக்கிய
தலமாக விளங்கும் வேளாங்கண்ணி மாதாகோயில் -கன்னி என்ற பெயரொப்புமைக்காக
தேர்ந்தெடுத்திருக்கலாம் போர்த்துகீசியர், 

ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்துவ ஆவணங்கள் - தென்னிந்தியா தொடர்பானவை - இன்னும்
பல படிக்கப்படாமலே உள்ளன. சிலவற்றை தனிநாயக அடிகள் கண்டெடுத்து எழுதினார்.
இணையத்தில் முழுதுமாக வெளிவந்தால் பல உண்மைகள் வெளியாகும்.

வடக்கே இருந்து துருக்கர்கள் தென்னிந்தியா
வந்தபோது பல முக்கிய கோயில்களின் சிலைகள் அருகே சில நூறு மீட்டர்களில் 
புதைக்கப்பட்டன. அவ்வப்போது வேளாங்கண்ணியிலும், அந்த சுற்றுவட்டாரத்திலும்
எடுக்கிறார்கள். அப்படி வந்ததுதான் 2010-ல் ஆரோக்கியசாமி வாங்கிய நிலத்தில்
கிடைத்த சோழர் காலச் சிலைகள்.

நா. கணேசன்
2016-11-09 7:10 GMT+08:00 Dev Raj <rde...@gmail.com>:
On Tuesday, 8 November 2016 22:47:18 UTC+5:30, pramanathan42 wrote:

I have that book  . I can check .

மிக்க நன்றி, ஐயா

தேவ் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 9, 2016, 5:49:49 AM11/9/16
to மின்தமிழ், vallamai
On Tuesday, November 8, 2016 at 4:05:21 PM UTC-8, pramanathan42 wrote:
திரு தேவ் அவர்களே
எதைப்பற்றி என்று குறிப்பாக எழுதினால், தேட வசதியாக இருக்கும்.
நான் இதை ஒரு சரித்திரப்புரிதலுக்காகவே படித்துள்ளேன். ஏன் ஹம்பி பயணத்தின் போது வாங்கியது
நன்றி
பார்வதி

மிக நல்ல புத்தகம். தென்னிந்திய விஜயநகர, நாயக்கர் வரலாறு பற்றிய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கத் தூண்டிய நூல்.
பின்னர் 1970-களில் விஜயநகரம் பற்றி நல்ல ஆய்வுகள் நடந்தன. பல்வேறு துறைகளில். கலைவரலாறு, ஆர்க்கிடெக்சரில்
பேரா. ஜார்ஜ் மிச்சல் (லண்டன் பல்கலை). 

இரும்பு உளியால் மிக உயரமான மோனோலிதிக் சிற்பங்கள் பல தமிழகத்திலும், ஆந்திராவிலும் கிடைத்துள்ளன.
கி.மு. 600 வாக்கில் ஆனவை. மோட்டூர், உடையாநத்தம், சித்தன்னவாசல், .... அவை கங்கை-யமுனை (Doab) பித்தளை
Anthropomorphic Axe உடன் எவ்வாறு சிந்துவெளி சமயத்துடன் தமிழர் வரலற்றை பிணைக்கிறது என உரையாற்றினேன்.
ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். அதற்கு “Forgotten Religion of Tamils" எனப் தலைப்பு இட்டேன். Obviously, this title of my
presentation was inspired by Robert Sewell's book.

Special Lecture on
            Indus Valley Civilization Series
                            Invitation
The Institute of Asian Studies cordially invites you to participate in the Special Lecture on
          A Forgotten Religion from the Iron Age in Tamil Nadu:
             Crocodile cult in the Indus Valley Civilization
                      and its Later Survival
                                     by 
                          Dr. N. Ganesan
                      (Houston, Texas, USA)
on 17-01-2014, at 10:30 AM at the premises of the  Institute of Asian Studies, Chennai 600119
Dr. N. Mahalingam, Chairman, Sakthi Group of Companies has kindly consented to preside over this programme.
Institute of Asian Studies, 
Chemmancherry, Chennai- 600119

N. Ganesan

2016-11-09 7:10 GMT+08:00 Dev Raj <rde...@gmail.com>:
On Tuesday, 8 November 2016 22:47:18 UTC+5:30, pramanathan42 wrote:

I have that book  . I can check .

