கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும்

39 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 31, 2018, 1:28:55 PM3/31/18
to மின்தமிழ்
நன்றி சிறகு: http://siragu.com/கச்சா-எண்ணெய்-இயற்கை-எரி-2/

Mar 31, 2018 

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும்




siragu kachchaa ennai1

‘புதைகுழிகள்’ அல்லது ‘புதைபள்ளங்கள்’ (Sinkholes) என்பன ‘சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளங்கள்’  எனவும் அறியப்படுகின்றன. இவை இயற்கையாகப் புவியின் நிலப்பரப்பில் தோன்றும் குழிகளும் பள்ளங்களுமாகும், பல அளவுகளிலும் ஆழங்களிலும் இவை வேறுபட்டிருக்கும். இவற்றில் நீர் நிரம்பி ஏரி, குளம், குட்டைகளும் பின்னர் தோன்றுவதுண்டு. நிலப்பரப்பின் மேற்புறம் மண்ணால் உறிஞ்சப்பட்ட நீர் உட்சென்ற பிறகு, அந்த நிலத்தடி நீரினால் புவிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்படுகைகள், உப்புப்பாறைகள் ஆகியவை அரிக்கப்பட்டு, அவை நீரில் கரைந்து நொறுங்கி வலுவிழந்து அவற்றின் மேல் உள்ள நிலத்தின் சுமையைத் தாங்க இயலாது நிலம் சரிந்து உள்வாங்கி குழிகளை ஏற்படுத்தும். அக்குழிக்குள் நிலத்தின் மேலிருப்பவை புதைந்து மூழ்கிவிடும். புயல் மழை ஆகியவற்றால் ஏற்படும் பெரு வெள்ளங்கள், அல்லது நிலத்தடி நீர் குறைவது, நிலத்தடியில் நீர் ஓரிடத்தில் தேங்கத் தொடங்குவது போன்ற செயல்கள் புதைகுழி தோற்றத்திற்குக் காரணங்களாக அமைகின்றன. இப்புதைகுழிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் மேற்பரப்பு தாழ்வதாலோ அல்லது, திடீரென நிலம் உள்வாங்குவதாலோ தோன்றுவதும் உண்டு. சுருக்கமாக நிலத்தடிநீர் அளவு ஏற்படுத்தும் மாற்றத்தின் விளைவு புதைகுழிகள்.

சமீபத்தில், ‘டெட் சீ’ (Dead Sea) எனப்படும் சாக்கடல் பகுதியில் பல புதைகுழிகள் தோன்றத் தொடங்கியுள்ளன. டெட் சீ ஜோர்டான் நதி மூலம் நீர் பெறுகிறது. ஜோர்டான், இஸ்ரேல், சிரியா போன்ற நாடுகள் விளைச்சல், குடிநீர்த் தேவை போன்ற காரணங்களுக்காக தங்கள் தேவைக்கு ஆற்றின் நீரைத் தடுத்துத் திருப்பிக் கொள்வதால் கடலுக்கு நீர் வரத்து குறைந்த காரணத்தாலும், இருக்கும் கடல்நீரையும் அப்பகுதியில் கனிம வளங்களை எடுக்கும் நோக்கத்தில் பெருவணிக நிறுவனங்கள் இறைப்பதைத் தொடர்வதாலும் கடலின் நீர் அளவு குறையத் தொடங்கியது. நிலத்தடி நீர் அளவில் ஏற்பட்ட மாற்றத்தினால் டெட் சீ பகுதியைச் சுற்றிப் பல புதைகுழிகள் தோன்றிவருகின்றன. இது இயற்கைக்கு மாறாக, மனிதக்குலம் தங்கள் தன்னலத்தின் காரணமாக நிலத்தடிநீரை அதிகமாகச் சுரண்டுவதனாலும், இயற்கையான ஆற்று நீரோட்டத்தை மாற்றுவதனாலும்  விளையும் புதைகுழிகள் (human-induced geohazards). அதாவது இயற்கையாக இடிவிழுந்து காட்டுத்தீ பரவியும் காடுகள் அழியலாம், மனிதர்களில் அக்கறை இல்லாத பொறுப்பற்ற செயல்களால் காட்டுத்தீ உருவாகியும்   காடுகள் அழியலாம் என்பதுடன் இதனை ஒப்பிடலாம்.

