தமிழில் எழுத்துரு உருவாக்க வேண்டும்

89 views
Skip to first unread message

பாரதி

unread,
Apr 8, 2010, 8:44:18 AM4/8/10
to மின்தமிழ்
நண்பர்களே,
தமிழில் எழுத்துரு உருவாக்கக் கூடியவர்களின் தொடர்பு வேண்டும். அறிவியலை
தமிழில் எழுதக்கூடிய வகையில் சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட வேண்டும்.

எழுத்துரு உருவாக்க எவ்வளவு செலவாகும் எத்தனை காலமாகும் என்பதையும் அறிய
விரும்புகிறேன்.

ஞானபாரதி

விஜயராகவன்

unread,
Apr 8, 2010, 8:58:55 AM4/8/10
to மின்தமிழ்
இதைப் பார்த்தால் எழுத்துரு புதுசாக செய்யாமல் விஞ்ஞானம் வளராது போன்ற
தோரணையில் இருக்கு.

இப்போ இருக்கும் எழுத்துருக்களே போதும் - விஞ்ஞானத் தமிழ் வளர.

தமிழில் விஞ்ஞானம் வளராமல் இருப்பது எழுத்துருக்களால் அல்ல,
சோம்பேறித்தனத்தாலும், தனித்தமிழ் பித்தாலும்.

விஜயராகவன்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 8, 2010, 10:27:35 AM4/8/10
to mint...@googlegroups.com

விஜயராகவன் சொல்லியிருப்பது மெத்த சரியாகத்தான் படுகிறது.

ஆனாலும் டெல்லி ஐஐடியி்ல் ஒரு மாணவர் புதிதாக தமிழ் எழுத்துரு மற்றும் தமிழுக்கான ஒரு மென்பொருள் (இதை எப்படி சொல்வது - கண்டுபிடிப்பா?  உருவாக்கமா?) ஏற்பாடு செய்து வருவதாகவும் என்னை சந்திக்க வேண்டும் என்றும் ஒரு நண்பரிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.  நாளை அல்லது மறுநாள் அவர் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.  அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை இந்தக் குழுவுக்கு அறிவிக்க அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய நல்ல நண்பர்கள் யாரையாவது இடையில் அவர் சந்தித்து என்னைப் பற்றி  அவர்களிடம் இருந்து ஏதாவது நல்லதாகக் கேள்விப்பட்டால் அந்த இளைஞர் என்னை சந்திக்காமலேயே சென்னை சென்று விடும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. 

எது எப்படியோ, ஞானபாரதியின் விருப்பப்படி இன்னும் ஒரு எழுத்துரு டெல்லியில் ஒரு தமிழ் இளைஞனால் உருவாக்கப்பட்டு விட்டது என்கிற மகிழ்ச்சியான செய்தியை இப்போதைக்கு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2010/4/8 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
http://www.vadakkuvaasal.com/

thiruthiru

unread,
Apr 8, 2010, 11:28:52 AM4/8/10
to மின்தமிழ்
இவர் பென்னேஸ்வரனா? புன்ன(கை)கேஸ்வரனா?

On Apr 8, 7:27 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:


> விஜயராகவன் சொல்லியிருப்பது மெத்த சரியாகத்தான் படுகிறது.
>
> ஆனாலும் டெல்லி ஐஐடியி்ல் ஒரு மாணவர் புதிதாக தமிழ் எழுத்துரு மற்றும்
> தமிழுக்கான ஒரு மென்பொருள் (இதை எப்படி சொல்வது - கண்டுபிடிப்பா?  உருவாக்கமா?)
> ஏற்பாடு செய்து வருவதாகவும் என்னை சந்திக்க வேண்டும் என்றும் ஒரு நண்பரிடம்
> சொல்லி அனுப்பி இருக்கிறார்.  நாளை அல்லது மறுநாள் அவர் என்னை சந்திக்க
> வாய்ப்பு இருக்கிறது.  அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை இந்தக் குழுவுக்கு
> அறிவிக்க அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.
>
> என்னுடைய நல்ல நண்பர்கள் யாரையாவது இடையில் அவர் சந்தித்து என்னைப் பற்றி
> அவர்களிடம் இருந்து ஏதாவது நல்லதாகக் கேள்விப்பட்டால் அந்த இளைஞர் என்னை
> சந்திக்காமலேயே சென்னை சென்று விடும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
>
> எது எப்படியோ, ஞானபாரதியின் விருப்பப்படி இன்னும் ஒரு எழுத்துரு டெல்லியில் ஒரு
> தமிழ் இளைஞனால் உருவாக்கப்பட்டு விட்டது என்கிற மகிழ்ச்சியான செய்தியை
> இப்போதைக்கு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
>

