இந்து மதம் ? ((Re: [வல்லமை] Re: [MinTamil] Re: பாஜக ஆட்சியில் திரும்புகிறதா இந்தி மொழி திணிப்பு?))

48 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 6, 2014, 8:59:13 AM7/6/14
to mint...@googlegroups.com
 
"வேத அறிவை எல்லா ஜாதியினரும் அளித்து பெருங்கோயில்களில் பூஜகர் ஆகும் பெருமை
உள்ள நிலையை ஹிந்து, ஹிந்துத்வா சமயத்தவரும், அரசியல் தலைமைக் கட்சிகளும் செய்யவேண்டும்."

என்பது தொடர்பாக;

 மற்ற மதங்களைப் போலன்றி , இந்து மதம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மீக தேடல் மூலமும், அதில் தோன்றும் புதிய சடங்குகள் மூலமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஒரே மதம். சுமார் 40 வருடங்களுக்குள் தோன்றிய மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழியில் பெண்களும் அர்ச்சகப் பணியில் ஈடுபட்டுவரும் காலம் இது. திருமயம் ரங்கநாதர் கோவிலில் உள்ள மிகவும் அற்புதமான கலைநயமும் தெய்வீகமும் ஒருங்கிணைந்த குகையிலான கருவறையில் சாதி பேதமின்றி அனைத்து பக்தர்களும் சென்று வழிபடுகின்றனர்.
 
சிவன் கோவில், விஷ்ணு கோவில்,  கிராமங்களில் உள்ள கோவில்கள் உள்ளிட்டு எந்த கோவிலுக்கும்  எந்த சாதியினரும் அர்ச்சகராகவோ, பூசாரியாகவோ முடியாது. குலம், கோத்திரம் அடிப்படையில் தான் அர்ச்சகராகவோ, பூசாரியாகவோ பயிற்சியெடுத்து பணியாற்றமுடியும். இந்தியாவில் கருவறைக்குள் பக்தர்கள் நுழைய அனுமதிப்பதும், அர்ச்சகரைத் தவிர்த்து, பிராமணர் உள்ளிட்டு எந்த சாதி பக்தரும் நுழைய அனுமதிக்காததும், அந்தந்த கோவில் பாரம்பரியத்தைப் பொறுத்ததாகும். பக்தர்கள் விரும்பினால் பெண்களும் அர்ச்சகப் பணியில் ஈடுபடும் மாற்றங்களை அனுமதிப்பதும் இந்து மதமே.


பக்தர்களின் தனி உரிமையை மதிக்காமல், எந்த அமைப்பும், அரசும் எதையும் திணிக்க முடியாது. விரும்பி பக்தர்கள் மேற்கொண்டு வரும் மாற்றங்களையும் அரசும் தடுக்க முடியாது.வேத அறிவை விரும்புபவர்கள் பெறுவதற்கும் இன்று எந்த தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. மேல்மருவத்தூர் வழியில், விரும்புபவர்களுக்கு வேத அறிவை அளித்து, விரும்பும் பக்தர்களுக்கு, அப்பக்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய/சிறிய கோவில்களில் அர்ச்சகராக பணியாற்ற இன்று எந்த தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் ப்க்தர்களே தீர்மானிக்கும் சக்திகள் ஆவர்.


ஒரு தனி மனிதனுக்கு தனக்கு விருப்பமான கடவுளை தனக்கு விருப்பமான முறையில் வணங்க அல்லது வணங்காமல் நாத்திகனாக வாழ அனுமதிக்கும் மதம் இந்து மதம் மட்டுமே.
 
( ' The Dangers of Monotheism in the Age of Globalization')  ‘உலகமயமாக்கல் காலத்தில் ஒரே கடவுள் கொள்கையின் ஆபத்துகள் ‘ என்ற தலைப்பில் , உலகிலேயே கிறித்துவ, முஸ்லீம் மதங்களின் பெயரால் தான் அதிகமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தி, 21‍ஆம் நூற்றாண்டில் உலகம் அழியாமல் வாழ ஒரேவழி இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவது தான், எனபதை ஜீன் பெயரி லீமான்  (Jean-Pierre Lehmann ) என்ற பிரெஞ்சு நாத்திகர் தெரிவித்துள்ளார்.

செ. அ . வீரபாண்டியன்

----------------

நன்றி, பேரா. வீரபாண்டியன்.  ஒரு நல்ல செய்தி படித்தேன். சிருங்கேரி மடம் வேதம் பயில புதுவழி காட்டத் தொடங்கியுள்ளது. தமிழ் ஹிந்து பாராட்டைப் பார்த்தேன்.

திருமெய்யம் கோயில் போல வழிபாடற்ற பல குகைகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் ஆள் நடமாட்டமில்லாத குகைக் கோவில்களில் நுழைந்து வழிபடலாம். 

