இத்தனை பெரிய முடிவு பிரதமருக்கு தெரியாமல் எடுக்கபட்டிருக்காது.
~ அது நிரூபிக்கப்பட்ட விஷயம்.
ஆனால் அவர் இவ்விஷயத்தில் சூழ்நிலை கைதியாகவே செயல்பட்டுள்ளார்.
~ ஆமாம். விழவில்லை. கரடி டான்ஸ். அவர் சூழ்நிலை கைதி என்பது அவர செயலை
நியாயப்படுத்துகிறதா?
அவரது எகானாமெட்ரிக்ஸ் மாடல்களை வைத்தே அவரை மடக்கிய இடம் சுவாரசியம்.
~ அவர் எகானாமெட்ரிக்ஸ் மாடல் நிறுவவில்லை.
ஆனால் எகானாமெட்ரிக்ஸ் மாடல்கள் உண்மையை பிரதிபலிக்குமா என கேட்டால்
இல்லை என்பதே பதில்.
~ செல்வனின் பதில்கள் இப்படித்தான் தலையை சுற்றும் மாதிரி அமையும்.
இதில் இழப்பு 176,000 கோடி என கூறபட்டாலும் அந்த 176,000 கோடியும் ஊழல்
தொகை அல்ல. ஒரு சில நூறுகோடிகளையே உண்மையான இழப்பாக கருதமுடியும்.
~ நான் இது பற்றிய முழுவிவரங்களையும் வல்லமையில் எழுதி, மின் தமிழிலும்
பதிவு செய்து இரு வருடங்கள் ஆயின. அதனால், விலாவரியான பதில்
அளிக்கவில்லை. இழப்பு 176,000 கோடி என்று ஆடிட்டர் ஜெனெரலும்
சொல்லவில்லை. ஆனால், இந்த ஊழலை நடுநிலையில் முன்னும் பின்னுமாக
கணக்குப்போட்டால், இழப்பு 176,000 கோடிக்கு மேல். நாட்டின்
பாதுகாப்புக்கூட பணயம் வைக்கப்பட்டது என்ற கவலையும் உண்டு.
இன்னம்பூரான்
--
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com