துருக்கித் தமிழ் (Turkish and Tamil?) ...

181 views
Skip to first unread message

rajam

unread,
Sep 16, 2014, 8:23:21 PM9/16/14
to tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
பொதுவாக, "இங்கேயிருந்து இது அங்கே போச்சு, அங்கேயிருந்து அது இங்கே வந்தது" என்ற மொழிச்சலசலப்பில் யான் ஈடுபடுவதில்லை. ஒரு மொழியை உருப்படியாகத் தெரிந்துகொள்வதற்கே என் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் நிலையில் தவளைப்பாய்த்து ஆய்வும் வெட்டுக்கிளித்தாண்டலும் என்னைக் கவர்வதில்லை.

அப்படியாகப்பட்ட எனக்கு ... அண்மையில் ஒரு துருக்கி நண்பன் கிடைத்திருக்கிறான், பாரதியாருக்குக் கண்ணம்மா அமைந்தது போல! அவனுக்கு 5-நாட்களுக்கு முன்னரே ஓராண்டு அகவை நிறைந்தது. எங்கள் குடியிருப்பில் அவனை ஒரு சின்னஞ்சிறு வண்டியில் ஈர்த்துவரும் அம்மையாருடன் பேச்சுக்கொடுத்த போது அவர்கள் துருக்கி நாட்டவர் என்று தெரிந்தது. 

நிற்க.

குழந்தையைக் கொஞ்சவும் குழந்தையுடன் விளையாடவும் குழந்தை மொழி பேசவேணுமில்லையா. பார்த்த இரண்டாம் நாளிலேயே நம் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் அருமையைச் சொன்னேன்! 

பிறகு அவனைக் கொஞ்ச வேண்டி, துருக்கிமொழிச்சொற்கள் சிலவற்றைக் கேட்டேன். சில சொற்களிலிருந்தே அந்த மொழி தமிழைப்போலவே "ஒட்டுநிலை (agglutinative)" மொழி என்று புரியத்தொடங்கியது.

('கொஞ்சுவது,' 'செல்லம் கொண்டாடுவது' ஆகிய சொற்களை எப்படி ஆங்கிலத்தில் சொல்லலாம்? இதுக்காகவே தமிழில் கல்வி அமையவேண்டும் என்பது என் கருத்து.)

சரி.

இன்னும் சரியாகப் பேச்சு வராவிட்டாலும் அந்தக் குழந்தை எப்படித் தன் அம்மாவை அழைக்கிறான் என்று கேட்டேன். அம்மா சொன்னது என்னை அசத்திவிட்டது. 

துருக்கி மொழியில் "அன்னே" என்பது குழந்தை தாயை அழைக்கும் சொல்லாம்! உடனே ... சங்கத்தமிழ் பற்றி அளந்துவிட்டேன்! (அந்த அம்மாப்பெண் உடனே 'இல்லை இல்லை, துருக்கி மொழியில் இருந்துதான் தமிழுக்குக் கடன்' என்று வாதாடாமல் ... அமைதியாக "Well, there must have been a lot of traffic between the two cultures" என்று மட்டும் சொன்னார். நல்ல வேளை எங்கள் நட்பு தொடர்ந்தது!)

இன்று காலையில் நடைப்பயிற்சியின்போது, "grandma" என்பதை எப்படிச் சொல்வீர்கள் என்று கேட்டேன். அந்தப் பெண் சொன்னது: "அன்னெ அன்னெ" என்பது தாய்வழிப் பாட்டி; "பபா (baba அன்னெ" என்பது தந்தைவழிப் பாட்டி. 

வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.

அளவிலா மகிழ்ச்சியில் திளைத்து நிற்கும்,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Sep 16, 2014, 8:36:03 PM9/16/14
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்
அதுமட்டுமல்ல அன்னாய் என செவிலித்தாய்க்கும் பேர் இருக்கும். வினவிப்பாருங்கள்

16 செப்டம்பர், 2014 8:23 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

K. Loganathan

unread,
Sep 16, 2014, 9:09:50 PM9/16/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 மதிப்புற்குரிய ராஜம் அம்மா அவர்களே

 துருக்கிய மொழி சுமேருத் தமிழோடு நெருங்கியத் தொடர்புடையது.  Polat Kaya  எனும் புகழ் பெற்ற துருக்கிய அறிஞர் கூற்றுப்படி சுமேருத் தமிழ் துருக்கிய மொழியிலிருந்து தோன்றியது என்ற கருத்து உடையவர். நான் அதனை மறுத்து சுமேரியர்கள்  கருப்பின மக்கள் என்பதொடு துருக்கியர்களை விட இன்னும் பழமையானவர்கள் என்று கூறியிருக்கின்றேன்.

ஆயினும் ஏதோவோர் தொடர்பு இருக்க வேண்டும் இரண்டு மொழிகளை ஆய்ந்தால் இது தெரிய்வரும்

இங்கெ 'அன்னே" என்ற சொல். சுமேருத் தமிழில் 'ஏண் உடு அன்னா" என்பன போன்ற பெர்யர்சொற்களில் இருப்பதாக்த் தெரிகின்றது.  ஆனால் பொதுவாக  'நின்னா. அம்மா; உம்மா" என்ற சொற்களே சுமேருத் தமிழிலும்

ஆயினும் 'அன்னே அன்னே'' என்பது போன்ற உறவுப் பெயர்கள் தமிழில் பரவலாக இருப்பது போல சுமேருத் தமிழிலும் உண்டு.

காண்க

 அதிலிருந்து '  grandmother, grandfather"  என்பன போன்ற சொற்களுக்கு ஈடான சுமேருத் தமிழ் சொற்கள் கீழே

உலகன்
 
>>>

ama'aya 
ama'aya [GRANDMOTHER] wr. 
ama-a-a "grandmother"

அம்மா-அய்யா அதாவது தாயாரின் தந்தை ஆகும். இப்பொழுது பொதுவாக ‘பாட்டன்’ என்றே அழைக்கப்படுகின்றது

amagal 
amagal [GRANDMOTHER] wr. 
ama-gal "grandmother; a priestess"

அம்மா-கள் : பெரிய அம்மா: இன்றும் தாயாரின் தமக்கையைக் குறிக்கும்..   priestess  என்ற கருத்து அநேகமாக ‘அம்மை-ஆர்” என்றவாறு ‘ஆர்’ விகுதியால் காட்டபப்டுகின்றது போலும். அக்காலத்தில் கோயில் தலைவியாக பல பெண்களே இருந்திருக்கின்றனர்.

amagula 
amagula [GRANDMOTHER] wr. 
ama-gu-la "grandmother"

அம்மா-குல : பெரிய அதாவது முதிய அம்மா? , இச்சொல் முதுமையை வைத்து வருவதாக ‘மூதாட்டி’ என்பதாக இருக்கலாம்

aya 
aya [CRY] wr. 
a; u3 "a cry of woe; to cry, groan" Akk. ahulap; nâqu 
aya [FATHER] wr. 
a-a; aya2; a-ia "father" Akk. abu 
aya [MARSHLAND] wr. 
aya4 "marshland" Akk. išiktu 
aya [SURROUND?] wr. 
aya4 "to surround?"

