--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிக நல்ல முயற்சி.
குறள் வழி வாழ்வே தமிழர்க்கு சிறந்த வாழ்வு. உலகமெங்கும் குறள் வாழ்வியல் எனும் நெறியை திட்டப்படுத்தி பரப்ப வேண்டும். அது உலகிற்கே நல்வழி.
ஐயா! அவர்கள் வங்கி விவரம் கொடுத்தால் பணம் அனுப்புகிறேன்.
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Jan 29, 2015 1:11 PM, "சொ. வினைதீர்த்தான்" .
> தங்களுடைய வாழ்த்துக்களை திரு சம்பந்தம் ஐயாவிடம் தெரிவிக்கிறேன்.
> தங்களைப்போன்ற அறிஞர்களின் பாராட்டும் உதவியும் அவர்களுக்கு பெருத்த
> ஊக்கம் அளிக்கவல்லது.
>
தமிழர்கள் ஜாதியால், மதத்தால் (சைவம்/வைணவம்) பிரிந்து கிடக்கிறார்கள். மலேசியக்குழந்தைகளுக்கு நாயன்மார் கதைகளைச் சொல்லும் இல்லத்திரை சீரியல் இங்கு உருவாக்கப்படுகிறது. கால, கருத்து முரண்பாடுகள் கொண்ட இக்கதைகளை நம் சமயம் என்று சொல்லிக்கொடுப்பதை விட காலத்தை வென்று நிற்கும் குறள் நெறி, நாத்திகரக்கும் பொது மறையாய் திகழும் வள்ளுவ நேறியைப் போதிக்கலாம். இதற்கான உலகளாவிய ஒரு செய்ற்திட்டம் உருவாக வேண்டும். உதவ முடியுமா?
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிக இளவயதில் என் தந்தையார் எனக்குத் தந்த இரண்டு நூல்கள் திருக்குறளும் பாரதியார் கவிதைகளும். தமிழின்மீது ஆறாக்காதல் தோன்றக் காரணமாக இருந்தவை அவைதாம். இளம் உறவினர்கள் வெளிநாடு போவதாகக்கூறி என்னிடம் வந்தால் நான் இந்த இருநூல்களையும் அவர்களுக்கு என் ஆசியாகத் தருவேன்.
சில ஆண்டுகள் நான் தொழில்நிமித்தமாகக் குடும்பத்தினரை விட்டுத் தனித்திருந்த காலத்தில் எனக்குத் துணையாக இருந்தவர் வள்ளுவர்தாம். அப்போது ஆழ்ந்து கற்றதில் பொருள், நயங்கள் புலப்பட்டதுடன் பலப்பல குறள்கள் மனதில் நின்றன. என்னுடைய பெரும்சொத்தாக, பெரும்பேறாக அவற்றை நான் கருதுகிறேன்.இறையருளால் நான் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வாழ்நெறிகள்குறித்துப் பேசுகிறேன். அப்போது எந்தக் கருத்தென்றாலும் அதற்குத் துணையாக, வலுத்தருவதாக ஒரு குறள் சொல்வேன். ஆசிரியர்களும் மாணவர்களும் என்னிடம் வந்து அதுகுறித்து வியப்புத் தெரிவிப்பதுண்டு.
ஒவ்வொரு தமிழனும் குறள்கூறும் நெறிகளை அறியவேண்டும். அதற்கு முற்றோதல் ஒரு நல்ல தொடக்கம். ஆனால், பொருளறிந்து கொண்டு, அதற்குத் தக நிற்கும்போது தமிழ்ச்சமுதாயம் புதிய உயரங்களை (இல்லை, ‘பழைய’ உயரங்களைத்தானோ!) எட்டும்.
அருமை ஐயா. நான் திருக்குறளை பிள்ளைகளுக்கு தருகிறேன். மணிவாசகர் பதிப்பகத்தார் குறைவான விலையில் தரமாக வெளியிட்டுள்ளார்கள். நாட்டமுள்ள பெரிவர்களுக்கு மதுரைத்திட்டம் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள CD வழங்குகிறேன்.
On Friday, January 30, 2015 at 3:49:18 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:
அருமை ஐயா. நான் திருக்குறளை பிள்ளைகளுக்கு தருகிறேன். மணிவாசகர் பதிப்பகத்தார் குறைவான விலையில் தரமாக வெளியிட்டுள்ளார்கள். நாட்டமுள்ள பெரிவர்களுக்கு மதுரைத்திட்டம் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள CD வழங்குகிறேன.சொ வி ஐயா...இந்த புத்தாண்டுப் பரிசாக அப்பா எனக்குக் கொடுத்த நூல்களில் ஒன்று திருக்குறள். ஓலைச்சுவடி போன்ற மாறுபட்ட தோற்றத்தில் தரமான பதிப்பாக இருக்கிறது...விலை 100 ரூபாய்.