செயற்கையாகத் தோற்றுவிக்கப்படும் புதைகுழிகள்:

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும் (பார்க்க:  http://siragu.com/கச்சா-எண்ணெய்-இயற்கை-எரி/) போல, எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதன் மூலமும் (anthropogenic activities such as mining, groundwater extraction, hydrocarbon production) புவிக்குச் செயற்கையாக விளைவிக்கப்படும் தீங்கின் (geohazards) காரணமாகப்  புதைகுழிகளும் உருவாகின்றன என்று “நேச்சர்” அறிவியல் ஆய்விதழில் (இந்தமாதம் -மார்ச் 16,  2018 இல்) வெளியான ஆய்வு ஒன்று காட்டுகிறது.  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில “சதர்ன் மெதாடிஸ்ட்   பல்கலைக்கழகத்தின்” புவியியற்பியல் ஆய்வாளர்கள் “ஜின் வூ கிம்”  மற்றும் “சாங் லூ” (Jin-Woo Kim and Zhong Lu of Southern Methodist University, Dallas, Texas, USA) ஆகியோரின் புவியியலாய்வு வழங்கும் முடிவு இது.

டெக்சாஸ் மாநிலம் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம். இங்கு சுமார் 300,000 எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. கடந்த 75 ஆண்டுகளாக 1940 இல் துவங்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ‘ஹைட்ரோ ஃபிராக்கிங்’ (hydrofracking, hydraulic fracturing, hydrofracturing) என்னும் ‘நீரழுத்த பாறைத்தகர்ப்பு’ முறையாகிய ஒரு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு 10,000 அடிகளுக்கும் மேலான ஆழத்தில், படிமப்பாறைகளுக்கு இடையில் இருக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியன பிரித்தெடுக்கப்படுகிறது. டெக்சாசில் முதல் புதைகுழி 1980 களில் தோன்றியது.

எண்ணெய் எடுக்கும் முறை பெரும்பாலும் கீழ்க்காணும் நான்கு அடிப்படை செயல்களை உள்ளடக்கியது:

siragu kachchaa ennai2

1. நீரழுத்த பாறைத்தகர்ப்பு (Hydraulic Fracturing); 2. எண்ணெய் உற்பத்தி அல்லது எண்ணெய் எடுத்தல் (Oil Production/Extraction); 3. மாசடைந்தநீர் வெளியேற்றுதல்;  மற்றும் 4. மேம்படுத்தப்பட்ட முறையில் எண்ணெய் மீட்பு (Enhanced Oil Recovery).

இவ்வாறு எண்ணெய் உற்பத்தி செய்யப்படும்பொழுது எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுடன் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிலத்தடியில் புதையுண்டு போன உப்புத் தன்மை கொண்ட கடல்நீரும் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் நீர் ‘மாசடைந்த நீர்’ (Co-produced water/wastewater) என அழைக்கப்படுகிறது. இந்த நீர் மறுசுழற்சியாக பாறைத்தகர்ப்புத் திரவமாகப் பயன்படுத்தப்பட்டோ (Reused as frac fluid), அல்லது நீர்நிலைகளில் வெளியேற்றப்பட்டோ, அல்லது மீண்டும் மற்றொரு ஆழ்துளை குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீரைப் பாதிக்காவண்ணம் புவியின் மிகவும் அதிகமான ஆழத்திற்கு உட்செலுத்தப்பட்டோ கழித்துக் கட்டப்படுகிறது. நிலத்திற்கு அடியில் செல்லும் நீர் அங்கு அதிக அளவு நீரழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது. இதனால் புவித்தட்டுகளின் பிளவுகளில் நுழையும் நீர் புவிதட்டுகளை நகரச் செய்கிறது.