> 2010/4/8 விஜயராகவன் <viji...@gmail.com>

பாரதி

unread,
Apr 8, 2010, 1:31:39 PM4/8/10
to மின்தமிழ்
விஜயராகவன் கூறுவதை மறுக்கவில்லை ஆனால் தேவை வந்துள்ளது.

"இப்போ இருக்கும் எழுத்துருக்களே போதும்" - அறிவியல் தமிழ் வளர - ஆனால்
"விஞ்ஞானத் தமிழ் வளர" போதாது.

புரியவில்லையா?

தமிழ் சார்ந்த தமிழராக அறிவியல் வளர்த்தாலும் உட்கொணர்வதை முழுமையாக
தமிழ்ப்படுத்தினாலும் . "இப்போ இருக்கும் எழுத்துருக்களே போதும்"

ஆனால் விஞ்ஞானத் தமிழ் வளர, சயிண்டிபிக் தமிழ் வளர , வளர்ந்தவற்றை
தெளிவுற தமிழ் வழியே கற்றுணர, தமிழில் சில புதிய எழுத்துருக்கள் அவசியம்
தேவை.

விஜயகுமாரை யாரும் விசயகுமார் என்று கூப்பிடுவதில்லையே விஜயராகவன்.
சந்தும் ஜந்தும் வேறானவை என்று பிரிப்பதற்கு அன்று சில எழுத்துருக்களை
ஏற்றுக்கொண்டோம். அதுபோல தலைவனையும் தேர்ச்சியையும் ஆங்கிலத்திலிருந்து
தமிழில் பாஸ் எழுதினாலும் இன்று நாம் ஒரேமாதிரி உச்சரிப்பதில்லை. நம்
இலக்கண முறைப்படி தேர்ச்சிதான் ஒத்துபோகும் தலைவன் ஒத்துவராது.

தேவையை இன்னும் உணராமல் இருப்பது வீழ்ச்சியையே கொடுக்கும்.

ஆங்கிலத்தில் தமிழை தெளிவுற இன்று எழுத முடியும்போது ஆங்கிலத்தை தமிழால்
தெளிவுற எழுதமுடியும் என்ற நிலை வேண்டாமா?

சரி, எனக்கு உதவி கிடைக்குமா? யாரையேனும் அறிந்திருந்தால்
தெரிவிக்கவும்.

ஞானபாரதி

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 8, 2010, 2:09:30 PM4/8/10
to mint...@googlegroups.com

ஞானபாரதி

உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. 

கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/4/8 பாரதி <dgbha...@gmail.com>

ஞானபாரதி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
http://www.vadakkuvaasal.com/

Jean-Luc Chevillard

unread,
Apr 8, 2010, 2:28:48 PM4/8/10
to mint...@googlegroups.com
அன்பின் ஞானபாரதி,

are you the person who made the following suggestions during the Cologne
INFITT 2009 conference?

SEE:
<http://www.infitt.org/ti2009/papers/gnana_bharati_final.pdf>

[this PDF file is part of the COLOGNE twin set:
<http://www.infitt.org/ti2009/?paper=../ti2009/papers&year=2009>
and
<http://www.infitt.org/ti2009/?paper=../ti2009/papers/presentations>]

[Pictures and short movies taken during the Cologne conference are
available at:
<http://www.infitt.org/ti2009/?page=gallery>]

[iT IS QUITE POSSIBLE THAT you may be present on one of those pictures,
taken by me:
<http://picasaweb.google.de/ksubashini/Jean#>]

If the answer is "YES"
(i.e., if you did write the presentation quoted above),
may I suggest that you should lobby
for inclusion of the Sanskrit Grantha encoding
inside the future versions of the Unicode?

