பூந்துறை புஷ்பவனேசுவரர் - சம்பந்தர் தேவாரத்தில்

151 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Oct 2, 2011, 10:38:32 PM10/2/11
to சந்தவசந்தம், mint...@googlegroups.com
சந்தவசந்தத்தாரே,

காவிரிக்கரைத்தலங்களைத் தொகுத்துப் பாடும்
அப்பர் தேவாரத்தில் பூந்துறை பாடப்படுகிறது.
எனவே அது வைப்புஸ்தலம், ஸ்வாமி பெயர்:
பாகம்பிரியாள் உடனாய புட்பவனேசுவரர்.

கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத் துறை,
பண்டெழுவர் தவத்துறை, வெண் டுறை, பைம் பொழிற்
குயிலாலந் துறை, சோற்றுத் துறை, பூந் துறை,
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறை,கடம்பந் துறை,யா வடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.

வைப்புத்தலங்களைப் பற்றி வாழ்நாள் முழுதும்
ஆய்ந்த ஈரோடு சைவப் புலவர் இரா. ப. தங்கவேலனார்
சம்பந்தர் தேவாரம் 3.92.8-ல் பூந்துறை இருப்பதாக
எழுதியுள்ளார்கள்.

அந்த சம்பந்தர் தேவாரம் இங்கே இட முடியுமா?
சிவசிவா அருள் வேண்டும், மற்றவர்களிடமும் இருக்கலாம்.

நன்றிகள் பல,
நா. கணேசன்

மின் தமிழின் ஒரு மடலாடல்:

On Oct 2, 11:17 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> ஆம், நன்றி ஐயா

> அப்பரடிகள் காவிரியை ஒட்டிய பதிகளையே
> ‘கயிலாயமலை யெடுத்தான்...’ பாடலில்
> தொகுக்கிறார் என முடிவு செய்யலாம்.

> தவத்துறை ‘லால்குடி’ என நினக்கிறேன்.

ஆம் ஐயா. “பண்டெழுவர் தவத்துறை”
என்கிறாரே அப்பர் சாமிகள்.

பண்டெழுவர் = தொல் சப்தரிஷிமார்கள்.
லால்குடியில் வீட்டுக்கொருவருக்கு
சப்தரிஷி என்ற பெயர் இருக்கும். ஸ்வாமி சப்தரிஷீசுவரால்.
லாசரா - தந்தை பெயர் சப்தரிஷி. மகன் பெயரும்
என்று படித்த நினைவு.

அப்பர் பாடலில் முக்கியமானது பெருந்துறை,
இதுவும் கொங்குநாட்டில் உள்ளதுதான்.

”பெருந்துறை வரையேறி” மாணிக்கவாசகர் திருவாசகத்தைச்
சுட்டிக் காட்டி இம்மலைகளைக் கடந்து குடநாட்டில்
குதிரை வணிகம் பற்றிப் பேசுவதைச் சொல்லி இருக்கிறார்
நூம்பல் த. லோ. சு. அவர்கள். கொங்கிலே மாணிக்கவாசகரின்
தொன்மை மடம் இருக்கிறது.

மருதுபூந்துறை வையைக்கரை போல்,
தண்பொருநைக் கரையில் சிந்துபூந்துறை
தனித்தலம் அன்று. நெல்லையப்பர் தலமே
அங்குள்ள தேவாரம் பெற்ற தலம்.

பூந்துறை தனித்தலம் கொங்கிலேதான்.
அப்பர் போலவே சம்பந்தரும் பாடியுள்ளதாக
புலவர் இரா. ப. தங்கவேலனார் உரைக்கிறார்.
அந்த சம்பந்தர் தேவாரம் (3.92.8) கிடைத்தால் தாருங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளை (மின்னூல் உபயம்: பவள
சங்காரி) நூல் - வைப்புத் தலங்கள் - பூந்துறையை
விளக்குகிறது, பக். 58-59. படித்தருள்க.
http://www.heritagewiki.org/thfebooks/THFvaipputhalangal.pdf

அன்புடன்
நா. கணேசன்

> வைணவத்துறை பற்றிப் பேசினால்
> ”சைவம் எங்கே ?” என்று குறுக்கிடுவர்;
> பெரிய தவற்றைச் சுட்டவும்
> ஆளில்லை இங்கு.

> http://kongukulagurus.blogspot.com/2009/09/blog-post_11.html
> எனும் வலைப்பூவும் கண்ணில் பட்டது;
> கொங்குப் பகுதி சார்ந்தது

> தேவ்

> On Oct 2, 8:33 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> > சிந்துபூந்துறை, மருதநீர்ப்பூந்துறை - எல்லாம் உண்டு.

> > தேவாரம் சொல்வது பூந்துறை என்ற ஊர்.
> > அது காவிரிக் கரையில் கொங்குநாட்டின்கண்
> > (சங்கச் சேரமான்கள் ஆட்சி செய்த ஊர்).