மிக்க நன்றி, ஐயா

தேவ் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Nov 9, 2016, 7:54:36 AM11/9/16
to மின்தமிழ்

On Wednesday, 9 November 2016 16:08:19 UTC+5:30, N. Ganesan wrote:
 வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,
கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன்.
 
ஐயத்திற்கிடமில்லாத வகையில் ரஜதகிரீச்வரர் ஆலயத்தின் படத்தையும், அம்மையின் ’வேளாங்கண்ணி’ எனும் பெயரையும்  ஏற்கெனவே
பதிவிட்டுள்ளேன் -

அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் சிவன் கோயில், வேளாங்கண்ணி

நீங்கள் சொன்ன வேளன்கண்ணி, வில்லேந்திய வேலன் படிமம் இரண்டும் சேர்ந்து சிந்தனை வேறு
திறக்கில் சென்றது

தேவ்

N. Ganesan

unread,
Nov 9, 2016, 10:11:26 AM11/9/16
to மின்தமிழ்
யார் எழுதிய புத்தகம்? இந்த ஆண்டில் அச்சா? 
சூலக்கல் அம்மன் என்ற பெயருண்டு. அப்படியானால், அம்மன் பெயர் சூலக்கல் அல்ல.

வெ/வே எனத் தொடங்கும் பதிகளில் வேற்கண்ணி, வேல்நெடுங்கண்ணி எனப் பெயர் அமைப்பது போலவே,
வேளாங்கண்ணியிலும் வேல்நெடுங்கண்ணி என்பது அம்பாள் நாமம். அதனை இணையத் தளங்களில்
காணலாம். வேளாங்கண்ணி (= வேள் + அம் + கண்ணி) வேறு, வேல்நெடும்கண்ணி வேறு.
பல தலங்களில் வேல்நெடும்கண்ணி (ஶக்த்யாயதாக்ஷி) உண்டு. ஶக்த்யாயதாக்ஷி ஸமேத ரஜதகிரீஶுவரர்.

இக் கோயில் சிலைகள் மணலில் புதையுண்டவை வருகின்றன. வேளாங்கண்ணி வேல்நெடுங்கண்ணி
முருகனுக்கு வேல் அளித்ததாக விழா சோழர் காலத்தில் தொடங்கியிருக்கலாம். ஏனெனில் கிடைத்துள்ள
வில்லேந்திய வேலவன் சிலைகளில் பழமையானது வேளாங்கண்ணி ஊரின்கண் அமைந்த
ஶக்த்யாயதாக்ஷி ஸமேத ரஜதகிரீஶுவரர் கோயிலினதே.

பழைய மடல் ஒன்று:

On Sunday, 30 October 2016 01:48:10 UTC+5:30, N. Ganesan wrote:
எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.
எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.

> இடம் எனும் பொருள் இல்லை; சங்கதப் பெயர் ‘அஷ்டநேத்ரபுரி’, என்கண் கொண்ட நான்முகனின் பெயர்.
‘திருவிண்சாருடையார்’ சுவாமி பெயர்; கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர். பொருள் தெரியவில்லை. 
அருணகிரிநாதர் காலத்துக்குப்பின் முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றிருக்கலாம்
> தேவ்

வேளாங்கண்ணி பகுதியில் (10 - 15 மைல் சுற்றளவில்) புதையுண்ட பல விக்கிரகங்கள் ஆண்டுதோறும் தோண்டி எடுக்கப்படுகின்றன.
அவை புதையுண்ட காலம் போர்ச்சுகீசியர் தம் கதைகளைக் கொண்டுவரும் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டது.