Many of the signs which you seem to need for implementing your suggestions
already exist inside the traditional Grantha script
and blend harmoniously with the Tamil script.

Please kindkly send your feedback on my comments
(I have no problem reading Tamil
but am always afraid to use the wrong word
if I try to write in Tamil myself)
[there are so many திரிசொல் in Tamil :-(
])

அன்புடன்

-- ழான்-லூய்க் செவ்வியார் (Paris, France)

{some people prefer to write இழான்
and some people prefer to write ஃழான்
but I prefer to stick to the given name [= "ழான்"] given to me by my
"famille d'adoption" :-)
in Pondichéry, in the eighties.}

Jean-Luc Chevillard

unread,
Apr 8, 2010, 3:12:11 PM4/8/10
to mint...@googlegroups.com
Dear all,

as a post-scriptum to my own message,
let me provide you with a sample taken from the book நீலகேசி.

I have collected samples of grantha script
on the first 3 pages of Nīlakēci-cum-commentary (1936/1984[reprint])
and I see two different strategies used

STRATEGY ONE:
USE GRANTHA ONLY WHEN NECESSARY

STRATEGY TWO
USE GRANTHA ALL THE WAY

If you have a look at the 3 pages in the PDF attached
you can see the following
{devanagari between curly brackets} is used to represent {grantha}

******************************
STRATEGY ONE is used on page 2 for:

#aviṉā{bhā}viyākiya
--> அவினா{भा}வியாகிய

#{bhā}vaṉai {bhā}vittu
--> {भा}வனை {भा}வித்து

#māmsa{bha}kṣaṇattālum
--> மாம்ஸ{भा}க்ஷணத்தாலும்

Only the grantha letter "bha" is used.

That AMOUNTS TO ADDING a new glyph "bha" in the unicode position U0BAD
[inside the so-called "Tamil Unicode" range]
and using it along the ordinary Tamil glyphs
************************************

*************************************
STRATEGY TWO is used on page 1 and page 3
in the items:

p.1
#{bhavya}
-->{भव्य}


p.3

#{na sa ka ści tpra thi vyā de ra ṃ śo ya tra na ja nta ra ḥ}
/{sa ṃ sve da jā dyā jā ya nte sa rva ṃ bī jā tma ka nta ta ḥ}

--> {नसकश्चि त्प्रथिव्यादॆ रंशॊयत्र नजन्तरः}
/{संस्वॆदजा द्याजायन्तॆ सर्वंबीजा त्मकन्ततः}

In Malayalam script,
this śloka would appear as:

[[നസകശ്ചി ത്പ്രഥിവ്യാദെ രംശൊയത്ര നജന്തരഃ
/സംസ്വെദജാ ദ്യാജായന്തെ സര്വംബീജാ ത്മകന്തതഃ]]

*********************************************

(I have used Vinodh's web site for the conversions:
<http://tamilcc.org/thoorihai/thoorihai.php>

*************************
We also have some MIXED STRATEGY in
p.3
#{ghaṭakri}yai
-->{घटक्रि}யை
*************************************

Best wishes

-- Jean-Luc Chevillard (Paris)

NK_p001-003.pdf

Jean-Luc Chevillard

unread,
Apr 8, 2010, 10:42:01 PM4/8/10
to mint...@googlegroups.com
Dear all,

upon re-reading my comment on ஞானபாரதி's message
I realize it might be *misinterpreted* as a support for a script reform.

I would not like my comments to be misinterpreted.

I should make it clear:
-- that I don't think a foreigner like me should have an opinion on such
questions
-- that I find the Tamil script very beautiful as it is.

I simply wanted to point out that the suggestions contained in the
presentation given in Cologne,
<http://www.infitt.org/ti2009/papers/gnana_bharati_final.pdf>
have some resemblance with typographical strategies which have been used
in the past in other circumstances (like in the 1936 book quoted).

