Hey, check out what I have created at Padletகவி காளமேகத்தின் ஒரு பாடலும் அதன் பொருளும்

42 views
Skip to first unread message

Venkatachalam Dotthathri

unread,
Aug 14, 2014, 12:50:30 AM8/14/14
to mintamil
வெ.சுப்பிரமணியன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 14, 2014, 6:42:40 AM8/14/14
to Minthamil
This web page is not available என்ற சிதி வருகிறது சுட்டியை அழுத்தினால்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Venkatachalam Dotthathri

unread,
Aug 14, 2014, 8:30:48 AM8/14/14
to mintamil

v_dotthathri/i339es9p56ne

காளமேகம்- பாடல்

மாடு கிடப்பாடி மனையாள் உடல்பாதி

தேடுதற்குப் பிள்ளை தினைக் கடம்பன் -நாடில்

அரவு ஆபரணம் பூண் அம்பலவா! பிச்சை

இரவாமல் நீர் என்ன செய்வீர்?


மாடாகிய நந்தி உமது வாகனமானது. உம் மனையாள்

உமையோ உமது உடலில் பாதியானாள் பொருள்

தேடி வருவதற்குரிய உமது பிள்ளை முருகன் தினைப்

புனத்திலும் கடம்ப மலர்ச்சோலைகளிலும் சுற்றிக்கொண்டிருப்பவன். பாம்பு அணிகலனைப் பூண்டவாறு பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் சிவனே! ஆராய்ந்து பார்த்தால் நீர் பிச்சை எடுக்காது வேறு என்ன செய்ய முடியும்?

வெ.சுப்பிரமணியன் ஓம்

 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 14, 2014, 9:25:31 AM8/14/14
to Minthamil
நன்றி.  இப்போது படித்தேன்.

N. Ganesan

unread,
Aug 14, 2014, 11:07:50 AM8/14/14
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, August 14, 2014 5:30:48 AM UTC-7, V.dotthathri wrote:

v_dotthathri/i339es9p56ne



இன்னொரு காளமேகம் பாடல். உரை எழுதியுள்ளேன் இங்கே:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!
 

--------

நாகைக் காத்தான் மீது பாடிய இகழ்ச்சிவெண்பாவை புகழ்ச்சிவெண்பா ஆக்கியது:

வருணகுல ஆதித்தன் மீது தாசி காளிமுத்தம்மை பாடிய மடலுண்டு.
தமிழ்க்கடல் ராய. சொ. அச்சிட்டார்கள். அதை தட்டச்சவேண்டும். தருவேன்.

---------------

காளமேகம் சொந்த ஊர் எது? - என்று பாடிய வெண்பா
கிடைத்துள்ளது. ரா. நாகசாமி குழுவினர் கண்டுபிடித்தது.
அக்காலத்தில் நாகசாமி ஐயா எனக்களித்த வெண்பா இது.
பலரும் அறியாத காளமேகத்தின் படைப்பிது.

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த 
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன் 
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே; 
         இவனுக்கூர் எண்ணா யிரம்! 


பழைய திருவிளையாடற்புராணம் பாடிய பெரும்பற்றப்புலியூர்
நம்பியின் வமிசாவளியினர் சௌந்தரபாரதி. சோழியர்கள் வேம்பத்தூர்ப்
புலவர்கள். உவேசா முன்னுரையுடன் கூடிய பழைய அச்சுப்பிரதியை கவிமாமணி
இலந்தை ராமசாமி அவர்கள் எனதில்லம் வந்தபோது காட்டினேன்.
அப்போது சௌந்தரபாரதி அவர்கள் தந்த காளமேகம் வெண்பா ஒன்றை அளித்தார்.
சௌந்தரபாரதி ஒருதுறைக்கோவைக்கு உரை எழுதியிருந்ததும் சொன்ன ஞாபகம்.
அவ்வுரை கிடைத்தால் அருமை.

---------------
 காளமேகம் பொழிந்த இன்னொரு அழகான பாடல்:

வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி

சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்

கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த

வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!


மிக அழகான பாடல். பழைய தமிழ் சமூக வாழ்க்கையைச்

சொல்வது. புலவர்கள் விளக்கியவாறு உரையைத் தருகிறேன்.

இன்றைய வாழ்க்கைமுறை மாறிவிட்டது. எனவே பலருக்கும் இப்பாடல் புரிவதில்லை.

தினமணியிலே பிழைபட்ட உரை பார்க்கிறேன். தீங்கரும்பைக் கோணியன்

- கோன், கோனார் என்றெல்லாம் போகிறது. அது பிழை. சேணியன் - இந்திரன்.

வேணியன் என்பது தமிழின் பழைய அந்தணனை (அம்பட்டனை).

வேணி - முடி திருத்தி அழகாக்குவது இருபாலருக்கும் வேணியரே.

அந்தணனாக இருந்து கருமானை வேட்டலைக் குறிப்பிடுகிறார் காளமேகம்.


நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages