
| 1. | நேர் | நாள் | நாள் |
| 2. | நிரை | மலர் | மலர் |
| 1. | நேர்-நேர் | தேமா | தே.மா |
| 2. | நிரை-நேர் | புளிமா | புளி.மா |
| 3. | நிரை-நிரை | கருவிளம் | கரு.விளம் |
| 4. | நேர்-நிரை | கூவிளம் | கூ.விளம் |
| 1. | நேர்-நேர்-நேர் | தேமாங்காய் | தே.மாங்.காய் |
| 2. | நேர்-நேர்-நிரை | தேமாங்கனி | தே.மாங்.கனி |
| 3. | நிரை-நேர்-நேர் | புளிமாங்காய் | புளி.மாங்.காய் |
| 4. | நிரை-நேர்-நிரை | புளிமாங்கனி | புளி.மாங்.கனி |
| 5. | நிரை-நிரை-நேர் | கருவிளங்காய் | கரு.விளங்.காய் |
| 6. | நிரை-நிரை-நிரை | கருவிளங்கனி | கரு.விளங்.கனி |
| 7. | நேர்-நிரை-நேர் | கூவிளங்காய் | கூ.விளங்.காய் |
| 8. | நேர்-நிரை-நிரை | கூவிளங்கனி | கூ.விளங்.கனி |
| 1. | நேர்-நேர்-நேர்-நேர் | தேமாந்தண்பூ | தே.மாந்.தண்.பூ |
| 2. | நேர்-நேர்-நேர்-நிரை | தேமாந்தண்ணிழல் | தே.மாந்.தண்.ணிழல் |
| 3. | நேர்-நேர்-நிரை-நேர் | தேமாநறும்பூ | தே.மா.நறும்.பூ |
| 4. | நேர்-நேர்-நிரை-நிரை | தேமாநறுநிழல் | தே.மா.நறு.நிழல் |
| 5. | நிரை-நேர்-நேர்-நேர் | புளிமாந்தண்பூ | புளி.மாந்.தண்.பூ |
| 6. | நிரை-நேர்-நேர்-நிரை | புளிமாந்தண்ணிழல் | புளி.மாந்.தண்.ணிழல் |
| 7. | நிரை-நேர்-நிரை-நேர் | புளிமாநறும்பூ | புளி.மா.நறும்.பூ |
| 8. | நிரை-நேர்-நிரை-நிரை | புளிமாநறுநிழல் | புளி.மா.நறு.நிழல் |
| 9. | நேர்-நிரை-நேர்-நேர் | கூவிளந்தண்பூ | கூ.விளந்.தண்.பூ |
| 10. | நேர்-நிரை-நேர்-நிரை | கூவிளந்தண்ணிழல் | கூ.விளந்.தண்.ணிழல் |
| 11. | நேர்-நிரை-நிரை-நேர் | கூவிளநறும்பூ | கூ.விள.நறும்.பூ |
| 12. | நேர்-நிரை-நிரை-நிரை | கூவிளநறுநிழல் | கூ.விள.நறு.நிழல் |
| 13. | நிரை-நிரை-நேர்-நேர் | கருவிளந்தண்பூ | கரு.விளந்.தண்.பூ |
| 14. | நிரை-நிரை-நேர்-நிரை | கருவிளந்தண்ணிழல் | கரு.விளந்.தண்.ணிழல் |
| 15. | நிரை-நிரை-நிரை-நேர் | கருவிளநறும்பூ | கரு.விள.நறும்.பூ |
| 16.சரி | நிரை-நிரை-நிரை-நிரை | கருவிளநறுநிழல் | கரு.விள.நறு.நிழல் |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
On 20-Jun-2015 1:47 pm, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> விநாயம் ஐயா என்ற தொட்டச்சுப்பிழைக்கு மண் சுமக்கவும்.
அப்படியே செய்கிறேன் ஐயா.
இப்போதைக்கு,
விநாயகம்
விநாயகம்
விநாயகம்
விநாயகம்
விநாயகம்
ஐந்து தடவை எழுதிவிட்டேன்.
> சித்திரம் பேசுது. சின்னவனாக்கும்.
>
ஆமாம் ஐயா.
IAS படிப்பதாகச் சொல்லி வருகிறான். எல்லாம் தங்களது நல்லாசிகள்.
அன்புள்ள காளைராசன்நேர்புநிரைபுஎனும் அசைகளும் ஒருகாலத்தில் இருந்துள்ளதுஉரை ஆசிரியர்கள் காட்டிச் சென்றுள்ள னர்இவற்றில் கடையில் வரும் எழுத்து குற்றியலுகரம் என்பர்நூ த லோ சுமயிலை
சீர்களுக்கு பெயர்வைத்ததில் நம் முன்னோர் எத்தகையநுட்பத்தைவைத்தனரென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. அந்தந்த சீர்களுக்கான அசைகளை அந்தந்த பெயர்கள் கொண்டிருப்பதுமட்டுமல்லாமல் அவை பொருளுடையபெயர்களாகவுமிருப்பது மேலுஞ்சிறப்பு!
ஓம்ஆசிரியர்: குற்றியலுகரம் தெரியுமா? மாணவனிடம் கேட்டார்.
மாணவன்: தெரியாதையா.ஆசிரியர்: சரியாகச் சொன்னாய். நல்ல சரியான எடுத்துக்காட்டு என்று கூறி அமரச் சொன்னார்.
--
ஓம்ஆசிரியர்: குற்றியலுகரம் தெரியுமா? மாணவனிடம் கேட்டார்.மாணவன்: தெரியாதையா.
ஆசிரியர்: சரியாகச் சொன்னாய். நல்ல சரியான எடுத்துக்காட்டு என்று கூறி அமரச் சொன்னார்.
அன்புநிறை காசிஶ்ரீ தம்பி காளை அவர்களுக்கு,வணக்கம்.///“தெரியாது“ என்பதே குற்றியலுகரம் ஆகும்.///அப்புடீங்களா?உடனே வீட்டில் உள்ள ஒரு பெஞ்சுமேல் ஏறி நின்று, அந்தக் காட்சியைப் பேரப்பிள்ளைகளை வைத்துப் படம் எடுக்கச்சொல்லவும்! பிள்ளைகளின் சிரிப்பு இந்த அமேரிக்காப்பாட்டிக்குக் கேக்கும்படி உரத்து ஒலிக்கட்டும்!பிறகு உடனே அம்மா வள்ளியவர்களிடம் போய் ... கீழ்க்கண்ட தொல்காப்பிய நூற்பாவுக்கும் நன்னூல் நூற்பாவுக்கும் விளக்கம் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்.
ஈரெழுத்தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்ஆய்ததொடர்மொழி வன்றொடர் மென்றொடர்ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்******நெடிலோடு ஆய்தம் உயிர் வலி மெலி இடைத்தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே******பிறகு குற்றியலுகரம் பற்றித் தாங்கள் அறிந்த நற்பொருளைப் பொதுமக்களுக்குச் சொல்லவும்.அன்புடன்,அக்கா இராசம்
• நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம்எனப்படும்.
எ.டு :
பாகு
மூசு
பாடு
காது
ஆறு
வணக்கம்.
ஐயா கணேசன் அவர்கள் வேறு ஒரு இழையில் கேட்டதற்காக....
--