Best wishes

-- jlc

பாரதி

unread,
Apr 9, 2010, 8:23:25 AM4/9/10
to மின்தமிழ்
முனைவர் ழான்,
அந்த நபர் நான்தான்.
கிரந்தம் என்று தாங்கள் குறிப்பிடுவது தமிழில் சில தேவைகளை நிறைவு செய்ய
தமிழர்களால் உருவாக்கப்பட்ட சில எழுத்துக்கள். இன்று பெரும்பாலும் 5
எழுத்துக்களே பயன்படுகின்றன. என்றாலும் க்ஷ மற்றும் தாங்கள் இணைத்துள்ள
"நீலகேசியிலுள்ள" பலவும் கிரந்தம் (க்ராந்தா) என்ற பெயருடன் தமிழர்களால்
உருவாக்க/வைக்கப்பட்டிருக்காது. யாரோ தமிழை தாழ்த்த நினைக்கும்
எண்ணத்தில் உருவாக்கிய பெயராகத்தான் இருக்க முடியும்.

இங்குள்ள இந்து நாளிதழும் மறக்காமல் "தமிழ்-ப்ராஹி" எழுத்துக்களுடன்
கல்வெட்டுக்கள், தாழிகள் கண்டெடுக்கப்பட்டன என்று செய்திகள்
வெளியிடுவதுண்டு.

இவ்விரண்டிலுமே தூய தமிழ்ச் சொற்களாக இருந்தாலும் அவற்றை தமிழ்
எழுத்துக்கள் என்று இந்த "நாகரீகமானவர்கள்" கூறுவதில்லை.

விக்கியில் பார்த்தீர்கள் என்றால் தமிழ் எழுத்துக்களை அதே நிலையில் எழுதி
அவற்றை கிரந்தம் என்றும் அதிலிருந்து தமிழ் எழுத்துக்கள்
உருவாயினவென்றும் குறிப்பிட்டு இருப்பார்கள்.

இந்த வார்த்தைகள் தமிழையும் தமிழரையும் மட்டுப்படுத்தவே ஒழிய
வேறொன்றுமில்லை.

நாளை ஃப என்பதற்கு கூட ஒரு"________-தமிழ் பெயரிடுவார்கள்.

எதிர்ப்பில்லை என்பதால் சொல்வதெல்லாம் உண்மை என்ற சீரழிவு தொடர்கிறது.

இன்னுமொரு எடுத்துக்காட்டு உருமாறிய சிவன்.
இத்தனை ஆண்டுகளாக மீசையுடன் தமிழரின் உருவோடிருந்த சிவன், பத்து
பதினைந்து ஆண்டுகளாக மீசை மழித்து முகம் மாற்றி உயரம் கூட்டி இன்னும்
உருவத்தையே மாற்றி "தமிழ் வெல்க" என்று தலைப்பில் எழுதியிருக்கும்
தினத்தந்தியில் கூட வளம் வருகிறார்.

நிச்சயமாக இந்த மாற்றம் இந்த சமூகத்திற்கு எதிரானவர்களால்
உருவாக்கப்பட்டதுதானே. கிரந்தம், ப்ராஹி என்பனவற்றை தவிர்க்கலாமே.

அடுத்ததாக,
தங்களின் முதல் உத்தியே தகுந்தது என்பது என் எண்ணம்.
தாங்கள் நிச்சயம் தங்கள் கருத்துக்களை கூறலாம். தங்கள் தமிழ் பற்றை
நன்கறிவேன்.

அன்புடன்
ஞானபாரதி

N. Ganesan

unread,
Apr 9, 2010, 8:41:00 AM4/9/10
to மின்தமிழ்

அன்பின் ஞானபாரதி,

இச் சிக்கலுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும். தமிழ் மொழியியல் அறிஞர்கள்
ஈழநாட்டில் இதைப் பற்றி 40 ஆண்டுகளுக்கு முன்னம் தீர்வு
சொல்லியுள்ளார்கள்.
கணினியும் இணையமும் முன்னேறிவரும் நாளில் செய்யமுடியும்.

