திரு நாகசாமி அவர்களுக்கு ஒரு கடிதம். ...திருக்குறள் தொடர்பாக.
https://www.youtube.com/watch?v=C0KMXbtoTcg
இத்துடன் இணைத்துள்ள விழியத்தைப் பார்த்துவிட்டு, இந்த சிறு கட்டுரையைப் படியுங்கள்.
நான் எந்த மொழிக்கும் எதிரியல்ல என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன்.
இது ஐயா நாகசாமி அவர்களுக்கு எழுதும் திறந்த கடிதம்.
ஐயா, வணக்கம்.
மனு தர்ம சாஸ்திரத்தையும் திருக்குறளையும் ஒப்பிட்டு, திருக்குறள் (அல்லது அதன் ஒரு பகுதி) தர்ம சாஸ்திரத்திலிருந்தும் தைத்ரேய உபநிஷத்திலிருந்தும் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி மொழி பெயர்க்கப்பட்டது என்று ஆணித்தரமாக பேசியிருக்கிறீர்கள். திருக்குறள் சுமார் 2000 முன் தோன்றியது என்று கூறும் தாங்கள் வேத உபநிஷதங்கள் எப்போது தோன்றின, அவைகளின் காலம் எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதனை ஏன் கூறாமல் விட்டீர்கள்.
மனு தர்மம் பிரமச்சார்யா, கிரிஹஸ்தா, வானபிரஸ்தா, சன்யாஸா என நான்கு பகுதிகளாக உள்ளது என்று கூறிவிட்டு இவற்றை முப்பாலுடன் ஒப்பிட முடியாததால் ‘these are called..controlled by தர்மா, அர்தா, காமா, மோக்க்ஷா’ என்று சொல்லி அவற்றை அறம், பொருள், இன்பத்தோடு ஒப்பிட்டிருகிறீர்கள். முப்பால் முப்பால்தானே, நான்காம் பால் எங்கே இருக்கிறது. சரி, பிரமச்சார்யத்தில் அறம் காக்க வேண்டும், கிரிஹஸ்தாவின் போது பொருள் வேண்டும். ஆதலின் இவையிரண்டையும் திருக்குறளின் அறம் பொருளோடு ஒப்பிட முய ன்றிருக்கிறீர்கள். வானபிரஸ்தா வை இன்பத்துப் பாலோடு ஒப்பிடலாமா.
திருக்குறளின் நூல்வடிவம் மனுதர்ம சாஸ்திரத்துடன் ஒத்துப் போவதாகத் தெரியவில்லை.ஆதலின் திருவள்ளுவர் மனு தர்மசாஸ்த்திரத்தை காப்பியடித்துதான் தன் நூலை அமைத்தார் என்பது சரியாகுமா.
திருக்குறளின் அதிகார வரிசையும் அப்படியே மனுதர்ம சாஸ்திரத்தைப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் நீங்கள், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை எனக் கூற மறந்தது ஏன் எனத் தெரியவில்லை. மனுதர்ம சாஸ்திரத்தில் முதல் பகுதி பிர்மச்ச்ர்யம், எனவே அதில் முதல் அத்தியாயம் பிரமச்சர்ய விரதம், கல்வி முறை, மாணவனின் பண்புகள் பற்றியெல்லாம் பேசுவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், இதனோடு தாங்கள் திருக்குறளின் முதல் அதிகாரத்தை ஒப்பிடுவது ஏற்கத்தக்கதாக இல்லை. திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து அல்ல , அக்ஷர அப்பியாசம் என நீங்கள் கூறுவது விந்தையாக உள்ளது. முதல் குறளின் முதல் சொல்லாகிய அகரம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தக் குறளில் உள்ள மற்ற சொற்களையும்,அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களையும் விட்டு விட்டு, இந்த அதிகாரம் ‘அக்ஷர அப்பியாசம்’ என்பது வேடிக்கை.
இல்லாத ஒன்றை இருக்கிறது என நிறுவ, உண்மைக்கு மாறான செய்திகளை சொல்ல வேண்டியிருக்கும். அதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. .
