NG> காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.
காய்ச்சிக் கொட்டியதால் காய்ச்சு < காசு என்றானதாக பாவாணர் விளக்கம் கூறுகின்றார்சேசாத்திரி
>நண்பர் திரு கணேசன், வணக்கம். பெண்ணாடம் அம்பாள் பெயர் அழகியகாதலி அம்பாள். அப்பெயரை இன்று ஆமோதானாம்பாள் என்று வடமொழியில் >அழைக்கிறார்கள். அர்ச்சனை அப்பெயரிலேயே செய்கிறார்கள். ஆமோதனாம்பாள் வடமொழிச் சொல்லின் பொருளும் அது அழகியகாதலி என்ற பெயருடன் >பொருந்துகிறதா என்று அறியவும் ஆவல். நன்றி
காய - காச பாவாணர் விளக்கத்தால் ஆகாயம்/ஆகாசம் என்ற பெயர்க் காரணம் தெரிகிறது. (காயா - காசா பூப்பெயர்)"விண்ணென வரூஉங் காயப் பெயர்" (தொல். எழுத்து. 305). ஆகாயத்தில் இருக்கும் ஆ என்னும் முன்னொட்டுக்குபொருளேயில்லை என்கிறார் பாவாணர்.
கருமை.இருட்டுக் கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு.
கயவாய் = கரிக்குருவி, எருமை.
கயம் - காயம் = 1. கரிய காயா மலர்.
"காயா மலர்நிறவா" | (திவ். பெரியாழ். 1 : 5 : 6) |
காயம் - காயா. "காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே"
(கூர்மபு.இராமனவதா.) 2. கரிய வானம்.
"விண்ணென வரூஉங் காயப்பெயர்" | (தொல். எழுத்து. 305) |
"காசமா யினவெல்லாங் கரந்து" (கம்பரா. மருத்து. 40).
காயா - காசா = 1. காயா மலர்.
"காசா கடன்மழை யனையானை" (கம்பரா. கங்கை. 53).
2. எருமை (பிங்.).
காசா - காசை = காயா மலர்.
"காசைக் கருங்குழலார்" (பதினொ. ஆளு. திருவுலா, 180).
காசா - காசர
காசா = எருமை. மேற்காண்க.
காய் (ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும்
வடசொல்லொடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ-காச
என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிட மாயிருப்பது என்று
பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப்
பொருளேயில்லை.
மோதி என்ற சொல்லுடன் தொடர்புடையது மோதகம். இனிமை/இனிப்பு பண்டம். ஆ முன்னொட்டுடன் ஆமோதக ஆகியுள்ளது. ஆமோதந- என்ற பொருளுக்கு நல்ல பொருத்தம் காதல், காதலி. ஏன் அழகியகாதலி ஆமோதநாம்பாள் ஆகிறாள் என அடுத்ததாகப் பார்ப்போம். ”கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை” என்னும் சுந்தரர் தேவாரமும், காளமேகத்தின் பாடலும் ஏன் சுடர்க்கொழுந்து என்னும் இலிங்கத்தை காதலியம்பாள் தழுவுகிறாள் என விளக்கும். பெண்ணாகடம் போலவே Flood Mythology சீகாழியின் தோணியப்பர் மனையாள் பெயரும் பாக்கணும். இப்படி ஒரு வெள்ளத் தொன்மக் கதை ஸ்ரீமத் பாகவதத்திலும் உண்டு. சத்யவிரதன் என்னும் தமிழ் மன்னன் மாத்திரம் பொதியம்லையின் மீதுமிஞ்சுகிறான், மற்ற உலகமெல்லாம் பிரளயத்தில் முழுகிவிடுகிறது. இறைவன் சுயம்பு. நல்லவேளையாக, கிடைத்துள்ள அப்பர் தேவாரத்தில் தமிழ்ப் பெயர் கிட்டியுள்ளது. சுடர்க்கொழுந்தீசன். ஒருவேளை, அழிபட்ட அப்பர் தேவாரப் பாக்கள் சிக்கியிருந்தால் அழகியகாதலி எனும் பெயரும் பெற்றிருப்போம்.
எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது. ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது.
காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?
kAya | 2 m. (%{ci} Pa1n2. 3-3 , 41) , the body Ka1tyS3r. Mn. &c. ; the trunk of a tree R. ; the body of a lute (the whole except the wires) L. ; assemblage , collection , multitude SaddhP. ; principal , capital Na1r. Br2ih. ; a house , habitation L. ; a butt , mark L. ; any object to be attained L. ; natural temperament L. |
On Saturday, 5 July 2014 23:36:18 UTC-7, seshadri sridharan wrote:எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது. ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது.சேச்சா அவர்களே,காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?
2014-07-08 0:57 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:On Saturday, 5 July 2014 23:36:18 UTC-7, seshadri sridharan wrote:எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது. ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது.சேச்சா அவர்களே,காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?ஆகாயம் என்பது ஒளிரும் வெளுத்த வானத்தைக் குறிப்பது. அதற்குத் தான் நான் காய என்பது ஒளிர்தல் என்ற வேர்பொருளை கூறியிருந்தேன்.
உடல் என்ற பொருளில் வரும் காய என்பது சமற்கிருதச் சொல் அதற்கு நான் வேர்பொருள் கூறவில்லை.
கத்தியால் உடலில் ஏற்படும் காயம் = காய்+அம், இங்கு “காய்” (= உடல் ‘body') என்னும் சொல் இருக்கிறது.
குதம்பைச் சித்தரின் பாடல் காய் = உடல் என்றிருக்கிறது:
ஆகாயம் = விடிகாலையில் தோன்றும் கருநீல வான் என்னும் பொருள் (ஒப்பு: காயா மலரின் கருநீல வண்ணம்)காயம் = உடம்பு, இங்கே குலமாம் காய்த்தல் என்னும் பொருள்.
இரண்டுமே திராவிடச்சொற்கள் ..........