இங்கு இன்றும் வழக்கில் இருக்கும்”ஐயோ” என்ற அலறல் ஒலி ‘ஐயா” எனும் தந்தை உறவுச் சொல் இருப்பதைக் காண்க. இதற்கு கிளவிச் சான்றுகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது

ஆய( நீர் நிலம்) என்பது ‘ஆல்-அ” எனும் சொல்லின் திரிபாக இருக்கலாம். ‘ஆலவாய்’ என்பன போன்ற சொற்களோடு ஒத்துவரும் ஒன்று என்று தெரிகின்றது

ஆய்(  to surround?)  என்பது “ஆய்” : சிந்திப்பது ஆய்வது என்பதாக இருக்கலாம். ஓர் குழுவைக் குறிக்கும் ‘ஆயம்’ என்ற சொல்லும் இருக்கின்றது. ‘சூழ்ந்திருப்போர்’ என்ற கருத்தில் இச்சொல் தோன்றி இருக்கலாம்

ayaya 
ayaya [GRANDFATHER] wr. 
ayayax(|A.A.A|); A "grandfather"

இங்கு ‘ஐயா-ஐயா” அதாவது தந்தையின் தந்தை. இது இன்றும் வழக்கில் இருக்கும்’அப்பா-ஆயி’ ‘அம்மா-ஆயி’ போன்ற உறவுப் பெயர் ஆகும்.

குறிப்பு: இதுபோன்ற உறவுப் பெயர்கள் தமிழ் பண்பாட்டிற்கு உரியதாக் இருக்கும் இவை இவ்வாறு சுமேரு மொழியிலும் இருக்க, தெந்தமிழிற்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஆழமான அணுக்கமான  உறவின் உண்மை தெளிவாகும் என்று நம்புகின்றேன்.

seshadri sridharan

unread,
Sep 16, 2014, 9:56:58 PM9/16/14
to mintamil
துருக்கி மொழியில் "அன்னே" என்பது குழந்தை தாயை அழைக்கும் சொல்லாம்! உடனே ... சங்கத்தமிழ் பற்றி அளந்துவிட்டேன்! (அந்த அம்மாப்பெண் உடனே 'இல்லை இல்லை, துருக்கி மொழியில் இருந்துதான் தமிழுக்குக் கடன்' என்று வாதாடாமல் ... அமைதியாக "Well, there must have been a lot of traffic between the two cultures" என்று மட்டும் சொன்னார். நல்ல வேளை எங்கள் நட்பு தொடர்ந்தது!)

என் இரு கட்டுரைகள் உமக்கு இந்த உறவை அறிய உதவும் 

தேமொழி

unread,
Sep 16, 2014, 10:00:19 PM9/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

in Turkish

üvey anne >>> மாற்றாந்தாய்
anne,  baba >>> அம்மா, அப்பா
anne sütü >>> தாய்ப்பால் 
büyük anne >>> பாட்டி
anne sevgisi >>> தாயின் அன்பு

..... தேமொழி  

செல்வன்

unread,
Sep 16, 2014, 10:40:00 PM9/16/14
to vallamai, mintamil
துருக்கி ஐரோப்பா அருகே உள்ளதாக நினைத்தாலும் துருக்மெனிஸ்தான் ஒரு மத்திய ஆசிய நாடாகும். அங்கிருந்தே துருக்கியர் துரிக்கி என இப்போது அழைக்கபடும் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பட்டுபாதை வழியாக தமிழர், துருக்கியர் தொடர்பு முன்பு ஏற்பட்டு இருக்கலாம். தமிழ் அன்னை எனும் சொல் துருக்கி சென்றிருக்கலாம்.

பட்டுபாதையில் துருக்மெனிஸ்தான், வரைபடம்

தேமொழி

unread,
Sep 16, 2014, 11:28:50 PM9/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Marathi  Aai
Czech  Abatyse
Arabic  Ahm
Finnish  Äiti
Basque  Ama
Shona  Amai
Kannada  Amma
Tamil  Amma
Telegu Amma
Malayalam  Amma Maltese
Urdu Ammee
Azeri (Latin Script) Ana
Turkish Anne, Ana, Valide
Hungarian Anya, Fu

செல்வன்

unread,
Sep 16, 2014, 11:40:23 PM9/16/14
to vallamai, mintamil
அப்ப லத்தீன் பாதிப்பா?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

Nagarajan Vadivel

unread,
Sep 16, 2014, 11:44:01 PM9/16/14
to மின்தமிழ்
இந்த மாதிரி ஒரு பட்டியலை முதலில் போடுவோம்

எடுத்த எடுப்பிலேயே ஆஹா இது எங்களுது எங்ககிட்ட இருந்து எடுத்துக்கிட்டாய்ங்க நாங்க போனாப்போவுதுன்னு குடுத்தோம் என்று பில்டப் வேண்டாமே

பேராசிரியர் பேராசிரியை பேராசான் பேராசிரியம்மா குறிப்பிடும்

தமிழ் "ஒட்டுநிலை (agglutinative)" மொழி என்பதைப் பலர் இங்கே கவனத்தில் கொள்வதில்லை
சமஸ்கிரிதத்தில் இருந்து தமிழ் என்றால் தமிழ் என்னும் ஒட்டுமொழியிலிருந்து எப்படி உயர்மொழியாம் சமஸ்கிரிதம் பிறந்திருக்கும்?

தமிழில் இருந்து சமஸ்கிரிதம் என்றால் தாயைவிட சேய் உயர்ந்தது எப்படி?

இந்த வேறுபாட்டை முழுமையாக அறிந்துகொள்ளாமல் வேர்ச்சொல் முனைவர் ஒருங்குறியீட்டுக்கு விதம் விதமா சோப்பு சீப்புக் கண்ணாடி விற்பதெப்படி

எனக்கொரு உண்மை தெரிஞ்ச்சாகனுஞ் சாமி

மதஎசுஇந்திரன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Sep 16, 2014, 11:52:59 PM9/16/14
to mint...@googlegroups.com
//வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.//

லுத்வானியன் மொழியில் "ஆன்யா " என்றால் அம்மா என்று கேள்விப் பட்டேன்.  வெகுநாள்களுக்கு முன்பு, அந்த மொழிக்கும், தமிழுக்கும் கிட்டத்தட்ட 75 சொற்கள் ஒரே மாதிரி  உள்ளன என்று படித்தேன்.  அந்த bookmark தொலைந்து போய்விட்டது.

கொரிய  மொழியில் பல சொற்களில் உடன்பாடு உள்ளன.  அப்பா, அம்மா தெரு, நாள் என்னும் சொற்கள் கொரிய மொழியிலும் அதே பொருளைத்தான் கொடுக்கின்றன.

ஒரு அரிசோனன் 

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Sep 17, 2014, 12:00:52 AM9/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///அப்ப லத்தீன் பாதிப்பா///

யாரிடம் இருந்து யாருக்கு போனதோ தெரியவில்லை..

வருங்காலத்தில் மரபணு ஆய்வுதான் இதனை தெளிவாக்க  துணை செய்ய வேண்டும்.  அதுவரை மொழிகள் நிலைத்திருக்குமா?

சுமேரு  ஆய்வு கட்டுரைகள் வழி பார்க்கும் பொழுது  ஏதோ ஒரு  மத்திய ஆசிய மொழிலத்தீன், சமஸ்கிரதம், துருக்கி, பாரசீகம் என எல்லா மொழிகளுக்கும் ஒரு மூல மொழி இருப்பது தெரிகிறது .

அவை இந்தோ ஆசிய மொழிக்குடும்பம் போலும்.

பல்லாயிரக்கான ஆண்டுகளில் சிதைந்துவிட்டிருக்கும் போலிருக்கிறது 

தமிழில் இருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் குட்டி போட்டு, பிறகு வளர்த்த கடா முட்டுவது, தீட்டிய மதத்தையே பதம் பார்ப்பது போல... போல ஒருவருக்குள் ஒருவர் அடிபிடி ரகளை.

கீழே ஆங்கிலம் பாரசீகம் சமஸ்கிரதத்திற்கான ஒற்றுமை.

இது முன்னர் குழுமத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதுதான்.

ஒப்பு நோக்கும் பொழுது முதலில்  மொழியியல் வல்லுனர்கள் "பெயர்ச்சொல்லில்தான்" ஒற்றுமை தேடுவார்கள் எனப் படித்த ஞாபகம்.

..... the

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2014, 12:22:34 AM9/17/14
to மின்தமிழ்

2014-09-17 9:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
வருங்காலத்தில் மரபணு ஆய்வுதான் இதனை தெளிவாக்க  துணை செய்ய வேண்டும்

மின்
​ தமிழில் மரபணு மாட்டிக்கிட்டுத் தாளம் படுமோ தறிபடுமோ என்று தர்ம அடி வாங்குதே கண்ணா

மரபணுவிலிருந்துஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மாற்றம்பெரும் தகவலும் ஒரு தலை முறையின் சிந்தனையிலிருந்து இன்னொரு தலை முறைக்கு மூளையில் வழியாகக் கற்றல் மாற்றம் செய்யும் எவை எவை என்று பட்டியலிடாமல் விட்டுவிட்டால் எப்பு டீஈஈ

Transfer of information from gene to gene and brain to brain

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Sep 17, 2014, 12:27:26 AM9/17/14
to mint...@googlegroups.com
பட்டியல் போடலாம் பேராசிரியரே......மரபணுத் தகவலை பற்றி மற்றொரு இழையில்.

ராஜம் அம்மா போனால் போகிறது என்று கொஞ்சம் இந்தப் பக்கம்  தலை காட்டுகிறார்கள்... அவர்கள் இழையில் அவர்களை வெப்பேற்றாமல் அன்னையோடு  மட்டும் நிறுத்திக் கொள்ளலாம்.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2014, 12:31:17 AM9/17/14
to மின்தமிழ்

2014-09-17 9:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அவர்களை வெப்பேற்றாமல் அன்னையோடு  மட்டும் நிறுத்திக் கொள்ளலாம்.

போட்டுக்குடுக்குறீங்களே

மதஎசுஇந்திர

Dhivakar

unread,
Sep 17, 2014, 1:09:35 AM9/17/14
to vallamai, rajam ramamurti, தமிழ் மன்றம், மின்தமிழ்
ராஜம் அம்மா!

திருவாசகத்தைப் பொருத்தவரை அன்னே என்றால் அம்மா’தான்.. தமிழின் மிகச் சிறந்த நூல் என்றால் அது திருவாசகம்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. அன்னே என்பது அன்னெ என்றழைப்பதில், அழைக்கப்படுவதில் மாறுதல் ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

திருவெம்பாவை

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
    உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
    தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
    சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
    என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

திருவாசகம் - அன்னைப் பத்து. இந்தப் பத்தில் அத்தனையிலும் அன்னே எனும் வார்த்தை வரும். 

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.  

தாயே! வேதங்களாகிய சொல்லையுடையவர்; வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்; செம்மையான திரு மேனியை உடையவர்; நாதமாகிய பறையினையுடையவர் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! நாதமாகிய பறையையுடைய இத் தலைவரே, பிரம விட்டுணுக்களுக்கும் தலைவராவார் என்று சொல்லுவாள்.
பெரிய புராணம் 12 ஆம் திருமுறை (29-74)

அன்னே யுன்னை யல்லால்யான்
    ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
    சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
    வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
    பணிந்து மேல்பாற் போதுவார்.

இங்கு அன்னே என்பது அம்மையப்பனைக் குறிக்கிறது (சுந்தரர் பாடிய பொன்னார் மேனியன் பாடலில் வருவ்ம் ‘அன்னே’ என்பதன் பெரிய புராணக் குறிப்பு

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

bala subramani

unread,
Sep 17, 2014, 3:42:11 AM9/17/14
to மின்தமிழ்
ஆஸ்திரேலியா நாட்டின் மைய பகுதிகளில் வாழ்பவர்கள் தாயை அஞ்ஞா என்றும் சற்று மைய  பகுதியல் இருந்து வெளியே   உள்ளவர்கள் ஆயி என்று அம்மாவையும் ,அதற்க்கு சற்று வெளியே உள்ளவர்கள் ஆத்தா  என்றும் கடற்கரையை ஒட்டி வாழ்பவர்கள் அம்மா என்றும் வழங்கப் படுவதை என் கடல் மக்களின் புலம் பெயர்ந்த வரலாற்று  ஆய்வுகளில் தெரிந்து கொண்டேன் 

நமது பகுதிகளில் இருந்து அந்த மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பதை இன்றும் மருத நில மக்களாக உள்ள மென் புல மக்களான பள்ளர்கள் அல்லது மள்ளர்கள் என்கின்ற உழுகுடிகளின் மரபு கிளைகளில்  அஞ்ஞா, ஆயி ஆத்தா அம்மா என்கின்ற பள்ளர்கள் இருப்பதை நாம் காணலாம் 

என் ஆய்வுகளில் தமிழ் உழு முது குடிகளான பள்ளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக  தான் இருந்து உள்ளார்கள் என்பதை உறுதி செய்து கொண்டேன்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2014, 7:50:59 AM9/17/14
to vallamai, மின்தமிழ்

17 செப்டம்பர், 2014 12:00 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

///அப்ப லத்தீன் பாதிப்பா///

யாரிடம் இருந்து யாருக்கு போனதோ தெரியவில்லை..

வருங்காலத்தில் மரபணு ஆய்வுதான் இதனை தெளிவாக்க  துணை செய்ய வேண்டும்.  அதுவரை மொழிகள் நிலைத்திருக்குமா?

சுமேரு  ஆய்வு கட்டுரைகள் வழி பார்க்கும் பொழுது  ஏதோ ஒரு  மத்திய ஆசிய மொழிலத்தீன், சமஸ்கிரதம், துருக்கி, பாரசீகம் என எல்லா மொழிகளுக்கும் ஒரு மூல மொழி இருப்பது தெரிகிறது .

அவை இந்தோ ஆசிய மொழிக்குடும்பம் போலும்.

பல்லாயிரக்கான ஆண்டுகளில் சிதைந்துவிட்டிருக்கும் போலிருக்கிறது 

தமிழில் இருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் குட்டி போட்டு, பிறகு வளர்த்த கடா முட்டுவது, தீட்டிய மதத்தையே பதம் பார்ப்பது போல... போல ஒருவருக்குள் ஒருவர் அடிபிடி ரகளை.

கீழே ஆங்கிலம் பாரசீகம் சமஸ்கிரதத்திற்கான ஒற்றுமை.

இது முன்னர் குழுமத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதுதான்.

ஒப்பு நோக்கும் பொழுது முதலில்  மொழியியல் வல்லுனர்கள் "பெயர்ச்சொல்லில்தான்" ஒற்றுமை தேடுவார்கள் எனப் படித்த ஞாபகம்.

சங்க இலக்கியங்களீல் அன்னையை அம்மா என்று அழைக்கும் சொற்களை நான் கண்டது இல்லை. அமமா ஒரு விளிச்சொல்தான் பெயர்சொல் அல்ல.

9 க்கான பெயர்

தமிழில் ஒன்பதை தொண்டு, தொன்பது என சொல்லுகிறோம். பத்துக்கு முந்தியது என பொருள்.

