மரபணு மாற்றிய பயிர்கள் கடவுளின் பங்கையே
விஞ்ஞானத்தின் பக்கம் கொண்டுசெல்கிறது.
தமிழமுதம், தமிழ்மன்றம் போன்ற குழுக்களில்
பெரியாரின் சமூகப் பங்களிப்பு, நாத்திக வாதம்,
அறிவியல் கடவுளை ஏற்கிறதா? என்றெல்லாம்
சூடான விவாதங்கள் நடக்கின்றன. எ-டு:
http://groups.google.com/group/tamizhamutham/msg/77bfd14f156dc7e0
http://groups.google.com/group/tamilmanram/msg/b32e5395045109c8
-----
காயாரோஹணம் காராணை என்றும்
ஆகும். தமிழின் ஒரே உலகாயத நூல்
கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்
பாடிய காராணை விழுப்பரையன்
வளமடல் அதிஅழகுடைய பிரபந்தம்.
கலியன் வேதமரபில் பாடிய மடல்களை
மீண்டும் தமிழ் அகமரபுக்குக் கொண்டுவரும்
இலக்கியம் அது:
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
காராணையான் வளமடலுக்கு ஓர் அறிமுகம்:
http://iniyathu.blogspot.com/2007_08_01_archive.html
ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழன்னையின்
மணிமுடிகளில் ஒன்றனைக் கவிச்சக்கிரவத்தி செயங்கொண்டார்
படைத்திருக்கிறார்.
விஞ்ஞான நோக்கில் உயிர்வாழ்க்கை அமைவதைச் சொல்லி,
காமம் இன்றேல் உலகம் இல்லை, சாமியார் ஆகிவிடாதீர்கள்.
என்று பாடி எல்லாச் சமயங்களையும் சாடியிருக்கிறார்.
பொருட்சுவை, சொற்சுவை பொதிந்த இந்நூலை
வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்.
ஆதிநாதன் விழுப்புரம் அருகுள்ள காராணை என்னும்
ஊர்க்காரன். காயாரோகணம் என்னும் வடசொல் காரானை/காராணை
என்று தமிழில் மறுவடிவம் தாங்குகிறது. இலகுளீசர் பிறந்த
கார்வான் நகர் கூர்ச்சரத்தில் உள்ளது.
ஆதிநாதன் குடிப்பெயர் விழுப்பரையர். இதனாலேயே விழுப்புரம்
என்று ஊர்ப்பெயர் விழுந்தது. ஊர் காராணை. அவனூர்க்காரர்
செயங்கொண்டார். ஆதிநாதனே கவிதாசக்தியை இனங்கண்டு
செயங்கொண்டாரை சோழச்சக்கிரவர்த்திக்கு அறிமுகம் செய்திருக்க
வேண்டும். ஆதிநாதனின் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிலும்,
திருவரங்கத்திலும் உண்டு. சோழ சாம்ராஜ்யம் அழியும்நிலையில்
குலைகலங்கி நின்ற நாளில் மகள் வழிப்பேரனான குலோத்துங்கனை
மன்னன் ஆக்கியிருக்கின்றனர். திருத்தணி மீட்ட ம. பொ. சி அவர்கள்
தெலுங்கரான குலோத்துங்கனை அரசனாக்கி, அவனை அழியாது
கலிங்கத்துப் பரணியில் பொறித்துவைத்த செயங்கொண்டார்
மீது குற்றம் காண்பார். ஆனால், அந்நாள் ஆட்சிநிலைமை எப்படியோ?
ஆனால். ஒன்று மட்டும் உறுதி: குலோத்துங்கன் அரசுகட்டில்
ஏறியதால் சோழப் பேரரசு மேலும் 250 ஆண்டுகள்
பொலிந்து விளங்கியது வரலாற்றுண்மை.
லகுலீசர் (2-ம் நூற்.) பிறந்த ஊர் காயாரோஹணம், குஜராத்.
இது தமிழில் காரோணம் (குடந்தை, நாகை, கச்சியில் காரோணம் என்ற
சிவன் கோயில்கள் உள்ளன, தேவாரம்). காரோணம் இன்று கார்வான் நகர்.
காரோணம்/கார்வான் தமிழில் காராணை. விழுப்புரம் அருகே
காராணை (அண்ணமங்கலம்) என்ற ஊரில் விழுப்பரையர்கள்,
இவர்கள் சீகருணீகர் மரபு, சோழர்களுக்குக் கணிகள், அணுக்கத் தொண்டர்கள்,
சேனாபதிகள். காராணை விழுப்பரையன் மடல் பாட்டுடைத் தலைவன்
காராணை ஆதிநாததன் மதுரையில் இருந்து சோழ இளவரசர்களை (சோழபாண்டியர்
என்று கல்வெட்டுகளில்) அரசத் தொழிலில் பழக்கியிருக்கிறான்.
இந்த வளமடலின் எதுகை மிகமிகச் சிறந்தது.
550 அடிகளிலும் ஒரே எதுகை
(வளமடலின் இலக்கணம் - நூல் முழுதும்
பாட்டுடைத் தலைவன் பெயரின் எதுகை
வரவேண்டும். இங்கே (காராணை) ஆதிநாதன்
- எனவே 550 அடியும் நெடில் கீழ் தகர எதுகை).
இiதுபோலும் அமைந்த நூல் தமிழில் இல்லை.
திருமங்கையாழ்வார் மடல்களின் எதுகையை
இந்நூல் விஞ்சிவிடுகிறது.
முக்கியமாக, தமிழமுதக் குழு நண்பர்கள் மகிழ்நன், வேந்தன் அரசு,
புகாரி, மணிவண்ணன், ஜெயபாரதன், இ. ருத்ரா, செல்வன், ....
படிக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தமிழ்க் கருவூலத்தை
ப்ராஜக்ட் மதுரைக்கு அளித்தேன், அவ்வமயம் எழுதினதைச்
இங்கே சேர்த்துள்ளேன்.
காரானை விழுப்பரையன் மடல்
-------------------------------------------------
தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே
தமிழன்பர்களே,
கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் இயற்றிய காரானை விழுப்பரையன் மடல்
என்னும் சீரிய நூல் மதுரைத் திட்டத்திற்கு என்னால் இன்னும் ஒரு
மாதத்திற்குள்
அளிக்கப்பட உள்ளது. சிறந்த இந்நூல் இதுவரை அச்சாகவில்லை. கணினி வலையில்
உலகத்திற்கு முதன்முதலாக வெளிவரப்போகும் பழந்தமிழ் நூல்
என்ற பெருமையும் கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டாரின் படைப்புக்கே
என்னும்போது உள்ளம் பூரிக்கிறது.
காரானை, காராணை எனவும் கல்வெட்டுகளில் வழங்கும். தென்னார்க்காடு
மாவட்டம் விழுப்புரத்திற்கு அருகில், அண்ணமங்கலம், தீபங்குடிக்கு
அருகில்
உள்ள சிற்றூர். சோழ சாம்ராச்சியம் புகழ்விரித்துக் கொண்டிருந்த
காலத்தில்
முதற் குலோத்துங்கனின் அவைக்களப் புலவர் செயங்கொண்டார். இவர் பரணி
இலக்கியம் படைத்துப் புதுப்பாட்டை போட்டவர். இளமைக் காலத்தில் இந்நூல்
செய்ததாதல் வேண்டும். காரானைக்காரரான ஆதிநாதன் சோழருக்குச்
சேனாபதி. பாண்டிநாட்டு மதுரையம் பதியில் சோழர் பிரதிநிதியாக
ஆதிநாதன் பணிபுரிந்திருக்கிறான். இவன் செய்த தருமங்கள் திருவரங்கம்
போன்ற கோயில்களில் முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டாய் உள.
இந்த நூலில் மதுரையும், தீபங்குடியும் சொல்லப்படுகின்றன. ஆதிநாதன்
விழுப்பரையன் என்னும் குடியைச் சேர்ந்தவன். இவர்கள் விழுப்பாதராயர்,
விழுப்பதரையர் என்றும் பெயருண்டு. இக்குடிப் பேராலேயே விழுப்புரம்
அமைந்துள்ளது.
ஆதிநாதன் என்னும் பெயரைப் பாருங்கள். அதில் நெடில்கீழ்த் தகர
எதுகை உள்ளது. எனவே இந்த நூல் முழுக்க 550 அடிகளும்
நெடிலடியின் தகர எதுகை இயைந்தது.
தொல்காப்பியம், குறள் இரண்டும் பெண்டிருக்கு மடலேறும் உரிமை இல்லை
என்று பேசும். பக்தி இலக்கிய காலத்தில் திருமங்கைமன்னர்
நாராயணன், கண்ணன் என்னும் தெய்வதங்களை பாட்டுடைத் தலைவராய்க்
கொண்டு பெரிய, சிறிய திருமடல்களைப் பாடியிருக்கிறார். இவை
"மன்னும் வட நெறியே வேண்டிப்" ஆழ்வார் நாயகி மடல் ஊர்வதாம்.
மீண்டும் மடலிலக்கியத்தைத் தமிழ் மரபுக்குத் திருப்பி ஆண்
பெண்மேல் மையலுற்றுப்பின் மடலூர்வதாகச் செயங்கொண்டார்
விழுப்பரையன் மடலைச் சமைத்துள்ளார். செயங்கொண்டார் கவிச்சக்கரவர்த்தி
அவரைப் பயபக்தியாக ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார். இந்த நூலில்
உள்ள எதுகையும், கருத்துச் செறிவும், அகப்பொருட் பகுதியில்
மெல்லோசையும், போர்பற்றிப் பாடும்போது வீரமும் தோன்றுவதாலும்,
இன்ன பல காரணங்களாலும் ஆசிரியர் புலமை அறியலாகும்.
எதுகை அமைப்பில் ஆழ்வாரையும் விஞ்சுகிறார் என்றே சொல்ல
வேண்டும்.
நூலின் பாடுபொருள் இந்தியாவில் தோன்றி, இப்பொழுது கிடைக்கும்
இலக்கியங்களிலேயே மாறுபட்டது. உலோகாயத மதம் பற்றியது.
உலோகாயதக் கொள்கை "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்"
என்னும் பழமொழி எழக் காரணம். இச்சமயம் காட்சி அளவை ஒன்றையே
ஒப்புக் கொள்வது. அனுமானம், ஆப்த வசனம் என்னும் பிரமாணங்களை
ஏற்பதில்லை. காட்சி ஒன்றே உலகாயதருக்குப் பிரமாணம் ஆகையால்,
கண்ணுக்குத் தெரியாத ஆகாயத்தை அவர்கள் ஒரு பூதமாகக் கொள்ளார்.
நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு பூதங்கள் தான்
உண்டென்பர்.
இந்நான்கின் பொருத்தமான கலப்பால் உடலில் உருவாகும் உணர்வு தான்
உயிர் என்பர். பூதங்களின் விகிதாசாரம் கலையும்போது உயிராகிய உணர்வு
மறையும், அதுவே இறப்பு என்பர். காதலியருடன் சேர்ந்திருத்தலே
சொர்க்கம், அவளைப் பிரிந்தால் நரகம் என்பதும், சொர்க்கம், நரகம்
இவ்வுலகில், இப்பிறப்பில் அமையும் என்பதும் உலகாயதர் கொள்கை.
கடவுள், கன்மா, ஆத்மா, மறுமை இல்லை என்பர் இந்த நிரீசுவரவாதிகள்.
கடவுளுக்கு மோட்ச அதிகாரம் இல்லை. பிறமதங்களில் சேர்ந்து உழல்வதே பந்தம்
என்பர். வியாழபகவான் இந்திரன் பொருட்டுக் கற்பித்த மதம் இது.
பெரியார் ஈ.வே.ராவும், பாரதிதாசனும் இந்த நூலைக் கண்டிருந்தால்
அசந்திருப்பர்.
காரானை விழுப்பரையன் மடல் பலமதத் துறவியரை முன்னிறுத்திப்
பேசுவது. துறவை வெறுப்பது. பல புராணக் கதைகளைக் காட்டி கதைமாந்தரெல்லாம்
காமவழிச் செல்வன என்று நிறுவுவது. எல்லா மதங்களையும் வன்மையாக
மறுத்து, உலகாயதம் ஒன்றே உண்மைச் சமயம் என்பது. பொருள் தேடுவதெல்லாம்
மாதர் பின்செல்லத்தான் என்று அழகாக விளக்கி, அவரைப் பிரியுங்காலே
துன்பேறி
மடல் ஊர்வதை வர்ணிப்பது. மணிமேகலையிலும், மாதவ வித்யாரண்யரின் சர்வதரிசன
சங்கிரகத்திலும், சிவஞான சித்தியாரிலும் உலோகாயதம் முதலில்
மறுக்கப்படும்.
உலோகாயதத்தை முதலாகக் கொண்ட நூல் தமிழில் இது ஒன்றே. ஆசிரியர்
இவ்வளவு தத்துவத்தையும் உள்ளடக்கி, நூலை வெகுசுவையாகப்
படைத்திருக்கிறார்.
வடமொழியில் உள்ள ஒரே உலோகாயத நூலாம் செயராசியின் தத்துவ உபப்ளவசிம்மம்
விழுப்பரையன் மடலைவிட வறட்சியான நடைகொண்டது.
இந்தியாவில் எழுந்த பழைய நூல்களில் காரானை விழுப்பரையன் மடல்
பொருட்சிறப்பாலும், கவியழகாலும் ஓர் உயர்தனி இடம் பெறும்.
தமிழின் சிறந்த கருவூலம் இது.
இந்தப் பதிப்புக்கு பஞ்ச மரபு, தந்திவனப் புராணம், குறளின் பரிதி,
பரிப்பெருமாள்,
நச்சர், மல்லர் உரைகள், திருமுருகின் பரிமேலழகர் உரை போன்ற அரிய
நூல்களைக் கண்டளித்த பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்
தொகுப்புச்
சுவடியும், சென்னை அரசு கீழ்த்திசை ஆய்வு நூலகச் சுவடியும் ஆதாரம்
ஆகும்.
இதற்கெல்லாம் உதவிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
இரா. செங்கோட்டுவேலன் ஐயா, கம்பராமன் ச. கி. இராமராசன் ஐயா இருவருக்கும்
என்றும் நன்றிக் கடப்பாடுடையேன்.
ஐரோப்பியாவில் சுமார் 3000 தமிழ்ச் சுவடிகள் ஓலையில் உள; அவற்றில்
இன்னும் நமக்குத்
தெரியாத இலக்கியங்கள் நிச்சயம் இருக்கும். இன்னும் நல்ல அட்டவணை கூட
இல்லை.
அங்குவாழும் தமிழர் முயன்று அட்டவணை செய்தால் நாம் அறியாத பல அரிய
செல்வங்கள் கிடைக்கும். காலப்போக்கில் தமிழர் இதைச் செய்யவேண்டும்.
அன்புடன்,
நா. கணேசன்
ஆடிப் பிம்பமாக ஆண்பிள்ளை!!
http://www.treasurehouseofagathiyar.net/13000/13006.htm
In a medieval Tamil text, some 16 stories are told of
men doing different things for the sake of 'kaamam'. Each
story is briefly narrated in a few lines. Is there a Sanskrit
or any other Indian language text giving such a list
in a few pages?
Thanks,
N. Ganesan
Stories:
1) Agni takes the fire sparks coming out of Shiva's forehead
and leaves it in the river, Ganga. She can't bear Shiva
Viiryam. The fire ends up in sharavana pond and Karttikeya is
born.
2) Upon the sight of Urvasi, Brahma does something
thinking of something else. From the pot (kalasham),
Agastya and VasiStha are born.
3) Mahavishnu, leaving Bhu and Sri, comes down to the
poor Yadava huts to enjoy 16000 Gopikas,
4) Siva's troubles in marrying two girls is wellknown.
5) Karttikeya begs a girl of KuRavar hill tribe
even when he has Devasena,
6) MahiSasura's name is Vikraman. He has a crush
for Devi. Taking the form of Kama, he fights with her.
7) Indra runs away in the form of a cat when Gotama
sees him. He is cursed with 1000 yonis. Is it really
a curse?
8) Chandra enjoys Tara, the wife of his revered Guru.
The planet, Budha is born. Even when the truth is known,
Brhaspati retains Tara and becomes Guru of Indra.
9) Svaha was enjoyed by Agni. She was also enjoyed by Yama.
Each of them eat her after transforming her into a lemon.
10) Arjuna discards the saffron dress and marries
Krishna's sister.
11) Udayana marries Vasavadatta after teaching her
music. A good Guru Dakshina to have.
12) A street theater performer was
given the ultimate teaching by a Guru while the guru's
disciple was away on a tour. Upon return, the student
drinks the spitting of the street dancer to learn
the ultimate mantra.
13) Nala is sent as a messenger by Devas. Ultimately,
he manages to get Damayanti for himself.
14) Parashara marries a fisherwoman. Maccagandhi becomes
Parimalagandhi.
15) TilOttama becomes a parrot. Viyasa enjoys her.
Their son's name (Shuka brahmam) is the proof.
16) How can Draupadi be the wife of five men?
On Feb 22, 11:28 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஐயா கணேசன்! நீர் இலக்கிய வழக்கு அறியாதவர் அல்லவே! பன்னிரு
> பாட்டியல், இலக்கண விளக்கம் போன்ற நூல்கள் காமம் என்ற
> உறுதிப்பொருளை ஒரு தலைவன் அறம், பொருள், வீடு என்ற மற்ற
> உறுதிப்பொருள்களை துச்சமாக இகழ்ந்து காமத்தையே மிகுத்துப்
> பாடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படும் பிரபந்த வகைக்கு வளமடல் என்று
> பெயர் என இலக்கணம் வகுத்திருக்கிறதே. அந்த வகைப் பிரபந்தமாக அன்றோ
> இருக்கிறது நீர் காட்டிய இந்த காரணை விழுப்பரையன் மடல்.
> இதுபோல் ஏகப்பட்ட மடல் இலக்கியங்கள் இருந்ததாக அன்றோ
> சிற்றிலக்கிய ஆராய்ச்சி இரண்டு தொகுதிகள் எழுதிய டாக்டர் இரா
> கண்ணன் கூறுகிறார்.
முனைவர் ஐயா! யார் இரா. கண்ணன் என்று எனக்குத் தெரியாது. அவருக்கு இந்த
நூலைப்
பற்றித் தெரியாது என்று உணர முடிகிறது. அவர் என்ன எழுதியிருக்கிறார்,
அவரது நூல்கள் பிரபந்தங்களின் அறிமுக நூலா? நூலை வாங்கிப் படித்துப்
பார்க்கிறேன்.
வளமடல் வேறு. உலாமடல் வேறு. வளமடல்கள் தமிழில் ஐந்தே ஐந்துதான்:
http://groups.google.com/group/santhavasantham/msg/e37e297273b9843f
(பலரும் வளமடல் 2 தான் (ஆழ்வார் திருமடல்கள்) என்றே எழுதிச் செல்வர்.)
5-க்கு மேல் எந்த வளமடலை கண்ணன் சொல்கிறார்?
> மேலும் டாக்டர் கண்ணன் இந்த காரணை விழுப்பரையன் மடல் 13ஆம்
> நூற்றாண்டைச் சேர்ந்ததாக அன்றோ கூறுகிறார். ஆசிரியரும்
> ஜெயங்கொண்டார் அன்று. டாக்டர் கண்ணன் ஆய்வின்படி.
13-ஆம் நூற்றாண்டில் எந்தச் சோழன் ஆண்டான்? என்று கண்ணன் சொல்கிறார்.
ஆதிநாதனின் கல்வெட்டுக்கள் 13-ஆம் நூற்றாண்டிலா இருக்கின்றன?
‘சீததுங்கன் மேக தியாகதுங்கன் தேன்பிலிற்றும்
தாதகிப் பூந்தொங்கல் தங்கோன் புலியையிம
சேதுபரி யந்தம் செலுத்துதற்குத் தான்செலுத்தும்
சாதுரங்க முந்நீர்’ ...
கண்ணன் நூலையே பார்க்காமல் எப்படி ஆராய்ச்சி செய்தார் என்று தெரியவில்லை.
பாண்டி நாடு பாண்டியர்களிடம் திரும்பியபின் காராணை விழுப்பரையர்கள்
புலவராக வாழ்ந்துள்ளனர். ஒரு கிடைக்காத பிள்ளைத்தமிழ் ஆசிரியர் உண்டு.
ஆனால் இந்நூல் பாட்டுடைத்தலைவன் ஆதிநாதன். நூல் யாத்தவன் அல்லன்.
ராகைவயங்கார், உவேசா போன்றோர் செயங்கொண்டாரின் இந்நூலைக்
குறிப்பிட்டுள்ளனர்.
> மேலும் இந்த இலக்கிய உத்தி நூல்களை வைத்துக்கொண்டு
> எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி கொண்டாடுகிறீரே! நல்ல தமாஷய்யா:--)))))
> நான் ஏதோ மெய்யாலுமே உலகாயத நூலாக்கும் என்று ஏமாந்துவிட்டேன்.
> இதில் ஜெயராசியின் நூலோடு ஒப்புமை வேறு. A good joke :--)))))
மெய்யாலுமே வளமடல்கள் 5க்கு மேல் உள்ளனவா? கண்ணன் தருவதும், நீங்கள்
தருவதும் பார்க்க ஆசை.
நா. கணேசன்
> On 2/22/10, naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com> wrote:
> > On Feb 22, 4:02 am, devoo <rde...@gmail.com> wrote:
> > > லோகாயதம் – தமிழ் என்ன ?
> > > தேவ்
> > உலகாயதம் என்ற சொல்லைத் திருவாசகத்தில் தற்சமமாக
> > மாணிக்கவாசக சுவாமிகள் ஆள்கிறார்.
> > உலகாயதம் வட, தென் மொழிகளின் இலக்கியங்களில்
> > சில வரிகளிலோ, ஓரிரு பக்கங்களிலோ மறுக்கப்படும்.
> > ஆனால், உலகாயத மதத்தைப் போற்றும் நூல்கள்
> > இரண்டே: ஜெயராசி (வடமொழி), ஜெயங்கொண்டார் (தமிழ்)
> > செய்தவை அவை.
> > உலகாயதக் கோட்பாடுகளை விளங்க, மணிமேகலை,
> > சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி உரை இவற்றில் காணலாம்.
> > [சிவஞான சித்தியார் (உமாபதி சிவாச்சாரியார், சிதம்பரம்)
> > - மாதவ வித்யாரண்யரின் சர்வ தர்சன சங்கிரகத்தின்
> > மொழிபெயர்ப்பு என்று கேட்டிருக்கிறேன்.]
> > ஆசீவகம், உலகாயதம் பழந்தமிழ்ச் சமுதாயத்தில்
> > வலுப்பெற்றிருந்த கோட்பாடுகள் (உ-ம்: பக்குடுக்கை
> > நன்கணியார், கணியன் பூங்குன்றனார், ... சங்கச்
> > செய்யுள்கள்) முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னைப்
> > பல்கலை) நிறைய நூல்கள் எழுதியுள்ளார். சில
> > பார்த்திருக்கிறேன். அவருக்கு காராணை வளமடல்
> > அனுப்பவேண்டும்.
> > நா. கணேசன்
மின்தமிழை ஓர் படி உயர்த்தியுள்ளீர்கள். ஏனெனில் இணையம் எனும் கருவி
கிடைத்தபிறகு அறிவியல் ஆய்வுகள் கூட இப்போதெல்லாம் பிற
ஆய்வாளர்/பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் ஒரு புதிய வழக்கு
உருவாகிவருகிறது. Open Access Journal எனும் புதிய முயற்சியில் முதலில்
ஒரு கண்டு பிடிப்பு இலத்திரன் வடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது
பொதுப்பார்வைக்கு வைக்கப்படுகிறது. பொது மன்றத்தில் கேட்கப்படும்
கேள்விகளுக்கு அறிவியலார் தக்க பதில் சொல்வதையே review process என்று
எடுத்துக் கொண்டு, திருப்திகரமாக ஆன பின் அவ்வாய்வை அச்சில்
வெளியிடுகின்றனர். அதே முறையில் இப்போது காரணை விழுப்பரையன் மடல்
ஆய்விற்கு உள்ளாகியுள்ளது. We need to examine critically whether
Dr.N.Ganesan's claim is really true?
ஹரிகி, தேவ், அராதி மற்றும் இருமொழிப் புலமை கொண்டோர் இச்சங்கப்பலகையில்
பங்கேற்க அழைக்கிறேன்.
நா.கண்ணன்
2010/2/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஐயா கணேசன்! நீர் இலக்கிய வழக்கு அறியாதவர் அல்லவே! பன்னிரு
> பாட்டியல், இலக்கண விளக்கம் போன்ற நூல்கள் காமம் என்ற
> உறுதிப்பொருளை ஒரு தலைவன் அறம், பொருள், வீடு என்ற மற்ற
> உறுதிப்பொருள்களை துச்சமாக இகழ்ந்து காமத்தையே மிகுத்துப்
> பாடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படும் பிரபந்த வகைக்கு வளமடல் என்று
> பெயர் என இலக்கணம் வகுத்திருக்கிறதே. அந்த வகைப் பிரபந்தமாக அன்றோ
> இருக்கிறது நீர் காட்டிய இந்த காரணை விழுப்பரையன் மடல்.