Tamil Hindu news:

வேதம் புனிதமடைந்தது!

அச்சிட அச்சிட 

லப்புழா:  ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களது சீடரும்,  இந்து ஆன்மீக சாதகருமான சிவானந்த சர்மா அவர்கள்,  கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார். அங்கு அவர் தனது  வேத, வேதாந்தக் கல்வியைத் தொடர்வார்; துறவு நெறியில் செல்வார்.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்.  சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த அவர், ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களின் வழிகாட்டுதலில் வேத சாஸ்திரங்களையும் இந்து ஞான நூல்களையும் பயின்று வந்தார்.

இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை.  அத்தகைய இறுக்கமான பழமைவாத  நிலைப்பாட்டைத் துறந்து,  உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது.  இதற்காக சிருங்கேரி மடத்திற்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதனுடன்  நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்.  பெருக வேண்டும். ஒரு பாரம்பரிய மடத்தின் இந்தச் செயல்பாடு மற்ற மடங்களுக்கும் முன்னுதாரணமாக ஆக வேண்டும்.

நன்றி:   ஹைந்தவ கேரளம் செய்தி.


செல்வன்

unread,
Jul 6, 2014, 11:37:38 AM7/6/14
to mintamil
பாராட்டுகுரிய விஷயம்.

இந்து அறநிலயதுறை கட்டுபாட்டில் இருந்து கோயில்களை விடுவித்தால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதுக்கு இது ஒரு சாட்சி.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

Suba.T.

unread,
Jul 9, 2014, 7:15:15 AM7/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-06 14:59 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
 

இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை.  அத்தகைய இறுக்கமான பழமைவாத  நிலைப்பாட்டைத் துறந்து,  உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது.  இதற்காக சிருங்கேரி மடத்திற்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.


​வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுதலுக்குறிய செயலும் கூட. மேலும் பலரும் ஆர்வத்துடன் இவ்வகைப் பயிற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதும் இவ்வகை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரவும் சாதி பேதங்கள் மறையவும் நன்மை பயக்கும்.

தமிழகத்தின் கோவிலூர் மடமும் இசை வகுப்புக்களையும் வாத்தியக் கருவிகள் பயிற்சிகளையும், சிற்பக்கலை பயிற்சிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றார்கள். ஜாதி பேதமின்றி விரும்பும் இளையோர் இங்கு வந்து தங்கியிருந்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். 

சுபா

இதனுடன்  நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்.  பெருக வேண்டும். ஒரு பாரம்பரிய மடத்தின் இந்தச் செயல்பாடு மற்ற மடங்களுக்கும் முன்னுதாரணமாக ஆக வேண்டும்.

நன்றி:   ஹைந்தவ கேரளம் செய்தி.


-- 

Prakash Sugumaran

unread,
Jul 11, 2014, 1:26:31 AM7/11/14
to mintamil
நம்பும்படியாக இல்லையே. வெளியில் பேசப்படுவது ஒன்றும் - செயல்படுவது மாறாகவும் உள்ளது. இந்தியா முழுக்க வேத கல்வி, வழிபாட்டு முறைகள், ஒரே நடைமுறையில் இல்லை.

09-07-14 அன்று திருவண்ணாமலையில் ”வேதசிவாகம வித்யாலய“, தொடங்கப்பட்டு. வித்யார்த்தி சமாயோஜனம் நடைபெற்றது.

ஒரு பாதுகாப்புக்காக ஆதி சைவ சான்றோர்களின் அருளாசியுடன், சிவாச்சாரியர்களின் வாழ்த்துக்களுடன் தொடங்கப்படுவதாக, அரசாங்கத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் தெரிவிக்கிறது. ஏராளமான ஸ்ரீலஸ்ரீக்கள், ரத்னாக்கள், ஸ்வாமிகள், சிவாச்சாரியார்கள், ஜோதிடக்கள், பிரம்ம, சதுர்வேதிகள், வேத மூர்த்திகள், அர்ச்சகம் கள், பூஷணம்கள், இளவரசு, சாளுவ, பட்டர், என பல பெயர்கள் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

நிற்க..

” வித்யாலய “ என்பதில் இருந்து பாடசாலை என புரிந்து கொள்ள முடிகிறது. வித்யார்த்தி சமாயோஜனம் என்றால் “ மாணவர் சேர்க்கை “ என நாமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

வேதாகமங்களுக்கும் சிவாச்சாரியார்களுக்கும் எந்தவிதத்தில் தொடர்புள்ளது ?

வேதாகமங்களுக்கு முதல் மறுப்பு கிளம்பியதே அவர்களிடமிருந்துதான்.