10 ஆண்டுகளுக்கு முன்னம் எளிய குறியீட்டுகளை செ. ரா. செல்வகுமார்
சொல்லியுள்ளார்கள். அது பாலா சாமிநாதனின் மதுரை நிரல் மூலம்
முதலில் தமிழைக் கண்டது போல. இன்று ஐபிஏ குறியீடுகள்
பொருத்தமுடியும். பணிசெய்தால் நடக்கும். ரெ. கா. கட்டுரை கேட்டுள்ளார்,
தரவேண்டும்.

இந்தப் பொருண்மை குறித்த மொழியியலார் கட்டுரைகள் உங்களுக்கு
உதவலாம்.

Kandiah, Thiru and S. Sivasegaram. "The Tamil Script: Characteristics
and Problems, and Proposal For Its Reform." Indian Linguistics. 45.1-4
(1984): 55-101

Sivasegaram, S. 1977, "Diacritical devices in the Tamil script", in
Sri Lanka Journal of the Humanities, vol. 3, no. 1-2, 129-133

Sivasegaram, S. 1977, "On developing a cursive script for Tamil", in
International Journal of Dravidian Linguistics, vol. 6, no. 2, 214-222

அன்புடன்,
நா. கணேசன்

Vinodh Rajan

unread,
Apr 9, 2010, 12:30:36 PM4/9/10
to mintamil
Hi Jean,

A Tamil-Grantha convertor is in process. Will release it soon .. ( I am still validating the East Asian Script conversion..... which I had included in updated version in my Localhost)

Find the sample of Vishnu-Sahasranama in Tamil-Grantha hybrid attached.

With Regards,

Vinodh Rajan 







Vishnu Sahasranama.pdf

வினோத் ராஜன்

unread,
Apr 9, 2010, 12:44:18 PM4/9/10
to மின்தமிழ்
//#{na sa ka ści tpra thi vyā de ra ṃ śo ya tra na ja nta ra ḥ}

/{sa ṃ sve da jā dyā jā ya nte sa rva ṃ bī jā tma ka nta ta ḥ}
--> {नसकश्चि त्प्रथिव्यादॆ रंशॊयत्र नजन्तरः}
/{संस्वॆदजा द्याजायन्तॆ सर्वंबीजा त्मकन्ततः}
In Malayalam script,
this śloka would appear as:
[[നസകശ്ചി ത്പ്രഥിവ്യാദെ രംശൊയത്ര നജന്തരഃ
/സംസ്വെദജാ ദ്യാജായന്തെ സര്വംബീജാ ത്മകന്തതഃ]] //

I think u have chose ISO instead of IAST :-)

e/o have become short vowels in Devanagari/Malayalam

V

>  Vishnu Sahasranama.pdf
> 128KViewDownload

devoo

unread,
Apr 9, 2010, 2:04:02 PM4/9/10
to மின்தமிழ்
க்ரந்த லிபியின் வழக்கமான ஸம்யுக்தாக்ஷரங்கள் இதில் இல்லையே
வினோத்ஜீ ? இன்னும் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதா ?

தேவ்

>  Vishnu Sahasranama.pdf
> 128KViewDownload

வினோத் ராஜன்

unread,
Apr 9, 2010, 2:06:44 PM4/9/10
to மின்தமிழ்
Nah.

It is meant to be a hybrid of Grantha & Tamil scripts.

Grantha consonants behave like Tamil consonants by taking Tamil Vowel
signs.

V

விஜயராகவன்

unread,
Apr 9, 2010, 2:50:08 PM4/9/10
to மின்தமிழ்
ஞானபாரதி

எழுத்துரு உருவாக்க நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர் வினோத். அவர்தான்
இதில் புலி.


விஜயராகவன்


On 8 Apr, 13:44, பாரதி <dgbhara...@gmail.com> wrote:

Geetha Sambasivam

unread,
Apr 9, 2010, 10:16:53 PM4/9/10
to mint...@googlegroups.com
அருமை, நன்றி விநோத்.