இவ்வாறு டெக்சாஸ் எண்ணெய்க் கிணறுகள் பகுதியில் நிலம் நகரும் மாற்றங்களை ஆய்வு செய்ய, கடந்த 2014 – 2017 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டரை ஆண்டுகளில் செயற்கைக்கோள் புவிக்கு அனுப்பும் ரேடார் படங்கள் (Satellite radar interferometry / interferometric synthetic aperture radar or InSAR) பயன்படுத்தப்பட்டன. எண்ணெய்க் கிணறுகள் உள்ள 4,000 சதுரமைல் பரப்பளவில் தொடர்ந்து ஏற்படும் மாறுதல்கள் கண்காணிக்கப்பட்டன. பெரும்பாலும் ஏற்படும் மாற்றங்கள் மேம்போக்கான நிலையில் மக்கள்  கவனத்தைக் கவராதவை. சென்டிமீட்டர் அளவிற்கும் நிகழும் சிறுசிறு மாற்றங்கள் ஆய்வாளர்களால் மிகத் துல்லியமாக தொடர்ந்து பதியப்பட்டன. ஆய்வின் நோக்கம் நிலநகர்வு மாற்றங்களுக்கும் எண்ணெய்க் கிணறுகளுக்கும் உள்ள தொடர்பு என்பதால் (ground movement associated with oil activity) ரேடார் படங்களின் தரவுகளுடன், எண்ணெய்க் கிணறுகள் இருக்குமிடம், எண்ணெய் எடுக்கும் செயல்முறை  குறித்த தகவலும் இணைத்து ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக; (1) மாசுபடிந்த உப்பு  நீரைப் புவிக்குள் செலுத்துவது,  (2)  கரியமில வாயுவைப் புவிக்குள் செலுத்தி எண்ணெய் எடுக்கும் தரவுகள், (3) உப்பு/சுண்ணாம்புப் பாறைகள் கரைவது, (4) கைவிடப்பட்ட எண்ணெய்க் கிணறுகளின் நீரளவு, (5) புதைகுழிகள் உருவாவது, (6)  நீர்க்கரிம  உற்பத்தி என  ஆறு வகை தரவுகள் [(1) wastewater injection, (2) CO2 injection for enhanced oil recovery (EOR), (3) salt/limestone dissolution, (4) freshwater impoundment in abandoned wells, (5) sinkhole formation in salt beds, and (6) hydrocarbon production] இந்த  ஆய்வுக்கு உதவின.  இந்த ஆய்வின் மூலம் நிலத்தில் நிகழும் நகர்வுகளுக்கும் எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் எடுக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

siragu kachchaa ennai3

நிலத்தில் உட்செலுத்தப்படும் மாசடைந்த நீரும் கரியமில வாயுவும் பாறைகளின் துளைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தம் நீங்கும் பொழுது நிலத்தினை ஒரு  அங்குலம் வரை கூட உயர்த்துகிறது. கைவிடப்பட்ட பழைய எண்ணெய்க் கிணறுகளின் சேதமடைந்த துருப்பிடித்த குழாய்கள் நீரை நிலத்தில் கசியவிட்டு, உப்புப் பாறைகளைக் கரைத்துப் பலவீனப்படுத்தி புதைகுழிகள் உருவாகவும் காரணமாகின்றன. ஆண்டுக்கு ஒன்றரை அடி ஆழம் என சில புதைகுழிகளின் ஆழம் அதிகரித்துள்ளது.  ஒரு சில இடங்களில் இரண்டரை ஆண்டுகளில்  40 அங்குலம் வரை கூட நிலநகர்வு பதிவாகியது. அடுத்தடுத்து ஒரு மைல் இடைவெளியில் இருக்கும் இரு பெரிய புதைகுழிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் நிலத்தின் நகர்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் நிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, நிலத்தை உயரவும் தாழவும் செய்து, புதைகுழிகள் தோன்றவும் காரணமாகின்றன என்பதை ஆய்வாளர்கள் “ஜின் வூ கிம்”  மற்றும் “சாங் லூ”  காட்டியுள்ளார்கள்.

நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் மட்டுமல்லாது,  நிலத்தில் ஏற்படும்  நிலையற்ற தன்மையின் காரணமாகச் சாலைகள், குடியிருப்புகள், அணைகள், இருப்புப்பாதைகள், எண்ணெய்க் குழாய்கள் எனக் கட்டுமானங்கள் யாவும் பாதிக்கப்பெறும் என்றும் அதனால் பொருள் இழப்பும் பொருளாதார சீர்குலைவும் தொடரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள்  கூறியுள்ளார்கள்.

_____________________________________________________________________

Contacts:

Professor Zhong Lu,

[https://www.smu.edu/Dedman/Academics/Departments/EarthSciences/People/Faculty/Lu]


Dr. Jin-woo Kim,

[https://www.smu.edu/Dedman/Academics/Departments/EarthSciences/People/Staff/Kim]

_________________________

References:

Association between localized geohazards in West Texas and human activities, recognized by Sentinel-1A/B satellite radar imagery, Jin-Woo Kim & Zhong Lu, Nature, Scientific Reports, volume 8, Article number: 4727 (2018).

https://www.nature.com/articles/s41598-018-23143-6


Why Dangerous Sinkholes Keep Appearing Along the Dead Sea, Tanya Lewis, April 6, 2015, Live Science.

https://www.livescience.com/50379-dead-sea-sinkholes.html

இசையினியன்

unread,
Mar 31, 2018, 2:28:00 PM3/31/18
to மின்தமிழ்
படித்த உடனே ஒரு நினைவு

முன்னாடிலாம் மணலில் புதைகுழி தோன்றியது, திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் சாதாரணமாக பார்கலாம்,

அடுத்த ஒரு முன்னேற்றமாக, த.நா அரசு ஆற்றில் தோண்டிய புதைகுழி,
இது மணல் இல்லா புதைகுழி, காவிரியில் தண்ணீர் வரும் போது நிரம்பும் குழி,
இதை திருச்சி முதல் கரூர் ரோட்டில் காவிரி ஆற்றில் பார்க்கலாம், காவிரி பாலத்தின் சென்னைக்குச் செல்லும் போது கிழக்குப் புறமும் பார்கலாம்.