ஒரு காலத்தில் ஒன்பது எண்களே இருந்து இருக்கலாம். பின் பதின்ம முறைக்கு  மாறியபோது பத்துக்கு முன் ஒரு எண்ணை  தொள் பத்து என பெயரிட்டு இருக்கலாம். வடமொழிகளில் புதிய எனும் பொருள்தரும் “நவ” என்று அழைத்துள்ளார்கள். உலகின் பல மொழிகளில் ஒன்றுக்கு யுனோ என்று இருப்பதால் தமிழில் இருந்துதான் எண்கள் பரவி இருக்கலாம்

லாஜிக் கொஞ்சம் ஓவரா இருக்கா?

இதுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் கூட சில நாளைக்கு நான் சொல்லுவது சரியே எனக்கொண்டு இதே கோணத்தில் சிந்தியுங்கள்.
 
Hari Krishnan

unread,
Sep 17, 2014, 8:17:45 AM9/17/14
to vallamai, மின்தமிழ்

2014-09-17 17:20 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தமிழில் ஒன்பதை தொண்டு, தொன்பது என சொல்லுகிறோம். பத்துக்கு முந்தியது என பொருள்.

தொண்டு என்ற பயன்பாடு எப்போது நிலவியது?

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்

ஒன்பதிற்றொன்பது களிறு என்று இருமுறை ஒன்பதைக் குறுந்தொகை (292) சொல்கிறது.  தொண்டு என்ற சொல் வேறு எங்காகிலும் பயன்பட்டிருக்கிறதா?  இருந்தால், சொன்னால் நன்றியுடையவனாவேன்.  (இதே இழையில் கேட்டது தவறென்றால், மன்னிது விட்டுவிடவும்.  இந்த உரையாடலைத் தொடரவேண்டாம்!)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Geetha Sambasivam

unread,
Sep 17, 2014, 8:30:07 AM9/17/14
to மின்தமிழ்
தாய்வழிப் பாட்டியை அம்மம்மா என அழைக்கும் வழக்கம் நம்மில் சில குடும்பங்களில் உண்டு.  அதைப் பார்த்தால் அன்னெ, அன்னே என்பது பொருத்தமாகத் தான் இருக்கிறது.  பபா அன்னெ என்பதும் "தாத்தாம்மா" என தந்தை வழிப்பாட்டியை அழைக்கும் வழக்கத்தில் பொருந்தும். 

2014-09-17 5:53 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
 
இன்று காலையில் நடைப்பயிற்சியின்போது, "grandma" என்பதை எப்படிச் சொல்வீர்கள் என்று கேட்டேன். அந்தப் பெண் சொன்னது: "அன்னெ அன்னெ" என்பது தாய்வழிப் பாட்டி; "பபா (baba அன்னெ" என்பது தந்தைவழிப் பாட்டி. 

வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.

அளவிலா மகிழ்ச்சியில் திளைத்து நிற்கும்,
ராஜம்

--

N. Ganesan

unread,
Sep 17, 2014, 10:17:36 AM9/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, September 17, 2014 5:17:45 AM UTC-7, Hari wrote:

2014-09-17 17:20 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தமிழில் ஒன்பதை தொண்டு, தொன்பது என சொல்லுகிறோம். பத்துக்கு முந்தியது என பொருள்.

தொண்டு என்ற பயன்பாடு எப்போது நிலவியது?

தொண்டு³ toṇṭu

n. < தொள். Nine; ஒன்பது. தொண்டுபடு திவவின் (மலைபடு. 21).

நா. கணேசன்

rajam

unread,
Sep 17, 2014, 11:46:30 AM9/17/14
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
என் அடிப்படைக் கேள்வி: 

///வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.///

துல்லியமான மறுமொழி சொன்னவர்கள், தொடர்பான செய்திகளைக் கொடுத்தவர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி! 

கூடுதல் செய்திக்கு இங்கே பார்க்கலாம்: 

இங்கே Dr. Baldi என்பவர் சொன்னது என்னை ஈர்த்தது:

"The Hittites used the word 'Annas,' which has a different Indo-European root, cognate with the Latin word 'Annus,' which means old woman," ... "

இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள விரும்பாத இன்னொருவர் சொன்னது:
"Old woman? And Happy Mother's Day to you, Dr. Baldi."

"At any rate, the Hittites -- an ancient race that lived near what today is Turkey -- are long gone, but "Moder" and "Mutter" are still with us, and babies are still making what Dr. Baldi calls "an articulatory extension of the sucking impulse, a nasal consonant, in which the air flows through the nasal passage ... and the lips come together."

இப்படித்தான் பல்கலைக்கழகங்களில் விவாதம் நடக்கும். 

அது கிடக்க.

++++++++++++++++++ 

1. சங்க இலக்கியத்தில் "அன்னை," "அன்னாய்" என்ற சொற்களுக்கும் "அஞ்ஞை" என்ற சொல்லுக்கும் பொருள் வேறுபாடு உண்டு. முன்னவை (அன்னை, அன்னாய்) பெற்ற தாய் + செவிலியரைக் குறிக்கும். பின்னது (அஞ்ஞை), தாய் மகளைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல். சான்று வேண்டின் ... உங்கள் கைவிரலில் சிக்கிய இணையத்தில் தேடுங்கள் கிடைக்கும். 

2. டாக்டர் நாகராசன் ஐயா, இனி மறந்தும் என்னை, "பேராசிரியர் பேராசிரியை பேராசான் பேராசிரியம்மா" என்று குறிப்பிட்டுவிட வேண்டாம்! ;-) எனக்குப் "பேராசிரியை" என்ற title இல்லாததால் என்னை மட்டம் தட்டிப் பேச என்றே இங்கே சிலர் இருக்கிறார்கள், அவுங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்துவிடலாம்! கவனமா இருங்க! ;-)

3. தேமொழீ, நீவிர் சொன்னது, "ராஜம் அம்மா போனால் போகிறது என்று கொஞ்சம் இந்தப் பக்கம்  தலை காட்டுகிறார்கள்... அவர்கள் இழையில் அவர்களை வெப்பேற்றாமல் அன்னையோடு  மட்டும் நிறுத்திக் கொள்ளலாம்." என்பது நும் விவேகத்தைக் காட்டுகிறது! நன்றி. டாக்டர் நாகராசன் அவர்களின் பதிலைப் ("போட்டுக்குடுக்குறீங்களே") புறக்கணித்துவிட்டேன். துயரமில்லை.

ஆனாலும் ... 'வெறுப்பு' என்ற உணர்ச்சியை என்மேல் ஏற்றிச்சொல்லத் தேவையில்லை! சிறுமை கண்டு பொங்குவேனே தவிர, கண்டதுக்கும் என் உணர்ச்சியை வீணாக்கமாட்டேன். ;-)

4. கணேசன், ஹரிக்கு மலைபடுகடாம் குறிப்பை அனுப்ப நினைத்திருந்தேன். 3/2-மணி முந்திய உங்களூர் நேரம் என் வாய்ப்பை எடுத்துக்கொண்டது! எனினும், நன்றி!

5. திரு திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே .. என் மழலை நண்பனிடம் கொஞ்சிக் குலவுவதின் மூலம் துருக்கி-தமிழ் ஒற்றுமைகளைக் காண முயல்வேன். நன்றி.