> இதுபோல் ஏகப்பட்ட மடல் இலக்கியங்கள் இருந்ததாக அன்றோ
> சிற்றிலக்கிய ஆராய்ச்சி இரண்டு தொகுதிகள் எழுதிய டாக்டர் இரா
> கண்ணன் கூறுகிறார்.
>
> மேலும் டாக்டர் கண்ணன் இந்த காரணை விழுப்பரையன் மடல் 13ஆம்
> நூற்றாண்டைச் சேர்ந்ததாக அன்றோ கூறுகிறார். ஆசிரியரும்
> ஜெயங்கொண்டார் அன்று. டாக்டர் கண்ணன் ஆய்வின்படி.
>
> மேலும் இந்த இலக்கிய உத்தி நூல்களை வைத்துக்கொண்டு
> எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி கொண்டாடுகிறீரே! நல்ல தமாஷய்யா:--)))))
>
> நான் ஏதோ மெய்யாலுமே உலகாயத நூலாக்கும் என்று ஏமாந்துவிட்டேன்.
> இதில் ஜெயராசியின் நூலோடு ஒப்புமை வேறு. A good joke :--)))))
>
>
> - Hide quoted text -
> On 2/22/10, naa.g...@gmail.com <naa.g...@gmail.com> wrote:
>>
>> On Feb 22, 4:02 am, devoo <rde...@gmail.com> wrote:
>> > லோகாயதம் – தமிழ் என்ன ?
>> >
>> > தேவ்
>>
>> உலகாயதம் என்ற சொல்லைத் திருவாசகத்தில் தற்சமமாக
>> மாணிக்கவாசக சுவாமிகள் ஆள்கிறார்.
>>
>> உலகாயதம் வட, தென் மொழிகளின் இலக்கியங்களில்
>> சில வரிகளிலோ, ஓரிரு பக்கங்களிலோ மறுக்கப்படும்.
>> ஆனால், உலகாயத மதத்தைப் போற்றும் நூல்கள்
>> இரண்டே: ஜெயராசி (வடமொழி), ஜெயங்கொண்டார் (தமிழ்)
>> செய்தவை அவை.
>>
>> உலகாயதக் கோட்பாடுகளை விளங்க, மணிமேகலை,
>> சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி உரை இவற்றில் காணலாம்.
>> [சிவஞான சித்தியார் (உமாபதி சிவாச்சாரியார், சிதம்பரம்)
>> - மாதவ வித்யாரண்யரின் சர்வ தர்சன சங்கிரகத்தின்
>> மொழிபெயர்ப்பு என்று கேட்டிருக்கிறேன்.]
>>
>> ஆசீவகம், உலகாயதம் பழந்தமிழ்ச் சமுதாயத்தில்
>> வலுப்பெற்றிருந்த கோட்பாடுகள் (உ-ம்: பக்குடுக்கை
>> நன்கணியார், கணியன் பூங்குன்றனார், ... சங்கச்
>> செய்யுள்கள்) முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னைப்
>> பல்கலை) நிறைய நூல்கள் எழுதியுள்ளார். சில
>> பார்த்திருக்கிறேன். அவருக்கு காராணை வளமடல்
>> அனுப்பவேண்டும்.
>>
>> நா. கணேசன்
>>
>> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Feb 22, 8:42 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> We need to examine critically whether
> Dr.N.Ganesan's claim is really true?
>
காராணை வளமடல் மூலமும், முடிபுகளும்
பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணியாரும்,
கம்பராமன் ஐயாவினதும் ஆகும்.
அதைப் 10 ஆண்டுகளுக்கு முன்னமே கொடுத்திருக்கிறேன்.
சோழ சேனாபதி ஆக இருந்த பாட்டுடைத் தலைவன்
11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் உள்ளன.
நா. கணேசன்
Let me know if the vaLamaTal stories, at least some
are found in Ashvaghosh's book. & its translation
editions. will try to get & read them.
N. Ganesan
அன்பின் ஸ்ரீரங்கம் மோகனரங்கன்:
அதே முறையில் இப்போது காரணை விழுப்பரையன் மடல்
ஆய்விற்கு உள்ளாகியுள்ளது. We need to examine critically whether
Dr.N.Ganesan's claim is really true?
ஹரிகி, தேவ், அராதி மற்றும் இருமொழிப் புலமை கொண்டோர் இச்சங்கப்பலகையில்
பங்கேற்க அழைக்கிறேன்.
நான் அப்படிச் சொல்வதாகவா படுகிறது?
நான் சொல்ல வந்தது, மிஞ்சிகையின் தாக்கம் இப்போது அறிவியல் அளவிற்கு
வளர்ந்துவிட்ட பிறகு, நா.கணேசனார் சொல்லும், 'தமிழின் தமிழின் ஒரே லோகாயத
நூல்' எனும் claim சரியா என புலவர் பெருமக்கள் கண்டு சொல்க என்பதுவே.
கணேசானாரும் நம் நண்பர்தானே. கூடுதலாக அவரொரு விஞ்ஞானியாகவும் இருப்பதால்
இந்த peer reviewவிற்கு உடன்படுவார் என்று அறிந்தே அவ்வாறு எழுதினேன்.
குறிப்பாக அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை எப்படி அணுகுவது என்பதற்கு
இதுவொரு உதாரணமாக இருக்கட்டும் என்ற ஆசையும் கூட.
> நாராயண கண்ணனெனை நன்கறிந்த ஆர்வலனே
> தோராய மானதொரு சுட்டலுமேன் - நேராக
> வேண்டும் பொழுதில் விடுதிகண்டாய் என்றபடி
> தாண்டிக் குதித்தெழுவேன் சார்.
கூடுதல் போனஸ் இம்மாதிரி இலக்கியத் தூறல்கள். உங்கள் மடல்களின் எள்ளல்,
துள்ளல், நயம் இவற்றின் ரசிகன் என்ற அளவிலும்...
நா.கண்ணன்
> சாரா? தமிழ் சாரா, இங்கிலீஷா? தயவு தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதுங்கள்.
> அதுவும் வெண்பா இலக்கணப்படி ஆங்கிலச் சொற்கள் ஆங்காங்கே வாரா. :-)
>
அகாகா! (அதாவது அஹாஹா)
சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்? என்று கன்னடத்தில்,
சென்னைச் செம்மொழியில் ஆரம்பித்துவிடப் போகிறார் :-)
இதுதானே வேண்டாம் வம்பு என்பது!
அவர் வள மடல்கள் பற்றி வளமாக முதலில் சொல்லட்டும் ;-)
க.>
சாரா? தமிழ் சாரா, இங்கிலீஷா? தயவு தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதுங்கள். அதுவும் வெண்பா இலக்கணப்படி ஆங்கிலச் சொற்கள் ஆங்காங்கே வாரா. :-)அன்புடன்மதுரபாரதி
தற்காலத்தமிழ் பேச்சுவழக்கைக் கணக்கில் கொண்டு பா வடித்தால் இப்படியும்
வரும் என்று காட்டியுள்ளார்.
நம் பிரெஞ்சு அறிஞர் சுட்டிக்காட்டினார் வெள்ளையரைக் கண்டால் நாம்
ஆங்கிலத்தில் பேசுகிறோமென்று. அது ஒரு பாதி.
ஜப்பானில் ஒருமுறை நடந்தது. ஸ்டேட் பாங்க் அதிகாரி ஒருவரை சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது. முதல் 15 நிமிடங்கள் ஆங்கிலத்திலேயே
பேசிக்கொண்டிருந்தோம். என் அருகில் இருந்த ஜப்பானிய நண்பன், அது சரி,
நீங்கள் இருவரும் தமிழர்தானே? ஏன் ஆங்கிலம் என்றார்.
அது தமிழர் வழக்கம் என்று சொல்ல முடியவில்லை :-))
அயலகச் சூழல் காரணமாகலாம்.
அந்நியமான ஒருவரைக் காணில் அந்நிய மொழி துணைக்கு வந்திருக்கலாம்!
தெரியாத ஒருவரைக் காணும் போது ஒரு வறட்டு கௌரவத்தில் அப்படிப் பேசியிருக்கலாம்.
இல்லை, சாப்பாட்டிற்கு முன் வரும் அபிடைசர் போல் ஆங்கிலத்தைப் பயன்
படுத்தியிருக்கலாம்!
அதன் பின் நான் மாறிவிட்டேன். ஆனால் என் தமிழ் உலகம் மாறவில்லை.
சமீப காலங்களில் ஓலைச்சுவடி பாதுகாப்பு குறித்து பல பெரிய அதிகாரிகளுடன்
பேச வேண்டிவருகிறது. எந்த மொழி என்பது அங்கொரு பிரச்சனையாகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் தொலை பேசி என்பதால் நான் தமிழிலேயே பேசினாலும்
எனக்கு தமிழ் வராது என்று கருதி ஆங்கிலத்திலேயே கதைக்கின்றனர்.
இது ழான் இழையில் வர வேண்டியது. வள மடல் என்றவுடன் ஏதோ வள, வளா...;-)
க.>
2010/2/23 Hari Krishnan <hari.har...@gmail.com>:
On Feb 22, 10:27 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/2/23 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:
>
> > The faux pas is obviously unintended.
really?
On Feb 23, 12:11 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> வளமடல் வரட்டும்.
> --
> அன்புடன்,
> ஹரிகி.
Hariki wrote:
" I am reminded of the usage நெச்சு by Arunagiri.
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கற்று அறன்மேவி.....
It took me a long and laboured search to understand that what
Arunagiri
actually intends to convey by நெச்சு is நெய்த்து. நெய் தடவப்பட்டு. "
I think another meaning - look at the word, aRal.
This struck me while reading kaaraaNai vaLamaTal.
will write on this after a few hours, now have to rush.
N. Ganesan
On Feb 23, 12:38 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> *அறம் பொருள் வீடு திறம் பெரிது அழித்துச் *
> *சிறந்த வேட்கை செவ்விதின் பராஅய்ப் *
> பாட்டுடைத் தலைமகன் இயற்பெயர்க்கு எதுகை
> நாட்டிய வெண்கலிப் பாவதாகித்
> தனிச்ச்சொல் ஒரீஇத் தனி இடத்து ஒருத்தியைக்
> கண்டபின் அந்த ஒண்டொடி எய்தலும்
> மற்றவள் வடிவை உற்றகிழி எழுதிக்
> காமன் கவற்றக் கரும்பனை மடல்மா
> ஏறுவர் ஆடவர் என்மனார் புலவர் ----- பன்னிரு பாட்டியல் 246
>
> *பொருள் அறம் வீடு பழித்து *
> *இன்பமே பொருளாக்கி *
> *நல்லார் மருள் பெறு *
> *வேட்கை மடல் மிக ஊர்தலின் *
> பாட்டுடையோர்க்கு உரிய
> இயற்பேர் எழுத்துக்கு இயைந்த எதுகையினால்
> வருகலி வெண்பா வளமடலாக வகுத்தனனே ------ நவநீதப் பாட்டியல் 46
>
> இந்த இலக்கணத்தின் பிரகாரம் வளமடல் பாட நினைப்பவர்கள் யாராய்
> இருந்தாலும், (அது நீரோ, திரு கண்ணனோ, திரு ஹரியண்ணாவோ, திரு தேவ்
> சாரோ, நானோ) அவர் தம்மளவில் பெரும் பக்தராய் இருந்தாலும் கூட
> இவ்வாறு வீடு என்பதையே பழித்து, அதுமட்டுமன்று, அறம் பொருள்
> போன்ற பொதுநலம் சார்ந்த எல்லா விழுமியங்களையுமே பழித்து,
> உச்சாணிக் கொம்பில் கொண்டு போய்க் காமத்தை வைத்துத்தான் வளமடல் பாட
> வேண்டும். உடனே ‘ஹா! வீடு என்பதையே இகழ்ந்து அறம்
> நம்பிக்கை புராணம் எல்லாவற்றையும் துச்சமாக இகழ்ந்து, லோகாயதம்
> நிறுவி எழுதப்பட்ட நூல் இதுவாம் நூல் இதுவாம்’ என்று தாமும்
> மயங்கி, மற்றோரையும் மயக்கமுறச் செய்தல் எற்றுக்கோ எம் கணேசரே?
>
இலக்கணம் வளமடலுக்கு பாட்டியல்கள் வகுத்துள்ளன.
ஆனால், அதனை உருவாக்கிய இலக்கியம்(கள்)?
நா. கணேசன்
On Feb 23, 12:38 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> *அறம் பொருள் வீடு திறம் பெரிது அழித்துச் *
> *சிறந்த வேட்கை செவ்விதின் பராஅய்ப் *
> பாட்டுடைத் தலைமகன் இயற்பெயர்க்கு எதுகை
> நாட்டிய வெண்கலிப் பாவதாகித்
> தனிச்ச்சொல் ஒரீஇத் தனி இடத்து ஒருத்தியைக்
> கண்டபின் அந்த ஒண்டொடி எய்தலும்
> மற்றவள் வடிவை உற்றகிழி எழுதிக்
> காமன் கவற்றக் கரும்பனை மடல்மா
> ஏறுவர் ஆடவர் என்மனார் புலவர் ----- பன்னிரு பாட்டியல் 246
>
> *பொருள் அறம் வீடு பழித்து *
> *இன்பமே பொருளாக்கி *
> *நல்லார் மருள் பெறு *
> *வேட்கை மடல் மிக ஊர்தலின் *
> பாட்டுடையோர்க்கு உரிய
> இயற்பேர் எழுத்துக்கு இயைந்த எதுகையினால்
> வருகலி வெண்பா வளமடலாக வகுத்தனனே ------ நவநீதப் பாட்டியல் 46
>
திருமங்கை மன்னர் தம் பெரிய, சிறிய வளமடல்களில்
இந்த இலக்கணத்தை வளைத்துள்ளாரா?
கணேசன்
கணேசனார் உலோகாயதம் என்று ஏன் எழுதுகிறார் தெரியவில்லை; உலகாயதம் என்று
எழுதியிருக்கலாம்.
தமிழின் லோகாயத நூல் என்றதால், தமிழகத்தில் ஆசீவகம், பவுத்தம், சமணம்
இவைபோல் லோகாயதம் என்ற ஒரு கருதுகோள் முன்பிருந்தே உண்டா ?
அப்படி ஒன்று உண்டென்றால் இதே கருத்தை வற்புறுத்தும் வேறு நூல்கள்
உள்ளனவா?
ஒரே நூலை மட்டும் வைத்துக்கொண்டு எந்த ஸித்தாந்தமும் வலுப்பெற்றதாக
வரலாறு இல்லை;
ஜயராசியின் தத்வோபப்லவ ஸிம்ஹம் –
இதை முழுவதும் படித்து விட்டுத்தான் கணேசனார் இந்த வளமடலுடன்
ஒப்பிடுகிறாரா ?
இந்நூல் விழுப்பரையன் மடலுக்கு இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்னும்
நைப்பாசையா ?
வி வ மடல் லோகாயத நூல் என்றால் அதோடு மதிக்கப்படும் ஜயராசியின் நூலும்
லோகாயத நூலாக இருக்க வேண்டும்; உண்மை அதுவன்று.
உபப்லவம் என்றாலே ஒழுங்குமுறையற்ற இடக்குத்தனம் என்று பொருள்; லோகாயதமோ,
சார்வாக வாதமோ ப்ரத்யக்ஷ ப்ரமாணம் என்னும் ஒரு சான்றை மட்டுமாவது
முழுமையாக, நேர்மையாக ஏற்பவை. இந்நூலை விமர்சிக்கும் ஸ்ரீ தேவி ப்ரஸாத்
சட்டோபாத்யாய் ( பாரதீய தர்சந்-ஸரல் பரிசய்) பல ஆசிரியர்களின் லோகாயத
வாதத்தொகுப்பில் ஜயராசியின் கருத்து இடம் பெறாததைச் சுட்டுகிறார்.
ஜயராசியே எந்த இடத்திலும் தன் கருத்து லோகாயதக் கருத்து என்று சொல்லிக்
கொள்ளாததையும் தெளிவு படுத்துகிறார். (ஜயராசி கஹீ பீ அப்நே மத் கோ
‘பௌதிக்வாத்’ நாம் நஹி தேதே – ஜிஸ் கா ஸீதா ஸா காரண் யஹ் ஹை கி
பௌதிக்வாத் உந்கா மத் ஹை நஹி Page-180 )
அறிஞர்கள் இதை ‘உபப்லவ வாதம்’ (இடக்குப் பேச்சு) என்றே வகைப்படுத்துவர்.
http://books.google.co.in/books?id=qitkuuGsT4cC&pg=PA180&lpg=PA180&dq=जयराशि
இக்குழுமத்தில் ஹிந்தி தெரிந்தவர் பலர் உள்ளனர்; அவர்களும் தெளிவு
படுத்தலாம். விழுப்பரையன் மடலும் இதே தரத்தைச் சார்ந்ததுதான் என்று
கணேசனார் ஒப்புக்கொள்வாரானால் விவாதம் தேவையற்றதாகும்.
//In a medieval Tamil text, some 16 stories are told of men doing
different things for the sake of 'kaamam'.//
இக்காரணம் ஒன்றால் மட்டுமே இது சிற்றிலக்கிய வகை சார்ந்த ஒரு சாமானிய
நூல் என்றே ஆகிறது.
லோகாயதம், சார்வாகம் என்பவை காமம் தவிர வேறு பல நுட்பமான, அறிவு சார்ந்த
வாதங்களையும் முன்வைப்பதாக இருப்பவை. இந்நூலில் புராண , இதிஹாஸச்
செய்திகள் தவிர வேறு எவையும் முன்வைக்கப் படவில்லை; நோக்கமும்
காமச்சுவையை உயர்த்திக்காட்டுவது மட்டுமே.
ஒரு நிலையில் இருக்கும்போது பிற நிலையை இகழ்வது இந்தியச் சிந்தனை மரபில்
புதிய செய்தி இல்லை. ஆன்மிகத்தில் உள்முகமாகத் தோய்ந்தவர் சடங்குகள்
நிறைந்த புறவழிபாட்டைப் புறக்கணிப்பர், ‘நட்ட கல்லும் பேசுமோ
நாதனுள்ளிருக்கையில்’ போன்ற உதாரணங்கள் கூறலாம்.
தர்மபுத்ரர் அறத்தை மட்டுமே வலியுறுத்திப் பிறவற்றைப் புறக்கணித்துப்
பேசுவார்; இராமபிரான் எடுக்கும் நிலையும் அதுதான். வீடுபேற்றை
வலியுறுத்துவோர் ‘த்ரிவர்க நிரபேக்ஷதா’ என்று பிறவற்றைப் புறக்கணிப்பர்;
அறத்தைக்கூடக் காமத்தோடு சேர்த்து விடுவர்.
மறையின் ஞான காண்டப்பகுதி சடங்குகள் நிறைந்த கர்ம மார்கத்தை ஓட்டைப்படகு
என்று கூறும். கர்ம மார்கம் புகைப்படலம் சூழ்ந்த நெருப்பு என்றும், ஞானம்
கொழுந்து விட்டெரியும் நெருப்பு என்றும் ஞான நெறியாளர் கூறுவர்.
புத்தர் வந்துதான் புதுமைச் சிந்தனை புகுத்தினார் என்பதெல்லாம் பில்ட்
அப். வேதாந்த நூல்களிலும் புராணச் செய்திகளை நகையாடியிருப்பதைக் காணலாம்.
அந்த அந்த இடத்தில் அதது.
புதுமணத்தம்பதிக்கு திருமந்திர நூலைப்பரிசாகக் கொடுக்க மாட்டார்கள்
தேவ்
லோகம் (loha) என்னும் வடசொல் தமிழில் உலோகம் ஆகிறது.
அதுபோல், லோகாயதம் > உலோகாயதம். இச்சொல்லை வளமடல் உடையாரும்
பயன்படுத்தியுள்ளார்.
கண்ணி 95- 97 பாருங்கள்.
‘நாதன் நமக்கினிய நம்பி உயிர்க்குறுதி
ஓதி அருளும் உலோகாயதன்’
உலகறிந்த தமிழறிஞர் ஒருவர் (தமிழ்ப்புலவரின் மகனார்) ஆசீவக நூலா இது
என்ற கேள்விக்கும் இதைக் காட்டினேன் (வேறோர் குழுவில்).
ஆசீவகத்துக்கும், லோகாயதத்துக்கும் பல தொடர்புகள்
உள்ளன. தமிழரின் பண்டைச் சமயம் ஆசீவகம் என்று
முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னைப் பல்கலை) நிறைய நூல்கள்,
கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘க. நெ. ஆய்வுகள் ஒரு புதுப்பார்வையையே
தருகின்றன’
என்பார் இராமகி.
> தமிழின் லோகாயத நூல் என்றதால், தமிழகத்தில் ஆசீவகம், பவுத்தம், சமணம்
> இவைபோல் லோகாயதம் என்ற ஒரு கருதுகோள் முன்பிருந்தே உண்டா ?
> அப்படி ஒன்று உண்டென்றால் இதே கருத்தை வற்புறுத்தும் வேறு நூல்கள்
> உள்ளனவா?
> ஒரே நூலை மட்டும் வைத்துக்கொண்டு எந்த ஸித்தாந்தமும் வலுப்பெற்றதாக
> வரலாறு இல்லை;
>
ஆம். லோகாயதம் எல்லா மக்களுக்கும் புரிந்த பெரிய சித்தாந்தமாக
தெரியவில்லை.
இந்திய நூல்கள் மிகச் சிலவே. அரிது, கவிநடை, சாடும் தத்துவங்கள், ...
இதனால் தான் வளமடலின் முக்கியத்துவமே ஒழிய, வெகுஜன பிரசித்தம் என்று
சொல்ல முடியாது. இந்திய தத்துவவாதிகளை முன்னிறுத்தி அவற்றை
வாதிட்டு, தன் சமயம் லோகாயதத்தை ஏற்றிச் சொல்லும் முதல்நூல் வளமடல்.
மேலும் இருக்கும் மதக் கட்டமைப்புகள் இதுபோன்ற கருத்துக்களை
2000, 1000 வருடத்துக்கு முன் பரவவிடா அல்லவா?
(தெய்வசிகாமணி கவுண்டர் தீவிர சைவர். கம்பராமன் பரம வைஷ்ணவர்.
அவர்களிடம் இதைப் பெற்று அளித்தது எளிதான செயல் அல்ல.)
இலக்கிய வரலாற்றுக்காக. 550 அடியும் ஓரே எதுகை கொண்ட நூல்
வேறெங்கும் இந்தியாவில் இல்லை அல்லவா?
தமிழ்/ திராவிட மொழி இலக்கியங்களுக்கு சிறப்பு எதுகையால் வருகிறது.
இந்தோ-ஐரோப்பிய பாஷைகளில் - வடமொழி ஆகட்டும், ஆங்கிலம்
ஆகட்டும் - எதுகை தமிழில் போல் பெரிதில்லை.
சம்ஸ்கிருதத்திலும் மிக ஒதுக்கப்பட்ட புத்தகம் தான்
தத்வோபப்லவசிம்மம். தேடி இருக்கும் பகுதிகளை
ஆராய்ந்தவர் ஆய்வேடுகளை படித்துள்ளேன்.
அவர் இந்தியர் அல்லர். அப் புத்தக விவரங்கள் கீழே.
> ஜயராசியின் தத்வோபப்லவ ஸிம்ஹம் –
>
> இதை முழுவதும் படித்து விட்டுத்தான் கணேசனார் இந்த வளமடலுடன்
> ஒப்பிடுகிறாரா ?
> இந்நூல் விழுப்பரையன் மடலுக்கு இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்னும்
> நைப்பாசையா ?
>
> வி வ மடல் லோகாயத நூல் என்றால் அதோடு மதிக்கப்படும் ஜயராசியின் நூலும்
> லோகாயத நூலாக இருக்க வேண்டும்; உண்மை அதுவன்று.
>
ஜெயராசியின் புத்தகம் லோகாயதம் இல்லையா??
டி. பி. சாட்டர்ஜியும் தத்வ உபப்லவ சிம்மத்தைப் பார்த்ததில்லை.
சில மேற்கோள்கள் பார்த்தவர். லோகாயத அறிமுகக் குறிப்புகள்
கம்யூனிச சித்தாந்தம் கலந்த குறிப்புகள் டிபிசி நூல்களில்
உள்ளன.
ஜயராஸியின் முழு நூலும் இன்றில்லை. இதனை பதிப்பித்து ஆராய்ந்தவர்
தத்துவவியல் பேரா. Eli Franco. அவரது முனைவர் பட்ட ஆய்வேடு
பிற்காலத்தில்
நூலாக வந்துள்ளது. அதை 12+ வருடங்களுக்கு முன் படித்தேன்.
வேண்டுமானால் சில பகுதிகளை நூலை மீண்டும் பெற்று
அளிக்கலாம். காராணையை அச்சாக்கும்போது நிச்சயம்,
ஈலாய் ப்ராங்கோ குறிப்பிடும் சில செய்திகளை அநுபந்தமாக
ஒரு பக்கத்தில் கொடுக்கலாம் என்றுள்ளேன்.
Eli Franco
Perception, knowledge, and disbelief : a study of Jayarāśi's
scepticism
Stuttgart : F. Steiner Verlag Wiesbaden, 1987.
(இரண்டாம் பதிப்பு, தில்லி மோதிலால் பனாரஸிதாஸ். 618 பக்கம்).