> > நா. கணேசன்

> > On Oct 2, 10:28 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> > > பரிபாடலிலும் வையைக் கரையில் :

> > > அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
> > > திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
> > > அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
> > > பருகு படி மிடறு என்கோ?____பெரிய
> > > திருமருத நீர்ப் பூந் துறை*

> > > தேவ்

> > > On Oct 2, 7:14 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> > > > On Oct 2, 12:13 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> > > > > நன்றி ஐயா,

> > > > > அருளும் செயலை ஆழ்வார் ஆசார்யர்கள், ஞானம் - அநுட்டானம் இவை
> > > > > தேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். அனைத்திலும் கீழ்ப்படியைக்கூட
> > > > > நெருங்க முடியாத அடியேன் போன்றோரால் ஆகாது.
> > > > > இந்த இழையும் போதனைக்கானதன்று;
> > > > > மேலும் தெளிவு பெறுவதற்கும், தூய்மை பெறுவதற்குமானது.

> > > > > தமிழில் ‘சிந்து பூ’ ஓர் அழகிய தொகை;
> > > > > சிந்துபூந்துறை நெல்லையின் ஒரு பகுதி;
> > > > > ஒரு காலத்தில் இயற்கை வனப்பு மிக்க
> > > > > இடமாக இருந்திருக்க வேண்டும்.
> > > > > அப்பரடிகள் பாடிய வைப்புத் தலம் -

> > > > > கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
> > > > > சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
> > > > > பயில்வாய பராய்த்துறை தென் பாலைத் துறை,
> > > > > பண்டெழுவர் தவத்துறை, வெண் டுறை, பைம் பொழிற்
> > > > > குயிலாலந் துறை, சோற்றுத் துறை, பூந் துறை*,
> > > > > பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
> > > > > மயிலாடு துறை,கடம்பந் துறை,யா வடு
> > > > > துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே

> > > > > தேவ்

> > > > பூந்துறை என்பது காவிரிக் கரையில் உள்ள ஊர்.
> > > > சேரர்களுடன் வரலாற்றுத் தொடர்புடைய ஊர்.
> > > > கொச்சி சேர மன்னர்கள் வாரிசு இல்லாமல் போகும்போது
> > > > பூந்துறை குடும்பங்களில் இருந்து தேர்வு செய்வதை
> > > > கேரள வரலாறுகள், செப்பேடுகள் கூறுகின்றன.

> > > > காளியணப் புலவர் செய்த பூந்துறைப் புராணம் உள்ளது.
> > > > அதில் ஓர் அதிசயம். புலவர் டார்வினுக்கு 100-150
> > > > ஆண்டுகள் முன்னம் வாழ்ந்தவர். குரங்குகள்
> > > > மரக்கிளைகளில் அமர்ந்து கீழே நடக்கும் கலியாணத்தை
> > > > பார்ப்பதாக ஒரு காட்சி. அதில் குரங்குகள் பேசுகின்றனவாம்:
> > > > “இவர்கள் நம் சந்ததியார்” என்று. ஆக, குரங்குகள்,
> > > > மனிதர் உறவுகள் தமிழிலும் பேசப்பட்டுள்ளன.
> > > > (டார்வினுக்கு முன்னரே).

> > > > நா. கணேசன்

naa.g...@gmail.com

unread,
Oct 6, 2011, 10:32:22 AM10/6/11
to சந்தவசந்தம், மின்தமிழ், housto...@googlegroups.com

NG /மாணிக்கவாசகர் தட்சிணாமூர்த்தி உள்ள இடம் என்று பல இடங்களில்
“தென்னன்
பெருந்துறை” என்று பாடுகிறார். /

Sivasiva> 'தென்' என்பது பல பொருள்களில் வரும். தட்சிணாமூர்த்திக்குத்
தென்னன் என்று
> தெளிவாக வரும் இடம் ஏதேனும் உண்டா?

தக்ஷிணாமூர்த்தி வயதில் இளைஞராக, சடைபூண்டு மோனத்தவத்தில்
கல்லால மரத்தின் அடியில் மோனத்தில் வீற்றிருந்து, வயதில் பண்டுகிழவரான
இருடிகளுக்கு ஞானம் அருளுபவர். அவருக்குத் தென்முகக் கடவுள், தென்னன்,
தென்னவன் என்ற பெயர்கள் உண்டு. தென் = அழகு என்றெடுத்தாலும்
அழகிய பொலிவான தோற்றத்தர் என்று கொள்ளலாம். ஆனால், இது
இரண்டாம் நிலைப்பொருள். தமிழ் என்றால் இனிமை என்பது
இரண்டாம் பொருள் அல்லவா?, முதற்பொருள் தம்-மிழி/மொழி, தமிழர் தம் பேச்சை
தமிழ் (தமிழி) என அழைத்தனர் என்று கொள்ளல் சிறப்பு.
அதேபோல தென்னன், தென்னவன் என்றால் தென்முகக் கடவுள்
என்பது முதற்பொருள், அழகியவன் என்பதை அடுத்த நிலை எனலாம்.
பொதியில் தென்னன்/அவலோகிதன் அழகான சடைபூண்ட இளமைக்
கோலத் தவசியை போரோபுதூரில் கூடத் தரிசிக்கலாம்.

