Re: தொடிப்புழுதி கஃசா உழக்கின் பிடித்து எருவும் வேண்டாது!

38 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 9, 2014, 7:27:11 PM8/9/14
to santhav...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, vallamai, mintamil
On Saturday, August 9, 2014 10:38:47 AM UTC-7, pbalakrishnan1 wrote:
வணக்கம்.நல்ல கட்டுரை. சிறுவயது நினைவுகளைத் தூண்டியது. எங்கள் ஊரில் பாறைக்களம் பரந்து
விரிந்து இருக்கும்.சோளம்,உழுந்து, நெல் போன்ற தானியங்கள் சுத்தமாகப் பிரிபடும்.-அரிமா
இளங்கண்ணன்,லாஸ் ஏஞ்சல்ஸ்

தமிழகத்தின் விளைபொருள் என்று காட்டும் மிழகு {(த)மிழகு} மிளகு, மிரியம், மிர்ச்சி, கன்னடத்தில் மெணசு 
(வள்ளுவர் தொடிப்புழுதியை உழக்குதலை உணக்குதல் என்பதுபோல, கன்னடத்தில் மிழகை மெணசு 
என்கின்றனர். வள்ளுவரைச் சமண சமயி என்பர். கன்னடத்தில் (1) மிழகு மிணசு/மெணசு போல (2) பழுத்தலைப் 
பணுத்தல் என்பர் கன்னடத்தில். அதுபோல், உழவரின் உழக்கலை உணக்கல் என்கிறார் வள்ளுவர். நாழி:நாளம், 
மிழகு:மிளகு, புழு:புள், பவழம்:பவளம், ... - இதெல்லாம் ழ:ள மாறுபாடுகள்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்

இக் குறளின் உரையாக வேள் பாரி மீது கபிலர் பாடிய
புறநானூற்றுப் பாடல் 120-ஐப் பார்த்தருள்க.

”வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழலிற் றோடொலிபு நந்தி” புறம் 120

புழுதியை உழக்கி (அதாவது உணக்கி) பல்கால் உழுது
ஈரத்திலே விதைப்பதைப் புறநானூற்றுக் கவிஞர் கபிலரும்,
வள்ளுவரும் பாடுகின்றனர். பயிர்செய்யத் தொடங்கும்போது
செய்ய வேண்டிய பல்கால் உழவை கபிலரும், வள்ளுவரும் பேசுகின்றனர்.
புஞ்சை, நஞ்சை வெள்ளாமையின் இவ்வுழவு உழக்கலாம்/உணக்கலாம்.
இக் குறளில் வாட்டுதல், காயவிடுதல் என்ற பொருள்வாராது. “ஆ ஈன மழை பொழிய .. 
மா ஈரம் போகுதென்று  விதை கொண்டோட” - பாடல் உங்களுக்கு நினைவிருக்கும். 
புழுதியை உழக்கி  (அதாவது உணக்கி) பல்கால் உழுது ஈரத்திலே விதைப்பதைப் 
புறநானூற்றுக் கவிஞரும், சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர் வள்ளுவரும் 
பாடுகின்றனர். Homonym என்னும் மொழியியல் கோட்பாட்டின் மூலம் 
உழக்கு - உணக்கு, நிழல் - நிணல், அழுங்கு - அணுங்கு (Indian Pangolin), ... புரிந்துகொள்ளலாம்.
விடிகாலையில் உழவர் உழுவதால் உஷத் காலம் எனப்படுகிறது. மான் கொம்பு சிந்து சமவெளி, குஜராத், 
மகாராஷ்ட்ரம் போன்ற மாநிலங்களில் கலப்பைக் கொழுவாகக் கிடைக்கிறது. உழுவதற்குப் பயன்படும் கொம்பு 
கொண்டதால்தான் உழை என்றால் மான் என்ற பொருள் செந்தமிழில் இருக்கிறது எனக் கருதுகிறேன். உஷா = 
உழை. (ழகரம் சகரமாதல் வாடிக்கை: விழா - விஷு, மிழா - மேஷ, கலூழ் - கலூஷ).