-------------
Book overview
The Tattvapaplavasimha is a philosophical text unique of its kind it
is the only text of the Carvaka Lokayata school which has survived and
the only Sanskrit work in which full-fledged scepticism is propounded.
Notwithstanding that it has been hitherto almost completely ignored.
The present book consists of an introduction detailed analysis edition
translation with extensive notes of the first half of the text. In the
introduction Jayarasi`s affiliation to the Lokayata school is
reassessed and his place in the historical development of Indian
Philosophy evaluated. New evidence for the dating of Jayarasi is
examined and a new dating is suggested.
----------------
ஜெயராசியின் புத்தகம் லோகாயதம் இல்லையா? என்று படித்தபின் சொல்லுங்கள்.
> உபப்லவம் என்றாலே ஒழுங்குமுறையற்ற இடக்குத்தனம் என்று பொருள்; லோகாயதமோ,
> சார்வாக வாதமோ ப்ரத்யக்ஷ ப்ரமாணம் என்னும் ஒரு சான்றை மட்டுமாவது
> முழுமையாக, நேர்மையாக ஏற்பவை. இந்நூலை விமர்சிக்கும் ஸ்ரீ தேவி ப்ரஸாத்
> சட்டோபாத்யாய் ( பாரதீய தர்சந்-ஸரல் பரிசய்) பல ஆசிரியர்களின் லோகாயத
> வாதத்தொகுப்பில் ஜயராசியின் கருத்து இடம் பெறாததைச் சுட்டுகிறார்.
> ஜயராசியே எந்த இடத்திலும் தன் கருத்து லோகாயதக் கருத்து என்று சொல்லிக்
> கொள்ளாததையும் தெளிவு படுத்துகிறார். (ஜயராசி கஹீ பீ அப்நே மத் கோ
> ‘பௌதிக்வாத்’ நாம் நஹி தேதே – ஜிஸ் கா ஸீதா ஸா காரண் யஹ் ஹை கி
> பௌதிக்வாத் உந்கா மத் ஹை நஹி Page-180 )
>
> அறிஞர்கள் இதை ‘உபப்லவ வாதம்’ (இடக்குப் பேச்சு) என்றே வகைப்படுத்துவர்.
>
> http://books.google.co.in/books?id=qitkuuGsT4cC&pg=PA180&lpg=PA180&dq...यराशि
> இக்குழுமத்தில் ஹிந்தி தெரிந்தவர் பலர் உள்ளனர்; அவர்களும் தெளிவு
> படுத்தலாம். விழுப்பரையன் மடலும் இதே தரத்தைச் சார்ந்ததுதான் என்று
> கணேசனார் ஒப்புக்கொள்வாரானால் விவாதம் தேவையற்றதாகும்.
>
தமிழில் நீண்ட காலமாக டிபி சாட்டர்ஜி நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், ஜயராசியை ஆய்ந்தவர் அல்லர் அவர்.
நிச்சயம் ஒப்புக்கொள்கிறேன். பேர்களில் கூட, ஜெயராசி, ஜெயங்கொண்டார்
- வாது செய்து அவர்கள் பெற்ற வெற்றியைக் குறிக்கிறதோ என்ற கருத்து
என்னுள் எழுகிறது. ஆழ்ந்து நோக்கினால், ஜெயராசி மாத்யமிக பௌத்த
மரபாகவும்.
ஜெயங்கொண்டார் வைணவத்தில் சிறுபற்றும் தெரிகிறது
(வைணவத்தை அவர் சாடவில்லை வளமடலில்).
கவிச்சக்கரவர்த்தி என்று கம்பருக்கு மக்கள் அவரது கவிதாசக்திக்காக
ரசிகர்குழாம், பொதுமக்கள் மனத்தில் கொடுத்த சிம்மாசனம்.
ஆனால், சோழ சக்கரவர்த்தி கொடுத்ததாக சொல்வது கர்ணபரம்பரைச்
செய்தியே. கம்பர் கவிச்சக்கரவர்த்தி பட்டம் பற்றிய செய்திகள்,
தனிப்பாடல்கள் அ.ரா அவர்கள், ஹரிகி, ... கற்றோர் சொன்னால்
மிகு பயன். நன்றி. ரா. ரா. புத்தகம் கவிச்சக்கரவர்த்தி கம்பர்
இருக்கிறது.
கவிச்சக்கரவர்த்தி பட்டம் உண்மையாகவே சோழப் பேரரசர்களிடம்
பெற்றோர் செயங்கொண்டார், 100 வருடம் பின்னால் ஒட்டக்கூத்தர்.
- இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
> //In a medieval Tamil text, some 16 stories are told of men doing
> different things for the sake of 'kaamam'.//
>
> இக்காரணம் ஒன்றால் மட்டுமே இது சிற்றிலக்கிய வகை சார்ந்த ஒரு சாமானிய
> நூல் என்றே ஆகிறது.
> லோகாயதம், சார்வாகம் என்பவை காமம் தவிர வேறு பல நுட்பமான, அறிவு சார்ந்த
> வாதங்களையும் முன்வைப்பதாக இருப்பவை. இந்நூலில் புராண , இதிஹாஸச்
> செய்திகள் தவிர வேறு எவையும் முன்வைக்கப் படவில்லை; நோக்கமும்
> காமச்சுவையை உயர்த்திக்காட்டுவது மட்டுமே.
>
> ஒரு நிலையில் இருக்கும்போது பிற நிலையை இகழ்வது இந்தியச் சிந்தனை மரபில்
> புதிய செய்தி இல்லை. ஆன்மிகத்தில் உள்முகமாகத் தோய்ந்தவர் சடங்குகள்
> நிறைந்த புறவழிபாட்டைப் புறக்கணிப்பர், ‘நட்ட கல்லும் பேசுமோ
> நாதனுள்ளிருக்கையில்’ போன்ற உதாரணங்கள் கூறலாம்.
>
> தர்மபுத்ரர் அறத்தை மட்டுமே வலியுறுத்திப் பிறவற்றைப் புறக்கணித்துப்
> பேசுவார்; இராமபிரான் எடுக்கும் நிலையும் அதுதான். வீடுபேற்றை
> வலியுறுத்துவோர் ‘த்ரிவர்க நிரபேக்ஷதா’ என்று பிறவற்றைப் புறக்கணிப்பர்;
> அறத்தைக்கூடக் காமத்தோடு சேர்த்து விடுவர்.
>
> மறையின் ஞான காண்டப்பகுதி சடங்குகள் நிறைந்த கர்ம மார்கத்தை ஓட்டைப்படகு
> என்று கூறும். கர்ம மார்கம் புகைப்படலம் சூழ்ந்த நெருப்பு என்றும், ஞானம்
> கொழுந்து விட்டெரியும் நெருப்பு என்றும் ஞான நெறியாளர் கூறுவர்.
> புத்தர் வந்துதான் புதுமைச் சிந்தனை புகுத்தினார் என்பதெல்லாம் பில்ட்
> அப். வேதாந்த நூல்களிலும் புராணச் செய்திகளை நகையாடியிருப்பதைக் காணலாம்.
> அந்த அந்த இடத்தில் அதது.
>
லோகாயதம் சாதாரணமானது என்பது இந்திய மதங்களின் கோட்பாடு.
சிரமண சமயங்கள் (சமணம், பௌத்தம்) கொடுத்த பார்வைகள் மறுக்கப்படுவது
இந்தியாவின் 2000 ஆண்டு வாடிக்கை அல்லவா. ஒரு பாலி நூல் கூட
இந்தியாவில் கிடைக்கவில்லையே. சிங்களர் அல்லவா புத்தரின்
வசனங்களை காத்தளித்தனர்.
உயிர் என்பது சில தனிமங்களின் கூட்டு, அதற்கு ஆக்குவோன் தேவையில்லை
என்கிறது தற்கால ஸயன்ஸ். வளமடலில் லோகாயதனும் அதையே
சொல்கிறான்: [சோழ அரசனின் சின்னம்] ஆத்திப் பூ, வெல்லம், பழஞ்சோறு, கஞ்சி
- 4 பொருளை இட்டுக் காய்ச்ச வெளிப்படும் மதுக் களிப்பு போல, பூமி, புனல்,
காற்று, தீ
4 பூதங்களின் சேர்க்கை சமன்நிலையில் வெளிப்படும் உணர்ச்சி உயிர்
என்கிறானே. சமனிலை திரிகையில் ஏற்படுவது இறப்பு.
ஸயன்ஸும், லோகாயதத்துக்கும் உள்ள முக்கியமான தொடர்புகள்
மக்கள் அறிந்து ஆராயவேண்டும். பழைய இந்திய நூல்களில்
என்ன அறிவியற் கோட்பாடுகள் இருந்தன? என்பது முக்கியம்.
அவை வளராமல் சமூக அமைப்புகள் தன் சுயநலம் கருதிச்
செய்வது வாடிக்கையே. கோப்பர்நிக்கஸ் பூமி உருண்டை என்றதை
போப் வத்திகன் ஏற்க நாளாயிற்று. ஹிந்துக்கள்
பால், தயிர், நெய், ... 7 கடலில் நடுவே பூமி. அதை
ஆமையும், திக் கஜங்களும் தாங்கிக் கொண்டிருந்தன
என்றல்லவா நினைத்தோம், எழுதினோம்.
> புதுமணத்தம்பதிக்கு திருமந்திர நூலைப்பரிசாகக் கொடுக்க மாட்டார்கள்
>
அபிதான சிந்தாமணி சொல்லும் லோகாயதக் கோட்பாடு:
“உலகாயதமதம் - இவன் நிரீசுவரவாதி. இத் தூல தேகத்தில்
எதனால் பல விவகாரங்கள் உண்டாகின்றன? எது நீங்கினால்
விவகாரங்கள் நீங்குகின்றனவோ அதற்குக் காரணமானதே
ஆத்மா என்பன். அவ்வாத்மா ஸ்தூல சரீரத்திற்குப் பின்
ஜீவித்தல், மரணமடைதல் இரண்டும் சரீராதீனம், இந்திரியமே
ஆத்மா என்பன். உலகம் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு
இவை கலந்த காலத்துண்டாஞ் சிவப்புப்போலவும், விறகைக்
கடைந்த காலத்தில் உண்டான நெருப்புப் போலவும் உண்டாம்.
கடவுள், கன்மம், ஆத்மா என்பன இல்லையென்பன். இதை
விட்டுப் புறமதங்களில் சேர்ந்து பந்தித்திருப்பதே பந்தம்.
உலக இன்பங்களை அனுபவித்திருப்பதே முத்தியென்பன்.
இது வியாழபகவான் இந்திரன்பொருட்டுக் கற்பித்த மதம்
(தத்வநிஜானுபோகசாரம்).”
இதைப் பாடும் வளமடல் காதல் தம்பதிகளுக்குப் பரிசளிக்கலாமா?
ஆணைப் பார்த்து பெண் மடலூர்தல் தமிழ் மரபன்று:
தொல்காப்பியம் தெளிவுபடுத்துகின்றது.
“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” - தொல்காப்பியம்
“கடலென்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்” (குறள்: 1137)
அம்மரபை மாற்றுபவர் திருமங்கை ஆழ்வார்.
கண்ணன், நாராயணன் என்னும் பெருமாள் பெயர்களின்
எதுகையொடும் அமைந்தன திருமடல்கள்.
ஆழ்வார் நாயகி ஆகிவிடுகிறார் இம்மடல்களில்.
“மன்னும் வழிமுறையே நிற்றும் நாம், மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாம் தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்.” (பெரிய திருமடல்: 38-40)
முனைவர் பேரா. க. நெடுஞ்செழியன் போன்றோர் ஆய்ந்தெழுதும்
பழைய தமிழ் வழக்கத்துக்கு திருப்பி அமைக்கிறார்
செயங்கொண்டார். அவர் வளமடல் இலக்கணத்தைத் தேர்ந்து
காமனின் வழிபாட்டைப் போற்றி புறச் சமயங்களை வாழ்த்தி
(அவரது நண்பன் மாவிரதி பற்றி எழுதுகிறேன்.) இலக்கியம்
தந்துள்ளார். 550 அடியும் ஒரே எதுகை பயில்கிற நூல்
வெறெங்கும் இந்தியாவில் இல்லை. தமிழில் தமிழ்
மரபாகிய ஆண் மடலூர்தலை மீட்டும் கொணர்கிறார்.
பேரரசர்களின் ஆதரவு பெற்ற பெருங்கோயில் சமயங்கள்
வடநெறியை நாடி பெண் பெருமாளை நோக்கி
மடலேறுவது நிறுவனமயம் ஆக்கப் பட்டபோது
- கோயில் தேவரடியாள்கள் கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டு
தாசிகள் தென்னிந்தியாவில் பெருக்கம் அடைந்தபோது -
ஆண் காதலிக்கு மடல் ஏறுவதாய்த் திருப்பி அமைத்தது
11-ஆம் நூற்றாண்டின் இலக்கியப் புரட்சி.
ஆம். அதைச் சிந்திக்க, பெரிதுபடுத்த மத கட்டமைப்புகள்
ஆதரவளிக்கவில்லை. எனவே, அம்மரபு அருகியது, அரியது.
அன்புடன்,
நா. கணேசன்
> தேவ்
ஒரு நூலின் சிறப்பம்சங்களை வெளியிடுவது வேறு; பத்தாண்டு காலமாக ஆராய்ச்சி
முடிவுறாத நிலையில் இது இந்த வகை நூல்தான் என்று நாமாகவே அறிக்கை
வெளியிடுவது வேறு.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
(குறள் 1103)
புணர்ச்சி மகிழ்தல் தொடர்பான செய்தியில் ‘ பேரின்பம் பெண்ணின்பத்தைக்
காட்டிலும்
உயர்ந்ததோ !’ என்றால் உடனே ’திருக்குறள் ஒரு லோகாயத நூல்’ என்று Declare
செய்து விடுவது நடுநிலையான ஆராய்ச்சியா ?
//ஜயராஸியின் முழு நூலும் இன்றில்லை. இதனை பதிப்பித்து ஆராய்ந்தவர்
தத்துவவியல் பேரா. Eli Franco. அவரது முனைவர் பட்ட ஆய்வேடு
பிற்காலத்தில் நூலாக வந்துள்ளது. அதை 12+ வருடங்களுக்கு முன்
படித்தேன்.//
முழு நூலும் கையகப்படாத நிலையில் ஒப்பிடுவதற்கு அதை ஏன் எடுத்துக்கொள்ள
வேண்டும் ?
ஆராய்ச்சி முடிவு என்பது நாளிதழ்கள் வெளியிடும் பரபரப்புச் செய்திபோல்
ஆகிவிடக்கூடாது; இப்போக்கு நாளடைவில் இதைப் பேசுவோரின் நம்பகத்
தன்மையையும் சீர்குலைத்து விடும்.
அச்வகோஷர் – ஜயராசி – ஜெயங்கொண்டார் என்று ஒப்பிட்டு வந்துள்ளீர்;
இவ்வகையான ஒப்பீட்டில் வேறொரு குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது;
இடக்குப் பேச்சில்கூடத் தமிழனுக்கு originality இல்லை என்றாகி விடும்.
தமிழன்னைக்கு முடிசூட்ட ஒரு வழிநூல்தானா கிடைத்தது என்னும் கேள்வியும்
பிறக்கும்
தேவ்
> Feb 24, 8:13 am, "N. Ganesan"
> //இலக்கிய வரலாற்றுக்காக. 550 அடியும் ஓரே எதுகை கொண்ட நூல்
> வேறெங்கும் இந்தியாவில் இல்லை அல்லவா?//
> ஒரு நூலின் சிறப்பம்சங்களை வெளியிடுவது வேறு; பத்தாண்டு காலமாக ஆராய்ச்சி
> முடிவுறாத நிலையில் இது இந்த வகை நூல்தான் என்று நாமாகவே அறிக்கை
> வெளியிடுவது வேறு.
> தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
> தாமரைக் கண்ணான் உலகு
> (குறள் 1103)
> புணர்ச்சி மகிழ்தல் தொடர்பான செய்தியில் ‘ பேரின்பம் பெண்ணின்பத்தைக்
> காட்டிலும்
> உயர்ந்ததோ !’ என்றால் உடனே ’திருக்குறள் ஒரு லோகாயத நூல்’ என்று Declare
> செய்து விடுவது நடுநிலையான ஆராய்ச்சியா ?
I don't see the relevence of this to the lokayata texts of India:
Jayarasi's or JeyamkoNDar's.
> //ஜயராஸியின் முழு நூலும் இன்றில்லை. இதனை பதிப்பித்து ஆராய்ந்தவர்
> தத்துவவியல் பேரா. Eli Franco. அவரது முனைவர் பட்ட ஆய்வேடு
> பிற்காலத்தில் நூலாக வந்துள்ளது. அதை 12+ வருடங்களுக்கு முன்
> படித்தேன்.//
> முழு நூலும் கையகப்படாத நிலையில் ஒப்பிடுவதற்கு அதை ஏன் எடுத்துக்கொள்ள
> வேண்டும் ?
> ஆராய்ச்சி முடிவு என்பது நாளிதழ்கள் வெளியிடும் பரபரப்புச் செய்திபோல்
> ஆகிவிடக்கூடாது; இப்போக்கு நாளடைவில் இதைப் பேசுவோரின் நம்பகத்
> தன்மையையும் சீர்குலைத்து விடும்.
> அச்வகோஷர் – ஜயராசி – ஜெயங்கொண்டார் என்று ஒப்பிட்டு வந்துள்ளீர்;
> இவ்வகையான ஒப்பீட்டில் வேறொரு குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது;
> இடக்குப் பேச்சில்கூடத் தமிழனுக்கு originality இல்லை என்றாகி விடும்.
வடமொழி தத்துவவாதங்களைக் விளக்கமாகக் குறிப்பிட்டு
தமிழ்மரபாகிய மடலூர்தல் இலக்கியவகையைப்
பயன்படுத்தியுள்ளார். திருக்குறள் சமணர் தந்த இலக்கியம்
என்பர் - லோகாயதம் அல்ல. லோகாயதருக்கு
புறச்சமயங்கள் சமணம், பௌத்தம், மாவிரதியர், ஆசீவகம்
தொடர்புகள் உண்டு.
> தமிழன்னைக்கு முடிசூட்ட ஒரு வழிநூல்தானா கிடைத்தது என்னும் கேள்வியும்
> பிறக்கும்
தமிழன்னைக்கு முடி சங்க இலக்கியங்களே.
NG
> தேவ்
On Feb 24, 11:14 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> சேது அணை இருந்ததா? பண்டைய வழக்கமா? அல்லது பின்னர்
> புகுத்தியதா? இதற்கெல்லாம் ஒரு சின்ன விளக்கம் இந்த வளமடலில்
> காணலாம். அன்றைய காலத்திலிருந்தே மக்களின் நம்பிக்கை சேது என்பதை
> முன்னிலைப் படுத்தியுள்ளது போலும் !
>
> >>காதம் பல கடந்து கங்கையும் காவிரியும்
>
> கோதா வரியும் குமரியும் சென்றாடுவார்
>
> *சேது தெரிசனங்கள் பண்ணுவார்* <<<
>
> கணேசன் உரியவருக்கு சேது விஷயத்தைப் பற்றி இதைக்கொண்டு தெளிவு
> ஊட்டலாமே! :--))))
>
"aa sethu himaacalam" - is this a new adage? :)
http://kalyan97.wordpress.com/2007/11/13/1245/
NG
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
Feb 24, 10:56 am, "N. Ganesan"
//தமிழன்னைக்கு முடி சங்க இலக்கியங்களே.//
கணேசனார் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரீடத்தை மாற்றுவார் போல
தேவ்
On Feb 23, 2:02 pm, devoo <rde...@gmail.com> wrote:
> //In a medieval Tamil text, some 16 stories are told of men doing
> different things for the sake of 'kaamam'.//
>
> இக்காரணம் ஒன்றால் மட்டுமே இது சிற்றிலக்கிய வகை சார்ந்த ஒரு சாமானிய
> நூல் என்றே ஆகிறது.
I don't think so. The author uses his knowledge of Indic philosophies,
refutes
their renunciation in his own way. I think because Vaishnavism does
not insist
on renunciation, he leaves that out.
He uses Tamil tradition of maDal uurthal to praise the akam life
celebrated
by Tamils. A prabandham on lokayata philosophy from the
practisiioner's side,
we usually get condemnation of lokayata - maNimEkalai, sivagnana
siddhiyar, niilakesi,
sarvadar'sana sangraham, ... But from a lokayata perspective, we have
only
2 main works mentioned.
A reason why this vaLamaTal (rare because only very few have even been
written
in Tamil) is a jewel among treasures of Tamil literature.
N. Ganesan
I don't think so. The author uses his knowledge of Indic philosophies,
On Feb 23, 2:02 pm, devoo <rde...@gmail.com> wrote:
> //In a medieval Tamil text, some 16 stories are told of men doing
> different things for the sake of 'kaamam'.//
>
> இக்காரணம் ஒன்றால் மட்டுமே இது சிற்றிலக்கிய வகை சார்ந்த ஒரு சாமானிய
> நூல் என்றே ஆகிறது.
refutes
their renunciation in his own way. I think because Vaishnavism does
not insist
on renunciation, he leaves that out.
லோகாயதத்தை பற்றி யாரேனும் எழுதினால் நிச்சயம், பயனுடையதாக இருக்கும்.
அதுவும் பண்டைய இந்திய பாரம்பரியக்கூறுகளில் ஒன்று என்று பலரும் அறியாமல்
இருக்கின்றனர்.
ஹரி.கி நீங்கள் துவங்குங்கள் :-)
V
On Feb 25, 7:05 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
இத்துறைக்கென்று தனி நூல்கள் கிடையா;
பொதுப்படையாக இவர்கள் முன்வைக்கும் வாதங்களே எடுத்துக்கொள்ளப் படுகின்றன;
சாரு – மனம் கவரும், வாக் – மொழி இவற்றின் இணைப்பில் ’ சாருவாகம்’
எனும் சொல் உருவாகிறது.
தூய வடமொழியில், கண்கூடான சான்றுகளின் ஏரண அடிப்படையில் அமைவது
இவர்களின் வாதங்கள். தாக்குதல் இருக்குமே தவிர தரக்குறைவு இருக்காது.
”யாவத் ஜீவம் ஸுகம் ஜீவேத் | ருணம் க்ருத்வா க்ருதம் பிபேத் | பஸ்மீ
பூதஸ்ய தேஹஸ்ய புநராகமநம் குத: ? “ என்பது இவர்களின் ப்ரதாந
ப்ரதிதந்த்ரம் - மூலக்கருத்து
மரணம் நிச்சயம், எரியூட்டப்பட்டால் எழுந்து வருவோமா ? கடன் பட்டாவது
வாழ்க்கையை அனுபவி, உயிருள்ளவரை சுகமாக வாழ் – என்பது சார்வாக வாதம்.
ஆன்மா, மறைகள் , தேவர்கள் எல்லாம் கயவர்களின் கற்பனைப் படைப்பு; மஞ்சள்,
சுண்ணாம்பு, நீர் இவற்றின் சேர்க்கையால் முற்றிலும் மாறுபட்ட ஒரு செந்நிற
திரவம் உண்டாவதுபோல் பூதச்சேர்க்கையின் விளைவாக ஒருவித உயிர்ப்பு
ஏற்படுகிறது; அதற்கு ஆன்மா என்று பெயர் கொடுத்து, கண்ணுக்குத் தெரியாத
உலகங்களையும் கற்பித்துக் காசு பார்க்கிறார்கள்.
இவர்கள் நீர்,நிலம்,நெருப்பு,வளி என்னும் நான்கு பூதங்களை மட்டுமே
ஒப்புவர்; புலனுக்குப் புலப்படாத்தால் வெளி (ஆகாசம்) எனும் தனித்தத்துவம்
கிடையாது. பூதங்கள், அவற்றால் பெறும் இன்பம் – இதை மட்டுமே ஏற்பதால்
லோகாயதத்தை ’பௌதிக வாதம்’ என்றும் கூறுவர்.
இவர்களிலும் இரு பிரிவு இருந்ததாகத் தெரிகிறது – ஸுரக்ஷிதர், தூர்த்தர்
முதற் பிரிவினர் மானுடம் காக்கப்பட வேண்டும் என்பதில் முனைவர்; இரண்டாம்
பிரிவினருக்கு எதிலும் அக்கறை கிடையாது – புலனுகர்ச்சி ஒன்றில் மட்டுமே
குறி.
எல்லா மத மரபுகளிலும் முதல் கண்டனத்துக்கு உட்படுவது இந்த உலகாயதக்
கருதுகோள்
தேவ்
இவர்கள் நீர்,நிலம்,நெருப்பு,வளி என்னும் நான்கு பூதங்களை மட்டுமே
ஒப்புவர்; புலனுக்குப் புலப்படாத்தால் வெளி (ஆகாசம்) எனும் தனித்தத்துவம்
கிடையாது. பூதங்கள், அவற்றால் பெறும் இன்பம் – இதை மட்டுமே ஏற்பதால்
லோகாயதத்தை ’பௌதிக வாதம்’ என்றும் கூறுவர்.
On Feb 24, 11:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
ஆம். மேலும், பூதவாதி உயிர்த்தோற்றம் பற்றி மணிமேகலையில் சொல்வதை,
வி. வளமடலிலும் சொல்கிறான். பார்த்தீர்களா?