+++++++++++++++++

இப்படிக்கு,
ராஜம்

On Tuesday, September 16, 2014 5:23:21 PM UTC-7, rajam wrote:

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2014, 1:20:57 PM9/17/14
to மின்தமிழ்

2014-09-17 21:16 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
டாக்டர் நாகராசன் ஐயா, இனி மறந்தும் என்னை, "பேராசிரியர் பேராசிரியை பேராசான் பேராசிரியம்மா" என்று குறிப்பிட்டுவிட வேண்டாம்! ;-) எனக்குப் "பேராசிரியை" என்ற title இல்லாததால் என்னை மட்டம் தட்டிப் பேச என்றே இங்கே சிலர் இருக்கிறார்கள், அவுங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்துவிடலாம்! கவனமா இருங்க! ;-)

உங்கள்
​ விருப்பம் அதுவென்றால் அப்படியே ஆகட்டும்.  எங்கள் பல்கலைக் கழகத்தில் எல்லா ஆசிரியர்களும் பேராசிரியர்களே

ஒருவர் என்பெயர் பேராசிரியர். ஐங்கரன் விரிவுரையாளர் என்று சொல்வார்.  எங்கள் பல்கலைக்கழகதில் முக்கல் முனகல் தள்ளு முள்ளு எல்லாம் முனவர் பட்டம் பெற்றவர்கள் முனைவர் பட்டம் பெறாதவர்கள் என்ற இரு பிரிவினரிடம் மட்டுமே நிகழும்

என்னுடைய துறையின் நிர்வாக உதவியளர்களும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்தான்.  சில துறைகளில் துறைத் தலைவர்கள் முனைவர் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்

நீங்கள் என்னைவிட வயதில் மூத்தவர்.  என்னுடைய நண்பர் ஒருவர் உங்கள் வயதை ஒத்தவர் தமிழ்நாட்டு மேடைகளில் விடாமல் ஒரு கதை சொல்வார்.  அதைச் சொல்லிவிடுகிறேன்

ஒரு மன்னர் அந்நாட்டில் அவருக்கு எதிராக யார் என்ன பேசினாலும் ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து அரசவையில் நிற்கவைத்து தண்டனை வழங்குவாராம்.  ஒருநாள் அவ்வாறு தண்டனை வழங்க அரசர் அரசவைக்கு வந்தாராம்.  முதலில் ஒருவனை அழத்து வந்து அரசே இவன் தங்களைப் பற்றி கேலி பேசினான் என்று குற்றம் சாட்ட கேலி பேசிய வாயில் முழு வாழைப்பழமாக 25 த் திணியுங்கள் என்ற தண்டனை கொடுத்தாராம்.  அடுத்து வந்தவன் செய்த குற்றம் கொஞ்சம் அதிகப்படியானது என்பதால் அவன் வாயில் அன்னாசிப் பழத்தைத் திணியுங்கள் என்று சொன்னதும் தண்டனை பெற்றவன் சிரித்தானாம். ஏன் சிரித்தாய் என்று கேட்டதற்கு அரசே என்னைவிடக் கடுமையாகப் பேசியவன் அடுத்து வரப்போகிறான் அரசர் அவன் வாயில் பலாப்பழத்தைத் திணிக்கவேண்டும் என்று தண்டனை கொடுப்பீர்கள் அவன் நிலையை நினைத்துச் சிரித்தேன் என்றாராம். 

உங்கள் கதை வாழைப்பழம் என்றால் என்கதை பலாப்பழம். 

என்னைவைத்து பல்கலைக் கழகம் பரமபதம் விளையாடியது ஏணியும் பாம்புமாக ஏறி ஏறி எப்போது 25 ஆண்டுகள் பணிக்காலம் முடியும் என்று கணக்குப்போட்டு பல்கலைக் கழகத்தை உதறிவிட்டு வந்தவன் நான். 

எனக்கும் உங்களுக்கும் வேறுபாடென்றால் நீங்கள் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுவிட்டீர்கள். என்னை எந்த நிகழ்வும் பாதிக்கும் அளவுக்கு என் தாயோ தாரமோ மகளோ மன உழைச்சல் ஏற்படுத்தியதில்லை மாறாகப் பொங்கியெழு மனோகரா என்று முடுக்கிவிட்டார்கள். 

எங்கள் பல்கலைக் கழகத்தில் எத்தனை பேராசிரியர்கள் என்று பணிபுரிந்த பட்டியலில் பல பேராசிரியர்கள் இருப்பார்கள். ஆனால் பல்கலைக் கழகத்தின் 1976-2002 வரலாறு எழுதப்படும்போது என்பெயர் இல்லாமல் எழுத முடியாது என்றளவுக்குப் போராட்டமே வாழ்க்கையாக குருஷேத்திரமே பல்கலைக்கழகமாக அமைந்துவிட்டது. 

இன்றும் என் திறமையை பல்கலைக் கழகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சிலருக்கு மனத்தாங்கல் இருந்தாலும் என்னால் பல்கலைக் கழகம் தன் மாண்பைக் காப்பாற்றிக்கொண்டது என்ற எண்ணம் பலர் மனதில் நிறைந்திருப்பதை உணரும்போது மனத்துயர் மறைந்து மகிழ்வு தோன்றுகிறது

நீங்கள் ஹார்ட் அட்டாக் வரும் என்று சொன்னவர்களுக்கு அதிகப்பட்சமாக வயிற்றெரிச்சல் மட்டுமே வர வாய்ப்புள்ளது என்பது என் காத்துட்டுக் கருத்து

மதஎசுஇந்திரன்

Dev Raj

unread,
Sep 17, 2014, 1:49:26 PM9/17/14
to mint...@googlegroups.com
On Wednesday, 17 September 2014 10:20:57 UTC-7, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:
என்னை எந்த நிகழ்வும் பாதிக்கும் அளவுக்கு என் தாயோ தாரமோ மகளோ மன உழைச்சல் ஏற்படுத்தியதில்லை மாறாகப் பொங்கியெழு மனோகரா என்று முடுக்கிவிட்டார்கள்.  
 
நீங்கள் பல பெயர்களில் உலவுவது அவர்களுக்குத் தெரியுமா ?
தெரிந்தால்’மநோஹரமான பெயர் கொடுத்தோமே, ஏன் 
இப்படி விநோதமான பெயர்கள் ?’ எனப் பொங்கி
எழுவார்கள் :))

தேவ்

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2014, 1:59:41 PM9/17/14
to மின்தமிழ்

2014-09-17 23:19 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
எனப் பொங்கி
எழுவார்கள் :))

மாட்டார்கள்.
​ எனக்குப் பிடித்த தலைவர் அண்ணா. அவருடைய புனைபெயர்ப் பட்டியல் இங்கே.

நான் இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன்
மதஎசுஇந்திரன்

http://www.arignaranna.net/punaip_fr.htm

அறிஞர் அண்ணாவின் புனை பெயர்கள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பெயர்
இதழ்
சௌமியன் 11.02.1934 ஆனந்தவிகடன்
பரதன் 13.02.1938 குடியரசு
நக்கீரன் 03.04.1938 குடியரசு
வீரன் 09.01.1939 குடியரசு
குறும்போன் 1939  
துரை 1942  
வீனஸ் 15.03.1942 திராவிடநாடு
சமதர்மன் 1943 திராவிடநாடு
ஒற்றன் 1943 திராவிடநாடு
நீலன் 1944 திராவிடநாடு
ஆணி 1944 திராவிடநாடு
சம்மட்டி 29.04.1945 திராவிடநாடு
காலன் 17.06.1945 திராவிடநாடு
பேகன் 04.11.1945 திராவிடநாடு
வழிப்போக்கன் 1945 திராவிடநாடு
சிறைபுகுந்தோன் 1946 திராவிடநாடு
குறிப்போன் 1946 திராவிடநாடு
கொழு 12.01.1947 திராவிடநாடு
குயில் 14.01.1949 திராவிடநாடு
கீரதர் 18.04.1949 திராவிடநாடு

rajam

unread,
Sep 17, 2014, 3:36:41 PM9/17/14
to mint...@googlegroups.com
///நீங்கள் ஹார்ட் அட்டாக் வரும் என்று சொன்னவர்களுக்கு அதிகப்பட்சமாக வயிற்றெரிச்சல் மட்டுமே வர வாய்ப்புள்ளது என்பது என் காத்துட்டுக் கருத்து///