பொதியம் இமயத்துக்கு நிகரானது. வட இமயமும் தென் பொதியமும் போன்று நீடு
வாழ" வாழ்த்துகிறது புறநானூற்றின் இரண்டாம் பாடல்.
சிவன் தென்னனாக, தெற்குத் திசை நோக்கி பொதியில் (மயேந்திரமாமலை)
அம்பிகையுடன் வீற்றிருந்து ஆகமங்கள் எழுதியதாக தமிழர்தம்
கொள்கை ஒன்றுண்டு, அதனால் தான் மாணிக்கவாசக சுவாமிகள்
“தென்பாண்டி நாட்டானே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி” என்று பாடிப் பரவுகிறார். அதனால்தான் தக்ஷிணாமூர்த்தி
வடிவம் மாணிக்கவாசகருக்கு இஷ்டதெய்வம். அவர் அமைத்ததாகக்
கூறப்படும் ஆவுடையார்கோவில் எந்தச் சிவன்கோயிலும் இல்லாத
வகையில் கருவறை மூலவர் தெற்குநோக்கி இருக்கிறதும் காண்க.
பொதியில் மலையில் வாழும் தென்னன் யார்? என்ற சிக்கல்
பல சமயத்தவருக்கும் 2000 ஆண்டுகளாக உள்ளது. பௌத்தர்கள்
அவலொக்கிதேசுவரன் என்று கொண்டாடினர். தமிழ்ச் சைவர்கள்
தென்னவன் (தக்கிணன்) என்றனர். சமணர்கள் தங்கள் தெய்வம்
என்றனர் (கொங்குவேள் பெருங்கதை). பௌத்தர்களின்
அவலோகிதேசுவரன் வடிவம் சைவர்களால் தட்சிணாமூர்த்தி
வடிவம் ஆனது என்பதை சிற்பப் படங்களுடன், இலக்கியச்
சான்று காட்டிச் சொல்லியிருக்கிறேன்:
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf

தமிழர்கள் தென்னனாக, தென்திசை நோக்கி அமைத்த
தக்ஷிணாமூர்த்தி வடிவம் வடநூலார்கள் சைவத்தில்
இயைத்த வரலாறு நெடியது. தெற்கு திசையின் அதிதேவதை
யமன் ஆவான். அதனை அப்படியே நச்சினார்க்கினியர்
மதுரைக் காஞ்சி உரையில் கூறிவிட்டார். அது பொருந்துவதாகத்
தெரியவில்லை.

தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக் காஞ்சி 40-42)

இங்கே தென்னவன் என்றால் யமன் எனல் பொருந்தாது
என்பது தெளிவு.

தென்னவன் = தக்ஷிணாமூர்த்தி ஆகிய தொன் முதுகடவுள் சிவபெருமான்.
பின்னர் என்பது தென்னனின் அடியார்களை, அங்கே, சிறப்பாக
அகத்தியனைக் குறித்தது. சிவனைப் பற்றிய சங்கக் குறிப்புகளில்
மதுரைக் காஞ்சி அடிகள்.
http://www.shaivam.org/tamil/sanga.htm

மதுரைக் காஞ்சி கருத்து சிலம்பிலும் பயில்கிறது:

மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் - வேட்டுவவரி.

நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய்போகா, தொன்று புரிந்த வீரிரண்டின்
(புறம் 165)
மறைமுது முதல்வன் பின்னர் மேய - வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய
சிவபெருமானுக்குப் பின்னோன் ஆகிய அகத்தியன் எழுந்தருளிய,
பொறை உயர் பொதியிற் பொருப்பன் - பொறைகளையுடைய உயர்ந்த
பொதிய மலையை உடைய பாண்டியன் (நாட்டார் உரை).
மேலும் நாட்டார் கூறுகிறார்:
“தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொனமுது கடவுட் பின்னர் மேய,
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" என்பதும் ஈண்டும் அறியற்பாலது.
இதிலுள்ள 'தொன்முது கடவுள்' என்பதற்கு அகத்தியனார் என்று பொருள்
கூறுவது சிறப்புடைத்தன்று.” பின்னர் இச்செய்திகள் தேவாரத்திலும் உண்டு,


பொதியிலில் உள்ள தென்னவன் என்ற பெயரிய தொன் முது கடவுள்
யார்? என்பதற்கு விளக்கம் நச்சினார்க்கினியருக்கு முன்னர்
வாழ்ந்த கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்கள்.
"தமிழ்க்குன்றில் வாழுஞ் சடாதாரி பேர்யாழ் தழங்குத் திருக்கை"
சடாதாரி - தென்னன் - வீணாதார தக்ஷிணாமூர்த்தி.
(எம்மிறை வீணை வாசிக்குமே). சடாதாரி - தவசியாய்
உள்ள தென்னன் (தக்கிணன்) என்பதற்குச் சான்று
ஒட்டக்கூத்தர் கவிச்சகிரவர்த்திப் பட்டம் வாங்கிய
போது சோழ மஹாராஜா அவையில் சொல்லிய
இரண்டு பாக்களில் பொதியில் சடிலக்குந்தளன்
என்று சடாதாரி தக்ஷிணாமூர்த்தியைக் கூறுகிறார்.
அதை அவலோகிதன் - தக்ஷிணாமூர்த்தி கட்டுரையில்
விளக்கியுள்ளேன். கட்டுரை வலைவரி (யுஆர்எல்) மேலே


இருக்கிறது.