நா. கணேசன்
2010/2/25 N. Ganesan <naa.g...@gmail.com>
I don't think so. The author uses his knowledge of Indic philosophies,
On Feb 23, 2:02 pm, devoo <rde...@gmail.com> wrote:
> //In a medieval Tamil text, some 16 stories are told of men doing
> different things for the sake of 'kaamam'.//
>
> இக்காரணம் ஒன்றால் மட்டுமே இது சிற்றிலக்கிய வகை சார்ந்த ஒரு சாமானிய
> நூல் என்றே ஆகிறது.
refutes
their renunciation in his own way. I think because Vaishnavism does
not insist
on renunciation, he leaves that out.
இப்படி மாறிமாறி எழுதிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. மக்களுக்கு இவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள், என்ன விஷயம் நடநதுகொண்டிருக்கிறது என்பதைக் குறித்து ஒரு அட்சரமும் விளங்கப்போவதில்லை.
அந்த ஆய்வாளர் அப்படிச் சொல்லியிருக்கிறார் இந்த ஆய்வாளர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று யார் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லாம் வெறும் name dropping. அதற்குமேல் பெரும்பாலான ஆய்வுகளுக்கு அந்தஸ்து இல்லை. பாரதியைப் பற்றிய அவதூறு ஆராய்ச்சிகள் பலவற்றை நான் மறுத்திருப்பதையும், நான் மறுத்திருப்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதையும் எல்லோரும் அறிவார்கள். கணேசன் அவர்கள் அறிவார்.
இப்படிப்பட்ட விவாதங்கள் மக்கள் மத்தியில் செல்லவேண்டுமானல், மக்களுக்கு முதலில் எதைப் பற்றிப் பேசுகிறோம், என்ன உரையாடுகிறோம், எதைக் குறித்து விவாதம் நடக்கிறது என்பதாக தெளிவு கிடைக்கும். அது கிடைத்தாலன்றி, வாதங்கள் எல்லாம் காற்றில் இறைபட்ட கருத்துக் குவியலாக, கவனம் என்ற இலக்கை அடைய ஒண்ணாததாகவே நிற்கும்.
ஒருகாரியம் செய்யலாம். காரணை விழுப்பரையன் மடலுக்கு நான் உரை எழுதுகிறேன். (என்னிடம் டாக்டர் பட்டங்கள் இல்லை. ஆனால், இத்தகைய நூல்களுக்கு, குறைந்தபட்சம் சொல்லுக்குச் சொல் உரை சொல்ல என்னால் முடியும். இதை கணேசன் அவர்களும் உணர்ந்திருக்கிற காரணத்தால்தான் தக்கை ராமாயணத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டு ஓர் ஆய்வும், தக்கை ராமாயணத்துக்கான உரையையும் எழுதச் சொல்லி என்னிடம் பல ஆண்டுகளாககச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.) எனவே, முதலில் பத அர்த்தம்; பதார்த்தம் சார்ந்த அடிப்படை உரை. இரண்டும் தயாரானால், தயாரான பிறகு, இந்த நூல் எதுகுறித்துப் பேசுகிறது, எந்தத் திக்கில் செலுத்தப்படுகிறது என்று பகுதிபகுதியாக எடுத்து விவாதிக்க எல்லோராலும் முடியும்.
ஓர் இழையில் விழுப்பரையன் மடலுக்கு உரையை நான் எழுதுகிறேன். இன்னொரு இழையில் லோகாயதம் என்றால் என்ன என்பதைப் பற்றி கணேசனோ ரங்கனோ தேவோ அல்லது மற்ற யாருமோ எழுதட்டும். பிறிதொரு இழையில் மடல் இலக்கியங்கள் (அது கிடைக்கவில்லை; இதுகிடைக்கவில்லை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கையில் உள்ளதை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவோம்.) என்ன கருத்தில் எழுகின்றன, எதற்காக எழுதப்படுகின்றன; எப்படி மேற்பரப்பில் ஒரு அர்த்தமும் உள்ளர்த்தம் வேறாகவும் (திருமங்கை ஆழ்வாரின் மடல்கள் அவ்வாறு நடப்பவைதான், இல்லையா?) விளங்குகின்றன என்பதை ரங்கனோ, மற்ற யாருமோ விளக்கட்டும்.
எழுதுவதை இன்றைய தமிழ் நடையில் எழுதினால் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவைப்படும் காலம் இது. நடையை இறுக்கினால், தனிப்பட்ட குழூஉக்குறிகளைப் பெய்து எழுதினால், “நாற்பதாயிரம் கோவில்களில் சொல்வேன்” யாருக்கும் புரியப்போவதில்லை. ஆகவே எழுதும் ஒவ்வொருவரும், ‘இதை நாம் இதைப்பற்றி எதுவுமே அறியாதவர்களுக்காக எழுதுகிறோம்’ என்ற கருத்தை மனத்தில் இருத்தி எழுதினால் நலம்.
இங்கே பற்பல ஆராய்ச்சித் திலகங்களும் தமிழைத் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுபர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த முயற்சி நகைப்பை உண்டு பண்ணினாலும் சரி; இளிவரலை ஏற்படுத்தினாலும் சரி. நாமார்க்கும் குடியல்லோம். ‘இன்ன இடத்தில் இன்ன காரணத்தால் இன்ன பொருள் காணப்படவேண்டும்’ என்று நம்மிடம் காணப்படும் தவறுகளைச் சுட்டினால், தாள் பணிந்து ஏற்போம்.
இந்த வகையில் செல்லலாமா? வேலை பார்க்காதவன் என்றாலும் எனக்கும் வேலை உண்டு. என் வேலைகளுக்கிடையில் இதற்கும் நேரம் ஒதுக்கத் தயாராக இருக்கிறேன். செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நேரம் தானாகக் கிட்டும். ஆர்வம் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
‘‘அடப் போய்யா! உன்ன மாதிரி பட்டம் வாங்காதவங்கள்ளாம் இதுக்குள்ள நுழஞ்சி சிதைச்சுப் போடறதுக்குத் தகுதியில்லாதவங்க’ என்று சொல்லிவிட்டால், எனக்கும் நேரம் மிச்சம். வேற காரியத்துக்குப் போயிடுவேன். சம்மதம் என்றால் மூன்று தனித்தனி இழைகளில் மூன்று தனித்தனி நபர்களோ, குழுக்களோ ஈடுபடலாம். ஆட்டத்துக்குத் தயார் என்றால், களம் காத்திருக்கிறது.
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Feb 24, 11:18 pm, devoo <rde...@gmail.com> wrote:
> லோகாயதம்
>
> இத்துறைக்கென்று தனி நூல்கள் கிடையா;
>
We've 1 each in Tamil and Sanskrit.
Jayarasi's is the only authentic text for this school,
acc. to Dr. S. Radhakrihsnan, ex-President of India.
Then we have K. V. vaLamaDal also in Tamil.
http://glasscock.tamu.edu/agora/winter02/sukumaran.PDF
"This school of thought is also called Lokâyata, from loka, the
Sanskrit word
for “world,” since it holds that only the materialistic world exists
and
nothing more, such as the soul, heaven, or hell. 4 Virtually all that
is known
of this system of thought derives from polemical texts trying their
best to
refute or deride their doctrines. Some texts include the
Sarvadarœanasamgraha
and the Sarvasiddhântasârasamgraha of Samkara. The school is
referred to in the Prabodha-candrodaya (The Rise of the Moon of
Intellect),
a well- known ancient Indian drama that emphasizes how prominent the
movement
was. The Tatvopaplavasimha is the only text that can be considered an
authentic
text of the school and includes a series of attacks on all the other
schools
of Indian thought. [5]
[...]
[5] Radhakrishnan, Sarvepalli and Moore, Charles A. A Sourcebook in
Indian Philosophy. Princeton University Press. Princeton, New Jersey;
1957.
p. 227-228. "
Contemporaneous with the K. V. vaLamaTal is Krishna Mishra (1045
-1100)'s
allegorecal drama - Prabodha Candrodayam. In Tamil, there is a 17th
century
translation by kIzmAttUr tiruvEGkaTanAtar (1623-1700). (Civasankara
CeTTiyAr ed. 1911, & Tanjore Saraswati mahal, 1988).
More I plan to look at:
Just few months ago, Matt Kapstein's translation has come
from New York University (2009). I've ordered a copy.
The rise of wisdom moon /
Author: Krsnamisra.; Kapstein, Matthew.
New York University Press : JJC Foundation, 2009
Internal Criticism and Indian Rationalist Traditions
M. Nussbaum and Amartya Sen (Nobel Laureate), 1987
http://www.wider.unu.edu/publications/working-papers/previous/en_GB/wp-30/
The full paper is available as a PDF.
A critical study of the Lokayata philosophy presented
by the author of the Prabodhacandrodaya.
Apurba Chandra Barthakuria
1977 Rev. ed.
Calcutta : Sanskrit Pustak Bhandar,
sorry for english,
ng
> தேவ்
http://www.oration.com/~mm9n/articles/hinduism/chapter_thirteen.htm
"The Vedic proponents destroyed most of the literary works of the
Carvaka philosophy. But from the few that we have received we could
reconstruct their stand. Prabodha-candrodaya (Rise of Wisdom) which
survived is a drama. In this play Passion is personified and speaks to
a
materialist and one of his pupils. Passion laughs at ignorant fools,
who
imagine that spirit is different from the body and reaps a reward in
a
future existence. This he says is like expecting trees to grow in air
and
produce fruit. Has anyone seen the soul separate from the body? Does
not life come from the configuration of the body? Those who believe
otherwise deceive themselves and others."
> http://www.oration.com/~mm9n/articles/hinduism/chapter_thirteen.htm
> "The Vedic proponents destroyed most of the literary works of the
> Carvaka philosophy.
The author has not produced any evidence of active destruction.
In India philosophical works were lost not due to destruction , but by
negligence.
A set of devoted disciples and a parampara would have preserved the
works of their masters. In the absense of that, things were lost.
Vijayaraghavan
Vijayaraghavan
On 25 Feb, 21:33, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> Thank you for your apt and succinct comments, Mr
> Vijayaraghavan. These people pay scant regard towards a
> proper perspective, relevant to the problems at hand.
>
> They never understand the context of Purva--paksha. If they
> would have destroyed, as these people imagine, the opponents'
> works, why so much care was being taken by those Vedic
> proponents to delineate elaborately on the systems of their
> opponents, in the sections of Purva--paksha? So that many
> schools of thought we come to know only through these
> Purva--paksha portions. Destroyers never take care to harbour
> the tenets of the rivals in their own canons.
>
> What to do with persons who refuse to see?
>
> Srirangam V Mohanarangan
>
> On 2/26/10, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > On 25 Feb, 18:39, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > >http://www.oration.com/~mm9n/articles/hinduism/chapter_thirteen.htm
> > > "The Vedic proponents destroyed most of the literary works of the
> > > Carvaka philosophy.
>
> > The author has not produced any evidence of active destruction.
>
> > In India philosophical works were lost not due to destruction , but by
> > negligence.
>
> > A set of devoted disciples and a parampara would have preserved the
> > works of their masters. In the absense of that, things were lost.
>
> > Vijayaraghavan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
There is a need for meticulous system of copying with reverence. I see
that only in Vaishnava Tradition. I see copies of Tiruvaimozhi
everywhere I go from Alwartirunagari to Berlin Library!
Our team has just now discovered that somewhere in Kanchivaram
district a Vaishnava mutt (Ahobila) has a collection of 12,000
palmleaf manuscripts! Unless you pay attention to your tradition this
won't happen. There is no use in complaining!
Kannan
மேலும் நமது மரபில் ஒரு நூல் தனிச்சிறப்புடையது எனில் ஒன்று அது
சங்கப்பலகை பரிட்சை தேறியிருக்க வேண்டும், இல்லை காலத்தின் தேர்வில்
பிழைத்திருக்க வேண்டும். வள்ளுவம் இன்று இவ்வளவு போற்றப்படுவதற்குக்
காரணம் வழி, வழியாக எல்லா மார்க்கங்களும் அதற்குள் புகுந்து
திளைத்திருக்கின்றன.
வளமடல் என்பது கல்யாணத் தம்பதிகளை முதலிரவிற்கு அனுப்பும் முன் பாடும்
செக்ஸ் பாட்டுப்போன்றது. அவ்வளவுதான்.
இன்னொரு உதாரணமும் கொடுக்கலாம். நம்மாழ்வாரின் பாடல்கள் அனைத்தும்
துளைத்து, திளைத்து அனுபவித்து வந்திருக்கிறது தமிழ் வைணவம். 20
நூற்றாண்டில் இராகவய்யங்கார் ‘அண்டகோளத்து ஆரணுவாகி’ எனும் பாடலை ஒரு
ஏட்டுப்பதிப்பிலிருந்து எடுத்து வெளியிடுகிறார். அது நம்மாழ்வார் பாடல்
என்பதை அவர் நிருவ மிகவும் பௌயமான அணுகுமுறையைக் கையாள்கிறார். He did
not have tall claims.
தமிழ் மரபில் சீத்தலைச் சாத்தனார்கள் அதிகம். அவர்கள் கண்களிலிருந்து
தப்பி சிறப்புறாத ஒரு நூல் இன்று எப்படி சிறப்புறும்?
இன்னொன்று, நான்கு புருஷார்த்தங்களில் காமமும் சிறப்புடையது என்றே
ஸ்ரீவைஷ்ணவம் கருதுகிறது. காமம் கண்ணனை நோக்கி இருக்க வேண்டும். நம்
தாம்பத்யம் என்பதே கண்ணனின் நித்ய கைங்கர்யத்திற்கு என்று அர்பணிக்க
வேண்டும். அப்போது காமம் மிகச்சிறந்த புருஷார்த்தமே!
க.>
ஐயன்மீர்,உலோகாயதம் என்றால் பொருள்முதல் வாதம் (materialism) என்பதாக நான் பொருள் கொள்கிறேன்.காரணை விழுப்பரையன் வளமடலோ காமநுகர்ச்சியே எல்லாவற்றினும் உயர்ந்ததென்று பேசுகிறது. அதுவே வளமடலின் வரையறையும் ஆம் என்கிறது லெக்ஸிகன்:
உலகாயதம் என்றால் என்ன என்று சிவஞான போதம் திராவிட மாபாடியத்தில், அவையடக்கப் பகுதியில் ஸ்ரீமாதவ சிவஞான முனிவர் எழுதியுள்ளனவற்றைத் தற்சமயத்திற்கு ஒப்பு நோக்கக் கொள்ளலாமா? ஆம் எனில் இவண் காண்க ::------”புறப்புறச்சமயம் ஆறனுள் உலகாயதமாவது:---காண்டலளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளியென நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு;பாகடையும், சுண்ணாம்பும் கூடியவழிச் செவ்வண்ணம் பிறக்குமாறு போல இவற்றின் கூட்டரவின் ஓருணர்வுண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயுமாகலின், உடம்பிற்கு வேறே உயிரென்பதும் பொய்;உடம்பிற்கு இன்ப துன்பங்கள் இயல்பாயுள்ளன; இவற்றிற்குக் காரணம் வினையென்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும் குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையில் கடவுள் உண்டென்பதும் பொய்; இம்மையில் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்;அது பெறாது பகைவரால், நோயால், வறுமையால், நூல்களால், பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்க நிரயமுள என்பதும் பொய்;நான்கு பூதக் கூட்டரவில் பிராணவாயு ஒன்று நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடு பேறு உண்டென்பதும் பொய்;இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றால் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோரால் செய்யப்பட்டன;தேவ குலம், தண்ணீர்ப்பந்தர், கூவல், பொய்கை, சோலை முதலியன செய்தலை உயர்த்துக் கூறும் நூல்கள் வழிச்செல்வோரால் கூறப்பட்டன;ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு, பசுக்காவல், வாணிகம், செங்கோல் முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மை இன்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.இவ்வுலகாயத நூல் செய்தோன் பிருகற்பதி என்றுணர்க. இவ்வுலகாயதர் தேகான்மவாதிகளும், இந்திரியான்மவாதிகளும், பிராணான்மவாதிகளும், அந்தக்கரணான்மவாதிகளும் எனப் பலதிறப்படுவர்.”----(மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதமும், சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த சிவஞான பாடியமும், சைவ சித்தாந்த மகாசமாஜம், (1936) ஏப்ரல் 2000; பக்கம் 50--51)
On 2/26/10, Madhurabharathi <madhura...@gmail.com> wrote:
ஹரி அண்ணா!
திருப்புகழ் ஒரு பாடலுக்கு இந்த தேனை வண்டு எப்படி முகரும் என்று தாங்கள்
விளக்கியதிலிருந்து ஒரு கிக்கு. பேசாம இந்த வள மடலையும் உண்டு இல்லைன்னு
ஆக்கிப்புடனும் ;-) நீங்க உங்க கச்சேரியை ஆரம்பியுங்க :-)
இது லோகயதமா இல்லை உலக்கை ஆயுதமான்னு மக்கள் தீர்மானிக்கட்டும். உங்க கை
பட்டா உலக்கை கூட மலர்ப்படுக்கை ஆகலாம் ;-)
க.>
எனக்கு it makes no difference. A good piece of writing is a good piece of writing. ஆனால் நீங்களே, உங்கள் ஒவ்வொருவரையும் சொல்கிறேன், படித்துப் பாருங்கள்.
Is this book available online anywhere ?
V
On Feb 26, 8:23 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> உலகாயதம் என்றால் என்ன என்று சிவஞான போதம் திராவிட மாபாடியத்தில்,
> அவையடக்கப் பகுதியில் ஸ்ரீமாதவ சிவஞான முனிவர் எழுதியுள்ளனவற்றைத்
> தற்சமயத்திற்கு ஒப்பு நோக்கக் கொள்ளலாமா? ஆம் எனில் இவண் காண்க ::--
>
> ----”புறப்புறச்சமயம் ஆறனுள் உலகாயதமாவது:---
>
> காண்டலளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளியென
> நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே
> உடம்பு;
>
> பாகடையும், சுண்ணாம்பும் கூடியவழிச் செவ்வண்ணம் பிறக்குமாறு போல
> இவற்றின் கூட்டரவின் ஓருணர்வுண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும்
> தேயத் தேயுமாகலின், உடம்பிற்கு வேறே உயிரென்பதும் பொய்;
>
> உடம்பிற்கு இன்ப துன்பங்கள் இயல்பாயுள்ளன; இவற்றிற்குக் காரணம்
> வினையென்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும் குயிலைக்
> கூவுவித்தாரையும் காணாமையில் கடவுள் உண்டென்பதும் பொய்; இம்மையில்
> மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே
> துறக்கவின்பம்;
> அது பெறாது பகைவரால், நோயால், வறுமையால், நூல்களால்,
> பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்க நிரயமுள
> என்பதும் பொய்;
>
> நான்கு பூதக் கூட்டரவில் பிராணவாயு ஒன்று நீங்கில் உணர்விழந்து
> உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடு பேறு உண்டென்பதும்
> பொய்;
>
> இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி
> முதலியவற்றால் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள்
> மதுகையின்றி மதியுடையோரால் செய்யப்பட்டன;
>
> தேவ குலம், தண்ணீர்ப்பந்தர், கூவல், பொய்கை, சோலை முதலியன செய்தலை
> உயர்த்துக் கூறும் நூல்கள் வழிச்செல்வோரால் கூறப்பட்டன;
>
> ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு, பசுக்காவல், வாணிகம், செங்கோல்
> முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மை இன்பங்களை
> நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
>
> இவ்வுலகாயத நூல் செய்தோன் பிருகற்பதி என்றுணர்க. இவ்வுலகாயதர்
> தேகான்மவாதிகளும், இந்திரியான்மவாதிகளும், பிராணான்மவாதிகளும்,
> அந்தக்கரணான்மவாதிகளும் எனப் பலதிறப்படுவர்.”----
>
> (மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதமும், சிவஞான சுவாமிகள்
> அருளிச்செய்த சிவஞான பாடியமும், சைவ சித்தாந்த மகாசமாஜம்,
> (1936) ஏப்ரல் 2000; பக்கம் 50--51)
>
> On 2/26/10, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
>
> > ஐயன்மீர்,
>
> > உலோகாயதம் என்றால் பொருள்முதல் வாதம் (materialism) என்பதாக நான் பொருள்
> > கொள்கிறேன்.
>
> > காரணை விழுப்பரையன் வளமடலோ காமநுகர்ச்சியே எல்லாவற்றினும் உயர்ந்ததென்று
> > பேசுகிறது. அதுவே வளமடலின் வரையறையும் ஆம் என்கிறது லெக்ஸிகன்:
>
> > *வளமடல்* vaḷa-maṭal
> > , n. < வளம் + மடல். A poem in kali-veṇpā, praising kāmamaṟam,
> > poruḷvīṭuetukaipirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு
> > ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங்
> > கலிவெண்பாவாற் பாடும் நூல்வகை. (இலக். வி. 856.).
>
> > “தலைவனது பெயரையே எதுகையிலமைத்து கலிவெண்பாவால் பாடும் நூல்வகை” என்பதால்
> > ஆதிநாதன் என்ற தலைவனின் பெயருக்கான எதுகையைப் பாடல் முழுதுங்கொண்டு ஓரெதுகையான்
> > வருகிறது.
>
> > ஆக இவ்வாறுதான் இருக்க வேண்டும் வரையறை உள்ளதால் காரணை விழுப்பரையன்
> > மடலின் அத்தனை வரிகளிலும் ஓரெதுகை வருதல் (பாராட்டுக்குரியதெனினும்)
> > வியக்கத்தக்கதல்ல.
>
> > காமநுகர்ச்சி ஒன்றே செய்யத் தக்கது என்று பேசுவதும் உலோகாயதம்/சார்வாகமும்
> > ஒன்றா?
>
> > The meaning of Materialism is:
> > 1. preoccupation with or emphasis on material objects, comforts, and
> > considerations, with a disinterest in or rejection of
> > spiritual,intellectual, or cultural values.
> > 2. the philosophical theory that regards matter and its motions as
> > constituting the universe, and all phenomena, including thoseof mind, as due
> > to material agencies.
>
> > Hedonism is:
> > 1. the doctrine that pleasure or happiness is the highest good.
> > 2. devotion to pleasure as a way of life.
>
> > விழுப்பரையன் வளமடல் புருஷார்த்தம் நான்கனுள் அறமும் பொருளும் காமத்துக்குத்
> > தாய் தந்தையர் என்றும், காமம் ‘முத்திக்கு வித்தாம்’ என்றும் பேசுகிறது:
>
> > *.... .... ...... - ஆகமத்தின்
> > நாதமுமாய் நின்றனவும் நான்கே;அந் நான்கினுக்கும்*
> > **
> > *ஆதி அறம்பொருளென்று அவ்விரண்டும் காமத்தைத்
> > தாதையொடு தாயாய்ச் சனிப்பிக்கும்; இக்கருமம்*
> > **
> > *மூதுணர்வு முத்திக்கு வித்தாம் எனவுணர்ந்து* (61-65)
>
> > கணேசனார் முன்னுரையில் இப்பனுவல் ‘'இந்தியாவில் எழுந்த பழைய நூல்களில் காரானை
> > விழுப்பரையன் மடல் பொருட் சிறப்பாலும் கவியழகாலும் ஓர் உயர்தனி இடம் பெறும்.’
> > என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். கலவியின்பம் தவிர்த்து வாழ்க்கையில் ஏதும்
> > உயர்வல்ல என்பதும் ஒரு கருத்து என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை உயர்த்திப்
> > பாடும் இம்மடல் ‘பொருட் சிறப்பால் உயர்தனி இடம் பெறும்’ என்று குறிப்பிடுவது
> > எம்மட்டில் சரியான மதிப்பீடு?
>
> > இங்கிருக்கும் அறிஞர்களுக்கு இவையெல்லாம் தெரியாததல்ல. குழப்பம் என்னிடம்தான்.
> > தெளிவுபடுத்துங்கள்.
>
> > அன்புடன்
> > மதுரபாரதி
>
> > 2010/2/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >> On Feb 24, 11:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> >> wrote:
> >> > 2010/2/25 devoo <rde...@gmail.com>
>
> >> > > இவர்கள் நீர்,நிலம்,நெருப்பு,வளி என்னும் நான்கு பூதங்களை மட்டுமே
> >> > > ஒப்புவர்; புலனுக்குப் புலப்படாத்தால் வெளி (ஆகாசம்) எனும் தனித்தத்துவம்
> >> > > கிடையாது. பூதங்கள், அவற்றால் பெறும் இன்பம் – இதை மட்டுமே ஏற்பதால்
> >> > > லோகாயதத்தை ’பௌதிக வாதம்’ என்றும் கூறுவர்.
>
> >> > தேவ்,
>
> >> > பூதவாதம் என்பதும் இதுதானே? மனிமேகலையில் பூதவாதிக்கும் மணிமேலகலைக்கும்
> >> வாதம்
> >> > நடைபெறுகிறது. ‘உங்க அப்பா யாருன்னு உன்னால ப்ரூவ் பண்ண முடியுமா’ என்று
> >> > மணிமேகலை கேட்கிறாள். பூதவாதி தோற்கிறான். இதுதானே பௌதிக வாதம்
> >> எனப்படுவதும்?
> >> > --
> >> > அன்புடன்,
> >> > ஹரிகி.