காத்துட்டுக்கும் பிரயோசனமில்லாத கருத்து! நீங்கள் எந்த வகைப் "பேராசிரியரா"க இருந்தால் என்ன, எத்தனைப் பெண்கள் ஆதரவு கொடுத்து உங்களை ஊக்குவித்தால் என்ன ... "ஹார்ட் அட்டாக்" என்பதில் உள்ள சிலேடையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!!! இத்தனைக்கும் இணையத்தில் பூடகமாகப் பேசிவரும் பலரில் நீங்கள் ஒருவர் என்பது என் கணிப்பு. என் எளிய மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் தோற்றுவிட்டீர்களே, ஐயனே! ;-)

ஆனாலும் ... ஓருண்மையைச் சொல்லுகிறேன். என்னை, என் கல்விப்பணியை, என் ஆய்வை ... குறைப்படுத்திப் பேசியவர்கள் பலரும் வயித்தெரிச்சலில் தொடங்கிப் புற்றுநோயால் செத்தார்கள், இது பொய்யில்லை. ச்சும்மாச்சுக்கும் ... காசிருக்கு, பணமிருக்கு, பதவியிருக்கு, வாய்ப்பிருக்கு என்ற திமிர்த்தனத்தில் மிதப்பவர்கள் எளியவர்களை மட்டம் தட்டக்கூடாது. இதுவே இறையாண்மை தெரிவிக்கும் நீதி!

சரி, இந்த மாதிரியான சல்லாப உரையாடல் என் அடிப்படைக் கேள்விக்கு உதவவில்லை என்பதால் மேலே தொடர விருப்பமில்லை; புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மற்றபடி, கருத்துகளுக்கு நன்றி. வருகிறேன். 

இப்படிக்கு,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2014, 8:43:38 PM9/17/14
to vallamai, மின்தமிழ்

17 செப்டம்பர், 2014 8:17 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-09-17 17:20 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தமிழில் ஒன்பதை தொண்டு, தொன்பது என சொல்லுகிறோம். பத்துக்கு முந்தியது என பொருள்.

தொண்டு என்ற பயன்பாடு எப்போது நிலவியது?

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்

ஒன்பதிற்றொன்பது களிறு என்று இருமுறை ஒன்பதைக் குறுந்தொகை (292) சொல்கிறது.  தொண்டு என்ற சொல் வேறு எங்காகிலும் பயன்பட்டிருக்கிறதா?  இருந்தால், சொன்னால் நன்றியுடையவனாவேன்.  (இதே இழையில் கேட்டது தவறென்றால், மன்னிது விட்டுவிடவும்.  இந்த உரையாடலைத் தொடரவேண்டாம்!)

ஐயா

 கன்னடம் தெலுகு மொழிகளி ஒன்பதுக்கு தொன்பத்து, தொம்மிதி என்பார்கள் 

தமிழிலும் 90, 900 போன்றவனவற்றை தொள் எனும் முன்னொட்டு வைத்து சொல்லுகிறோம்

பாழென காலென அரையென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை ஊழியெண் - பரிபாடல் 3(79)

தேமொழி

unread,
Sep 17, 2014, 9:53:03 PM9/17/14
to mint...@googlegroups.com

நீங்கள் எந்த வகைப் "பேராசிரியரா"க இருந்தால் என்ன, எத்தனைப் பெண்கள் ஆதரவு கொடுத்து உங்களை ஊக்குவித்தால் என்ன ... "ஹார்ட் அட்டாக்" என்பதில் உள்ள சிலேடையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!!!

.... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2014, 10:21:46 PM9/17/14
to மின்தமிழ்

2014-09-18 7:23 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எத்தனைப் பெண்கள் ஆதரவு கொடுத்து உங்களை ஊக்குவித்தால் என்ன ...

நான்
​ குறிப்பிட்ட என் தாய் தாரம் மகள் என்ற மூன்றுபேரை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதை நீங்கள் நன்றாகவே புரிந்துகொண்டுவிட்டீர்கள்

மற்றபடி ஹார்ட் என்பதற்கும்  அட்டாக் என்பதற்கும் எனக்கு ஒரு பொருள் மட்டுமே தெரியும் என்ப​து என்னுடைய குருவி மூளைச் சிந்தனைத் திறனை நன்றாக அறிந்துள்ள நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியுமே

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Sep 17, 2014, 10:41:44 PM9/17/14
to mint...@googlegroups.com

On Wednesday, September 17, 2014 7:21:46 PM UTC-7, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:

2014-09-18 7:23 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எத்தனைப் பெண்கள் ஆதரவு கொடுத்து உங்களை ஊக்குவித்தால் என்ன ...

நான்
​ குறிப்பிட்ட என் தாய் தாரம் மகள் என்ற மூன்றுபேரை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதை நீங்கள் நன்றாகவே

சிவகாமிப் பாட்டி....  இந்த அறிக்கைக்காக, உங்களைப்  பற்றிக் குறிப்பிடாதற்காக, நீங்கள் பேராசிரியருக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

எமக்குத் தொழில் போட்டுக் கொடுப்பது

..... தேமொழி

தேமொழி

unread,
Sep 22, 2014, 1:03:17 AM9/22/14
to mint...@googlegroups.com

On Wednesday, September 17, 2014 7:41:44 PM UTC-7, தேமொழி wrote:

On Wednesday, September 17, 2014 7:21:46 PM UTC-7, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:

2014-09-18 7:23 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எத்தனைப் பெண்கள் ஆதரவு கொடுத்து உங்களை ஊக்குவித்தால் என்ன ...

நான்
​ குறிப்பிட்ட என் தாய் தாரம் மகள் என்ற மூன்றுபேரை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதை நீங்கள் நன்றாகவே

சிவகாமிப் பாட்டி....  இந்த அறிக்கைக்காக, உங்களைப்  பற்றிக் குறிப்பிடாதற்காக, நீங்கள் பேராசிரியருக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

என் வேண்டுகோளுக்கு இணங்கி உங்கள் பேரா பேரருக்கு கொடுத்து வந்த ஆதரவை விளக்கிக் கொண்டு அவரை  உறுப்பினர் பதவியில் இருந்து விளக்கி, கட்சியில்  இருந்தும் வெளியேற்றியதற்கு மகளிரணி சார்பில்  நன்றி.  

அடுத்த முறை சென்னையில் உங்கள் தலைமையில் மகளிர் அணி கூடும் பொழுது, இந்த நிகழ்வை முன்னிட்டு அதை ஜிகிர்தண்டா விழாவாகக் கொண்டாடலாம். 

N. Ganesan

unread,
Sep 23, 2014, 9:46:19 AM9/23/14
to mint...@googlegroups.com

On Tuesday, September 16, 2014 8:52:59 PM UTC-7, oruarizonan wrote:
//வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.//

லுத்வானியன் மொழியில் "ஆன்யா " என்றால் அம்மா என்று கேள்விப் பட்டேன்.  வெகுநாள்களுக்கு முன்பு, அந்த மொழிக்கும், தமிழுக்கும் கிட்டத்தட்ட 75 சொற்கள் ஒரே மாதிரி  உள்ளன என்று படித்தேன்.  அந்த bookmark தொலைந்து போய்விட்டது.