”தொடிப் புழுதி கஃசு ஆக உழக்கின்/உணக்கின்” - இதில் உள்ள திராவிடச் சொல் ”உணக்கு” (=உழக்கு) 
கடலுயிரி ஒன்றின் பெயராக இன்றும் இருக்கிறது. கடலில் இருந்து குதிக்கும் டோல்பின்கள் (dolphins) 
பழைய தமிழில் ஓங்கில் எனப் பெயர். கடல் தளத்திலிருந்து காற்றில் ஓங்கிக் குதிப்பதால் ஓங்கில்:

ஆனால், கடலிலேயே நீரை உழப்பிக் கொண்டிருக்கும் பன்றி போன்ற விலங்குக்குத் தமிழில் உணகுமீன் எனப் 
பெயர். கன்னடத்தில் உணசிமீனு என்று பெயர் (ஆதாரம்: கிட்டில் பாதிரியின் கன்னட அகராதி. பர்ரோ-எமெனோ 
த்ராவிட வேர்ச்சொல் அகராதி). இதனை ஆங்கிலத்தில் Porpoise என்பர். உணகுமீன்/உணசிமீன் ஓங்கில்போல் 
அடிக்கடி நீர்மட்டத்துக்கு மேல் ஓங்குவதில்லை. நாணமுள்ள விலங்கு நீரை உணக்கிக்கொண்டு (அதாவது, 
உழக்கிக்கொண்டு) கடலில் வாழ்தலால் இதற்கு உணசி என்று பெயர் கொடுத்துள்ளனர். வள்ளுவர் இப்பொருளில் 
உணக்கல்/உழக்கல் என்பதை உழவு அதிகாரத்தில் ஆள்கிறார். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனும் 
குறளில் தாழ் என்றால் மதகுகளை அடைக்கும் பனைமரம் என்ற விவசாயத்தின் கலைச்சொல்லை
ஆள்கிறார் வள்ளுவர். அதுபோல், உணசி ‘Porpoise’ என்னும் பெயர்போல, தமிழ்மறை உழவு அதிகாரத்தில் 
உழக்கு என்னும் வினைச்சொல்லை உணக்கு என்றே பயிரிடல் பருவத்துப் பணிகளை விவரிக்கும்போது 
பாவிக்கிறார். வேளாண்மை அறிந்தோர் இதை நன்கு உணர்வர்.

உணகு, உணசிமீன் ‘Porpoise' (உணசி < உழக்கு-)

உழப்பு என்பது உழவு. ’உழப்பு எருது பொன்றப் புடைத்து உழுது’ (சீவக. 2783). பலமுறை உழுதால் எல்லாம் வரும் என்பது பழமொழி. ‘உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?”. உழப்பு உழைப்பு (=முயற்சி) என்றாகி இருக்கிறது. உழவின் உழப்பு என்ற சொல்லில் இருந்து மற்ற எல்லாத் தொழில்களுக்கும் ‘உழைப்பு’ என்ற சொல்லைத் தமிழ் படைத்துக்கொண்டுள்ளது. உழப்பு - உழவு, கழப்பு - சோம்பல். முற்றுருவக அணியாக மனித வாழ்க்கையையே வேளாண்மையாகப் பட்டினத்தார் 11-ஆம் திருமுறையில் பாடுவதைப் பார்ப்போம். முதலிரு அடிகளில் பழமொழிகள் இரண்டைச் சொல்லித் தொடங்குகிறார்.

”உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின் வாராக் கையுற வுளவோ?
அதனால்,
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி”

இந்த உழப்பு - பல்கால் உழவு. பல்கால் உழவு பற்றிச் சொல்கையில் உணக்கின்(=உழக்கின்) என்றார் வள்ளுவர். உணசி என்று Porpoise கடலுயிருக்கும் உழக்கல் என்ற வினைச்சொல்லிலேயே பெயர் அமைந்த அருமையும் காண்க. வல்சி < வல்கி < வடிகி (தெலுங்கில் வட்லு என்றால் நெல்)பற்றி விரிவாக எழுதியுள்ளேன். உணசி (Porpoise) < உணக்கு- < உழக்கு- Porpoise கடல் நீரை உழக்குதலான் உணசி என்ற பெயர்பெற்றது.

நா. கணேசன்


 
Reply all
Reply to author
Forward
0 new messages