>
> >> ஆம். மேலும், பூதவாதி உயிர்த்தோற்றம் பற்றி மணிமேகலையில் சொல்வதை,
> >> வி. வளமடலிலும் சொல்கிறான். பார்த்தீர்களா?
>
> >> நா. கணேசன்
>
கலிங்கத்துப் பரணியின் நெடிய கடவுள் வாழ்த்துப் பகுதியின் பொருள் என்ன ?
சிவபெருமான், திருமால், நான்முகன், சூரியன், கணபதி, முருகன், நாமகள்,
மலைமகள், சப்த மாதர்கள்.. லோகாயதனுக்கு இத்தனை சாமிகள் எதற்கு ?
அதோடு நின்றதா ? வேதியரையும், வேந்தரையும் வாழ்த்தும் ஸ்வஸ்தி வாசநம்
வேறு -
விதி மறையவர் தொழில் விளைகவே
விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே
நிறைதலி னுயிர்நிலை பெறுகவே.
தலமுத லுளமனு வளர்கவே
சயதர னுயர்புலி வளர்கவே
நிலவுமிழ் கவிகையும் வளர்கவே
நிதிபொழி கவிகையும் வளர்கவே.
புலவர் தம்மூர்க்காரரான ஆதிநாதன் இல்வாழ்வில் புகுமுன்
பாடியளித்த பாட்டாக இருக்கும் வாய்ப்புள்ளது; ஆதிநாதன் ஒருகால் சமணத்தில்
ஈர்ப்புடையவனாக இருந்திருக்க வேண்டும்; பெயரும் அதுபோன்றே
இருக்கிறது .
புது மணமகளை அறைக்குள் அனுப்பும்போது, மணமான பெண்கள்
கும்மி அடித்துக்கொண்டு அடல்ட்ஸ் ஒன்லி பாட்டுக்கள் பாடுவர் . இந்நூலும்
அந்த ரகத்தைச் சேர்ந்தது. படுக்களைப் பாட்டுக்கள் பேச்சு வழக்கில்
அமைந்திருக்கும்; வளமடல் இலக்கியத் தரத்தில் சிறந்த எதுகை அமைப்போடு.
தேவ்
On Feb 24, 8:05 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> இப்படி மாறிமாறி எழுதிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.
> மக்களுக்கு இவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள், என்ன விஷயம்
> நடநதுகொண்டிருக்கிறது என்பதைக் குறித்து ஒரு அட்சரமும் விளங்கப்போவதில்லை.
>
> அந்த ஆய்வாளர் அப்படிச் சொல்லியிருக்கிறார் இந்த ஆய்வாளர் இப்படிச்
> சொல்லியிருக்கிறார் என்று யார் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லாம் வெறும் name
> dropping. அதற்குமேல் பெரும்பாலான ஆய்வுகளுக்கு அந்தஸ்து இல்லை. பாரதியைப்
> பற்றிய அவதூறு ஆராய்ச்சிகள் பலவற்றை நான் மறுத்திருப்பதையும், நான்
> மறுத்திருப்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதையும் எல்லோரும் அறிவார்கள்.
> கணேசன் அவர்கள் அறிவார்.
>
> இப்படிப்பட்ட விவாதங்கள் மக்கள் மத்தியில் செல்லவேண்டுமானல், மக்களுக்கு
> முதலில் எதைப் பற்றிப் பேசுகிறோம், என்ன உரையாடுகிறோம், எதைக் குறித்து விவாதம்
> நடக்கிறது என்பதாக தெளிவு கிடைக்கும். அது கிடைத்தாலன்றி, வாதங்கள் எல்லாம்
> காற்றில் இறைபட்ட கருத்துக் குவியலாக, கவனம் என்ற இலக்கை அடைய ஒண்ணாததாகவே
> நிற்கும்.
>
> ஒருகாரியம் செய்யலாம். காரணை விழுப்பரையன் மடலுக்கு நான் உரை எழுதுகிறேன்.
நிச்சயமாக நீங்கள் உரை எழுதலாம். எழுத விண்ணப்பிக்கிறேன்.
ஒரு தனி இழை தொடங்கிச் செய்ய வேண்டுகிறேன்.
20 வரிக்கு ஒரு அஞ்சல் அனுப்புங்களேன். மற்றவர்களும், நானும்
கலந்துகொள்கிறோம்.
நன்றி,
நா. கணேசன்
20 வரிக்கு ஒரு அஞ்சல் அனுப்புங்களேன். மற்றவர்களும், நானும்
கலந்துகொள்கிறோம்.
நன்றி,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Feb 25, 9:01 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மிக அழகாக, சுருக்கமாக, அடர்த்தியாக பிரச்சனையை அணுகியுள்ளீர்கள்.
>
> மேலும் நமது மரபில் ஒரு நூல் தனிச்சிறப்புடையது எனில் ஒன்று அது
> சங்கப்பலகை பரிட்சை தேறியிருக்க வேண்டும், இல்லை காலத்தின் தேர்வில்
> பிழைத்திருக்க வேண்டும். வள்ளுவம் இன்று இவ்வளவு போற்றப்படுவதற்குக்
> காரணம் வழி, வழியாக எல்லா மார்க்கங்களும் அதற்குள் புகுந்து
> திளைத்திருக்கின்றன.
>
> வளமடல் என்பது கல்யாணத் தம்பதிகளை முதலிரவிற்கு அனுப்பும் முன் பாடும்
> செக்ஸ் பாட்டுப்போன்றது. அவ்வளவுதான்.
திருமங்கையின் வளமடல்களையா சொல்கிறீர்?
>
> இன்னொரு உதாரணமும் கொடுக்கலாம். நம்மாழ்வாரின் பாடல்கள் அனைத்தும்
> துளைத்து, திளைத்து அனுபவித்து வந்திருக்கிறது தமிழ் வைணவம். 20
> நூற்றாண்டில் இராகவய்யங்கார் ‘அண்டகோளத்து ஆரணுவாகி’ எனும் பாடலை ஒரு
> ஏட்டுப்பதிப்பிலிருந்து எடுத்து வெளியிடுகிறார். அது நம்மாழ்வார் பாடல்
> என்பதை அவர் நிருவ மிகவும் பௌயமான அணுகுமுறையைக் கையாள்கிறார். He did
> not have tall claims.
>
> தமிழ் மரபில் சீத்தலைச் சாத்தனார்கள் அதிகம். அவர்கள் கண்களிலிருந்து
> தப்பி சிறப்புறாத ஒரு நூல் இன்று எப்படி சிறப்புறும்?
>
> இன்னொன்று, நான்கு புருஷார்த்தங்களில் காமமும் சிறப்புடையது என்றே
> ஸ்ரீவைஷ்ணவம் கருதுகிறது. காமம் கண்ணனை நோக்கி இருக்க வேண்டும். நம்
> தாம்பத்யம் என்பதே கண்ணனின் நித்ய கைங்கர்யத்திற்கு என்று அர்பணிக்க
> வேண்டும். அப்போது காமம் மிகச்சிறந்த புருஷார்த்தமே!
>
> க.>
>
> On 2/26/10, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
>
>
>
> > ஐயன்மீர்,
>
> > உலோகாயதம் என்றால் பொருள்முதல் வாதம் (materialism) என்பதாக நான் பொருள்
> > கொள்கிறேன்.- Hide quoted text -
இன்னும் ஜாபாலி முனிவரைப் பற்றி இந்த இழையில் சொல்லப்படவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். :-)
பூர்வ பக்ஷம் என்பதற்கான நேரடி சொற்பொருள் என்ன ஐயா? எதிர் தரப்பு என்பது நேரிடைப் பொருள் இல்லை என்று நினைக்கிறேன்; பூர்வம்/உத்தரம் = கேள்வி/பதில் என்று பொருள் வருமா? அப்படியென்றால் பூர்வ பட்சம் என்றால் 'நம் கருத்தைக் கேள்வி கேட்கும் தரப்பு' என்று பொருள் கொள்ள வேண்டுமா?
ஆனால் மாற்றுக் கருத்துகள் அழிந்து போக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிக நல்ல வழி அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே; அதனைத் தொகுத்து பூர்வ பட்சமாகத் தந்து அப்புறம் சித்தாந்தம் என்ன என்று பேசுவது கிடையாது - என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து!
உலகாயதம் / பூதவாதம் போன்ற மாற்று மதங்களின் (மதம் = கருத்து) நூல்களை அழித்தவர்கள் / அழிக்க நினைத்தவர்கள் அவற்றின் கருத்துகளைத் தொகுத்து வைத்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. பேணுவார் இல்லாமலேயே உலகாயதம் போன்ற கருத்துகளின் நூல்கள் அழிந்து போயின (கருத்துகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது நேரிடை/பிரத்தியட்சம்; நூல்கள் தான் காணாமல் போயின) என்பது உலகாயதம் ஏற்றுக் கொள்ளாத ஆனால் உலகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் உறுதுணையான 'ஊகம்' என்னும் உறுதியால்/பிரமாணத்தால் தெரிகிறது என்றே நினைக்கிறேன்.
ஹ..ஹா!
வருகிறது ”தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்...!”
இதற்கான விளக்கும்.
சென்னைக் கருமுகில்கள் கண்டு கொள்ளட்டும் :-))
க.>
Superb Rangan!
What a new light to this discussion!
பனுவல் வாசிப்பு என்பதில் பயன்படும் உத்தி போல் படுகிறது.
இளமை இருக்கும் வரை காமம் இருக்கும். அதன் பின்? செத்து ஒழிய
வேண்டியதுதானே? ஏன் வாழ்வு 40க்குப்பின்னும் தொடருகிறது? வேறு
ஏதாவதொன்றைப் புரிந்து கொள்ளவோ?
லோகாயதம் என்பது இயற்கைக்கு முரணானது என்று தோன்றுகிறது.
மனிதப் பரிணாமத்தில் சமய உணர்விற்கு என்றே தனியான ஜீன்கள் இருப்பதாக
அறிவியலார் நம்புகின்றனர் (to be religious is very natural). ஆயின்,
சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகள் வளர்ந்த போது இந்தப் பூதவாதம்
வந்திருக்கலாம். ஆனால் அதுதான் தமிழின் ஆதி நெறியாக இருந்தது என்பது
போன்ற கருதுகோள்கள் காலத்தால் புறக்கணிக்கப்படும்.
க.>
When you write a scientific paper, பூர்வ பக்ஷம் = introduction. In
introduction, we usually elaborate on the research so far conducted in
that particular field and evaluate its merits and demerits. Then
propose that how this particular finding (the one you are writing) may
throw new light to the field.
Thus பூர்வ பக்ஷம் என்பது ஆய்வு முனைப்பு, ஆய்வு அணுகல்,
ஆய்வுத்திறனாய்தல், ஆய்வு நோக்கு, வேர்காணல் என்று சொல்லிப்பார்க்கலாம்.
நமது வேதாந்த அணுகுமுறை அறிந்து கொண்டால் சமகால அறிவியல் ஆய்வுமுறை நன்கு
விளங்கும் என்று தோன்றுகிறது.
க.>
நான் ஏன் சொல்ல வேண்டும்?
வளமடல் எழுதுவோரெல்லாம் பூதவாதிகள் எனில் திருமங்கையும் லோகாயதர்
என்றுதானே நீங்கள் சொல்லப்போகிறீர்கள் ;-)
க.>
லோகாயதம் என்பது இயற்கைக்கு முரணானது என்று தோன்றுகிறது.
மனிதப் பரிணாமத்தில் சமய உணர்விற்கு என்றே தனியான ஜீன்கள் இருப்பதாக
அறிவியலார் நம்புகின்றனர் (to be religious is very natural). ஆயின்,
சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகள் வளர்ந்த போது இந்தப் பூதவாதம்
வந்திருக்கலாம். ஆனால் அதுதான் தமிழின் ஆதி நெறியாக இருந்தது என்பது
போன்ற கருதுகோள்கள் காலத்தால் புறக்கணிக்கப்படும்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாரத யுத்தத்திற்குப் பிறகு துரியோதனுடைய நண்பனான ஒரு சார்வாகனை உயிரோடு எரித்துவிட்டதாக கொஞ்ச நாள் முன்னாடி நெட்ல படிச்ச நினைவு. அதை உடனே நம்பிட போறதில்லை. கே.எம்.கங்கூலி படிச்சா தெரியலாம்.
தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சான்றாண்மை மிக்க வரிகள்; தமிழ் மரபின்
ஆணி வேர் எது என்பதை இனியாவது நடுநிலையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐம்பூதச் சேர்க்கையின் அடிப்படையில் ப்ரக்ருதி பரிணாமத்தை விவரிப்பதில்
தமிழர் தம் கொள்கையும், வேதாந்தக் கருதுகோளும் கை கோத்துச் செல்கின்றன.
நான்கு பூதங்கள் என்னும் உலகாயதக் கொள்கை அடிபட்டு விடுகிறது.
விழுப்பரையன் வள மடல் போன்ற நூல்களுக்குத் தமிழரிடையே வரவேற்பு இல்லாமல்
போனதற்கு இதுவும் காரணமாகலாம்.
’என்மனார் புலவர்’ என்று சான்றோர்தம் கூற்றுக்கு உரிய மரியாதை தருவது
தமிழர் மரபு. கண்ணபிரான் ‘இதி ஆஹு:’ என்று சான்றோர் கருதுகோளுக்கு
மரியாதை தருவார்.
ஒரு கருத்தை வலியுறுத்துங்கால் அந்வயம், வ்யதிரேகம் என்னும் இருவகையாலும்
அதை வலியுறுத்துவது வடநூலார் வழக்கம்; எதிர்மறையாகவும், உடன்பாடாகவும்
கடவுள் வணக்கத்தை வற்புறுத்துகிறது அனைவராலும் ஏற்கப்பட்ட வள்ளுவமும்.
மொத்தத்தில் பாரதியப் பாரம்பரியம் என்று கூறவேண்டும்; அதற்கு
வாய்ப்பிலாதபடி பிளவைப் பெரிதாக்கி வைத்துள்ளனர். அதை ஒட்டியே நாமும் பேச
நேர்கிறது. கௌரவர், பாண்டவர் – இரு பிரிவு உண்டா என்ன ? குரு வம்சத்தில்
பிறந்த பாண்டவர்களும் கௌரவர் தாமே ! துரியன் ஒருவனால் பெரிய பேதம்
தோன்றிவிட்டது.
இஷ்டாக்கை எடுத்து வெளியே விடுங்க, ரங்கன் சார்; இங்கு கவனத்தில்
பதியாவிட்டாலும் மரபுப் பகுதியில் இணைக்கலாம்
தேவ்
On Feb 27, 3:17 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழரின் ஆதிகொள்கை உலகாயதமா?
>
> இந்தக் கேள்வியே நகைப்பிற்கிடம் தருவது. ஏனெனில் முதன்முன்னம் உலகாயதம்
> என்பது எந்த ஒரு மனித இனத்திற்குமே ஆதி கொள்கையாக இருக்க இயலாது.
>
> அடுத்து, தமிழர் என்போர் ஏதோ கடவுள், நம்பிக்கை ,
> வழிபாடு, தெய்வம் தொழல், கோவில் பூஜை முதலிய பண்பாட்டுக் கூறுகள்
> எல்லாம் அமையப் பெறாமல் இருந்தது போலவும், அவையெல்லாம் எங்கிருந்தோ கொண்டு
> வந்து திணிக்கப்பட்டது போலவும் ஒரு மாயை அபிப்ராயப் புகை மூட்டத்தை
> உருவாக்கி அதில் தங்கள் உள்நோக்கமான பழங்களை அவசர அவசரமாகப்
> பழுக்கச் செய்யும் கூட்டத்தாரின் விளம்பரத்திற்குப் பலியாகி பிழைபட
> நினைப்போர் கொள்ளும் தவறான அபிப்ராயங்கள் ஏதோ ஒரு
> முகாந்தரத்தால் தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியாது.
>
> இந்த அபிப்ராயத் தரகர்கள் சொல்வதுபோல் பண்டைத்தமிழகம் லோகாயத
> நெறியின் பாற்பட்டதாய் இருந்திருப்பின் தொல்காப்பியத்திலாவது
> அதன் தடையங்கள் தெரிய வேண்டும் அன்றோ?
>
> முதலில் லோகாயதம் கூறுவதின் படி உலகம் என்பது நான்கு
> பூதங்களால் ஆகியது. ஆகாயத்தை உலக அடிப்படை ஆக்கக் கூறுகளில்
> ஒன்றாகக் கொள்ளுவதில்லை லோகாயதம்.
>
> ஆனால் தொல்காப்பியம் சொல்வது என்ன?
>
> “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
> கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
> இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
> திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்”
>
> ’அப்பொழுதுதான் உள்ளே புகுத்தினார்கள்; உடனே பிடித்துக்கொண்டு
> வந்து தொல்காப்பியர் சேர்த்துவிட்டார்’ என்று கூற
> முடியாது. ஏனெனில் இந்த நூற்பா 635 பொருளதிகாரம் மரபியல்
> என்ற பகுதியில் வருவது. நெடுங்காலமாக, வழிவழியாகப் பேணப்பட்டு
> உலகியலுக்கும் செய்யுளியலுக்கும் அடிப்படையாக அமையப்பெற்ற சமுதாய,
> பண்பாட்டு , பயன்பாட்டு அம்சங்களைத்தான் மரபியல் கூறும்.
>
> ஐந்து பூதக் கலப்பு உலகம் என்று சொல்லும் தமிழர் என்றைக்கு
> லோகாயதர்கள் ஆனார்களோ? கூச்சமின்றிக் கூறியது
> கூறும் போதுபோக்காளர்களுக்கே வெளிச்சம்.! :))))
>
> அடுத்து ஐந்து பூதக்கலப்பு என்பதைத் தொல்காப்பியம் கூறுவது
> எப்படி? ‘ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’
>
> ஆகாயம் 1/2 பங்கும், மற்ற பூதங்கள் முறையே 1/8 பங்கும் கொண்டு
> உருப்பெறுவதுதான் உலகில் காணும் ஆகாயம். அது போலவே தீ
> என்பது நெருப்பு 1/2 பங்கும் மற்ற பூதங்கள் 1/8 பங்கும்
> கொண்டு உருவானது; அவ்வாறே மற்ற பூதங்களுக்கும் கொள்க. -- இந்தக்
> கருத்து வேதாந்தத்தின் பஞ்சீகரணம் என்ற கொள்கை.
>
> இதற்கு அண்மையான விதத்தில் கூறப்பட்ட ‘ஐந்தும் கலந்த மயக்கம்
> உலகம் ஆதலின்’ என்ற தமிழர்தம் ஆதி தத்துவம் எங்கு இருக்கிறது?
> லோகாயதம் எங்கே?
>
> அடுத்து லோகாயதம் கர்மம் என்பதை ஏற்பதில்லை. ஆனால்
> பழந்தமிழரோ வினை வினைப்பயன் என்பதில் மரபு சார்ந்த நம்பிக்கை
> மிக்கவர்கள். நான் சொன்னால்தானா? தொல்காப்பியர் சொன்னால்?
>
> “வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
> முனைவன் கண்டது முதனூ லாகும்”
>
> ‘வினை என்பன இருவினை. ‘இன்’ நீக்கத்துக்கண் வந்தது. ‘விளங்கிய
> அறிவு’ என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. ’ ---- தொல் மரபியல்
> பேராசிரியம்.
>
> சரி வெறும் காமத்தைக் கொண்டாடும் கண்டதே காட்சி கொண்டதே கோலம்
> என்ற கொள்கை பழந்தமிழரிடம் செல்லுபடியாகுமா?
>
> பழந்தமிழர் யாரை வாய்மையாளராகக் கருதினர்? நான் சொன்னாலும்
> பத்தாது. தொல்காப்பியர் சொன்னாலும் பத்தாது. கிடைக்காமல்
> போன பண்டை நாடகத்தமிழ் நூலாசிரியரான செயிற்றியனார் வந்து
> சொல்ல வேண்டும்.
>
> கூப்பிட்டால் வந்து சொல்வாரா? பின்னே, பழந்தமிழரைப் பற்றி
> உளறினால் சங்கப் புலவர் நாற்பத்தெண்மரும் எழுந்து வந்துவிட
> மாட்டார்களோ?
>
> “உய்ப்போர் இதனை யாரெனின் மிக்கது
> பயக்கும் தாபதர் சாரணர் சமணர்
> கயக்கறு முனிவர் அறிவரொடு பிறரும்
> காமம் வெகுளி மயக்கம் நீங்கிய
> வாய்மையாளர் வகுத்தனர் ..”
> (செயிற்றியச் சூத்திரம்) (எடுத்தாண்டது இளம்பூரணர்)
>
> இதில் கவனிக்க வேண்டியது காமம் வெகுளி மயக்கம் நீங்கிய
> வாய்மையாளர் என்பது.
>
> எனவே காமத்தை இயற்கையில் அதன் உரிய இடத்தைப் புரிந்துகொண்டு,
> அதனையே வாழ்வின் ஆகப்பெரிய விழுமியமாக மயங்காதவர்கள், காமம்
> வெகுளி மயக்கம் ஆகியன நீங்கிய பெரியோரையே வாய்மையாளராக மதித்த
> பெற்றியர்கள் பழந்தமிழர் என்பது கை இலங்கு நெல்லிக்கனி (பையில்
> உள்ள பாக்கட் வாட்ச் என்று மாடர்னா கூறிக்கொள்ளுங்கள்)
>
> இன்னும் கண் தெரியலை என்றால் சொல்லுங்கள். நிறைய இஷ்டாக்கு
> இருக்கு:--)))))
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
On Feb 26, 1:59 am, devoo <rde...@gmail.com> wrote:
> புலவர் தம்மூர்க்காரரான ஆதிநாதன் இல்வாழ்வில் புகுமுன்
> பாடியளித்த பாட்டாக இருக்கும் வாய்ப்புள்ளது; ஆதிநாதன் ஒருகால் சமணத்தில்
> ஈர்ப்புடையவனாக இருந்திருக்க வேண்டும்; பெயரும் அதுபோன்றே
> இருக்கிறது .
ஆம் ஐயா. லோகாயத தத்த்வத்தை அதன் சார்பில் நின்று பேசியுள்ளார்.
ஜெயங்கொண்டார் சமணத்தில் ஈர்ப்புள்ளவராக இருந்திருக்கலாம்.
பின்னர் லோகாயதவாதியாகி, வயது முதிர, முதிர மாறியிருக்கலாம்-
நாம் அறிந்த கண்ணதாசன் மாதிரி என்று நினைக்கிறேன். (அவருக்கும்
கவிச்சக்கரவர்த்தி
பட்டம் எம்ஜிஆர் அளித்தார் - அதற்கு முன் ஒட்டக்கூத்தர், அதற்கும் முன்
செயங்கொண்டார். சோழர் காலச் சான்றுகள் உள.)
> ஆதிநாதன் ஒருகால் சமணத்தில்
> ஈர்ப்புடையவனாக இருந்திருக்க வேண்டும்
இல்லை. காராணை ஆதிநாதன் வேத சமயத்தில் ஈடுபட்டவன்.
பல பெருங்கோயில்களுக்கு நிவந்தங்கள்
அளித்தமை முதல் குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்களால்
புலப்படுகின்றன. அவன் தமிழின் காதலனாகவும் புரவலானகவும்
இருந்தான். சோழ பேரதிகாரி ஆனதால் தன்னூர் செயங்கொண்டாரை
தான் இருந்த மதுரைச் சோழ அரண்மனை வளாகத்திருத்தியும்,
சோழ சக்கரவர்த்திக்கு அறிமுகமும் செய்து புவி & கவி
சக்கரவர்த்திகளுக்கு நட்பைத் தோற்றுவித்திருக்கிறான்.
ஆக, விழுப்பரையன் வளமடலில்
கிளவித் தலைவன் - தமிழ் அகப்பாட்டுகள் போலப் பேர் இல்லை.
அவன் லோகாயதவாதி.
ஆனால்,
பாட்டுடைத் தலைவன் ஆதிநாதன் சோழ சேனாபதி,
அவனது போர்த்திறத்தை வருணித்துள்ளார்.
ஆதிநாதன் சமயம்:
“மாதா, மனுநூல் மறைநூல் வரம்பாக
ஓதாது உணர்ந்த உரவோன், உலகினுக்கு
நேதா, இரப்போர் நிரப்பிடும்பை தீர்த்தருளும்
தா,தா எனவுதவு தாதா, இத் தாரணியில்
வேதகம்செய் தீங்கலியின் வெம்மைகெடத் தண்மைதரும்
சீததுங்கன்” ...
எனவே, ஆதிநாதன் சமணன் அல்லன்.
பெருமாளுக்கும் ஆதிநாதன் என்ற பெயர் உள்ளதே.
---
அடுத்த மடல், ஹரிகிருஷ்ணனுக்கு.
நா. வானமாமலை கட்டுரை அவருக்கு
இந்த நூலின் context-ஐ விளக்கப் பிரயோசனப்படும்.
நா. கணேசன்
On Feb 24, 11:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/25 devoo <rde...@gmail.com>
>
>
>
> > இவர்கள் நீர்,நிலம்,நெருப்பு,வளி என்னும் நான்கு பூதங்களை மட்டுமே
> > ஒப்புவர்; புலனுக்குப் புலப்படாத்தால் வெளி (ஆகாசம்) எனும் தனித்தத்துவம்
> > கிடையாது. பூதங்கள், அவற்றால் பெறும் இன்பம் – இதை மட்டுமே ஏற்பதால்
> > லோகாயதத்தை ’பௌதிக வாதம்’ என்றும் கூறுவர்.