2010/4/9 Vinodh Rajan <vinodh...@gmail.com>

பாரதி

unread,
Apr 10, 2010, 12:57:01 PM4/10/10
to மின்தமிழ்
முனைவர் கணேசன்,
ஆம். தங்களைப் போல தமிழறிந்த அறிவியலார்கள் ஒன்றிணைந்து இச்சிக்கலுக்கு
தீர்வு காணுதல் வேண்டும்.
ஈழத்தில் இவ்வாறு செயல்படுத்தி இருந்தால் அதை மீண்டும் திறனாய்வுக்கு
கொண்டுவாருங்கள்.

நான் முனைவர் செல்வகுமாரின் கட்டுரையை படித்திருக்கிறேன். ஆனால் ஐபிஏ
குறியீடுகளை தமிழுக்கு பொறுத்த முடியுமா?
ஏனெனில்
- ஐரோப்பிய மொழிகளில் உயிரும் மெய்யும் தனித்தனியாக அமர்ந்து உயிர்மெய்யை
கொடுக்கிறது. தமிழ் (இந்திய) மொழிகள் போல் உயிர்மெய் கிடையாது.
- ஐரோப்பிய மொழிகளில் (வாக்கியத்தின்) முதல் எழுத்தில் ஐபிஏ குறியீடு
இட்டிருப்பதை நான் பார்த்ததில்லை.
- இக்குறியீட்டை தமிழ் எழுத்துக்களில் எங்கு இடுவது. க், க,
கா,கி,கீ,கு,கூ என்பனவற்றில் உள்ளதுபோல் கெ, கே, கை, கொ, கோ வில்
இடமுடியுமா?

தயைகூர்ந்து விளக்கவும்.

பாரதி

பாரதி

unread,
Apr 10, 2010, 1:02:03 PM4/10/10
to மின்தமிழ்
நன்றி விஜயராகவன்.

வினோத், தங்களை தொடர்புகொள்ளலாமா? தங்கள் கைபேசி எண்ணைத் தரவும்.

பாரதி
(9940350290)

வினோத் ராஜன்

unread,
Apr 10, 2010, 1:19:14 PM4/10/10
to மின்தமிழ்
தொடர்பு கொள்ளலாமே :-)

செல் ஃபோன் டச் ஸ்க்ரீன் பழுதடைந்து விட்டதால் பழுது பார்க்க
கொடுத்துள்ளேன்.

அது திரும்ப வந்துவுடன் எண்ணை கொடுக்கிறேன்.

---

இந்த குறிகள், துணை எண்கள் அனைத்தையும் விட சிறந்த வழி.. தமிழல்லாத
ஒலிகளை குறிப்பிட நம் முன்னோர்கள் பயன்படுத்திய வரிவடிவங்களை கையாள்வதே
மிகச்சிறந்த வழியாக இருக்கும்

V

N. Ganesan

unread,
Apr 10, 2010, 6:26:07 PM4/10/10
to மின்தமிழ்
வினோத்,

இப்போதுதான் பார்க்கிறேன். மிக அருமையான கிரந்த லிபி.
விரைவில் வெள்ளுரையாக (ப்லெய்ன் - டெக்ஸ்ட்) இப்படியும்
தெரியச் செய்யலாம் - பதிவுகளில், கூகுள் குழுக்களில்.

வாழ்த்துக்கள்!

நா. கணேசன்


On Apr 9, 11:30 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:

>  Vishnu Sahasranama.pdf
> 128KViewDownload

பாரதி

unread,
Apr 11, 2010, 6:29:59 AM4/11/10
to மின்தமிழ், N. Ganesan
வினோத் ராஜன்,
இந்த குறியீடுகள், துணை எண்கள், நம் முன்னோர்கள் பயன்படுத்திய
வரிவடிவங்கள் மற்றும் புதிய எழுத்துருக்கள் என்பனவெல்லாம் தமிழில் உள்ள
தேவைகளை வலியுறுத்துகின்றன. எது சரியானதென்று மக்கள் முடிவெடுக்கும்
முன்பு அனைத்து முறைகளையும் அவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும் என்பதே என்
வேண்டுகோள்.

பாரதி

Reply all
Reply to author
Forward
0 new messages