இதே ஆதி சைவ சிவாச்சாரியார்கள் தான், ” அனைத்து சமயத்தினரும் அர்ச்சகர் “, திட்டத்தை எதிர்த்து, அங்கு பாடம் பயின்ற மாணவர்களையும், போதித்த ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

உச்சநீதிமன்றத்தை அணுகி, பிராம்மணர் தவிர வேறு யார் கடவுள் சிலைகளை தொட்டாலும், சாமி வெளியேறி விடும் என்று வாதாடி, அந்த திட்டத்தையே கைவிட செய்தவர்கள்.

ஆதி சைவர்கள், சிவாச்சாரியார்கள், பட்டர்கள் - இவர்களை பிராமணர்கள் என வர்ண அடிப்படை வாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள வடக்கத்திய பிராம்மணர்கள் ஏற்று கொண்டு விட்டார்களா ?

இன்னுமொரு முக்கிய பிரச்சினை, வடக்கத்திய கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை - தீபாராதனை செய்து வழிபட முடியும். ஆனால் இன்றும் வடக்கில் வர்ண கோட்பாடு உள்ளது.

ஆனால் தென்னிந்தியாவில் அப்படி செய்ய முடியாது. ஆனால் சாதி அடிப்படையிலான வேறுபாடு தொடர்கிறது.

கோவில்களின், வழிபாட்டு முறைகளின் அடிப்படைகளில் ஏராளமான வேறுபாடுகள் வழக்கத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தொடங்கப்பட்ட வித்யாலய ங்கள் எதனை போதிக்கும், எந்த கல்வி திட்டத்தை பின்பற்றும், எதை நிலை நிறுத்தும் ?

உண்மையாகவே 4 வேதங்களை போதித்தால், கடவுள் நம்பிக்கை பட்டுவிடும் ஆபத்தும் உள்ளதே !!










--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

K. Loganathan

unread,
Jul 11, 2014, 2:57:33 AM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பரே 

நியாயமான கேள்விகள். இறைவன் உண்டென அறியவும் அவன் அருளைப் பெறவும் வேதங்கள் ஆக்மங்கள் எல்லாம் தேவையில்லை, இறைவன் எல்லார் உள்ளத்தும் ஏற்கனவே இருக்கின்றான். 

கோயில்,வ்ழிபாடுகள் வேதாமங்களின் பயிற்சி போன்றவை அகத்தே ஏற்கனவே இருக்கின்ற இறைவனை புரிந்துகொள்ள உதவும். அதே பொழுது குழப்பத்தையும் கொண்டு வரும்

ஒவ்வொருவரும் உலகினையும் தன்னையும் தீவிரமாக ஆய்ந்தால் இறைவன் எல்லார் அகத்தும் தன் அகத்தும் இருப்பதை அறிய வருவர்.

சமய பாடங்கள் என்பன இப்படித்தான் அமைய வேண்டும் ஓவ்வொருவர் அகத்தேயும் இருக்கின்ற இறைவனை தாமே அறிந்து தெளியும் படியாக கண் விழிப்பின்ற ஞான சிந்தனைகளேத் தேவை.

உலகன்

Prakash Sugumaran

unread,
Jul 11, 2014, 4:05:51 AM7/11/14
to mintamil
ஆனால் சுய சிந்தனையை அழிக்கும் மரபின் நீட்சியாகவே மதக்கல்வி உள்ளதே. ( இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் )

K. Loganathan

unread,
Jul 11, 2014, 4:46:33 AM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பிரகாஷ்

 உண்மைதாம். பழமையின் பிடியில் சிறைப்பட்ட கைதிகளாக நாம் இருக்கின்றோம். எல்லா மதங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஓர் மோசமான  group dynamics  எல்லா மதங்களிலும் உண்டு. ஓர் குழூவாக இயங்க்வே முறப்டுகின்றோம், அந்த குழூவின் அடையாளமாக மறை நூற்கள் சமய சடங்குகள் சின்னங்கள் போன்ற்வை. உண்மையான இறை நம்பிகையை விட அதற்குத் தக ஒழுவதைவிட, இந்த இரண்டாம் நிலை குழூ அடையாளங்களே கருவிகளே முதலிடம் பெருகின்றன.

நம் அகத்தே ஓர் கோழைத் தனம் இருக்கின்றது. நாம் பெரும்பாலும் ஒர்  மந்தைக் கூட்டமாகவே இயங்க முற்படுகின்றோம். அதனால் சுய சிந்தனையை மறுக்கின்றோம் அல்லது ஆதரிக்காது விடுகின்றோம்

இவற்றை எல்லாம் உடைத்தெறிய வேண்டும். முதலில் வேதாங்களை ஆகமங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தகட்கும் முறையாக சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்

இன்னொரு மடலில் இன்னும் சிறிது விளக்கி இருக்கின்றேன் காணக,

உலகன் 
Reply all
Reply to author
Forward
0 new messages