வேளாங்கண்ணி என்னும் ஊர்ப் பெயர் வெள்ளிமலையப்பர் - வேல்நெடுங்கண்ணி என்று ஸ்வாமி-அம்பாள் பெயர்களாகப்
பண்டைச் சைவர்களால் அளிக்கப்பெறக் காரணம் ஆயிற்று என்பதும் பார்த்தோம். எண்கண் என்பதனைப் பிழையாகப்
புரிந்துகொண்டு அஷ்டநேத்ரபுரி என வடமொழி ஆக்கியுள்ளனர். தனியிழையில் எண்கண்: கண் = இடம் என்பது பற்றி விளக்குகிறேன்.
 இதுபோல, வேளங்கண்ணி/வேளாங்கண்ணி (பேச்சுவழக்கில்
வெள்ளாங்கண்ணி எனவும் ஆகும். வேளான் - வெள்ளான். வெள்ளான்பிள்ளை, வெள்ளாஞ்செட்டி, ...) இரஜதகிரீஸ்வரம் என மொழியாக்கியுளர்.
இரஜதகிரி = வெள்ளிமலை = கைலாசம். வெள்ளிமலையப்பர் = கைலாசநாதர். வெள்ளியங்கிரிமலை கோவை அருகே உயரமானது,
அது கைலாயமலையின் பெயர் உயரத்தால் பெயர்பெற்றது. இங்கே கடற்கரை. மலை எதுவும் இல்லை. வேளங்கண்ணி என்னும் பெயரால்
வெள்ளியங்கிரிநாதர் என்ற பெயர் ஸ்வாமிக்கு. வேல்நெடுங்கண்ணாள் - அம்மை பெயர்.

VELANGKANNI-SIVAN/வேளாங்கண்ணி-சிவன்/வெள்ளியங்கிரிநாதர்

செல்லும் வழி: திருவாரூர்- நாகை.-
தகவல்கள்:

ஊர்:வேளாங்கண்ணி
இறைவன்:வெள்ளியங்கிரிநாதர்,ராஜதகிரீசுவரர் 
இறைவி:வேல்நெடுங்கண்ணி

http://www.naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1869-velankannisivan

சோழர் கலைப்படிமங்கள் உன்னத நிலையை அடையக் காரணமானவள்

செம்பியன்மாதேவி. அவள் பேராலேயே வேளாங்கண்ணி அருகே ஊர் இருப்பதுங் காண்க.

சோழமாதேவி ஆகிய இவ்வன்னையால் வேளாங்கண்ணி நடராஜர், மாகேசுவரி வடிக்கப்பட்டுள்ளனர் எனலாம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 9, 2016, 10:35:35 AM11/9/16
to மின்தமிழ், vallamai

On Wednesday, November 9, 2016 at 4:54:36 AM UTC-8, Dev Raj wrote:

On Wednesday, 9 November 2016 16:08:19 UTC+5:30, N. Ganesan wrote:
 வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,
கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன்.
 
ஐயத்திற்கிடமில்லாத வகையில் ரஜதகிரீச்வரர் ஆலயத்தின் படத்தையும், அம்மையின் ’வேளாங்கண்ணி’ எனும் பெயரையும்  ஏற்கெனவே
பதிவிட்டுள்ளேன் -

வேளாங்கண்ணி ஊரின்கண் உள்ள அம்பிகை பெயர்: வேல்நெடுங்கண்ணி என்பது.
அந்த ஊர்க்காரர்கள் எழுதியுள்ளனர்.

சூலக்கல் அம்மன், பேரூர் அம்மன், வேளாங்கண்ணி அம்மன் என்பது. 
பேரூர் அம்மன் பெயர் = பச்சைநாயகி. அதுபோல், வேளாங்கண்ணி அம்மன் பெயர் = வேல்நெடுங்கண்ணி.

வேளாங்கண்ணி - பெயர்க்காரணம் வேனெடுங்கண்ணி என்பதின்றும் வேறானது. விளக்கியுள்ளேன்.

நாகையில் வணிகம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் -  

கடலில் பெரும் புயல் மழையில் சிக்கி,

கரை காணாது தவித்தபோது  -

அவர்களுக்குக் காட்சி கொடுத்து

காப்பாற்றிக் கரை சேர்த்தவள் -

அன்னை வேல்நெடுங்கண்ணியே!.. 

இவளைத்தான் மொழியும் 

மொழியின் வளமையும் அறியாத மாற்றார் 

வேளாங்கண்ணி என்றனர்.

இன்னும் பலர் வேளாங்கன்னி என கற்பிதம் செய்து கொண்டு 

அதற்கொரு புனைவையும் கூறுகின்றனர்.

உலகின் எந்த ஒரு மூலையிலும் தாய்மை என்னும் 

தனித்துவத்திற்கு மாற்றமே இல்லை.

உலகில் அற்புதங்கள் நிகழ்த்துதற்காகதயாபரன்

மகவாகத் தோன்றுங்கால் அவனுக்கும் 

ஒரு தாய் மடி தேவையாகின்றது.

அந்தவகையில் தாய்மை சிறப்பிக்கப்பட்ட நாள் இன்று.