>
> தேவ்,
>
> பூதவாதம் என்பதும் இதுதானே? மனிமேகலையில் பூதவாதிக்கும் மணிமேலகலைக்கும் வாதம்
> நடைபெறுகிறது. ‘உங்க அப்பா யாருன்னு உன்னால ப்ரூவ் பண்ண முடியுமா’ என்று
> மணிமேகலை கேட்கிறாள். பூதவாதி தோற்கிறான். இதுதானே பௌதிக வாதம் எனப்படுவதும்?
> --
> அன்புடன்,
> ஹரிகி.
ஹரிகி,
உங்களுக்காக பேரா. நா. வானமாமலை (1973) கட்டுரையை
இணையம் ஏற்றினேன்:
http://nganesan.blogspot.com/2010/02/vanamamalai.html
Materialist Thought in Early Tamil Literature
N. Vanamamalai
Social Scientist, Vol. 2, No. 4, Nov. 1973, pp. 25-41.
மணிமேகலை, நீலகேசி, சித்தியார் செய்திகள் பல உள.
கணேசன்
அது சரி! `உலகமுண்ட பெருவாயா!` என்று சொல்லிவிட்டு பெருமாளை சாத்வீகம்
என்று சொல்லலாமா? என்று கேட்பது போல் உள்ளது :-)) Well..in a mega
perspective, everything is alright. But we are talking about human
history, anthropology & human evolution ;-)
லோகாயதம் என்பதற்கு ஏன் திடீரென்று கணேசனார் போன்ற ஆன்மீக
வழித்தோன்றல்கள் ஒரு `தத்துவப் பூச்சு` தர முனைகின்றனர் என்று
புரியவில்லை? கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றுதானே இத்தனை மில்லியன்
வருடங்களாக விலங்கு வாழ்வியல் நடந்து வந்திருக்கிறது. கண்டதைத்தின்று,
பேதமின்றிப் புணர்ந்து, ஜீன்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது
ஒன்றையே குறியாகக் கொண்டுதானே பரிணாமம் இயங்கி வந்திருக்கிறது. அதில்
எங்கு தத்துவம் வருகிறது?
சமயம் எனும் மலர் எப்போது பூத்ததோ அப்போது அறன் எனப்பட்டதே வாழ்க்கை என்ற
தத்துவம் வருகிறது. ஜீவகாருண்யம் வருகிறது. மானுடம் எனும் கருதுகோள்
பிறக்கிறது. உலகைத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம்
பிறக்கிறது.
இவ்வளவும் பிறந்து வளர்ந்து கானகமாக இருக்கும் போது, ஹிப்பி கலாச்சாரம்
போல் லோகாயதத்தைப் பிரதானப்படுத்துவது ஒரு மருட்சி, ஒரு பிறழ்சி. சும்மா
கவன ஈர்ப்பு. அவ்வளவுதான்.
இந்தியர்கள் லோகாயதர்களா இருந்திருந்தால், நாம் இன்றைய அறிவியலை
முன்னெடுத்து நடத்தியிருப்போமாம்! ஓகோ? உலகின் சூழல் மாசிற்கு
வித்திட்டிருப்போம். புவனச் சுரண்டலுக்கு வித்திட்டிருப்போம். புவியன்பு
செய்யும் கொள்கைகளை உலகிற்கு முதலில் தந்தது யார்? பாரதமா? ஐரோப்பாவா?
இல்லை செமித்தியர்களா? இன்றைய புவியன்புப் புரிதலுக்கு புத்தன்,
இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், பிரபுபாதா, பீட்டில்ஸ், ரவிசங்கர் என்ற ஒரு
பெரிய இயக்கமே பின்னால் வேலை செய்திருக்கிறது. நம் பங்கை உலகு உரத்துச்
சொல்லாமல் இருக்கலாம். ஆனால் வாடிய பயிரைக் கண்டு வாடும் மனோபாவத்தை
உட்செரித்துள்ள நாம் உண்மை அறிவோம்.
நாவலோ நாவல் (novel) என்பது அறநெறிகளுக்கே ;-)
கண்ணன்
Feb 28, 2:07 pm, "N. Ganesan"
>> காராணை ஆதிநாதன் வேத சமயத்தில் ஈடுபட்டவன். பல பெருங்கோயில்களுக்கு நிவந்தங்கள்..............<<
ஈர்ப்பு என்றால் passion எனும் பொருளில்.
ஒருவன் பிறப்பால் ஒரு சமய மரபைச் சார்ந்திருப்பினும் ஈர்ப்பு வேறொரு
சமயக் கருதுகோளைச் சார்ந்து அமைவதுண்டு; அது தீவிரமாகவும் ஆகலாம்.
காஞ்சிப் பெரியவருக்கு நாகார்ஜுனரிடம் ஈடுபாடு இருந்தது. வைணவரான
பெள்ளம்கொண்ட ராமராய கவிக்கு அத்வைதத்தில் ஈர்ப்பு. சிலர் வெளிப்படை
யாகத் தெரிவிப்பர். சிலரது ஈடுபாடு நெருங்கிய நட்பு வட்டத்துக்கு
மட்டும் தெரிந்திருக்கும்.
சிருங்கேரி பெரியவருக்கு photography பிடித்தமான துறை, அதிலும்
குறிப்பாக உலகின் சிறந்த பாலங்களின் கட்டுமானத்தை ஆராய்ந்து அவற்றின்
புகைப் படங்களைச் சேர்த்து வைத்திருந்தார். துங்கா நதியில் பாலம்
அமைக்கும் போது அவற்றைக் கொடுத்துப் பாலம் அமைய வேண்டிய இடத்தையும்
தேர்வு செய்து கொடுத்தாராம்.
செயங்கொண்டார் லோகாயதர் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை;
காமச்சுவையைப் பிரதானப் படுத்துவது தவிர அந்நூலில் அறிவு சார்ந்த
வாதங்கள் எதுவும் இல்லை; லோகாயதர் என்றால் போருக்காகக் கலிங்கம்
செல்லும் மன்னனை உலக போகங்களில் ஆற்றுப்படுத்தி யிருக்கலாம். உடலுக்கு
சொகுசு தேடுவதும், புலன்களுக்குத் தீனி போடுவதுமே லோகாய தனின் மதம்.
உடலே ஆன்மா, புலனின்பமே சுவர்க்கம், நோயும் நோவும் நரகம், உயிர் பிரிவதே
வீடு பேறு என்ற கருதுகோளில் மிகத் தெளிவாக, உறுதியாக இருப்பதே லோகாயத
மதம்.
அறம், பொருள், இன்பம், வீடு – வள்ளுவம் த்ரிவர்கத்தைத் தெளிவு படுத்தத்
தோன்றியது; தமிழின் அகத் துறையில் காம புருஷார்த்தம் முக்கியம்; வள மடல்
இவ்வகை சேர்ந்தது; பொருளியலுக் கென்றே வடமொழியில் நூல் உள்ளது. தமிழில்
இப்போது இவ்வகையில் பெரிய நூல்கள் இல்லை.
செயங்கொண்டார், ஆதிநாதன் இவர்களின் மன முதிர்ச்சி எப்படியாகிலும்
இருக்கட்டும். மொத்தத்தில் இவ்வள மடல் லோகாயத நூல் அன்று; அதற்கான
தகுதிகள் இருந்தால் தமிழின் சைவ, வைணவ நூல்களில் இந்நூல் பற்றிய
குறிப்போ, மறுப்போ காணப்படும். சீவக சிந்தாமணிக்குப் பொய்யே கட்டி
நடத்தப்பட்ட நூல் என்னும் அடைமொழி ஏற்பட்டதுபோல் இதற்கும் ஓர் அடைமொழி
தோன்றியிருக்கும்.
தமிழரின் உயர்ந்த பண்பாடு எப்போதும் அரங்கனார் சுட்டிய ”காமம்
வெகுளி மயக்கம் நீங்கிய வாய்மையாளர் வகுத்த” நெறிப்படியே
அமைந்திருந்தது; பொழுது போகாத நேரங்களில் அதற்கு உலை வைப்பதே
தற்காலத்தில் நாம் செய்துவரும் தமிழ்த் தொண்டு
தேவ்
On Feb 28, 11:37 pm, devoo <rde...@gmail.com> wrote:
> செயங்கொண்டார், ஆதிநாதன் இவர்களின் மன முதிர்ச்சி எப்படியாகிலும்
> இருக்கட்டும். மொத்தத்தில் இவ்வள மடல் லோகாயத நூல் அன்று;
I beg to differ. In the text itself, the 'kiLavi talaivan' praises
lokayatam in many ways. Also, the contents of the vizupparaiyan
vaLamaDal
clearly delineates the lokayata philosophy, which we are able to
cross-check with what is the definition of lokayata in many
Indian texts both from Sanskrit and in Tamil.
கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலிவு விலையில்
செம்மொழி இலக்கிய நூல்கள் விற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய நிலையில், பல்வேறு துறைகளில் தமிழைப் புகுத்தியிருப்பது
பாராட்டுக்குரியது. அந்தந்தத் துறை தொடர்பான கருத்துகள், படைப்பாளிகளின்
அறிவுக் களஞ்சியங்கள் புத்தக வடிவில் தமிழில் செம்மையாக வரும்போது
மொழியானது வளர்ச்சியடைகிறது. இதன் மூலம் கடந்த கால வரலாற்று நிகழ்வுகள்,
ஒவ்வொரு காலகட்டங்களின் மொழி வளர்ச்சி, சமூகத்தின் மீதான படைப்பாளர்களின்
சிந்தனைகளை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்.
பல துறைகள் குறித்த நூல்களும், அறிஞர்களின் அறிவுக் களஞ்சியங்களும்,
தொழில் முன்னேற்ற வழிகாட்டி நூல்கள் என அனைத்தையும் ஓரிடத்தில் வாங்கிச்
செல்ல வாய்ப்பாக இருக்குமிடம் புத்தகக் கண்காட்சிகள்தான்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிகளில்
செம்மொழி இலக்கிய நூல்கள் இடம்பெறுவது மிகக் குறைவே. இதற்கு நூல்களின்
கூடுதல் விலையும் ஒரு காரணம்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற 33வது புத்தகக் கண்காட்சியில்கூட தமிழக
அரசு முயற்சி எடுத்தும், செம்மொழி இலக்கிய நூல்கள் குறைவாகவே
இடம்பெற்றன. நூல்களின் விலை கூடுதலாகும்போது அவற்றை சாதாரண பள்ளி,
கல்லூரி மாணவர்களால் வாங்கிப் படிக்க முடிவதில்லை எனக் கூறுவதில் உண்மை
இருக்கிறது.
செம்மொழியான தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கோவையில் வரும்
ஜூன் 23 - 27ம் தேதிவரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.
அந்த மாநாட்டையொட்டி நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மூலம் கோவை நகரம்
ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
குடியிருப்பு வளாகங்கள், மாநாட்டு அரங்கங்கள், சாலைச் சீரமைப்புப்
பணிகள், இரயில், விமான நிலையங்கள் சீரமைப்பு எனக் கோடிக்கணக்கான ரூபாய்
ஒதுக்கீட்டில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
மகிழ்ச்சிகரமாக இந்தப் பணிகளை வரவேற்போம்.
ஓர் உலகப் புகழ் பெற்ற மொழி பற்றிய மாநாடு என்கிறபோது, அந்த மொழியில்
உருவான அடிப்படை நூல்களை அனைவரும் வாங்கிப் படிக்கும் வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் தலையாய கடமைகளில் ஒன்று.
இந்த நிலையில், மாநாட்டில் மலிவு விலையில் சங்க இலக்கிய பதினென்
மேல்கணக்கு நூல்களான,
1. பத்துப்பாட்டு
2. எட்டுத்தொகை
பதினென் கீழ்கணக்கு நூல்களான
1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4.நாலாயிரத் திவ்யபிரபந்தம்
5. திரிகடுகம்
6. ஆசாரம்
7. திருக்கோவை
உள்ளிட்ட நூல்களின் மொத்தத் தொகுப்பு மலிவு விலையில் கிடைக்குமாறு
விற்பனை செய்தால் மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஆயிரக்கணக்கானோர் பயன்பெற
வாய்ப்பாக இருக்கும். தமிழ் படித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கும்
பெரிதும் உதவியாக இருக்கும்
செம்மொழி மாநாட்டையொட்டி, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்
வளர்ச்சிப் பணிகளில் இதையும் ஒரு பணியாகக் கருதி, ஒரு தொகையை ஒதுக்கி
மலிவு விலை புத்தகக் கண்காட்சியை தமிழக அரசு நடத்த வேண்டும்.
இதன்மூலம் இலட்சக்கணக்கானவர்களின் வீடுகளில் செம்மொழி இலக்கியங்களின்
மணம் வீசும்.
இந்த நிலையை உருவாக்கினால்தான் செம்மொழி மாநாட்டின் முழுப் பயனும்
அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, சமையல் குறிப்பு, சோதிடம், சுயமுன்னேற்ற நூல்கள், வாஸ்து
போன்றவைகள் விற்கப்படுவது கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.
இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டும் வகையில், முதல்வர் அண்மையில் எழுதிய
செம்மொழி மாநாட்டுக் கவிதை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். இரகுமான் இசையில்
வெளிவரவும் ஏற்பாடாகியுள்ளது. அதில் வரும் இலக்கியச் செய்திகள் யாவும்கூட
நூல் வடிவம் பெற்று அனைவரின் கைகளிலும் தவழ வேண்டும்.
ஆர். தங்கராஜு
நன்றி:- தினமணி
மலிவு விலையா?? என்ன மோசடி ! ஃப்ரீயாக கொடுக்க வேண்டியதை, காசு
வாங்குகின்றனர்.
மதுரை திட்டம் காசு வாங்காமல் செயல்படும் போது, மற்றவைகளுக்கு விலையா?
மிக எளிதான வழி - ஒரு சிடி/டிவிடியை நிபுணர் குழு தயர் செய்ய வேண்டும்.
அதை வணிக நிர்வாகங்கள் விலையில்லாமல் வினியோகம் செய்யலாம். அதன் செலவை
(அது ஒண்ணூம் பெரிசு இல்லை) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஈடாக
அவர்கள் சிடியின் மேல் தங்கள் லோகோ, அல்லது சிறிய அட்வடைஸ்மெண்ட்
கொடுக்கலாம்
விஜயராகவன்
கட்டுரை எழுதிய ஆர். தங்கராஜுவின் கருத்தேயின்றி. இது ஒரு அரசின் திட்டம்
என்றில்லையே! சற்று பொறுமை விஜயராகவன்.
> மதுரை திட்டம் காசு வாங்காமல் செயல்படும் போது, மற்றவைகளுக்கு விலையா?
அவரவர்களுக்கு ஒரு சில வழிகள். அனைவரும் ஒரே வழியில் செல்லவேண்டும்
என்பது கட்டாயமில்லையே! மதுரைத் திட்டம் - அயலகத்தில் உள்ள சில
தமிழர்களின் வழிகாட்டுதலோடும், நிதிவுதவிக்கு எந்த அரசோடோ அல்லது
எக்குழுமத்தோடோ சாராத நிலை, ஆனால், தமிழகத்தில் உள்ள நூல் நிலையங்களுக்கு
அவ்வாறான நிலைமையில்லை.
நிலமையில்லை
///////// இளம்பூரணம் முக்கியமான பகுதி:--
‘ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம்’ என்றதனால் * அன்பு* ,அழுக்காறு, பொறை,
அறிவு என்பனவும், இவை போல்வனவும் கொள்க. இவையெல்லாம் அகத்திணை
புறத்திணை இரண்டிற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருளவாயின் இல்
பொருள் மேல் சொல் நிகழ்ந்த என்றாலோ எனின், இது (இந்த
நூற்பா) மேற்கூறப்பட்ட பொருள் பொருள் என்பது அறிவித்தல். அவை
உள்பொருள் என்பது வருகின்ற சூத்திரத்தான் உரைப்ப.’
உலகாயதத்தை அடிப்படையாகக் கொண்டோர் பின் எப்படி அகத்திணை புறத்திணை
இலக்கணம் கொண்டு வளமடலோ வளராத மடலோ யாப்பது? ///////
கடைசியில் லோகாயதம் நிறைந்த வளமடலுக்கு, ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியத்திடமிருந்து இப்படி ஒரு சோதனையா ?!
வி. வள மடல் உலகாயத உடை அணிந்துகொண்டு இணையத்தில் உல்லாசமாக உலா வரும்
என்றல்லவா எதிர்பார்த்தேன் ! இப்படிச் செய்து விட்டீர்களே ?
வேதனை! வேதனை !!
தேவ்
On Mar 1, 12:45 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழரின் ஆதிகொள்கை உலகாயதமா? --2
>
> உலகாயதத்தின் முக்கிய அறிவு பெறு நெறிக்கான கொள்கை கண் வழிக் காட்சி.
> காட்சியைத் தவிர்த்து அனுமானத்தால் கூட அறிவு பெறப்படுவதில்லை என்ற
> கொள்கை உலகாயதத்திற்கு வேர்.
>
> இந்தக் கொள்கை ஆதிகொள்கையாக இருந்தால் தமிழுக்குச் சிறப்பான அகத்திணை
> புறத்திணை என்பதே இல்லை. ஏனெனில் கற்பு, ஏர், எழில், சாயல்,
> நாண், மடன், வேட்கை போன்ற சொற்களெல்லாம் பொருளின்றிக்கே
> முடியும். ஏன்?
>
> தொல்காப்பியம் பொருளதிகாரம் பொருளியல் 243 என்ன கூறுகிறது?
>
> ‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
> கற்பும் ஏரும் எழிலும் என்றா
> சாயலும் நாணும் மடனும் என்றா
> நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
> ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
> நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது
> காட்ட லாகாப் பொருள என்ப.’
>
> இளம்பூரணம் இதன்பொருள் என்னவென்று கூறுகிறது.:--
>
> ’ஒப்பு முதலாக நுகர்ச்சி ஈறாக அவ்வழி வரும் சொல்லெல்லாம் நாட்டின்
> வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரின் அல்லது மாணாக்கர்க்கு
> இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரியன் காட்டலாகாத பொருளையுடைய
> என்றவாறு’.
>
> இவையெல்லாம் qualities, similarities, relationships, mental
> impressions என்ற வகையில் அடங்கும். அப்பனைப்போல் பிள்ளை என்றால்
> எதைவைத்துக் கூறுகிறோம்.
>
> ஏர் என்பது பொதுவாக உடல் அனைத்தினும் பரவி நின்று மனத்தால் உணரக்
> கிடக்கும் நிறம், பொலிவு. கண்ணால் கண்டு இன்னது என்று சொல்லக்
> கூடியதன்று.
>
> கற்பு, நாண், சாயல், மடன் போன்றவையெல்லாம் சொல்லவே தேவையில்லை.
> இவையெல்லாம் இல்பொருளா? உள்பொருளா?
>
> இனிவரும் இளம்பூரணம் முக்கியமான பகுதி:--
>
> ‘ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம்’ என்றதனால் அன்பு அழுக்காறு, பொறை,
> அறிவு என்பனவும், இவை போல்வனவும் கொள்க. இவையெல்லாம் அகத்திணை
> புறத்திணை இரண்டிற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருளவாயின் இல்
> பொருள் மேல் சொல் நிகழ்ந்த என்றாலோ எனின், இது (இந்த நூற்பா)
> மேற்கூறப்பட்ட பொருள் பொருள் என்பது அறிவித்தல். அவை உள்பொருள்
> என்பது வருகின்ற சூத்திரத்தான் உரைப்ப.’
>
> 244 இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
> அவையில் காலம் இன்மை யான.
>
> இதன்பொருள் -- தேவர் உலகத்தினும், கடல் சூழ்ந்த உலகத்தினும்
> மேற்சொல்லப்பட்ட பொருளில்லாத காலம் இன்மையான் உள் பொருள் என்றே
> கொள்ளப்படும் என்றவாறு.
>
> எனவே தொல்காப்பியம் கூறுவது -- ஒப்பு, உரு, வெறுப்பு,
> கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை,
> அன்பு, அழுக்காறு, பொறை, அறிவு ஆகிய அகத்திணை புறத்திணை ஆகிய
> இரண்டிற்கும் பொதுவாக இருக்கும் இவை அனைத்தும் கண்ணால் காண முடியாது,
> மனத்தால் மட்டுமே உணரக் கிடைப்பதுவாய் இருக்கும். இல்லாத பொருளோ
> எனில் அன்று உள்பொருளே என்று தேவ லோகத்தைச் சாட்சியாக வைத்துக்
> கூறுகிறது தொல்காப்பியம்.
>
> எனவே beauty, charm, abstractions, recognizable similarities,
> qualities, feelings of love and forbearence ஆகிய கண்ணுக்கே
> புலனாகாதவற்றை நெஞ்சு கொளின் அல்லது காட்டல் ஆகா பொருள என்றே
> அறுதிட்டு உரைக்கிறது தொல்காப்பியம். ஏனெனில் அது கூறும் காரணம்,
> அதாவது இவையெல்லாம் எப்படி உள்பொருள் ஆகும் என்ற கேள்விக்கு
> ஒல்காப் பெருமையார் கூறும் பதில்
> ‘கண்ணிமைக்காத பெருமையுடைய தேவர்கள் வாழும் தேசத்திலும்,
> அலை ஓயாத கடல் சூழ்ந்த இம்மண் உலகத்தினிலும் இந்த நெஞ்சுகொள்
> பொருள்கள் இல்லாத காலம் ஒன்று இல்லை. எனவே உள்பொருள் ஆம்.’
>
> உலகாயதம் அடிப்படை என்றால் முதலில் தமிழ் இலக்கண ரீதியாகக் காதலைப்
> பற்றியே பேச முடியாதே! கண்ணில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற
> உதவாக்கரைக் கொள்கையை, கண்ணால் காண்பதே மெய் என்ற குருட்டுச்
> சித்தாந்தத்தை தலையைச் சுத்தித் தூக்கி எறிந்து
> விட்டதே தொல்காப்பியம். அதுவும் எப்படிக் கூறுகிறது? அகத்திணை,
> புறத்திணை ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஒப்பு முதல் நுகர்ச்சி ஈறாகிய
> நெஞ்சுகொள் பொருள்கள் எல்லாம் இமையோர் தேயத்தும், இவ்வுலகின்
> கண்ணும் இல்லாத காலமே கிடையாதாகையால் உள்பொருளே. இவ்வளவு
> நிர்த்தாரணம் பண்ணிய பின்பு தொல்காப்பியத்தின் படி தேவ லோகம் என்று
> ஒன்று இல்லை என்று எவரேனும் சொன்னால் பைத்தியக் காரனின் பிதற்று
> அன்றோ!
>
> உலகாயதத்தை அடிப்படையாகக் கொண்டோர் பின் எப்படி அகத்திணை புறத்திணை
> இலக்கணம் கொண்டு வளமடலோ வளராத மடலோ யாப்பது? என்னப்பா! தென்னாடுடைய
> சிவனே! பேதைமைக்கும் ஓர் அளவில்லையா?
> நிலைமையில்லை
நிலமையில்லை
On Mar 1, 8:57 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/3/2 தாரகை <thara...@gmail.com>
>
> > > நிலைமையில்லை
>
> > நிலமையில்லை
>
> மன்னிக்கவும். நிலைமை இல்லை என்பதே சரி. நிலைமையில்லை என்ற முதல் வடிவமே சரி.
> நிலை, நிலைமை. ,
>
> வலியில் *நிலைமையான் *வல்லுருவம் பெற்றம்
> புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
>
> ஏழமை என்றால் ஒருபொருள் (ஏழாகிய தன்மை); ஏழைமை (ஏழையாகிய தன்மை) என்றால் வேறு
> பொருள். பழமை என்றால் ஒருபொருள்; பழைமை என்றால் வேறொரு பொருள்.
>
> பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
> கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
>
> என்பதையும்
>
> பழமை பழமையென்று பாவனை பேசலல்லால் பழமை இருந்தநிலை - கிளியே - பாமரர் ஏதறிவார்
>
> என்பதையும் ஒப்பிடவும்.
>
> நிலைமை நிலவும்.
>
> தன் மௌனம் கலைந்த வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்துக்குப் போய்விட்டது.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
மடல் காண மட்டற்ற மகிழ்ச்சி,
உங்கள் அன்பன்,
கணேசன்
> >> பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
>> கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
>>
>> என்பதையும்
>>
>> பழமை பழமையென்று பாவனை பேசலல்லால் பழமை இருந்தநிலை - கிளியே - பாமரர்
>> ஏதறிவார்
>>
>> என்பதையும் ஒப்பிடவும்.
>>
>> நிலைமை நிலவும்.
>>
>> தன் மௌனம் கலைந்த வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்துக்குப் போய்விட்டது.
>>
>> --
>> அன்புடன்,
>> ஹரிகி.
>
> மடல் காண மட்டற்ற மகிழ்ச்சி,
எனக்கும், எனக்கும்...!
ரெ.கா.
>
> உங்கள் அன்பன்,
> கணேசன்
>
கவிஞர்கள் கோபிப்பதும், பின்னர் நிலைமை திரும்புவதும்
தமிழ் 2000 ஆண்டுகளாய்ப் பார்த்துக்கொண்டிருப்பது.