அடுத்த முன்னேற்றமாக இ.அரசு தோண்டிக் கொண்டிருக்கும் புதைகுழி,
இதை நம் கண்ணால் காண முடியாது,
கைட்ரோகார்பன் புதைகுழி, ரொம்ப ரொம்ப ஆழமானது, மீத்தேன், பெட்ரோல் பொருட்களுக்கானது.

இந்த மூன்று குழிகளில் முதல் புதைகுழி ஆற்றில் தண்ணீர் வந்தால் நடைமுறைக்கு வரும், இது இயற்கையானது.

பின் இரண்டு குழி ஆற்றில் தண்ணீர் வராட்டி உருவாகும், அல்ல அல்ல உருவாக்கப்படும்.

இனி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் சன்னல் வழியா பார்த்தா காவிரி ஆறு தெரியாது, காவிரிப் பள்ளம்தான் தெரியும் போல.

புதைகுழி வார்த்தையில் இவ்வளவு விடயம் இருக்கு. தமிழருக்கான புதைகுழிகள்.

S. Jayabarathan

unread,
Mar 31, 2018, 5:05:13 PM3/31/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
100 கோடி மக்கள் நெருக்கடியில் வாழும் இந்தியாவுக்கு உணவு, உடை, வீடுபோல், எரிசக்தி எரிவாயு, மின்சக்தி, குடிநீர், குளிப்பு நீர் மிக மிக அவசியம்.

தஞ்சைப் பகுதி புஞ்சைத் தளத்தின் கீழ் எரிவாயுக்குத் தேவையான மீதேன் இருப்பது தமிழ்நாட்டின் கொடை.  நெய்வேலி பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப் பட்டு இப்போது தமிழகம் பயனடைந்து வருகிறது.  இவற்றை எடுத்து வருகையில் ஓரளவு புஞ்சை நிலங்கள் பாதிக்கப்படும்.  பாதிப்பைக் குறைத்து இவற்றை எடுத்து மக்களுக்கு எரிவாயு பறிமாற வழிவகுப்பதே நேர்மையான அரசியல் பணி.


Short term pain !  Long term gain. 

Short term gain,  Long term pain.

People should choose one.  

 


///நெய்வேலி (ஆங்கிலம்:Neyveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம்ஆகும். இங்கு நிலக்கரி சுரங்கங்களும் மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு,  கேரளம்,  கர்நாடகாஆந்திராபாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில். 1956ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேரு அவர்களால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.


நெய்வேலி நகரம் நிலக்கரிக்கு மட்டும் அல்லாது சிறந்த பள்ளிகளையும் கொண்டுள்ளது. இங்கு ஜவஹர் பள்ளி, செயின்ட்.பால் பள்ளி, கிளுனி பள்ளி மற்றும் நெய்வேலி நகர பள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


வெளியேற்றப்பட்ட கிராமங்கள்[தொகு]

நிலக்கரி வெட்டி எடுக்கவும் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.வெள்ளையங்குப்பம் 2.பெருமாத்தூர் 3.வேலுடையான் பட்டு 4.கூரைபேட்டை 5.வெண்ணெய்குழி 6.தாண்டவங்குப்பம் 7.நெய்வேலி 8.கெங்கைகொண்டான் 9.பாப்பனம்பட்டு 10.வேப்பங்குறிச்சி 11.தெற்கு வெள்ளூர் 12.வடக்கு வெள்ளூர் 13.மூலக்குப்பம் 14.காரக்குப்பம் 15.ஆதண்டார்கொல்லை 16.மந்தாரக்குப்பம் 17.சாணாரப்பேட்டை 18.அத்திபட்டு 19.வினை சமுட்டிக்குப்பம் 20.தெற்கு மேலூர் 21.இளவரசன் பட்டு 22.விளாங்குளம் 23.நொடுத்தாங்குப்பம்

வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் என்ற ஊரில் மனைகள் வழங்கப்பட்டன.