காளாமுக சைவம் மாணிக்கவாசகர் மூலமாக
ஆனந்த தாண்டவ நடராஜரையும் (9-ஆம் நூற்றாண்டில்
இப் படிமம் உருவாகிறது), தொன்முது தென்னவனையும்
(தட்சிணாமூர்த்தி) எப்படி இயைக்கிறது என்பதைத்
தமிழ் இலக்கியங்களும், கலை வரலாறும் காட்டுகின்றன.
சில குறிப்புகளை மாணிக்கவாசகர் இழையில்
- மின்தமிழில் கொடுத்து எழுதியுள்ளேன்.
பொதியில் தென்னன் பெருந்துறையான் திருவடிகளை


வணங்குவோம்.

வாழ்க நலமுடன்,
நா. கணேசன்

DEV RAJ

unread,
Oct 7, 2011, 3:38:41 AM10/7/11
to மின்தமிழ்
>>> பௌத்தர்களின் அவலோகிதேசுவரன் வடிவம் சைவர்களால் தட்சிணாமூர்த்தி
வடிவம் ஆனது என்பதை சிற்பப் படங்களுடன், இலக்கியச்
சான்று காட்டிச் சொல்லியிருக்கிறேன்:
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf
<<<


மாணிக்க வாசகர் மட்டும் தென்திசைக்கு ஏற்றம் தந்தார்
என்பது தவறு.

தென் திசையை பக்தி இலக்கியங்கள் புனிதமாக ஏற்கின்றன.
அகத்தியர் வாழ்வதால் அப்படி இருக்கலாம்.
திருமுறையில் ஆனைக்காவும் ’தென் ஆனைக்கா’ என்று சுட்டப்படுகிறது.


தென்னன் - அவலோகிதேச்வரர் , பொருத்தம் காட்டுவது ஒருபுறம்.

தென் திசை நோக்கி ஆடும் நடராஜருக்குப் பவுத்தத்தில் பொருத்தம் கூற


முடியுமா ?

ஆடும் வடிவுடன் அவலோகிதேசுவரர் இருக்கிறாரா ?

வ்யோம கேச, வ்யுப்த கேச - மறை காட்டும் இருவடிவங்கள் சிவபெருமானுக்கு;
ஜடா பாரத்துடன் தக்கிணா மூர்த்தி, மழித்த தலையுடன் ஆதிசங்கரர்
என்றும் கூடார்த்தம் சொல்வர்.

வைணவப் பதிகளும் தென்னரங்கம், தென்குடந்தை, தென்குளந்தை, தென்குருகூர்
என்று புகழப்படுகின்றன. ‘அகஸ்த்ய ஸேவிதமான தென்திசை’ எனப்போற்றுவர்
வைணவர்

தேவ்

On Oct 6, 7:32 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

> மதுரைக் காஞ்சி அடிகள்.http://www.shaivam.org/tamil/sanga.htm


>
> மதுரைக் காஞ்சி கருத்து சிலம்பிலும் பயில்கிறது:
>
> மறைமுது முதல்வன் பின்னர் மேய
> பொறையுயர் பொதியிற் பொருப்பன் - வேட்டுவவரி.
>
> நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய்போகா, தொன்று புரிந்த வீரிரண்டின்
> (புறம் 165)
> மறைமுது முதல்வன் பின்னர் மேய - வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய
> சிவபெருமானுக்குப் பின்னோன் ஆகிய அகத்தியன் எழுந்தருளிய,
> பொறை உயர் பொதியிற் பொருப்பன் - பொறைகளையுடைய உயர்ந்த
> பொதிய மலையை உடைய பாண்டியன் (நாட்டார் உரை).
> மேலும் நாட்டார் கூறுகிறார்:
> “தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொனமுது கடவுட் பின்னர் மேய,
> வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" என்பதும் ஈண்டும் அறியற்பாலது.
> இதிலுள்ள 'தொன்முது கடவுள்' என்பதற்கு அகத்தியனார் என்று பொருள்
> கூறுவது சிறப்புடைத்தன்று.” பின்னர் இச்செய்திகள் தேவாரத்திலும் உண்டு,
>
> பொதியிலில் உள்ள தென்னவன் என்ற பெயரிய தொன் முது கடவுள்
> யார்? என்பதற்கு விளக்கம் நச்சினார்க்கினியருக்கு முன்னர்
> வாழ்ந்த கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்கள்.
> "தமிழ்க்குன்றில் வாழுஞ் சடாதாரி பேர்யாழ் தழங்குத் திருக்கை"
> சடாதாரி - தென்னன் - வீணாதார தக்ஷிணாமூர்த்தி.
> (எம்மிறை வீணை வாசிக்குமே). சடாதாரி - தவசியாய்
> உள்ள தென்னன் (தக்கிணன்) என்பதற்குச் சான்று
> ஒட்டக்கூத்தர் கவிச்சகிரவர்த்திப் பட்டம் வாங்கிய
> போது சோழ மஹாராஜா அவையில் சொல்லிய

> இரண்டு பாக்களில் பொதியில் ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 7, 2011, 5:00:49 AM10/7/11
to மின்தமிழ்