‘வளநாடும் உன்னதோ?’ என்று சோழனிடம் சினமுற்றுப்
போனார் கம்பர்.
இதேபோல், தனக்குக் கவிச்சக்கிரவர்த்தி என்று பட்டம்
கொடுத்த முதலாம் குலோத்துங்கனிடம் சண்டை போட்டிருக்கிறார்
செயங்கொண்டார்.
தமிழின் முதற் புலவர் வரலாறு, “தமிழ் நாவலர் சரிதை”.
மிக அழகாக ஆய்ந்து பழைய பதிப்புகளை விடச் சிறந்ததாக
வெளியிட்டவர் உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்கள்.
அந்த நூல் என் நூலகத்தில் உண்டு. (அமெரிக்காவில் உள்ள
ஒரே படி அதுவாகலாம். ) தமிழ் நாவலர் சரிதைக்கு வருவோம்
- இதைப் 17-ஆம் நூற். நூல் என்று கணிக்கிறார் மாயூரம்
மு. அருணாசலம் ஐயா. அனேகமாக, படிக்காசுப் புலவர்
எழுதிய ’நோட்ஸ்’ போன்றது என்பார். இல்லாவிட்டால்,
பல புலவர் வரலாறுகளும், தனிப்பாக்களும், கர்ணபரம்பரைச்
செய்திகளும் நாம் பெற்று இன்றும் துய்க்க முடியாது.
அபிதான சிந்தாமணி தமிழ் நாவலர் சரிதையில் இருந்து
2 வெண்பாக்களை செயங்கொண்டார் சொல்லியது என்று
தருகிறது. அவை பார்க்க:
[Begin Quote]
“இவர் அபயனிடம் கோபங்கொண்டபோது
காவல ரீகை கருதுங்காற் காவலர்க்கும்
பாவலர் நல்கும் பரிசொவ்வா - பூவினிலை
ஆகாப் பொருளை யபயனளித்தான் புகழாம்
ஏகாப் பொருளளித்தேன் யான்.
இவர் செட்டிகள் மீது இசையாயிரம் பாடியபோது
வாணியர் புகார் தங்களுக்கு ஊர் எனப் பாடக் கூறப்
புலவர்
ஆடுவதுஞ் செக்கே யளப்பதுவு மெண்ணெயே
கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே - நீடுபுகழ்க்
கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்கால் செக்கார்தாம்
உச்சிக்குப்பின் புகா ரூர்.
எனப் புகார்வரப் பாடித்தந்தனர்.”
[End Quote]
(தமிழ்நாவலர் சரிதை. அபிதான சிந்தாமணி).
நா. கணேசன்
>>> ஏழமை என்றால் ஒருபொருள் (ஏழாகிய தன்மை) ; ஏழைமை (ஏழையாகிய தன்மை) என்றால் வேறு பொருள் <<<
இணையத்தில் இலக்கியம் பேசும் தளங்களில்கூட ஏழைமையைக் குறிக்க ஏழமை என்று
எழுதுகின்றனர்; பரிமேலழகர் ‘பரிமேலளகர்’ ஆகிறார்.
தமிழே திருந்தவில்லை; எழுத்துக்களை வேறு நாம் சீர்திருத்தியாக வேண்டும்
தேவ்
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
கொடை, தயை, ஈகை
மூன்றும் குடிப்பழக்கம்,
போல தமிழ் எழுத்துக்களை நாள்தோறும் தட்டச்சு செய்து விரல் பழக்கமாகும்,
பிழைகளும் விரைவில் விலகும்.
கொடை, தயை, ஈகை
மூன்றும் குடிப்பழக்கம்
> கரெக்ட்தாங்க. இவையும் போதை தருவனதாம் :-) "மது"ரபாரதி
பெயருக்கு ஏற்ற பதிலோ:-)
On Feb 25, 8:21 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> There is a need for meticulous system of copying with reverence. I see
> that only in Vaishnava Tradition. I see copies of Tiruvaimozhi
> everywhere I go from Alwartirunagari to Berlin Library!
>
There is a revered tradition among Jainas of preserving manuscripts.
That is how Tamil got so many texts - grammars and verses -
preserved including KuRaL, Tolkappiyam, Nannuul, Cilampu,
CintaamaNi, ....
> Our team has just now discovered that somewhere in Kanchivaram
> district a Vaishnava mutt (Ahobila) has a collection of 12,000
> palmleaf manuscripts! Unless you pay attention to your tradition this
> won't happen. There is no use in complaining!
>
> Kannan
Kannan
2010/3/2 N. Ganesan <naa.g...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
அபூர்வமான செய்திகள்,
வரிசயா வேட்டுவைக்க முடிவு கட்டிவிட்டீர், ஓரையும் நாளும் பார்த்துத்
தொடங்கப்பட்ட மடலாடலாக இருக்கும்போல
தேவ்
On Mar 2, 12:22 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழரின் ஆதி கொள்கை லோகாயதமா? -- 3
>
> அகத்திணை, புறத்திணை என்று இரு பிரிவில் இலக்கியக் கருப்பொருள்,
> உலகியல் துய்ப்பு என்று அனைத்தையும் அடக்கிப் பார்க்க முடிந்தது
> தமிழரால். அந்த உலகியல், செய்யுளியல் சார்ந்த அகத்திணை,
> புறத்திணை ஆகிய அனைத்துக்கும், கட்புலனாகாத அனுபவப்
> பொருண்மைகளே பொது ஆதாரம் என்று அறுதியிட்டு உரைத்தனர் தமிழர்.
>
> காமத்துப்பால் என்பதில் காமம் என்பதே வெறும் கண்டதே காட்சி
> என்ற ’அந்தக் கணத்துக்கு ஆவதைப் பார்’ என்ற கொள்கைக்கே இடம்
> இல்லாத வகையில் நெஞ்சு கொள் உள் பொருள்கள் நிறைந்ததுவாய்
> இருப்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர். உடலோடு உடல் கொள்ளும் வரை
> முறையற்ற தொடர்பாகிய மிருகப் பிராயமான செயல்களை ஒரு நாளும்
> வாழ்விலோ இலக்கியத்திலோ மதிப்பளித்தவர்கள் இல்லை.
>
> எதிர்பாராத விதமாகக் காதல் வயப்பட்டு ஒத்த தலைவனும் தலைவியும்
> சந்தித்தால் அதற்குக் காரணம் பால் வரைத் தெய்வம் என்பது தமிழின்
> கொள்கை.
>
> சரி சந்தித்துப் பழகி, பின் பார்க்காமல் ஒரு நாள் இருக்க
> முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட வாலிபன், தான்
> காதலிக்கும் தலைவியைக் காணச் செல்கிறான். அப்பொழுதும் உலகாயதனாக
> வளமடல் பாடிக்கொண்டு போவதில்லை. ’கடவுள், அறம், நல்லது
> கெட்டது, நற்சகுனம் தீச்சகுனம் இதெல்லாம் ஒன்றும் கிடையாது.
> காதலிதான் தெய்வம். மனிதர்களே நீங்கள் இந்தக் கடவுள்
> பூஜை துறவு, அறத்தின் கண் அச்சம் இதெல்லாம்
> விட்டுவிட்டு காதலியின் அங்க அழகுகளையும், அவளோடு
> அனுபவிக்கும் சுகத்தையுமே பெரிது எனக் கொண்டாடிய படியே செல்லுங்கள்’
> என்று லோகாயத மடலேறிச் செல்வதில்லை, அகத்திணை இலக்கணம்
> காட்டும் தமிழ் இளைஞன்.
>
> பின் என்ன செய்கிறான்? காதலியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ
> சந்திக்கச் செல்லும் காதலன் களவியலில் என்ன செய்கிறான்
> என்று தொல்காப்பியர் அழகாகக் குறிப்பிடுகிறார். ‘இன்றைக்கு என்ன
> நாள்? இப்பொழுது என்ன ஓரை? என்று நாள் கிழமை
> நற்சகுனம் தீச்சகுனம் பார்த்துப் பார்த்துப் போகிறானாம். ! --போனால்
> போவான் இல்லையேல் பார்க்காமக் கூடப் போவான். சில பேர் பார்த்துப்
> போவாங்க. சிலர் அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று நினைச்சா
> போயிடுவாங்க -- என்று நாம் கூறுவதற்கே
> வழி தரவில்லை தொல்காப்பியனார்.
>
> நாளும் ஓரையும் பார்க்காமல் போவது தலைவனிடம் இல்லை என்று
> எதிர்மறையாகச் சொல்லி நிலை நிறுத்துகிறார்.
>
> ’மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
> துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை (133 களவியல் )
>
> இதன்பொருள் -- களவொழுக்கத்து முகுர்த்தமும், நாளும் துறந்தொழுகும்
> ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு.
>
> என்றதனான், ஆண்டு அறத்தின் வழுவினானல்லன், தலைவி மாட்டுத் தலையளி
> குறைதலான் என்றவாறு.’ (இளம்பூரணம்)
>
> தமிழின் காதல் மொழியான அகத்திணை என்பதை வைத்து, மாதரார் இன்பமே
> வாழ்வின் சுகம் என்று தன் நெறிக்கருத்துகளில் ஒன்றாகக் கூறும்
> லோகாயதத்தோடு ஒரு நாளும் ஒட்டுப் போடமுடியாது. ஏனெனில்
> அகத்திணையின் தலைவன் முதன் முதலில் தான் காதலியைச்
> சந்தித்ததே தெய்வத்தின் அருள் என்று நினைக்கிறான்.
>
> பின் காதலியைத் தனி இடத்தே சந்திக்கப் போகும் போதும், ஓரை நாள்
> எல்லாம் நன்கு பார்த்தே செல்கிறான் அன்பின் வழாத தலைவன்.
>
> சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
> அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல (புறம் 31)
On Feb 28, 7:02 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இந்தியர்கள் லோகாயதர்களா இருந்திருந்தால், நாம் இன்றைய அறிவியலை
> முன்னெடுத்து நடத்தியிருப்போமாம்! ஓகோ? உலகின் சூழல் மாசிற்கு
> வித்திட்டிருப்போம். புவனச் சுரண்டலுக்கு வித்திட்டிருப்போம். புவியன்பு
> செய்யும் கொள்கைகளை உலகிற்கு முதலில் தந்தது யார்? பாரதமா? ஐரோப்பாவா?
> இல்லை செமித்தியர்களா? இன்றைய புவியன்புப் புரிதலுக்கு புத்தன்,
> இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், பிரபுபாதா, பீட்டில்ஸ், ரவிசங்கர் என்ற ஒரு
> பெரிய இயக்கமே பின்னால் வேலை செய்திருக்கிறது. நம் பங்கை உலகு உரத்துச்
> சொல்லாமல் இருக்கலாம். ஆனால் வாடிய பயிரைக் கண்டு வாடும் மனோபாவத்தை
> உட்செரித்துள்ள நாம் உண்மை அறிவோம்.
>
புத்தரைப் பற்றிச் சொல்கிறீர்கள். நோபல் பரிசு வாங்கிய
அமார்த்ய சென் கட்டுரை முடிபை, பேரா. நா. வானமாமலையின்
பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் மீதான கட்டுரையில்
இணைத்தேன். அ. சென் புத்தரின் நாஸ்திக மதம்,
லோகாயதம், பற்றி எல்லாம் சொல்கிறார்.
http://nganesan.blogspot.com/2010/02/vanamamalai.html
“ From the section, Concluding Remarks, of the article by
Amartya Sen, Indian traditions & the Western imagination
Daedalus, 10-01-2005, vol. 134, no. 4.
"The nature of these slanted emphases has tended to undermine an
adequately pluralist understanding of Indian intellectual traditions.
While India has inherited a vast religious literature, a large wealth
of mystical poetry, grand speculation on transcendental issues, and so
on, there is also a huge - and often pioneering - literature,
stretching over two and a half millennia, on mathematics, logic,
epistemology, astronomy, physiology, linguistics, phonetics,
economics, political science, and psychology, among other subjects
concerned with the here and now.
Even on religious subjects, the only world religion that is firmly
agnostic (Buddhism) is of Indian origin, and, furthermore, the
atheistic schools of Carvaka and Lokayata have generated extensive
arguments that have been seriously studied by Indian religious
scholars themselves.46 Heterodoxy runs throughout the early documents,
and even the ancient epic Ramayana, which is often cited by
contemporary Hindu activists as the holy book of the divine Rama's
life, contains dissenting characters. For example, Rama is lectured to
by a worldly pundit called Javali on the folly of his religious
beliefs: "O Rama, be wise, there exists no world but this, that is
certain! Enjoy that which is present and cast behind thee that which
is unpleasant. "
What is in dispute here is not the recognition of mysticism and
religious initiatives in India, which are certainly plentiful, but the
overlooking of all the other intellectual activities that are also
abundantly present. In fact, despite the grave sobriety of Indian
religious preoccupations, it would not be erroneous to say that India
is a country of fun and games in which chess was probably invented,
badminton originated, polo emerged, and the ancient Kamasutra told
people how to have joy in sex. Indeed, Georges Ifrah quotes a medieval
Arab poet from Baghdad called al-Sabhadi, who said that there were
"three things on which the Indian nation prided itself: its method of
reckoning, the game of chess, and the book titled Kalila wa Dimna [a
collection of legends and fables]. " This is not altogether a
different list from Voltaire's catalog of the important things to come
from India "our numbers, our backgammon, our chess, our first
principles of geometry, and the fables which have become our own. "
These selections would not fit the cultivated Western images of Indian
historical traditions, which are typically taken to be pontifically
serious and uncompromisingly spiritual.
Nor would it fit the way many Indians perceive themselves and their
intellectual past, especially those who take a "separatist" position
on the nature of Indian culture. I have tried to discuss how that
disparity has come about and how it is sustained. I have also tried to
speculate about how the selective alienation of India from a very
substantial part of its past has been nourished by the asymmetrical
relationship between India and the West. It is, oddly enough, the
rationalist part of India's tradition that has been affected most by
this alienation. The impact of the West on internal identities in
India has to be seen in fundamentally dialectical terms. " (Prof. A.
Sen, Harvard University).”
> நாவலோ நாவல் (novel) என்பது அறநெறிகளுக்கே ;-)
>
> கண்ணன்
தமிழுலகிலே நித்தியானந்தன் செய்த செயல் பரவலாக அடிபடுகிறது.
லோகாயதன் வாக்காக வி. வளமடலில் உலகினர் செய்யும்
ஒரு 20 தொழில்களை - நாவலோ நாவல் என்னும் வாதம், அதற்கான
பிரதிவாதம் யானைமேலிருந்து செய்வது உட்பட - விளக்குகிறார்.
எதற்காக இத் தொழில்களாம்? மாதரார் நகில் வழிப்படற்கு என்று
பாடிச் செல்வார் செயங்கொண்டார்.
மாந்தர் நித்யானந்தரை வழிபட, அவரோ மாதர் வழிப்பட!
கணேசன்
மாதரார் நகில் வழிப்படற்கு என்று
பாடிச் செல்வார் செயங்கொண்டார்.
On Mar 3, 8:25 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/3/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > மாதரார் நகில் வழிப்படற்கு என்று
> > பாடிச் செல்வார் செயங்கொண்டார்.
>
> ஜாபலி--உரையாடல்கள் காரணை விழுப்பரையன் மடலோடு தொடர்புடையவையாகத் தோன்றவில்லை.
இருக்கலாம்.
பொருள் நூலைப் பார்த்து அதன் வழி எழுதினால் போதும்.
பிற நூல்களுடன் (உ-ம்: ஜாபலி) ஒத்திருக்க வேண்டும் என்பதில்லை.
பௌத்தர் மரப்பொந்துகளில் தவம் செய்வதை வளமடல் சொல்கிறது.
கம்பராமன் பாரதியார் வசனத்திலிருந்து ஓரிரு வரிகள் சொல்லிக்
காட்டினார்.
நா. கணேசன்
> அதாவது இதுவரையில் தோன்றவில்லை. எழுதத் தொடங்கினால்தான் அவருடைய போக்கு
2010/2/27 Ramesh <ram...@gmail.com>:
>> லோகாயதம் என்பது இயற்கைக்கு முரணானது என்று தோன்றுகிறது.அது சரி! `உலகமுண்ட பெருவாயா!` என்று சொல்லிவிட்டு பெருமாளை சாத்வீகம்
>
> எல்லாமே இயற்கை தானே? பழைய தத்துவம் 10036 என்னன்னா "உடம்பை வளர்த்தேன் உயிர்
> வளர்த்தேனே"
என்று சொல்லலாமா? என்று கேட்பது போல் உள்ளது :-)) Well..in a mega
perspective, everything is alright. But we are talking about human
history, anthropology & human evolution ;-)
லோகாயதம் என்பதற்கு ஏன் திடீரென்று கணேசனார் போன்ற ஆன்மீக
வழித்தோன்றல்கள் ஒரு `தத்துவப் பூச்சு` தர முனைகின்றனர் என்று
புரியவில்லை? கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றுதானே இத்தனை மில்லியன்
வருடங்களாக விலங்கு வாழ்வியல் நடந்து வந்திருக்கிறது. கண்டதைத்தின்று,
பேதமின்றிப் புணர்ந்து, ஜீன்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது
ஒன்றையே குறியாகக் கொண்டுதானே பரிணாமம் இயங்கி வந்திருக்கிறது. அதில்
எங்கு தத்துவம் வருகிறது?
சமயம் எனும் மலர் எப்போது பூத்ததோ அப்போது அறன் எனப்பட்டதே வாழ்க்கை என்ற
தத்துவம் வருகிறது. ஜீவகாருண்யம் வருகிறது. மானுடம் எனும் கருதுகோள்
பிறக்கிறது. உலகைத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம்
பிறக்கிறது.
இவ்வளவும் பிறந்து வளர்ந்து கானகமாக இருக்கும் போது, ஹிப்பி கலாச்சாரம்
போல் லோகாயதத்தைப் பிரதானப்படுத்துவது ஒரு மருட்சி, ஒரு பிறழ்சி. சும்மா
கவன ஈர்ப்பு. அவ்வளவுதான்.
இந்தியர்கள் லோகாயதர்களா இருந்திருந்தால், நாம் இன்றைய அறிவியலை
முன்னெடுத்து நடத்தியிருப்போமாம்! ஓகோ? உலகின் சூழல் மாசிற்கு
வித்திட்டிருப்போம். புவனச் சுரண்டலுக்கு வித்திட்டிருப்போம். புவியன்பு
செய்யும் கொள்கைகளை உலகிற்கு முதலில் தந்தது யார்? பாரதமா? ஐரோப்பாவா?
இல்லை செமித்தியர்களா? இன்றைய புவியன்புப் புரிதலுக்கு புத்தன்,
இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், பிரபுபாதா, பீட்டில்ஸ், ரவிசங்கர் என்ற ஒரு
பெரிய இயக்கமே பின்னால் வேலை செய்திருக்கிறது. நம் பங்கை உலகு உரத்துச்
சொல்லாமல் இருக்கலாம். ஆனால் வாடிய பயிரைக் கண்டு வாடும் மனோபாவத்தை
உட்செரித்துள்ள நாம் உண்மை அறிவோம்.
நாவலோ நாவல் (novel) என்பது அறநெறிகளுக்கே ;-)
கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தாங்கள் உயிரியியல் மாணவரா என்று தெரியவில்லை ;-)
மனிதப்பரிணாமம் என்பதை இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். அதன் படி
உயிரியல் இயங்கு சக்தியான natural selection மனிதனை ஒரு நிலை வரை கொண்டு
வருகிறது. பின் அவன் பரிணாமம் அவனாலேயே நடத்தப்படுகிறது. அதுதான்
`கலாச்சார பரிணாமம்` என்பது. உதாரணமாக, ஜாதிகளாகப் பிரிவது, உயிரியல்
பரிணாமக்கூறு (reproductive isolation leads to speciation); ஆனால்,
பகுத்தறிவு பேசி கலப்புத்திருமணம் செய்வது கலாச்சார பரிணாமம். கடைநிலை
கழியும் என்பது உ.ப ஆனால் நொண்டிக்காலனுக்காக பொது ஊர்த்தியை வளைத்து
மாற்றுவது க.ப.
புலனின்பம் இயற்கைதான். ஆனால் அவ்வின்பம் எனும் உணர்வு எங்கு உருவாகிறது
என உணர்ந்து அந்தச் சக்கரங்களைக் கட்டுப்படுத்துவது க.ப. நாளைய உலகில்
செக்ஸ் என்பதே தேவையில்லை என்பது ஒரு கூற்று. இதை ET படத்தில் வரும் ஒரு
காட்சி காட்சி காட்டும். ரோபோர்ட்டுகள் எல்லாம் செய்துவிடும். எனது,
`வருகிறது` எனும் கணையாழி அறிவியல் புதினத்தில், எலக்ரோடு வைத்து இன்பம்
துய்க்கமுடியும் என்று எழுதியிருப்பேன். இவையெல்லாம் இன்றையச்
சாத்தியங்களே. இது அறிவியல். இதற்காக லோகாயதம் தேவையில்லை.
அரவிந்தர் மனிதனின் அடுத்த நிலையை தீர்மானிக்கப் போவது க.ப மே என்பார்.
இந்தியா இதை என்றோ கண்டுணர்ந்து பல்வேறு சமய நெறிகளை உருவாக்கி பரிசோதனை
செய்துள்ளது.
மண்ணில் காணும் எல்லாமே இயற்கைதான் (a product of nature). அப்படிச்
சொல்லிவிட்டால் பின் பகுத்தறிந்து மேலே செல்வது கடினம்.
க.>
2010/3/4 Ramesh <ram...@gmail.com>:
உலகாயத நூல் என நிறுவ வேண்டுமானால் அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்;
அப்படி முடிவு கட்டிவிட்டால் ‘மடல்’ எனும் தலைப்பு பொருளற்றதாகும். அதை
மெய்யியல்லார் இதற்குள் ஏற்றுக்கொண்டிருப்பர்; ஏனெனில் பர பக்கத்தில்
முதல் இடம் உலகாயதத்துக்குத்தான். பவுத்தம், சமணம், சைவம், வைணவம்
எல்லாப் பிரிவுகளிலும் முதல் மறுப்புரை உலகாயதச் சிந்தனை களுக்குத்தான்.
அகத் துறை சார்ந்தது என்றால் அதற்கான இலக்கணங்கள் அதில் உள்ளன என்று கூற
வேண்டும்; அகத் துறையில் தமிழன் கடவுள் நம்பிக்கை உடையவன்; நாளும்
நல்லோரையும் பார்த்துச் செயல்படுபவன் என நன்கு நிறுவியுள்ளார் அரங்கனார்.
காமத்தை நாடுபவர் இறை மறுப்பாளர் என்று எங்கும் சொல்லப்படவில்லை;
அரம்பையருடன் சுகித்திருக்க வேள்வி செய்தவரையும் வரலாறு கூறுகிறது.
லோகாயதம் வேத, வேள்விகளை முற்றாக மறுப்பது.
இதற்கான மறுப்பு எதுவும் கணேசனாரின் தரப்பிலிருந்து இதுவரை இல்லை;
இம்மடலாடல் இத்திசையில் நகர்வது நல்லது
தேவ்
> 2010/3/4 Ramesh <rame...@gmail.com>:
This is an intriguing concept. மனிதப் பரிணாமம் இப்போது மனிதனாலேயே
நடத்தப்படுகிறது
என்கிறீர்கள். அது கலாச்சாரப் பரிணாமத்தைக் குறிப்பது என்றால் சரிதான்.
Evolution என்னும் சொல்லை அதன் உயிரியல் அம்சத்திலும் கலாச்சார அம்சத்திலும்
வெவேறு அர்த்தத்தில் பார்க்க வேண்டும் அல்லவா? உயிரியல் பரிணாமம் இன்னும்
நடந்து கொண்டே இருக்கிறது. அதை மனிதன் கட்டுப்படுத்த முடியாது, நமது
கால் சுண்டு விரலை விரைவில் இழப்போம் என்றும் குடல் வாலையும் இழப்போம் என்றும்
The Naked Ape-இல் படித்ததாக நினைவு.
கலாச்சார பரிமாணாமம் நம் பிரக்ஞைக்குள் உட்பட்ட நடத்தைகளால் நடைபெறுகிறது.
அது நமது மூளையின் சில பகுதிகளில் மட்டும் விளையும் பரிணாமம் போலும்.
நமது கடவுள் நம்பிக்கை கூட ஒரு கலாச்சாரப் பரிணாமம்தான். ஆனால் நாமாக
விளைத்துக்
கொண்டது.