இனி, மனுதர்ம சாஸ்திரத்தில் இரண்டாம் அத்தியாயத்தில், ‘மாணவர்கள் பிக்ஷை எடுத்து உணவு கொண்டுவர வேண்டும், ஆச்சார்யாளுக்கு சிரமம் தரக்கூடாது’ என்று உள்ளது என்கிறீர்கள். இருக்கட்டும், பரவாயில்லை. ஆனால் இதனை வள்ளுவனின் இரண்டாம் அதிகாரமான ‘வான் சிறப்போடு தாங்கள் ஒப்பிடுவது வேதனையைத் தருகிறது.
திருக்குறளில் மூன்றாவது அதிகாரம் நீத்தார் பெருமை, துறவிகள் பெருமையைப் பேசுகிறது. இதை மனுதர்ம சாஸ்திரத்தில் நான்காம் பகுதியாக உள்ள சன்யாசத்தோடு ஒப்பிட்டால் சரி. அதை விடுத்து குருகுல மாணவர்களின் ஒழுக்கம் பற்றி பேசும் முதல் பாகத்தின் மூன்றாம் அத்தியாயத்தோடு ஒப்பிட்டு பேசுவது எப்படி முறையாகும். திருக்குறளில் ஒழுக்கமுடைமைக்கு ஒரு அதிகாரமே தனியாகா உள்ளதே.
.
தொடர்ந்து, கல்வி முடித்து இல்லறம் ஏற்கச் செல்லும் மாணவர்கள் குருவிடம் பெரும் உபதேசங்களை மனுதர்ம சாஸ்திரத்தின் நான்காம் அத்தியாயம் கூறுகிறது என்கிறீர்கள். அதை அறம் வலியுறுத்தும் குறளின் நான்காம் அதிகாரத்துடன் ஒப்பிடுகிறீர்கள்.. இந்த அதிகாரம் ‘ talks about ending of studentship ‘ என விளக்கம் அளிக்கிறீர்கள். அறம் வலியுறுத்தல் பொதுவாக அறத்தின் சிறப்பு பற்றிக் கூறுகிறதே அன்றி ஆசிரியர்- மாணவர் பற்றி எங்கே கூறுகிறது
இறுதியாக, ‘PANCHAMAHAYAJNA வில் தேவர்கள், முனிவர்கள், முன்னோர்கள், விருந்தினர் மற்றும் மற்றவர்களைப் போற்ற வேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரத்திம் சொல்கிறது. அதை அப்படியே திருவள்ளுவர் மொழி பெயர்த்து ஐம்புலத்தார் என்கிறார்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் பரிமேலழகர் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று என்பதற்கு “பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான்” என்று’ என உரை எழுதுகிறார். PANCHAMAHAYAJNA வும் ஐம்புலத்தார் என்பதுவும் ஒன்றல்ல என்பது இதில் தெளிவாகிறதே.
ஆக, நீங்கள் கூறும் அனைத்துமே உண்மைக்கு மாறானவை என்பது தெளிவாகிறது.
உங்கள் தேவமொழியை உயர்த்திப் பிடிக்க நீங்கள் படாத பாடுபடுகிறீர்கள், அதற்கான சன்மானத்தையும் அவ்வப்போது பெற்றுவருகிறீர்கள் என்பது நாடறிந்த உண்மை.
அதற்காக பேசும் மொழியை இப்படிக் கொச்சைப் படுத்தலாமா..
இப்படி இன்னொமொரு நூல் எழுதினால், இந்தியாவின் மிக உயரிய விருதும் உங்களைத் தேடிவரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வாழ்க.
Travesty...
rnk
மநுவும் வள்ளுவரும்:
வள்ளுவர் புலாலை அடியொடு மறுக்கச்சொல்லுகிறார். ஆனால், மநுதர்மப்படி 'ஹலால்' புலாலை உண்ணலாம்.
"One may eat meat when it has been sprinkled with water, while Mantras were recited, when Brahmanas desire (one's doing it), when one is engaged (in the performance of a rite) according to the law, and when one's life is in danger."
புலால் உண்பது பாவமல்ல. ஆனால் உண்ணாமல் இருப்பது மேன்மை என்றும் மநு சொல்லுறார். அவரும் வள்ளுவரைபோல் தன்னூன் பெருக்கத்துக்கு தான் பிறிதூன் உண்பதை தவிர்க்கவும் சொல்லுறார்.