On Oct 7, 2:38 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>> பௌத்தர்களின் அவலோகிதேசுவரன் வடிவம் சைவர்களால் தட்சிணாமூர்த்தி
>
> வடிவம் ஆனது என்பதை சிற்பப் படங்களுடன், இலக்கியச்
> சான்று காட்டிச் சொல்லியிருக்கிறேன்:http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf
> <<<
>
> மாணிக்க வாசகர் மட்டும் தென்திசைக்கு  ஏற்றம் தந்தார்
> என்பது தவறு.
>
> தென் திசையை  பக்தி இலக்கியங்கள் புனிதமாக ஏற்கின்றன.
> அகத்தியர் வாழ்வதால் அப்படி இருக்கலாம்.
> திருமுறையில் ஆனைக்காவும்  ’தென் ஆனைக்கா’ என்று சுட்டப்படுகிறது.
>
> தென்னன் - அவலோகிதேச்வரர் , பொருத்தம் காட்டுவது ஒருபுறம்.
>
> தென் திசை நோக்கி ஆடும் நடராஜருக்குப் பவுத்தத்தில் பொருத்தம் கூற
> முடியுமா ?
> ஆடும் வடிவுடன்  அவலோகிதேசுவரர் இருக்கிறாரா ?
>

அவலோகிதன் ஆடுவதாய் எங்கும் பார்த்ததில்லை.
தபஸ் கோலமே.

நடேச மூர்த்தி இந்தியா முழுக்க உண்டு.
பாசுபத சைவத்தில் நடேச மூர்த்தி.
சிதம்பரத்தில் 9-ஆம் நூற்றாண்டுவரை இவர்
ஆட்சி, உ-ம்: அப்பர் தேவாரம். தமிழ்-ஆந்திரா-கலிங்க
தொடர்புகளால் வியட்நாம் சென்ற நடேச
மூர்த்தியைப் பாருங்கள். Obviously, not an
Ananda tandava Nataraajar (who was born only during
Manickavasakar's times).

Natesa in Vietnam:
http://en.wikipedia.org/wiki/File:Dancing_Shiva_10th_c.jpg
This form is pan-Indian, available in Karnataka (Chalukkar-s in 6th
century),
Maharshtra, Orissa, Bengal,...

ஆனந்த தாண்டவ நடராஜர் சோழர் கால (9-ஆம் நூற்.)
வடிவம். மாணிக்கவாசகர் காலத் தமிழர் படைத்த உருவம்,
முழுக்க 100% தமிழர் கான்செப்ட். அதேபோல் தான்
தெற்குநோக்கும் தென்முகக்கடவுள்.

சில்ப சாஸ்திர விதிகளின்படி விஷ்ணு தலங்களிலும்
தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி பல்லவர்
விஷ்ணுக்ரகங்களிலும் காணலாம். ஆழ்வார் அருளிச்
செயலில் 2 தட்சிணாமூர்த்தி வடிவ விளக்கம் உண்டு
என நினைக்கிறேன். ஒன்றை அவலோக்தன் - தக்கிணன்
கட்டுரையில் கொடுத்தேன். இன்னொன்று கிடைத்தால்
தாருங்கள். பழைய தட்சிணாமூர்த்தி வடிவத்துக்கும்,
பின்னர் எழுந்த ஆனந்த நடராஜர் வடிவத்துக்கும்
(காளாமுக சைவர்களின் - மாணிக்கவாசகர் போன்றோர் -
படைப்பு. காளாமுகர்கள் பின்னாளில் திருவொற்றியூரில்
மாணிக்கவாசகருக்கு முதன்முதலாக சிலை அமைக்கின்றனர்.
இது 11-ஆம் நூற்றாண்டில் நிகழ்கிறது. இதற்கு பல
காலம் முன்னரே தேவார முதலிகளுக்கு சிலைகள்
அமைந்துவிட்டன என்பதும் நோக்குக.)

அன்புடன்
நா. கணேசன்

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Oct 7, 2011, 7:19:57 AM10/7/11
to மின்தமிழ்
>>>> சில்ப சாஸ்திர விதிகளின்படி விஷ்ணு தலங்களிலும்
தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி........................ <<<<<


ஆம் , தக்ஷிணா மூர்த்தி அமைத்திருப்பது வைகாநஸ விதி.

சில்பங்களில் கடக முத்ரை என்பது மலர் பற்றும் நிலை.
ஏதோ ஒரு கரம் கடக முத்ரையில் அமையும் பெரும்பாலும்.
கட்டாயம் அதில் மலர் இருந்தாக வேண்டும் என்றில்லை.
Suggestive ஆக விடுவதும் ஒரு கலை நுட்பம்.