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Thursday, March 04, 2010 3:35 PM
Subject: Re: [MinTamil] Re: தமிழின் ஒரே லோகாயத நூல் - கவிச்சக்கிரவர்த்தி
செயங்கொண்டார்
பஞ்சபூதச் செயல்பாட்டில் மனித உடலும் அடங்குவதால் அது இயற்கை சார்ந்த
பரிணாமம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயினும் மனித சிந்தனை சார்ந்த ஒரு
புதுவழி மனிதத் தோற்றத்திற்குப் பின் நடந்திருக்கிறது. அதற்கு பஞ்சபூத
ஒட்டு எவ்வளவு தூரம் என்பது இன்னும் நிர்ணயமாகவில்லை (அறிவியல் கணக்கில்
சொல்கிறேன். ஆன்மீகக் கணக்கில் அல்ல). மனிதன் தோன்றிய பின் he has become
the most powerful natural selection agent. By this we mean, the entire
biology of earth is now under his control. With one bomb he can blow
up an entire ecosystem with millions of species. After his appearance
several thousands species became extinct due to his 'game'. Till then
no animal will kill another animal 'just for fun'. ஆக, மனிதன் கடவுளின்
கையை எடுத்துக் கொண்டு இப்போது புவியை ஆண்டு வருகிறான். இந்த அபார சக்தி
சிந்தனை சார்ந்தது. இதுவரை இயற்கை காணாதது. கலாச்சாரப் பரிணாமம் என்பது
முழுக்க, முழுக்க சிந்தனை சார்ந்தது. அதுவே அவனை வழி நடத்தும் இனி.
சுண்டுவிரல் போவது, குடல்வால் போவதெல்லாம் சின்ன சமாச்சாரங்கள். அவனது
பிரக்ஞை இன்னும் விழிப்புறும். அதன் வழியில் போகும் பரிணாமத்தை பஞ்சபூதப்
பரிணாமம் என்று இனிமேலும் சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை.
<நமது கடவுள் நம்பிக்கை கூட ஒரு கலாச்சாரப் பரிணாமம்தான்>
ஆம், அதுவொரு தொடக்கப்புள்ளி. அங்கிருந்து நீளும் பயணம் வித்தியாசமாக இருக்கும்.
க.>
பிகு: mind over matter, telepathy, yoga, antigravity இதுபோல் இன்னும்
பல விஷயங்கள் புது பொலிவு பெறும்.
2010/3/4 karthi <karth...@gmail.com>:
பணிவுடன்,
பழமைபேசி.
On Mar 1, 9:57 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/3/2 தாரகை <thara...@gmail.com>
>
> > > நிலைமையில்லை
>
> > நிலமையில்லை
>
> மன்னிக்கவும். நிலைமை இல்லை என்பதே சரி. நிலைமையில்லை என்ற முதல் வடிவமே சரி.
> நிலை, நிலைமை. ,
>
> வலியில் *நிலைமையான் *வல்லுருவம் பெற்றம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒரு சந்தேகம்பழங்காலத்திலிருந்தே ஏன் இந்த வேதாளம் எப்போதும் முருங்கை மரத்திதையே தேர்ந்தெடுக்கிறதுஅப்படி என்ன இருக்கிறது முருங்கை மரத்தில்அதுவும் மௌனம் கலைந்தால் உடனே முருங்கை மரத்துக்குப் போகிறது
நேஷனல் ஜியாகிரபிக் ஆவணங்களில், இப்படி `படி நிலை summary/சுருக்கம்`
கொடுப்பது வழக்கம். அது சொல்ல வரும் பொருள் பற்றிய புரிதலைக் கூட்டும்.
மிக, மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் பேசும் சில விஷயங்களை நான் நேரில் கண்டவன். உதாரணம் தருகிறேன்.
போர்ச்சூழலால் தூர வீசி எறியப்பட்ட ஈழத்தமிழர்களில் பலர் கொஞ்ச காலம்
இந்த லோகாயத்தப் போக்கில் இருந்தனர். பிராங்பெர்டில் நடந்த இலக்கிய
சந்திப்பில் நான் `மாறன் மனமும், மறந்து போன புரட்சியும்` என்று பேசப்
போய் ஆழ்வார்களெல்லாம் ஐயர் சூழ்ச்சி என்று பெரிய கூச்சல் எழுந்தது.
தமிழகக் கலைஞர் பிரசன்னா இராமசுவாமி வெறுத்துப்போய் வெளியேறினார். அது
இராமாயணத்தில் பரதன் இருந்த நிலை. அடிமண் உருவப்படும் போது ஏற்படும்
விரக்தி நிலை. அதற்காக ஈழத்தமிழர்களெல்லாம் லோகாயதர்கள் என்று சொல்லிவிட
முடியாது. இல்லை என்பதற்கு ஐரோப்பா முழுவதும் புதிதாய் முளைத்திருக்கும்
கோயில்களே சாட்சி!!
க.>
2010/3/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நன்றி தேவ் சார்! சமயத்தில் ஆளற்ற அத்வானத்தில்
> எழுதிக்கொண்டிருக்கிறோமோ என்ற பிரமை ஏற்பட்டுவிடுகிறது.
> (சரி எனக்கே சொல்லிச் சொல்லி போர் அடித்துவிட்டது. நாம்
> பிழிந்து பிழிந்து எழுதிக்கொண்டிருப்போம். இது எதையுமே காதில்
> போட்டுக்கொள்ளாது இருந்து விட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு
> அடுத்து வரும் இளையஞர்களுக்காக வேண்டி இதே லோகாயத வளமடல்
> என்ற முன்னுக்குப் பின் முரணான கருத்துடன் கூறப்படும் வாதம்
> மீண்டும் மின் பரப்பப் படும்.
>
> அப்பொழுதும் தேவ் சார்தான் பாவம் மெனக்கெட்டு அப்பொழுதே இந்த
> வாதம் பல கருத்துகளால் பங்கப் பட்டு விழுந்ததே! ஏன்
> மறுபடியும் தலை தூக்குகிறது? என்று கவலைப் படுவார். :--))))) )
>
சில நாட்களாக வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்களின் திருவாய் மொழி உரை கேட்கச்
சென்று கொண்டிருக்கிறேன்; ஒதுக்குப்புறமாக ஒளி குறைந்த இடத்தில் அமர்ந்து
கேட்பது வழக்கம். அருகில் ஓர் இளைஞர் அடிக்கடி கண்களைத்
துடைத்துக்கொண்டு; மெல்ல அவரிடம் நீங்கள் யார் என்று வினவினேன். ‘என்
பெயர் சதானந்தன்; ஈழம் எனது தாயகம்’ என்றார்;
சடஜித் வாங்மயம் ஸர்வாதிகாரம் ! எல்லோர் மனத்திலும் கோலோச்சி வருவது
நிதர்சநம்
தேவ்
On Mar 4, 7:30 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மிகப்பொறுப்பான கட்டுரை ரங்கன்.
>
> நேஷனல் ஜியாகிரபிக் ஆவணங்களில், இப்படி `படி நிலை summary/சுருக்கம்`
> கொடுப்பது வழக்கம். அது சொல்ல வரும் பொருள் பற்றிய புரிதலைக் கூட்டும்.
>
> மிக, மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
>
> நீங்கள் பேசும் சில விஷயங்களை நான் நேரில் கண்டவன். உதாரணம் தருகிறேன்.
>
> போர்ச்சூழலால் தூர வீசி எறியப்பட்ட ஈழத்தமிழர்களில் பலர் கொஞ்ச காலம்
> இந்த லோகாயத்தப் போக்கில் இருந்தனர். பிராங்பெர்டில் நடந்த இலக்கிய
> சந்திப்பில் நான் `மாறன் மனமும், மறந்து போன புரட்சியும்` என்று பேசப்
> போய் ஆழ்வார்களெல்லாம் ஐயர் சூழ்ச்சி என்று பெரிய கூச்சல் எழுந்தது.
> தமிழகக் கலைஞர் பிரசன்னா இராமசுவாமி வெறுத்துப்போய் வெளியேறினார். அது
> இராமாயணத்தில் பரதன் இருந்த நிலை. அடிமண் உருவப்படும் போது ஏற்படும்
> விரக்தி நிலை. அதற்காக ஈழத்தமிழர்களெல்லாம் லோகாயதர்கள் என்று சொல்லிவிட
> முடியாது. இல்லை என்பதற்கு ஐரோப்பா முழுவதும் புதிதாய் முளைத்திருக்கும்
> கோயில்களே சாட்சி!!
>
> க.>
>
> 2010/3/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
கேட்க மகிழ்வாக உள்ளது.
ஒருமுறை சூரிஜ் மாநகரில் நடந்தது. இலங்கை நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.
அப்படியே காலாற ஏரிக்கரையில் நடந்த போது இஸ்கான் பக்தர்கள்
கிருஷ்ணபிரசாதத்தை எல்லோருக்கும் வழங்கி வருவதைக் கண்டேன். அவர்களுடன்
பேசியவுடன் அங்கிருக்கும் கிருஷ்ணர் கோயில் தெரிய வந்தது. போனால்தான்
தெரிந்தது நிறைய ஈழத்தமிழர்கள் அங்கு வருவது.
ஆனால், இஸ்கான் சாதுக்களோ ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்களுக்கோ
ஆங்கிலமும், அங்குள்ள வங்காள பஜனையும் புதிது. நான் தமிழில் மொழி
பெயர்க்கிறேன் என்றவுடன் சாதுவிற்கு மகிழ்ச்சி. இராமாயணக் காட்சி.
அவர்களுக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழில் சொன்ன போது அவர்கள் உள்ளத்தில்
நிறைந்த நிம்மதியை அறிய முடிந்தது.
பின்னால் இஸ்கான் சாதுக்களிடம் சொன்னேன். ஸ்ரீராமானுஜர்
ஏற்படுத்தியிருக்கும் அழகிய தமிழ் மரபு பற்றி. இக்கோயிலில் நாலாயிர
சாற்றுமுறை இருக்க வேண்டுமென்று.
ஒரு காலத்தில் அது நடக்கலாம். வேளுக்குடி போன்ற பெரியோர்கள் இஸ்கான்
கோயில்களில் பிரவச்சனம் செய்ய வேண்டும். இஸ்கான் இயக்கத்தினரும் பாரதம்
தழுவிய திருமால் வழிபாடு பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும். பேசிய
போது ஸ்ரீராமானுஜர் அவர்களது குரு பரம்பரையில் இடம் பெறுவதாகவே சொன்னர்.
சமீபத்தில் போனபோது நடராஜர் விக்கிரகம் ஒன்று அக்கோயிலில் இருப்பதைக்
கண்டேன். ஆகப்பெரும்பான்மை சைவர்களாக உள்ள ஈழத்தவரின் முயற்சியது என
அறிகிறேன். அவர்கள் மேலும் ஆழ்வார்கள் வழியை அறிந்து கொண்டால் தெய்வப்
பாசுரங்களை ஐரோப்பா முழுவதுமுள்ள இஸ்கான் கோயில்களில் ஓதவைக்கலாம்.
யோசிக்க, யோசிக்க எதிராஜர் செய்திருக்கும் மலையளவு காரியங்கள் மெல்ல,
மெல்லப் புரிகின்றன!
க.>
நா. கணேசன்
On Mar 6, 8:14 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழரின் ஆதி கொள்கை லோகாயதமா? -- 4
>
> (சரி பதில் வருமா என காத்திருத்தல் வீண். மௌனம் தோல்விக்கு அறிகுறி
> என்பார்கள். நாம் மௌனம் ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறி என்று கொண்டு
> மேலே செல்வோம்.
>
> ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு முன் ஜாக்கிரதையான
> பேர்வழி ஒரு விமான ஓட்டியிடம் சென்று ‘ஐயா! இந்த இடங்களில்
> பெரும் அதிசயங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். என்னை அழைத்துச் சென்று
> காட்டுவீர்களா?’ என்றார்.
>
> விமான ஓட்டி ‘ஆஹா செய்கிறேன். நான் பெரும் வித்தைக்காரன். நான்
> அங்கும் இங்கும் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து பல அபூர்வங்களைக்
> காட்டுவதைப் பார்த்து நீங்களே மனம் மாறி பேசியதற்கு மேல் பெரும்
> பணம் தந்துவிட்டுச் செல்வீர்கள்.’
>
> ஓட்டி முடிந்ததும் பெருமிதத்துடன், ஓட்டி ‘என்ன? நான் கூறியது
> சரிதானே!’
>
> பயணி, ‘தெரியுமே! இப்படி ஏதாவது நடந்து என் பணம் கரைந்து விடும்
> என்றுதான் ஏறி உட்கார்ந்ததுமே இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு விட்டேன்.
> எதையுமே நான் பார்க்கவே இல்லையே! எனவே பேசியபடி பட்டியலில் காணும்
> உபசாரக் கட்டணம் இந்தாரும். நான் எவ்வளவு முன் ஜாக்கிரதை! என்னிடம்
> நடக்குமா இதெல்லாம்?’)
>
> தமிழில் பெண்கள் மடலேறும் வழக்கம் இல்லை. ஆண்கள் மடலேறும்
> வழக்கமே இருந்தது. திருமங்கை மன்னன் போன்றவர்கள் அந்த ஆதி நாளைய
> இலக்கண வழக்கத்தை மாற்றி பெண் மடலேறும் வடமொழி வழக்கைப் புகுத்தி
> மாற்றிவிட்டதை மீண்டும் தமிழ் வழக்கிற்குக் கொண்டுவந்த முயற்சிதான் கா
> வி வளமடல் என்று ஓர் ஆதாரமற்ற பேச்சு எழுந்தது. தமிழ் இலக்கணமும்
> தெரியாது. தமிழ் இலக்கியத்தின் வழக்கங்களையும் உள் புகுந்து
> பார்ப்பதில்லை. வாயிருந்தால் பேச வேண்டியதுதானே.
>
> முதலில் தமிழ் இலக்கணத்தில் மனிதர் மனிதர் மேல் கொள்ளுகின்ற காமம்,
> மனிதர் கடவுளர் மேல் கொள்ளுகின்ற காமம், கடவுளர் மனிதர் மேல்
> கொள்ளுகின்ற காமம் என்று வகைப்பாடுகளைத் தெளிவாக ஆக்கிவைத்துள்ளது.
> மனிதப் பெண்டிர், மனிதர்களின் மேல் கொள்ளும் காமத்தில்தான் பெண்கள்
> மடலேறும் வழக்கம் இல்லை. மடலேறுதல் என்றால் வீட்டாரின் இல்செறிப்பைத்
> தாண்டிச் சென்று சமுதாயத்தின் உதவியைக் கோருவது தங்கள் காதல்
> ஈடேற. மனிதர்களிடையேயான உறவில்தான் இந்த வழக்கமின்மை. அதுவும்
> வழக்கமின்மைதான். ஏனெனில் இலக்கணம் மனித உறவிலும் காமம்
> வெறியாக வெளிப்படும் தருணங்களைப் பெண்கள் விஷயத்தில் கவனம் கொள்கிறது.
> அதற்குப் பெயர் ’காந்தள்’.
>
> நானாகச் சொல்கிறேனா?
>
> வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
> வெறியாட்டு அயர்ந்த காந்தளும்..
>
> (63 தொல்காப்பியம் புறத்திணை இயல்)
>
> என்பதற்குப் பொருள் உரைக்கும் இளம்பூரணர், ‘வெறி ஆடுதலை அறியும்
> சிறப்பினை உடைய வெவ்விய வாயினை உடைய வேலன் வெறியாடிய காந்தளும்’
> என்று கூறுகிறார்.
>
> அதாவது காந்தள் என்பது எதற்குக் குறியீடு? வெறியாடும் வேலன்
> ஆட்டத்திற்கு மட்டும் காந்தள் என்று பெயரா?
>
> மேலும் தொடர்கிறார் இளம்பூரணர். ‘காந்தள் என்பதனை மடலேறுதற்குப்
> பெயராகக் கூறுவார் உளராகலின், வெறியாட்டு அயர்ந்த காந்தள்
> என்றார்’
>
> எனவே மடலேறுவதற்கும் காந்தள் என்று சொல்லும் வழக்கம்
> இருந்திருக்கிறது. சரி. அதனால் என்ன? காந்தள் பெண்களுக்குச்
> சொன்னால்தானே இந்தப் பேச்சு? பொறுமை :--)))
>
> அடுத்தவரி தொடர்கிறது, ‘அன்றியும் காந்தள் என்பது மடலேறுதலான்
> அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி ‘காந்தள்’
> எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பால் பக்கமாகிய
> வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும்
> கொள்ளப்படும்’
>
> அதாவது ‘கடலன்ன காமத்தராயினும்’ என்ற குறள் வழக்க மிகுதியைச் சுட்ட
> வந்ததே அன்றி, விதி அன்று.
>
> இவ்வாறு பெண்ணின் காம வேட்கை ஆற்றாத தன்மையை ஒப்புக்கொண்டு
> அதற்கு உரிய இடம் வகுக்கவில்லையென்றால் பின் எப்படி தலைவனுடன்
> தலைவி கிளம்பி சென்றுவிடும் உடன்போக்கு, அருஞ்சுரம் கடத்தல்,
> வழிவருகின்ற முக்கோல் பகவரைக் குறித்து ‘நடைகொளீ அந்தணீர்’ என்று
> என் மகளையும், தலைவனையும் வழியில் கண்டீர்களா என்று செவிலித்தாய்
> கேட்கமுடியும்?
>
> அடுத்தது வருவோம். மனிதப் பெண்டிர் மனித ஆடவரை காமுறும்
> காலத்து செல்லுபடியாகும் வழக்கு மனிதப் பெண்டிர் கடவுளர் மாட்டு
> காமுறும் போது எப்படி செல்லுபடியாகும்? மனிதப் பெண்டிர்
> கடவுளைக் காமுறுதல் தொல்காப்பியம் சொல்லியதா? அவசரப் படேல்.
>
> 81)காமப் பகுதி கடவுளும் வரையார்
> ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.
>
> இளம்பூரணம் --- ”காமப்பகுதி கடவுளும் வரையார் -- காமப்பகுதி
> கடவுள்மாட்டும் வரையார், ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர்
> -- ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர்.
>
> என்றது, கடவுள் மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப்
> பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு.”--- (வரையார் --
> தவிர்க்கமாட்டார்)
>
> எனவே திருமங்கை மன்னன் பரகால நாயகியாக அகநிலை அடைந்து திருமடல்
> பாடியது கடவுளரை மானிடப் பெண்டிர் நயந்த பக்கமாகப்
> பாடியது தொல்காப்பிய வழியின் நின்றேயாம்.
>
> ஆயினும் திருமடலில் திருமங்கை மன்னன் பெண் கூற்றாக வருங்காலத்து
> ‘பெண் மடலேறுதல் தமிழ் வழக்கு அன்றாயினும் வடமொழி இலக்கிய
> முன்னுதாரணம் கொண்டு மடலூர்வேன்’ என்று தன் நாயகனான கடவுளை
> அச்சுறுத்துகிறாள். அந்த இடத்தில் பாத்திரக்கூற்றின் நயம் அறியாதார்
> இலக்கியச் சுவையின் சுவடறியாதாரே.
>
> மானிடப் பெண்டிர் மடலேறுவதாகக் கூறினும் இளம்பூரணர் காட்டியபடி
> பெண் மடலேறுவதைக் காந்தள் என்று சுட்டும் வழக்கம் ஒரு சாராரிடம்
> இருந்தது என்று அன்றோ தெரிகிறது?
>
> இங்கு மானிடப் பெண்டிர் மானிடரை நயந்த பக்கம் பாடாது , மானிடப்
> பெண்டிர் கடவுளரை நயந்த பக்கம் பாடும் மானவேல்
> பரகாலனை தமிழுக்குள் வலிந்தொரு வழக்கம் புகுத்தியவராய்ப் பிதற்றுவார்க்
> கூற்று அறியாதார் செயலென விடுப்போம்.
>
> (கொம்பொடித்த கணேசனாராவது கண் பார்க்கட்டும்.:--)))) )
சிற்றிலக்கியம் என்று மடலை வகைப்படுத்துவதுபோல் காந்தள் அதில் இடம்
பெறுகிறதா ? இதையும் கலிவெண்பாவில் அமைக்க வேண்டுமா ? ஒருவேளை இவ்வகை
நூல்கள் இல்லாமையால் பலருக்கும் தெரியாமல் போயிருக்கும் வாய்ப்புள்ளது
தேவ்
> ...
>
> read more »
தமிழகப் பெண்களின் பொதுவான இன்றைய behaviour எப்படிக் காலம், காலமாகச்
செப்பனிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. அடுத்து பொதுவாகவே,
உலகமெங்கும் பெண்கள் தங்கள் காம இச்சையை வெளிக்காட்டாமல்தான் உள்ளனர்.
மிக, மிகச் சமீப காலத்தில்தான், பெண்ணிய விழிப்புணர்வின் பேரில் சில
காரியங்கள் அங்கும் நடைபெறத்தொடங்கியுள்ளன. எனவே தொல்காப்பியர் சொல்வது,
ஒரு பரிணாம விதி (law of evolution) என்று தோன்றுகிறது.
பக்தி இலக்கியத்தின் வேரைக் கண்டு பிடித்து வெளிக்கொணரும் பாங்கு
அற்புதம். சங்கத்தை காட்டி இனிமேல் நாத்திகவாதமோ, வேத மறுப்போ செய்ய
ஒண்ணா வகை செய்துள்ளீர்கள்.முதலில் இதையெல்லாம் பிராமணர்கள் அறிந்து
கொள்ள வேண்டும்*. தங்களது ஆழமான தமிழ் வேர்களைக் கண்டு அவர்கள்
பூரிப்படைய வேண்டும். அதுவும் விரைவில் நடைபெறும் வண்ணம் உங்கள் ஆய்வு
சிறக்கட்டும்!
க.>
* ஜாதீயத்தின் அடிப்படையில் இப்படிச் சொல்லவில்லை. மானுடவியல்,
சமூகவியல், சமயவியல், மெய்யியல் சரித்திரப்பிழைகள் மண்டிக்கிடப்பதைச்
சுட்டும் முகமாய் இப்படிச் சொல்கிறேன். திரும்பத்திரும்ப பொய்
சொல்லப்படும் போது சமூகம் அதை ஏற்றுக்கொண்டு நம்பிவிடுகிறது. அது சமூகச்
சீர்கேட்டிற்கு இட்டுச் செல்கிறது.
2010/3/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> காந்தள் என்பது மடல் போல் இலக்கிய வகைப்பாடாக ஆகவில்லை.
> அப்பொழுதே பெண்ணின் காதல் ஆற்றாமையை வெளிப்படுத்தும் வெறியாக
> காந்தள் என்பது கருதப்படுகிறது. காந்தள் என்பது மடல் ஏறுதல்
> என்ற கருத்து கூறுவாரும் உளர் என்று இளம்பூரணம் கூறுகிறது
. .................................................என்
நளிமனை நல்விருந்து அயரும்
கைதூ இன்மையான் எய்தா மாறே
(நற்றிணை - 280 : 4-5 ; 8-10, பரணர்)
வேறொரு பெண்ணை நாடிச் சென்ற தலைவன் தன் இல்லம் திரும்ப நினைக்கிறான்;
தலைவியின் ஊடலுக்கு அஞ்சிப் பாணனைத் தூது விடுகிறான்; பயனில்லை. தோழி
தலைவியிடம் ‘இனி அவன் வந்தால் ஊடல் கொள்ளாதே’எனச் சொல்கிறாள். தான் ஊடல்
கொண்டதற்கான காரணத்தைத் தலைவி அவளிடம் கூறத் தொடங்குகிறாள் -
புலவாய் என்றி - ஊடாதே என்றாய் ;
“என் பெரிய வீட்டுக்கு வரும் நல்ல விருந்தினரை வரவேற்றுப் போற்றும்
விருந்தோம்பல் என்னும் மனையறம் குன்றுவதால் அவனிடம் நான் ஊடல்
கொள்கிறேன்; இடைவிடாது கைகள் பணி செய்யும் விருந்தோம்பலை நான் செய்ய
முடியாததால் ஊடல் கொள்கிறேன்”
தமிழர்தம் வாழ்வு தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் இவர்களைச்
சுற்றி அமைந்தது. உலகாயதன் எவ்விதமான கடமைகளும் இருப்பதாக ஏற்க
மாட்டான்; பந்தத்துக்குள் பிணைப்பவை யாதாயினும் அவை புலனின்பம்
பயக்காதவை; ஆகவே அவற்றை வெறுப்பான்.
தலைவன் அயல் மனையில் இருந்தபோது விருந்தோம்பும் அரிய வாய்ப்பை
இழந்ததற்காக வருந்தும் ஓர் இளம்பெண்ணை இங்கு காண்கிறோம்; கணவனைப்
பிரிந்த அவள் காமத்துக்காக ஏங்கவில்லை; தர்மத்துக்காக ஏங்குகிறாள்.
‘அறத்தால் வருவதே இன்பம்’ என்பதே நற்றமிழரின் வாழ்வியல் நெறி; லோகாயதத்தை
அதில் வலிந்து புகுத்துவது பயனற்ற செயல்
தேவ்
On Mar 6, 8:14 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழரின் ஆதி கொள்கை லோகாயதமா? -- 4
>
> அடுத்தவரி தொடர்கிறது, ‘அன்றியும் காந்தள் என்பது மடலேறுதலான்
> அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி ‘காந்தள்’
> எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பால் பக்கமாகிய
> வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும்
> கொள்ளப்படும்’
>
‘அறத்தால் வருவதே இன்பம்’ என்பதே நற்றமிழரின் வாழ்வியல் நெறி; லோகாயதத்தை
அதில் வலிந்து புகுத்துவது பயனற்ற செயல்
இங்கிட்டு நீங்க வந்ததுல சந்தோசமுங்க,
அது என்ன தாயமானாலும் எசமான் என்ன எளுதினாலும்
எங்களுக்கு ஆதாயந்தேன்
தேவ்