கொரிய  மொழியில் பல சொற்களில் உடன்பாடு உள்ளன.  அப்பா, அம்மா தெரு, நாள் என்னும் சொற்கள் கொரிய மொழியிலும் அதே பொருளைத்தான் கொடுக்கின்றன.

ஒரு அரிசோனன் 

இந்த Altaic மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்
யாரோஸ்லாவ் வாசெக். அவரது தமிழ்ப் பேச்சு:

தமிழர்கள் அவரை அழைத்து கௌரவித்துள்ளனர்

வாசெக் கட்டுரைகளில் செய்திகள் இருக்கலாம்.

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Sep 23, 2014, 4:12:16 PM9/23/14
to mint...@googlegroups.com
பகிர்ந்தமைக்கு நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

rajam

unread,
Oct 3, 2014, 6:38:48 PM10/3/14
to tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
///அம்மையாரின் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மழலையுடன் கொஞ்சி மேலும் பல ஒற்றுமைகளைக் காணவும். ///

கண்டேன் இன்றோர் ஒற்றுமையை! கொஞ்சி மகிழ்ந்தேன் எப்பவும்-போல்!

என் மழலை நண்பன் ஒன்றும் பேசா நிலையிலிருந்து படிப்படியாகக் கிளர்ந்தெழுந்து பலவகை நாவொலிகளை எழுப்பி அவன் அன்னை சொல்லும் சொற்களுக்கு எதிரொலி எழுப்பும் நிலையை அடைந்திருக்கிறான். என்னைப்போலும் வழிப்போக்கரின் நாவொலிக்கும் கைதட்டல் போன்ற பிற ஒலிக்கும் பிற சூழலுக்கும் எதிரொலி தருகிறான் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு தனி ஒலியிலிருந்தும் தொடராக ஒலிகளை வெளிப்படுத்துகிறான். 

இன்று யான் அறிந்தது -- நிலவைப் பார்த்து அவன் கைவிரல் சுட்டுகிறானாம். நிலவுக்குத் துருக்கி மொழியில் என்ன சொல் என்று கேட்டேன். அன்னை சொன்னது "ஐ (ay)." சட்டென என் நினைவுக்கு வந்தவை குறுந்தொகைப் பாடல் 307-இன் முதல் மூன்று வரிகள்:

"வளையுடைத்(து) அனைய(து) ஆகி-ப் பலர் தொழ-ச்
செவ்வாய் வானத்து ஐ-எனத் தோன்றி
இன்னம் பிறந்தது பிறையே, அன்னோ!"

செவ்வாய்க் கோளின் இருப்பு, ஐ-எனத் தோன்றும் பிறை ... இதெல்லாம் புறக்கணிக்கக்கூடிய குறிப்புகளா! 

On Wednesday, September 17, 2014 1:37:42 AM UTC-7, Ilakkuvanar Thiruvalluvan wrote:
அம்மையாரின் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மழலையுடன் கொஞ்சி மேலும் பல ஒற்றுமைகளைக் காணவும். 

ஆசுதிரேலியப் பழங்குடியினர் பேச்சில் தமிழ்ச்சொற்கள் பெரும்பான்மை  காணப்படுவதாக நான் படித்துள்ளேன். பாலாவிற்கும் நன்றி.

2014-09-17 13:13 GMT+05:30 bala subramani <sunke...@gmail.com>:
ஆஸ்திரேலியா நாட்டின் மைய பகுதிகளில் வாழ்பவர்கள் தாயை அஞ்ஞா என்றும் சற்று மைய  பகுதியல் இருந்து வெளியே   உள்ளவர்கள் ஆயி என்று அம்மாவையும் ,அதற்க்கு சற்று வெளியே உள்ளவர்கள் ஆத்தா  என்றும் கடற்கரையை ஒட்டி வாழ்பவர்கள் அம்மா என்றும் வழங்கப் படுவதை என் கடல் மக்களின் புலம் பெயர்ந்த வரலாற்று  ஆய்வுகளில் தெரிந்து கொண்டேன் 

நமது பகுதிகளில் இருந்து அந்த மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பதை இன்றும் மருத நில மக்களாக உள்ள மென் புல மக்களான பள்ளர்கள் அல்லது மள்ளர்கள் என்கின்ற உழுகுடிகளின் மரபு கிளைகளில்  அஞ்ஞா, ஆயி ஆத்தா அம்மா என்கின்ற பள்ளர்கள் இருப்பதை நாம் காணலாம் 

என் ஆய்வுகளில் தமிழ் உழு முது குடிகளான பள்ளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக  தான் இருந்து உள்ளார்கள் என்பதை உறுதி செய்து கொண்டேன்  
2014-09-17 5:53 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
பொதுவாக, "இங்கேயிருந்து இது அங்கே போச்சு, அங்கேயிருந்து அது இங்கே வந்தது" என்ற மொழிச்சலசலப்பில் யான் ஈடுபடுவதில்லை. ஒரு மொழியை உருப்படியாகத் தெரிந்துகொள்வதற்கே என் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் நிலையில் தவளைப்பாய்த்து ஆய்வும் வெட்டுக்கிளித்தாண்டலும் என்னைக் கவர்வதில்லை.

அப்படியாகப்பட்ட எனக்கு ... அண்மையில் ஒரு துருக்கி நண்பன் கிடைத்திருக்கிறான், பாரதியாருக்குக் கண்ணம்மா அமைந்தது போல! அவனுக்கு 5-நாட்களுக்கு முன்னரே ஓராண்டு அகவை நிறைந்தது. எங்கள் குடியிருப்பில் அவனை ஒரு சின்னஞ்சிறு வண்டியில் ஈர்த்துவரும் அம்மையாருடன் பேச்சுக்கொடுத்த போது அவர்கள் துருக்கி நாட்டவர் என்று தெரிந்தது. 

நிற்க.

குழந்தையைக் கொஞ்சவும் குழந்தையுடன் விளையாடவும் குழந்தை மொழி பேசவேணுமில்லையா. பார்த்த இரண்டாம் நாளிலேயே நம் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் அருமையைச் சொன்னேன்! 

பிறகு அவனைக் கொஞ்ச வேண்டி, துருக்கிமொழிச்சொற்கள் சிலவற்றைக் கேட்டேன். சில சொற்களிலிருந்தே அந்த மொழி தமிழைப்போலவே "ஒட்டுநிலை (agglutinative)" மொழி என்று புரியத்தொடங்கியது.

('கொஞ்சுவது,' 'செல்லம் கொண்டாடுவது' ஆகிய சொற்களை எப்படி ஆங்கிலத்தில் சொல்லலாம்? இதுக்காகவே தமிழில் கல்வி அமையவேண்டும் என்பது என் கருத்து.)

சரி.

இன்னும் சரியாகப் பேச்சு வராவிட்டாலும் அந்தக் குழந்தை எப்படித் தன் அம்மாவை அழைக்கிறான் என்று கேட்டேன். அம்மா சொன்னது என்னை அசத்திவிட்டது. 

துருக்கி மொழியில் "அன்னே" என்பது குழந்தை தாயை அழைக்கும் சொல்லாம்! உடனே ... சங்கத்தமிழ் பற்றி அளந்துவிட்டேன்! (அந்த அம்மாப்பெண் உடனே 'இல்லை இல்லை, துருக்கி மொழியில் இருந்துதான் தமிழுக்குக் கடன்' என்று வாதாடாமல் ... அமைதியாக "Well, there must have been a lot of traffic between the two cultures" என்று மட்டும் சொன்னார். நல்ல வேளை எங்கள் நட்பு தொடர்ந்தது!)