தென்முகத்திறைவரைப் பொய்கை ஆழ்வார் தவிர
வேறு யாரும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை

தேவ்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 7, 2011, 7:29:20 AM10/7/11
to மின்தமிழ்

On Oct 7, 6:19 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>>> சில்ப சாஸ்திர விதிகளின்படி விஷ்ணு தலங்களிலும்
>
> தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி........................ <<<<<
>
> ஆம் , தக்ஷிணா மூர்த்தி  அமைத்திருப்பது வைகாநஸ விதி.
>
> சில்பங்களில் கடக முத்ரை என்பது மலர் பற்றும் நிலை.
> ஏதோ ஒரு கரம் கடக முத்ரையில் அமையும் பெரும்பாலும்.
> கட்டாயம்  அதில் மலர் இருந்தாக வேண்டும் என்றில்லை.
> Suggestive ஆக விடுவதும் ஒரு கலை நுட்பம்.
>
> தென்முகத்திறைவரைப் பொய்கை ஆழ்வார் தவிர
> வேறு யாரும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை
>

In my essay on Avalokita-Dakshinamurti relations, I quoted:

நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன்.

I remember reading another similar poem in 4000.

It will be very desirable if you and friends can compile
the references to Shiva in 4000. For example, the best
description of Natesa's dance in early literature happens
not in Saivaite literature but in Tirumangai Aazhvar's
TirumaDal (shown to me by the great pundit I know,
Kambaraman, S. K Ramaraja Reddiyar, a classmate
and close friend of TV Gopalaiyar. Both pundits are gone
now.)

Shiva in 4000 Divya Prabandham page, something like
will be great:
http://www.shaivam.org/tamil/sanga.htm

> தேவ்
>

Message has been deleted

N. Ganesan

unread,
Oct 7, 2011, 7:50:14 AM10/7/11
to Santhavasantham, mintamil

On Oct 7, 6:29 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> On Oct 7, 6:19 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> > >>>> சில்ப சாஸ்திர விதிகளின்படி விஷ்ணு தலங்களிலும்

> > தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி........................ <<<<<

> > ஆம் , தக்ஷிணா மூர்த்தி  அமைத்திருப்பது வைகாநஸ விதி.

> > சில்பங்களில் கடக முத்ரை என்பது மலர் பற்றும் நிலை.
> > ஏதோ ஒரு கரம் கடக முத்ரையில் அமையும் பெரும்பாலும்.
> > கட்டாயம்  அதில் மலர் இருந்தாக வேண்டும் என்றில்லை.
> > Suggestive ஆக விடுவதும் ஒரு கலை நுட்பம்.

> > தென்முகத்திறைவரைப் பொய்கை ஆழ்வார் தவிர
> > வேறு யாரும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை

Dev sir,

I got it.

திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-

”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு,
மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் - ஞால
மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல்,
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு” (17.)

என்ற பாசுரத்தினால் இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2674

Shiva mentioned in 4000 Divya Prabandham page,
something like the following page will be great:
http://www.shaivam.org/tamil/sanga.htm

அன்புடன்
நா. கணேசன்

> In my essay on Avalokita-Dakshinamurti relations, I quoted:

N. Ganesan

unread,
Oct 7, 2011, 9:56:42 AM10/7/11
to மின்தமிழ், Santhavasantham
இன்னொரு நடேசர் சிலை.
சம்பா (வியட்னாம்) - சம்பை/செண்பை - ஒரு புல்
(பூம்புகாருக்கும், சீகாழிக்கும் ஒரு பெயர். சம்பாபதி பூம்புகாரின்
காவல்தேவதை - மதுராபதி போல் ஒரு கொற்றி).

சம்பாவில் நடேசர்:
http://www.onasia.com/system/compview.aspx?Filename=wal0002411.48

A tympanum of Shiva dancing, Xth century, Phong Li, (Da Nang
Province) on display at the exhibition of Art treasures from Vietnam's
Champa kingdom (Vth - XVth Centuries) at the Guimet National Museum of
Asiatic Arts in Paris.

This exhibition (running from 12 October 2005 to 9 January 2006) aims
to introduce a major aspect of Vietnam's artistic heritage, by
bringing together the greatest collections of Cham art in the world -
the collections of the Da Nang and Ho Chi Minh-Ville museums in
Vietnam, and that of the Guimet museum. Added to these collections are
sculptures preserved on the My Son site (in the province of Quang
Nam), which has now been listed as a World Heritage site, as well as
works kept at the Museum of Natural History/Guimet Museum in Lyon and
the Reitberg Museum in Zurich.

9-ம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர், கோகழிக் குருமணி போன்ற
காளாமுக சைவசிகாமணிகள் கண்டுபிடித்த ஆனந்த நடராஜர்
10-ஆம் நூற்றாண்டிலும் தமிழ்நாடு விட்டு வெளியே பரவவில்லை.
20-ஆம் நூற்றாண்டிலே ஆனந்த குமாரசாமி தான் பரப்ப ஆரம்பித்தார்.

நா. கணேசன்

> ...
>
> read more »

naa.g...@gmail.com

unread,
Oct 7, 2011, 10:25:42 AM10/7/11
to சந்தவசந்தம், mintamil
On Oct 7, 5:07 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
> மதுரைக் காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும்
> “பின்னர்” என்றது பின்னோர்கள் = அடியவர்கள்.