எளியோர் ஏற்றம் பெற இவ்வுலகிற்கு வந்து

எளியோர்க்கும் எளியோனாக வாழ்ந்து காட்டிய

இயேசு கிறிஸ்து அவதரித்த நன்னாள்..

இறைமகனுக்குப் பல்லாண்டு!..

ஈன்றெடுத்த மாதரசி மரியாளுக்குப் பல்லாண்டு!..

தோள் கொடுத்துத் துணை நின்ற சூசையப்பனுக்கும் பல்லாண்டு!.

எந்த ரூபத்தில் எனைத் தியானித்தாலும் அந்த ரூபத்தில் 

அவர்களுக்கு இன்னருள் பொழிவேன்!.. 

என்பது கீதாச்சாரியனின் வாக்கு

யாதுமாகி நின்றாய் காளீ!..

என்கின்றார் மகாகவி பாரதியார்.

நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

சேலு மாலுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்

வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே!..(2/8)

N. Ganesan

unread,
Nov 11, 2016, 12:55:45 PM11/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
2010-ல் இருந்து நான் சொல்வது வேளாங்கண்ணி = வேள் + அம் + கண்ணி.

வேளன், வேளான், வேளவன் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேள் என்பதே. விள்/வெள் என்பது வாச் எனப்படும் கொற்றவை பெயர் என்பர். அவள் போர்த்தெய்வம்.
வேள் என நீண்டது. வேட்டை, வேள்வி, வேணவா எல்லாம் வேள்- லிருந்தே.

கேள்- தருவது: கேளன் (தேவாரம்), கேளான், கேளவன்
மால்-  : மாலன் (திருப்புகழ்), மாலான், மாலவன்
வேள்- : வேளன், வேளான், வேளவன்
.... எனத் தமிழில் விரியும்.

வேள்+அம்+கண்ணி = வேளங்கண்ணி. இது பேச்சுவழக்கில் வேளாங்கண்ணி ஆதல் இயற்கை.
புளி+அம்+மரம் =  புளியாமரம், ஆல் +அம் + காடு = ஆலாங்காடு, .... என்பன போல்.

உங்கள் கட்டுரைக்கு என் கருத்துகள் இரண்டு:
(1) வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,
கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன். 16-ஆம் நூற்றாண்டிலிருந்து
கிறித்துவர்கள் தென்னிந்தியா முழுதும் மதமாற்றம் நடக்கிறது. அதற்கு முக்கிய
தலமாக விளங்கும் வேளாங்கண்ணி மாதாகோயில் -கன்னி என்ற பெயரொப்புமைக்காக
தேர்ந்தெடுத்திருக்கலாம் போர்த்துகீசியர், 

(2) வடக்கே இருந்து துருக்கர்கள் தென்னிந்தியா

Dev Raj

unread,
Nov 14, 2016, 12:56:11 PM11/14/16
to மின்தமிழ்
போர்த்துக்கீசியரும் , ஈழ ஆலய அழிப்பு வரலாறும் -

கி.பி. 1505ல் இலங்கையுள் நுழைந்த போர்த்துக்கீசியர் ஆட்சியைப் பிடித்ததும் செய்த முதல்வேலை ஹிந்துக் கோயில்களை அழித்து நிர்மூலமாக்கியதுதான். கோயில்களிலிருந்த பெருஞ் செல்வத்தைக் கொள்ளையடித்தனர். இலங்கை முழுதுமிருந்த ஆயிரக்கணக்கான கோயில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. 

அவர்களால் நிர்மூலமாக்கப்பட்ட கோயில்களுள், திருக்கேதீச்சரம், திருக்கோணேசுவரம், நகுலேசுவரம், முன்னேசுவரம், ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப் பெறும் காரைநகர் சிவன்கோயில், நயினை ஸ்ரீ நாகபூஷணி கோயில், நல்லூர் கைலாயநாதப் பிள்ளையார் கோயில், பரராச சேகரப் பிள்ளையார் கோயில், கதிர்காமம் முருகன் கோயில், சீதவாக்கை வைரவ ஆண்டிகோயில், முனீஸ்வர சிவாலயம், தெய்வந்துறை விஷ்ணு ஆலயம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், துன்னாலை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோயில் ஆகியன முக்கியமானவை. 

Reply all
Reply to author
Forward
0 new messages