குழப்படிவேலையாக இருக்கு.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
மநுநெறிகள் ஆரியவர்த்தத்துக்குமட்டுமே!
மநு சொல்லுகிறார்: இமயமலைக்கும் விந்தியமலைக்கும், கிழக்கிலும் மேற்கிலுமான கடல்களுக்கும், இடையேயான நிலம் "ஆரியவர்த்தம்" எனப்படும். இரலை(மான்)கள் இயற்கையாக உலவும் அந்த நிலம் வேள்விகள் செய்வதற்கு தக்க இடம் என உணரவேண்டும். பிறஇடங்கள் மிலேச்சர்கள் வாழும்நாடு. இருபிறப்பாளரான ஆண்கள் (முதல் மூன்று வருணத்தார்) இந்த நாடுகளை நாடி வாழணும். சூத்திரர்கள் எங்கும் வாழலாம். இப்படியாக அண்டத்தின் தோற்றமும் புண்ணியவிதிகளும் சொல்லப்பட்டன. (இனி) வருணத்தாரின் கடமைகளை கற்பாயாக.
வள்ளுவர், திருக்குறள் எந்த நாட்டுக்குச்சொல்லப்பட்டவை என சொல்லவில்லை. (அதனால் அது உலகுக்குப்பொதுமறை)
21. That (country) which (lies) between the Himavat and the Vindhya (mountains) to the east of Prayaga and to the west of Vinasana (the place where the river Sarasvati disappears) is called Madhyadesa (the central region).
22. But (the tract) between those two mountains (just mentioned), which (extends) as far as the eastern and the western oceans, the wise call Aryavarta (the country of the Aryans).
23. That land where the black antelope naturally roams, one must know to be fit for the performance of sacrifices; (the tract) different from that (is) the country of the Mlekkhas (barbarians).
24. Let twice-born men seek to dwell in those (above-mentioned countries); but a Sudra, distressed for subsistence, may reside anywhere.
25. Thus has the origin of the sacred law been succinctly described to you and the origin of this universe; learn (now) the duties of the castes (varna).
மநு சொல்லுறார்:
A wise man should strive to restrain his organs which run wild among alluring sensual objects, like a charioteer his horses.
ஆனால் வள்ளுவர் சொல்லுறார்:
" ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்"
" தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்"
மநு சொல்லுறார்:
Those eleven organs which former sages have named, I will properly (and) precisely enumerate in due order,
" the ear, the skin, the eyes, the tongue, and the nose as the fifth, the anus, the organ of generation, hands and feet, and the (organ of) speech, named as the tenth."
"Know that the internal organ (manas) is the eleventh"
ஆனால் வள்ளுவர் சொல்லுறார்:
புலன்கள் ஐந்து மட்டும் என்று.
"ஐந்து அடக்கல் ஆற்றின்","ஐந்தும் காப்பான்"
மநு சொல்லுறார்:
"But by Sruti (revelation) is meant the Veda, and by Smriti (tradition) the Institutes of the sacred law: those two must not be called into question in any matter, since from those two the sacred law shone forth"
ஆனால் வள்ளுவர் சொல்லுறார்:
எப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மிஸ்டர் நாகசாமி! வள்ளுவர் இதைசொல்லாமல்விடுத்ததேன்?
98. The very birth of a Brahmana is an eternal incarnation of the sacred law; for he is born to (fulfil) the sacred law, and becomes one with Brahman.
99. A Brahmana, coming into existence, is born as the highest on earth, the lord of all created beings, for the protection of the treasury of the law.
100. Whatever exists in the world is, the property of the Brahmana; on account of the excellence of his origin The Brahmana is, indeed, entitled to all.
101. The Brahmana eats but his own food, wears but his own apparel, bestows but his own in alms; other mortals subsist through the benevolence of the Brahmana.
102. In order to clearly settle his duties those of the other (castes) according to their order, wise Manu sprung from the Self-existent, composed these Institutes (of the sacred Law).
மநு சொல்லுகிறார்.