>
> தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்
> றொன்முது கடவுட் ”பின்னர்” மேய
> வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக் காஞ்சி 40-42)
>
> மறைமுது முதல்வன் பின்னர் மேய
> பொறையுயர் பொதியிற் பொருப்பன் - (சிலம்பு வேட்டுவவரி)
>
> சிலம்பு, மதுரைக்காஞ்சியில் தென்னவன் (தக்ஷிணாமூர்த்தி) = முன்னோன்,
> பின்னர் = பின்னோர்கள் = பின்னவராகிய அடியார்கள்.
>
> இப்பொருளை, “பின்னர்” என்ற சொல்லுக்குக்
> காணுமிடங்கள் சில:
>
> (1) வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
> முன்னோன் முறை முறை காட்டப் பின்னர்
> மணிபுறத்து இட்ட மா தாள் பிடியொடு
> பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
> இரு சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப - நெடுநல்வாடை
>
> [பொருள்: பேய்களை அண்ட விடாதிருக்க வேப்பந்தழை கட்டியிருக்கிறது.
> முன்னோன் ஆகிய சேனாபதி எஃகு வேல்களால்
> விழுப்புண் பட்டுக் களத்தில் கிடக்கும் வீரரைக் காட்டி முன்செல்கிறான்.
> அம் முன்னோனின் படையில் அவன் கீழுள்ள வீரர்களைப்
> ”பின்னர்” என்கிறது நெடுநல்வாடை. சேனாபதி முன்னோனின்
> பின்னவர்கள் (கீழ்ப்படிதல் உடைய வீரர்கள்) மணி கட்டிய
> வாய்க்கருவியைப்(தாள்) கையில் பிடித்துக்கொண்டு
> நெஞ்சு இரையாத வலிய குதிரைகளை சேறு நிறைந்த வீதியில் செலுத்துகின்றனர்.]
>

பின்னர் = அடியவர்கள் என்பதற்கு பத்துப்பாட்டில் 2 பாட்டும்,
சிலம்பிலும் உதாரணங்கள் பார்த்தோம். தற்காலத் தமிழில்
பின்னர் = after என்று சுருங்கிவிட்டது. (திரு) மாஅல் - மயக்கம்,
கருமையில்
இன்று கருமை மாத்திரம் பலருக்கும் தெரிகிறதே அதுபோல்.

கந்தபுராணம் (12-ஆம் நூற்றாண்டு) கச்சியப்ப சிவாச்சார்யர்
பின்னர் என்ற சொல்லை தென்னன் (தக்கிணாமூர்த்தியின்)
அடியார்களான சனகாதி முனிவர்களுக்கு முந்தைய
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போலவே ஆள்கிறார்.

412.
மற்று அது போழ்தில் தொல்லை மறைப் பொருள் வடத்தின் பாங்கர்ப்
பெற்றிடும் சனகனாதி முனிவரர் பின்னும் பன்னாள்
அற்றம் இல் தவம் செய்து எந்தை அருளினால் கயிலை நண்ணி
முற்று உணர் நந்தி போற்றும் முதல்நிலை வாயில் புக்கார்.

471.

முந்தை வேதம் முழுதும் உணர்த்தியே
எந்தை ஏக இரு நிலம் போந்து தம்
சிந்தை ஒன்றும் திறன் அரிது ஆதலின்
நொந்து பின்னரும் நோற்றலை மேயினார்.

பின்னர் = தவம் நோலும் முனிவரர்கள் (அகத்தியன், சனகர், ... முதலானோர்)
[நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன் - இணைய தமிழ் :) ]

பொதியில் மலையில் பலா ஸ்தலவிருட்சம்.
ஊர்ப்பெயர் குற்றாலம். இப்பெயர் ஆலின் நீழலில் வதியும் தென்னனைக்
காட்டுகிறது.

நா. கணேசன்

கந்தபுராணம் - படலப் பாடல்களைப் படிக்கலாம்:
http://www.tamilvu.org/slet/l41e0/l41e0son.jsp?subid=2667

DEV RAJ

unread,
Oct 7, 2011, 10:29:45 PM10/7/11
to மின்தமிழ்
>>>> ஆனந்த தாண்டவ நடராஜர் சோழர் கால (9-ஆம் நூற்.)
வடிவம். மாணிக்கவாசகர் காலத் தமிழர் படைத்த உருவம்,
முழுக்க 100% தமிழர் கான்செப்ட். அதேபோல் தான்
தெற்குநோக்கும் தென்முகக்கடவுள். <<<<


AghOra - word found in vEdas.
Is'AnaH sarva vidyAnAm - adores the yajus samhita.
"aghOra" - one of the five faces of Lord Siva is facing south;
Yama dik (south) is identified with liberation - mOksha.
'yAmyam dvAram tu mOkshadam' says PAdma samhita

dev


On Oct 7, 7:25 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

N. Kannan

unread,
Oct 7, 2011, 10:54:29 PM10/7/11
to mint...@googlegroups.com
2011/10/7 N. Ganesan <naa.g...@gmail.com>:

> என்ற பாசுரத்தினால் இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.
>
> http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2674
>
> Shiva mentioned in 4000 Divya Prabandham page,
> something like the following page will be great:
> http://www.shaivam.org/tamil/sanga.htm

அகச்சான்றுகள் என்று தேடமுற்படின், நாலாயிரத்தில் சிவ வருணனை எப்படி
வருகிறது என ஆராயலாம். அங்கு நடராஜ மூர்த்தத்தைப் பற்றிய சொற்றொடர்
வருகிறதா? எனத்தேடலாம். கடவுச் சொல்: ஆடல், ஆடலரசன், நர்த்தனம்,
தாண்டவம், ஊர்த்தவ வகையறா.