நெய்வேலி நகரிய அமைப்பு[தொகு]

நெய்வேலி நகரியம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நெய்வேலி 32 வட்டங்களாகப்(Block) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டம் என்பது 1 கி.மீ க்கு 1.கி.மீ என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வட்டம் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடபட்டுள்ளது. முதல் வட்டத்தில் என்.எல்.சி நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகள் தனித்தனியாகவும் தோட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.மின் வசதி,குடி நீர் வசதி,கழிப்பறை வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து கொடுத்துள்ளனர்.மற்ற வட்டங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.வட்டம்-21, மற்றும் வட்டம்-30 ஆகிய இடங்களில் நெய்வேலியில் கூலி வேலை செய்வோர், சிறு வியாபாரிகள்,ஒப்பந்த தொழிலாளிகள் போன்றோர் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

நகரிய நிர்வாகம்[தொகு]

நகரிய நிர்வாக அலுவலகம் வட்டம் 10 ல் உள்ளது. மின் வசதியைக் கவனிக்க, நீர் வசதியைப் பராமரிக்க, கட்டிடங்களைப் பராமரிக்க, சாலைகளைப்போடவும் பராமரிக்கவும், நகர பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் பராமரித்தல்,தெரு விளக்குகளைப் போட்டு பராமரித்தல்,சாலை மற்றும் அலுவலகங்களின் சுகாதாரத்தைப்பாதுகாத்தல், நூலகங்களைப் பராமரித்தல்,நகர நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்ய அங்கு தனித்தனி அலுவகங்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,28,133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெய்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்வேலி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

குடி நீர்[தொகு]

ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல் நிலைத்தொட்டி மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வசதி செய்து தந்துள்ளனர்.

சுகாதாரம்[தொகு]

தெருக்களும் அலுவலகங்களும் தினசரி சுத்தம் செய்து சுகாதாரம் பேணப்படுகிறது.

நூலகம்[தொகு]

தொழிலாளர்களும் மாணவர்களும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வட்டம் 18ல் நூலகம் உள்ளது. வீடுகளுகே வந்து புத்தகங்களை வழங்கும் நடமாடும் நூலகமும் உள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நெய்வேலியில் உள்ளன.


  1. என்.எல்.சி பள்ளிகள்.
  2. ஜவகர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-17
  3. ஜவகர் CBSE மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-17
  4. St..பால் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி வட்டம்-4
  5. St.குளூனி பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.வட்டம்-25
  6. ஸ்ரீ அரபிந்தோ மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-19
  7. செவந்த் டே மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-13.
  8. தாகூர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி. வட்டம்-28
  9. R.C உயர் நிலைப்பள்ளி, வட்டம்-4
  10. தொல்காப்பியனார் நடு நிலைப்பள்ளி,வட்டம்-16
  11. டேனிஷ்ன் நடு நிலைப்பள்ளி,வட்டம்-19
  12. காமராஜர் தொடக்கப்பள்ளி.வட்டம்-30
  13. NMJ மெட்ரிகுலேஷன். பள்ளி-வட்டம்-19
  14. ஜவகர் அறிவியல் கல்லூரி, வட்டம் -14

என்.எல்.சி. பள்ளிகள்[தொகு]

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க என்.எல்.சி பள்ளிகள் தொடங்கினர். மொத்தம் 18 பள்ளிகள் இருந்தன. ஆரம்பகாலத்தில் இப்பள்ளிகளில் படித்தவர்கள் பொறியாளர்களாகவும்,மருத்துவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.நெய்வேலியில் ஆங்கில வழி பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மக்கள் ஆங்கில வழி கல்வியின் மேல் மோகம் கொணடனர்.தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிகளில் சேர்த்து வருகின்றனர். 1980 ஆம் ஆண்டுகளில் பழுப்பு நிலக்கரி நிறுவனப்பள்ளிகளில் சுமார் 600 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். ஆங்கில வழிக்கல்வியின் மோகத்தால் நிறுவனப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. பல பள்ளிகளை மூடி விட்டனர். தற்பொழுது 13 பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன.இப்பள்ளிகளில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும்,ஆங்கில வழிப்பள்ளிகளில் கற்று தேர்ச்சி பெறாமல் வெளியேற்றப்பட்ட மாணவர்களும்தான் பயில்கின்றனர்.இந்த பள்ளிகளுக்கான தாளாளர் அலுவலகம் வட்டம்-18 ல் அமைந்துள்ளது. 600 ஆசிரியர்கள் பணியாற்றியபோது தாளாளர் அலுவலகத்தில் 16 பேர் மட்டுமே பணியாற்றினர்.ஆனால் தற்பொழுது சுமார் 135 ஆசிரியர்கள் பணியாற்றும் பொழுது தாளாளர் அலுவகத்தில் 40 பேர் பணிபுரிகின்றனர்.