தங்கள் தந்தையாரை போற்றுகிறேன் திருமிகு தேமொழி.என் அலுவலகத்தோழர் ஒருவர் சென்னையில் என் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு ஊருக்குச்சென்று இந்த உரை நூலை எனக்கு அன்போடு அனுப்பிவைத்தார் என்பது நான் பெற்ற பரிசுகளில் சிறந்ததாகப்பாதுகாத்து வருகிறேன்.அழகிய கட்டமைப்பில் உள்ள நூல். மு.வ, வ.சுப.மா, மணிவாசகர் பதிப்பகம் அ.மாணிக்கம் உரை ஆகியவை உள்ளடக்கத்தில் இன்னும் சிறப்பானவை.பரிமேலழகரை தஞ்சம் அடைவதே இறுதியில் சிறந்தது.
On Sunday, February 1, 2015 at 5:02:21 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:தங்கள் தந்தையாரை போற்றுகிறேன் திருமிகு தேமொழி.என் அலுவலகத்தோழர் ஒருவர் சென்னையில் என் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு ஊருக்குச்சென்று இந்த உரை நூலை எனக்கு அன்போடு அனுப்பிவைத்தார் என்பது நான் பெற்ற பரிசுகளில் சிறந்ததாகப்பாதுகாத்து வருகிறேன்.அழகிய கட்டமைப்பில் உள்ள நூல். மு.வ, வ.சுப.மா, மணிவாசகர் பதிப்பகம் அ.மாணிக்கம் உரை ஆகியவை உள்ளடக்கத்தில் இன்னும் சிறப்பானவை.பரிமேலழகரை தஞ்சம் அடைவதே இறுதியில் சிறந்தது.பரிமேலழகரும் செட்டிநாட்டுக்காரர் தான். உவேசா பரிமேலழகர், அவர் ஊர், மரபு எல்லாமும்விரிவாக எழுதியுள்ளார்கள்.
நா. கணேசன்
என்னிடம் 1909 ல் சென்னை, சூளை பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடத்தாரால் பதிப்பிக்கப்பட்ட பரிமேலழகர் உரை நூல் புத்தகம் உள்ளது. இந்நூலில் என் ஆயா வீடு நாச்சியாபுரம் வி.ராம வீடு பெயரும், என் தமையானர் கையெழுத்துமுள்ளது. பைண்டிங் செய்து நான் பாதுகாத்து வருகிறேன்.இதில் திருவள்ளுமாலையும், சரிதமும் விரிவாக முன்னுரையில் ஓவியங்களுடன் பல பக்கங்களில் கூறப்பட்டுள்ளன.சில படங்கள் இணைத்துள்ளேன். நான் பிள்ளைகளுக்கு கொடுக்க வாங்கிகிவைத்துள்ள புத்தகங்கள் படமும் இணைக்கப்பட்டுள்ளது. .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வினைதீர்த்தான் அவர்களே,தங்கள் நூலில் (1909) திருவள்ளுவர் திருநீறு அணிந்து திருவள்ளுவ நாயனாராகக் காட்சி தருகிறார். இப்பொழுது அவர் சமணர் ஆக்கப்பட்டு வருகிறார். அடுத்த நூற்றாண்டில் அவர் எந்தச் சமயத்திற்கு மாற்றப்படுவாரோ, அந்த இறைவனுக்கே வெளிச்சம்!ஒரு அரிசோனன்
உயர்திரு கணேசன் அவர்களே,நீங்கள் நெற்றிக்கண்ணைத் திறந்தாலும், என்னைப் பொருத்தவரை திருவள்ளுவர் இந்துதான். அவரைச் சமணர் ஆக்க ஆயிரம் பேர் முயன்று எழுதி எழுதி வெற்றியும் கண்டு வருகிறார்கள். சிலர் அவர் ஒரு கிறித்தவர் என்று சொல்லத் துவங்கி உள்ளார்கள். யார்கண்டது, இன்னும் நூறு ஆண்டுகளில் அவர் ஒரு கிறித்தவர் ஆக்கப்பட்டாலும் வியப்பில்லை.
எல்லா (ஆண்) கடவுளருக்கும் முக்கண் உண்டு. சிவன் இந்திரன் பற்றி மட்டும் அதிகம்தகவல் உள்ளது.
திருவள்ளுவர் கிறித்துவர் என்று போப்பாண்டவர் முன் மயிலை ஆர்ச் பிஷப் சான்றுகள் அளித்து விளக்கியுள்ளார். கிறித்துவம் பரவத் தொடங்கிய காலத்திலேயே கிறித்துவம் கடல்வழியாகத் தமிழகத்துள் நுழைந்துவிட்டது. பைபிளில் சொல்லப்பட்ட பல கருத்துகள் பக்திப்பாடல்களின் தாக்கம் திருக்குறளில் இருப்பதாக கட்டுரைகளும் ஆய்வுகளும் உள்ளன
எலியோன்