கடவுளுக்குப்படையல்செய்த புலாலை உண்ணல் பாவமில்லை என்று.
"He who eats meat, when he honours the gods and manes, commits no sin, whether he has bought it, or himself has killed (the animal), or has received it as a present from others."
வள்ளுவர் சொல்லுகிறார்: "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒரு உயிர்செகுத்து உண்ணாமை நன்று" என.
மநு சொல்லுறார்:
"Though destitute of virtue, or seeking pleasure (elsewhere), or devoid of good qualities, (yet) a husband must be constantly worshipped as a god by a faithful wife."
(அதாவது கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்)
ஆனால் வள்ளுவர் சொல்லுறார்:
கணவனுக்கும் நற்பண்புகள் இருக்கணும் என்று.
"பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு"
இதுக்கு கலைஞரும் மணக்குடவர்மட்டுமே சரியான பொருளைக்கொடுத்துள்ளனர்.
( நற்பண்புகளைப்) பெற்றானைப் பெறின், பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகைப்பெண்டிர் பெறுவர்.
“ஒரு நெறி எவ்வாறு மானுடரால் ஏற்கப்படுகிறது?”
“அவர்கள் அந்த நெறிக்குள் பிறந்து வளர்ந்திருக்கவேண்டும். மொழியை அறிகையில் அதன் உள்ளடக்கமாகவே நெறியையும் அறிந்திருக்கவேண்டும். அதுவே உலகென்று அவர்கள் உளம் சமைத்துக்கொண்டிருக்கவேண்டும். உளம் அமைந்த பிறகு அவர்களுக்குக் கற்பிக்கப்படும் எந்நெறியையும் ஆழம் ஏற்றுக்கொள்வதில்லை. இளவரசே, நெறிகளுக்குப் பணிதல் வேறு, நெறியிலாதல் வேறு. பணியப்படும் நெறி எவரும் அறியாமல் மீறப்படும் என்பதில் ஐயமில்லை. ஆகும் நெறியே என்றும் திகழ்வது”
“அப்படியானால் அரசனின் கோல் எதற்கு?”
“அனைவரும் நெறியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. மானுட இயல்பில் நெறியை மீறும் ஒரு பகுதி என்றுமுண்டு. அதுவே எல்லைகளைக் கடந்து மெய்மையையும் தேடுகிறது. எந்நெறியையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் மிகச் சிலரே. ஆனால் நெறியை ஏற்றுக்கொண்டவர்களை அவர்கள் துன்புறுத்துவதோ வென்றடக்குவதோ கூடாது. அரசனின் கோல் நெறிக்குக் காப்பு, நெறி சமைப்பதல்ல.”
“அரசன் என்பவன் யார்? நெறியை ஏற்றுக்கொண்டவர்கள் அந்நெறியை நிலைநாட்டும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட மானுடப் படைக்கலம் மட்டும்தானே?”
“ஆம், அதைத் தெய்வங்களின் கையில் கொடுத்து மறுக்கமுடியாததாக ஆக்குகிறார்கள்”
சௌனகர் பிரதிவிந்தியனிடம்...
-Jeyamohan
#வெண்முரசு
grāme vā yadi vāraṇya nimne vā yadi vā sthale |
yatrārhanto viharanti te deśā ramaṇīyakaṃ || (Patna Dhammapada verse 98)
மூலத்தை (வடமொழி தமிழ் இரண்டையும்) முழுதாக ஆராய்ந்தால் தான் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியும். அதற்கு இருமொழி புலமை தேவை.
LNS
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
மநுவும் மநுநீதிச்சோழனும்"
சாதிக்கொரு நீதி சொன்னார் மநு.
267. A Kshatriya, having defamed a Brahmana, shall be fined one hundred (panas); a Vaisya one hundred and fifty or two hundred; a Sudra shall suffer corporal punishment.
268. A Brahmana shall be fined fifty (panas) for defaming a Kshatriya; in (the case of) a Vaisya the fine shall be twenty-five (panas); in (the case of) a Sudra twelve
இது இங்கனமாக, ஆவையும் மனிதனையும் நிகராக வைத்த,
"ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்'ஐ
மநுநீதிச்சோழன் என்று எப்படிசொல்லாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.