நிர்வாக அலுவலகம்[தொகு]

நெய்வேலி வட்டம் ஒன்றில் நிர்வாக அலுவலகம் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்ந்த அனைத்து செயல் பாடுகளும் இங்கிருக்கும் அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

சுரங்கம்[தொகு]

ஆரம்பகாலத்தில் வட இந்தியாவில் உள்ள சுரங்கம் போன்று சுரங்கம் தோண்டினர்.ஆனால் பூமியின் நீர் ஊற்றால் சுரங்கம் நீரால் நிரம்பி விட்டது.பின் ரஷிய நாட்டு அரசின் உதவியால் திறந்த வெளிச்சுரங்கம் தோண்டி கரியை எடுக்கின்றனர்.

அனல்மிலையம்[தொகு]

சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலககரி கன்வேயர் பட்டைகள் மூலம் அனல் மின் நிலையங்களுக்குக் கொண்டு சென்று எரித்து கொதிகலங்களைக் கொதிக்க வைக்கப்படுகிறது. கொதி கலங்களில் உருவாகும் நீராவி விசையைப் பயன்படுத்தி மின்னாற்றல் பெறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா,கர்னாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்குகின்றனர்.

கோவில்கள்[தொகு]

1.வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணியர் ஸ்வாமி திருக்கோயில். இக்கோயில் மிகவும் பழமையானது.சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாக வரலாறு கூறுகிறது.இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.

வேலுடையான்பட்டு மக்களின் குலதெய்வமாக இக்கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. Jump up "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. Jump up "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. Jump up "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Jump up "Neyveli". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  5. Jump up "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006

+++++++++++++++++++++++++++++++




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Mar 31, 2018, 11:00:30 PM3/31/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
பரிமாற - திருத்தம்

2018-03-31 17:04 GMT-04:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
100 கோடி மக்கள் நெருக்கடியில் வாழும் இந்தியாவுக்கு உணவு, உடை, வீடுபோல், எரிசக்தி எரிவாயு, மின்சக்தி, குடிநீர், குளிப்பு நீர் மிக மிக அவசியம்.

தஞ்சைப் பகுதி புஞ்சைத் தளத்தின் கீழ் எரிவாயுக்குத் தேவையான மீதேன் இருப்பது தமிழ்நாட்டின் கொடை.  நெய்வேலி பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப் பட்டு இப்போது தமிழகம் பயனடைந்து வருகிறது.  இவற்றை எடுத்து வருகையில் ஓரளவு புஞ்சை நிலங்கள் பாதிக்கப்படும்.  பாதிப்பைக் குறைத்து இவற்றை எடுத்து மக்களுக்கு எரிவாயு ப
ரி​

தேமொழி

unread,
Apr 1, 2018, 12:14:15 AM4/1/18
to மின்தமிழ்


On Saturday, March 31, 2018 at 2:05:13 PM UTC-7, jayabarathans wrote:
100 கோடி மக்கள் நெருக்கடியில் வாழும் இந்தியாவுக்கு உணவு, உடை, வீடுபோல், எரிசக்தி எரிவாயு, மின்சக்தி, குடிநீர், குளிப்பு நீர் மிக மிக அவசியம்.

தஞ்சைப் பகுதி புஞ்சைத் தளத்தின் கீழ் எரிவாயுக்குத் தேவையான மீதேன் இருப்பது தமிழ்நாட்டின் கொடை. 

காவேரியின் கருணையால் "நஞ்சை வளம்" பெற்றது தஞ்சை நாடு (https://ta.wikisource.org/s/2jbb 

..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
Apr 1, 2018, 1:12:07 AM4/1/18
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
<
இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகள் தனித்தனியாகவும் தோட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.மின் வசதி,குடி நீர் வசதி,கழிப்பறை வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து கொடுத்துள்ளனர்.>

இங்கு தமிழகமக்களா வாழ்கிறார்கள்?. வடக்கிருந்துவர்ந்தவர்களாகவே இருப்பர்

31 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:59 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Apr 1, 2018, 8:33:55 AM4/1/18
to வேந்தன் அரசு, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
வேந்தரே,

அங்கிருப்பவர், பணி செய்பவர் 90% [?] தமிழர்.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Apr 1, 2018, 8:35:07 AM4/1/18
to mintamil
தேமொழி,

சுட்டியில் ஏதுமில்லியே.