இன்று காலையில் நடைப்பயிற்சியின்போது, "grandma" என்பதை எப்படிச் சொல்வீர்கள் என்று கேட்டேன். அந்தப் பெண் சொன்னது: "அன்னெ அன்னெ" என்பது தாய்வழிப் பாட்டி; "பபா (baba அன்னெ" என்பது தந்தைவழிப் பாட்டி. 

வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.

அளவிலா மகிழ்ச்சியில் திளைத்து நிற்கும்,
ராஜம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

வேந்தன் அரசு

unread,
Oct 4, 2014, 11:09:00 AM10/4/14
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்

3 அக்டோபர், 2014 6:38 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

///அம்மையாரின் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மழலையுடன் கொஞ்சி மேலும் பல ஒற்றுமைகளைக் காணவும். ///

கண்டேன் இன்றோர் ஒற்றுமையை! கொஞ்சி மகிழ்ந்தேன் எப்பவும்-போல்!

என் மழலை நண்பன் ஒன்றும் பேசா நிலையிலிருந்து படிப்படியாகக் கிளர்ந்தெழுந்து பலவகை நாவொலிகளை எழுப்பி அவன் அன்னை சொல்லும் சொற்களுக்கு எதிரொலி எழுப்பும் நிலையை அடைந்திருக்கிறான். என்னைப்போலும் வழிப்போக்கரின் நாவொலிக்கும் கைதட்டல் போன்ற பிற ஒலிக்கும் பிற சூழலுக்கும் எதிரொலி தருகிறான் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு தனி ஒலியிலிருந்தும் தொடராக ஒலிகளை வெளிப்படுத்துகிறான். 

இன்று யான் அறிந்தது -- நிலவைப் பார்த்து அவன் கைவிரல் சுட்டுகிறானாம். நிலவுக்குத் துருக்கி மொழியில் என்ன சொல் என்று கேட்டேன். அன்னை சொன்னது "ஐ (ay)." சட்டென என் நினைவுக்கு வந்தவை குறுந்தொகைப் பாடல் 307-இன் முதல் மூன்று வரிகள்:

"வளையுடைத்(து) அனைய(து) ஆகி-ப் பலர் தொழ-ச்
செவ்வாய் வானத்து ஐ-எனத் தோன்றி
இன்னம் பிறந்தது பிறையே, அன்னோ!"

செவ்வாய்க் கோளின் இருப்பு, ஐ-எனத் தோன்றும் பிறை ... இதெல்லாம் புறக்கணிக்கக்கூடிய குறிப்புகளா! 

செவ்வாய் வானம்:  பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.

ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்

rajam

unread,
Oct 6, 2014, 8:32:37 PM10/6/14
to tamil...@googlegroups.com, vallamai, மின்தமிழ்
///
செவ்வாய் வானம்:  பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.

ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

/// 

சிந்திப்போம், வேந்தே. 

1. “செவ்வானம்” என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதுபோல் சொல்லாமல் “செவ்வாய் வானம்” என்று சொன்னது ஏன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

2. ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்ற நும் ஐயம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

3. சங்க இலக்கியத்தில் இன்னொரு முக்கியமான பாடல் இருக்கு. அதை இப்போது சொல்ல மாட்டேன், ஆர்வலர்கள் தேடட்டுமே! ;-)

++++++++++++++ 

இன்று (10/6/2014) என் மழலை நண்பனைப் பார்த்த போது அன்னெயிடம் கேட்டேன். 

“ஐ” என்பது நிலவு என்ற பொருளுக்குப் (moon) பொதுப் பெயர் என்றும், பிறை நிலவுக்கும் (crescent moon) பின் வரும் நிலவுக்கும் (gibbus) தொகைச்சொற்கள் உண்டு என்றும் அவை யாவும் “ஐ” என்பதை ஒரு பகுதியாகக் கொண்டவை என்றும் தெரிந்துகொண்டேன். 

முழுத் தொகைச் சொற்களையும் அன்னெயும் வழிப்போக்கியாகிய யானும் உரையாடிப் புரிந்துகொள்வதற்குள் என் மழலை நண்பனுக்குப் பொறுமை குறைந்துவிட்டது! ஆனாலும் ‘நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்’ என்பதை இந்தப் பயல் என்னமாய் உண்மைப்படுத்தி வருகிறான்! இரண்டு மூன்று நாட்கள் பார்க்காவிட்டால் அதற்குள் ஒரு புது மாற்றம்! அருமை அருமை!

இப்போது அவன் 'செங்கீரைப் பருவத்தில்’ இருப்பானோ? அவனுடைய சாய்ந்த தள்ளுவண்டியிலேயே சப்பாணி கொட்டுகிறான், நான் காட்டும் அசைவுகளையெல்லாம் செய்கிறான். பொருளற்ற ஒலிகளை நான் எழுப்பினால் அவனும் அதைப்போலவே ஒலிக்க முயல்கிறான். 

பிள்ளைத்தமிழ் பாடிய நம் தமிழ் மரபு எவ்வளவு இனிமையானது, சிறப்பானது என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்?

++++++++++++++ 

இன்று கேட்டுத் தெரிந்துகொண்ட புதுச்சொல்: ‘மமம்' போன்று ஒலிக்கும் சொல். 
பொருள்: ‘குழந்தைக்காகக் குழைக்கப்பட்ட சோறு.’ 

அந்தச் சொல்லின் முழு வீச்சையும் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குள் பபா (தந்தை) வந்துவிட்டார், எங்களைத் தேடி! பிள்ளை பபாவை நோக்கித் தாவ, அன்னெயும் யானும் மெதுநடை போட்டு அவரவர் வழியைத் தொடர்ந்தோம்.

++++++++++++++ 

இதுவரை பார்த்ததும் கேட்டுத் தெரிந்துகொண்டதும்: “ஃக்” போன்ற பின்னண்ண ஒலிகளும், “ப, ம” போன்ற இதழொலிகளும், “ட்த்” போன்ற பல்லிதழ் ஒலிகளும் அவன் வாயிலிருந்து இடையறாது சொரியும் மழலைக்கு இடையில் வழிகின்றன. நான் “ட்ற்” போன்ற ஒலிகளை எழுப்பி விளையாட்டுக் காட்டினால் அதைச் சொல்ல முயல்கிறான்! இன்னும் இடைநாவொலிகளான “ன், ண், ழ், ள்” போன்றவற்றைப் பழகவில்லை. 

சிற்சில பற்களே முளை காட்டுகின்றன. 

இன்னும் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் என் மொழியார்வம் எங்கள் நட்பைக் குலைத்துவிடக்கூடாதே என்ற கவலை; அதனால் மெல்ல மெல்லப் போகிறேன்! ;-)

++++++++++++++ 

இப்படிக்கு,
ராஜம்
-- 

வேந்தன் அரசு

unread,
Oct 6, 2014, 9:32:40 PM10/6/14
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்

6 அக்டோபர், 2014 8:32 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

///
செவ்வாய் வானம்:  பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.

ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

/// 

சிந்திப்போம், வேந்தே. 

1. “செவ்வானம்” என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதுபோல் சொல்லாமல் “செவ்வாய் வானம்” என்று சொன்னது ஏன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

2. ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்ற நும் ஐயம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

ஐ-எனத் தோன்றி"  வேறொரு ஒருபொருளைபோல் தோன்றி எனகொண்டால் அது என்னபொருளோ!! 
Reply all
Reply to author
Forward
0 new messages