ஆழ்வார்கள் காலம் 9ம் நூற்றாண்டோடு முடிந்துவிடுவதால் இம்முயற்சி உங்கள்
கொள்கைக்கு உதவும்.

இதே போல் சைவத்திருமறைகளிலும் தேடலாம்.

தென்னவன் எனும் கருத்தியல் வேதத்திலேயே வருவதால் அதைக் கொள்ளமுடியாது
என்று தெரிகிறது.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Oct 7, 2011, 11:13:15 PM10/7/11
to மின்தமிழ்

On Oct 7, 9:54 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/10/7 N. Ganesan <naa.gane...@gmail.com>:

தக்ஷிணாமூர்த்தி வேதத்தில் இருக்கிறதா??

> நா.கண்ணன்

N. Ganesan

unread,
Oct 7, 2011, 11:42:02 PM10/7/11
to மின்தமிழ்

On Oct 7, 9:29 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>>> ஆனந்த தாண்டவ நடராஜர் சோழர் கால (9-ஆம் நூற்.)
>
> வடிவம். மாணிக்கவாசகர் காலத் தமிழர் படைத்த உருவம்,
> முழுக்க 100% தமிழர் கான்செப்ட். அதேபோல் தான்
> தெற்குநோக்கும் தென்முகக்கடவுள். <<<<
>
> AghOra - word found in vEdas.
> Is'AnaH sarva vidyAnAm - adores the yajus samhita.
> "aghOra" - one of the five faces of Lord Siva is facing south;
> Yama dik (south) is identified with liberation - mOksha.
> 'yAmyam dvAram tu mOkshadam' says PAdma samhita
>
> dev
>

பாத்மசம்ஹிதை தெற்கு யமனுடைய திசையானதால் மோட்சம்
அளிக்கும் என்கிறது.

நாலு முகம் இருக்கும் சிவனைச் சொல்லவில்லை, அச் சிவன்
கிழக்கு நோக்கினால், வலக்கைபக்கம் உள்ள முகம் தெற்கே
பார்த்துத்தான் ஆகவேண்டும்.

தனியாக சிவனை தெற்கே பார்க்கும் முழுவடிவமாக
வட நாட்டில் கோவில்கள் இல்லை. தமிழ்நாட்டிலும்
அனேகமாக கிழக்கே பார்த்தோ, (அபூர்வமாய் மேற்கே
பார்த்தோ) சிவன் கருவறை அமையும். தென்னன் - தட்சிணாமூர்த்தி
குருநாதராய் எழுந்தருளின ஆவுடையார்கோவில் ஒன்றே
கருவறை தெற்கே பார்த்தது. இக்கோயில் 700-800 வருஷம்
இருக்கலாம். மாணிக்கவாசகரே அமைத்தது என்றும்
சொல்வார்கள்.

N. Kannan

unread,
Oct 8, 2011, 1:16:28 AM10/8/11
to mint...@googlegroups.com
2011/10/8 N. Ganesan <naa.g...@gmail.com>:

> தக்ஷிணாமூர்த்தி வேதத்தில் இருக்கிறதா??
>
>> நா.கண்ணன்


ஐயோ! பெருமாளே!

நான் அப்படியெல்லாம் கேட்கவில்லை ஐயா! என் பேரை ஏன் அடியில் போடுகிறீர்?
கொத்து புரோட்டா ஆக்கிடுவாங்க! ஆள் வச்சு அடிப்பதாக பலராமன் சொல்கிறார் :-))

க.>

Innamburan Innamburan

unread,
Oct 8, 2011, 1:25:38 AM10/8/11
to mint...@googlegroups.com
" ...‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி...

~ காஞ்சி மஹாபெரியவா.

DEV RAJ

unread,
Oct 8, 2011, 3:16:23 AM10/8/11
to மின்தமிழ்
2011/10/8 N. Ganesan <naa.gane...@gmail.com>:

>> தக்ஷிணாமூர்த்தி வேதத்தில் இருக்கிறதா?? <<


Is there SOmAskanda in vEdas ?
Is there ArdhanArIs'vara in vEdas ?
Is there KyArOhaNes'vara in vEdas ?
Is there LingOdbhava in vEdas ?
Is there EkapAdamUrti in vEdas ?


dev

DEV RAJ

unread,
Oct 8, 2011, 3:33:31 AM10/8/11
to மின்தமிழ்

DEV RAJ

unread,
Oct 8, 2011, 3:37:27 AM10/8/11
to மின்தமிழ்
Oct 8, 8:42 am, "N. Ganesan"
>>> தென்னன் - தட்சிணாமூர்த்தி குருநாதராய் எழுந்தருளின ஆவுடையார்கோவில் ஒன்றே
கருவறை தெற்கே பார்த்தது.<<<


You mean to say that (formless) AtmanAtha swAmy is Thennan


dev

Reply all
Reply to author
Forward
0 new messages