சி.ஜெ.

Pitchai Muthu

unread,
Apr 1, 2018, 9:06:07 AM4/1/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
நன்செய்யோ, புன்செய்யோ அனைத்தும் பாதிப்படையும் என்று மட்டும் தெரியும் என்கின்றனர். நீங்கள் சிறிதளவு என்கின்றனர், இந்த சிறிதளவை நேரில் சென்று பார்க்க வேண்டுமென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

சுமார் 600 மீட்டர் ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்து அங்கிருந்து பக்கவாட்டில் சில ஆயிரக்கணக்கான மீட்டர் துளையிட்டு, அதிலே வெடிவைத்து பல்லாயிரக்கணக்கான மணலையும் பல்லாயிரக்கணக்கான வேதிப்பொருட்களையும் துளையினுள் இட்டு, அவற்றை உறிஞ்சி அந்த வேதிப்பொருளில் வினைபுரிந்து இருக்கும் மீத்தேனை பிரித்து எடுத்து, 

ஏற்கனவே ஓ.சி.னு கொடுத்த சமையல் எரிவாயு இணைப்பில், மானியமற்ற சமையல் எரிவாயு என வருங்காலத்தில் நிரப்பி அரசு பணம் பார்க்க முடியும்.

விவசாயம் வைத்தால் தனிமனிதன் தன்னிறைவு அடைந்து விடுவானே. விவசாய நிலத்தை அனைத்து வகையிலும் பாழ்படுத்தும் வேலையைச் செய்தால் விவசாயியை நுகர்வுக்கலாச்சாரணாக மாற்றி விடலாம் அல்லவா?

நுகர்வோரிடம் வரி எனும் பெயரில் அரசு பணம் பார்ககலாம்  என விரிகிறது ஐயா, இதன் கதை.


You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/seLNVTL-ei8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 1, 2018, 10:02:15 AM4/1/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
மதுக்கடைகளில் மனிதர் விரும்பிச் சென்று உடல்நலம் கெட்டாலும், அரசாங்கத்துக்கு வரிப்பணம் நிறையக் கிடைக்கிறதே  அதை விட்டுவிட்டீரே.  சிகரெட் விற்பனையும் அப்படித்தான்.

மீதேன் மற்றும் பெட்ரோ  கெமிகல் தொழிற்சாலைகளில் திர்வ / திடவக் கழிவுகள், நச்சு வாயுக்கள் வெளியேறும்.  அவை கண்காணிக்கப்பட்டு முறையாகப் பாதுகாப்பாகப் புதைக்கப்படக் கட்டுப்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தியாவில் / தமிழ்நாட்டில் வித விதமான கார்கள், பஸ்கள், விமானங்கள் எப்படி ஓடும் ????  

சி. ஜெயபாரதன்.

Pitchai Muthu

unread,
Apr 1, 2018, 1:42:49 PM4/1/18
to mintamil
வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஐயா.

கள் கேள்விப்பட்டு இருப்போம்,
இயற்கையாய்க் கிடைப்பது, போதையற்றது, உடலுக்கு ஆரோக்கியம்தான்.
தற்சார்பு உடையது. அரசுக்கு வருமானம் இல்லை அதலால் தடை.

சரி இவனுக என்னா பண்ணுரானுங்கனா? 

நீர் அதை உயிர்காக்கும் மருந்தாக்கலாம். அதை போதையேற்றி சாராயம் ஆக்கி,
அரசின் ஏட்டில் எழுதினால் நியாயம் என்கின்றனர். உண்டால் பின்னர் மீண்டும் வரவைக்கும் அப்போதை.

சமுதாயம் மனநோயாளிகளை உருவாக்கி உள்ளது என்றே பொருள். மனநோயாளிகளுக்கு மது இருக்கே என்கின்றது அரசு. மதுவிலக்கின் ஒரு அங்கம்தான் அரசு மது தயாரிப்பது என்கின்றது. பைத்தியம் பிடித்தோர்தான் ஆட்சி செய்வோரா என கேள்வி எழுகிறது.

சிகரெட்டும் அப்படித்தான்.

ஐயா பொதுவாக கைட்ரோகார்பன் பாலைவனத்தில் அமைத்தால் தவறுகள் இராது. ஆனால் இது தண்ணீர்வளம் மிகு பகுதி. 

கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்கவே செய்யாது சரிதானே. இக்கழிவுகளின் குட்டைகளாக இந்த விளை பூமிகள் மாறாது சரிதானே. பாதுகாப்பாக சேமித்தாலும் இரண்டாயிரம் கிணறுகளுக்கு எத்தனை ஏக்கர் விளை நிலம் பரி போகும். ஆறு கிலோமீட்டருக்கு துளையிடப்படும் இடத்தில் நிலத்தடி மட்டம் குறையவே குறையாது என இந்தியசுற்றுச்சூழல்குழுமம் அறிக்கை கூட கூறியிருக்கலாம். ஒரு வேளை இப்படி கூட இருக்கலாம்.

சுமார் 15 ஆண்டுகள் இந்த பூமி கைட்ரோ கார்பனால் பாதாலக்குழிகள் தோண்டப்படலாம். 15 ஆண்டுகள் கழித்து நிலத்தடி நீரும், காவிரி நீரும், காவிரியில் மணல்இல்லாமலும் பாலைவனமாக்கப்படலாம். அப்போது இங்கே நிலக்கரி வயல் தோண்டி நிலக்கரியை எடுக்க புதிய திட்டம் இனாஅரசும், தநாஅரசும் போடலாம்.

அப்போது தமிழ்நாட்டின் நிலக்கரி களஞ்சியமாக தஞ்சை மாற்றம் பெரும். நெற்களஞ்சியம் கர்னாடகாவில் மட்டுமே இருக்கும்.

கழிவுகள் புதைக்கப்பட்டால் நிலத்தடி நீரும் விவசாய மண்ணும் பாதிப்படையாதா? அடையவே அடையாது எனக் கொள்வோம்.

தமிழ்நாட்டில் கார்கள் பஸ்கள் அனைத்தும் கைட்ரோ கார்பனில் இயங்க வேண்டும் என்பது என்ன கட்டாயமா? சூரியஆற்றலால் இயங்கலாமே! காற்றாற்றலால் இயங்கலாமே?

விவசாயம் அழித்துசெய்யப்படும் செயல்கள் அனைத்தும் சுரண்டலே. அப்போது ஆங்கிலேயன் இயற்கையை சுரண்டினான் இப்போ வடவான் சுரண்டுகிறான்.

S. Jayabarathan

unread,
Apr 1, 2018, 1:55:07 PM4/1/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran
////தமிழ்நாட்டில் கார்கள் பஸ்கள் அனைத்தும் கைட்ரோ கார்பனில் இயங்க வேண்டும் என்பது என்ன கட்டாயமா? சூரியஆற்றலால் இயங்கலாமே! காற்றாற்றலால் இயங்கலாமே?  ///

நல்ல ஆலோசனை நண்பரே.  இதுவரை யாருக்கும் தோன்றவில்லையே !!!  செய்து காட்ட யாராவது இருக்கிறாரா ? இரவில் பகலில் / சூரிய ஒளி, காற்றில்லாத போது, காரில் / பஸ்ஸில் உள்ளோர் இறங்கித் தள்ளிக் கொள்ளலாம்.

சி.ஜெ.

Pitchai Muthu

unread,
Apr 2, 2018, 1:23:37 AM4/2/18
to mintamil
இது அறிவியலால் முடியாததா?

தனித்தமிழகராதிக்களஞ்சியம்:
https://thanithamizhakarathikalanjiyam.github.io

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/seLNVTL-ei8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 2, 2018, 9:56:22 AM4/2/18
to mintamil, Pitchai Muthu

இயற்க்கை சொற்கள்

இயற்கையை உரிந்து கொள்ள தமிழின் தொன்மையானச் சொற்களை நடைமுறையில் பயன் படுத்தவேண்டும்





தனித்தமிழகராதிக்களஞ்சியம்: 
https://thanithamizhakarathikalanjiyam.github.io


​நண்பர் பிச்சை முத்து,

இயற்க்கை சொற்கள்

முதலில் இதைத் திருத்துக !!!!​  

சி. ஜெயபாரதன்


​+++++++++++++++++++​



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/seLNVTL-ei8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 2, 2018, 10:11:54 AM4/2/18
to mintamil, Pitchai Muthu, tamilmantram, vallamai, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, Anna Kannan, Aravindan Neelakandan, Anne Josephine, Thamil Selvi

Pitchai Muthu

unread,
Apr 3, 2018, 12:18:23 PM4/3/18
to S. Jayabarathan, mintamil
இயற்க்கைக்கு அழுத்தம் தந்து உள்ளேன் ஐயா. 

தனித்தமிழகராதிக்களஞ்சியம்:
https://thanithamizhakarathikalanjiyam.github.io

Reply all
Reply to author
Forward
0 new messages